வே – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 5
வேங்கட 1
வேங்கட_மலையும் 1
வேங்கடம் 2
வேங்கை 13
வேங்கையும் 4
வேங்கையொடு 1
வேட்கை 14
வேட்கையின் 11
வேட்கையும் 1
வேட்கையேன் 2
வேட்கையொடு 1
வேட்டத்து 2
வேட்டது 1
வேட்டம் 2
வேட்டலும் 1
வேட்டனை 1
வேட்டு 5
வேட்டுவர் 1
வேட்டுவவரியும் 1
வேட்டுவன் 1
வேட்டோன் 1
வேடத்து 1
வேடமொடு 1
வேடர் 1
வேண்ட 3
வேண்டல் 1
வேண்டா 4
வேண்டாது 1
வேண்டார் 1
வேண்டி 8
வேண்டிய 1
வேண்டியது 1
வேண்டின் 1
வேண்டினம் 1
வேண்டினள் 1
வேண்டு 1
வேண்டு-வயின் 1
வேண்டுதி 1
வேண்டுதிர் 2
வேண்டுதுமே 2
வேண்டுநர்க்கு 1
வேண்டும் 19
வேண்டுவ 1
வேண்டேன் 1
வேண்மாள் 1
வேண்மாளுடன் 1
வேணவா 2
வேத்தர் 1
வேத்தவையாரொடும் 1
வேத்தியல் 5
வேத்தினம் 1
வேத்து 1
வேத 4
வேத_முதல்வன் 3
வேதக்கு 1
வேதத்து 1
வேதரும் 1
வேதனை 1
வேதாளிகர் 1
வேதாளிகரொடு 1
வேதிகை 2
வேதிகைகளும் 1
வேதியன் 1
வேதின 1
வேது 1
வேந்தர் 15
வேந்தர்-தம் 1
வேந்தர்-தம்முள் 1
வேந்தர்க்கு 2
வேந்தரும் 1
வேந்தரை 2
வேந்தற்கு 8
வேந்தன் 61
வேந்தன்-தனை 1
வேந்தனின் 2
வேந்தனும் 4
வேந்தனொடு 2
வேந்தனோடு 1
வேந்து 11
வேந்தே 25
வேப்பம் 1
வேப்பம்_தார் 1
வேம்பன் 2
வேம்பு 1
வேம்பும் 1
வேய் 8
வேய்ந்த 2
வேய்ந்து 2
வேயா 1
வேரி 1
வேரொடு 1
வேல் 52
வேல்-அன்றே 3
வேல்_கோட்டம் 1
வேலன் 7
வேலன்-தன்னினும் 1
வேலனார் 1
வேலான் 2
வேலி 20
வேலியின் 1
வேலியும் 1
வேலியை 1
வேலின் 2
வேலும் 2
வேலே 3
வேலை 6
வேலையின் 1
வேலையுள் 1
வேலோன் 4
வேவேன் 1
வேழ 1
வேழத்தின் 1
வேழத்து 1
வேழம் 1
வேழம்பரும் 1
வேழம்பரொடு 1
வேழமும் 1
வேள் 5
வேள்வி 12
வேள்வியில் 2
வேள்வியும் 2
வேளாவிக்கோ 1
வேளொடு 1
வேற்று 11
வேற்று_ஊண் 1
வேற்று_ஒருவன் 1
வேற்றுமை 3
வேற்றூர் 1
வேறாக 1
வேறாகி 2
வேறாகும் 1
வேறாயின 2
வேறு 37
வேறுபடு 1
வேறுபாட்டினையும் 1
வேறுவேறு 4
வேனல் 3
வேனில் 9
வேனில்_பள்ளி 1
வேனிலொடு 1
வேனிற்கு 1

வேக (5)

வேக யானை வெம்மையின் கைக்கொள – சிலப்.மது 15/47
வேக யானையின் வழியோ நீங்கு என – சிலப்.வஞ்சி 27/222
வேக யானையின் மீமிசை பொலிந்து – சிலப்.வஞ்சி 27/254
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி 9/58
வேக வெம் தீ நாகம் கிடந்த – மணி 20/98

மேல்


வேங்கட (1)

வேங்கட_மலையும் தாங்கா விளையுள் – சிலப்.புகார் 6/30

மேல்


வேங்கட_மலையும் (1)

வேங்கட_மலையும் தாங்கா விளையுள் – சிலப்.புகார் 6/30

மேல்


வேங்கடம் (2)

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் – சிலப்.மது 11/41
குமரி வேங்கடம் குண குட கடலா – சிலப்.வஞ்சி 30/218

மேல்


வேங்கை (13)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 0/4
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை
உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும் – சிலப்.புகார் 1/67,68
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – சிலப்.மது 12/79
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – சிலப்.மது 23/191
மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க – சிலப்.வஞ்சி 24/3
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் – சிலப்.வஞ்சி 24/14
கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – சிலப்.வஞ்சி 24/120
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும் – சிலப்.வஞ்சி 24/121
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை – சிலப்.வஞ்சி 25/17
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – சிலப்.வஞ்சி 25/57
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை – சிலப்.வஞ்சி 28/220,221
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – சிலப்.வஞ்சி 29/145

மேல்


வேங்கையும் (4)

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை – சிலப்.மது 11/207,208
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா – சிலப்.மது 13/6
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும் – சிலப்.மது 13/151,152
செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் – மணி 3/165

மேல்


வேங்கையொடு (1)

வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை – சிலப்.வஞ்சி 25/139

மேல்


வேட்கை (14)

கூற்று-கண் விளிக்கும் குருதி வேட்கை
முரசு கடிப்பு இகூஉம் முது குடி பிறந்தோன் – மணி 1/30,31
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம் – மணி 18/96
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் – மணி 20/83
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினை பயன் – மணி 24/106,107
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் – மணி 25/121
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து – மணி 26/5
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் – மணி 30/46,47
வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை – மணி 30/91
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் – மணி 30/110
வேட்கை சார்ந்து பற்று ஆகுமே – மணி 30/111
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் – மணி 30/125
வேட்கை மீள பற்று மீளும் – மணி 30/126
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று – மணி 30/141
நுகர்வே வேட்கை பற்றே பவமே – மணி 30/164

மேல்


வேட்கையின் (11)

அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி – சிலப்.புகார் 10/84
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் – சிலப்.மது 11/78
நீர் நசைஇ வேட்கையின் நெடும் துறை நிற்ப – சிலப்.மது 11/170
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி – சிலப்.மது 15/170
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று – சிலப்.மது 16/205
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து – சிலப்.மது 23/147
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 28/190
கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட – மணி 0/10
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி – மணி 16/12
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் – மணி 17/35
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி 23/112

மேல்


வேட்கையும் (1)

தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே – சிலப்.மது 23/122

மேல்


வேட்கையேன் (2)

மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்
பாடக சீறடி பரல் பகை உழவா – சிலப்.புகார் 10/51,52
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என – மணி 11/118

மேல்


வேட்கையொடு (1)

வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் – மணி 15/85

மேல்


வேட்டத்து (2)

தலைநாளை வேட்டத்து தந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/129
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா – சிலப்.வஞ்சி 26/188

மேல்


வேட்டது (1)

கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி 18/142

மேல்


வேட்டம் (2)

கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது – சிலப்.வஞ்சி 25/159
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி 18/168

மேல்


வேட்டலும் (1)

செம் தீ வேட்டலும் தெய்வம் பரவலும் – சிலப்.மது 22/148

மேல்


வேட்டனை (1)

உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி 25/113

மேல்


வேட்டு (5)

அரும் படை தானை அமர் வேட்டு கலித்த – சிலப்.வஞ்சி 26/48
கொங்கர் செம் களம் வேட்டு
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 29/5,6
செரு வேட்டு புகன்று எழுந்து – சிலப்.வஞ்சி 29/14
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி 20/95
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு
பல் கலன் கொண்டு பலர் அறியாமல் – மணி 26/20,21

மேல்


வேட்டுவர் (1)

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி – மணி 13/31

மேல்


வேட்டுவவரியும் (1)

வேட்டுவவரியும் தோட்டு அலர் கோதையொடு – சிலப்.புகார் 0/73

மேல்


வேட்டுவன் (1)

கான வேட்டுவன் கடு கணை துரப்ப – மணி 23/114

மேல்


வேட்டோன் (1)

மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/148

மேல்


வேடத்து (1)

தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த – சிலப்.வஞ்சி 27/179

மேல்


வேடமொடு (1)

கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் – மணி 28/68,69

மேல்


வேடர் (1)

வில் தொழில் வேடர் குலனே குலனும் – சிலப்.மது 12/90

மேல்


வேண்ட (3)

திரிபுரம் எரிய தேவர் வேண்ட
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப – சிலப்.புகார் 6/40,41
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – சிலப்.வஞ்சி 30/163,164
கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன்-தனாது – மணி 0/10,11

மேல்


வேண்டல் (1)

வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் – மணி 30/222

மேல்


வேண்டா (4)

உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா
திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/156,157
துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி – மணி 11/64
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி 23/127,128
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா
மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி – மணி 24/157,158

மேல்


வேண்டாது (1)

வேறு சாதிக்க வேண்டாது ஆகும் – மணி 29/190

மேல்


வேண்டார் (1)

அழியல் வேண்டார் அது உறற்பாலார் – மணி 27/156

மேல்


வேண்டி (8)

பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டி
பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – சிலப்.புகார் 0/18,19
சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி
இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்து – சிலப்.புகார் 3/11,12
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையின் கிடந்த தார பாகமும் – சிலப்.புகார் 3/71,72
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப – சிலப்.மது 20/71
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால் – சிலப்.மது 20/73
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த – சிலப்.வஞ்சி 27/219
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செம் கை – மணி 22/152,153
கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி
கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி – மணி 25/14,15

மேல்


வேண்டிய (1)

விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே – சிலப்.மது 17/56

மேல்


வேண்டியது (1)

வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின் – சிலப்.மது 11/131

மேல்


வேண்டின் (1)

வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் – சிலப்.மது 12/122

மேல்


வேண்டினம் (1)

விடியல் வேலை வேண்டினம் என்றலும் – மணி 21/52

மேல்


வேண்டினள் (1)

காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி – சிலப்.புகார் 6/114

மேல்


வேண்டு (1)

விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – சிலப்.புகார் 7/54

மேல்


வேண்டு-வயின் (1)

விச்சை கோலத்து வேண்டு-வயின் படர்தர – சிலப்.வஞ்சி 26/230

மேல்


வேண்டுதி (1)

வேனில் திங்களும் வேண்டுதி என்றே – சிலப்.மது 13/28

மேல்


வேண்டுதிர் (2)

ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 11/104
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 12/18

மேல்


வேண்டுதுமே (2)

மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே
கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல் – சிலப்.வஞ்சி 24/78,79
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே
பாடு உற்று – சிலப்.வஞ்சி 24/113,114

மேல்


வேண்டுநர்க்கு (1)

விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு – சிலப்.மது 22/84

மேல்


வேண்டும் (19)

தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள் – சிலப்.புகார் 9/32
அறியாமை என்று அறியல் வேண்டும்
செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு – சிலப்.புகார் 10/238,239
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – சிலப்.மது 11/153
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – சிலப்.மது 12/121
வடியா கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு – சிலப்.மது 13/88,89
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய் தீர் காட்சி புரையோய் போற்றி – சிலப்.மது 13/91,92
பத்தினி கடவுளை பரசல் வேண்டும் என – சிலப்.வஞ்சி 25/114
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும்
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு – சிலப்.வஞ்சி 28/128,129
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே – சிலப்.வஞ்சி 28/178,179
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
மற்று உன் மகனை மாபெருந்தேவி – மணி 23/79,80
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்
கற்ற கல்வி அன்றால் காரிகை – மணி 23/129,130
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப – மணி 26/9
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும்
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி 27/13,14
அது மண்டலம் என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் – மணி 27/158,159
தாமே நெருப்பை சாதிக்க வேண்டும்
அன்னுவயம் சாதிக்கின் முன்னும் – மணி 29/95,96
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு – மணி 29/101
இறந்த காலம் என்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை – மணி 30/160,161
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும்
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி 30/222,223
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும்
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் – மணி 30/226,227

மேல்


வேண்டுவ (1)

வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி 16/77

மேல்


வேண்டேன் (1)

வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும் – மணி 16/79

மேல்


வேண்மாள் (1)

வதுவை வேண்மாள் மங்கல மடந்தை – சிலப்.வஞ்சி 28/51

மேல்


வேண்மாளுடன் (1)

இளங்கோ_வேண்மாளுடன் இருந்து_அருளி – சிலப்.வஞ்சி 25/5

மேல்


வேணவா (2)

வேணவா தீர்த்த விளக்கே வா என – மணி 0/18
வேணவா மிகுக்கும் விரை மர காவும் – மணி 28/63

மேல்


வேத்தர் (1)

ஆ-தலை பட்ட துயர் தீர்க்க வேத்தர்
மருள வைகல்வைகல் மாறு அட்டு – சிலப்.மது 17/160,161

மேல்


வேத்தவையாரொடும் (1)

வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் – மணி 28/118

மேல்


வேத்தியல் (5)

வேத்தியல் இழந்த வியல் நிலம் போல – சிலப்.மது 11/61
வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து – சிலப்.மது 14/148
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் – சிலப்.வஞ்சி 28/79
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி 2/18
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின் – மணி 28/46

மேல்


வேத்தினம் (1)

வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி – சிலப்.வஞ்சி 26/127

மேல்


வேத்து (1)

வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – சிலப்.புகார் 3/39

மேல்


வேத (4)

விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி – சிலப்.புகார் 10/189
வேத_முதல்வன் பயந்தோன் என்பது – சிலப்.மது 14/48
வேத_முதல்வன் வேள்வி கருவியோடு – சிலப்.மது 22/35
வேத வியாதனும் கிருத கோடியும் – மணி 27/5

மேல்


வேத_முதல்வன் (3)

விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி – சிலப்.புகார் 10/189
வேத_முதல்வன் பயந்தோன் என்பது – சிலப்.மது 14/48
வேத_முதல்வன் வேள்வி கருவியோடு – சிலப்.மது 22/35

மேல்


வேதக்கு (1)

சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி 27/103,104

மேல்


வேதத்து (1)

ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது – சிலப்.புகார் 10/190

மேல்


வேதரும் (1)

ஆயுள் வேதரும் கால கணிதரும் – சிலப்.புகார் 5/44

மேல்


வேதனை (1)

வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி 30/221

மேல்


வேதாளிகர் (1)

மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் – மணி 28/50

மேல்


வேதாளிகரொடு (1)

சூதர் மாதகர் வேதாளிகரொடு
நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர் – சிலப்.புகார் 5/48,49

மேல்


வேதிகை (2)

பவள திரள் கால் பைம் பொன் வேதிகை
நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – சிலப்.புகார் 5/148,149
பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து – மணி 1/48

மேல்


வேதிகைகளும் (1)

வெண் கால் அமளியும் விதான வேதிகைகளும்
தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள – சிலப்.வஞ்சி 28/45,46

மேல்


வேதியன் (1)

வேதியன் உரையின் விதியும் கேட்டு – மணி 27/105

மேல்


வேதின (1)

வேதின துப்பவும் கோடு கடை தொழிலவும் – சிலப்.மது 14/176

மேல்


வேது (1)

கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ – சிலப்.வஞ்சி 28/16

மேல்


வேந்தர் (15)

முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது – சிலப்.புகார் 0/61
இரு பெரு வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 5/59
வெல் போர் வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 10/118
முடி உடை வேந்தர் மூவருள்ளும் – சிலப்.புகார் 10/249
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது – சிலப்.மது 15/146
அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர்
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என – சிலப்.மது 16/113,114
அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர்
வீயா திருவின் விழு குடி பிறந்த – சிலப்.மது 23/142,143
முடி கெழு வேந்தர் மூவருள்ளும் – சிலப்.மது 23/205
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி – சிலப்.வஞ்சி 25/152
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே – சிலப்.வஞ்சி 25/175
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 27/159
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை – சிலப்.வஞ்சி 28/215
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு புகன்று எழுந்து – சிலப்.வஞ்சி 29/13,14
முடி உடை வேந்தர் மூவருள்ளும் – சிலப்.வஞ்சி 30/203
கனக விசயர் முதல் பல வேந்தர்
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை – மணி 26/86,87

மேல்


வேந்தர்-தம் (1)

வேந்தர்-தம் செவி உறுவதன் முன்னம் – மணி 22/212

மேல்


வேந்தர்-தம்முள் (1)

தாய வேந்தர்-தம்முள் பகையுற – சிலப்.மது 23/144

மேல்


வேந்தர்க்கு (2)

எம் போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் – சிலப்.வஞ்சி 26/12
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி – சிலப்.வஞ்சி 27/191

மேல்


வேந்தரும் (1)

குடக கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும் – சிலப்.வஞ்சி 30/159,160

மேல்


வேந்தரை (2)

வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி – மணி 24/45
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ – மணி 24/67

மேல்


வேந்தற்கு (8)

மலை சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட – சிலப்.மது 14/94,95
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – சிலப்.மது 16/123
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – சிலப்.மது 23/153
எம்மோர் அன்ன வேந்தற்கு உற்ற – சிலப்.வஞ்சி 25/95
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும் – சிலப்.வஞ்சி 25/151
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய – சிலப்.வஞ்சி 26/39
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு – சிலப்.வஞ்சி 27/89
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி – மணி 5/116

மேல்


வேந்தன் (61)

காட்டினள் ஆதலின் காவல் வேந்தன்
இலை பூ கோதை இயல்பினின் வழாமை – சிலப்.புகார் 3/159,160
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/85
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன்
பகை_புறத்து கொடுத்த பட்டி மண்டபமும் – சிலப்.புகார் 5/101,102
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த – சிலப்.புகார் 5/103
உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன்
எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – சிலப்.புகார் 7/213,214
வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன்
தான் நலம் திருக தன்மையில் குன்றி – சிலப்.மது 11/62,63
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல – சிலப்.மது 13/15
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு – சிலப்.மது 13/143
வேனில் வேந்தன் வேற்று புலம் படர – சிலப்.மது 14/124
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில் – சிலப்.மது 15/96
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம் – சிலப்.மது 16/193
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன்
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/124,125
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன்
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால் – சிலப்.மது 17/125,126
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன்
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/128,129
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன்
கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால் – சிலப்.மது 17/129,130
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/19,20
வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி – சிலப்.மது 20/96
பூம் புனல் பழன புகார் நகர் வேந்தன்
தாங்கா விளையுள் நல் நாடு-அதனுள் – சிலப்.மது 23/59,60
கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன்
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – சிலப்.மது 23/131,132
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை – சிலப்.வஞ்சி 25/87
மீளா வென்றி வேந்தன் கேட்டு – சிலப்.வஞ்சி 26/32
வாள் வினை முடித்து மற வாள் வேந்தன்
ஊழி வாழி என்று ஓவர் தோன்ற – சிலப்.வஞ்சி 26/123,124
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து – சிலப்.வஞ்சி 26/144
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன்
மண் உடை முடங்கல் அ மன்னவர்க்கு அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/170,171
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன்
போந்தையொடு தொடுத்த பருவ தும்பை – சிலப்.வஞ்சி 26/218,219
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/5
வெள்ளிடை பாடி வேந்தன் புக்கு – சிலப்.வஞ்சி 27/24
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன்
ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் – சிலப்.வஞ்சி 27/46,47
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த – சிலப்.வஞ்சி 27/62
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன்
போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – சிலப்.வஞ்சி 27/80,81
குட திசை ஆளும் கொற்ற வேந்தன்
வட திசை தும்பை வாகையொடு முடித்து – சிலப்.வஞ்சி 27/197,198
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு – சிலப்.வஞ்சி 28/87,88
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயம் தெரி நாவின் – சிலப்.வஞ்சி 28/190,191
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – சிலப்.வஞ்சி 29/150,151
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன்
அம் மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/152,153
தோடு அலர் போந்தை தொடு கழல் வேந்தன்
மாடல மறையோன் தன் முகம் நோக்க – சிலப்.வஞ்சி 30/116,117
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின் – சிலப்.வஞ்சி 30/170
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி 0/79
இளங்கோ வேந்தன் அருளி கேட்ப – மணி 0/95
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி 7/11,12
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி 7/79
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன்
மைத்துனன் ஆகிய பிரமதருமன் – மணி 9/14,15
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன் – மணி 10/53,54
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் – மணி 12/39,40
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன்
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி 14/103,104
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி 15/40
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி 15/45
துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ – மணி 15/46
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ – மணி 15/47
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி – மணி 18/42
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை – மணி 19/42
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என – மணி 19/142
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் – மணி 19/156
வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் – மணி 20/10
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன்
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில் – மணி 21/5,6
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து – மணி 22/10
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன் – மணி 22/162
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப – மணி 22/166
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் – மணி 26/77,78
விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் – மணி 28/104
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற – மணி 28/215

மேல்


வேந்தன்-தனை (1)

தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – சிலப்.மது 19/71

மேல்


வேந்தனின் (2)

வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து – மணி 19/92
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின்
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி 22/112,113

மேல்


வேந்தனும் (4)

அரிது இவர் செய்தி அலைக்கும் வேந்தனும்
உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என – சிலப்.மது 16/210,211
நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து – சிலப்.வஞ்சி 25/178
கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும்
எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின் – சிலப்.வஞ்சி 30/160,161
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும்
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி 9/23,24

மேல்


வேந்தனொடு (2)

ஊர்சூழ்வரியும் சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும் வஞ்சினமாலையும் – சிலப்.புகார் 0/79,80
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் – சிலப்.புகார் 5/182

மேல்


வேந்தனோடு (1)

எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – சிலப்.புகார் 7/214

மேல்


வேந்து (11)

வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய – சிலப்.மது 14/5
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய – சிலப்.மது 15/21
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – சிலப்.வஞ்சி 27/116
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் – சிலப்.வஞ்சி 28/10
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து – சிலப்.வஞ்சி 28/133
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று – சிலப்.வஞ்சி 30/182
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி 18/63
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி 19/162
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி 22/167
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி 22/215
சிறை தக்கன்று செங்கோல் வேந்து என – மணி 23/30

மேல்


வேந்தே (25)

வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – சிலப்.மது 20/42
நல் திறம் படரா கொற்கை வேந்தே
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – சிலப்.மது 20/78,79
திண் திறல் வேந்தே செப்ப கேளாய் – சிலப்.வஞ்சி 25/68
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 26/27
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே
வாகை தும்பை மணி தோட்டு போந்தையோடு – சிலப்.வஞ்சி 26/69,70
சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப – சிலப்.வஞ்சி 26/139,140
நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது – சிலப்.வஞ்சி 26/149,150
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த – சிலப்.வஞ்சி 27/150
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 27/162
தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே
செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 28/84,85
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண – சிலப்.வஞ்சி 28/96,97
நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே
புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த – சிலப்.வஞ்சி 28/122,123
மண் ஆள் வேந்தே நின் வாழ்நாட்கள் – சிலப்.வஞ்சி 28/125
கண்டனை அல்லையோ காவல் வேந்தே
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு – சிலப்.வஞ்சி 28/154,155
திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை – சிலப்.வஞ்சி 28/157,158
வழிவழி சிறக்க வய வாள் வேந்தே
அரும் பொருள் பரிசிலேன் அல்லேன் யானும் – சிலப்.வஞ்சி 28/170,171
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி – மணி 5/28
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி 5/79
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே
பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் – மணி 9/19,20
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி 14/43,44
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி 19/146
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே
இன்றே அல்ல இ பதி மருங்கில் – மணி 22/18,19
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால் – மணி 22/24
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி 22/122,123
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் – மணி 22/175,176

மேல்


வேப்பம் (1)

வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/186

மேல்


வேப்பம்_தார் (1)

வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/186

மேல்


வேம்பன் (2)

சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – சிலப்.புகார் 0/28
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – சிலப்.மது 16/149

மேல்


வேம்பு (1)

வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து – சிலப்.வஞ்சி 27/125

மேல்


வேம்பும் (1)

ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும்
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் – சிலப்.வஞ்சி 26/19,20

மேல்


வேய் (8)

வேய் வில் எயினர் குலனே குலனும் – சிலப்.மது 12/98
கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன் – சிலப்.மது 12/134
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து – சிலப்.மது 13/36
வேய் திரள் பந்தரும் விளங்கிய இருக்கை – சிலப்.மது 13/194
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து – மணி 17/91
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி 20/58
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி 23/127
வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும் – மணி 27/136

மேல்


வேய்ந்த (2)

நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே – சிலப்.வஞ்சி 28/122
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் – மணி 19/114

மேல்


வேய்ந்து (2)

நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து – சிலப்.மது 14/89,90
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி 25/218

மேல்


வேயா (1)

வேயா மாடமும் வியன் கல இருக்கையும் – சிலப்.புகார் 5/7

மேல்


வேரி (1)

வேரி மலர் கோதையாள் சுட்டு – சிலப்.மது 17/34

மேல்


வேரொடு (1)

வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த – சிலப்.புகார் 8/46

மேல்


வேல் (52)

செரு மிகு சின வேல் செம்பியன் – சிலப்.புகார் 1/69
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – சிலப்.புகார் 2/51
வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/65
பல் வேல் பரப்பினர் மெய் உற தீண்டி – சிலப்.புகார் 5/82
திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – சிலப்.புகார் 6/12
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – சிலப்.புகார் 7/55
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – சிலப்.புகார் 7/62
வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய – சிலப்.புகார் 7/104
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – சிலப்.புகார் 8/72
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து – சிலப்.புகார் 8/88
வள வேல் நல் கண்ணி மனம் – சிலப்.புகார் 8/122
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – சிலப்.புகார் 9/11
வடி வேல் எறிந்த வான் பகை பொறாது – சிலப்.மது 11/18
திருந்து வேல் தட கை இளையோன் கூறும் – சிலப்.மது 16/203
வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – சிலப்.மது 17/30
மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை – சிலப்.மது 19/21
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள் – சிலப்.மது 20/48
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – சிலப்.மது 20/77
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – சிலப்.மது 21/19
உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – சிலப்.மது 22/54
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர் – சிலப்.மது 22/63
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தட கை – சிலப்.மது 23/55
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – சிலப்.மது 23/62
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – சிலப்.மது 23/64
மற வேல் மன்னவன் கேட்டனன் மயங்கி – சிலப்.மது 23/110
வடி வேல் தட கை வசுவும் குமரனும் – சிலப்.மது 23/139
வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி – சிலப்.மது 23/157
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – சிலப்.மது 23/189,190
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – சிலப்.வஞ்சி 24/45
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் – சிலப்.வஞ்சி 25/11
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு – சிலப்.வஞ்சி 25/64
பங்களர் கங்கர் பல் வேல் கட்டியர் – சிலப்.வஞ்சி 25/157
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் – சிலப்.வஞ்சி 26/156
பாய்ந்த பண்பின் பல் வேல் மன்னர் – சிலப்.வஞ்சி 26/190
சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர் – சிலப்.வஞ்சி 26/197
காய் வேல் தட கை கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/222
பல் வேல் தானை படை பல ஏவி – சிலப்.வஞ்சி 26/252
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 27/3
இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை – சிலப்.வஞ்சி 27/66
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – சிலப்.வஞ்சி 27/165
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – சிலப்.வஞ்சி 28/12
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று – சிலப்.வஞ்சி 28/107
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி 18/75
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி 19/124
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் – மணி 21/5
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப – மணி 22/166
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி 24/88
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி 25/80
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி 25/193
வடி வேல் தட கை வானவன் போல – மணி 25/202
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் – மணி 29/3

மேல்


வேல்-அன்றே (3)

ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – சிலப்.வஞ்சி 24/48,49
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே
பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – சிலப்.வஞ்சி 24/52,53
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – சிலப்.வஞ்சி 24/56,57

மேல்


வேல்_கோட்டம் (1)

உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம்
வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம் – சிலப்.புகார் 9/11,12

மேல்


வேலன் (7)

வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள் – சிலப்.வஞ்சி 24/62
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வரும் ஆயின் வேலன் மடவன் அவனின் – சிலப்.வஞ்சி 24/64,65
வரும் ஆயின் வேலன் மடவன் அவனின் – சிலப்.வஞ்சி 24/65
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வேலன் மடவன் அவனினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/68,69
வேலன் மடவன் அவனினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/69
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன்
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/72,73
வென்றி செவ்வேள் வேலன் பாணியும் – சிலப்.வஞ்சி 25/25

மேல்


வேலன்-தன்னினும் (1)

தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/73

மேல்


வேலனார் (1)

வேலனார் வந்து வெறியாடும் வெம் களத்து – சிலப்.வஞ்சி 24/75

மேல்


வேலான் (2)

வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் – சிலப்.வஞ்சி 29/108
வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான்
பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/110,111

மேல்


வேலி (20)

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – சிலப்.புகார் 1/8
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு – சிலப்.புகார் 1/11
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு – சிலப்.புகார் 5/99
கைதை வேலி நெய்தல் அம் கானல் – சிலப்.புகார் 6/150
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – சிலப்.புகார் 6/167
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – சிலப்.புகார் 7/107
கைதை வேலி கழி_வாய் வந்து எம் – சிலப்.புகார் 7/187
கானல் வேலி கழி_வாய் வந்து – சிலப்.புகார் 7/191
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் – சிலப்.மது 12/10
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர் – சிலப்.மது 13/42
தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து – சிலப்.மது 15/11
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – சிலப்.மது 18/50
அரைச வேலி அல்லது யாவதும் – சிலப்.மது 23/44
புரை தீர் வேலி இல் என மொழிந்து – சிலப்.மது 23/45
இன்று அ வேலி காவாதோ என – சிலப்.மது 23/47
மாநீர் வேலி கடம்பு எறிந்து இமயத்து – சிலப்.வஞ்சி 25/1
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ – சிலப்.வஞ்சி 26/179
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – சிலப்.வஞ்சி 28/197
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி – சிலப்.வஞ்சி 28/206
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – சிலப்.வஞ்சி 29/133

மேல்


வேலியின் (1)

மருத வேலியின் மாண்புற தோன்றும் – சிலப்.புகார் 6/149

மேல்


வேலியும் (1)

நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ – சிலப்.மது 11/69

மேல்


வேலியை (1)

இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய – சிலப்.வஞ்சி 25/165

மேல்


வேலின் (2)

நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/122
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை – சிலப்.மது 15/4

மேல்


வேலும் (2)

கோலும் குந்தமும் வேலும் பிறவும் – சிலப்.மது 15/216
வேலும் கோலும் அருட்கண் விழிக்க – மணி 22/15

மேல்


வேலே (3)

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – சிலப்.வஞ்சி 24/50,51
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே
சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர் – சிலப்.வஞ்சி 24/54,55
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே
இறை வளை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/58,59

மேல்


வேலை (6)

வேலை வாலுகத்து விரி திரை பரப்பில் – சிலப்.புகார் 6/131
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு – சிலப்.புகார் 6/175
மாலை மதியமும் போல் வாழியரோ வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலை – சிலப்.புகார் 10/270,271
வெண் திரை பொருத வேலை வாலுகத்து – சிலப்.வஞ்சி 27/242
விடியல் வேலை வேண்டினம் என்றலும் – மணி 21/52
வேலை பிழைத்த வெகுளி தோன்ற – மணி 21/58

மேல்


வேலையின் (1)

காலை தோன்ற வேலையின் வரூஉ – மணி 21/54

மேல்


வேலையுள் (1)

மன் உயிர் முதல்வன் மகர வேலையுள்
முன்னிய வங்கம் முங்கி கேடு உற – மணி 29/15,16

மேல்


வேலோன் (4)

வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி – சிலப்.வஞ்சி 26/127
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை – சிலப்.வஞ்சி 27/175
மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் – மணி 0/71
வாகை வேலோன் வளைவணன் தேவி – மணி 24/55

மேல்


வேவேன் (1)

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து – மணி 11/101

மேல்


வேழ (1)

உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – சிலப்.வஞ்சி 30/121

மேல்


வேழத்தின் (1)

திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன – சிலப்.வஞ்சி 25/155

மேல்


வேழத்து (1)

பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி 3/142,143

மேல்


வேழம் (1)

வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி 20/95

மேல்


வேழம்பரும் (1)

நண்ணிய நூற்றுவர் நகை_வேழம்பரும் – சிலப்.வஞ்சி 26/131

மேல்


வேழம்பரொடு (1)

நகை வேழம்பரொடு வகை தெரி இருக்கையும் – சிலப்.புகார் 5/53

மேல்


வேழமும் (1)

வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – சிலப்.மது 21/59

மேல்


வேள் (5)

வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – சிலப்.மது 14/111
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – சிலப்.மது 23/190
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப – சிலப்.வஞ்சி 25/177
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – சிலப்.வஞ்சி 28/42
வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல் – மணி 4/102

மேல்


வேள்வி (12)

வேத_முதல்வன் வேள்வி கருவியோடு – சிலப்.மது 22/35
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/131
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை – சிலப்.வஞ்சி 28/132
மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/148
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் – சிலப்.வஞ்சி 28/176
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் – சிலப்.வஞ்சி 28/178
வேள்வி கிழத்தி இவளொடும் கூடி – சிலப்.வஞ்சி 28/183
கேள்வி முடித்த வேள்வி மாக்களை – சிலப்.வஞ்சி 28/192
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி – சிலப்.வஞ்சி 28/194
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – சிலப்.வஞ்சி 28/199
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின் – சிலப்.வஞ்சி 30/170
ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி 0/33

மேல்


வேள்வியில் (2)

நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட – சிலப்.வஞ்சி 30/162,163
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில்
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி – மணி 13/28,29

மேல்


வேள்வியும் (2)

ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – சிலப்.மது 23/69
வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து – சிலப்.வஞ்சி 28/232

மேல்


வேளாவிக்கோ (1)

வேளாவிக்கோ மாளிகை காட்டி – சிலப்.வஞ்சி 28/198

மேல்


வேளொடு (1)

அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை – சிலப்.வஞ்சி 28/205

மேல்


வேற்று (11)

வேற்று புலம் போகி நல் வெற்றம் கொடுத்து – சிலப்.மது 11/212
வேனில் வேந்தன் வேற்று புலம் படர – சிலப்.மது 14/124
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – சிலப்.மது 21/19
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி 8/41
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி 10/80
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என – மணி 12/52
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி 14/7
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி 26/69
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் – மணி 27/125
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி 28/3
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் – மணி 29/41

மேல்


வேற்று_ஊண் (1)

ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி 14/7

மேல்


வேற்று_ஒருவன் (1)

வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன்
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – சிலப்.மது 21/19,20

மேல்


வேற்றுமை (3)

வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த – சிலப்.வஞ்சி 26/148
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி 30/218
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் – மணி 30/222

மேல்


வேற்றூர் (1)

வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர்
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – சிலப்.மது 12/122,123

மேல்


வேறாக (1)

தோளும் தலையும் துணிந்து வேறாக
வாளின் தப்பிய வல் வினை அன்றே – மணி 21/59,60

மேல்


வேறாகி (2)

தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் – மணி 20/41,42
ஈன்ற குழவியொடு தான் வேறாகி
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி 23/106,107

மேல்


வேறாகும் (1)

திரிந்து வேறாகும் காலமும் உண்டோ – சிலப்.வஞ்சி 27/169

மேல்


வேறாயின (2)

இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன – மணி 20/46,47
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி 20/56,57

மேல்


வேறு (37)

வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/178
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/178
பரத குமரரும் பல் வேறு ஆயமும் – சிலப்.புகார் 6/156
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – சிலப்.புகார் 7/54
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – சிலப்.புகார் 8/92
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – சிலப்.புகார் 8/101
பல் வேறு குழூஉ குரல் பரந்த ஓதையும் – சிலப்.புகார் 10/119
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் – சிலப்.மது 12/65
பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர் – சிலப்.மது 13/126
நால் வேறு வகையின் நய_தகு மரபின் – சிலப்.மது 14/157
இருள் தெளித்தனையவும் இரு வேறு உருவவும் – சிலப்.மது 14/190
ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – சிலப்.மது 14/191
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 14/212
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 14/212
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய் – சிலப்.மது 16/29
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 22/110
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 22/110
தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய – சிலப்.வஞ்சி 26/205
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் – மணி 1/37
பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து – மணி 1/38
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி 6/56
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி 6/56
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப – மணி 7/86
வேறு இடத்து பிறந்த உயிரே போன்று – மணி 8/14
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி 10/77
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி 21/101
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து – மணி 22/10
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி 25/97
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி 27/94
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி 27/272
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி 27/282
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி 28/48
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் – மணி 29/115
வேறு சாதிக்க வேண்டாது ஆகும் – மணி 29/190
குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால் – மணி 29/308
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி 29/311
வேறு புலன்களை மேவுதல் என்ப – மணி 30/89

மேல்


வேறுபடு (1)

வேறுபடு திருவின் வீறு பெற காண – சிலப்.புகார் 2/87

மேல்


வேறுபாட்டினையும் (1)

பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும்
தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி 29/115,116

மேல்


வேறுவேறு (4)

வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை – சிலப்.புகார் 6/161
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை – சிலப்.புகார் 6/161
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை – மணி 1/56
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை – மணி 1/56

மேல்


வேனல் (3)

வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – சிலப்.புகார் 8/125
வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன் – சிலப்.மது 11/62
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து – சிலப்.மது 13/36

மேல்


வேனில் (9)

மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – சிலப்.புகார் 0/69
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் – சிலப்.புகார் 2/26
வேனில்_பள்ளி மேவாது கழிந்து – சிலப்.புகார் 4/60
வேனில் பள்ளி ஏறி மாண் இழை – சிலப்.புகார் 8/18
இன் இள வேனில் இளவரசாளன் – சிலப்.புகார் 8/57
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள் – சிலப்.மது 13/3
வேனில் திங்களும் வேண்டுதி என்றே – சிலப்.மது 13/28
வேனில் வேந்தன் வேற்று புலம் படர – சிலப்.மது 14/124
அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார் – சிலப்.வஞ்சி 26/113

மேல்


வேனில்_பள்ளி (1)

வேனில்_பள்ளி மேவாது கழிந்து – சிலப்.புகார் 4/60

மேல்


வேனிலொடு (1)

கலையிலாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும் – சிலப்.புகார் 10/28,29

மேல்


வேனிற்கு (1)

அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே – சிலப்.மது 13/50

மேல்