ஓ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 2
ஓங்க 1
ஓங்கலும் 1
ஓங்கி 12
ஓங்கிய 45
ஓங்கின 1
ஓங்கு 40
ஓங்கும் 2
ஓச்சி 5
ஓச்சினள் 1
ஓச்சும் 1
ஓசனிக்கின்ற 1
ஓசி 1
ஓசுநர் 1
ஓசை 6
ஓசையின் 1
ஓசையும் 2
ஓட்டி 13
ஓட 2
ஓடலும் 1
ஓடாது 1
ஓடி 3
ஓடு 9
ஓடும் 5
ஓடுவையும் 1
ஓடை 2
ஓத்தின் 1
ஓத்து 1
ஓத 1
ஓதம் 5
ஓதமே 1
ஓதல் 2
ஓதி 13
ஓதிக்கு 1
ஓதிய 7
ஓதியின் 1
ஓதியை 2
ஓதில் 1
ஓதின் 1
ஓதினன் 2
ஓதினை 1
ஓதை 9
ஓதையின் 2
ஓதையும் 22
ஓப்ப 1
ஓப்பி 1
ஓப்பியும் 1
ஓப்புதல் 1
ஓம்ப 2
ஓம்படையும் 1
ஓம்பலின் 1
ஓம்பலும் 1
ஓம்பவும் 1
ஓம்பன்-மின் 1
ஓம்பாளன் 3
ஓம்பி 6
ஓம்பிடும் 1
ஓம்பிய 1
ஓம்பு 3
ஓம்பு-மின் 2
ஓம்புதல் 2
ஓம்புநர் 3
ஓம்புநர்க்கு 1
ஓம்புநன் 1
ஓம்பும் 8
ஓம்புவை 1
ஓமாலிகையினும் 1
ஓமையும் 1
ஓர் 149
ஓர்க்கும் 1
ஓர்த்து 2
ஓர்ந்தனை 1
ஓரா 1
ஓராது 1
ஓரிடத்து 1
ஓரிடத்தே 1
ஓரின் 1
ஓலை 2
ஓவர் 1
ஓவிய 8
ஓவியச்சேனன் 1
ஓவியம் 3
ஓவியன் 1
ஓழியா 1

ஓ (2)

ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது – சிலப்.புகார் 10/109
எல்லா ஓ
காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் – சிலப்.மது 18/11,12

மேல்


ஓங்க (1)

ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து – சிலப்.வஞ்சி 26/71,72

மேல்


ஓங்கலும் (1)

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்
பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து – சிலப்.மது 13/153,154

மேல்


ஓங்கி (12)

ஓங்கி பரந்து ஒழுகலான் – சிலப்.புகார் 1/12
ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – சிலப்.புகார் 10/209,210
மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து – சிலப்.மது 13/25
பால் புடை கொண்டு பல் மலர் ஓங்கி
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – சிலப்.மது 13/162,163
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி
பகை தெறல் அறியா பயம் கெழு வீதியும் – சிலப்.மது 14/199,200
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/6,7
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – மணி 5/97,98
தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து – மணி 6/80,81
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று – மணி 8/45,46
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி 10/87,88
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ – மணி 11/90,91
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி 28/164,165

மேல்


ஓங்கிய (45)

உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் – சிலப்.புகார் 6/42,43
மகர வாரி வளம் தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகி – சிலப்.புகார் 6/128,129
பணை ஐந்து ஓங்கிய பாசிலை போதி – சிலப்.புகார் 10/11
இரு மருங்கு ஓங்கிய இடைநிலை தானத்து – சிலப்.மது 11/44
மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் – சிலப்.மது 11/84,85
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – சிலப்.மது 12/49,50
வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய
காலை முரசம் கனை குரல் இயம்ப – சிலப்.மது 14/13,14
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் – சிலப்.மது 14/202
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய
கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் – சிலப்.வஞ்சி 26/39,40
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 26/110
ஓங்கிய இமயத்து கல் கால்கொண்டு – சிலப்.வஞ்சி 26/152
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த – சிலப்.வஞ்சி 26/173,174
மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து – சிலப்.வஞ்சி 28/36
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின் – சிலப்.வஞ்சி 28/48
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய
தமனிய மாளிகை புனை மணி அரங்கின் – சிலப்.வஞ்சி 28/49,50
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டி சேதம் – சிலப்.வஞ்சி 28/74,75
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் – சிலப்.வஞ்சி 28/177,178
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும் – சிலப்.வஞ்சி 30/8,9
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர் – சிலப்.வஞ்சி 30/30
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் – சிலப்.வஞ்சி 30/226,227
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடா செங்கோல் சோழர் தம் குலக்கொடி – மணி 0/22,23
ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும் – மணி 0/84
நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் – மணி 2/1
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி 3/127
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி 4/9
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி 4/16,17
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து – மணி 4/29,30
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி 5/115
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி 5/117,118
நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி 6/48,49
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் – மணி 6/52
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி 6/59
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் – மணி 8/6
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி 15/76
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி 15/78
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி 17/84
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி 18/56
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நல் நலம் கவினி – மணி 18/57,58
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன் – மணி 18/64
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து – மணி 20/28
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் – மணி 21/93
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை – மணி 21/181
ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும் – மணி 24/12
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை – மணி 26/88
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் – மணி 28/24

மேல்


ஓங்கின (1)

ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும் – சிலப்.மது 12/76

மேல்


ஓங்கு (40)

ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – சிலப்.புகார் 1/32
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் – சிலப்.புகார் 5/104
ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – சிலப்.புகார் 10/111
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை – சிலப்.மது 11/42
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது – சிலப்.மது 11/105
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப – சிலப்.மது 14/6
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – சிலப்.மது 14/72
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி – சிலப்.மது 14/74
ஆங்கு அது அன்றியும் ஓங்கு இரும் பரப்பின் – சிலப்.மது 14/106
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும் – சிலப்.வஞ்சி 26/8
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ – சிலப்.வஞ்சி 26/179
ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய – சிலப்.வஞ்சி 26/220
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் – சிலப்.வஞ்சி 27/80
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த – சிலப்.வஞ்சி 27/220
திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்து – சிலப்.வஞ்சி 27/223
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண – சிலப்.வஞ்சி 28/97
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/134
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் – சிலப்.வஞ்சி 29/135
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை – சிலப்.வஞ்சி 30/62
ஓங்கு இரும் தானையும் உரையோடு ஏத்த – சிலப்.வஞ்சி 30/166
ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு – மணி 0/16
உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர் – மணி 1/1
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி 1/3
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி 2/73
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி 3/106
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி 5/126
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை – மணி 6/96
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி 11/22
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி 12/111
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி 13/67
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி 14/54
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி 16/53
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி 22/13
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி 22/14
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி 22/69
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் – மணி 22/142
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி 22/197
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி 24/172
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் – மணி 28/62
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம் – மணி 28/131

மேல்


ஓங்கும் (2)

தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி 9/17
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி 15/20

மேல்


ஓச்சி (5)

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்-அது ஓச்சி
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/21,22
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/25,26
கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப – சிலப்.மது 12/9
கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால் – சிலப்.மது 17/130
மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சி
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு – சிலப்.மது 22/57,58

மேல்


ஓச்சினள் (1)

கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – சிலப்.வஞ்சி 30/42

மேல்


ஓச்சும் (1)

கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – சிலப்.புகார் 7/43

மேல்


ஓசனிக்கின்ற (1)

ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள் – சிலப்.மது 14/125

மேல்


ஓசி (1)

தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி 20/57

மேல்


ஓசுநர் (1)

ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும் – சிலப்.புகார் 5/27

மேல்


ஓசை (6)

தேசிக திருவின் ஓசை கடைப்பிடித்து – சிலப்.புகார் 3/30
தேசிக திருவின் ஓசை எல்லாம் – சிலப்.புகார் 3/31
மறை நா ஓசை அல்லது யாவதும் – சிலப்.மது 23/31
மணி நா ஓசை கேட்டதும் இலனே – சிலப்.மது 23/32
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி 27/236
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி 27/252

மேல்


ஓசையின் (1)

வெவ்வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் – மணி 27/268

மேல்


ஓசையும் (2)

நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த தொழு விளி பூசலும் – மணி 6/71,72
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய மூக்கால் நாற்றனும் நாவால் – மணி 27/15,16

மேல்


ஓட்டி (13)

புன்கண் மாலை குறும்பு எறிந்து ஓட்டி
பான்மையில் திரியாது பால் கதிர் பரப்பி – சிலப்.புகார் 4/24,25
இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி
கலங்கா உள்ளம் கலங்க கடை சிவந்து – சிலப்.புகார் 4/69,70
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை – சிலப்.புகார் 10/78,79
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி
மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சி – சிலப்.மது 22/56,57
நா வலம் கொண்டு நண்ணார் ஓட்டி
பார்ப்பன வாகை சூடி ஏற்புற – சிலப்.மது 23/71,72
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை – சிலப்.வஞ்சி 28/119,120
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி
அகப்பா எறிந்த அரும் திறல் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/143,144
ஆரிய நாட்டு அரசு ஓட்டி
அவர் முடி_தலை அணங்கு ஆகிய – சிலப்.வஞ்சி 29/25,26
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 30/214,215
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி 18/74,75
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க – மணி 18/165,166
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப – மணி 19/18
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் – மணி 23/118

மேல்


ஓட (2)

காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் – மணி 13/48,49
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட
கான வேட்டுவன் கடு கணை துரப்ப – மணி 23/113,114

மேல்


ஓடலும் (1)

ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி 3/112

மேல்


ஓடாது (1)

உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி 12/67

மேல்


ஓடி (3)

இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி 4/33,34
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி
வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல் – மணி 4/101,102
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி – மணி 7/54,55

மேல்


ஓடு (9)

ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி 4/75
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி 13/114
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 14/13
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி 15/54
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல – மணி 18/116
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி 21/157
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி 21/158
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி 23/36
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 25/144

மேல்


ஓடும் (5)

எறி வளைகள் ஆர்ப்ப இரு மருங்கும் ஓடும்
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – சிலப்.புகார் 7/61,62
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/89
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் – சிலப்.மது 23/39
ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி 3/112
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி 16/92

மேல்


ஓடுவையும் (1)

தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி – மணி 6/80

மேல்


ஓடை (2)

நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை
அரசு உவா தட கையில் பரசினர் கொண்டு – சிலப்.புகார் 3/123,124
ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க – சிலப்.வஞ்சி 26/71

மேல்


ஓத்தின் (1)

ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று – சிலப்.மது 22/28

மேல்


ஓத்து (1)

ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் – மணி 13/25

மேல்


ஓத (1)

உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத
தக்கிணன்-தன்னை மிக்கோன் வியந்து – சிலப்.மது 23/94,95

மேல்


ஓதம் (5)

வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – சிலப்.புகார் 7/129
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/152
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – சிலப்.புகார் 7/153
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம்
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – சிலப்.புகார் 7/160,161
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/162

மேல்


ஓதமே (1)

ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே – சிலப்.புகார் 7/156,157

மேல்


ஓதல் (2)

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் – மணி 5/43
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே – மணி 13/100

மேல்


ஓதி (13)

மறுதர ஓதி என் மனம் புடைபெயராது – சிலப்.புகார் 10/207
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி
வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின் – சிலப்.மது 11/130,131
மாதவர் ஓதி மலிந்த ஓதையும் – சிலப்.மது 13/142
குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் – சிலப்.மது 23/88
அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து – சிலப்.வஞ்சி 25/75
மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – சிலப்.வஞ்சி 30/10
துஞ்சு துயில் எழூஉம் அம்_சில்_ஓதி – மணி 8/12
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி 10/82,83
மாய விஞ்சை மந்திரம் ஓதி
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி 18/148,149
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள் – மணி 23/24
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி 23/52,53
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி 23/139
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி 26/71

மேல்


ஓதிக்கு (1)

மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து – சிலப்.புகார் 6/108

மேல்


ஓதிய (7)

ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது – சிலப்.புகார் 10/190
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான – சிலப்.புகார் 10/194
தம் குலக்கு ஓதிய தகை_சால் அணியினர் – சிலப்.வஞ்சி 26/107
ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி 24/112
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து – மணி 27/223
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் – மணி 29/126
ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி 30/52

மேல்


ஓதியின் (1)

ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி 5/107

மேல்


ஓதியை (2)

ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – சிலப்.மது 11/195
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – சிலப்.மது 16/56

மேல்


ஓதில் (1)

ஓதில் ஐந்து வகை உளதாகும் – மணி 29/330

மேல்


ஓதின் (1)

ஏது போலி ஓதின் மூன்று ஆகும் – மணி 29/191

மேல்


ஓதினன் (2)

ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் – மணி 25/18
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் – மணி 27/99

மேல்


ஓதினை (1)

ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை
ஆங்கு அ தெய்வதம் வாராதோ என – மணி 9/69,70

மேல்


ஓதை (9)

உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/29
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/29
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/29
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/30
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – சிலப்.புகார் 7/31
மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – சிலப்.புகார் 7/32
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – சிலப்.புகார் 7/230
தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும் – சிலப்.வஞ்சி 27/230
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து – சிலப்.வஞ்சி 27/245

மேல்


ஓதையின் (2)

மூதில் பெண்டிர் ஓதையின் பெயர – சிலப்.புகார் 5/75
நல் நீர் புணரி நளி கடல் ஓதையின்
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி 6/78,79

மேல்


ஓதையும் (22)

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் – சிலப்.புகார் 5/62
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில் – சிலப்.புகார் 5/62,63
பல் வேறு குழூஉ குரல் பரந்த ஓதையும்
உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய – சிலப்.புகார் 10/119,120
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – சிலப்.புகார் 10/139,140
காலை முரச கனை குரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் – சிலப்.மது 13/140,141
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
மாதவர் ஓதி மலிந்த ஓதையும் – சிலப்.மது 13/141,142
மாதவர் ஓதி மலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு – சிலப்.மது 13/142,143
பணை நிலை புரவி ஆலும் ஓதையும்
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – சிலப்.மது 13/147,148
அந்தி விழவும் ஆரண ஓதையும்
செம் தீ வேட்டலும் தெய்வம் பரவலும் – சிலப்.மது 22/147,148
நறவு கண் உடைத்த குறவர் ஓதையும்
பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/27,28
பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும்
புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும் – சிலப்.வஞ்சி 25/28,29
புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும்
கலி கெழு மீமிசை சேணோன் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/29,30
கலி கெழு மீமிசை சேணோன் ஓதையும்
பயம்பில் வீழ் யானை பாகர் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/30,31
பயம்பில் வீழ் யானை பாகர் ஓதையும்
இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப – சிலப்.வஞ்சி 25/31,32
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு – மணி 6/111,112
நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறித்த கையை தீ நாய் – மணி 6/113,114
உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி 6/115,116
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து – மணி 6/117,118
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்
முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் – மணி 7/69,70
இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 7/80,81
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும்
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப – மணி 7/85,86
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப – மணி 7/86

மேல்


ஓப்ப (1)

எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி – மணி 30/20

மேல்


ஓப்பி (1)

புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி கண்டார்க்கு – சிலப்.புகார் 7/65

மேல்


ஓப்பியும் (1)

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி – சிலப்.வஞ்சி 24/1

மேல்


ஓப்புதல் (1)

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – சிலப்.புகார் 7/49

மேல்


ஓம்ப (2)

ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – சிலப்.வஞ்சி 29/97,98
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் – மணி 13/14,15

மேல்


ஓம்படையும் (1)

அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும்
புற நிலை கோட்டத்து புண்ணிய தானமும் – சிலப்.புகார் 5/179,180

மேல்


ஓம்பலின் (1)

வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி 14/23,24

மேல்


ஓம்பலும் (1)

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் – சிலப்.மது 16/71,72

மேல்


ஓம்பவும் (1)

மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி 15/11,12

மேல்


ஓம்பன்-மின் (1)

புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி 13/91

மேல்


ஓம்பாளன் (3)

மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ_வினை பயத்தான் பிழை மணம் எய்திய – மணி 5/34,35
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் – மணி 13/3,4
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் – மணி 13/15,16

மேல்


ஓம்பி (6)

ஆ காத்து ஓம்பி ஆ பயன் அளிக்கும் – சிலப்.மது 15/120
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி
காதல் குரங்கு கடைநாள் எய்தவும் – சிலப்.மது 15/174,175
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் – சிலப்.மது 22/65,66
வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டா – சிலப்.மது 22/132
வார்த்திகன்-தன்னை காத்தனர் ஓம்பி
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – சிலப்.மது 23/100,101
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும் – மணி 16/115,116

மேல்


ஓம்பிடும் (1)

கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி 6/155,156

மேல்


ஓம்பிய (1)

அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ – மணி 15/2

மேல்


ஓம்பு (3)

குறி அறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு என – சிலப்.புகார் 10/97
மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என – சிலப்.மது 15/173
அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான் – சிலப்.வஞ்சி 24/29

மேல்


ஓம்பு-மின் (2)

பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின்
அற மனை கா-மின் அல்லவை கடி-மின் – சிலப்.வஞ்சி 30/195,196
ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின்
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் – மணி 25/44,45

மேல்


ஓம்புதல் (2)

என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் – மணி 14/88
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி 16/109

மேல்


ஓம்புநர் (3)

வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர்
தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை – சிலப்.வஞ்சி 26/248,249
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் – மணி 14/40,41
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி 14/93,94

மேல்


ஓம்புநர்க்கு (1)

வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் – சிலப்.மது 11/158,159

மேல்


ஓம்புநன் (1)

ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை – மணி 14/59

மேல்


ஓம்பும் (8)

ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – சிலப்.புகார் 7/125,126
பகல் ஒளி-தன்னினும் பல் உயிர் ஓம்பும்
நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின் – சிலப்.மது 13/11,12
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும்
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க – சிலப்.மது 23/69,70
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – சிலப்.வஞ்சி 29/67
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி 3/59,60
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி – மணி 14/32,33
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி 14/87
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் – மணி 25/116,117

மேல்


ஓம்புவை (1)

அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி 21/158,159

மேல்


ஓமாலிகையினும் (1)

முப்பத்து_இரு வகை ஓமாலிகையினும்
ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம் – சிலப்.புகார் 6/77,78

மேல்


ஓமையும் (1)

அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும்
பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் – சிலப்.மது 11/75,76

மேல்


ஓர் (149)

ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – சிலப்.புகார் 0/5
கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர் – சிலப்.புகார் 0/14
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – சிலப்.புகார் 0/26
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – சிலப்.புகார் 0/60
கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை – சிலப்.புகார் 2/37
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் – சிலப்.புகார் 2/43
அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – சிலப்.புகார் 2/49
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – சிலப்.புகார் 3/10
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி – சிலப்.புகார் 3/71
கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக – சிலப்.புகார் 3/144
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட – சிலப்.புகார் 5/164
விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் – சிலப்.புகார் 6/4
தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் – சிலப்.புகார் 6/5
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர்
புன்னை நீழல் புது மணல் பரப்பில் – சிலப்.புகார் 6/167,168
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர்
அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/51,52
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர்
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – சிலப்.புகார் 7/54,55
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – சிலப்.புகார் 7/68
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – சிலப்.புகார் 7/110
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – சிலப்.புகார் 7/112
பாங்கினில் பாடி ஓர் பண்ணும் பெயர்த்தாள் – சிலப்.புகார் 7/206
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர்
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – சிலப்.புகார் 9/3,4
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – சிலப்.புகார் 9/4
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர்
பாசண்ட சாத்தற்கு பாடுகிடந்தாளுக்கு – சிலப்.புகார் 9/14,15
ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – சிலப்.புகார் 9/16
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர்
குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – சிலப்.புகார் 9/25,26
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – சிலப்.புகார் 9/46
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – சிலப்.புகார் 9/49
கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும் – சிலப்.புகார் 9/66
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – சிலப்.புகார் 10/218
வள நீர் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர்
இள மர கானத்து இருக்கை புக்குழி – சிலப்.மது 11/13,14
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும் – சிலப்.மது 11/66
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர்
செம்மையில் நிற்பதும் செப்பு-மின் நீயிர் இ – சிலப்.மது 11/113,114
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் – சிலப்.மது 11/144
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் – சிலப்.மது 11/151
அன்றை பகல் ஓர் அரும் பதி தங்கி – சிலப்.மது 11/164
புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று – சிலப்.மது 11/169
மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர்
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – சிலப்.மது 13/40,41
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர்
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் – சிலப்.மது 13/42,43
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர்
பாசிலை குருகின் பந்தரில் பொருந்தி – சிலப்.மது 13/51,52
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர்
படை அமை சேக்கை பள்ளியுள் வீழ்ந்ததும் – சிலப்.மது 13/69,70
கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் – சிலப்.மது 15/95
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை – சிலப்.மது 15/121
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில் ஓர்
மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி – சிலப்.மது 15/164,165
காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – சிலப்.மது 16/111
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர்
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – சிலப்.மது 16/125,126
கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை – சிலப்.மது 16/189
கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர்
திருந்து வேல் தட கை இளையோன் கூறும் – சிலப்.மது 16/202,203
வருவது ஓர் துன்பம் உண்டு என – சிலப்.மது 17/23
பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – சிலப்.மது 17/59
குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு – சிலப்.மது 18/6
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/46
வருவது ஓர் துன்பம் உண்டு – சிலப்.மது 20/14
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – சிலப்.மது 21/21
வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால் – சிலப்.மது 21/26
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – சிலப்.மது 21/27
தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர்
கோடி கலிங்கம் உடுத்து குழல் கட்டி – சிலப்.மது 21/31,32
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் – சிலப்.மது 21/36
பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர்
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – சிலப்.மது 21/51,52
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – சிலப்.மது 22/87,88
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது – சிலப்.மது 22/104
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடி பட்டு அரும்_கலன் பகரும் – சிலப்.மது 23/149,150
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – சிலப்.மது 23/165
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர்
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – சிலப்.மது 23/191,192
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – சிலப்.வஞ்சி 24/10
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர்
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – சிலப்.வஞ்சி 24/14,15
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – சிலப்.வஞ்சி 24/51
பத்தினி பெண்டிர் பரவி தொழுவாள் ஓர்
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே – சிலப்.வஞ்சி 24/115,116
கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – சிலப்.வஞ்சி 24/120
பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – சிலப்.வஞ்சி 24/124
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – சிலப்.வஞ்சி 25/57
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் – சிலப்.வஞ்சி 25/130
கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் – சிலப்.வஞ்சி 25/169
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – சிலப்.வஞ்சி 25/183,184
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது – சிலப்.வஞ்சி 26/14
கடும் களி யானை ஓர் ஐஞ்ஞூறும் – சிலப்.வஞ்சி 26/133
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் – சிலப்.வஞ்சி 26/151
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட – சிலப்.வஞ்சி 27/135
வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி – சிலப்.வஞ்சி 29/9,10
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை – சிலப்.வஞ்சி 29/78
கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண – சிலப்.வஞ்சி 29/143
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – சிலப்.வஞ்சி 29/167
உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர் – சிலப்.வஞ்சி 30/59
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி 0/49
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி 0/85
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் – மணி 3/33
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் – மணி 3/70
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி 3/103
ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி 4/89
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு_இழை என்றே – மணி 5/23,24
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 5/96
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி 5/108
பதியகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 6/13
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி 6/105
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்
கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி – மணி 6/119,120
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி 6/121
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு – மணி 6/128
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி 6/196
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர்
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் – மணி 7/21,22
உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது – மணி 8/19
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி 9/54
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி 9/57
சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர்
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி 10/10,11
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி 10/46,47
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி 10/48,49
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் – மணி 11/132
துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் – மணி 12/40
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி 12/47
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என – மணி 12/52
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் – மணி 12/117
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் – மணி 13/3
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர்
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி 13/11,12
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் – மணி 13/15
அ பதி தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின் – மணி 13/27
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் – மணி 13/70
வாரணாசி ஓர் மா மறை முதல்வன் – மணி 13/78
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி 14/31
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி 14/92
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி 15/82
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் – மணி 16/41
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து – மணி 16/76
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர்
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி 16/92,93
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி 16/100
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர்
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி – மணி 17/29,30
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி 17/65
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி 19/70
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி 19/132
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது – மணி 19/151,152
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் – மணி 22/161
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் – மணி 22/168
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி 22/204
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர்
துயர் வினையாளன் தோன்றினன் என்பது – மணி 22/210,211
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி 23/107
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி 23/108
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் – மணி 23/118
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி 24/47
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர்
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி 24/164,165
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் – மணி 25/72,73
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி 25/156,157
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி 26/71
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி 27/50
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை – மணி 27/51
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர்
தேவன் இட்ட முட்டை என்றனன் – மணி 27/96,97
ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர் – மணி 27/146
நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே – மணி 27/180
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி 27/197
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி – மணி 28/192
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர்
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின் – மணி 28/193,194
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் – மணி 29/233
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம் – மணி 29/256

மேல்


ஓர்க்கும் (1)

கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள் – மணி 29/291

மேல்


ஓர்த்து (2)

பட்ட வகை தன் செவியின் ஓர்த்து
ஏவலன் பின் பாணி யாது என – சிலப்.புகார் 7/16,17
ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி – சிலப்.வஞ்சி 27/251

மேல்


ஓர்ந்தனை (1)

மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே – மணி 25/118

மேல்


ஓரா (1)

மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி 23/143

மேல்


ஓராது (1)

ஓராது தறியை மகன் என உணர்தல் – மணி 27/68

மேல்


ஓரிடத்து (1)

ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் – மணி 29/245

மேல்


ஓரிடத்தே (1)

தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து – மணி 29/98,99

மேல்


ஓரின் (1)

ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது – மணி 29/53

மேல்


ஓலை (2)

ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – சிலப்.மது 13/77
மாதவி ஓலை மலர் கையின் நீட்ட – சிலப்.மது 13/82

மேல்


ஓவர் (1)

ஊழி வாழி என்று ஓவர் தோன்ற – சிலப்.வஞ்சி 26/124

மேல்


ஓவிய (8)

ஓவிய விதானத்து உரை பெறு நித்திலத்து – சிலப்.புகார் 3/111
ஓவிய எழினி சூழ உடன் போக்கி – சிலப்.புகார் 6/169
ஓவிய சுற்றத்து உரை அவிந்து இருப்ப – சிலப்.மது 22/11
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி 2/31
ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து – மணி 6/39
ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர் – மணி 18/67
தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் – மணி 22/84,85
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி 28/38

மேல்


ஓவியச்சேனன் (1)

ஓவியச்சேனன் என் உறு துணை தோழன் – மணி 21/135

மேல்


ஓவியம் (3)

கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் – மணி 3/131
புனையா ஓவியம் போல நிற்றலும் – மணி 16/131
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன – மணி 22/88

மேல்


ஓவியன் (1)

ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் – மணி 5/7

மேல்


ஓழியா (1)

உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – சிலப்.புகார் 7/135

மேல்