திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

அடியிற்கண்டுள்ள அட்டவணையில் உள்ள ஏதேனும் ஓர் எழுத்தைச் சுட்டியினால் தட்டினால், அவ் எழுத்தில் தொடங்கும் அனைத்துச் சொற்களின் கூட்டுத் தொடரடைவு அடிகள் கிடைக்கும்

கட்டுருபன்கள்


1. திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள்
2. (நெடுநல்வாடையில் இல்லாமல்)திருமுருகாற்றுப்படையில் மட்டும் காணப்படும் சொற்கள்
3. (திருமுருகாற்றுப்படையில் இல்லாமல்)நெடுநல்வாடையில் மட்டும் காணப்படும் சொற்கள்

முக்கிய குறிப்பு

திருமுருகாற்றுப்படை – நெடுநல்வாடை கூட்டுத்தொடரடைவு

திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடை
அடிகள்  317  188
சொற்கள்   1732 1052
பிரிசொற்கள்   61 33
கட்டுருபன்கள் 5
மொத்தச் சொற்கள் 1799 1090
தனிச் சொற்கள் 1164 766

         
               
இரண்டும் சேர்த்துத் தனிச் சொற்கள் 1646

திரு.வில் உண்டு நெடு.வில் இல்லை 880 சொற்கள்
நெடு.வில் உண்டு திரு.வில் இல்லை 482 சொற்கள்
இரண்டுக்கும் பொதுவான சொற்கள் 284

ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட சொற்களே பொதுவான சொற்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அஃது, அஃதே என்பன வெவ்வேறான சொற்கள்

திருமுருகாற்றுப்படையில் உள்ள அகவ என்ற சொல் நெடுநல்வாடையில் இல்லை. ஆனால் அகவும் என்ற சொல் நெடுநல்வாடையில் உண்டு.

திருமுருகாற்றுப்படையில் உள்ள திரிதரு என்ற சொல் நெடுநல்வாடையில் இல்லை. ஆனால் திரிதரும், திரிதர என்ற சொற்கள் உண்டு.

எனவே,
(நெடுநல்வாடையில் இல்லாமல்) திருமுருகாற்றுப்படையில் மட்டும் காணப்படும் சொற்கள் – என்ற பகுதியில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் நெடுநல்வாடையில் உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும்.

திருமுருகாற்றுப்படையில் காணப்படும் அங்குசம், இயக்கி, சீரை, யூகமொடு, வாரண ஆகிய சொற்களும் அந்தச் சொற்களை ஒட்டிய சொற்களும் நெடுநல்வாடையில் இல்லை.

பொதுச் சொற்களுக்குரிய கூட்டுத் தொடரடைவுகளில் பொதுவான தொடர்கள் உள்ளனவா என்று கண்டறிதல் சிறப்பு.
ஆனால் இரண்டு பாடல்களுமே ஒவ்வொன்றும் 1500 சொற்களுக்கு உட்பட்டவைதான் என்பதையும் மனதிற்கொள்ளவேண்டும். எனவே இரண்டனுக்கும் பொதுச் சொற்களையும், அவை வழங்கும் அடிகளையும் ஒத்து நோக்குவது மிகுந்த பலன் தரும்.

முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

நெடுநல்வாடை

திருமுருகாற்றுப்படை