சி – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கென்பதுவும் 1
சிக்கை 1
சிங்கபுரத்தின் 1
சிங்கபுரத்தினும் 1
சிங்கபுரத்து 1
சிங்கபுரமும் 1
சிங்கன் 1
சிங்கா 2
சித்த 2
சித்தத்து 1
சித்தத்துடனே 1
சித்தம் 4
சித்தன் 2
சித்திபுரம் 1
சித்திர 11
சித்திரம் 2
சித்திரன் 1
சித்திராபதி 3
சித்திராபதி-தான் 2
சித்திராபதிக்கும் 1
சித்திராபதியால் 1
சித்திராபதியும் 2
சித்திராபதியோடு 1
சித்திரை 2
சிதர் 2
சிதவல் 1
சிதறு 1
சிதை 1
சிதைக்கும் 1
சிதைத்தாய் 3
சிதைத்து 1
சிதைத்தேன் 2
சிதைந்த 1
சிதைந்தது 1
சிதைந்து 2
சிதைய 6
சிதையா 1
சிதையாது 1
சிதைவது 1
சிதைவு 1
சிதைவுடன் 1
சிந்தனா 1
சிந்தாதேவி 2
சிந்தாவிளக்கின் 1
சிந்தாவிளக்கு 1
சிந்தி 1
சிந்தின 1
சிந்து 1
சிந்துபு 2
சிந்துர 3
சிந்தை 8
சிந்தையள் 1
சிந்தையில் 2
சிந்தையின் 1
சிமயத்து 1
சிமிலி 1
சிமைய 2
சிமையத்து 2
சிமையம் 1
சிரந்த 1
சிரல் 1
சிரலும் 1
சிருங்கி 1
சில் 12
சில்லை 1
சில்லையும் 1
சில 3
சிலதியர் 3
சிலதியர்-தம்மொடு 1
சிலப்பதிகாரம் 2
சிலம்பன் 1
சிலம்பால் 1
சிலம்பாற்று 1
சிலம்பில் 2
சிலம்பின் 9
சிலம்பினை 2
சிலம்பு 27
சிலம்பும் 4
சிலம்பொடு 1
சிலர் 4
சிலருடன் 1
சிலவோ 1
சிலாதல 1
சிலாதலம் 2
சிலை 14
சிலையும் 1
சிலையொடு 1
சிவகதி 1
சிவந்த 1
சிவந்தனள் 1
சிவந்து 3
சிவப்ப 4
சிவிகையும் 1
சிவிறியும் 1
சிவேதன் 1
சிற்றிடை 2
சிற்றியாற்று 1
சிற்றில் 1
சிற்றிலும் 1
சிறக்க 5
சிறகு 1
சிறங்கணிப்ப 1
சிறந்த 14
சிறந்தது 1
சிறந்தன 1
சிறந்து 17
சிறந்து-ஆங்கு 1
சிறந்தும் 1
சிறந்தோர் 3
சிறந்தோர்க்கு 2
சிறந்தோள் 1
சிறப்ப 2
சிறப்பில் 2
சிறப்பின் 65
சிறப்பு 14
சிறப்பும் 6
சிறப்பொடு 3
சிறவாது 1
சிறாஅர் 1
சிறிது 3
சிறியை 1
சிறு 33
சிறு_கால் 1
சிறு_மகள் 2
சிறு_மகன் 1
சிறு_மகனே 1
சிறுகு 1
சிறுகுடியீரே 4
சிறுகுடியோரே 1
சிறுபறை 1
சிறுபுறம் 2
சிறுபூளை 1
சிறுமலை 2
சிறுமியர்கள் 1
சிறுமை 5
சிறுமையள் 1
சிறுமையும் 1
சிறுவர் 1
சிறுவன் 3
சிறுவன்-தன்னை 1
சிறுவனை 1
சிறுவனொடு 2
சிறை 31
சிறை-செய்க 1
சிறை_வீடு-செய்ததும் 1
சிறை_அகத்து 2
சிறை_அகம் 1
சிறைக்கோட்டத்து 1
சிறைக்கோட்டம் 2
சிறைப்படு 1
சிறைப்பாடு 1
சிறையும் 1
சிறையோர் 4
சின்னமும் 1
சின 8
சினத்தள் 1
சினத்தினன் 1
சினத்து 1
சினம் 5
சினவரன் 1
சினவாது 1
சினவேல் 1
சினனே 1
சினேந்திரன் 2
சினை 7

சிக்கென்பதுவும் (1)

சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் – மணி 27/143

மேல்


சிக்கை (1)

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு – மணி 27/101

மேல்


சிங்கபுரத்தின் (1)

சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர் – சிலப்.மது 23/149

மேல்


சிங்கபுரத்தினும் (1)

தீம் புனல் பழன சிங்கபுரத்தினும்
காம்பு எழு கான கபிலபுரத்தினும் – சிலப்.மது 23/140,141

மேல்


சிங்கபுரத்து (1)

சிங்கா வண் புகழ் சிங்கபுரத்து
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி – சிலப்.புகார் 0/47,48

மேல்


சிங்கபுரமும் (1)

சிங்கபுரமும் செழு நீர் கபிலையும் – மணி 26/17

மேல்


சிங்கன் (1)

சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் – சிலப்.வஞ்சி 26/183

மேல்


சிங்கா (2)

சிங்கா வண் புகழ் சிங்கபுரத்து – சிலப்.புகார் 0/47
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர் – சிலப்.மது 23/149

மேல்


சித்த (2)

சித்த அசித்தம் ஆசிரய அசித்தம் – மணி 29/194
சித்த அசித்தம் ஆவது – மணி 29/203

மேல்


சித்தத்து (1)

சொல்லுதல் மூல பகுதி சித்தத்து
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு – மணி 27/206,207

மேல்


சித்தத்துடனே (1)

சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி – மணி 30/210

மேல்


சித்தம் (4)

திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ – மணி 10/85
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி 27/238,239
சித்தம் வெளிப்பாடு அல்லது செயலுறல் – மணி 29/201
சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை – மணி 30/212

மேல்


சித்தன் (2)

செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் – சிலப்.புகார் 10/177
சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி – சிலப்.புகார் 10/183

மேல்


சித்திபுரம் (1)

சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் – மணி 9/43

மேல்


சித்திர (11)

சித்திர கரணம் சிதைவு இன்று செலுத்தும் – சிலப்.புகார் 3/54
சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை – சிலப்.புகார் 3/56
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – சிலப்.புகார் 6/92
சித்திர படத்துள் புக்கு செழும் கோட்டின் மலர் புனைந்து – சிலப்.புகார் 7/1
சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம் – சிலப்.மது 16/119
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை – சிலப்.வஞ்சி 27/156
சித்திர விதானத்து செய் பூம் கைவினை – சிலப்.வஞ்சி 27/203
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன் – சிலப்.வஞ்சி 28/87
சித்திர செய்கை படாம் போர்த்ததுவே – மணி 3/168
சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன – மணி 5/11
திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து – மணி 18/46

மேல்


சித்திரம் (2)

சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் – மணி 19/6
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் – மணி 19/14

மேல்


சித்திரன் (1)

சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் – சிலப்.வஞ்சி 26/183

மேல்


சித்திராபதி (3)

தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான் – மணி 18/5
சித்திராபதி தான் சிறு நகை எய்தி – மணி 18/86
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி 22/177

மேல்


சித்திராபதி-தான் (2)

சிதைந்த நெஞ்சின் சித்திராபதி-தான்
வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும் – மணி 0/35,36
சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி – மணி 2/6

மேல்


சித்திராபதிக்கும் (1)

சித்திராபதிக்கும் செப்பு நீ என – மணி 2/71

மேல்


சித்திராபதியால் (1)

சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று – மணி 5/82

மேல்


சித்திராபதியும் (2)

தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவி மகளும் மாதவர் காண்டலும் – மணி 24/89,90
தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின் – மணி 24/149,150

மேல்


சித்திராபதியோடு (1)

சித்திராபதியோடு உதயகுமரன் உற்று – மணி 4/79

மேல்


சித்திரை (2)

சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என – சிலப்.புகார் 5/64
சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என – சிலப்.புகார் 5/64

மேல்


சிதர் (2)

சிதர் அரி பரந்த செழும் கடை தூது – சிலப்.வஞ்சி 28/20
துய்ப்போர்-தம் மனை துணி சிதர் உடுத்து – மணி 11/109

மேல்


சிதவல் (1)

சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி 3/106

மேல்


சிதறு (1)

சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் – மணி 28/10

மேல்


சிதை (1)

நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து – சிலப்.வஞ்சி 27/41

மேல்


சிதைக்கும் (1)

நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் – மணி 11/78,79

மேல்


சிதைத்தாய் (3)

தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/152
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – சிலப்.புகார் 7/153
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து – மணி 17/42,43

மேல்


சிதைத்து (1)

கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை – சிலப்.வஞ்சி 29/112

மேல்


சிதைத்தேன் (2)

காலால் அந்த கரும் கனி சிதைத்தேன்
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் – மணி 17/34,35
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்
மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம் – மணி 26/34,35

மேல்


சிதைந்த (1)

சிதைந்த நெஞ்சின் சித்திராபதி-தான் – மணி 0/35

மேல்


சிதைந்தது (1)

தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/20

மேல்


சிதைந்து (2)

கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – சிலப்.புகார் 10/82,83
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி 4/32

மேல்


சிதைய (6)

ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே – சிலப்.புகார் 7/156
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/160
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – சிலப்.புகார் 7/161
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு – மணி 5/125
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 21/56
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 23/82

மேல்


சிதையா (1)

சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த – மணி 18/28

மேல்


சிதையாது (1)

நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினி பெண்டிர் இருந்த நாடு என்னும் – சிலப்.மது 15/146,147

மேல்


சிதைவது (1)

தீது உற்று யாவதும் சிதைவது செய்யா – மணி 27/127

மேல்


சிதைவு (1)

சித்திர கரணம் சிதைவு இன்று செலுத்தும் – சிலப்.புகார் 3/54

மேல்


சிதைவுடன் (1)

கண்டனன் என்னை கரும் கனி சிதைவுடன்
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது – மணி 17/36,37

மேல்


சிந்தனா (1)

சுருதி சிந்தனா பாவனா தரிசனை – மணி 30/258

மேல்


சிந்தாதேவி (2)

சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் – மணி 0/60
சிந்தாதேவி செழு கலை நியமத்து – மணி 14/17

மேல்


சிந்தாவிளக்கின் (1)

சிந்தாவிளக்கின் செழு கலை நியமத்து – மணி 13/106

மேல்


சிந்தாவிளக்கு (1)

தேவி சிந்தாவிளக்கு தோன்றி – மணி 14/11

மேல்


சிந்தி (1)

வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – சிலப்.புகார் 7/178

மேல்


சிந்தின (1)

பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் – சிலப்.மது 12/81

மேல்


சிந்து (1)

சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு – சிலப்.மது 16/138

மேல்


சிந்துபு (2)

சிந்துபு பரிந்த செழும் பூம் சேக்கை – சிலப்.புகார் 4/43
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப – மணி 3/138

மேல்


சிந்துர (3)

சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில் – சிலப்.மது 14/92
சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து – சிலப்.வஞ்சி 24/25
சந்தன குறையும் சிந்துர கட்டியும் – சிலப்.வஞ்சி 25/39

மேல்


சிந்தை (8)

சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – சிலப்.புகார் 8/85
சிந்தை விளக்கின் தெரிந்தோன் ஆயினும் – சிலப்.புகார் 10/167
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – சிலப்.மது 21/30
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து – சிலப்.வஞ்சி 30/181
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும் – மணி 3/74
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும் – மணி 3/76
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர – மணி 15/70
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் – மணி 28/88

மேல்


சிந்தையள் (1)

தெளியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து – மணி 24/85

மேல்


சிந்தையில் (2)

சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து – சிலப்.மது 11/106
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் – மணி 23/99

மேல்


சிந்தையின் (1)

செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் – மணி 29/44

மேல்


சிமயத்து (1)

இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து – சிலப்.வஞ்சி 28/102

மேல்


சிமிலி (1)

சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் – மணி 3/86

மேல்


சிமைய (2)

இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை – சிலப்.புகார் 5/97
சிமைய சென்னி தெய்வம் பரசி – சிலப்.வஞ்சி 28/227

மேல்


சிமையத்து (2)

சிமையத்து இமையமும் செழு நீர் கங்கையும் – சிலப்.புகார் 6/28
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம் – மணி 28/131

மேல்


சிமையம் (1)

சிமையம் ஓங்கிய இமைய மால் வரை – மணி 26/88

மேல்


சிரந்த (1)

சிரந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி 10/89

மேல்


சிரல் (1)

மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி 4/24

மேல்


சிரலும் (1)

சென்று எறி சிரலும் பன்றியும் பணையும் – சிலப்.மது 15/214

மேல்


சிருங்கி (1)

ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் – மணி 13/63,64

மேல்


சில் (12)

பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை – சிலப்.புகார் 0/25
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – சிலப்.புகார் 1/64
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் – சிலப்.புகார் 2/65
செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர் – சிலப்.புகார் 10/130
ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – சிலப்.மது 11/195
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து – சிலப்.மது 15/133
அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து – சிலப்.வஞ்சி 25/75
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப – மணி 3/138
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் – மணி 6/95
துஞ்சு துயில் எழூஉம் அம்_சில்_ஓதி – மணி 8/12
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள் – மணி 23/24
தேறு படு சில் நீர் போல தெளிந்து – மணி 23/142

மேல்


சில்லை (1)

சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என – சிலப்.மது 16/147

மேல்


சில்லையும் (1)

எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும் – மணி 8/29

மேல்


சில (3)

யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – சிலப்.புகார் 2/89
நண்ணு வழி இன்றி நாள் சில நீந்த – சிலப்.மது 15/31
சில செம் கயல் நீர் உமிழ – சிலப்.வஞ்சி 29/40

மேல்


சிலதியர் (3)

பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில் தொழில் குயிலுவர் பல் முறை கருவியர் – சிலப்.புகார் 5/51,52
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து – சிலப்.புகார் 8/88
செம் பொன் வள்ளத்து சிலதியர் ஏந்திய – சிலப்.மது 14/132

மேல்


சிலதியர்-தம்மொடு (1)

சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி – சிலப்.மது 16/138,139

மேல்


சிலப்பதிகாரம் (2)

சிலப்பதிகாரம் என்னும் பெயரால் – சிலப்.புகார் 0/59
சிலப்பதிகாரம் முற்றும் – சிலப்.வஞ்சி 30/235

மேல்


சிலம்பன் (1)

கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க – சிலப்.வஞ்சி 24/60

மேல்


சிலம்பால் (1)

செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/113

மேல்


சிலம்பாற்று (1)

நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்_தலை – சிலப்.மது 11/108

மேல்


சிலம்பில் (2)

கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின் – சிலப்.வஞ்சி 28/114
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில்
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – சிலப்.வஞ்சி 30/54,55

மேல்


சிலம்பின் (9)

சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு – சிலப்.மது 14/88
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – சிலப்.மது 16/92
போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன் – சிலப்.மது 16/116
சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம் – சிலப்.மது 16/119
செய்வினை சிலம்பின் செய்தி எல்லாம் – சிலப்.மது 16/160
சிலம்பின் வென்ற சே இழை நங்கை – சிலப்.மது 22/135
தேரா மன்னனை சிலம்பின் வென்று இ – சிலப்.மது 22/145
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – சிலப்.வஞ்சி 27/73
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – சிலப்.வஞ்சி 29/103

மேல்


சிலம்பினை (2)

பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – சிலப்.புகார் 0/25,26
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் – மணி 28/108

மேல்


சிலம்பு (27)

பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டி – சிலப்.புகார் 0/18
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு
யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – சிலப்.புகார் 0/23,24
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 0/30
சூழ் வினை சிலம்பு காரணமாக – சிலப்.புகார் 0/58
அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய – சிலப்.புகார் 4/47
சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் – சிலப்.புகார் 8/90
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – சிலப்.புகார் 9/73
சிலம்பு முதலாக சென்ற கலனொடு – சிலப்.புகார் 9/74
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு
யாப்புறவு இல்லை என முன் போந்து – சிலப்.மது 16/121,122
கோயில் சிலம்பு கொண்ட கள்வன் – சிலப்.மது 16/145
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகின் – சிலப்.மது 16/151,152
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.மது 16/153
சிலம்பு காணிய வந்தோர் இவர் என – சிலப்.மது 16/159
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி – சிலப்.மது 19/2
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று – சிலப்.மது 19/7,8
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – சிலப்.மது 19/23
இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/39
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/54
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால் – சிலப்.மது 20/73
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – சிலப்.மது 20/79
யாம் உடை சிலம்பு முத்து உடை அரியே – சிலப்.மது 20/81
கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப – சிலப்.மது 20/83
தனி சிலம்பு அரற்றும் தகைமையள் பனி துறை – சிலப்.மது 23/10
தீ_வினை சிலம்பு காரணமாக – சிலப்.வஞ்சி 25/69
செம் சிலம்பு எறிந்து தேவி முன்னர் – சிலப்.வஞ்சி 25/73
திரு நிலை சேவடி சிலம்பு வாய்புலம்பவும் – சிலப்.வஞ்சி 28/67
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி 5/111

மேல்


சிலம்பும் (4)

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி – சிலப்.மது 12/63
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – சிலப்.மது 12/116
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும்
ஆவி குடிபோன அம் வடிவும் பாவியேன் – சிலப்.மது 20/98,99
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – சிலப்.மது 20/103

மேல்


சிலம்பொடு (1)

சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – சிலப்.வஞ்சி 25/72

மேல்


சிலர் (4)

செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ – சிலப்.மது 15/206
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/63
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி 3/143
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி 18/39

மேல்


சிலருடன் (1)

செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி – சிலப்.மது 16/7

மேல்


சிலவோ (1)

தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின் – மணி 18/89

மேல்


சிலாதல (1)

இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – சிலப்.மது 15/154

மேல்


சிலாதலம் (2)

இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு – சிலப்.புகார் 10/25
இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – சிலப்.புகார் 10/161

மேல்


சிலை (14)

சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் – சிலப்.மது 12/17
உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன் – சிலப்.மது 22/111
விடர் சிலை பொறித்த விறலோன் வாழி – சிலப்.மது 23/82
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும் – சிலப்.வஞ்சி 25/188
சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர் – சிலப்.வஞ்சி 26/197
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து – சிலப்.வஞ்சி 26/206
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – சிலப்.வஞ்சி 28/18
சிலை தார் அகலத்து செம்பியர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 28/95
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/136
முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும் – மணி 18/162
நீரின் பெய்த மூரி வார் சிலை
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி 19/53,54
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி 19/124
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன் – மணி 24/37
விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் – மணி 28/104

மேல்


சிலையும் (1)

திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட – சிலப்.புகார் 8/74,75

மேல்


சிலையொடு (1)

உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய – சிலப்.வஞ்சி 30/25,26

மேல்


சிவகதி (1)

சினவரன் தேவன் சிவகதி நாயகன் – சிலப்.புகார் 10/180

மேல்


சிவந்த (1)

சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – சிலப்.புகார் 5/84

மேல்


சிவந்தனள் (1)

திரு முகம் வியர்த்தனள் செம் கண் சிவந்தனள்
கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – சிலப்.வஞ்சி 30/41,42

மேல்


சிவந்து (3)

கலங்கா உள்ளம் கலங்க கடை சிவந்து
விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப – சிலப்.புகார் 4/70,71
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி 7/51
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 8/58

மேல்


சிவப்ப (4)

ஆறு செல் வருத்தத்து சீறடி சிவப்ப
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து ஆங்கு – சிலப்.மது 12/2,3
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய் – சிலப்.மது 16/29
செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை – சிலப்.மது 18/32
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – சிலப்.வஞ்சி 24/43,44

மேல்


சிவிகையும் (1)

வையமும் சிவிகையும் மணி கால் அமளியும் – சிலப்.மது 14/126

மேல்


சிவிறியும் (1)

சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் – மணி 28/10

மேல்


சிவேதன் (1)

சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம் – சிலப்.வஞ்சி 26/183,184

மேல்


சிற்றிடை (2)

ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி 6/196
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் – மணி 7/68

மேல்


சிற்றியாற்று (1)

தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி 15/82

மேல்


சிற்றில் (1)

காவல் சிற்றில் கடி மனை படுத்து – சிலப்.மது 16/6

மேல்


சிற்றிலும் (1)

செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும் – மணி 22/182

மேல்


சிறக்க (5)

வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என – சிலப்.வஞ்சி 25/92
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி – சிலப்.வஞ்சி 28/126,127
வழிவழி சிறக்க வய வாள் வேந்தே – சிலப்.வஞ்சி 28/170
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க
சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி 10/9,10
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி 12/33,34

மேல்


சிறகு (1)

மலை சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு – சிலப்.மது 14/94

மேல்


சிறங்கணிப்ப (1)

போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/44

மேல்


சிறந்த (14)

திரு மணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு – சிலப்.புகார் 5/46
விழவு களி சிறந்த வியலுள் ஆங்கண் – சிலப்.புகார் 5/188
பால் கெழு சிறப்பின் பல்_இயம் சிறந்த
காலை முரச கனை குரல் ஓதையும் – சிலப்.மது 13/139,140
கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு – சிலப்.மது 14/66,67
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்க பின் – சிலப்.வஞ்சி 25/179,180
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு – சிலப்.வஞ்சி 28/99,100
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
நித்தில இள நகை நிரம்பா அளவின – சிலப்.வஞ்சி 30/14,15
பல் மலர் சிறந்த நல் நீர் அகழி – மணி 5/110
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி 5/111
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ – மணி 6/104
வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி – மணி 11/68
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி 13/53
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம் – மணி 18/70,71
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் – மணி 28/208

மேல்


சிறந்தது (1)

நகரம் காவல் நனி சிறந்தது என் – சிலப்.புகார் 4/84

மேல்


சிறந்தன (1)

கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன – சிலப்.மது 12/12,13

மேல்


சிறந்து (17)

கண்டு மகிழ்வு எய்தி காதலில் சிறந்து
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் – சிலப்.புகார் 2/25,26
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/178
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/181
அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/183
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/186
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து – சிலப்.புகார் 5/198,199
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/30
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – சிலப்.புகார் 7/31
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – சிலப்.புகார் 7/115
செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – சிலப்.மது 11/2,3
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – சிலப்.மது 15/217
அற்பு உளம் சிறந்து ஆங்கு அருள் மொழி அளைஇ – சிலப்.மது 16/77
தாழ்தரு கோலத்து தமரொடு சிறந்து
வாள் வினை முடித்து மற வாள் வேந்தன் – சிலப்.வஞ்சி 26/122,123
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து
பாய்ந்த பண்பின் பல் வேல் மன்னர் – சிலப்.வஞ்சி 26/189,190
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/226
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி – மணி 8/44
சிறந்து அருள்கூர்ந்து திருவாய் மொழிந்தது – மணி 30/15

மேல்


சிறந்து-ஆங்கு (1)

அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி – சிலப்.வஞ்சி 30/129

மேல்


சிறந்தும் (1)

விரை பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும்
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு – மணி 19/60,61

மேல்


சிறந்தோர் (3)

அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழி சேறலும் – சிலப்.வஞ்சி 30/137
செய் தவ பயன்களும் சிறந்தோர் படிவமும் – சிலப்.வஞ்சி 30/143
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த – மணி 6/57

மேல்


சிறந்தோர்க்கு (2)

செம்பியன் மூதூர் சிறந்தோர்க்கு உரைக்க – சிலப்.வஞ்சி 27/87
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது – மணி 11/121

மேல்


சிறந்தோள் (1)

பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப – மணி 6/207

மேல்


சிறப்ப (2)

பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி 7/119,120
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப
கடவுள் பீடிகை பூ பலி கடைகொள – மணி 7/120,121

மேல்


சிறப்பில் (2)

சிறப்பில் குன்றா செய்கையொடு பொருந்திய – சிலப்.புகார் 3/5
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து – மணி 1/37,38

மேல்


சிறப்பின் (65)

பேரா சிறப்பின் புகார் நகரத்து – சிலப்.புகார் 0/13
பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – சிலப்.புகார் 0/19
அதிரா சிறப்பின் மதுரை மூதூர் – சிலப்.புகார் 0/39
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் – சிலப்.புகார் 1/16
உரை_சால் சிறப்பின் அரைசு விழை திருவின் – சிலப்.புகார் 2/1
காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என் – சிலப்.புகார் 2/90
மலைப்பு_அரும் சிறப்பின் வானவர் மகளிர் – சிலப்.புகார் 3/4
வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – சிலப்.புகார் 3/175
பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய – சிலப்.புகார் 5/57
பாடல்_சால் சிறப்பின் பட்டின பாக்கமும் – சிலப்.புகார் 5/58
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு – சிலப்.புகார் 5/107
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/186
தமரில் தந்து தகை_சால் சிறப்பின்
பொய் வகை இன்றி பூமியில் புணர்த்த – சிலப்.புகார் 6/15,16
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் – சிலப்.புகார் 6/71
அரைசு வீற்றிருந்த உரை_சால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய – சிலப்.புகார் 8/5,6
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி – சிலப்.புகார் 8/22
தாளொடு குயின்ற தகை_சால் சிறப்பின்
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – சிலப்.புகார் 10/7,8
பழிப்பு_அரும் சிறப்பின் வழி படர் புரிந்தோர் – சிலப்.புகார் 10/101
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய் – சிலப்.புகார் 10/170
சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின்
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும் – சிலப்.புகார் 10/245,246
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – சிலப்.மது 11/30
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின்
மா மறையாளன் வருபொருள் உரைப்போன் – சிலப்.மது 11/33,34
முட்டா சிறப்பின் மூன்று உள ஆங்கு – சிலப்.மது 11/97
மை அறு சிறப்பின் வான நாடி – சிலப்.மது 11/215
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – சிலப்.மது 13/41
பால் கெழு சிறப்பின் பல்_இயம் சிறந்த – சிலப்.மது 13/139
காலம் அன்றியும் நூலோர் சிறப்பின்
முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் – சிலப்.மது 14/97,98
சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை – சிலப்.மது 14/146,147
மலைப்பு_அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் – சிலப்.மது 14/154
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய – சிலப்.மது 15/21
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆய்_இழை-தனக்கு – சிலப்.மது 15/134,135
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும் – சிலப்.மது 16/72,73
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – சிலப்.மது 16/75
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப – சிலப்.மது 20/63
ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி – சிலப்.மது 20/69
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி – சிலப்.மது 22/56
உரை_சால் சிறப்பின் நெடியோன் அன்ன – சிலப்.மது 22/60
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர் – சிலப்.மது 22/63
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் – சிலப்.மது 23/90
மை அறு சிறப்பின் ஐயை கோயில் – சிலப்.மது 23/107
பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/144
குன்றா சிறப்பின் கொற்றவள்ளையும் – சிலப்.வஞ்சி 25/145
காதலர் என்னும் மேதகு சிறப்பின்
மாதர் பாணி வரியொடு தோன்ற – சிலப்.வஞ்சி 26/114,115
வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினி கல் கால்கொண்ட பின் – சிலப்.வஞ்சி 27/1,2
மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – சிலப்.வஞ்சி 27/39
ஊழ்வினை பயன்-கொல் உரை_சால் சிறப்பின்
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் – சிலப்.வஞ்சி 27/70,71
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம் – சிலப்.வஞ்சி 27/79
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 27/114,115
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின் – சிலப்.வஞ்சி 27/133,134
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர் – சிலப்.வஞ்சி 28/4
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின்
உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர் – சிலப்.வஞ்சி 30/130,131
பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு – சிலப்.வஞ்சி 30/148
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி 0/22
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை – மணி 1/56
தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன் – மணி 3/87
பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி 8/62
போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் – மணி 12/101,102
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி 13/110
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது – மணி 14/39
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப – மணி 18/55
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி 18/57
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் – மணி 21/119
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் – மணி 23/31
ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும் – மணி 24/12
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த – மணி 26/70

மேல்


சிறப்பு (14)

அந்தி மாலை சிறப்பு செய் காதையும் – சிலப்.புகார் 0/66
தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என – சிலப்.மது 15/185
தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற – சிலப்.மது 16/109
செம்மையின் வரூஉம் சிறப்பு பொருந்தி – சிலப்.மது 22/96
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து – சிலப்.வஞ்சி 26/245
சிறப்பு உடை கம்மியர்-தம்மொடும் சென்று – சிலப்.வஞ்சி 28/223
நங்கைக்கு சிறப்பு அயர்ந்த – சிலப்.வஞ்சி 29/65
சென்று கைதொழுது சிறப்பு செய்தலின் – மணி 10/72
இந்திர சிறப்பு செய்வோன் முன்னர் – மணி 11/88
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி 13/67
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி 14/54
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என – மணி 15/30
அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் – மணி 21/51
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின் – மணி 24/96

மேல்


சிறப்பும் (6)

விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – சிலப்.புகார் 10/253
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும்
பொய்யா வானம் புது புனல் பொழிதலும் – சிலப்.புகார் 10/256,257
தென்னவன் நாட்டு சிறப்பும் செய்கையும் – சிலப்.மது 11/54
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – சிலப்.மது 23/209
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – சிலப்.வஞ்சி 30/208
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற – மணி 28/215

மேல்


சிறப்பொடு (3)

மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் – சிலப்.மது 13/143,144
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று – சிலப்.வஞ்சி 25/125
பாத்திரத்து அளித்து பல பல சிறப்பொடு
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் – மணி 28/117,118

மேல்


சிறவாது (1)

பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – சிலப்.வஞ்சி 28/208

மேல்


சிறாஅர் (1)

விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர – சிலப்.மது 23/87

மேல்


சிறிது (3)

தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும் – சிலப்.மது 15/149
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி – சிலப்.மது 15/170
தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே – சிலப்.மது 23/122

மேல்


சிறியை (1)

தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ – மணி 13/60

மேல்


சிறு (33)

அளிய தாமே சிறு பசும் கிளியே – சிலப்.புகார் 2/57
சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற – சிலப்.புகார் 4/18
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய – சிலப்.புகார் 4/52
சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு – சிலப்.புகார் 5/38
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/92
திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும் – சிலப்.புகார் 8/74
சிறு குறும் தொழிலியர் மறு மொழி உய்ப்ப – சிலப்.புகார் 8/97
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி – சிலப்.மது 12/22
துடியொடு சிறு பறை வயிரொடு துவைசெய – சிலப்.மது 12/148
திலக சிறு நுதல் அரும்பிய வியரும் – சிலப்.மது 14/143
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – சிலப்.மது 15/167
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை – சிலப்.மது 15/186
சிறு முதுகுறைவிக்கு சிறுமையும் செய்தேன் – சிலப்.மது 16/68
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – சிலப்.மது 16/92
சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – சிலப்.மது 16/124
சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என – சிலப்.மது 16/147
பண்ட சிறு பொதி பாத காப்பொடு – சிலப்.மது 23/78
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – சிலப்.மது 23/89
பாடக சிறு அடி ஆரிய பேடியோடு – சிலப்.வஞ்சி 27/186
சிறு குறும் கூனும் குறளும் சென்று – சிலப்.வஞ்சி 27/214
சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் – சிலப்.வஞ்சி 28/115
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – சிலப்.வஞ்சி 30/19
சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – சிலப்.வஞ்சி 30/52
தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர் – சிலப்.வஞ்சி 30/67
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – சிலப்.வஞ்சி 30/135
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 6/22
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி – மணி 7/55
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 7/89
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி – மணி 12/79
அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம் – மணி 12/81
புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று – மணி 13/44
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி 16/117
சித்திராபதி தான் சிறு நகை எய்தி – மணி 18/86

மேல்


சிறு_கால் (1)

சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற – சிலப்.புகார் 4/18

மேல்


சிறு_மகள் (2)

சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – சிலப்.வஞ்சி 30/52
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – சிலப்.வஞ்சி 30/135

மேல்


சிறு_மகன் (1)

தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி 16/117

மேல்


சிறு_மகனே (1)

புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று – மணி 13/44

மேல்


சிறுகு (1)

திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் – சிலப்.புகார் 2/71

மேல்


சிறுகுடியீரே (4)

சிறுகுடியீரே சிறுகுடியீரே – சிலப்.வஞ்சி 24/11
சிறுகுடியீரே சிறுகுடியீரே
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – சிலப்.வஞ்சி 24/11,12
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே
நிறம் கிளர் அருவி பறம்பின் தாழ்வரை – சிலப்.வஞ்சி 24/12,13
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே
தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின் – சிலப்.வஞ்சி 24/15,16

மேல்


சிறுகுடியோரே (1)

மடவர்-மன்ற இ சிறுகுடியோரே
என்று ஈங்கு – சிலப்.வஞ்சி 24/99,100

மேல்


சிறுபறை (1)

தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின் – சிலப்.வஞ்சி 24/16

மேல்


சிறுபுறம் (2)

செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு – சிலப்.புகார் 6/102
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப – மணி 2/51

மேல்


சிறுபூளை (1)

அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் சென்று – சிலப்.புகார் 9/43

மேல்


சிறுமலை (2)

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் – சிலப்.மது 11/85
சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு – சிலப்.மது 14/88

மேல்


சிறுமியர்கள் (1)

கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – சிலப்.மது 17/114

மேல்


சிறுமை (5)

சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – சிலப்.புகார் 8/85
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – சிலப்.புகார் 8/92
சிறுமை உற்றேன் செய் தவத்தீர் யான் – சிலப்.மது 14/20
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி 23/64
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி 27/253

மேல்


சிறுமையள் (1)

தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள் – சிலப்.மது 14/53

மேல்


சிறுமையும் (1)

சிறு முதுகுறைவிக்கு சிறுமையும் செய்தேன் – சிலப்.மது 16/68

மேல்


சிறுவர் (1)

கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் – மணி 13/95,96

மேல்


சிறுவன் (3)

இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என – சிலப்.புகார் 3/119
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதயகுமரன் உரு கெழு மீது ஊர் – மணி 4/27,28
காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன்
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி 22/43,44

மேல்


சிறுவன்-தன்னை (1)

தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது – மணி 6/133,134

மேல்


சிறுவனை (1)

வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும் – மணி 0/75,76

மேல்


சிறுவனொடு (2)

எய்திய சாபத்து இந்திர_சிறுவனொடு – சிலப்.புகார் 3/2
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து – மணி 22/10

மேல்


சிறை (31)

சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – சிலப்.புகார் 6/167
தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த – சிலப்.புகார் 10/44
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை
பட்டின பாக்கம் விட்டனர் நீங்கா – சிலப்.புகார் 10/158,159
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் – சிலப்.புகார் 10/248
செவ்வழி பண்ணின் சிறை வண்டு அரற்றும் – சிலப்.மது 11/88
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை
வருந்து நோய் தணிய இருந்தனர் உப்பால் – சிலப்.மது 12/4,5
பாவையும் கிளியும் தூவி அம் சிறை
கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – சிலப்.மது 12/33,34
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – சிலப்.மது 13/41
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – சிலப்.மது 16/126
இடு சிறை கோட்டத்து இட்டனராக – சிலப்.மது 23/103
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி – சிலப்.வஞ்சி 28/195
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும் – சிலப்.வஞ்சி 30/157
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – சிலப்.வஞ்சி 30/158
சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும் – மணி 0/80
வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த – மணி 3/53
ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி 3/112
அம் சிறை விரிய அலர்ந்த தாமரை – மணி 4/21
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி 4/95
திரை தவழ் பறவையும் விரி சிறை பறவையும் – மணி 8/28
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும் – மணி 8/29
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது – மணி 8/51
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி 18/44
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி 19/63
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி 19/64
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி 19/159
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம் – மணி 20/2
இடு சிறை நீக்கி இராசமாதேவி – மணி 21/76
சிறை தக்கன்று செங்கோல் வேந்து என – மணி 23/30
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி 23/34
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி 24/5
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி 24/31

மேல்


சிறை-செய்க (1)

சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும் – மணி 0/80

மேல்


சிறை_வீடு-செய்ததும் (1)

சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும்
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி 0/80,81

மேல்


சிறை_அகத்து (2)

தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த – சிலப்.புகார் 10/44
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – சிலப்.மது 13/41

மேல்


சிறை_அகம் (1)

தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – சிலப்.மது 16/126

மேல்


சிறைக்கோட்டத்து (1)

அரு சிறைக்கோட்டத்து அக-வயின் புகுந்து – மணி 19/133

மேல்


சிறைக்கோட்டம் (2)

மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம்
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி 0/71,72
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 19/43,44

மேல்


சிறைப்படு (1)

சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும் – சிலப்.மது 23/126

மேல்


சிறைப்பாடு (1)

பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி 23/50

மேல்


சிறையும் (1)

சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ – மணி 5/19

மேல்


சிறையோர் (4)

சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/203
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி 19/157
கறையோர் இல்லா சிறையோர் கோட்டம் – மணி 19/161
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி 20/11

மேல்


சின்னமும் (1)

ஆறு எறி பறையும் சூறை சின்னமும்
கோடும் குழலும் பீடு கெழு மணியும் – சிலப்.மது 12/40,41

மேல்


சின (8)

செரு மிகு சின வேல் செம்பியன் – சிலப்.புகார் 1/69
காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் – சிலப்.புகார் 6/58
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/108
செங்குட்டுவன்-தன் சின வலை படுதலும் – சிலப்.வஞ்சி 26/224
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 27/3
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி 9/59
வெம் சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப – மணி 20/104
அ வினை இறுதியின் அடு சின பாவம் – மணி 26/36

மேல்


சினத்தள் (1)

போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம் – மணி 20/118,119

மேல்


சினத்தினன் (1)

தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும் – மணி 16/83

மேல்


சினத்து (1)

நஞ்சு உண்டு கறுத்த கண்டி வெம் சினத்து
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – சிலப்.மது 12/57,58

மேல்


சினம் (5)

பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – சிலப்.மது 15/52
காய் சினம் தணிந்தன்றி கணவனை கைகூடேன் – சிலப்.மது 19/70
அமைக நின் சினம் என ஆசான் கூற – சிலப்.வஞ்சி 26/24
செங்குட்டுவன் சினம் செருக்கி – சிலப்.வஞ்சி 29/7
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் – மணி 22/157

மேல்


சினவரன் (1)

சினவரன் தேவன் சிவகதி நாயகன் – சிலப்.புகார் 10/180

மேல்


சினவாது (1)

செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி 16/95

மேல்


சினவேல் (1)

செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு – சிலப்.வஞ்சி 27/13

மேல்


சினனே (1)

தாம் பிருகற்பதி சினனே கபிலன் – மணி 27/81

மேல்


சினேந்திரன் (2)

செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் – சிலப்.புகார் 10/177
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே – மணி 29/47

மேல்


சினை (7)

சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – சிலப்.புகார் 0/28
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – சிலப்.மது 16/149
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் – சிலப்.வஞ்சி 24/14
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை – சிலப்.வஞ்சி 28/220
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை
ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன் – மணி 3/106,107
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் – மணி 6/83
செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி 28/173

மேல்