பொ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொங்கர் 4
பொங்கரும் 2
பொங்கலும் 1
பொங்கழி 1
பொங்கி 2
பொங்கிய 1
பொங்கினள் 1
பொங்கு 7
பொச்சாப்புண்டு 1
பொடி 3
பொடித்த 1
பொடியும் 1
பொத்தி 7
பொதி 19
பொதி_அறையோர் 1
பொதிந்தேன் 1
பொதியில் 13
பொதியிலில் 2
பொதியிலும் 5
பொதியிலுள் 1
பொதியின் 1
பொது 9
பொதுத்தான் 1
பொதும்பர் 5
பொதுவர் 1
பொதுவாம் 1
பொதுவாய் 2
பொதுவியல் 3
பொதுவும் 1
பொதுளிய 2
பொய் 19
பொய்_இல்_புலவன் 1
பொய்கை 9
பொய்கையில் 1
பொய்கையின் 2
பொய்கையும் 6
பொய்த்தாய் 1
பொய்த்தார் 1
பொய்த்து 1
பொய்தல் 3
பொய்ம்மை 1
பொய்யறை 1
பொய்யா 5
பொய்யாது 3
பொய்யாற்று 2
பொய்யினை-கொல்லோ 1
பொய்யும் 4
பொய்யே 2
பொரி 2
பொரியும் 1
பொரு 13
பொரு_அறு 2
பொருட்கு 1
பொருட்கும் 1
பொருட்டால் 7
பொருட்டு 3
பொருத்தம் 1
பொருத 1
பொருந்த 3
பொருந்தா 1
பொருந்தாது 7
பொருந்தாய் 1
பொருந்தி 29
பொருந்திய 16
பொருந்தியது 1
பொருந்தினள் 1
பொருந்து 4
பொருந்து-மின் 2
பொருந்துதல் 2
பொருந்துபு 3
பொருந்துவ 1
பொருந்துவிர் 2
பொருநர் 3
பொருநரை 1
பொருநை 1
பொருப்பன் 2
பொருப்பின் 1
பொருள் 86
பொருள்-கண் 3
பொருள்_குன்றம் 1
பொருள்_மொழி 1
பொருள்கட்கு 1
பொருள்கள் 1
பொருள்களில் 1
பொருள்களுக்கு 1
பொருள்களை 2
பொருள்களையும் 1
பொருளன் 1
பொருளா 1
பொருளாம் 1
பொருளால் 3
பொருளிடை 1
பொருளின் 4
பொருளுக்கும் 2
பொருளும் 6
பொருளுரை 3
பொருளுள் 1
பொருளை 2
பொருளொடு 1
பொரூஉம் 2
பொல்லா 3
பொலம் 19
பொலம்_கொடி 1
பொலன் 1
பொலி 1
பொலிக 1
பொலிந்த 3
பொலிந்தது 1
பொலிந்தனள் 1
பொலிந்து 6
பொலிய 6
பொலியும் 1
பொழி 6
பொழிக 1
பொழிதலும் 2
பொழிந்து 2
பொழிய 1
பொழியும் 2
பொழில் 47
பொழில்_இடம் 1
பொழிலும் 5
பொழிலே 2
பொழீஇ 1
பொழுதில் 2
பொழுதின் 3
பொழுதினில் 1
பொழுது 6
பொழுதே 1
பொளித்த 1
பொற்படி 1
பொற்பின் 1
பொற்பு 4
பொறா 1
பொறாது 3
பொறாராகி 1
பொறாஅ 3
பொறாஅது 2
பொறாஅர் 1
பொறாஅள் 10
பொறாஅன் 2
பொறி 16
பொறிகள் 1
பொறித்த 7
பொறித்து 1
பொறியும் 1
பொறுக்க 3
பொறுத்த 1
பொறுத்தல் 1
பொறேஎன் 3
பொறை 7
பொறை_சால்_ஆட்டி 1
பொறை_உயிர்த்து 1
பொறைய 1
பொறையன் 3
பொறையும் 1
பொன் 111
பொன்_கொடி-தன்மேல் 1
பொன்_கோட்டு 1
பொன்_தொடி 1
பொன்_தொடீஇ 1
பொன்_உலகம் 1
பொன்நகர் 1
பொன்ற 2
பொன்றினன் 1
பொன்ன் 1
பொன்னி 1
பொன்னின் 6
பொன்னினும் 1
பொன்னும் 1
பொன்னே 2

பொங்கர் (4)

சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர்
பொய்யறை படுத்து போற்றா மாக்கட்கு – சிலப்.புகார் 10/69,70
பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் – சிலப்.மது 12/81
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – சிலப்.மது 23/191
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி 19/58

மேல்


பொங்கரும் (2)

பூ மர சோலையும் புடையும் பொங்கரும்
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம் – மணி 4/93,94
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து – மணி 19/94,95

மேல்


பொங்கலும் (1)

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து – சிலப்.புகார் 5/69

மேல்


பொங்கழி (1)

பொங்கழி ஆலை புகையொடும் பரந்து – சிலப்.புகார் 10/151

மேல்


பொங்கி (2)

பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர் – சிலப்.மது 18/30
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 11/82,83

மேல்


பொங்கிய (1)

போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள் – மணி 20/118

மேல்


பொங்கினள் (1)

புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அது கண்டு – சிலப்.மது 23/106

மேல்


பொங்கு (7)

பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி – சிலப்.மது 11/25
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன் – சிலப்.மது 22/46
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் – சிலப்.மது 22/137
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி – சிலப்.வஞ்சி 30/214
பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற – மணி 0/14
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் – மணி 7/6
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி 24/28

மேல்


பொச்சாப்புண்டு (1)

பொச்சாப்புண்டு பொருள் உரையாளர் – சிலப்.மது 16/65

மேல்


பொடி (3)

பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/40
புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/48
பொடி ஆடிய கரு முகில் தன் – சிலப்.வஞ்சி 29/41

மேல்


பொடித்த (1)

குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் – மணி 18/40

மேல்


பொடியும் (1)

மெய்யில் பொடியும் விரித்த கரும் குழலும் – சிலப்.மது 20/102

மேல்


பொத்தி (7)

காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட – சிலப்.மது 14/122,123
செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி
நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று – சிலப்.மது 23/48,49
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி 2/42,43
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி 2/53,54
முடலை விறகின் முளி எரி பொத்தி
மிக்க என் கணவன் வினை பயன் உய்ப்ப – மணி 16/26,27
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின் – மணி 19/27,28
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி
மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள் – மணி 20/78,79

மேல்


பொதி (19)

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை – சிலப்.புகார் 2/15
அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம் – சிலப்.புகார் 4/17
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை – சிலப்.புகார் 4/73
கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி
கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும் – சிலப்.புகார் 5/112,113
பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – சிலப்.புகார் 5/195
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/36
பாகு பொதி பவளம் திறந்து நிலா உதவிய – சிலப்.புகார் 8/80
போதார் பிறவி பொதி_அறையோர் என – சிலப்.புகார் 10/191
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் – சிலப்.மது 14/4
போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன் – சிலப்.மது 16/116
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/107
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை – சிலப்.மது 22/121
பண்ட சிறு பொதி பாத காப்பொடு – சிலப்.மது 23/78
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – சிலப்.மது 23/89
உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சே அடி – சிலப்.வஞ்சி 26/55
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி 3/9
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி – மணி 4/105
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு – மணி 5/125
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி – மணி 19/8

மேல்


பொதி_அறையோர் (1)

போதார் பிறவி பொதி_அறையோர் என – சிலப்.புகார் 10/191

மேல்


பொதிந்தேன் (1)

பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை – சிலப்.மது 16/13

மேல்


பொதியில் (13)

பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் – சிலப்.புகார் 1/14
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த – சிலப்.புகார் 8/8
பொதியில் தென்றல் போலாது ஈங்கு – சிலப்.மது 13/131
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து – சிலப்.மது 14/115
பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – சிலப்.மது 23/12
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும் – சிலப்.வஞ்சி 25/117
பொதியில் குன்றத்து கல் கால்கொண்டு – சிலப்.வஞ்சி 25/122
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 27/68
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி 15/82
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி 17/24
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று – மணி 20/15
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து – மணி 20/22
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில்
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி 21/6,7

மேல்


பொதியிலில் (2)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில்
வெள்ளியம்பலத்து நள்ளிருள் கிடந்தேன் – சிலப்.புகார் 0/40,41
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி 21/37

மேல்


பொதியிலும் (5)

தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின் – மணி 1/58,59
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும்
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி 20/30,31
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி – மணி 21/122
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் – மணி 28/59
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் – மணி 28/66,67

மேல்


பொதியிலுள் (1)

மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள்
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி 20/79,80

மேல்


பொதியின் (1)

பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – சிலப்.மது 12/165

மேல்


பொது (9)

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் – சிலப்.புகார் 1/16
வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – சிலப்.புகார் 3/39
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – சிலப்.மது 15/152
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி – சிலப்.வஞ்சி 28/173
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி 10/84
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி 27/28
பொது எனப்படுவது சாதன சாத்தியம் – மணி 27/29
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின் – மணி 27/259
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் – மணி 29/126

மேல்


பொதுத்தான் (1)

உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின் – மணி 27/258,259

மேல்


பொதும்பர் (5)

கோதை மாதவி சண்பக பொதும்பர்
தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து – சிலப்.புகார் 2/18,19
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – சிலப்.புகார் 7/165
குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – சிலப்.புகார் 9/26
பூ மர பொதும்பர் பொருந்தி ஆங்கண் – சிலப்.புகார் 10/37
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி 4/5,6

மேல்


பொதுவர் (1)

போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் – மணி 28/51

மேல்


பொதுவாம் (1)

உண்மை ஏதுப்படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத்து இல்லாமையினும் – மணி 29/313,314

மேல்


பொதுவாய் (2)

மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்
எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என – மணி 27/204,205
ஏது பொதுவாய் இருத்தல் சத்தம் – மணி 29/218

மேல்


பொதுவியல் (3)

வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து – சிலப்.மது 14/148
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி 2/18
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின் – மணி 28/46

மேல்


பொதுவும் (1)

பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி – மணி 27/228

மேல்


பொதுளிய (2)

பாசிலை பொதுளிய போதி மன்றத்து – சிலப்.மது 23/76
இருள் பட பொதுளிய சுருள் இரும் குஞ்சி – சிலப்.வஞ்சி 26/108

மேல்


பொய் (19)

பொய் கரியாளர் புறங்கூற்றாளர் என் – சிலப்.புகார் 5/131
பொய் வகை இன்றி பூமியில் புணர்த்த – சிலப்.புகார் 6/16
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – சிலப்.புகார் 7/221
மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – சிலப்.புகார் 7/225
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில் – சிலப்.புகார் 9/18
பொய் தீர் காட்சி புரையோய் போற்றி – சிலப்.மது 13/92
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – சிலப்.மது 15/50
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – சிலப்.மது 16/120
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட – சிலப்.மது 16/161
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – சிலப்.வஞ்சி 28/168
பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின் – சிலப்.வஞ்சி 30/188
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – சிலப்.வஞ்சி 30/192
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி 0/91
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி 13/97
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி 22/61
பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப – மணி 23/60
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் – மணி 25/45
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் – மணி 27/242
புக்க பின் அந்த பொய் உருவுடனே – மணி 28/85

மேல்


பொய்_இல்_புலவன் (1)

பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி 22/61

மேல்


பொய்கை (9)

அன்னம் மெல் நடை நல் நீர் பொய்கை
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை – சிலப்.புகார் 4/72,73
பொய்கை தாமரை புள் வாய் புலம்ப – சிலப்.புகார் 6/115
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – சிலப்.புகார் 10/83
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டா சிறப்பின் மூன்று உள ஆங்கு – சிலப்.மது 11/96,97
புலரி வைகறை பொய்கை தாமரை – சிலப்.மது 14/3
பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று – மணி 16/46
பூ கமழ் பொய்கை ஆட சென்றோன் – மணி 17/32
நளி இரும் பொய்கை ஆடுநர் போல – மணி 18/13
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு – மணி 19/61

மேல்


பொய்கையில் (1)

புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று – சிலப்.மது 11/169

மேல்


பொய்கையின் (2)

நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் – மணி 2/45
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் – மணி 25/156

மேல்


பொய்கையும் (6)

திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும் – சிலப்.வஞ்சி 27/20
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட – மணி 4/25
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி – மணி 11/4
பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும் – மணி 19/104
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து – மணி 26/73
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி 28/204

மேல்


பொய்த்தாய் (1)

பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து – சிலப்.புகார் 9/56

மேல்


பொய்த்தார் (1)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/34

மேல்


பொய்த்து (1)

அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து – சிலப்.மது 15/78

மேல்


பொய்தல் (3)

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி – சிலப்.புகார் 6/151
பொய்தல் அழித்து போனார் ஒருவர் – சிலப்.புகார் 7/188
பொய்தல் அழித்து போனார் அவர் நம் – சிலப்.புகார் 7/189

மேல்


பொய்ம்மை (1)

பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல் – மணி 27/276

மேல்


பொய்யறை (1)

பொய்யறை படுத்து போற்றா மாக்கட்கு – சிலப்.புகார் 10/70

மேல்


பொய்யா (5)

புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து – சிலப்.புகார் 10/15
பொய்யா வானம் புது புனல் பொழிதலும் – சிலப்.புகார் 10/257
வையை என்ற பொய்யா குல_கொடி – சிலப்.மது 13/170
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும் – சிலப்.மது 23/213
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி 21/37

மேல்


பொய்யாது (3)

வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது – சிலப்.மது 15/145
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் – மணி 12/89
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி 25/108

மேல்


பொய்யாற்று (2)

பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து – மணி 23/22
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர் – மணி 23/124

மேல்


பொய்யினை-கொல்லோ (1)

பொய்யினை-கொல்லோ பூத சதுக்கத்து – மணி 22/55

மேல்


பொய்யும் (4)

கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளை கோட்டியும் விரகினில் ஒழி-மின் – சிலப்.வஞ்சி 30/197,198
கள்ளும் பொய்யும் களவும் கொலையும் – மணி 22/171
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் – மணி 24/77
மெய்யும் பொய்யும் இ திற விதியால் – மணி 29/471

மேல்


பொய்யே (2)

பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல் – மணி 24/127
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல் – மணி 30/68

மேல்


பொரி (2)

பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் – சிலப்.மது 11/76
பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் – சிலப்.மது 12/81

மேல்


பொரியும் (1)

நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் – மணி 6/95

மேல்


பொரு (13)

ஒரு முக எழினியும் பொரு முக எழினியும் – சிலப்.புகார் 3/109
விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – சிலப்.புகார் 6/159
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி – சிலப்.புகார் 10/78
கால் பொரு நிவப்பின் கடும் குரல் ஏற்றொடும் – சிலப்.புகார் 10/104
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் – சிலப்.மது 13/145
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – சிலப்.மது 15/50
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால் – சிலப்.மது 17/126
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – சிலப்.வஞ்சி 26/253
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி 4/32
பொரு முக பளிங்கின் எழினி வீழ்த்து – மணி 5/3
பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி 8/62
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி 10/4
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி 24/43

மேல்


பொரு_அறு (2)

பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி 8/62
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி 10/4

மேல்


பொருட்கு (1)

சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம் – மணி 29/183

மேல்


பொருட்கும் (1)

ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும்
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் – மணி 27/193,194

மேல்


பொருட்டால் (7)

மடந்தை பொருட்டால் வருவது இ ஊர் – சிலப்.வஞ்சி 24/95
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன் – மணி 14/53
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் – மணி 22/147
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள – மணி 22/186
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி 22/192
தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால்
தையால் உன் தன் தடுமாற்று அவலத்து – மணி 23/101,102
பகரும் நின் பொருட்டால் இ பதி பதர்ந்தனம் – மணி 29/36

மேல்


பொருட்டு (3)

விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – சிலப்.புகார் 7/54
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய – மணி 21/63
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு – மணி 22/156

மேல்


பொருத்தம் (1)

பொருத்தம் இன்று புனல் போல் என்றல் – மணி 29/65

மேல்


பொருத (1)

வெண் திரை பொருத வேலை வாலுகத்து – சிலப்.வஞ்சி 27/242

மேல்


பொருந்த (3)

பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – சிலப்.மது 19/61
புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த – சிலப்.வஞ்சி 28/123
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா – மணி 27/188

மேல்


பொருந்தா (1)

மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் – சிலப்.வஞ்சி 27/118,119

மேல்


பொருந்தாது (7)

பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – சிலப்.புகார் 8/117
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் – சிலப்.புகார் 10/201,202
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – சிலப்.மது 13/22
புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் – சிலப்.மது 15/108
புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும் – மணி 1/24
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் – மணி 7/6
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை – மணி 23/72

மேல்


பொருந்தாய் (1)

பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்
ஆதி முதல்வன் அரும் துயர் கெடுக்கும் – மணி 12/107,108

மேல்


பொருந்தி (29)

தண்ணுமை முதல்வன்-தன்னொடும் பொருந்தி
வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/62,63
வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி
இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த – சிலப்.புகார் 3/132,133
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய – சிலப்.புகார் 6/151,152
பூ மர பொதும்பர் பொருந்தி ஆங்கண் – சிலப்.புகார் 10/37
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள் – சிலப்.மது 13/2,3
பாசிலை குருகின் பந்தரில் பொருந்தி
கோசிக மாணி கூற கேட்டே – சிலப்.மது 13/52,53
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி
அட்டில் புகையும் அகல் அங்காடி – சிலப்.மது 13/121,122
புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும் – சிலப்.மது 13/191,192
குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி
சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு – சிலப்.மது 14/87,88
பால்-படு மாதவன் பாதம் பொருந்தி
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் – சிலப்.மது 15/168,169
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி
கல் அதர் அத்தம் கடக்க யாவதும் – சிலப்.மது 16/56,57
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி
காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – சிலப்.மது 16/110,111
செம்மையின் வரூஉம் சிறப்பு பொருந்தி
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன் – சிலப்.மது 22/96,97
ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்தி
பாடற்கு அமைந்த பல துறை போகி – சிலப்.மது 22/99,100
பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற – மணி 0/14
பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ – மணி 6/210
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 10/17,18
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் – மணி 11/10
போதி தலைவனொடு பொருந்தி தோன்றும் – மணி 11/43
போதி நீழல் பொருந்தி தோன்றும் – மணி 11/73
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி 18/51
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி 21/36,37
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து – மணி 21/84,85
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி – மணி 25/128,129
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி 25/181
போதி-மூலம் பொருந்தி வந்தருளி – மணி 26/47
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் – மணி 28/207,208
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி
தனி கல கம்பள செட்டி கைத்தரலும் – மணி 29/5,6
போதி மூலம் பொருந்தி இருந்து – மணி 30/10

மேல்


பொருந்திய (16)

சிறப்பில் குன்றா செய்கையொடு பொருந்திய
பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை – சிலப்.புகார் 3/5,6
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை – சிலப்.புகார் 10/87
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு – சிலப்.மது 13/26
நடுக்கம் களைந்து அவர் நல் அகம் பொருந்திய
இடுக்கண் களைதற்கு ஈண்டு என போக்கி – சிலப்.மது 13/100,101
புலவர் செம் நா பொருந்திய நிவப்பின் – சிலப்.மது 13/130
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி – சிலப்.மது 13/169
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை – சிலப்.வஞ்சி 28/221
பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/128
போய பிறப்பில் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/133
புற துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய
மற துறை முடித்த வாய் வாள் தானையொடு – சிலப்.வஞ்சி 30/212,213
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி 0/86
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி 6/76
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி 12/7
போதி மூலம் பொருந்திய சிறப்பின் – மணி 12/101
போதி தலைவனொடு பொருந்திய போழ்தத்து – மணி 15/26
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் – மணி 21/37,38

மேல்


பொருந்தியது (1)

பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன் – சிலப்.மது 13/97,98

மேல்


பொருந்தினள் (1)

புணர் குறி செய்து பொருந்தினள் என்னும் – மணி 23/46

மேல்


பொருந்து (4)

பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/61
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி 14/49
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி 26/94
புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி 29/60

மேல்


பொருந்து-மின் (2)

பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின்
உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்று அவன் – சிலப்.மது 11/134,135
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி 1/59,60

மேல்


பொருந்துதல் (2)

புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் – மணி 6/20
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய – மணி 18/26

மேல்


பொருந்துபு (3)

பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் – மணி 19/90
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து – மணி 19/95
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி – மணி 21/122

மேல்


பொருந்துவ (1)

பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து – மணி 21/139

மேல்


பொருந்துவிர் (2)

புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின் – சிலப்.மது 11/98
உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்று அவன் – சிலப்.மது 11/135

மேல்


பொருநர் (3)

தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த – சிலப்.புகார் 10/138
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – சிலப்.மது 13/148
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப – சிலப்.வஞ்சி 26/35

மேல்


பொருநரை (1)

இரு நில மருங்கின் பொருநரை பெறாஅ – சிலப்.புகார் 5/89

மேல்


பொருநை (1)

பூம் தண் பொருநை பொறையன் வாழி – சிலப்.மது 23/83

மேல்


பொருப்பன் (2)

பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – சிலப்.மது 12/165
பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன்
குல முதல் கிழத்தி ஆதலின் அலமந்து – சிலப்.மது 23/12,13

மேல்


பொருப்பின் (1)

தென்னம் பொருப்பின் தலைவ வாழி – சிலப்.மது 20/43

மேல்


பொருள் (86)

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற – சிலப்.புகார் 0/16
அரும் பொருள் தருஉம் விருந்தின் தேஎம் – சிலப்.புகார் 2/5
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – சிலப்.புகார் 8/70
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி – சிலப்.புகார் 8/99
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில் – சிலப்.புகார் 9/18
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – சிலப்.புகார் 9/29
குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த – சிலப்.புகார் 9/70
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர் – சிலப்.புகார் 9/75
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் – சிலப்.புகார் 10/51
பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள்
விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி – சிலப்.புகார் 10/188,189
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது – சிலப்.புகார் 10/201
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – சிலப்.புகார் 10/265
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் – சிலப்.மது 11/123
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள்
காமுறு தெய்வம் கண்டு அடி பணிய – சிலப்.மது 11/159,160
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும் – சிலப்.மது 12/160
பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது – சிலப்.மது 13/97
இ பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி – சிலப்.மது 15/66
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – சிலப்.மது 15/67
ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து – சிலப்.மது 15/74
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு – சிலப்.மது 15/127
பொச்சாப்புண்டு பொருள் உரையாளர் – சிலப்.மது 16/65
கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் – சிலப்.மது 16/175
புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும் – சிலப்.மது 16/179
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – சிலப்.மது 16/182
காலம் கருதி அவர் பொருள் கையுறின் – சிலப்.மது 16/184
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் – சிலப்.மது 16/186
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – சிலப்.மது 17/135
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – சிலப்.மது 18/50
போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – சிலப்.மது 19/69
படு_பொருள் வௌவிய பார்ப்பான் இவன் என – சிலப்.மது 23/102
இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும் – சிலப்.மது 23/128
இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும் – சிலப்.மது 23/128
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து – சிலப்.மது 23/147
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/55
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/91
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர் – சிலப்.வஞ்சி 28/32
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – சிலப்.வஞ்சி 28/168
அரும் பொருள் பரிசிலேன் அல்லேன் யானும் – சிலப்.வஞ்சி 28/171
மறையோன் மறை நா உழுது வான் பொருள்
இறையோன் செவி செறு ஆக வித்தலின் – சிலப்.வஞ்சி 28/187,188
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – சிலப்.வஞ்சி 30/192
ஐந்திணை மருங்கின் அறம் பொருள் இன்பம் – சிலப்.வஞ்சி 30/221
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி 1/60
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து – மணி 5/71,72
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி 5/87
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் – மணி 6/32
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி 9/9
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி 10/8
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி 10/80
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் – மணி 12/54
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி – மணி 16/7
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி 16/119
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி 16/121
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் – மணி 17/3
பெரும் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த – மணி 19/160
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் – மணி 20/5
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி 21/48
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும் – மணி 21/92
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி 21/141
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி 22/61
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி 22/111
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி 22/140
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் – மணி 22/169
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர் – மணி 23/124
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் – மணி 23/136
உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி 25/148
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி 26/20
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு – மணி 26/64
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி 26/69
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி – மணி 27/21
எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல் – மணி 27/62
அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு – மணி 27/169
நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம் – மணி 27/184
அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் – மணி 27/230
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி 27/244
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி 27/246
சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை – மணி 27/260
உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து – மணி 27/288
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் – மணி 28/87
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி 29/85
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து – மணி 29/125
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் – மணி 29/187
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு – மணி 29/210
ஆகாசம் பொருள் என்பாற்கு – மணி 29/437
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு – மணி 29/446
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி 30/223
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் – மணி 30/229

மேல்


பொருள்-கண் (3)

உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி 29/365
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி 29/374
உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண்
சாத்திய சாதனம் மீளாதபடி – மணி 29/430,431

மேல்


பொருள்_குன்றம் (1)

குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த – சிலப்.புகார் 9/70

மேல்


பொருள்_மொழி (1)

பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – சிலப்.வஞ்சி 30/192

மேல்


பொருள்கட்கு (1)

யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி 30/252

மேல்


பொருள்கள் (1)

புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி 27/233

மேல்


பொருள்களில் (1)

எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் – மணி 27/110

மேல்


பொருள்களுக்கு (1)

பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு
ஒன்றிய காரணம் உதவு காரியத்தை – மணி 30/223,224

மேல்


பொருள்களை (2)

பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா – மணி 27/188
காரண காரியம் ஆகிய பொருள்களை
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் – மணி 30/219,220

மேல்


பொருள்களையும் (1)

எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் – மணி 27/190

மேல்


பொருளன் (1)

பொருளன் புனிதன் புராணன் புலவன் – சிலப்.புகார் 10/179

மேல்


பொருளா (1)

வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும் – மணி 27/136

மேல்


பொருளாம் (1)

ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின் – மணி 29/209

மேல்


பொருளால் (3)

இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி 24/113
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் – மணி 27/40
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி 30/53

மேல்


பொருளிடை (1)

அ பொருளிடை பற்று ஆகாது என்றும் – மணி 30/230

மேல்


பொருளின் (4)

கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் – மணி 16/8
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி 27/13
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் – மணி 27/256
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி 30/16

மேல்


பொருளுக்கும் (2)

பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி 27/246
எ பொருளுக்கும் ஆன்மா இலை என – மணி 30/177

மேல்


பொருளும் (6)

பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு – மணி 25/227
எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என – மணி 27/205
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் – மணி 27/242
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு – மணி 27/257
உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே – மணி 27/273
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் – மணி 29/310

மேல்


பொருளுரை (3)

பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து – மணி 2/40
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் – மணி 12/107
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி – மணி 21/84

மேல்


பொருளுள் (1)

ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி 27/177

மேல்


பொருளை (2)

எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும் – சிலப்.வஞ்சி 30/224,225
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை
தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி 27/51,52

மேல்


பொருளொடு (1)

புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி 7/114

மேல்


பொரூஉம் (2)

புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும் – சிலப்.வஞ்சி 25/29
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு – மணி 28/44

மேல்


பொல்லா (3)

பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே பொல்லா
வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி – சிலப்.மது 20/95,96
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 24/129
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 30/70

மேல்


பொலம் (19)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 0/4
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி – சிலப்.புகார் 3/117
நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை – சிலப்.புகார் 3/123
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 10/21
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய – சிலப்.மது 11/50
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – சிலப்.மது 11/109
பூச உருவின் பொலம் தெளித்தனையவும் – சிலப்.மது 14/188
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – சிலப்.மது 14/203
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – சிலப்.மது 23/7
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – சிலப்.வஞ்சி 25/12
வருக தாம் என வாகை பொலம் தோடு – சிலப்.வஞ்சி 27/43
விலங்கு ஒளி வயிரமொடு பொலம் தகடு போகிய – சிலப்.வஞ்சி 27/205
போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல் – சிலப்.வஞ்சி 28/9
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – சிலப்.வஞ்சி 29/154
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் – மணி 1/44
பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி 3/136
பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து – மணி 3/142
பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன் – மணி 5/61
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி 10/17

மேல்


பொலம்_கொடி (1)

பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி 10/17

மேல்


பொலன் (1)

போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – சிலப்.புகார் 1/62

மேல்


பொலி (1)

போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் – மணி 28/51

மேல்


பொலிக (1)

நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என – மணி 13/21

மேல்


பொலிந்த (3)

பூரண கும்பத்து பொலிந்த பாலிகை – சிலப்.புகார் 5/153
புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர் – சிலப்.வஞ்சி 27/38
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற – மணி 6/145

மேல்


பொலிந்தது (1)

வள நீர் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர் – சிலப்.மது 11/13

மேல்


பொலிந்தனள் (1)

பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள்
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின் – மணி 26/92,93

மேல்


பொலிந்து (6)

பல் பூம் சேக்கை பள்ளியுள் பொலிந்து
செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல் – சிலப்.புகார் 4/28,29
பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து
காம களி மகிழ்வு எய்தி காமர் – சிலப்.புகார் 5/193,194
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய – சிலப்.மது 11/50
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே – சிலப்.வஞ்சி 26/69
வேக யானையின் மீமிசை பொலிந்து
குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள – சிலப்.வஞ்சி 27/254,255
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி 10/4

மேல்


பொலிய (6)

பொலிய கோத்த புலமையோனுடன் – சிலப்.புகார் 3/94
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த – சிலப்.புகார் 3/105,106
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 3/135
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 6/38
புட்கை சேனை பொலிய சூட்டி – சிலப்.வஞ்சி 25/147
எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும் – மணி 5/122

மேல்


பொலியும் (1)

வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – சிலப்.மது 21/59

மேல்


பொழி (6)

புயல் சுமந்து வருந்தி பொழி கதிர் மதியத்து – சிலப்.புகார் 8/78
பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர் – சிலப்.மது 18/30
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – சிலப்.மது 19/47
புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/48
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி 5/131
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் – மணி 16/49

மேல்


பொழிக (1)

வானம் மும் மாரி பொழிக மன்னவன் – மணி 1/33

மேல்


பொழிதலும் (2)

பொய்யா வானம் புது புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் – சிலப்.புகார் 10/257,258
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும்
ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் – சிலப்.மது 23/213,214

மேல்


பொழிந்து (2)

புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப – சிலப்.மது 16/214
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து
குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார் – சிலப்.வஞ்சி 24/8,9

மேல்


பொழிய (1)

செம் பொன் மாரி செம் கையின் பொழிய
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன் – சிலப்.மது 15/41,42

மேல்


பொழியும் (2)

கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும்
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா – மணி 12/93,94
தாங்கா மாரியும் தான் நனி பொழியும்
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த – மணி 28/197,198

மேல்


பொழில் (47)

பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – சிலப்.புகார் 5/195
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – சிலப்.புகார் 6/2
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – சிலப்.புகார் 6/68
பொழில் தரு நறு மலரே புது மணம் விரி மணலே – சிலப்.புகார் 7/69
விரை விரி நறு மலரே மிடைதரு பொழில் இடமே – சிலப்.புகார் 7/74
புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – சிலப்.புகார் 7/171
தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி – சிலப்.புகார் 10/32
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – சிலப்.புகார் 10/35
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – சிலப்.புகார் 10/214
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – சிலப்.புகார் 10/218
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் – சிலப்.புகார் 10/220
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அக-வயின் – சிலப்.மது 11/6
செம் நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த – சிலப்.மது 11/142
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை – சிலப்.மது 11/208
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி – சிலப்.மது 13/180
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – சிலப்.மது 14/82
புறஞ்சிறை மூதூர் பொழில்_இடம் புகுந்து – சிலப்.மது 15/8
தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் – சிலப்.மது 15/16
நாவல் அம் தண் பொழில் மன்னர் – சிலப்.மது 17/3
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு – சிலப்.மது 23/138
வள மலர் பூம் பொழில் வானவர் மகளிரொடு – சிலப்.வஞ்சி 25/10
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – சிலப்.வஞ்சி 25/173
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி – சிலப்.வஞ்சி 28/197,198
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட – மணி 4/2,3
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ – மணி 4/77
பல் மலர் பூம் பொழில் பகல் முளைத்தது போல் – மணி 4/92
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் – மணி 5/83
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய – மணி 6/8
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட – மணி 7/3
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில்
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 7/88,89
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி 7/119
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி 9/30
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி 10/21
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின் – மணி 10/27
துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் – மணி 12/40
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு – மணி 19/56
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த – மணி 19/71
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி 22/29
மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா – மணி 23/88
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி 24/165
அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் – மணி 24/176
அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து – மணி 25/1
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு – மணி 25/69
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு – மணி 26/15
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி 28/106
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி 28/112
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி 28/176

மேல்


பொழில்_இடம் (1)

புறஞ்சிறை மூதூர் பொழில்_இடம் புகுந்து – சிலப்.மது 15/8

மேல்


பொழிலும் (5)

புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி – சிலப்.மது 13/191
புறஞ்சிறை பொழிலும் பிறங்கு நீர் பண்ணையும் – சிலப்.மது 14/1
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட – மணி 4/25
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து – மணி 26/73
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி 28/204

மேல்


பொழிலே (2)

வளை வளர்தரு துறையே மணம் விரிதரு பொழிலே
தளை அவிழ் நறு மலரே தனியவள் திரி இடமே – சிலப்.புகார் 7/77,78
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே – சிலப்.புகார் 7/157

மேல்


பொழீஇ (1)

களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – சிலப்.புகார் 7/176

மேல்


பொழுதில் (2)

பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன் – சிலப்.மது 22/29
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று – மணி 20/15

மேல்


பொழுதின் (3)

எல் படு பொழுதின் இள நிலா முன்றில் – சிலப்.மது 14/83
பாணி கைக்கொண்டு முற்பகல் பொழுதின்
உள் மகிழ்ந்து உண்ணுவோனே அவனே – சிலப்.மது 22/78,79
கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி – மணி 30/61

மேல்


பொழுதினில் (1)

போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி 28/242

மேல்


பொழுது (6)

போது அவிழ்க்கும் கங்குல் பொழுது – சிலப்.புகார் 4/88
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – சிலப்.புகார் 7/228
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும் – சிலப்.புகார் 8/60
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப – மணி 5/128
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி 11/46
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி 11/46,47

மேல்


பொழுதே (1)

கருவில் பட்ட பொழுதே கலக்கும் – மணி 27/162

மேல்


பொளித்த (1)

சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி 4/53

மேல்


பொற்படி (1)

நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும் – சிலப்.வஞ்சி 30/136

மேல்


பொற்பின் (1)

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி – சிலப்.மது 16/91

மேல்


பொற்பு (4)

கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை – சிலப்.புகார் 3/75
பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது – சிலப்.மது 13/97
பொற்பு உடை தெய்வம் யாம் கண்டிலமால் – சிலப்.மது 15/144
பொற்பு வழுதியும் தன் பூவையரும் மாளிகையும் – சிலப்.மது 21/58

மேல்


பொறா (1)

கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – சிலப்.மது 12/124

மேல்


பொறாது (3)

வடி வேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பல் மலை அடுக்கத்து – சிலப்.மது 11/18,19
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி 23/65,66
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் – மணி 26/11,12

மேல்


பொறாராகி (1)

புனைபவும் பூண்பவும் பொறாராகி
வார்த்திகன்-தன்னை காத்தனர் ஓம்பி – சிலப்.மது 23/99,100

மேல்


பொறாஅ (3)

வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு – சிலப்.புகார் 10/66
குறங்கு இணை திரண்டன கோலம் பொறாஅ
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – சிலப்.வஞ்சி 30/18,19
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி – மணி 19/27

மேல்


பொறாஅது (2)

தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது – சிலப்.புகார் 10/205,206
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது – மணி 25/59,60

மேல்


பொறாஅர் (1)

இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் – சிலப்.வஞ்சி 27/120

மேல்


பொறாஅள் (10)

காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் – சிலப்.புகார் 6/58,59
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல் வெம் கானத்து – சிலப்.மது 13/3,4
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதி என் – சிலப்.மது 22/156,157
கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள்
மன்னவன் செல்வுழி செல்க யான் என – சிலப்.வஞ்சி 25/83,84
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்
இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் – சிலப்.வஞ்சி 27/96,97
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள்
தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும் – மணி 0/77,78
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள்
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப – மணி 2/50,51
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள் – மணி 22/178,179
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள்
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி 23/144,145
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என – மணி 25/198,199

மேல்


பொறாஅன் (2)

தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன்
மயங்கினன்-கொல் என மலர் அடி வருடி – சிலப்.வஞ்சி 25/80,81
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
நல் மணி இழந்த நாகம் போன்று – மணி 25/194,195

மேல்


பொறி (16)

புள் வாய் முரசமொடு பொறி மயிர் வாரணத்து – சிலப்.புகார் 4/77
புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி – சிலப்.புகார் 7/139
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை – சிலப்.புகார் 10/87
பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது – சிலப்.புகார் 10/91
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி – சிலப்.மது 13/84
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும் – சிலப்.மது 14/134
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/39
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/41
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து – சிலப்.மது 20/37
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/166
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/176
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று – சிலப்.வஞ்சி 30/175
பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப – மணி 7/116
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை – மணி 19/68
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி – மணி 27/228
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி 28/21

மேல்


பொறிகள் (1)

வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி 28/23

மேல்


பொறித்த (7)

வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த
கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி – சிலப்.புகார் 5/111,112
மங்கலம் பொறித்த மகர வாசிகை – சிலப்.புகார் 5/151
விடர் சிலை பொறித்த விறலோன் வாழி – சிலப்.மது 23/82
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும் – சிலப்.வஞ்சி 25/188
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/136
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் – சிலப்.வஞ்சி 29/16
விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் – மணி 28/104

மேல்


பொறித்து (1)

பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – சிலப்.மது 17/123

மேல்


பொறியும் (1)

மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும்
கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும் – சிலப்.மது 15/207,208

மேல்


பொறுக்க (3)

பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – சிலப்.புகார் 7/221
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – சிலப்.புகார் 9/34
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி 23/66

மேல்


பொறுத்த (1)

பீடிகை பொறுத்த பின்னர் அல்லது – மணி 25/60

மேல்


பொறுத்தல் (1)

இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – சிலப்.மது 23/117

மேல்


பொறேஎன் (3)

புல வரை இறந்தோய் போகுதல் பொறேஎன்
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் – சிலப்.வஞ்சி 28/174,175
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – சிலப்.வஞ்சி 30/107
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி 14/88,89

மேல்


பொறை (7)

பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/46
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – சிலப்.மது 12/165
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து – சிலப்.வஞ்சி 26/206
போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – சிலப்.வஞ்சி 27/81
பூருவ தேயம் பொறை கெட வாழும் – மணி 9/13
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி 24/165

மேல்


பொறை_சால்_ஆட்டி (1)

போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி
என்னோடு இவர் வினை உருத்ததோ என – சிலப்.வஞ்சி 27/81,82

மேல்


பொறை_உயிர்த்து (1)

பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி 24/165,166

மேல்


பொறைய (1)

போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள் – சிலப்.வஞ்சி 27/126

மேல்


பொறையன் (3)

பூம் தண் பொருநை பொறையன் வாழி – சிலப்.மது 23/83
சேரன் பொறையன் மலையன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/169
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – சிலப்.வஞ்சி 29/192

மேல்


பொறையும் (1)

அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும் – சிலப்.மது 11/68

மேல்


பொன் (111)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட – சிலப்.புகார் 0/22
காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – சிலப்.புகார் 1/5
உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும் – சிலப்.புகார் 1/68
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – சிலப்.புகார் 3/121
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – சிலப்.புகார் 3/157
வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை – சிலப்.புகார் 3/165
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – சிலப்.புகார் 3/178
பொன் செய் கொல்லரும் நன்கலம் தருநரும் – சிலப்.புகார் 5/31
பவள திரள் கால் பைம் பொன் வேதிகை – சிலப்.புகார் 5/148
தோரணம் நிலைஇய தோம் அறு பசும் பொன்
பூரண கும்பத்து பொலிந்த பாலிகை – சிலப்.புகார் 5/152,153
பாவை விளக்கு பசும் பொன் படாகை – சிலப்.புகார் 5/154
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – சிலப்.புகார் 5/166
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – சிலப்.புகார் 6/92
பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர் – சிலப்.புகார் 7/198
நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ – சிலப்.புகார் 9/54
நீல மேகம் நெடும் பொன் குன்றத்து – சிலப்.மது 11/35
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின் – சிலப்.மது 11/134
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – சிலப்.மது 12/79
பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/88
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/89
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – சிலப்.மது 12/116
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – சிலப்.மது 14/82
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து – சிலப்.மது 14/131
செம் பொன் வள்ளத்து சிலதியர் ஏந்திய – சிலப்.மது 14/132
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – சிலப்.மது 15/41
காய் பொன் உலையும் கல் இடு கூடையும் – சிலப்.மது 15/210
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – சிலப்.மது 16/110
பத்தி கேவண பசும் பொன் குடை சூல் – சிலப்.மது 16/118
பொன் தொடி மாதராள் தோள் – சிலப்.மது 17/36
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/41
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – சிலப்.மது 17/123
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால் – சிலப்.மது 17/126
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – சிலப்.மது 19/23
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – சிலப்.மது 19/30
பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/40
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – சிலப்.மது 19/61
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/54
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – சிலப்.மது 20/79
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட – சிலப்.மது 20/86
பொன் அம் கொடி போல போதந்தாள் மன்னி – சிலப்.மது 21/15
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – சிலப்.மது 21/56
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி – சிலப்.மது 22/48
செம் நிற பசும் பொன் புரையும் மேனியன் – சிலப்.மது 22/62
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – சிலப்.மது 22/67
பொன் என விரிந்த நல் நிற சாந்தம் – சிலப்.மது 22/71
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள் – சிலப்.மது 23/6
பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – சிலப்.மது 23/12
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – சிலப்.மது 23/51
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து – சிலப்.மது 23/181
பொன் ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/36
பொன் ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/37
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண – சிலப்.வஞ்சி 24/126
பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் – சிலப்.வஞ்சி 25/148
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – சிலப்.வஞ்சி 26/253
பொன் புனை அரங்கமும் புனை பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 27/18
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு – சிலப்.வஞ்சி 27/84
பொன் புனை திகிரி ஒருவழிப்படுத்தோய் – சிலப்.வஞ்சி 27/123
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/128
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை – சிலப்.வஞ்சி 27/156
மடை அமை செறிவின் வான் பொன் கட்டில் – சிலப்.வஞ்சி 27/206
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை – சிலப்.வஞ்சி 27/207
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/142
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை – சிலப்.வஞ்சி 28/221
பொன் தொடி நங்கைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/80
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – சிலப்.வஞ்சி 29/103
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – சிலப்.வஞ்சி 29/104
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – சிலப்.வஞ்சி 29/104
புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த – சிலப்.வஞ்சி 29/138
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – சிலப்.வஞ்சி 29/154
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் – சிலப்.வஞ்சி 30/113
பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/128
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி 0/3
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி 0/86
பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து – மணி 1/48
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி 2/16
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை – மணி 2/32
பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து – மணி 2/40
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி 3/133
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி 5/1
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக – மணி 5/121
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் – மணி 11/10
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி 12/33
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி 13/57
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி 13/84
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி 15/5
அடர் பொன் முட்டை அகவையினான் என – மணி 15/14
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் – மணி 18/32
பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர் – மணி 18/45
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி – மணி 18/81
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி 19/69
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து – மணி 19/115
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி – மணி 20/16
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி 21/36
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய – மணி 21/148
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி 22/124
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி 23/66
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி 24/159
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் – மணி 25/73
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை – மணி 26/87
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் – மணி 26/90
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் – மணி 26/92
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் – மணி 26/92
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும் – மணி 28/36
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி 28/54
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி 28/60
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர் – மணி 28/154
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி 28/156
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி 28/168
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி 28/170
செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி 28/173
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி 29/38

மேல்


பொன்_கொடி-தன்மேல் (1)

பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/128

மேல்


பொன்_கோட்டு (1)

பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – சிலப்.மது 23/12

மேல்


பொன்_தொடி (1)

பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – சிலப்.மது 21/56

மேல்


பொன்_தொடீஇ (1)

நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு – சிலப்.புகார் 9/54,55

மேல்


பொன்_உலகம் (1)

புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த – சிலப்.வஞ்சி 29/138

மேல்


பொன்நகர் (1)

பொன்நகர் வறிதா போதுவர் என்பது – மணி 1/41

மேல்


பொன்ற (2)

பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய் – மணி 30/38
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி 30/223

மேல்


பொன்றினன் (1)

பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று – மணி 24/19

மேல்


பொன்ன் (1)

பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் – மணி 27/152

மேல்


பொன்னி (1)

முன் நிறுத்தி காட்டிய மொய் குழலாள் பொன்னி
கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று – சிலப்.மது 21/6,7

மேல்


பொன்னின் (6)

பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை – சிலப்.மது 16/13
பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன் – மணி 5/61
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற – மணி 6/145
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி 15/5
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் – மணி 19/90
பொன்னின் ஊசி பசும் கம்பளத்து – மணி 29/17

மேல்


பொன்னினும் (1)

பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் – சிலப்.புகார் 5/105

மேல்


பொன்னும் (1)

மாசு அறு முத்தும் மணியும் பொன்னும்
அரும் கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா – சிலப்.புகார் 5/19,20

மேல்


பொன்னே (2)

மாசு அறு பொன்னே வலம்புரி முத்தே – சிலப்.புகார் 2/73
பொன்னே கொடியே புனை பூம் கோதாய் – சிலப்.மது 16/89

மேல்