ஈ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

#ஈக்க”>ஈக்க 1
ஈக 1
ஈகை 1
ஈங்கு 155
ஈசன் 2
ஈட்ட 1
ஈட்டத்து 1
ஈட்டம் 3
ஈட்டமும் 1
ஈட்டி 1
ஈட்டிய 1
ஈட்டுதல் 1
ஈண்டி 10
ஈண்டிய 4
ஈண்டு 10
ஈண்டு_நீர் 1
ஈண்டும் 2
ஈத்த 2
ஈத்தது 1
ஈத்ததும் 2
ஈத்தவன் 1
ஈத்து 4
ஈத்தோய் 1
ஈது 16
ஈந்த 1
ஈந்தார் 1
ஈந்து 1
ஈம 7
ஈமத்து 2
ஈமம் 2
ஈயாது 2
ஈயார் 1
ஈயாள் 1
ஈர் 33
ஈர்_அறு 1
ஈர்_ஆயிரம் 1
ஈர்_ஆறு 5
ஈர்_ஆறும் 2
ஈர்_எட்டு 2
ஈர்_எண்ணூற்றோடு 1
ஈர்_ஏழ் 4
ஈர்_ஐஞ்ஞூற்றுவர் 3
ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு 1
ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் 1
ஈர்_ஐம்பத்து 1
ஈர்_ஐம்பத்துஇருவரொடு 1
ஈர்_ஐம்பதின்மர் 1
ஈர்த்து 1
ஈர்ம் 1
ஈர்வது 1
ஈர 1
ஈரம் 1
ஈராயிரம் 1
ஈவர் 1
ஈவோர் 1
ஈற்றில் 1
ஈற்று 2
ஈறா 1
ஈறு 5
ஈறு-செய்தோர் 1
ஈன்ற 11
ஈன்றனை 1
ஈன்றாள் 1
ஈனா 1
ஈனோர் 2
ஈனோர்க்கு 1

ஈக்க (1)

இரு கரும் புருவம் ஆக ஈக்க
மூவா மருந்தின் முன்னர் தோன்றலின் – சிலப்.புகார் 2/45,46

மேல்


ஈக (1)

வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட – சிலப்.வஞ்சி 30/163

மேல்


ஈகை (1)

ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – சிலப்.புகார் 1/24

மேல்


ஈங்கு (155)

யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – சிலப்.புகார் 0/24
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 0/30
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/153,154
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – சிலப்.புகார் 7/228
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 8/71
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – சிலப்.புகார் 10/55
காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர் – சிலப்.புகார் 10/221
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே – சிலப்.புகார் 10/222
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – சிலப்.புகார் 10/244
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – சிலப்.மது 11/32
இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் – சிலப்.மது 11/122
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – சிலப்.மது 11/153
பொதியில் தென்றல் போலாது ஈங்கு
மதுரை தென்றல் வந்தது காணீர் – சிலப்.மது 13/131,132
ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/24
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/61
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் – சிலப்.மது 15/32
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – சிலப்.மது 15/37
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – சிலப்.மது 15/82
பர_கதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை – சிலப்.மது 15/85
கனவு கண்டேன் கடிது ஈங்கு உறும் என – சிலப்.மது 15/106
தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு
என்னொடு போந்த இளம் கொடி நங்கை-தன் – சிலப்.மது 15/136,137
சாவகர் எல்லாம் சாரணர் தொழுது ஈங்கு
யாது இவன் வரவு என இறையோன் கூறும் – சிலப்.மது 15/161,162
என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது – சிலப்.மது 16/14
குமரி வாழையின் குருத்து_அகம் விரித்து ஈங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கு என – சிலப்.மது 16/42,43
அமுதம் உண்க அடிகள் ஈங்கு என – சிலப்.மது 16/43
நல் அமுது உண்ணும் நம்பி ஈங்கு
பல் வளை தோளியும் பண்டு நம் குலத்து – சிலப்.மது 16/48,49
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – சிலப்.மது 16/53
என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த – சிலப்.மது 16/88
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு – சிலப்.மது 16/127,128
ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் – சிலப்.மது 16/150
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.மது 16/153
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் – சிலப்.மது 16/162
கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – சிலப்.மது 16/200
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/86
வருக மற்று அவள் தருக ஈங்கு என – சிலப்.மது 20/57
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – சிலப்.மது 21/52
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – சிலப்.வஞ்சி 24/23
வந்து ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/27
என்று ஈங்கு
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு – சிலப்.வஞ்சி 24/100,101
உயிர் பதி பெயர்த்தமை உறுக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/97
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/140
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/150
மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/172
இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய – சிலப்.வஞ்சி 26/9
முழுத்தம் ஈங்கு இது முன்னிய திசை மேல் – சிலப்.வஞ்சி 26/30
சஞ்சயன்-தன்னொடு வருக ஈங்கு என – சிலப்.வஞ்சி 26/143
பகை புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா – சிலப்.வஞ்சி 27/53
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/55
மன்னர் கோவே வாழ்க ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/111
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 27/115
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என – சிலப்.வஞ்சி 27/212
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு
உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா – சிலப்.வஞ்சி 28/155,156
ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை – சிலப்.வஞ்சி 29/18
யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 30/5
சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – சிலப்.வஞ்சி 30/52
ஈங்கு இ மறையோள்-தன்மேல் தோன்றி – சிலப்.வஞ்சி 30/93
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – சிலப்.வஞ்சி 30/96
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – சிலப்.வஞ்சி 30/202
பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு
அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி 0/19,20
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி 2/59
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி 3/27
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி – மணி 3/40
ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல் – மணி 3/73
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி 3/150
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி 4/74
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி 4/84
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி 5/27
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் – மணி 5/30
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி 5/40,41
ஈங்கு நின்றீர் என் உற்றீர் என – மணி 6/15
ஈங்கு இதன் காரணம் என்னையோ என – மணி 6/33
ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி 6/38
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு
எம் அனை காணாய் ஈம சுடலையின் – மணி 6/128,129
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி 6/143
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி 6/161
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி 6/171
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே – மணி 6/175
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி 6/202
பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி 7/23,24
ஈங்கு நிகழ்வன ஏது பல உள – மணி 7/29
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி 7/39
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி 7/107,108
ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி 8/1
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி 9/51
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி 9/63,64
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை – மணி 9/69
எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என – மணி 10/39
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி 10/59
பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி 10/67
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி 10/69
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி 11/7
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி 11/15
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி 11/17
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி 11/17
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி 11/21
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி 11/26,27
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி 11/37
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி 11/106
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப – மணி 11/123
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு
அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின் – மணி 11/139,140
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி 11/141
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என – மணி 12/69
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி 12/110
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி 13/66
ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி 13/71
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி 13/76
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி 13/89
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன் – மணி 14/36,37
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் – மணி 14/48
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு
இரப்போர் காணாது ஏமாந்திருப்ப – மணி 14/49,50
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி 15/39
ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர் – மணி 16/1
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி 16/48
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி 16/64
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி 16/72
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி 16/93
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி 16/114
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி 16/118
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி 16/121
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி 16/126
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி 17/45,46
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி 17/68
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி 18/128
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி 18/131
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி 18/156
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி 19/150
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி 20/77
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி 20/78
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி 20/103
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன் – மணி 21/39
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி 21/44
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி 21/71
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த – மணி 21/150
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி 22/12,13
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி 22/38,39
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி 22/74
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு
என் செய்தனையோ இரு நிதி செல்வ – மணி 22/115,116
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய் – மணி 22/132
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி 22/192
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி – மணி 22/203
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி – மணி 22/213
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி 23/86
இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி 24/33
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி 24/49
ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும் – மணி 24/66
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி 24/82
காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி 24/98
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும் – மணி 24/171
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி 25/20
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி 25/68
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி – மணி 25/102,103
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி 25/222
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி 28/203
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி 30/21
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி 30/22

மேல்


ஈசன் (2)

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் – சிலப்.புகார் 10/186
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என – மணி 27/86

மேல்


ஈட்ட (1)

கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட
குலத்தில் குன்றா கொழும் குடி செல்வர் – சிலப்.புகார் 2/7,8

மேல்


ஈட்டத்து (1)

வங்க ஈட்டத்து தொண்டியோர் இட்ட – சிலப்.மது 14/107

மேல்


ஈட்டம் (3)

பவம் எனப்படுவது கரும ஈட்டம்
தரும் முறை இது என தாம்தாம் சார்தல் – மணி 30/93,94
கரும ஈட்டம் என கட்டுரைப்பவை – மணி 30/142
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் – மணி 30/185

மேல்


ஈட்டமும் (1)

பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் – மணி 6/182

மேல்


ஈட்டி (1)

வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி 22/111,112

மேல்


ஈட்டிய (1)

அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் – மணி 17/3

மேல்


ஈட்டுதல் (1)

உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர் – சிலப்.புகார் 9/75

மேல்


ஈண்டி (10)

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள் – சிலப்.புகார் 0/6
இவர் பரி தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி
அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கில் – சிலப்.புகார் 5/160,161
கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி
கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – சிலப்.புகார் 6/7,8
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி
இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில் – சிலப்.புகார் 6/145,146
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன் – சிலப்.வஞ்சி 25/8,9
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
பாசறை மன்னர் பாடி போல – மணி 8/31,32
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி
சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய – மணி 9/34,35
தொக்கு ஒருங்கு ஈண்டி துடிதலோகத்து – மணி 12/73
தொக்கு உடன் ஈண்டி சூழ்ந்தன விடாஅ – மணி 14/25
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 28/227,228

மேல்


ஈண்டிய (4)

இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து – சிலப்.புகார் 6/164
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் – மணி 1/16
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம் – மணி 14/26
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி 15/59

மேல்


ஈண்டு (10)

திங்களும் ஈண்டு திரிதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/207
இடுக்கண் களைதற்கு ஈண்டு என போக்கி – சிலப்.மது 13/101
வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய் என் செய்தனை என – சிலப்.மது 16/69,70
ஈண்டு நீர் வையம் காக்கும் – சிலப்.மது 20/28
ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி – சிலப்.வஞ்சி 25/91
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப – சிலப்.வஞ்சி 26/92
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – சிலப்.வஞ்சி 27/10
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி 14/28
ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் – மணி 14/38
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி 16/102

மேல்


ஈண்டு_நீர் (1)

ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி 14/28

மேல்


ஈண்டும் (2)

வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின் – சிலப்.மது 18/47,48
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் – மணி 6/82,83

மேல்


ஈத்த (2)

ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – சிலப்.மது 13/77
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – சிலப்.மது 16/55,56

மேல்


ஈத்தது (1)

செம் கடை மழை கண் இரண்டா ஈத்தது
மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – சிலப்.புகார் 2/52,53

மேல்


ஈத்ததும் (2)

மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும்
ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – சிலப்.மது 13/76,77
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று – மணி 0/64,65

மேல்


ஈத்தவன் (1)

பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று – மணி 24/19

மேல்


ஈத்து (4)

தளரா தாரம் விளரிக்கு ஈத்து
கிளைவழி பட்டனள் ஆங்கே கிளையும் – சிலப்.புகார் 3/76,77
கடகம் தோட்டொடு கையுறை ஈத்து
தன் பதி பெயர்ந்தனனாக நன் கலன் – சிலப்.மது 23/97,98
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/91
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து
பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும் – மணி 18/117,118

மேல்


ஈத்தோய் (1)

சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்
ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே – மணி 21/183,184

மேல்


ஈது (16)

காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – சிலப்.மது 11/140
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – சிலப்.மது 13/54
யாது நீ உற்ற இடர் ஈது என் என – சிலப்.மது 15/64
நிறை உடை பத்தினி பெண்டிர்காள் ஈது ஒன்று – சிலப்.மது 19/4
உற்றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று – சிலப்.மது 19/6
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று – சிலப்.மது 19/8
காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று – சிலப்.மது 19/10
தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று – சிலப்.மது 19/12
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – சிலப்.மது 23/27
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – சிலப்.மது 23/29
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் – மணி 8/56
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி 8/60
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர் – மணி 19/150,151
ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே – மணி 21/184
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி 22/151
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் – மணி 25/117

மேல்


ஈந்த (1)

ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி 30/16

மேல்


ஈந்தார் (1)

மா நகர்க்கு ஈந்தார் மணம் – சிலப்.புகார் 1/44

மேல்


ஈந்து (1)

எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி 28/129,130

மேல்


ஈம (7)

ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி 6/38
ஈம பந்தரும் யாங்கணும் பரந்து – மணி 6/65
எம் அனை காணாய் ஈம சுடலையின் – மணி 6/129
ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் – மணி 6/140
ஈம புறங்காட்டு எய்தினோன்-தன்னை – மணி 6/147
இலரோ இந்த ஈம புறங்காட்டு – மணி 6/165
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி 6/189

மேல்


ஈமத்து (2)

கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் – மணி 21/12
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி – மணி 22/213

மேல்


ஈமம் (2)

எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி – மணி 6/70
ஊரீரேயோ ஒள் அழல் ஈமம்
தாரீரோ என சாற்றினள் கழறி – மணி 16/23,24

மேல்


ஈயாது (2)

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர் பனிக்கும் வெள்ளிடை மன்றமும் – சிலப்.புகார் 5/116,117
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் – மணி 27/48

மேல்


ஈயார் (1)

இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் – மணி 2/44

மேல்


ஈயாள் (1)

முன்னிலை ஈயாள் பின்னிலை தோன்றி – சிலப்.மது 23/16

மேல்


ஈர் (33)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – சிலப்.புகார் 0/51
ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – சிலப்.புகார் 1/24
இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/34
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – சிலப்.புகார் 3/10
ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – சிலப்.புகார் 3/70
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து – சிலப்.புகார் 6/108
இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில் – சிலப்.புகார் 6/146
பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – சிலப்.புகார் 8/31
ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – சிலப்.புகார் 10/262
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – சிலப்.மது 16/56
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – சிலப்.மது 17/143
என்றனன் வெய்யோன் இலங்கு ஈர் வளை தோளி – சிலப்.மது 19/1
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – சிலப்.மது 23/174
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – சிலப்.வஞ்சி 24/51
ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு – சிலப்.வஞ்சி 25/162
நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – சிலப்.வஞ்சி 26/128
கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் – சிலப்.வஞ்சி 26/138
ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு – சிலப்.வஞ்சி 26/146
எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 26/167
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/128
கஞ்சுக முதலவர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/188
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – சிலப்.வஞ்சி 29/167
மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – சிலப்.வஞ்சி 30/10
நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 30/85
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி 6/196
ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி 12/77
ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி 12/77
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி 17/38
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி 17/39
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி 20/25
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 24/108
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி 30/16
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 30/48

மேல்


ஈர்_அறு (1)

ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி 30/16

மேல்


ஈர்_ஆயிரம் (1)

ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி 6/196

மேல்


ஈர்_ஆறு (5)

ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – சிலப்.புகார் 1/24
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – சிலப்.புகார் 3/10
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – சிலப்.வஞ்சி 24/51
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி 17/38
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி 20/25

மேல்


ஈர்_ஆறும் (2)

இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 24/108,109
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 30/48,49

மேல்


ஈர்_எட்டு (2)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/34
ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி 12/77

மேல்


ஈர்_எண்ணூற்றோடு (1)

ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி 12/77

மேல்


ஈர்_ஏழ் (4)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – சிலப்.புகார் 0/51
பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – சிலப்.புகார் 8/31
ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – சிலப்.புகார் 10/262
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – சிலப்.மது 23/174

மேல்


ஈர்_ஐஞ்ஞூற்றுவர் (3)

எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் – சிலப்.வஞ்சி 26/167,168
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு – சிலப்.வஞ்சி 27/128,129
கஞ்சுக முதலவர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்
அரி இல் போந்தை அரும் தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/188,189

மேல்


ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு (1)

ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம் – சிலப்.வஞ்சி 25/162,163

மேல்


ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் (1)

கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும்
சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 26/138,139

மேல்


ஈர்_ஐம்பத்து (1)

நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – சிலப்.வஞ்சி 26/128

மேல்


ஈர்_ஐம்பத்துஇருவரொடு (1)

ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு
மாண் வினையாளரை வகை பெற காட்டி – சிலப்.வஞ்சி 26/146,147

மேல்


ஈர்_ஐம்பதின்மர் (1)

ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – சிலப்.வஞ்சி 29/167

மேல்


ஈர்த்து (1)

விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி – மணி 7/55

மேல்


ஈர்ம் (1)

ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே – சிலப்.புகார் 7/158

மேல்


ஈர்வது (1)

ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/46

மேல்


ஈர (1)

ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக – சிலப்.புகார் 3/68

மேல்


ஈரம் (1)

ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் – மணி 19/86

மேல்


ஈராயிரம் (1)

ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – சிலப்.வஞ்சி 26/134

மேல்


ஈவர் (1)

இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் – மணி 2/44

மேல்


ஈவோர் (1)

உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்த ஈம புறங்காட்டு – மணி 6/164,165

மேல்


ஈற்றில் (1)

பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் – சிலப்.புகார் 3/137

மேல்


ஈற்று (2)

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 6/98
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 7/81

மேல்


ஈறா (1)

தெய்வ கட்டுரை தெளிந்ததை ஈறா
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து – மணி 23/89,90

மேல்


ஈறு (5)

உழை முதல் ஆகவும் உழை ஈறு ஆகவும் – சிலப்.புகார் 8/37
குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் – சிலப்.புகார் 8/38
பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக – மணி 1/55
ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் – மணி 21/144
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி 30/202

மேல்


ஈறு-செய்தோர் (1)

தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர்
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால் – மணி 22/23,24

மேல்


ஈன்ற (11)

ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் – சிலப்.மது 19/55
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம் – சிலப்.வஞ்சி 27/244
சோழன் மகள் ஈன்ற மைந்தன் – சிலப்.வஞ்சி 29/4
அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும் – சிலப்.வஞ்சி 30/49,50
மாதவி ஈன்ற மணிமேகலை யான் – மணி 11/14
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி – மணி 11/114
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி – மணி 13/9
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி – மணி 13/86
மண மனை மறுகில் மாதவி ஈன்ற
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி 15/71,72
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி – மணி 18/25
ஈன்ற குழவியொடு தான் வேறாகி – மணி 23/106

மேல்


ஈன்றனை (1)

மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே – மணி 7/37

மேல்


ஈன்றாள் (1)

ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி – மணி 25/103

மேல்


ஈனா (1)

ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம் – மணி 15/7

மேல்


ஈனோர் (2)

ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.புகார் 0/53
ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.மது 23/176

மேல்


ஈனோர்க்கு (1)

ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது – மணி 28/132

மேல்