பெ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்ட 1
பெட்ப 1
பெடை 1
பெடையை 1
பெண் 8
பெண்கள் 1
பெண்டிர் 18
பெண்டிர்-கொல்லோ 1
பெண்டிர்-தம்மே 1
பெண்டிர்-பால் 1
பெண்டிர்க்கு 2
பெண்டிர்காள் 1
பெண்டிரின் 1
பெண்டிரும் 7
பெண்டிரை 2
பெண்டுடன் 1
பெண்டும் 1
பெண்ணும் 1
பெண்ணை 1
பெண்மை 1
பெண்மையில் 1
பெய் 9
பெய்_வளை 1
பெய்த 3
பெய்தலும் 2
பெய்து 4
பெய்யாது 1
பெய்யும் 2
பெயர் 39
பெயர்-மின் 1
பெயர்க்கும் 1
பெயர்க 1
பெயர்கு 1
பெயர்குவர் 1
பெயர்த்த 1
பெயர்த்ததும் 1
பெயர்த்தமை 1
பெயர்த்தாள் 1
பெயர்த்திட்டு 1
பெயர்த்து 6
பெயர்ந்த 6
பெயர்ந்ததும் 1
பெயர்ந்தன 1
பெயர்ந்தனர் 1
பெயர்ந்தனள் 1
பெயர்ந்தனன் 1
பெயர்ந்தனனாக 1
பெயர்ந்து 7
பெயர்ந்தேன் 2
பெயர்ப்ப 1
பெயர்ப்புழி 1
பெயர்புறத்து 1
பெயர்வது 1
பெயர்வோர் 1
பெயர்வோர்க்கு 1
பெயர்வோள் 1
பெயர்வோற்கு 1
பெயர்வோன் 6
பெயர 3
பெயரன் 1
பெயராது 1
பெயரால் 1
பெயரிய 3
பெயரும் 6
பெயரே 2
பெயரை 1
பெயரொடு 2
பெயல் 4
பெரிது 2
பெரிதும் 1
பெரிதே 1
பெரியவன் 2
பெரியவனை 1
பெரியோய் 2
பெரியோர் 1
பெரியோன் 6
பெரு 69
பெரு_மகன் 1
பெருக்கமும் 3
பெருக்கி 1
பெருக 1
பெருகாது 1
பெருகிய 1
பெருகியது 3
பெருகியல் 1
பெருகுக 1
பெருங்கணி 3
பெருங்கல் 1
பெருங்குடி 4
பெருங்கோப்பெண்டும் 1
பெருஞ்சோற்று 1
பெருஞ்சோறு 3
பெருந்தகை 11
பெருந்துறை 1
பெருந்தேவி 4
பெருநாள் 2
பெருநாள்_இருக்கை 1
பெருநாளால் 1
பெருநீர் 1
பெரும் 174
பெரும்_கிழமையின் 1
பெரும்பாண் 1
பெரும்பிறிது 3
பெருமகள்-தன்னொடும் 1
பெருமகற்கு 1
பெருமகன் 8
பெருமான் 1
பெருமை 2
பெருமை-சால் 2
பெருவழி 2
பெற்ற 17
பெற்றதும் 2
பெற்றதை 1
பெற்றமை 1
பெற்றவர்க்கு 1
பெற்றவன் 1
பெற்றன 1
பெற்றனள் 2
பெற்றனன் 1
பெற்றனை 2
பெற்றால் 1
பெற்றி 8
பெற்றிகள் 1
பெற்றிமை 2
பெற்றிய 2
பெற்றியம் 1
பெற்றியள் 1
பெற்றியின் 6
பெற்றியும் 5
பெற்றியை 3
பெற்று 8
பெற்றென 1
பெற்றேன் 2
பெற்றோன் 1
பெற 12
பெறல் 11
பெறா 4
பெறாது 2
பெறாய் 1
பெறாஅ 2
பெறாஅது 1
பெறின் 1
பெறு 16
பெறு-மின் 1
பெறுக 7
பெறுக-தில் 1
பெறுகேன் 1
பெறுதலின் 1
பெறுதலும் 1
பெறுதி 1
பெறுதியால் 1
பெறுதிர் 1
பெறுநரின் 1
பெறுவதன் 1
பெறுவது 1
பெறுவேன்-தில்ல 1
பெறூஉம் 1

பெட்ட (1)

பெட்ட ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல – மணி 22/70

மேல்


பெட்ப (1)

தேனும் பாலும் கட்டியும் பெட்ப
சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன் – சிலப்.மது 22/25,26

மேல்


பெடை (1)

பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு – மணி 5/125

மேல்


பெடையை (1)

தன் உறு பெடையை தாமரை அடக்க – மணி 5/124

மேல்


பெண் (8)

பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – சிலப்.புகார் 7/68
பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு – சிலப்.மது 13/1
பெண் கொடி மாதர்-தன் தோள் – சிலப்.மது 17/40
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – சிலப்.மது 20/75
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த – சிலப்.மது 21/24
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – சிலப்.மது 23/25
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/60
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி 25/7

மேல்


பெண்கள் (1)

இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும் – சிலப்.வஞ்சி 30/50

மேல்


பெண்டிர் (18)

மூதில் பெண்டிர் ஓதையின் பெயர – சிலப்.புகார் 5/75
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர் மனை நயப்போர் – சிலப்.புகார் 5/129,130
பத்தினி பெண்டிர் இருந்த நாடு என்னும் – சிலப்.மது 15/147
பார்ப்பார் அறவோர் பசு பத்தினி பெண்டிர்
மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு – சிலப்.மது 21/53,54
பத்தினி பெண்டிர் பரவி தொழுவாள் ஓர் – சிலப்.வஞ்சி 24/115
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் – மணி 0/64
பத்தினி பெண்டிர் பரப்பு_நீர் ஞாலத்து – மணி 2/48
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 6/98
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து – மணி 7/58
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 7/81
பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம் – மணி 15/73
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஏற்ற – மணி 17/1
பத்தினி பெண்டிர் அல்லேம் பலர் தம் – மணி 18/15
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி 18/94
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள் – மணி 18/102
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ – மணி 18/141
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும் – மணி 22/22
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் – மணி 22/46

மேல்


பெண்டிர்-கொல்லோ (1)

பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ – மணி 14/47

மேல்


பெண்டிர்-தம்மே (1)

நிறை உடை பெண்டிர்-தம்மே போல – மணி 22/66

மேல்


பெண்டிர்-பால் (1)

பத்தினி பெண்டிர்-பால் சென்று அணுகியும் – மணி 22/21

மேல்


பெண்டிர்க்கு (2)

பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – சிலப்.வஞ்சி 28/208
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி 6/55

மேல்


பெண்டிர்காள் (1)

நிறை உடை பத்தினி பெண்டிர்காள் ஈது ஒன்று – சிலப்.மது 19/4

மேல்


பெண்டிரின் (1)

பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் – மணி 25/179

மேல்


பெண்டிரும் (7)

பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் – சிலப்.மது 14/39
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/51
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/51
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/53
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/53
அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் – மணி 16/50,51
பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு – மணி 16/80

மேல்


பெண்டிரை (2)

பெட்ட ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல – மணி 22/70
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி 22/109

மேல்


பெண்டுடன் (1)

பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி – மணி 16/69

மேல்


பெண்டும் (1)

காவல்_பெண்டும் அடி_தோழியும் – சிலப்.வஞ்சி 29/53

மேல்


பெண்ணும் (1)

பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் – சிலப்.மது 20/52

மேல்


பெண்ணை (1)

பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் – மணி 17/29

மேல்


பெண்மை (1)

ஆண்மை திரிந்த பெண்மை கோலத்து – சிலப்.புகார் 6/56

மேல்


பெண்மையில் (1)

பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என – சிலப்.புகார் 5/223

மேல்


பெய் (9)

காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – சிலப்.மது 17/69
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் – மணி 0/63
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி 3/51
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி 6/92
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி 6/92
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி 22/60
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி 27/115
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி 28/229

மேல்


பெய்_வளை (1)

பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – சிலப்.மது 17/69

மேல்


பெய்த (3)

ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி 11/48
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி 11/117
நீரின் பெய்த மூரி வார் சிலை – மணி 19/53

மேல்


பெய்தலும் (2)

எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும்
அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய – மணி 5/122,123
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி 17/18,19

மேல்


பெய்து (4)

வர்த்தனை நான்கும் மயல் அற பெய்து ஆங்கு – சிலப்.புகார் 3/58
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின் – சிலப்.மது 15/133,134
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – சிலப்.மது 23/196
சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – சிலப்.வஞ்சி 29/187

மேல்


பெய்யாது (1)

மடவரல் ஏவ மழையும் பெய்யாது
நிறை உடை பெண்டிர்-தம்மே போல – மணி 22/65,66

மேல்


பெய்யும் (2)

பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி 22/60
இது மழை பெய்யும் என இயம்பிடுதல் – மணி 27/36

மேல்


பெயர் (39)

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ – சிலப்.புகார் 1/29
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் – சிலப்.புகார் 5/11
வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த – சிலப்.புகார் 5/111
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – சிலப்.புகார் 6/130
மொழி_பெயர்_தேஎத்தர் ஒழியா விளக்கமும் – சிலப்.புகார் 6/143
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – சிலப்.புகார் 10/160
இட்டசித்தி எனும் பெயர் போகி – சிலப்.மது 11/95
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – சிலப்.மது 13/66
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும் – சிலப்.மது 13/138
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – சிலப்.மது 15/37
ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும் – சிலப்.மது 15/213
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – சிலப்.மது 16/74
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என – சிலப்.மது 16/129
பெரும் பெயர் மன்னனின் பெரு நவை பட்டீர் – சிலப்.மது 16/171
படைத்து கோள் பெயர் இடுவாள் – சிலப்.மது 17/53
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர் – சிலப்.மது 20/68
ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் – சிலப்.மது 23/91
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி – சிலப்.மது 23/195
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – சிலப்.வஞ்சி 24/58
குருகு பெயர் குன்றம் கொன்றான் மடவன் – சிலப்.வஞ்சி 24/66
பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – சிலப்.வஞ்சி 28/208
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி 0/30
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி 0/30
நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என – மணி 0/31
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின் – மணி 5/13
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி 9/41
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி 11/15
தீவதிலகை என் பெயர் இது கேள் – மணி 11/29
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி 11/37
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி 18/94
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி 19/134
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி 19/134
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி 22/39
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின் – மணி 24/72
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி 25/225
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் – மணி 26/92
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே – மணி 27/141
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி 28/101
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி 28/153

மேல்


பெயர்-மின் (1)

பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின்
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – சிலப்.வஞ்சி 30/194,195

மேல்


பெயர்க்கும் (1)

வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இ – சிலப்.மது 11/194

மேல்


பெயர்க (1)

வாளும் குடையும் வட திசை பெயர்க என – சிலப்.வஞ்சி 26/33

மேல்


பெயர்கு (1)

மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என – சிலப்.மது 23/183

மேல்


பெயர்குவர் (1)

கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர்
மருந்தின் நம் கண் மயக்குவர் ஆயின் – சிலப்.மது 16/175,176

மேல்


பெயர்த்த (1)

வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் – சிலப்.புகார் 6/11

மேல்


பெயர்த்ததும் (1)

உண்ணாநோன்போடு உயிர் பதி பெயர்த்ததும்
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு – சிலப்.வஞ்சி 27/83,84

மேல்


பெயர்த்தமை (1)

உயிர் பதி பெயர்த்தமை உறுக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/97

மேல்


பெயர்த்தாள் (1)

பாங்கினில் பாடி ஓர் பண்ணும் பெயர்த்தாள் – சிலப்.புகார் 7/206

மேல்


பெயர்த்திட்டு (1)

ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – சிலப்.மது 17/115

மேல்


பெயர்த்து (6)

நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி – சிலப்.மது 12/11
விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த – சிலப்.மது 15/36
கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – சிலப்.வஞ்சி 30/42
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
தண்டா களிப்பின் ஆடும் கூத்து – மணி 6/125,126
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர் – மணி 7/21
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது – மணி 10/68

மேல்


பெயர்ந்த (6)

பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு – சிலப்.மது 13/1
கல்வியின் பெயர்ந்த கள்வன்-தன்னை – சிலப்.மது 16/199
தென் திசை பெயர்ந்த வென்றி தானையொடு – சிலப்.வஞ்சி 27/199
தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி 0/4
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி 25/190
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தட கை வானவன் போல – மணி 25/201,202

மேல்


பெயர்ந்ததும் (1)

கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும்
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – சிலப்.மது 13/62,63

மேல்


பெயர்ந்தன (1)

விரை பரி குதிரையும் புற மதில் பெயர்ந்தன
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – சிலப்.மது 22/118,119

மேல்


பெயர்ந்தனர் (1)

பின்னையும் அல்_இடை பெயர்ந்தனர்
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும் – சிலப்.மது 13/136,137

மேல்


பெயர்ந்தனள் (1)

கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி 2/75

மேல்


பெயர்ந்தனன் (1)

கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – சிலப்.மது 14/218

மேல்


பெயர்ந்தனனாக (1)

தன் பதி பெயர்ந்தனனாக நன் கலன் – சிலப்.மது 23/98

மேல்


பெயர்ந்து (7)

நாளொடு பெயர்ந்து நண்ணார் பெறுக இ – சிலப்.புகார் 5/92
பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள் – சிலப்.மது 11/165
அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து
முதிரா முலை முகத்து எழுந்த தீயின் – சிலப்.வஞ்சி 25/75,76
பாடி இருக்கை நீங்கி பெயர்ந்து
கங்கை பேரியாற்று கன்னரின் பெற்ற – சிலப்.வஞ்சி 26/175,176
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின் – சிலப்.வஞ்சி 29/28
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு – மணி 6/128
தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி – மணி 13/22

மேல்


பெயர்ந்தேன் (2)

என் பதி பெயர்ந்தேன் என் துயர் போற்றி – சிலப்.வஞ்சி 27/86
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன்
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – சிலப்.வஞ்சி 30/108,109

மேல்


பெயர்ப்ப (1)

உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் – மணி 5/6,7

மேல்


பெயர்ப்புழி (1)

உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி 14/95,96

மேல்


பெயர்புறத்து (1)

பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த – சிலப்.புகார் 3/114

மேல்


பெயர்வது (1)

வட திசை மருங்கின் வானவன் பெயர்வது
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் – சிலப்.வஞ்சி 26/150,151

மேல்


பெயர்வோர் (1)

வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும் – மணி 6/69

மேல்


பெயர்வோர்க்கு (1)

பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் – மணி 25/40

மேல்


பெயர்வோள் (1)

பால்மடை கொடுத்து பண்பின் பெயர்வோள்
ஆயர் முது_மகள் மாதரி என்போள் – சிலப்.மது 15/117,118

மேல்


பெயர்வோற்கு (1)

கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு – சிலப்.புகார் 5/98,99

மேல்


பெயர்வோன் (6)

தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் – சிலப்.மது 15/16
பீடிகை தெருவில் பெயர்வோன் ஆங்கண் – சிலப்.மது 16/104
நன் நலம் கொண்டு தன் பதி பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் – சிலப்.மது 23/73,74
பெரு மால் களிற்று பெயர்வோன் போன்று – சிலப்.வஞ்சி 25/16
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி 5/38,39
பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை – மணி 19/16

மேல்


பெயர (3)

மூதில் பெண்டிர் ஓதையின் பெயர
மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும் – சிலப்.புகார் 5/75,76
கரி புற அட்டில் கண்டனள் பெயர
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு – சிலப்.மது 16/32,33
நால் பால் பூதமும் பால்பால் பெயர
கூல மறுகும் கொடி தேர் வீதியும் – சிலப்.மது 22/108,109

மேல்


பெயரன் (1)

பரதன் என்னும் பெயரன் அ கோவலன் – சிலப்.மது 23/154

மேல்


பெயராது (1)

பெரும் துறை மருங்கின் பெயராது ஆங்கண் – சிலப்.மது 13/178

மேல்


பெயரால் (1)

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – சிலப்.புகார் 0/59,60

மேல்


பெயரிய (3)

இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி 0/32
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி 4/39
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி 11/107

மேல்


பெயரும் (6)

இரு_புடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து – சிலப்.புகார் 6/126,127
கரைப்படுத்து ஆங்கு காட்டினள் பெயரும்
அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் – சிலப்.மது 11/127,128
பெரும் கை யானை இன நிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி – சிலப்.மது 14/64,65
வட திசை பெயரும் மா மறையாளன் – சிலப்.மது 15/56
இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ – சிலப்.மது 16/177
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – சிலப்.வஞ்சி 25/184

மேல்


பெயரே (2)

விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே
மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை – சிலப்.மது 17/56,57
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – சிலப்.மது 20/75

மேல்


பெயரை (1)

அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி 29/30,31

மேல்


பெயரொடு (2)

தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற – சிலப்.மது 16/109
கவேர கன்னி பெயரொடு விளங்கிய – மணி 9/52

மேல்


பெயல் (4)

சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – சிலப்.புகார் 10/105
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும் – சிலப்.மது 23/213
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி 14/74
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி 24/172

மேல்


பெரிது (2)

வாழ்க எம் கோ வாழிய பெரிது என – சிலப்.வஞ்சி 27/140
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் – மணி 27/161

மேல்


பெரிதும் (1)

தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – சிலப்.மது 13/182

மேல்


பெரிதே (1)

எங்கணும் போகிய இசையோ பெரிதே
பகல் ஒளி-தன்னினும் பல் உயிர் ஓம்பும் – சிலப்.மது 13/10,11

மேல்


பெரியவன் (2)

சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி – சிலப்.புகார் 10/183
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை – மணி 25/54

மேல்


பெரியவனை (1)

பெரியவனை மாயவனை பேர் உலகம் எல்லாம் – சிலப்.மது 17/148

மேல்


பெரியோய் (2)

பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி – மணி 11/63
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி 25/161

மேல்


பெரியோர் (1)

பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய – சிலப்.புகார் 5/57

மேல்


பெரியோன் (6)

பெரியோன் தருக திரு நுதல் ஆக என – சிலப்.புகார் 2/41
பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/169
பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய – சிலப்.மது 11/72
பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ – மணி 15/22
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு – மணி 21/178
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய் – மணி 26/66

மேல்


பெரு (69)

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த – சிலப்.புகார் 1/31
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே – சிலப்.புகார் 2/76
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும் – சிலப்.புகார் 5/47
இரு பெரு வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 5/59
பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் – சிலப்.புகார் 5/71
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட – சிலப்.புகார் 5/212
வந்து தலைமயங்கிய வான் பெரு மன்றத்து – சிலப்.புகார் 10/20
இடி உடை பெரு மழை எய்தாது ஏக – சிலப்.மது 11/27
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப – சிலப்.மது 11/28
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – சிலப்.மது 11/92
இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும் – சிலப்.மது 13/57
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – சிலப்.மது 13/63
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – சிலப்.மது 14/167
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை – சிலப்.மது 15/160
பெரு விறல் தானம் பலவும் செய்து ஆங்கு – சிலப்.மது 15/181
பெரும் பெயர் மன்னனின் பெரு நவை பட்டீர் – சிலப்.மது 16/171
பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி – சிலப்.மது 22/133
பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி – சிலப்.மது 22/133
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – சிலப்.மது 23/69
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே – சிலப்.வஞ்சி 24/22
பெரு மால் களிற்று பெயர்வோன் போன்று – சிலப்.வஞ்சி 25/16
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை – சிலப்.வஞ்சி 25/22
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன் – சிலப்.வஞ்சி 25/128
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/143
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும் – சிலப்.வஞ்சி 25/188
பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று – சிலப்.வஞ்சி 26/103
வங்க பெரு நிரை செய்க-தாம் என – சிலப்.வஞ்சி 26/165
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – சிலப்.வஞ்சி 26/189
பீடிகை பீலி பெரு நோன்பாளர் – சிலப்.வஞ்சி 26/226
தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை – சிலப்.வஞ்சி 26/249
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – சிலப்.வஞ்சி 27/174
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி – சிலப்.வஞ்சி 27/191
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் – சிலப்.வஞ்சி 28/178
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – சிலப்.வஞ்சி 28/199
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – சிலப்.வஞ்சி 28/200
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/7
பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என – மணி 0/34
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன் – மணி 3/35
விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில் – மணி 3/132
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி 4/53
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி 5/49
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி 5/118
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி 6/21
நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய – மணி 6/48
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி 6/179
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 7/98
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி 8/59
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு – மணி 9/12
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர் – மணி 10/46
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி 10/91
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 11/133
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி 12/59
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி 12/62
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி 12/67
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி 12/80
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் – மணி 12/119
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி 13/67
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே – மணி 14/43
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி 16/19
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர் – மணி 18/61
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி 19/72
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என – மணி 20/105
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி 22/60
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி – மணி 22/83
பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி – மணி 22/102
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி 25/7
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி 25/187
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி 25/237
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப – மணி 28/232

மேல்


பெரு_மகன் (1)

பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – சிலப்.மது 13/63

மேல்


பெருக்கமும் (3)

குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – சிலப்.புகார் 10/255
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – சிலப்.மது 23/211
குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும்
வரியும் குரவையும் விரவிய கொள்கையின் – சிலப்.வஞ்சி 30/210,211

மேல்


பெருக்கி (1)

கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி
பழுது இல் செய்வினை பால் கெழு மாக்களும் – சிலப்.புகார் 5/33,34

மேல்


பெருக (1)

செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – சிலப்.வஞ்சி 27/7,8

மேல்


பெருகாது (1)

பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி – மணி 12/58

மேல்


பெருகிய (1)

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் – மணி 2/64

மேல்


பெருகியது (3)

பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என – மணி 0/34
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ – மணி 11/91
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப – மணி 28/232

மேல்


பெருகியல் (1)

அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் – சிலப்.புகார் 8/40

மேல்


பெருகுக (1)

வானம் வாய்க்க மண் வளம் பெருகுக
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி 19/149,150

மேல்


பெருங்கணி (3)

ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர் – சிலப்.மது 22/8
ஆசான் பெருங்கணி அரும் திறல் அமைச்சர் – சிலப்.வஞ்சி 26/3
அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்பு உடை கம்மியர்-தம்மொடும் சென்று – சிலப்.வஞ்சி 28/222,223

மேல்


பெருங்கல் (1)

வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல்
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் – சிலப்.வஞ்சி 29/172,173

மேல்


பெருங்குடி (4)

பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே – சிலப்.புகார் 2/76
பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் – சிலப்.புகார் 5/41
பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் – சிலப்.மது 15/60
ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி – சிலப்.மது 20/69,70

மேல்


பெருங்கோப்பெண்டும் (1)

பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் – சிலப்.வஞ்சி 25/86

மேல்


பெருஞ்சோற்று (1)

பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/144

மேல்


பெருஞ்சோறு (3)

பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தட கை – சிலப்.மது 23/55
பெரும் படை தலைவர்க்கு பெருஞ்சோறு வகுத்து – சிலப்.வஞ்சி 26/49
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த – சிலப்.வஞ்சி 29/168

மேல்


பெருந்தகை (11)

வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை
ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க – சிலப்.மது 11/15,16
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – சிலப்.மது 23/25
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – சிலப்.வஞ்சி 25/181,182
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/113,114
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க – சிலப்.வஞ்சி 27/147
சிலை தார் அகலத்து செம்பியர் பெருந்தகை
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/95,96
வட திசை வணக்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கட்புலம் புக்க பின் – சிலப்.வஞ்சி 30/1,2
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி 11/89,90
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி 19/129,130
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை
வானம் வாய்க்க மண் வளம் பெருகுக – மணி 19/148,149
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் – மணி 28/103,104

மேல்


பெருந்துறை (1)

கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு – சிலப்.மது 14/80

மேல்


பெருந்தேவி (4)

பாண்டியன் பெருந்தேவி வாழ்க என – சிலப்.மது 20/29
மன்னவன் உரைப்ப மா பெருந்தேவி
காதலன் துன்பம் காணாது கழிந்த – சிலப்.வஞ்சி 25/110,111
இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி – மணி 9/39
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் – மணி 9/42,43

மேல்


பெருநாள் (2)

திரு நிலைபெற்ற பெருநாள்_இருக்கை – சிலப்.மது 23/56
பெருநாள் அமயம் பிறக்கிட கொடுத்து – சிலப்.வஞ்சி 27/44

மேல்


பெருநாள்_இருக்கை (1)

திரு நிலைபெற்ற பெருநாள்_இருக்கை
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – சிலப்.மது 23/56,57

மேல்


பெருநாளால் (1)

இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால்
மண அணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி – சிலப்.புகார் 1/41,42

மேல்


பெருநீர் (1)

பெருநீர் போகும் இரியல் மாக்களொடு – சிலப்.புகார் 6/112

மேல்


பெரும் (174)

பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – சிலப்.புகார் 0/19
மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் – சிலப்.புகார் 0/21
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – சிலப்.புகார் 1/28
இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால் – சிலப்.புகார் 1/41
ஒருங்கு தொக்கு அன்ன உடை பெரும் பண்டம் – சிலப்.புகார் 2/6
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி – சிலப்.புகார் 2/29
உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில் – சிலப்.புகார் 2/44
விருந்து புறந்தருஉம் பெரும் தண் வாழ்க்கையும் – சிலப்.புகார் 2/86
யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – சிலப்.புகார் 2/89
பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை – சிலப்.புகார் 3/6
உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து – சிலப்.புகார் 4/68
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் – சிலப்.புகார் 5/56
தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – சிலப்.புகார் 5/165
உருவிலாளன் ஒரு பெரும் சேனை – சிலப்.புகார் 5/224
விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு – சிலப்.புகார் 5/227
வெள்ளி மால் வரை வியன் பெரும் சேடி – சிலப்.புகார் 6/1
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் – சிலப்.புகார் 6/11
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும் – சிலப்.புகார் 6/144
விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – சிலப்.புகார் 6/159
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/24
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/28
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – சிலப்.புகார் 9/46
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – சிலப்.புகார் 10/35
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து – சிலப்.புகார் 10/82
பெரும் செய் நெல்லின் முகவை பாட்டும் – சிலப்.புகார் 10/137
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – சிலப்.புகார் 10/160
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய் – சிலப்.புகார் 10/170
குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான் – சிலப்.புகார் 10/185
சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின் – சிலப்.புகார் 10/245
விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – சிலப்.மது 11/39
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி – சிலப்.மது 12/52
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – சிலப்.மது 13/66
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – சிலப்.மது 13/66
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும் – சிலப்.மது 13/137
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும் – சிலப்.மது 13/138
பெரும் துறை மருங்கின் பெயராது ஆங்கண் – சிலப்.மது 13/178
பேதைமை கந்தா பெரும் பேது உறுவர் – சிலப்.மது 14/32
பெரும் கை யானை இன நிரை பெயரும் – சிலப்.மது 14/64
உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு – சிலப்.மது 14/118
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – சிலப்.மது 15/2
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – சிலப்.மது 15/15
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – சிலப்.மது 15/28
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது – சிலப்.மது 15/34
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – சிலப்.மது 15/52
உடை பெரும் செல்வர் மனை புகும் அளவும் – சிலப்.மது 15/129
மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி – சிலப்.மது 15/165
பெற்ற செல்வ பெரும் பயன் எல்லாம் – சிலப்.மது 15/184
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – சிலப்.மது 16/74
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – சிலப்.மது 16/75
பேணிய கற்பும் பெரும் துணை ஆக – சிலப்.மது 16/87
பெரும் பெயர் மன்னனின் பெரு நவை பட்டீர் – சிலப்.மது 16/171
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/42
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/24
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர் – சிலப்.மது 20/68
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – சிலப்.மது 22/88
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் – சிலப்.மது 23/22
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து – சிலப்.மது 23/147
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி – சிலப்.மது 23/195
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும் – சிலப்.வஞ்சி 25/47
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி – சிலப்.வஞ்சி 25/74
பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/101
மாதரோ பெரும் திரு உறுக வானகத்து – சிலப்.வஞ்சி 25/112
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினி – சிலப்.வஞ்சி 25/129
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/136
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி – சிலப்.வஞ்சி 25/137
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் – சிலப்.வஞ்சி 26/43
பெரும் படை தலைவர்க்கு பெருஞ்சோறு வகுத்து – சிலப்.வஞ்சி 26/49
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர் – சிலப்.வஞ்சி 26/91
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – சிலப்.வஞ்சி 26/200
வரு பெரும் தானை மற_கள மருங்கின் – சிலப்.வஞ்சி 27/11
மன் பெரும் கோயிலும் மணி மண்டபங்களும் – சிலப்.வஞ்சி 27/17
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன் – சிலப்.வஞ்சி 27/69
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/91
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் – சிலப்.வஞ்சி 27/99
மா பெரும் தானை மன்ன_குமரர் – சிலப்.வஞ்சி 27/180
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை – சிலப்.வஞ்சி 27/233
தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல் – சிலப்.வஞ்சி 28/105
நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே – சிலப்.வஞ்சி 28/122
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி – சிலப்.வஞ்சி 28/143
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர் – சிலப்.வஞ்சி 28/172
வித்திய பெரும் பதம் விளைந்து பதம் மிகுந்து – சிலப்.வஞ்சி 28/189
பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – சிலப்.வஞ்சி 28/208
மண்_அரசர் பெரும் தோன்றல் – சிலப்.வஞ்சி 29/47
எனை பெரும் துன்பம் எய்தி – சிலப்.வஞ்சி 29/52
தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/75
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு – சிலப்.வஞ்சி 30/25
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – சிலப்.வஞ்சி 30/158
பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு – மணி 0/19
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி 0/54
பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி 0/62
நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் – மணி 2/1
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை – மணி 2/55
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி 2/62
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் – மணி 2/65
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி 2/73
ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி 3/60
செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் – மணி 3/165
பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு – மணி 4/38
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி 5/37
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி 5/39
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி 5/75
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி 6/21
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் – மணி 6/52
காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும் – மணி 6/53
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் – மணி 6/83
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர் – மணி 6/97
கழி பெரும் செல்வ கள்ளாட்டு அயர்ந்து – மணி 6/102
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி 6/153
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி 6/170
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி 6/195
மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே – மணி 7/37
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் – மணி 8/57
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 8/61
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி 9/24
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி 9/67
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி 10/19
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி 10/86
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 11/16
பிறவி என்னும் பெரும் கடல் விடூஉம் – மணி 11/24
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி 11/37
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி 11/45
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி – மணி 11/54
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம் – மணி 11/77
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி 11/107
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி 11/110
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி 11/125
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி 11/143
மா பெரும் தானை மன்ன நின்னொடும் – மணி 12/41
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப – மணி 12/49
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி – மணி 12/79
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி 12/115
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி 13/1
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி 14/6
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி 14/35
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி 14/54
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள – மணி 14/70
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி 14/87
பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும் – மணி 15/58
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி 15/74
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி 16/43
பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை – மணி 17/2
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி 17/19
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் – மணி 17/29
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி 17/57
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர் – மணி 17/63
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி – மணி 17/71
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி 18/94
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த – மணி 18/153
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி 19/134
பெரும் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த – மணி 19/160
பெரும் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த – மணி 19/160
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் – மணி 20/106
மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன் – மணி 21/130
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து – மணி 22/11
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி 22/57
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி 22/92
மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து – மணி 22/105
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி 22/136
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி 24/73
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 24/109
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி 25/22
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி 25/56
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி 25/161
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி 25/183
அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும் – மணி 25/224
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி 26/10
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம் – மணி 26/13
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி 26/43
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி 28/58
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி 28/123
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின் – மணி 28/194
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி 28/213
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி 28/229
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 30/49

மேல்


பெரும்_கிழமையின் (1)

யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின்
காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என் – சிலப்.புகார் 2/89,90

மேல்


பெரும்பாண் (1)

அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும் – சிலப்.புகார் 5/37

மேல்


பெரும்பிறிது (3)

அரும் பறல் அறிவும் பெரும்பிறிது ஆக – சிலப்.மது 14/161
பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக – சிலப்.மது 15/54
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் – மணி 23/28

மேல்


பெருமகள்-தன்னொடும் (1)

பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – சிலப்.மது 16/74

மேல்


பெருமகற்கு (1)

பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியை – மணி 25/62

மேல்


பெருமகன் (8)

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த – சிலப்.புகார் 1/31
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் – சிலப்.புகார் 10/47
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை – சிலப்.புகார் 10/162
பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு – சிலப்.வஞ்சி 27/173
பெறுக நின் செவ்வி பெருமகன் வந்தான் – சிலப்.வஞ்சி 27/215
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி 14/71
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் – மணி 25/40
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் – மணி 25/132

மேல்


பெருமான் (1)

அரைசர் பெருமான் அடு போர் செழியன் – சிலப்.மது 22/3

மேல்


பெருமை (2)

கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின் – மணி 26/44
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி 27/253

மேல்


பெருமை-சால் (2)

பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர் – மணி 11/31
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி – மணி 12/58

மேல்


பெருவழி (2)

தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து – சிலப்.புகார் 10/32,33
மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் – சிலப்.மது 11/147,148

மேல்


பெற்ற (17)

தங்குக இவள் என சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய – சிலப்.புகார் 6/23,24
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி – சிலப்.மது 12/27,28
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை – சிலப்.மது 14/130
பெற்ற செல்வ பெரும் பயன் எல்லாம் – சிலப்.மது 15/184
அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும் பேர் உவகையின் இடை குல மடந்தை – சிலப்.மது 16/1,2
தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – சிலப்.மது 16/109,110
சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் – சிலப்.வஞ்சி 26/137,138
கங்கை பேரியாற்று கன்னரின் பெற்ற
வங்க பரப்பின் வட மருங்கு எய்தி – சிலப்.வஞ்சி 26/176,177
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர் – சிலப்.வஞ்சி 28/172
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – சிலப்.வஞ்சி 29/119
மலை_அரையன் பெற்ற மட பாவை-தன்னை – சிலப்.வஞ்சி 29/126
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி-தன்மேல் காதலர் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/122,123
பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு – மணி 0/55
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள் – மணி 11/59
மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான் – மணி 22/180
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி 25/187
பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா – மணி 30/176

மேல்


பெற்றதும் (2)

களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி 12/14,15
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும்
மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து – மணி 18/91,92

மேல்


பெற்றதை (1)

பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/64

மேல்


பெற்றமை (1)

அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு – சிலப்.வஞ்சி 24/101

மேல்


பெற்றவர்க்கு (1)

உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என – சிலப்.மது 23/129

மேல்


பெற்றவன் (1)

வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற – சிலப்.வஞ்சி 30/122

மேல்


பெற்றன (1)

பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – சிலப்.புகார் 8/110

மேல்


பெற்றனள் (2)

ஒரு முறையாக பெற்றனள் அதுவே – சிலப்.புகார் 3/163
வானவர் போற்ற வானகம் பெற்றனள்
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – சிலப்.வஞ்சி 25/60,61

மேல்


பெற்றனன் (1)

விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் – சிலப்.மது 15/183

மேல்


பெற்றனை (2)

பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே – சிலப்.மது 14/59
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – மணி 12/115,116

மேல்


பெற்றால் (1)

வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால்
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – சிலப்.மது 21/26,27

மேல்


பெற்றி (8)

பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – சிலப்.மது 11/153
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும் – சிலப்.மது 15/100
பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி
பெற்றி உடையதே பெற்றி உடையதே – சிலப்.வஞ்சி 24/124,125
பெற்றி உடையதே பெற்றி உடையதே – சிலப்.வஞ்சி 24/125
பெற்றி உடையதே பெற்றி உடையதே – சிலப்.வஞ்சி 24/125
பெற்றி உடையது இ ஊர் – சிலப்.வஞ்சி 24/127
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி – மணி 16/69
மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் – மணி 30/143

மேல்


பெற்றிகள் (1)

பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா – மணி 30/176

மேல்


பெற்றிமை (2)

பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் – மணி 21/161
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி 25/163

மேல்


பெற்றிய (2)

பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் – சிலப்.மது 21/4
பிறர் சொல கருதல் இ பெற்றிய அலவைகள் – மணி 27/77

மேல்


பெற்றியம் (1)

பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் – மணி 26/59

மேல்


பெற்றியள் (1)

பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே – மணி 29/28

மேல்


பெற்றியின் (6)

பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது – சிலப்.புகார் 3/83
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் – மணி 3/25
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன் – மணி 3/35
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி 12/55
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி 21/105
பிறப்பு எனப்படுவது அ கருமம் பெற்றியின்
உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி 30/95,96

மேல்


பெற்றியும் (5)

பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என – சிலப்.புகார் 5/223
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என – மணி 10/2
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை – மணி 10/76
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை – மணி 22/67
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து – மணி 25/79

மேல்


பெற்றியை (3)

பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ – மணி 15/22
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி 21/156
பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய் – மணி 25/26

மேல்


பெற்று (8)

பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று
வலம் செயா கழியும் இலஞ்சி மன்றமும் – சிலப்.புகார் 5/120,121
அமராபதி காத்து அமரனின் பெற்று
தமரில் தந்து தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 6/14,15
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – சிலப்.மது 14/199
ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த – சிலப்.மது 16/46
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி 9/41
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி 22/113
உற்ற வியாகரணம் முகம் பெற்று
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு – மணி 27/102,103
இந்திர விகாரம் என எழில் பெற்று
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் – மணி 28/70,71

மேல்


பெற்றென (1)

வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் – மணி 18/65

மேல்


பெற்றேன் (2)

வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – சிலப்.வஞ்சி 29/98
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப – மணி 15/43

மேல்


பெற்றோன் (1)

காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி – மணி 23/54

மேல்


பெற (12)

வேறுபடு திருவின் வீறு பெற காண – சிலப்.புகார் 2/87
மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – சிலப்.புகார் 5/210
நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி – சிலப்.புகார் 6/79
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 6/162
நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி – சிலப்.புகார் 8/41
சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 10/129
கை வல் மகடூஉ கவின் பெற புனைந்த – சிலப்.மது 16/36
மாண் வினையாளரை வகை பெற காட்டி – சிலப்.வஞ்சி 26/147
பால் பெற வகுத்த பத்தினி கோட்டத்து – சிலப்.வஞ்சி 28/225
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – சிலப்.வஞ்சி 30/83
பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி 3/136
சீர் பெற வித்திய வித்தின் விளைவும் – மணி 28/231

மேல்


பெறல் (11)

அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே – சிலப்.புகார் 2/75
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும் – சிலப்.புகார் 5/37
அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும் – சிலப்.புகார் 5/110
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி – சிலப்.மது 12/52
அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற – சிலப்.மது 16/1
அரும்_பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் – சிலப்.மது 20/67
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி 2/72
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் – மணி 13/79
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி 16/37
அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும் – மணி 16/50
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் – மணி 23/28

மேல்


பெறா (4)

கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு – சிலப்.புகார் 8/91
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் – சிலப்.மது 11/210
செம் வாய் குதலை மெய் பெறா மழலை – மணி 3/137
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி 4/23

மேல்


பெறாது (2)

இறை_மகன் செவ்வி யாங்கணும் பெறாது
திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல – சிலப்.வஞ்சி 25/35,36
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி – மணி 14/76,77

மேல்


பெறாய் (1)

ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி 27/287

மேல்


பெறாஅ (2)

இரு நில மருங்கின் பொருநரை பெறாஅ
செரு வெம் காதலின் திருமாவளவன் – சிலப்.புகார் 5/89,90
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் – மணி 12/98,99

மேல்


பெறாஅது (1)

இணை அணை மேம்பட திருந்து துயில் பெறாஅது
உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து – சிலப்.புகார் 4/67,68

மேல்


பெறின் (1)

ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – சிலப்.மது 21/27

மேல்


பெறு (16)

அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – சிலப்.புகார் 2/49
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது – சிலப்.புகார் 3/83
ஓவிய விதானத்து உரை பெறு நித்திலத்து – சிலப்.புகார் 3/111
நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர் – சிலப்.புகார் 5/49
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை – சிலப்.புகார் 6/36
சந்திர பாணி தகை பெறு கடிப்பு இணை – சிலப்.புகார் 6/104
தகை பெறு தாமரை கையின் ஏந்தி – சிலப்.மது 11/48
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – சிலப்.மது 12/146
கலி கெழு கூடல் பலி பெறு பூத – சிலப்.மது 22/101
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க – சிலப்.மது 23/70
யான் பெறு மகளே என் துணை தோழீ – சிலப்.வஞ்சி 30/102
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி 6/198
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி – மணி 8/45
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப – மணி 18/55
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் – மணி 19/114
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி 28/61

மேல்


பெறு-மின் (1)

அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின்
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி 11/140,141

மேல்


பெறுக (7)

நாளொடு பெயர்ந்து நண்ணார் பெறுக இ – சிலப்.புகார் 5/92
பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன் – சிலப்.புகார் 9/44
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – சிலப்.புகார் 10/244
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/89
பெறுக நின் செவ்வி பெருமகன் வந்தான் – சிலப்.வஞ்சி 27/215
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என – சிலப்.வஞ்சி 27/216
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என – மணி 16/129

மேல்


பெறுக-தில் (1)

பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – சிலப்.வஞ்சி 24/124

மேல்


பெறுகேன் (1)

பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன்
கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – சிலப்.புகார் 9/44,45

மேல்


பெறுதலின் (1)

பிறந்த முற்பிறப்பை எய்த பெறுதலின்
அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும் – மணி 27/279,280

மேல்


பெறுதலும் (1)

பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் – மணி 27/159

மேல்


பெறுதி (1)

பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே – மணி 25/115

மேல்


பெறுதியால் (1)

துன்பம் உழவாய் துயில பெறுதியால்
இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – சிலப்.புகார் 7/148,149

மேல்


பெறுதிர் (1)

பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் – சிலப்.மது 11/123

மேல்


பெறுநரின் (1)

அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு – சிலப்.மது 15/127

மேல்


பெறுவதன் (1)

நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி 25/100

மேல்


பெறுவது (1)

வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை – சிலப்.புகார் 3/165

மேல்


பெறுவேன்-தில்ல (1)

பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி 21/44

மேல்


பெறூஉம் (1)

சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன் – சிலப்.மது 22/26

மேல்