கே – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேசகம்பளன் 1
கேட்க 1
கேட்கப்படல் 1
கேட்கப்படுதலின் 2
கேட்கின் 2
கேட்கும் 2
கேட்குவன் 3
கேட்குவை 2
கேட்குறும் 2
கேட்ட 14
கேட்டது 3
கேட்டதும் 4
கேட்டருள் 2
கேட்டல் 2
கேட்டலை 1
கேட்டனள் 3
கேட்டனன் 6
கேட்டனை 3
கேட்டாயோ 6
கேட்டாளாய் 1
கேட்டி 7
கேட்டிசின் 1
கேட்டியோ 2
கேட்டீ-மின் 2
கேட்டு 78
கேட்டு_அருள் 1
கேட்டும் 3
கேட்டே 5
கேட்டேன் 3
கேட்டைக்க 1
கேட்டோர் 3
கேட்டோன் 1
கேட்ப 14
கேட்பல் 1
கேட்பனே 1
கேட்பின் 2
கேட்புழி 1
கேட்பை 1
கேடு 13
கேடும் 1
கேடுற 1
கேடுறுதலின் 1
கேடுறும் 1
கேண்-மின் 2
கேண்மையின் 1
கேண்மையொடு 1
கேண்மோ 3
கேணியும் 1
கேவண 1
கேழ் 5
கேள் 32
கேள்-மதி 1
கேள்வ 1
கேள்வன் 1
கேள்வனை 1
கேள்வி 12
கேள்வியர் 1
கேள்வியாளரின் 1
கேள்வியின் 1
கேள்வியும் 1
கேள்வியோர் 1
கேளாத 2
கேளாது 1
கேளாமோ 3
கேளாய் 38
கேளார் 3
கேளாள் 1
கேளீர் 1

கேசகம்பளன் (1)

நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி 13/65,66

மேல்


கேட்க (1)

உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி 25/208

மேல்


கேட்கப்படல் (1)

என்னின் கேட்கப்படல் எனும் ஏது – மணி 29/227

மேல்


கேட்கப்படுதலின் (2)

சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
என்னின் கேட்கப்படல் எனும் ஏது – மணி 29/226,227
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
சத்தத்துவம் போல் என சாற்றிடுதல் – மணி 29/272,273

மேல்


கேட்கின் (2)

நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ – சிலப்.புகார் 9/54
தாதையை கேட்கின் தன் குலவாணர் – சிலப்.மது 15/126

மேல்


கேட்கும் (2)

ஒப்ப கேட்கும் உணர்வினன் ஆகி – சிலப்.புகார் 3/60
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி 25/9,10

மேல்


கேட்குவன் (3)

முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே – மணி 20/18
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன்
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா – மணி 22/134,135
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி 28/147,148

மேல்


கேட்குவை (2)

பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி 10/76,77
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி 11/52

மேல்


கேட்குறும் (2)

அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 10/78
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 21/102

மேல்


கேட்ட (14)

ஆய்ச்சியர் குரவையும் தீ திறம் கேட்ட
துன்பமாலையும் நண்பகல் நடுங்கிய – சிலப்.புகார் 0/77,78
ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – சிலப்.புகார் 7/109
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் – சிலப்.மது 11/150,151
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன் – சிலப்.மது 20/86,87
கெழுமியவள் உரைப்ப கேட்ட விழுமத்தான் – சிலப்.மது 21/29
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் – சிலப்.வஞ்சி 25/93,94
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/82
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/84
ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும் – சிலப்.வஞ்சி 30/29
ஆங்கு அது கேட்ட அரசனும் அரசரும் – சிலப்.வஞ்சி 30/165
தெரிவுற கேட்ட திரு தகு நல்லீர் – சிலப்.வஞ்சி 30/185
அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து – மணி 16/78
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் – மணி 24/35
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி 24/144

மேல்


கேட்டது (3)

கேட்டது மொழியேன் கேள்வியாளரின் – மணி 18/134
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 24/114
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 30/54

மேல்


கேட்டதும் (4)

மணி நா ஓசை கேட்டதும் இலனே – சிலப்.மது 23/32
சமய கணக்கர் தம் திறம் கேட்டதும்
ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி 0/88,89
இறவாது இ பதி புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி 28/82,83
தக்க சமயிகள் தம் திரம் கேட்டதும்
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் – மணி 28/86,87

மேல்


கேட்டருள் (2)

இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை – சிலப்.வஞ்சி 27/66
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள்
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி 5/31,32

மேல்


கேட்டல் (2)

இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் – சிலப்.வஞ்சி 28/128
யானே கேட்டல் இயல்பு என சென்று – மணி 18/125

மேல்


கேட்டலை (1)

நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி – மணி 28/89

மேல்


கேட்டனள் (3)

குரல்வாய் இளிவாய் கேட்டனள் அன்றியும் – சிலப்.புகார் 8/35
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி – சிலப்.புகார் 8/99
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி 21/9

மேல்


கேட்டனன் (6)

கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – சிலப்.புகார் 0/54
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – சிலப்.புகார் 0/89,90
மற வேல் மன்னவன் கேட்டனன் மயங்கி – சிலப்.மது 23/110
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி 20/13
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன்
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து – மணி 22/162,163
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன்
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது – மணி 28/150,151

மேல்


கேட்டனை (3)

கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு – சிலப்.மது 15/198
கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி 18/142
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின் – மணி 22/119

மேல்


கேட்டாயோ (6)

அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/85
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/86
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ அன்னை – சிலப்.வஞ்சி 29/90
மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ அன்னை – சிலப்.வஞ்சி 29/91
மாதவி-தன் துறவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/95
மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/96

மேல்


கேட்டாளாய் (1)

தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர் – சிலப்.மது 21/31

மேல்


கேட்டி (7)

வினை விளைவு என்ன விறலோய் கேட்டி
அதிரா சிறப்பின் மதுரை மூதூர் – சிலப்.புகார் 0/38,39
பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – சிலப்.மது 23/24,25
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – சிலப்.மது 23/27
இன்னும் கேட்டி நல் நுதல் மடந்தையர் – சிலப்.மது 23/35
இழுக்கம் தாராது இதுவும் கேட்டி
உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி – சிலப்.மது 23/41,42
இன்னும் கேட்டி நன் வாய் ஆகுதல் – சிலப்.மது 23/54
வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது – மணி 4/112,113

மேல்


கேட்டிசின் (1)

கேட்டிசின் வாழி நங்கை என் குறை என – சிலப்.மது 23/17

மேல்


கேட்டியோ (2)

என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி 21/129
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை – மணி 21/180

மேல்


கேட்டீ-மின் (2)

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க – சிலப்.மது 18/48,49
வான கடவுளரும் மாதவரும் கேட்டீ-மின்
யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – சிலப்.மது 21/40,41

மேல்


கேட்டு (78)

என கேட்டு
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – சிலப்.புகார் 7/223,224
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு – சிலப்.புகார் 9/49,50
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த – சிலப்.புகார் 10/57
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – சிலப்.புகார் 10/140
சாரணர் வாய்மொழி கேட்டு தவ முதல் – சிலப்.புகார் 10/192
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – சிலப்.புகார் 10/208
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே – சிலப்.புகார் 10/222
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – சிலப்.புகார் 10/229
குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு
நறு மலர் கோதையும் நம்பியும் நடுங்கி – சிலப்.புகார் 10/235,236
தீத்திறம் புரிந்தோன் செப்ப கேட்டு
மா மறை முதல்வ மதுரை செம் நெறி – சிலப்.மது 11/57,58
அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து – சிலப்.மது 13/35
வசந்தமாலை-வாய் மாதவி கேட்டு
பசந்த மேனியள் படர் நோய் உற்று – சிலப்.மது 13/67,68
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – சிலப்.மது 13/71,72
ஆசான் திறத்தின் அமைவர கேட்டு
பாடல்_பாணி அளைஇ அவரொடு – சிலப்.மது 13/112,113
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு – சிலப்.மது 15/27
குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள் – சிலப்.மது 18/6,7
என கேட்டு
பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர் – சிலப்.மது 18/29,30
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த – சிலப்.மது 23/62,63
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – சிலப்.வஞ்சி 24/90
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்து போன – சிலப்.வஞ்சி 24/101,102
கேட்டு வாழு-மின் கேளீர் ஆயின் – சிலப்.வஞ்சி 25/189
மீளா வென்றி வேந்தன் கேட்டு
வாளும் குடையும் வட திசை பெயர்க என – சிலப்.வஞ்சி 26/32,33
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி – சிலப்.வஞ்சி 27/89,90
மற்று அது கேட்டு மாதவி மடந்தை – சிலப்.வஞ்சி 27/103
போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள் – சிலப்.வஞ்சி 27/126
இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள் – சிலப்.வஞ்சி 27/142
மா மறையோன் வாய் கேட்டு
மாசாத்துவான் தான் துறப்பவும் – சிலப்.வஞ்சி 29/49,50
முதிரா முலை பூசல் கேட்டு ஆங்கு – சிலப்.வஞ்சி 29/58
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/88
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/93
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு
வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற – மணி 0/6,7
பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு – மணி 0/19
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு
பவ திறம் அறுக என பாவை நோற்றதும் – மணி 0/93,94
காதலன் உற்ற கடும் துயர் கேட்டு
போதல்-செய்யா உயிரொடு நின்றே – மணி 2/38,39
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி 2/72
சுதமதி கேட்டு துயரொடும் கூறும் – மணி 3/17
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு
தணியா துன்பம் தலைத்தலை எய்தும் – மணி 3/18,19
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி 4/61
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி 4/86
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி 7/87
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி 7/109,110
சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி 9/65
மணிமேகலை உரை மாதவன் கேட்டு
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி 12/31,32
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி 12/47
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி 13/11
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு – மணி 13/17,18
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
ஊரீரேயோ ஒள் அழல் ஈமம் – மணி 16/22,23
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி 18/1
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் – மணி 20/17
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி 21/74,75
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு
காதலி நின்னையும் காவல் நீக்குவள் – மணி 21/80,81
தீவதிலகையின் தன் திறம் கேட்டு
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி 21/88,89
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு – மணி 21/107
சா துயர் கேட்டு சக்கரவாளத்து – மணி 22/5
பிசியும் நொடியும் பிறர் வாய் கேட்டு
விசி பிணி முழவின் விழா கோள் விரும்பி – மணி 22/62,63
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என – மணி 22/76
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி 22/123,124
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் – மணி 22/156,157
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி – மணி 23/116
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி – மணி 24/4
மணிமேகலை திறம் மாதவி கேட்டு
துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல் – மணி 24/83,84
ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி 25/6,7
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி – மணி 25/39
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி 25/52
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி – மணி 25/77
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி 25/83
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த – மணி 25/119,120
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
துறவி உள்ளம் தோன்றி தொடரும் – மணி 26/57,58
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி 26/64,65
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி 27/18
வேதியன் உரையின் விதியும் கேட்டு
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற – மணி 27/105,106
செயிர் அற செப்பிய திறமும் கேட்டு
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி 27/240,241
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி 27/277,278
துன்புற விளிந்தமை கேட்டு சுகதன் – மணி 28/95
தாங்கா நல் அறம் தானும் கேட்டு
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி – மணி 28/126,127
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி 28/136
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று – மணி 28/144
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 30/263

மேல்


கேட்டு_அருள் (1)

போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள்
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் – சிலப்.வஞ்சி 27/126,127

மேல்


கேட்டும் (3)

கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில் – மணி 18/97
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின் – மணி 22/119
கேட்டும் அறிதியோ வாள் தட கண்ணி – மணி 23/119

மேல்


கேட்டே (5)

கோசிக மாணி கூற கேட்டே
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – சிலப்.மது 13/53,54
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே
பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு – சிலப்.வஞ்சி 27/172,173
எங்கு வாழ் தேவரும் உரைப்ப கேட்டே
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி – மணி 6/187,188
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி 21/149
நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி 29/42,43

மேல்


கேட்டேன் (3)

வந்தேன் கேட்டேன் மனையின் காணேன் – சிலப்.வஞ்சி 30/110
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் – மணி 4/82
வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும் – மணி 16/79

மேல்


கேட்டைக்க (1)

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – சிலப்.மது 18/49,50

மேல்


கேட்டோர் (3)

என் வாய் கேட்டோர் இறந்தோர் உண்மையின் – சிலப்.வஞ்சி 27/109
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர்
இன்னா பிறவி இகந்தோர் ஆதலின் – மணி 12/99,100
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது – மணி 25/47

மேல்


கேட்டோன் (1)

கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன்
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி 27/31,32

மேல்


கேட்ப (14)

ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப
கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி – சிலப்.புகார் 3/51,52
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.புகார் 6/41,42
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின் – சிலப்.மது 11/33
ஏவல் கேட்ப பார் அரசு ஆண்ட – சிலப்.மது 17/4
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப
கலை அமர் செல்வி கதவம் திறந்தது – சிலப்.மது 23/124,125
முன்னிய திசையின் முறை மொழி கேட்ப
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம் – சிலப்.வஞ்சி 26/6,7
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – சிலப்.வஞ்சி 28/41,42
இளங்கோ வேந்தன் அருளி கேட்ப
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி 0/95,96
முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி – மணி 10/6,7
அலை கோல் அதனால் அறைந்தனர் கேட்ப
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை – மணி 13/45,46
என் உற்றனையோ என்று யான் கேட்ப
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் – மணி 14/97,98
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி 18/127,128
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி 22/166,167
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி 24/41,42

மேல்


கேட்பல் (1)

தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – சிலப்.மது 19/71

மேல்


கேட்பனே (1)

தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று – சிலப்.மது 19/12

மேல்


கேட்பின் (2)

கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை – சிலப்.மது 16/189
அறம் எனப்படுவது யாது என கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி 25/228,229

மேல்


கேட்புழி (1)

மண்ணரசர் திறை கேட்புழி
அலம்வந்த மதி முகத்தில் – சிலப்.வஞ்சி 29/38,39

மேல்


கேட்பை (1)

மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி 25/212

மேல்


கேடு (13)

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற – சிலப்.புகார் 0/16
பத்தினி ஆகலின் பாண்டியன் கேடு உற – சிலப்.புகார் 0/33
வார நிலத்தை கேடு இன்று வளர்த்து ஆங்கு – சிலப்.புகார் 3/67
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு – சிலப்.மது 21/3
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் – சிலப்.மது 21/3,4
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – சிலப்.வஞ்சி 24/5
மதுரை மூதூர் மா நகர் கேடு உற – சிலப்.வஞ்சி 28/218
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் – மணி 9/22
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி 9/32
வெம் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி – மணி 12/16
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி 28/94
முன்னிய வங்கம் முங்கி கேடு உற – மணி 29/16
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் – மணி 30/239

மேல்


கேடும் (1)

தோற்றமும் நிலையும் கேடும் என்னும் – மணி 27/181

மேல்


கேடுற (1)

நாவாய் கேடுற நல் மரம் பற்றி – மணி 16/17

மேல்


கேடுறுதலின் (1)

கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி – மணி 16/8,9

மேல்


கேடுறும் (1)

உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் – சிலப்.மது 23/136

மேல்


கேண்-மின் (2)

நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின்
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து – மணி 13/50,51
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின்
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி 24/142,143

மேல்


கேண்மையின் (1)

கலந்த கேண்மையின் கனக விசயர் – சிலப்.வஞ்சி 26/186

மேல்


கேண்மையொடு (1)

மறுப்பு_அரும் கேண்மையொடு அற பரிசாரமும் – சிலப்.புகார் 2/85

மேல்


கேண்மோ (3)

ஏதம் தருவன யாங்கும் பல கேண்மோ
வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு – சிலப்.புகார் 10/65,66
எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி 3/93,94
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர் தோன்றிய – மணி 13/93,94

மேல்


கேணியும் (1)

பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும்
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும் – மணி 19/104,105

மேல்


கேவண (1)

பத்தி கேவண பசும் பொன் குடை சூல் – சிலப்.மது 16/118

மேல்


கேழ் (5)

வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – சிலப்.புகார் 4/37
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – சிலப்.புகார் 6/96
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – சிலப்.புகார் 6/96
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி – சிலப்.புகார் 9/72
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும் – சிலப்.மது 14/183

மேல்


கேள் (32)

சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – சிலப்.புகார் 9/73
மாதரி கேள் இம் மடந்தை-தன் கணவன் – சிலப்.மது 15/125
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – சிலப்.மது 23/29
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – சிலப்.மது 23/132
பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ – சிலப்.மது 23/170
நின்றேன் உரைத்தது கேள் வாழி தோழி – சிலப்.வஞ்சி 24/93
கேள் இது மன்னா கெடுக நின் தீயது – சிலப்.வஞ்சி 30/73
அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி 0/20
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி 6/36
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி 10/36
தீவதிலகை என் பெயர் இது கேள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி 11/29,30
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள்
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி 11/36,37
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் – மணி 12/20
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி 12/28
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும் – மணி 13/62
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி 14/9
பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ – மணி 15/22
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி 15/39,40
ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர் – மணி 16/1
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி 16/37
செவ்வனம் உரை என சினவாது இது கேள்
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி 16/95,96
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி – மணி 17/15
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி 19/130
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள்
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை – மணி 20/122,123
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி 21/45
மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என – மணி 21/186
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி 22/58
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள்
தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி 24/61,62
இறந்தார் என்கை இயல்பே இது கேள்
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி 24/104,105
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி 25/229
தையல் கேள் நின் தாதையும் தாயும் – மணி 28/93
நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ – மணி 29/46

மேல்


கேள்-மதி (1)

எம் கோ வாழி என் சொல் கேள்-மதி
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி 25/99,100

மேல்


கேள்வ (1)

கயல் நெடும் கண்ணி காதல் கேள்வ
வயல் உழை படர்குவம் எனினே ஆங்கு – சிலப்.புகார் 10/76,77

மேல்


கேள்வன் (1)

கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் மண்ணில் – சிலப்.மது 16/219

மேல்


கேள்வனை (1)

செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை
எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் – சிலப்.மது 18/32,33

மேல்


கேள்வி (12)

முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே – சிலப்.புகார் 1/19
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் – சிலப்.புகார் 3/35
நீடி கிடந்த கேள்வி கிடக்கையின் – சிலப்.புகார் 3/89
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி
துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும் – சிலப்.புகார் 9/29,30
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி
அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து – சிலப்.மது 13/34,35
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே – சிலப்.வஞ்சி 28/111,112
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும் – சிலப்.வஞ்சி 28/180
கேள்வி முடித்த வேள்வி மாக்களை – சிலப்.வஞ்சி 28/192
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி
அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து – மணி 2/60,61
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி
அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை – மணி 10/57,58
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் – மணி 21/93
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி 25/83

மேல்


கேள்வியர் (1)

மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த – சிலப்.புகார் 10/56,57

மேல்


கேள்வியாளரின் (1)

கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி 18/134,135

மேல்


கேள்வியின் (1)

ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின்
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி – சிலப்.புகார் 3/70,71

மேல்


கேள்வியும் (1)

ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து – சிலப்.வஞ்சி 26/26

மேல்


கேள்வியோர் (1)

கவரா கேள்வியோர் கடவார் ஆகலின் – மணி 1/10

மேல்


கேளாத (2)

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/146
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/147

மேல்


கேளாது (1)

தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல் – சிலப்.மது 19/13

மேல்


கேளாமோ (3)

கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/84
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/87
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/90

மேல்


கேளாய் (38)

மிக பேர் இன்பம் தரும் அது கேளாய்
காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – சிலப்.மது 15/150,151
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – சிலப்.மது 23/25
திண் திறல் வேந்தே செப்ப கேளாய்
தீ_வினை சிலம்பு காரணமாக – சிலப்.வஞ்சி 25/68,69
வஞ்சி தோன்றிய வானவ கேளாய்
மலயத்து ஏகுதும் வான் பேர் இமய – சிலப்.வஞ்சி 26/99,100
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய்
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி 2/16,17
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய்
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி 2/58,59
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய்
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி 3/26,27
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் – மணி 3/69,70
வீரை ஆகிய சுதமதி கேளாய்
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி 7/105,106
இலக்குமி கேளாய் இராகுலன்-தன்னொடு – மணி 10/20
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி 10/50
சிரந்த கொள்கை சே_இழை கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம் – மணி 10/89,90
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய்
போய பிறவியில் பூமி அம் கிழவன் – மணி 11/10,11
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய்
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி 11/45,46
நறு மலர் கோதாய் நல்கினை கேளாய்
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி 12/56,57
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய்
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் – மணி 13/2,3
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி 14/2,3
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே – மணி 15/1
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய்
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி – மணி 16/3,4
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய்
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி 16/63,64
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் – மணி 16/85,86
இன்னும் கேளாய் இமையோர் பாவாய் – மணி 18/159
வானம் போ_வழி வந்தது கேளாய்
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த – மணி 20/115,116
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி 21/72
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் – மணி 21/118,119
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்
மாந்தர் அறிவது வானவர் அறியார் – மணி 21/133,134
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி 21/146
இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த – மணி 22/80
செற்ற கள்வன் செய்தது கேளாய்
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 23/81,82
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய்
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி 23/103,104
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் – மணி 24/53,54
தேவி கேளாய் செய் தவ யாக்கையின் – மணி 24/101
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காம தீ விழைவு – மணி 24/124,125
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் – மணி 25/177,178
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை – மணி 28/102,103
இன்னும் கேளாய் நல் நெறி மாதே – மணி 28/137
அன்னதை அன்றியும் அணி_இழை கேளாய்
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி 28/155,156
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காம தீ விழைவு – மணி 30/65,66

மேல்


கேளார் (3)

இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வள நாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் – சிலப்.வஞ்சி 27/120,121
காணார் கேளார் கால் முடப்பட்டோர் – மணி 13/111
காணார் கேளார் கால் முடம் ஆனோர் – மணி 28/222

மேல்


கேளாள் (1)

தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்
கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 25/82,83

மேல்


கேளீர் (1)

கேட்டு வாழு-மின் கேளீர் ஆயின் – சிலப்.வஞ்சி 25/189

மேல்