நா – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 34
நா_மகளும் 1
நா_மிசை_பாவாய் 1
நாக 7
நாகத்து 1
நாகநாடு 1
நாகபுரம் 1
நாகம் 7
நாகமும் 2
நாகர் 2
நாகனும் 1
நாகு 1
நாஞ்சில் 1
நாஞ்சிலும் 1
நாட்டத்து 3
நாட்டப்படுவது 1
நாட்டாள்-கொல் 2
நாட்டிய 4
நாட்டு 38
நாட்டுக்கு 2
நாட்டுக 1
நாட்டுதும் 2
நாடக 10
நாடக_மகளிர்க்கு 1
நாடக_மடந்தையர் 1
நாடகங்களில் 1
நாடகம் 4
நாடவர் 1
நாடன் 4
நாடனை 1
நாடாது 1
நாடி 2
நாடியின் 1
நாடு 40
நாடு-அதனுள் 1
நாடு-அதனொடு 1
நாடுகாண் 1
நாடுகேன் 1
நாடுடன் 1
நாடும் 2
நாண் 9
நாணமும் 2
நாணாது 1
நாணாள் 1
நாணி 1
நாணின் 1
நாணினை 1
நாணு 3
நாத்தூண் 1
நாதன் 6
நாப்பண் 3
நாம் 6
நாம 6
நாமம் 5
நாமாக 1
நாய் 4
நாயகன் 1
நாரணன் 1
நாரதன் 1
நாரதனார் 2
நாராச 1
நாராயணா 1
நாரையும் 1
நால் 36
நால்_நால் 1
நால்_ஏழ் 1
நாலும் 1
நாவல் 11
நாவல்_அம்_தண்_பொழில் 1
நாவலில் 1
நாவலொடு 1
நாவாய் 3
நாவால் 1
நாவான் 1
நாவி 1
நாவிடை 1
நாவியின் 2
நாவில் 4
நாவிற்கு 1
நாவின் 4
நாவினர் 1
நாவினள் 1
நாவினும் 1
நாவு 1
நாவு_இடை 1
நாவும் 2
நாவே 2
நாவை 1
நாவொடு 3
நாவோய் 1
நாழிகை 1
நாள் 116
நாள்-தொட்டு 1
நாள்-தொட்டும் 3
நாள்-தொறும் 1
நாள்_மகிழ்_இருக்கை 1
நாள்_அகத்து 1
நாளகத்து 1
நாளங்காடியில் 2
நாளால் 2
நாளிடை 1
நாளில் 6
நாளினும் 2
நாளும் 2
நாளை 2
நாளொடு 1
நாற்பது 1
நாற்ற 1
நாற்றம் 2
நாற்றம்மே 1
நாற்றமும் 1
நாற்றமொடு 1
நாற்றனும் 1
நாற்றி 1
நாற்று-மின் 1
நாறு 15
நாறும் 1
நான் 11
நான்காம் 1
நான்கால் 1
நான்கின் 2
நான்கினும் 1
நான்கு 9
நான்கும் 8
நான்மறை 9
நான்மறையாள 2
நான்மறையாளன் 1
நான்மாடக்கூடல் 1
நான 1
நானிலம் 1
நானூறு 1

நா (34)

நா தொலைவு இல்லா நல் நூல் புலவனும் – சிலப்.புகார் 3/44
நாமம் அல்லது நவிலாது என் நா
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது – சிலப்.புகார் 10/197,198
புலவர் செம் நா பொருந்திய நிவப்பின் – சிலப்.மது 13/130
நா கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும் – சிலப்.மது 14/29
நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் – சிலப்.மது 15/20
நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி – சிலப்.மது 15/140
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே – சிலப்.மது 17/156
நாராயணா என்னா நா என்ன நாவே – சிலப்.மது 17/157
வாயில் கடை மணி நடு நா நடுங்க – சிலப்.மது 20/65
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – சிலப்.மது 22/158
மறை நா ஓசை அல்லது யாவதும் – சிலப்.மது 23/31
மணி நா ஓசை கேட்டதும் இலனே – சிலப்.மது 23/32
நா வலம் கொண்டு நண்ணார் ஓட்டி – சிலப்.மது 23/71
தளர் நா ஆயினும் மறை விளி வழா அது – சிலப்.மது 23/93
மறையோன் மறை நா உழுது வான் பொருள் – சிலப்.வஞ்சி 28/187
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – சிலப்.வஞ்சி 29/115
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி 5/79
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி 5/105
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி 5/108
கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி 7/61
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி 10/14
நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு – மணி 10/34
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி 11/81
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் – மணி 13/26
நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி 14/18
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என – மணி 19/4
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி 21/140
நா உடை பாவை நங்கையை எடுத்தலும் – மணி 22/94
நா உடை பாவையை நலம் பல ஏத்தி – மணி 22/104
நா புடைபெயராது நாணு தகவுடைத்தே – மணி 23/16
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி – மணி 23/52
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து – மணி 24/99
நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர் – மணி 25/51
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி 25/151

மேல்


நா_மகளும் (1)

மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – சிலப்.மது 22/158

மேல்


நா_மிசை_பாவாய் (1)

நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி – மணி 14/18,19

மேல்


நாக (7)

நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு – சிலப்.புகார் 1/21
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு – சிலப்.புகார் 1/21
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி 8/54
நாக நல் நாட்டு நானூறு யோசனை – மணி 9/21
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி 9/58
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் – மணி 24/54
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் – மணி 25/178

மேல்


நாகத்து (1)

அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் – சிலப்.புகார் 5/124

மேல்


நாகநாடு (1)

வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் – மணி 29/3

மேல்


நாகபுரம் (1)

நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் – மணி 24/169

மேல்


நாகம் (7)

நாகம் நாறு நரந்தை நிரந்தன – சிலப்.மது 12/75
அரு மணி இழந்த நாகம் போன்றதும் – சிலப்.மது 13/58
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – சிலப்.வஞ்சி 25/18
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி 7/131
வேக வெம் தீ நாகம் கிடந்த – மணி 20/98
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி 23/69
நல் மணி இழந்த நாகம் போன்று – மணி 25/195

மேல்


நாகமும் (2)

மரவமும் நாகமும் திலகமும் மருதமும் – சிலப்.மது 13/152
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் – மணி 3/162

மேல்


நாகர் (2)

நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி 16/15
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி 16/39

மேல்


நாகனும் (1)

என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து – மணி 16/106,107

மேல்


நாகு (1)

நாகு இள முத்தின் நகை நலம் காட்டி – சிலப்.புகார் 8/81

மேல்


நாஞ்சில் (1)

நாஞ்சில் அம் படையும் வாய்ந்து உறை துலா முன் – சிலப்.மது 22/80

மேல்


நாஞ்சிலும் (1)

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் – சிலப்.மது 22/66

மேல்


நாட்டத்து (3)

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து
பவள வாய்ச்சி தவள வாள் நகைச்சி – சிலப்.மது 12/55,56
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் – சிலப்.மது 14/7
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா – மணி 1/54

மேல்


நாட்டப்படுவது (1)

பற்றி நாட்டப்படுவது அதில் தன்மி – மணி 29/119

மேல்


நாட்டாள்-கொல் (2)

எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – சிலப்.மது 22/143
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – சிலப்.வஞ்சி 25/61

மேல்


நாட்டிய (4)

நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – சிலப்.புகார் 3/40
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – சிலப்.புகார் 3/158
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண் வகையால் இசை எழீஇப் – சிலப்.புகார் 7/7,8
நாட்டிய இப்படி தீய சாதனத்தால் – மணி 29/469

மேல்


நாட்டு (38)

மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு
கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் – சிலப்.புகார் 5/99,100
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் – சிலப்.புகார் 5/101
தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/177
புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/181
துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/185
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு
மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் – சிலப்.புகார் 8/2,3
ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – சிலப்.புகார் 10/42
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – சிலப்.புகார் 10/58
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – சிலப்.புகார் 10/254,255
தென்னவன் நாட்டு சிறப்பும் செய்கையும் – சிலப்.மது 11/54
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு
கட்சியும் கரந்தையும் பாழ்பட – சிலப்.மது 12/165,166
என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டு
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – சிலப்.மது 14/121,122
மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள் – சிலப்.மது 15/178
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து – சிலப்.மது 22/144
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு
வடி வேல் தட கை வசுவும் குமரனும் – சிலப்.மது 23/138,139
ஒடியா இன்பத்து அவருடை நாட்டு
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – சிலப்.மது 23/210,211
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் – சிலப்.வஞ்சி 25/62
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள் – சிலப்.வஞ்சி 25/89
நின் நாட்டு அக-வயின் அடைந்தனள் நங்கை என்று – சிலப்.வஞ்சி 25/90
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – சிலப்.வஞ்சி 25/171
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு – சிலப்.வஞ்சி 27/160
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 27/178
ஆரிய நாட்டு அரசு ஓட்டி – சிலப்.வஞ்சி 29/25
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – சிலப்.வஞ்சி 30/100
பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட – சிலப்.வஞ்சி 30/148,149
எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின் – சிலப்.வஞ்சி 30/161
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு
குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் – சிலப்.வஞ்சி 30/209,210
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு
பூருவ தேயம் பொறை கெட வாழும் – மணி 9/12,13
நாக நல் நாட்டு நானூறு யோசனை – மணி 9/21
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி 9/58
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி 10/52
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி 14/74
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி 14/78
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு
காருக மடந்தை கணவனும் கைவிட – மணி 23/104,105
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி 25/232
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி 25/232
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு
தாய மன்னவர் வசுவும் குமரனும் – மணி 26/15,16
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி 28/160

மேல்


நாட்டுக்கு (2)

யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே – மணி 14/42,43
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி 26/42,43

மேல்


நாட்டுக (1)

நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் – மணி 29/117

மேல்


நாட்டுதும் (2)

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – சிலப்.புகார் 0/60
நாம நல் உரை நாட்டுதும் என்று – சிலப்.மது 15/26

மேல்


நாடக (10)

நாடகம் ஏத்தும் நாடக கணிகையொடு – சிலப்.புகார் 0/15
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து ஆங்கு – சிலப்.மது 22/142
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் – சிலப்.வஞ்சி 26/68
நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – சிலப்.வஞ்சி 26/128
நாடக மகளிரும் நல தகு மாக்களும் – சிலப்.வஞ்சி 26/141
நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த – மணி 2/30
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி 4/51
நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி 19/80
நகுதல் அல்லது நாடக கணிகையர் – மணி 24/23
நல் மனம் பிறந்த நாடக கணிகையை – மணி 24/75

மேல்


நாடக_மகளிர்க்கு (1)

நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த – மணி 2/30

மேல்


நாடக_மடந்தையர் (1)

நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி 4/51

மேல்


நாடகங்களில் (1)

வால சரிதை நாடகங்களில்
வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – சிலப்.மது 17/29,30

மேல்


நாடகம் (4)

நாடகம் ஏத்தும் நாடக கணிகையொடு – சிலப்.புகார் 0/15
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி – சிலப்.புகார் 6/21
நாடகம் விரும்ப நல் நலம் கவினி – மணி 18/58
நாடகம் கண்டு பாடல் பான்மையின் – மணி 25/82

மேல்


நாடவர் (1)

நாடவர் காண நல் அரங்கு ஏறி – மணி 18/103

மேல்


நாடன் (4)

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – சிலப்.புகார் 1/5
நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன் – சிலப்.வஞ்சி 24/71
மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன் – சிலப்.வஞ்சி 24/91
நாடன் ஆவோன் நளி நீர் பரப்பின் – மணி 29/24

மேல்


நாடனை (1)

காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – சிலப்.வஞ்சி 29/131

மேல்


நாடாது (1)

நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என – மணி 19/4

மேல்


நாடி (2)

மை அறு சிறப்பின் வான நாடி
ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – சிலப்.மது 11/215,216
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி 21/122,123

மேல்


நாடியின் (1)

விதி மாண் நாடியின் வட்டம் குயின்று – மணி 8/47

மேல்


நாடு (40)

வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – சிலப்.புகார் 7/123
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு – சிலப்.புகார் 10/53
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என – சிலப்.மது 13/9
பத்தினி பெண்டிர் இருந்த நாடு என்னும் – சிலப்.மது 15/147
தென் தமிழ் நாடு ஒருங்கு காண – சிலப்.மது 23/217
அ திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இ – சிலப்.வஞ்சி 25/113
மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட – சிலப்.வஞ்சி 26/82
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த – சிலப்.வஞ்சி 26/174
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/178
குடவர் கோவே நின் நாடு புகுந்து – சிலப்.வஞ்சி 27/64
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 27/115
வள நாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் – சிலப்.வஞ்சி 27/121
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – சிலப்.வஞ்சி 27/171
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – சிலப்.வஞ்சி 28/141
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என – சிலப்.வஞ்சி 28/204
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை – சிலப்.வஞ்சி 28/220
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் – சிலப்.வஞ்சி 29/13
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – சிலப்.வஞ்சி 29/115
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – சிலப்.வஞ்சி 29/172
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/7
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி 0/82
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி 8/41
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி 8/54
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 14/13
பன்னீராண்டு பாண்டி நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி 14/55,56
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி 21/89
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் – மணி 24/54
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி 24/153
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி 25/101,102
நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் – மணி 25/110
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 25/144
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் – மணி 25/178
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி 25/222
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி 25/237
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி 26/80
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி 26/80
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி 28/83
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி 28/156
நலத்தகை நல்லாய் நல் நாடு எல்லாம் – மணி 28/190
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ – மணி 30/199,200

மேல்


நாடு-அதனுள் (1)

தாங்கா விளையுள் நல் நாடு-அதனுள்
வலவை பார்ப்பான் பராசரன் என்போன் – சிலப்.மது 23/60,61

மேல்


நாடு-அதனொடு (1)

நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில் – சிலப்.புகார் 1/21,22

மேல்


நாடுகாண் (1)

நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் – சிலப்.புகார் 0/72

மேல்


நாடுகேன் (1)

போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – சிலப்.மது 19/69

மேல்


நாடுடன் (1)

ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு – சிலப்.புகார் 10/153

மேல்


நாடும் (2)

காவிரி நாடும் காட்டி பின்னர் – சிலப்.புகார் 6/31
காடும் நாடும் ஊரும் போகி – சிலப்.மது 23/65

மேல்


நாண் (9)

நாண் உடை கோலத்து நகை முகம் கோட்டி – சிலப்.புகார் 5/221
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி – சிலப்.மது 12/22
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – சிலப்.மது 12/58
வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – சிலப்.மது 17/131
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி 2/33
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற – மணி 2/36
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி 3/133
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் – மணி 11/78
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ – மணி 18/105

மேல்


நாணமும் (2)

நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் – சிலப்.மது 16/86
நாணமும் உடையும் நன்கனம் நீத்து – மணி 3/88

மேல்


நாணாது (1)

நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி 3/152

மேல்


நாணாள் (1)

நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் – மணி 22/125

மேல்


நாணி (1)

இளமை நாணி முதுமை எய்தி – மணி 4/107

மேல்


நாணின் (1)

நாணின் பாவாய் நீள் நில விளக்கே – சிலப்.மது 16/90

மேல்


நாணினை (1)

நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச – மணி 10/30

மேல்


நாணு (3)

இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன – சிலப்.புகார் 9/71
நல் தொடி நங்காய் நாணு துறந்தேன் – மணி 2/41
நா புடைபெயராது நாணு தகவுடைத்தே – மணி 23/16

மேல்


நாத்தூண் (1)

நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் – சிலப்.மது 16/19

மேல்


நாதன் (6)

நாதன் பாதம் நவை கெட ஏத்தி – மணி 11/74
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் – மணி 12/102
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி 25/93
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் – மணி 28/71
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி – மணி 28/89
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று – மணி 28/144

மேல்


நாப்பண் (3)

குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண்
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி 15/75,76
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்-பால் சென்று – மணி 22/125,126
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண்
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி 22/145,146

மேல்


நாம் (6)

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் – சிலப்.புகார் 7/146
எல்லாம் நாம்
புள் ஊர் கடவுளை போற்றுதும் போற்றுதும் – சிலப்.மது 17/117,118
மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட – சிலப்.வஞ்சி 24/123
எல்லா நாம்
காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – சிலப்.வஞ்சி 29/130,131
நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் – மணி 22/127
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி 30/228

மேல்


நாம (6)

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – சிலப்.புகார் 1/8
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/122
நாம நல் உரை நாட்டுதும் என்று – சிலப்.மது 15/26
கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலை குறைத்தாள் முன்னரே வந்தாள் – சிலப்.மது 22/159,160
நாம பேரூர்-தன்னோடு தோன்றிய – மணி 6/37
நாம சாதி குணம் கிரியைகள் – மணி 29/50

மேல்


நாமம் (5)

காமர் மனைவி என கைகலந்து நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல் – சிலப்.புகார் 2/92,93
நாமம் அல்லது நவிலாது என் நா – சிலப்.புகார் 10/197
நாமம் செய்த நல் நாள் நள் இருள் – மணி 7/35
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு – மணி 22/38
கிட்டிய தேசம் நாமம் சாதி – மணி 27/23

மேல்


நாமாக (1)

வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை – சிலப்.வஞ்சி 29/120

மேல்


நாய் (4)

கடகம் செறித்த கையை தீ நாய்
உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும் – மணி 6/114,115
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி 11/87
நாய் வால் இல்லா கழுதையின் பிடரில் – மணி 29/104
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் – மணி 29/107

மேல்


நாயகன் (1)

சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன் – சிலப்.புகார் 10/180,181

மேல்


நாரணன் (1)

ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் – மணி 27/99

மேல்


நாரதன் (1)

நாரதன் வீணை நயம் தெரி பாடலும் – சிலப்.புகார் 6/18

மேல்


நாரதனார் (2)

முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் – சிலப்.மது 17/108
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் – சிலப்.மது 17/112

மேல்


நாராச (1)

உள்ள நெறி என்பது நாராச திரிவில் – மணி 27/55

மேல்


நாராயணா (1)

நாராயணா என்னா நா என்ன நாவே – சிலப்.மது 17/157

மேல்


நாரையும் (1)

கம்புள் கோழியும் கனை குரல் நாரையும்
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – சிலப்.புகார் 10/114,115

மேல்


நால் (36)

வைத்த இடை நிலம் நால் கோல் ஆக – சிலப்.புகார் 3/104
நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – சிலப்.புகார் 5/176
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை – சிலப்.புகார் 6/36
இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து – சிலப்.புகார் 6/164
இட கை நால் விரல் மாடகம் தழீஇ – சிலப்.புகார் 8/28
நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி – சிலப்.புகார் 8/41
நால் வகை மரபின் அவிய களத்தினும் – சிலப்.மது 14/152
நால் வேறு வகையின் நய_தகு மரபின் – சிலப்.மது 14/157
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும் – சிலப்.மது 14/183
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 14/212
எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு – சிலப்.மது 15/182
நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் – சிலப்.மது 17/15
கடந்தானை நூற்றுவர்-பால் நால் திசையும் போற்ற – சிலப்.மது 17/154
நால் பால் பூதமும் பால்பால் பெயர – சிலப்.மது 22/108
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 22/110
பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் – சிலப்.வஞ்சி 28/76
நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 30/85
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி 1/8
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் – மணி 1/37
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி 1/67
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி 6/56
நால் வகை மரபின் அரூப பிரமரும் – மணி 6/176
நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி 6/177
நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி 6/177
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி 6/195
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு – மணி 17/45
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால்
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு – மணி 25/100,101
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி 26/48
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி 26/94
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி 27/113
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி 27/116
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி 28/116
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி 28/241
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி 30/32
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய் – மணி 30/36
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி 30/260

மேல்


நால்_நால் (1)

நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி 6/177

மேல்


நால்_ஏழ் (1)

நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி 1/67

மேல்


நாலும் (1)

ஆறும் நாலும் அ முறை போக்கி – சிலப்.புகார் 3/154

மேல்


நாவல் (11)

நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி – சிலப்.புகார் 3/117
நாவல் அம் தண் பொழில் மன்னர் – சிலப்.மது 17/3
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – சிலப்.வஞ்சி 25/173
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – சிலப்.வஞ்சி 29/104
நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் – மணி 2/1
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி 9/17
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி 15/20
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி – மணி 17/30
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி 22/29
நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி 25/12
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி 28/180

மேல்


நாவல்_அம்_தண்_பொழில் (1)

நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – சிலப்.வஞ்சி 25/173

மேல்


நாவலில் (1)

சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது – மணி 17/37

மேல்


நாவலொடு (1)

நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி 11/107

மேல்


நாவாய் (3)

ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி – சிலப்.மது 14/74
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் – மணி 11/25
நாவாய் கேடுற நல் மரம் பற்றி – மணி 16/17

மேல்


நாவால் (1)

நண்ணிய மூக்கால் நாற்றனும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன – மணி 27/16,17

மேல்


நாவான் (1)

நாவான் நக்கி நன் பால் ஊட்டி – மணி 13/13

மேல்


நாவி (1)

நாவி குழம்பு நலம் கொள் தேய்வை – சிலப்.மது 13/116

மேல்


நாவிடை (1)

நாவிடை நல்_நூல் நன்கனம் நவிற்றி – மணி 13/24

மேல்


நாவியின் (2)

பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் – சிலப்.வஞ்சி 25/53
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி 26/85

மேல்


நாவில் (4)

பண்ணும் திறனும் புறங்கூறு நாவில்
தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து – சிலப்.புகார் 8/65,66
கோவலன் நாவில் கூறிய மந்திரம் – சிலப்.மது 11/196
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு – சிலப்.மது 13/26
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி – சிலப்.மது 13/169

மேல்


நாவிற்கு (1)

வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி 11/71,72

மேல்


நாவின் (4)

காவா நாவின் கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/159
நான்மறை மரபின் நயம் தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை – சிலப்.வஞ்சி 28/191,192
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன் உறைவிடம் குறுகி – மணி 12/3,4
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் – மணி 29/2

மேல்


நாவினர் (1)

எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 26/167

மேல்


நாவினள் (1)

உலறிய நாவினள் உயர் மொழி கூறி – சிலப்.வஞ்சி 30/44

மேல்


நாவினும் (1)

நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் – சிலப்.மது 22/33

மேல்


நாவு (1)

மந்திரம் நாவு_இடை வழுத்துவர் ஆயின் – சிலப்.மது 16/172

மேல்


நாவு_இடை (1)

மந்திரம் நாவு_இடை வழுத்துவர் ஆயின் – சிலப்.மது 16/172

மேல்


நாவும் (2)

களம் கொள் யானை கவிழ் மணி நாவும்
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் – சிலப்.வஞ்சி 26/201,202
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும்
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – சிலப்.வஞ்சி 26/202,203

மேல்


நாவே (2)

நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே – சிலப்.மது 17/156,157
நாராயணா என்னா நா என்ன நாவே
என்று யாம் – சிலப்.மது 17/157,158

மேல்


நாவை (1)

ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி 15/39

மேல்


நாவொடு (3)

நாவொடு நவிலாது நவை நீர் உகுத்து – சிலப்.புகார் 5/137
நாவொடு நவிலா நகைபடு கிளவியும் – சிலப்.மது 14/139
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி 21/37

மேல்


நாவோய் (1)

வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி – மணி 11/68

மேல்


நாழிகை (1)

நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர் – சிலப்.புகார் 5/49

மேல்


நாள் (116)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – சிலப்.புகார் 0/51
மயங்கு இணர் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள்
வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி – சிலப்.புகார் 2/83,84
புண்ணிய திசைமுகம் போகிய அ நாள்
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய – சிலப்.புகார் 5/94,95
நாள்_மகிழ்_இருக்கை நாளங்காடியில் – சிலப்.புகார் 5/196
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – சிலப்.புகார் 6/6
தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல – சிலப்.புகார் 6/160
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள்
மாலதி மாற்றாள் மகவுக்கு பால் அளிக்க – சிலப்.புகார் 9/4,5
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு – சிலப்.புகார் 9/32,33
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள்
ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள் – சிலப்.புகார் 9/62,63
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் – சிலப்.புகார் 10/3
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள் – சிலப்.புகார் 10/155
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள் – சிலப்.புகார் 10/155
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள்
ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – சிலப்.புகார் 10/155,156
முன் நாள் முறைமையின் இரும் தவ முதல்வியொடு – சிலப்.மது 13/135
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் – சிலப்.மது 13/144
நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து – சிலப்.மது 14/89
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்
வையமும் சிவிகையும் மணி கால் அமளியும் – சிலப்.மது 14/125,126
வாலாமை நாள் நீங்கிய பின்னர் – சிலப்.மது 15/24
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் – சிலப்.மது 15/29,30
நண்ணு வழி இன்றி நாள் சில நீந்த – சிலப்.மது 15/31
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – சிலப்.மது 15/217
நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி – சிலப்.மது 16/8
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் – சிலப்.மது 16/19
கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே – சிலப்.மது 17/132
மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள்
பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர் – சிலப்.மது 21/50,51
கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – சிலப்.மது 22/112
புதவ கதவம் புடைத்தனன் ஒரு நாள்
அரைச வேலி அல்லது யாவதும் – சிலப்.மது 23/43,44
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/163
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/164
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – சிலப்.மது 23/174
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/193
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/194
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள்
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/49,50
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள்
ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு – சிலப்.வஞ்சி 25/161,162
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் – சிலப்.வஞ்சி 26/52
நாள் விலை கிளையுள் நல் அமர் அழுவத்து – சிலப்.வஞ்சி 27/29
நாள் விடூஉ நல் உயிர் நீத்து மெய் விடவும் – சிலப்.வஞ்சி 27/102
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என – சிலப்.வஞ்சி 27/216
இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – சிலப்.வஞ்சி 28/181
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – சிலப்.வஞ்சி 28/199,200
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள்
எம் போலும் முடி மன்னர் – சிலப்.வஞ்சி 29/16,17
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – சிலப்.வஞ்சி 29/36
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள்
எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன் – சிலப்.வஞ்சி 29/82,83
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள்
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/84,85
நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில் – சிலப்.வஞ்சி 30/162
நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில் – சிலப்.வஞ்சி 30/162
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது – சிலப்.வஞ்சி 30/200
செம்மலர் முதியோன் செய்த அ நாள்
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி 0/29,30
தீவக சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி 1/35,36
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி – மணி 1/39,40
தீவக சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாரா – மணி 2/3,4
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது – மணி 3/47,48
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் – மணி 4/81,82
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி 5/46,47
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் – மணி 5/119
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள்
ஈங்கு நிகழ்வன ஏது பல உள – மணி 7/28,29
நாமம் செய்த நல் நாள் நள் இருள் – மணி 7/35
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள்
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி 8/59,60
உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள்
அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும் – மணி 9/37,38
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி – மணி 9/54,55
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் – மணி 10/40
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 10/78,79
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி 10/83
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள்
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி 10/83,84
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி 11/46
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி 11/46
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி 11/129
அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம் – மணி 12/36
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் – மணி 12/88
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் – மணி 12/99
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப – மணி 13/14
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை – மணி 14/1
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி 14/82
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி 14/92
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி 14/96
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ – மணி 15/2
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது – மணி 17/41
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி 17/46
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் – மணி 17/47
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி 17/48
பல நாள் ஆயினும் நிலனொடு போகி – மணி 17/66
இந்திர கோடணை விழவு அணி வரு நாள்
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி 17/69,70
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன் – மணி 18/158
அடியில் படியை அடக்கிய அ நாள்
நீரின் பெய்த மூரி வார் சிலை – மணி 19/52,53
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் – மணி 21/11,12
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள்
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் – மணி 21/102,103
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள்
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் – மணி 21/162,163
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள்
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி 22/39,40
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி 22/72
நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி 22/127,128
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள்
பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து – மணி 23/24,25
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள்
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு – மணி 23/70,71
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி 24/16
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள்
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி 24/43,44
பீலிவளை என்போள் பிறந்த அ நாள்
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய – மணி 24/57,58
தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி 24/62
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி 24/144
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி 24/153
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது – மணி 25/47
அ நாள் நின்னை அயர்த்து போயினர் – மணி 25/162
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி 25/163
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி 25/173
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி 25/210
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி 25/210
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம் – மணி 26/12,13
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி – மணி 26/18,19
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள்
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் – மணி 28/9,10
விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள்
துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும் – மணி 28/104,105
துன்பம் நீங்க சொரியும் அ நாள்
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி 28/122,123
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து – மணி 28/129
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி 28/147
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள்
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர் – மணி 28/153,154
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி 28/199
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி 29/8
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி 29/19
சொல் என தோற்றும் பல நாள் கூடிய – மணி 30/206

மேல்


நாள்-தொட்டு (1)

ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி 14/22,23

மேல்


நாள்-தொட்டும் (3)

பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி 13/53
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ – மணி 24/70
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும்
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி 24/171,172

மேல்


நாள்-தொறும் (1)

வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து – சிலப்.வஞ்சி 28/232

மேல்


நாள்_மகிழ்_இருக்கை (1)

நாள்_மகிழ்_இருக்கை நாளங்காடியில் – சிலப்.புகார் 5/196

மேல்


நாள்_அகத்து (1)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – சிலப்.புகார் 0/51

மேல்


நாளகத்து (1)

விண்ணவர் கோமான் விழவு நாளகத்து என் – சிலப்.புகார் 5/240

மேல்


நாளங்காடியில் (2)

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என – சிலப்.புகார் 5/63,64
நாள்_மகிழ்_இருக்கை நாளங்காடியில்
பூ மலி கானத்து புது மணம் புக்கு – சிலப்.புகார் 5/196,197

மேல்


நாளால் (2)

நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை – சிலப்.புகார் 3/123
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் – மணி 22/78

மேல்


நாளிடை (1)

எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி 9/31,32

மேல்


நாளில் (6)

கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – சிலப்.மது 22/103
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி 7/24
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி 7/106
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி 9/18
எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை – மணி 9/48
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி 22/74

மேல்


நாளினும் (2)

நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி 1/8
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி 1/67

மேல்


நாளும் (2)

யாண்டும் மதியும் நாளும் கடிகையும் – சிலப்.வஞ்சி 27/9
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் – மணி 6/182

மேல்


நாளை (2)

குடவர் கோமான் வந்தான் நாளை
படு நுகம் பூணாய் பகடே மன்னர் – சிலப்.வஞ்சி 27/227,228
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே – சிலப்.வஞ்சி 28/179

மேல்


நாளொடு (1)

நாளொடு பெயர்ந்து நண்ணார் பெறுக இ – சிலப்.புகார் 5/92

மேல்


நாற்பது (1)

ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த – சிலப்.வஞ்சி 25/15

மேல்


நாற்ற (1)

நில கண் மூக்கு நாற்ற விகாரமும் – மணி 27/218

மேல்


நாற்றம் (2)

மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு – மணி 3/3
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி 27/252

மேல்


நாற்றம்மே (1)

உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் – மணி 27/236,237

மேல்


நாற்றமும் (1)

கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் – மணி 16/66,67

மேல்


நாற்றமொடு (1)

ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி 27/249

மேல்


நாற்றனும் (1)

நண்ணிய மூக்கால் நாற்றனும் நாவால் – மணி 27/16

மேல்


நாற்றி (1)

மாலை தாமம் வளையுடன் நாற்றி
விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து – சிலப்.புகார் 3/112,113

மேல்


நாற்று-மின் (1)

முத்து தாமம் முறையொடு நாற்று-மின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் – மணி 1/49,50

மேல்


நாறு (15)

நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி – சிலப்.புகார் 6/79
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு – சிலப்.புகார் 10/43
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி – சிலப்.புகார் 10/78
கடி மலர் களைந்து முடி நாறு அழுத்தி – சிலப்.புகார் 10/127
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை – சிலப்.புகார் 10/158
நாகம் நாறு நரந்தை நிரந்தன – சிலப்.மது 12/75
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த – சிலப்.மது 15/97
நறு மலர் அவிழ்ந்த நாறு இரு முச்சி – சிலப்.மது 22/122
பால் நாறு செ வாய் படியோர் முன்னர் – சிலப்.மது 23/92
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி 17/31
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி 18/44
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து – மணி 19/22
நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன – மணி 22/130
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி 24/31
பூ நாறு அடைகரை எங்கணும் போகி – மணி 25/32

மேல்


நாறும் (1)

ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை – சிலப்.புகார் 4/73

மேல்


நான் (11)

தொடி வளை தோளிக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/70
சோணாட்டார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/71
தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/75
தண் புகார் பாவைக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/76
பொன் தொடி நங்கைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/80
பூம் புகார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/81
நல் விருந்து ஆயினான் நான் அவன்-தன் மகள் – சிலப்.வஞ்சி 29/107
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு – மணி 17/45
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி 23/95
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி 27/278
நல்_வினை பயன்-கொல் நான் கண்டது என – மணி 28/92

மேல்


நான்காம் (1)

நான்காம் கண்டம் பிறப்பே பிணியே – மணி 30/145

மேல்


நான்கால் (1)

நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி – மணி 30/35

மேல்


நான்கின் (2)

நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து – சிலப்.புகார் 3/150
இணை கிளை பகை நட்பு என்று இ நான்கின்
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி – சிலப்.புகார் 8/33,34

மேல்


நான்கினும் (1)

இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த – மணி 30/193

மேல்


நான்கு (9)

இரு_நான்கு திசையும் அதிர்ந்திடும் – சிலப்.மது 20/13
எண் நான்கு இரட்டி இரும் கலை பயின்ற – சிலப்.மது 22/138
எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது – சிலப்.வஞ்சி 27/149
என நான்கு அசித்தம் உபய அசித்தம் – மணி 29/195
என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி 29/280
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் – மணி 30/25
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ – மணி 30/188
நான்கு நயம் என தோன்றப்படுவன – மணி 30/217
வினா விடை நான்கு உள – மணி 30/235

மேல்


நான்கும் (8)

வர்த்தனை நான்கும் மயல் அற பெய்து ஆங்கு – சிலப்.புகார் 3/58
எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும்
பண் நின்ற கூத்து பதினொன்றும் மண்ணின் மேல் – சிலப்.புகார் 3/176,177
காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி – சிலப்.புகார் 5/133
திசை இரு_நான்கும் அதிர்ந்திடும் அன்றி – சிலப்.மது 20/4
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 24/128,129
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய – மணி 27/250,251
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 30/69,70
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
வினா விடை நான்கு உள – மணி 30/234,235

மேல்


நான்மறை (9)

நான்மறை மரபின் தீமுறை ஒருபால் – சிலப்.புகார் 5/175
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் – சிலப்.மது 13/141
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை – சிலப்.மது 15/12
மு_தீ செல்வத்து நான்மறை முற்றி – சிலப்.மது 23/68
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் – சிலப்.வஞ்சி 28/176
நான்மறை மரபின் நயம் தெரி நாவின் – சிலப்.வஞ்சி 28/191
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும் – மணி 6/169
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி 13/69
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப – மணி 13/99

மேல்


நான்மறையாள (2)

நலம் புரி கொள்கை நான்மறையாள
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – சிலப்.மது 11/152,153
நகை திறம் கூறினை நான்மறையாள
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/54,55

மேல்


நான்மறையாளன் (1)

நான்மறையாளன் செய்யுள் கொண்டு – சிலப்.வஞ்சி 28/137

மேல்


நான்மாடக்கூடல் (1)

நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – சிலப்.மது 21/39

மேல்


நான (1)

நான நல் அகில் நறும் புகை அன்றியும் – சிலப்.புகார் 2/67

மேல்


நானிலம் (1)

நடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் – சிலப்.மது 22/59

மேல்


நானூறு (1)

நாக நல் நாட்டு நானூறு யோசனை – மணி 9/21

மேல்