கெ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கெட்ட (1)

கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் – மணி 16/8

மேல்


கெட்டது (1)

இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது – மணி 25/191,192

மேல்


கெட (9)

இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து – சிலப்.புகார் 6/164
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.மது 12/141
பூருவ தேயம் பொறை கெட வாழும் – மணி 9/13
நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி – மணி 11/69
நாதன் பாதம் நவை கெட ஏத்தி – மணி 11/74
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் – மணி 12/102
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி 12/120,121
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது – மணி 28/132
தன்னிடை விசேடம் கெட சாதித்தல் – மணி 29/290

மேல்


கெடா (1)

பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி 30/223

மேல்


கெடாதாய் (1)

பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய்
பண்ணுநர் இன்றி பண்ணப்படாதாய் – மணி 30/38,39

மேல்


கெடாது (1)

பயற்று தன்மை கெடாது கும்மாயம் – மணி 27/185

மேல்


கெடாதோ (1)

தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால் – மணி 30/238

மேல்


கெடு (1)

கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது – மணி 25/192

மேல்


கெடுக்கும் (6)

பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – சிலப்.மது 11/92
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி – சிலப்.மது 11/138
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் – மணி 7/83
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி 10/66,67
ஆதி முதல்வன் அரும் துயர் கெடுக்கும்
பாதபங்கய மலை பரசினர் ஆதலின் – மணி 12/108,109
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி 15/53,54

மேல்


கெடுக (8)

பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து – சிலப்.புகார் 9/56
பவம் தரு பாசம் கவுந்தி கெடுக என்று – சிலப்.புகார் 10/211
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – சிலப்.மது 20/89
கேள் இது மன்னா கெடுக நின் தீயது – சிலப்.வஞ்சி 30/73
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி 5/91
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி 14/9
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி 19/130
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி 21/9

மேல்


கெடுத்த (3)

காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று – சிலப்.மது 22/151
இரவு இடம் கெடுத்த நிரை மணி விளக்கின் – சிலப்.வஞ்சி 26/36
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – சிலப்.வஞ்சி 26/200

மேல்


கெடுத்தது (3)

யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி 19/153,154
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி 25/192,193
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன – மணி 29/325

மேல்


கெடுத்ததும் (1)

மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி 28/80

மேல்


கெடுத்தலின் (1)

விசேடம் கெடுத்தலின் விபரீதம் – மணி 29/302

மேல்


கெடுத்தனை (1)

இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை
வாடு பசி உழந்து மா முனி போய பின் – மணி 17/48,49

மேல்


கெடுத்து (3)

அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை – சிலப்.புகார் 4/8
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை – சிலப்.வஞ்சி 27/132
ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும் – மணி 0/66

மேல்


கெடுத்தோய் (1)

குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் – மணி 5/100

மேல்


கெடுத்தோன் (1)

மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது – மணி 29/10

மேல்


கெடுதல் (1)

உருவம் கெடுதல் சத்தம் நித்தம் – மணி 29/283

மேல்


கெடுதலும் (2)

ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ – மணி 24/66,67
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது – மணி 29/9,10

மேல்


கெடுப்ப (1)

உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள் – மணி 9/37

மேல்


கெடும் (2)

அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி 6/185
வெவ்வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி 27/268,269

மேல்


கெடுமோ (1)

தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால் – மணி 30/238

மேல்


கெழீஇய (1)

பதி எழு அறியா பழம் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் – சிலப்.புகார் 1/15,16

மேல்


கெழு (60)

நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய – சிலப்.புகார் 0/35
முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது – சிலப்.புகார் 0/61
பரதர் மலிந்த பயம் கெழு மாநகர் – சிலப்.புகார் 2/2
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப – சிலப்.புகார் 4/9
பழுது இல் செய்வினை பால் கெழு மாக்களும் – சிலப்.புகார் 5/34
பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய – சிலப்.புகார் 5/57
காவல் பூதத்து கடை கெழு பீடிகை – சிலப்.புகார் 5/67
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும் – சிலப்.புகார் 5/77
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என – சிலப்.புகார் 5/93
பகை விலக்கியது இ பயம் கெழு மலை என – சிலப்.புகார் 5/96
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – சிலப்.புகார் 5/141
உரு கெழு மூதூர் உவவு தலைவந்து என – சிலப்.புகார் 6/111
நொடை நவில் மகடூஉ கடை கெழு விளக்கமும் – சிலப்.புகார் 6/139
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – சிலப்.புகார் 7/62
மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே – சிலப்.புகார் 7/64
கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும் – சிலப்.புகார் 8/4
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த – சிலப்.புகார் 8/8
கோடும் குழலும் பீடு கெழு மணியும் – சிலப்.மது 12/41
பால் கெழு சிறப்பின் பல்_இயம் சிறந்த – சிலப்.மது 13/139
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல் – சிலப்.மது 13/149
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட – சிலப்.மது 14/95
என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டு – சிலப்.மது 14/121
இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும் – சிலப்.மது 14/192
பகை தெறல் அறியா பயம் கெழு வீதியும் – சிலப்.மது 14/200
கறை கெழு பாசத்து_கை அகப்படலும் – சிலப்.மது 15/79
கலி கெழு கூடல் பலி பெறு பூத – சிலப்.மது 22/101
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி – சிலப்.மது 22/139
மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு – சிலப்.மது 23/36
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் – சிலப்.மது 23/123
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி – சிலப்.மது 23/195
முடி கெழு வேந்தர் மூவருள்ளும் – சிலப்.மது 23/205
சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் – சிலப்.வஞ்சி 24/47
கலி கெழு மீமிசை சேணோன் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/30
பகை அரசு நடுக்காது பயம் கெழு வைப்பின் – சிலப்.வஞ்சி 26/17
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் – சிலப்.வஞ்சி 26/20
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த – சிலப்.வஞ்சி 26/59
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் – சிலப்.வஞ்சி 26/87
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/114
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு – சிலப்.வஞ்சி 27/160
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 27/178
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து – சிலப்.வஞ்சி 28/47
உரு கெழு மரபின் அயிரை மண்ணி – சிலப்.வஞ்சி 28/145
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என – சிலப்.வஞ்சி 28/204
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – சிலப்.வஞ்சி 30/109
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட – சிலப்.வஞ்சி 30/149
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி 0/32
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி 0/96
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி 1/27
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி 2/9
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட – மணி 3/78
உதயகுமரன் உரு கெழு மீது ஊர் – மணி 4/28
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி 4/39
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி 4/51
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி 19/54
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி 19/122
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி 19/127
பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள் – மணி 23/6
கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி – மணி 25/14
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு – மணி 25/101
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும் – மணி 26/3

மேல்


கெழு_தகை (1)

கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி – மணி 25/14

மேல்


கெழும் (1)

பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/28

மேல்


கெழுமியவள் (1)

கெழுமியவள் உரைப்ப கேட்ட விழுமத்தான் – சிலப்.மது 21/29

மேல்