சே – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 19
சே_இதழ் 1
சே_இழை 7
சே_இழை-தன்னினும் 1
சே_இழைக்கு 1
சே_இழையை 1
சேக்கை 11
சேக்கையும் 1
சேக்கையுள் 1
சேட 2
சேடம் 1
சேடல் 1
சேடலும் 1
சேடி 2
சேடியர் 1
சேண் 8
சேணோன் 1
சேதம் 1
சேதமும் 1
சேதா 1
சேதியம் 1
சேந்தன 1
சேப்ப 1
சேய் 3
சேய்த்து 1
சேர் 13
சேர்க 1
சேர்குவை 1
சேர்த்தி 3
சேர்த்திய 1
சேர்த்து-மின் 1
சேர்த்துவாய் 1
சேர்தல் 1
சேர்தலும் 1
சேர்ந்த 4
சேர்ந்ததில் 1
சேர்ந்தது 2
சேர்ந்தனன் 1
சேர்ந்து 10
சேர்ந்து-ஆங்கு 1
சேர்ப்ப 3
சேர்ப்பற்கு 1
சேர்ப்பன் 1
சேர்வன 1
சேர 3
சேரர் 1
சேரல் 7
சேரலன் 2
சேரலாதற்கு 1
சேரன் 6
சேரா 4
சேராது 2
சேரி 4
சேரியீர் 1
சேவகன் 1
சேவடி 5
சேவல் 5
சேவற்கு 1
சேவும் 1
சேறல் 1
சேறலும் 5
சேறு 6
சேனாமுகம் 1
சேனை 4
சேனையும் 2
சேனையொடு 2

சே (19)

சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – சிலப்.புகார் 9/73
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – சிலப்.மது 12/79
சிலம்பின் வென்ற சே இழை நங்கை – சிலப்.மது 22/135
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – சிலப்.வஞ்சி 25/72
செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/108
திரு மலர் தாமரை சே அடி பணியும் – சிலப்.வஞ்சி 26/29
உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சே அடி – சிலப்.வஞ்சி 26/55
வண்ண சே அடி மணி முடி வைத்தலின் – சிலப்.வஞ்சி 26/65
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – சிலப்.வஞ்சி 27/73
சே_இழையை காண்டும் என்று – சிலப்.வஞ்சி 29/56
செம்மொழி மாதவர் சே இழை நங்கை – சிலப்.வஞ்சி 30/32
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி 9/50
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி 10/49
சிரந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி 10/89
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி 11/75
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் – மணி 21/27
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி 22/56
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி 22/177
பங்கய சே அடி விளக்கி பான்மையின் – மணி 28/115

மேல்


சே_இதழ் (1)

செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ்
கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன – சிலப்.மது 12/79,80

மேல்


சே_இழை (7)

சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – சிலப்.புகார் 9/73
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – சிலப்.வஞ்சி 25/72
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – சிலப்.வஞ்சி 27/73
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி 9/50
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி 10/49
சிரந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி 10/89
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி 22/56

மேல்


சே_இழை-தன்னினும் (1)

செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும்
நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என – சிலப்.வஞ்சி 25/108,109

மேல்


சே_இழைக்கு (1)

தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி 11/75

மேல்


சே_இழையை (1)

சே_இழையை காண்டும் என்று – சிலப்.வஞ்சி 29/56

மேல்


சேக்கை (11)

சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி – சிலப்.புகார் 2/28,29
பல் பூம் சேக்கை பள்ளியுள் பொலிந்து – சிலப்.புகார் 4/28
சிந்துபு பரிந்த செழும் பூம் சேக்கை
மந்த_மாருதத்து மயங்கினர் மலிந்து ஆங்கு – சிலப்.புகார் 4/43,44
வீழ் பூம் சேக்கை மேவாது கழிய – சிலப்.புகார் 4/65
பாடு அமை சேக்கை பள்ளியுள் இருந்தோள் – சிலப்.புகார் 6/110
படை அமை சேக்கை பள்ளியுள் வீழ்ந்ததும் – சிலப்.மது 13/70
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – சிலப்.மது 14/85
தூ மென் சேக்கை துனி பதம் பாரா – சிலப்.மது 22/126
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/62
புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல் – மணி 4/117,118
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப – மணி 7/112

மேல்


சேக்கையும் (1)

வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும்
மண்ணீட்டு அரங்கமும் மலர் பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 28/43,44

மேல்


சேக்கையுள் (1)

பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – சிலப்.புகார் 9/67

மேல்


சேட (2)

சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – சிலப்.வஞ்சி 30/52
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – சிலப்.வஞ்சி 30/135

மேல்


சேடம் (1)

சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/63

மேல்


சேடல் (1)

சேடல் நெய்தல் பூளை மருதம் – சிலப்.மது 22/69

மேல்


சேடலும் (1)

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் – சிலப்.மது 13/153

மேல்


சேடி (2)

வெள்ளி மால் வரை வியன் பெரும் சேடி
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – சிலப்.புகார் 6/1,2
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி 17/21,22

மேல்


சேடியர் (1)

சேடியர் செல்வியின் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/64

மேல்


சேண் (8)

திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என – சிலப்.மது 18/31
திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்து – சிலப்.வஞ்சி 27/223
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில் – சிலப்.வஞ்சி 30/54
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து – சிலப்.வஞ்சி 30/181
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி 3/106
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை – மணி 16/103
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி 17/31
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் – மணி 28/62

மேல்


சேணோன் (1)

கலி கெழு மீமிசை சேணோன் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/30

மேல்


சேதம் (1)

இமையவன் ஆடிய கொட்டி சேதம்
பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் – சிலப்.வஞ்சி 28/75,76

மேல்


சேதமும் (1)

வரியும் குரவையும் சேதமும் என்று இவை – சிலப்.வஞ்சி 30/230

மேல்


சேதா (1)

குவளை மேய்ந்த குட கண் சேதா
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி 5/130,131

மேல்


சேதியம் (1)

சேதியம் தொழுது தென்மேற்கு ஆக – மணி 28/175

மேல்


சேந்தன (1)

திரு முகம் வியர்த்தது செம் கண் சேந்தன
கரி புற அட்டில் கண்டனள் பெயர – சிலப்.மது 16/31,32

மேல்


சேப்ப (1)

தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – சிலப்.மது 17/144

மேல்


சேய் (3)

சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 26/139
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி 9/30
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி – மணி 19/118

மேல்


சேய்த்து (1)

நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் – சிலப்.மது 13/133

மேல்


சேர் (13)

காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – சிலப்.புகார் 7/204
கோதையும் குழலும் தாது சேர் அளகமும் – சிலப்.புகார் 8/94
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – சிலப்.மது 13/21
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – சிலப்.மது 13/22
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு – சிலப்.மது 13/119
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று – சிலப்.மது 23/134
மறம் சேர் வஞ்சிமாலையொடு புனைந்து – சிலப்.வஞ்சி 26/56
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர்
மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – சிலப்.வஞ்சி 29/104,105
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி 7/48
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி 14/24
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி 19/78
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி 20/84
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி 27/123

மேல்


சேர்க (1)

தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய – சிலப்.மது 21/55

மேல்


சேர்குவை (1)

செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி 21/154,155

மேல்


சேர்த்தி (3)

கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை – சிலப்.புகார் 3/52,53
வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி
இட கை நால் விரல் மாடகம் தழீஇ – சிலப்.புகார் 8/27,28
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழி சேர்த்தி
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – சிலப்.மது 13/108,109

மேல்


சேர்த்திய (1)

செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் – மணி 26/90

மேல்


சேர்த்து-மின் (1)

மதலை மாடமும் வாயிலும் சேர்த்து-மின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா – மணி 1/53,54

மேல்


சேர்த்துவாய் (1)

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்
துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு – சிலப்.மது 12/155,156

மேல்


சேர்தல் (1)

வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி – சிலப்.புகார் 3/132

மேல்


சேர்தலும் (1)

சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று – மணி 5/82

மேல்


சேர்ந்த (4)

இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த
தொல் நெறி இயற்கை தோரிய மகளிரும் – சிலப்.புகார் 3/133,134
சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில் – சிலப்.மது 14/92
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன் – சிலப்.மது 22/98
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை – மணி 19/67

மேல்


சேர்ந்ததில் (1)

வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி 16/125

மேல்


சேர்ந்தது (2)

தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி 3/12
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் – மணி 28/102

மேல்


சேர்ந்தனன் (1)

பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் – மணி 16/40

மேல்


சேர்ந்து (10)

சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என – சிலப்.புகார் 5/64
புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து
மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – சிலப்.மது 13/39,40
பாடும் பாணரில் பாங்குற சேர்ந்து
செந்திறம் புரிந்த செங்கோட்டு_யாழில் – சிலப்.மது 13/105,106
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி 4/14,15
மாதர் நின் கண் போது என சேர்ந்து
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி 4/19,20
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன – மணி 9/6
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி 10/17
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன் – மணி 16/57
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு – மணி 21/79,80
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி 27/122

மேல்


சேர்ந்து-ஆங்கு (1)

இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி 9/7,8

மேல்


சேர்ப்ப (3)

செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – சிலப்.புகார் 7/164,165
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப
மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – சிலப்.புகார் 7/168,169
கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – சிலப்.புகார் 7/172,173

மேல்


சேர்ப்பற்கு (1)

உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – சிலப்.புகார் 7/201

மேல்


சேர்ப்பன் (1)

உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன்
வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால் – சிலப்.புகார் 7/141,142

மேல்


சேர்வன (1)

சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன் – சிலப்.மது 22/26

மேல்


சேர (3)

தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர
ஏனை மகளிரும் கிளைவழி சேர – சிலப்.புகார் 3/78,79
ஏனை மகளிரும் கிளைவழி சேர
மேலது உழையுளி கீழது கைக்கிளை – சிலப்.புகார் 3/79,80
சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – சிலப்.மது 17/145

மேல்


சேரர் (1)

ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர் – சிலப்.வஞ்சி 30/205

மேல்


சேரல் (7)

குட கோ சேரல் இளங்கோ_அடிகட்கு – சிலப்.புகார் 0/2
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/105
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/105
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/106
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/106
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/108
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/108

மேல்


சேரலன் (2)

திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – சிலப்.மது 23/64
குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை – மணி 28/103

மேல்


சேரலாதற்கு (1)

சேரலாதற்கு திகழ் ஒளி ஞாயிற்று – சிலப்.வஞ்சி 29/3

மேல்


சேரன் (6)

மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/128
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/129
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – சிலப்.மது 23/62
சேரன் பொறையன் மலையன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/169
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – சிலப்.வஞ்சி 29/189
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க – மணி 26/90,91

மேல்


சேரா (4)

அறம் புரி மாந்தர் அன்றி சேரா
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என் – சிலப்.மது 13/195,196
கறவையும் கன்றும் கனல் எரி சேரா
அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன – சிலப்.மது 22/115,116
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர் – மணி 4/123
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் – மணி 18/161

மேல்


சேராது (2)

சீர் இள வன முலை சேராது ஒழியவும் – சிலப்.மது 13/20
செம் தளிர் மேனி சேராது ஒழியவும் – சிலப்.மது 13/24

மேல்


சேரி (4)

மாலை சேரி மருங்கு சென்று எய்தி – சிலப்.புகார் 6/133
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – சிலப்.புகார் 7/53
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/168
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட – சிலப்.மது 22/114

மேல்


சேரியீர் (1)

ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என – சிலப்.மது 23/161

மேல்


சேவகன் (1)

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/146

மேல்


சேவடி (5)

சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து – சிலப்.மது 11/106
கோவலன் சென்று சேவடி வணங்க – சிலப்.மது 15/19
தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – சிலப்.மது 17/144
திரு நிலை சேவடி சிலம்பு வாய்புலம்பவும் – சிலப்.வஞ்சி 28/67
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி 3/159

மேல்


சேவல் (5)

உவண சேவல் உயர்த்தோன் நியமமும் – சிலப்.மது 14/8
கோழி சேவல் கொடியோன் கோட்டமும் – சிலப்.மது 14/10
கம்புள் சேவல் கனை குரல் முழவா – மணி 4/12
அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய – மணி 5/123
அன்ன சேவல் அரசன் ஆக – மணி 8/30

மேல்


சேவற்கு (1)

சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப – மணி 5/128

மேல்


சேவும் (1)

சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – சிலப்.மது 12/77

மேல்


சேறல் (1)

கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை – மணி 16/103

மேல்


சேறலும் (5)

அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழி சேறலும்
அற பயன் விளைதலும் மற பயன் விளைதலும் – சிலப்.வஞ்சி 30/137,138
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும்
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி 15/35,36
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் – மணி 21/87
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும் – மணி 23/98
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி 28/238,239

மேல்


சேறு (6)

வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – சிலப்.புகார் 6/81
அலத்தக கொழும் சேறு அளைஇ அயலது – சிலப்.புகார் 8/54
சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 10/129
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு – சிலப்.மது 13/118
தெக்கண மலயக செழும் சேறு ஆடி – சிலப்.மது 14/81
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து – மணி 19/115

மேல்


சேனாமுகம் (1)

வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி – சிலப்.வஞ்சி 25/192

மேல்


சேனை (4)

உருவிலாளன் ஒரு பெரும் சேனை
இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர் – சிலப்.புகார் 5/224,225
மகர வெல் கொடி மைந்தன் சேனை
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – சிலப்.புகார் 8/10,11
புட்கை சேனை பொலிய சூட்டி – சிலப்.வஞ்சி 25/147
கூற்ற கொண்டி சேனை செல்வது – சிலப்.வஞ்சி 26/162

மேல்


சேனையும் (2)

வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – சிலப்.மது 21/59
தண்டலை தலைவரும் தலை தார் சேனையும்
வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத – சிலப்.வஞ்சி 26/80,81

மேல்


சேனையொடு (2)

தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி 8/59
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி 19/123

மேல்