வீ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 2
வீங்கு 16
வீங்கு_நீர் 2
வீங்கு_இள_முலையொடு 1
வீச 1
வீசலும் 1
வீசி 2
வீசு 1
வீட்டியது 1
வீட்டிற்கு 1
வீட்டு 1
வீடு 10
வீடு-செய்ததும் 1
வீடும் 3
வீடே 1
வீணை 2
வீணையின் 1
வீதி 9
வீதியில் 7
வீதியின் 2
வீதியும் 21
வீய 1
வீயா 3
வீர 3
வீரரும் 2
வீரன் 3
வீரை 2
வீரையும் 3
வீவு 1
வீவும் 3
வீழ் 18
வீழ்குடி 1
வீழ்த்து 5
வீழ்த்தோர் 2
வீழ்தரும் 1
வீழ்தலும் 1
வீழ்ந்த 4
வீழ்ந்ததும் 2
வீழ்ந்தன 1
வீழ்ந்தனளே 1
வீழ்ந்தனன் 2
வீழ்ந்தனனே 1
வீழ்ந்து 11
வீழ்ந்தேன் 1
வீழ்ந்தோர் 1
வீழ்பு 1
வீழ்வது 2
வீழ 7
வீழா 1
வீழாது 1
வீழும் 2
வீற்றாக 1
வீற்றிருக்கும் 2
வீற்றிருந்த 3
வீற்றிருந்து 1
வீற்று 3
வீற்று_வீற்றாக 1
வீறு 4

வீ (2)

ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – சிலப்.புகார் 10/156
வால் வீ செறிந்த மராஅம் கண்டு – மணி 19/76

மேல்


வீங்கு (16)

வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு – சிலப்.புகார் 1/11
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் – சிலப்.புகார் 6/148
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – சிலப்.புகார் 7/129
ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் – சிலப்.புகார் 10/110
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் – சிலப்.மது 11/41
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/105
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/153
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/155
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய – சிலப்.வஞ்சி 26/173
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் – சிலப்.வஞ்சி 26/202
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த – சிலப்.வஞ்சி 27/219
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி – சிலப்.வஞ்சி 28/66
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – சிலப்.வஞ்சி 29/133
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து – மணி 4/30
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி 4/61
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி 5/31

மேல்


வீங்கு_நீர் (2)

வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – சிலப்.வஞ்சி 29/133
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி 5/31

மேல்


வீங்கு_இள_முலையொடு (1)

ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி 4/61,62

மேல்


வீச (1)

கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி 18/50,51

மேல்


வீசலும் (1)

தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திடமாட்டா – மணி 27/144,145

மேல்


வீசி (2)

அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி
மங்கல தாசியர் தம் கலன் ஒலிப்ப – சிலப்.புகார் 6/124,125
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி
காயசண்டிகையை கைக்கொண்டு அந்தரம் – மணி 20/107,108

மேல்


வீசு (1)

வீசு நீர் பரப்பின் எதிர்எதிர் இருக்கும் – மணி 8/33

மேல்


வீட்டியது (1)

விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே – மணி 23/85

மேல்


வீட்டிற்கு (1)

உலையா வீட்டிற்கு உறுதி ஆகி – மணி 30/31

மேல்


வீட்டு (1)

இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி 30/178

மேல்


வீடு (10)

கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின் – சிலப்.மது 23/127
விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்டபின் – சிலப்.மது 23/178
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய – சிலப்.வஞ்சி 30/167
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி 1/11
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி 26/51
கழி வெண் பிரப்பில் கலந்து வீடு அணைகுவர் – மணி 27/155
அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன் – மணி 27/169,170
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின் – மணி 27/201
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று – மணி 28/144
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் – மணி 30/155

மேல்


வீடு-செய்ததும் (1)

சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும் – மணி 0/80

மேல்


வீடும் (3)

செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த – மணி 27/176
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய – மணி 30/43,44
கட்டும் வீடும் அதன் காரணத்தது – மணி 30/250

மேல்


வீடே (1)

இன்பம் வீடே பற்றிலி காரணம் – மணி 30/187

மேல்


வீணை (2)

நாரதன் வீணை நயம் தெரி பாடலும் – சிலப்.புகார் 6/18
மங்கலம் இழப்ப வீணை மண் மிசை – சிலப்.புகார் 6/22

மேல்


வீணையின் (1)

மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி 19/25

மேல்


வீதி (9)

நகர வீதி நடுவண் போகி – சிலப்.புகார் 6/129
சுருங்கை வீதி மருங்கில் போகி – சிலப்.மது 14/65
மாதர் வீதி மறுகு-இடை நடந்து – சிலப்.மது 16/103
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி
தண்ணுமை முழவம் தாழ்தரு தீம் குழல் – சிலப்.மது 22/139,140
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து – மணி 4/14
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி
ஆடக செய்வினை மாடத்து ஆங்கண் – மணி 4/51,52
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி 4/54
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி 7/128
கடும் தேர் வீதி காலில் போகி – மணி 18/41

மேல்


வீதியில் (7)

மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு – சிலப்.புகார் 5/156
மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ – மணி 3/85
விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி 3/132,133
மாட வீதியில் மணி தேர் கடைஇ – மணி 4/76
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற – மணி 5/57
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் – மணி 6/20
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி 22/146

மேல்


வீதியின் (2)

ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி 17/84
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த – மணி 28/201

மேல்


வீதியும் (21)

பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் – சிலப்.புகார் 5/15,16
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் – சிலப்.புகார் 5/23,24
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் – சிலப்.புகார் 5/40
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும்
பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் – சிலப்.புகார் 5/40,41
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும்
சூதர் மாதகர் வேதாளிகரொடு – சிலப்.புகார் 5/47,48
முழவு கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவு களி சிறந்த வியலுள் ஆங்கண் – சிலப்.புகார் 5/187,188
வையம் காவலர் மகிழ்தரு வீதியும்
சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் – சிலப்.மது 14/145,146
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும்
வையமும் பாண்டிலும் மணி தேர் கொடுஞ்சியும் – சிலப்.மது 14/167,168
அரசு விழை திருவின் அங்காடி வீதியும்
காகபாதமும் களங்கமும் விந்துவும் – சிலப்.மது 14/179,180
பகை தெறல் அறியா பயம் கெழு வீதியும்
சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் – சிலப்.மது 14/200,201
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும்
நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும் – சிலப்.மது 14/204,205
நறு மடி செறிந்த அறுவை வீதியும்
நிறை கோல் துலாத்தர் பறை கண் பரு அரையர் – சிலப்.மது 14/207,208
கூலம் குவித்த கூல வீதியும்
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 14/211,212
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து – சிலப்.மது 14/213,214
கூல மறுகும் கொடி தேர் வீதியும்
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 22/109,110
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் – மணி 1/43
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் – மணி 1/50
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும் – மணி 4/37
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும்
பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு – மணி 4/37,38
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் – மணி 21/120
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் – மணி 28/61,62

மேல்


வீய (1)

காதலன் வீய கடும் துயர் எய்தி – மணி 18/11

மேல்


வீயா (3)

வீயா திருவின் விழு குடி பிறந்த – சிலப்.மது 23/143
வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் – மணி 20/10
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன் – மணி 22/162

மேல்


வீர (3)

ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.புகார் 0/42
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.மது 22/155
மாரனை வெல்லும் வீர நின் அடி – மணி 11/61

மேல்


வீரரும் (2)

மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும்
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும் – சிலப்.புகார் 5/76,77
யானை வீரரும் இவுளி தலைவரும் – சிலப்.வஞ்சி 26/76

மேல்


வீரன் (3)

விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன்
தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் – சிலப்.புகார் 6/4,5
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – சிலப்.புகார் 10/169
மாரனை வென்று வீரன் ஆகி – மணி 30/11

மேல்


வீரை (2)

வீரை ஆகிய சுதமதி கேளாய் – மணி 7/105
மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் – மணி 12/46

மேல்


வீரையும் (3)

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி 10/51,52
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் – மணி 11/136,137
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
வெம் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி – மணி 12/15,16

மேல்


வீவு (1)

வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் – மணி 15/85

மேல்


வீவும் (3)

அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/85
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/86
காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – சிலப்.வஞ்சி 29/92

மேல்


வீழ் (18)

கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள் – சிலப்.புகார் 4/51
வீழ் பூம் சேக்கை மேவாது கழிய – சிலப்.புகார் 4/65
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு – சிலப்.மது 13/71
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – சிலப்.மது 14/85
மெய் புகு கவசமும் வீழ் மணி தோட்டியும் – சிலப்.மது 14/169
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – சிலப்.மது 20/35
பயம்பில் வீழ் யானை பாகர் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/31
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் – சிலப்.வஞ்சி 25/79
வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – சிலப்.வஞ்சி 28/43
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி 5/120
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப – மணி 5/128
விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும் – மணி 7/53
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும் – மணி 8/29
வீழ் துயர் எய்திய விழும கிளவியின் – மணி 8/38
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி 19/103
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் – மணி 24/102
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி 24/159
யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல் – மணி 30/103

மேல்


வீழ்குடி (1)

வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை – சிலப்.புகார் 5/43

மேல்


வீழ்த்து (5)

படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த – சிலப்.புகார் 6/52
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும் – சிலப்.புகார் 6/53
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – சிலப்.மது 21/19
பொரு முக பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின் – மணி 5/3,4
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி 14/81,82

மேல்


வீழ்த்தோர் (2)

ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்
தம்மின் துன்பம் தாம் நனி எய்த – சிலப்.வஞ்சி 30/30,31
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி 2/73

மேல்


வீழ்தரும் (1)

செறி நிலத்து மறிந்து வீழ்தரும்
நம் கோன்-தன் கொற்ற வாயில் – சிலப்.மது 20/9,10

மேல்


வீழ்தலும் (1)

மால் மணி நிலத்து அற்று வீழ்தலும்
வருவது ஓர் துன்பம் உண்டு என – சிலப்.மது 17/22,23

மேல்


வீழ்ந்த (4)

மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – சிலப்.புகார் 10/68
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்_தலை – சிலப்.மது 11/108
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 21/56
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 23/82

மேல்


வீழ்ந்ததும் (2)

துன்னிய சுற்றம் துயர் கடல் வீழ்ந்ததும்
ஏவலாளர் யாங்கணும் சென்று – சிலப்.மது 13/60,61
படை அமை சேக்கை பள்ளியுள் வீழ்ந்ததும்
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு – சிலப்.மது 13/70,71

மேல்


வீழ்ந்தன (1)

வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி 20/58

மேல்


வீழ்ந்தனளே (1)

இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – சிலப்.மது 20/93

மேல்


வீழ்ந்தனன் (2)

வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி – சிலப்.மது 16/141
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என் – சிலப்.மது 16/216,217

மேல்


வீழ்ந்தனனே (1)

மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன் – சிலப்.மது 20/90

மேல்


வீழ்ந்து (11)

அடிமுதல் வீழ்ந்து ஆங்கு அரும் கணீர் உகுத்து – சிலப்.மது 11/175
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – சிலப்.மது 19/64
அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி 2/61,62
தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் – மணி 6/131
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் – மணி 9/22
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி 9/32
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் – மணி 12/48
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு – மணி 16/107,108
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின – மணி 20/56
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு – மணி 24/6
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன் – மணி 24/87

மேல்


வீழ்ந்தேன் (1)

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியா கிளவி மனக்கொளல் வேண்டும் – சிலப்.மது 13/87,88

மேல்


வீழ்ந்தோர் (1)

கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர்
வந்த காரணம் வயங்கிய கொள்கை – சிலப்.புகார் 10/165,166

மேல்


வீழ்பு (1)

ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன் – மணி 3/107

மேல்


வீழ்வது (2)

வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி 10/47
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது – மணி 23/121,122

மேல்


வீழ (7)

பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ
வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை – சிலப்.புகார் 7/215,216
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – சிலப்.மது 12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின் – சிலப்.மது 12/118
குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் – சிலப்.மது 20/2
திண் தேர் கொடிஞ்சியொடு தேரோர் வீழ
புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர் – சிலப்.வஞ்சி 27/37,38
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ
துடித்தனள் புருவம் துவர் இதழ் செ வாய் – சிலப்.வஞ்சி 30/38,39
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி – மணி 8/36,37

மேல்


வீழா (1)

வெய்யவன் குட-பால் வீழா முன்னர் – மணி 25/30

மேல்


வீழாது (1)

அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி 23/9

மேல்


வீழும் (2)

மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/16
விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும்
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/6,7

மேல்


வீற்றாக (1)

வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி 30/221

மேல்


வீற்றிருக்கும் (2)

விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி – சிலப்.புகார் 2/26,27
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று – சிலப்.வஞ்சி 30/175

மேல்


வீற்றிருந்த (3)

அரைசு வீற்றிருந்த உரை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 8/5
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து – சிலப்.மது 13/36
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த
வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – சிலப்.வஞ்சி 28/42,43

மேல்


வீற்றிருந்து (1)

அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி – மணி 25/81

மேல்


வீற்று (3)

ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – சிலப்.புகார் 10/156
ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – சிலப்.புகார் 10/156
வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி 30/221

மேல்


வீற்று_வீற்றாக (1)

வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி 30/221

மேல்


வீறு (4)

வேறுபடு திருவின் வீறு பெற காண – சிலப்.புகார் 2/87
வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை – சிலப்.புகார் 3/165
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 6/162
சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 10/129

மேல்