மீ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 2
மீ_விசும்பில் 1
மீக்கூற்றாளர் 1
மீட்சி 5
மீட்சித்து 1
மீட்சியும் 2
மீட்டு 1
மீட்டும் 1
மீண்டில 1
மீண்டு 5
மீத்திறம் 2
மீது 5
மீமாஞ்சகம் 1
மீமிசை 8
மீயான் 1
மீள்வேன் 1
மீள 11
மீளா 2
மீளாதபடி 1
மீளாது 4
மீளாமை 1
மீளாமையும் 1
மீளினும் 1
மீளும் 16
மீன் 18
மீன்_அரசு 1
மீன்_ஏற்று_கொடியோன் 1
மீன்களும் 1
மீன 2
மீனத்து 4
மீனின் 1
மீனினும் 1
மீனும் 1

மீ (2)

மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – சிலப்.வஞ்சி 29/105
சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன் – மணி 10/24

மேல்


மீ_விசும்பில் (1)

மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – சிலப்.வஞ்சி 29/105

மேல்


மீக்கூற்றாளர் (1)

மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின் – சிலப்.வஞ்சி 28/149

மேல்


மீட்சி (5)

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு – மணி 27/11
மீட்சி என்பது இராமன் வென்றான் என – மணி 27/53
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய் – மணி 29/66
விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க – மணி 29/76
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி
ஆதி கண்டம் ஆகும் என்ப – மணி 30/133,134

மேல்


மீட்சித்து (1)

சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின் – மணி 29/229

மேல்


மீட்சியும் (2)

மீட்சியும் மீளாமையும் இலை ஆகும் – மணி 29/449
எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி – மணி 30/20

மேல்


மீட்டு (1)

மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு – சிலப்.புகார் 9/39

மேல்


மீட்டும் (1)

சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும்
இலக்கு அண தொடர்தலின் – மணி 30/17,18

மேல்


மீண்டில (1)

அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இமையின் – மணி 29/440

மேல்


மீண்டு (5)

மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி 21/69
சாதன தன்மம் மீண்டு
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் – மணி 29/404,405
சாதன அமூர்த்தம் மீண்டு
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல் – மணி 29/411,412
சாத்திய தன்மம் மீண்டு
சாதன தன்மம் மீளாது ஒழிதல் – மணி 29/414,415
சாத்தியமான நித்தியம் மீண்டு
சாதனமான அமூர்த்த மீளாது – மணி 29/422,423

மேல்


மீத்திறம் (2)

ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை – சிலப்.புகார் 3/53
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து – சிலப்.புகார் 3/148

மேல்


மீது (5)

உள்ளக நறும் தாது உறைப்ப மீது அழிந்து – சிலப்.புகார் 5/235
மீது செல் வெம் கதிர் வெம்மையின் தொடங்க – சிலப்.மது 11/203
மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/42
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி 4/20
உதயகுமரன் உரு கெழு மீது ஊர் – மணி 4/28

மேல்


மீமாஞ்சகம் (1)

மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் – மணி 27/80

மேல்


மீமிசை (8)

ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி – சிலப்.மது 11/42,43
கலி கெழு மீமிசை சேணோன் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/30
வேக யானையின் மீமிசை பொலிந்து – சிலப்.வஞ்சி 27/254
மா மலை மீமிசை ஏறி – சிலப்.வஞ்சி 29/63
பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து – மணி 3/142
பதும சதுரம் மீமிசை விளங்கி – மணி 8/48
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய – மணி 11/22,23
விந்த மால் வரை மீமிசை போகார் – மணி 20/117

மேல்


மீயான் (1)

மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய – மணி 4/29

மேல்


மீள்வேன் (1)

குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன்
ஊழ்வினை பயன்-கொல் உரை_சால் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/69,70

மேல்


மீள (11)

பேதைமை மீள செய்கை மீளும் – மணி 30/119
செய்கை மீள உணர்ச்சி மீளும் – மணி 30/120
உணர்ச்சி மீள அருஉரு மீளும் – மணி 30/121
அருஉரு மீள வாயில் மீளும் – மணி 30/122
வாயில் மீள ஊறு மீளும் – மணி 30/123
ஊறு மீள நுகர்ச்சி மீளும் – மணி 30/124
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் – மணி 30/125
வேட்கை மீள பற்று மீளும் – மணி 30/126
பற்று மீள கரும தொகுதி – மணி 30/127
மீளும் கரும தொகுதி மீள
தோற்றம் மீளும் தோற்றம் மீள – மணி 30/128,129
தோற்றம் மீளும் தோற்றம் மீள
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்பு – மணி 30/129,130

மேல்


மீளா (2)

மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு – சிலப்.மது 13/143
மீளா வென்றி வேந்தன் கேட்டு – சிலப்.வஞ்சி 26/32

மேல்


மீளாதபடி (1)

சாத்திய சாதனம் மீளாதபடி
வைதன்மிய திட்டாந்தம் காட்டல் – மணி 29/431,432

மேல்


மீளாது (4)

சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் – மணி 29/405
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல் – மணி 29/412
சாதன தன்மம் மீளாது ஒழிதல் – மணி 29/415
சாதனமான அமூர்த்த மீளாது
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட – மணி 29/423,424

மேல்


மீளாமை (1)

சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் – மணி 29/426

மேல்


மீளாமையும் (1)

மீட்சியும் மீளாமையும் இலை ஆகும் – மணி 29/449

மேல்


மீளினும் (1)

மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி 21/69

மேல்


மீளும் (16)

பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/130
வறிது மீளும் என் வாய் வாள் ஆகின் – சிலப்.வஞ்சி 26/15
மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும்
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி 21/69,70
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர் – மணி 28/108,109
பேதைமை மீள செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும் – மணி 30/119,120
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருஉரு மீளும் – மணி 30/120,121
உணர்ச்சி மீள அருஉரு மீளும்
அருஉரு மீள வாயில் மீளும் – மணி 30/121,122
அருஉரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும் – மணி 30/122,123
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும் – மணி 30/123,124
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் – மணி 30/124,125
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீள பற்று மீளும் – மணி 30/125,126
வேட்கை மீள பற்று மீளும்
பற்று மீள கரும தொகுதி – மணி 30/126,127
மீளும் கரும தொகுதி மீள – மணி 30/128
தோற்றம் மீளும் தோற்றம் மீள – மணி 30/129
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்பு – மணி 30/130
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி – மணி 30/133

மேல்


மீன் (18)

சாலி ஒரு மீன் தகையாளை கோவலன் – சிலப்.புகார் 1/53
மீன்_அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து – சிலப்.புகார் 4/26
மீன் விலை பரதவர் வெள் உப்பு பகருநர் – சிலப்.புகார் 5/25
மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – சிலப்.புகார் 5/210
வட_மீன் கற்பின் மனை உறை மகளிர் – சிலப்.புகார் 5/229
இடைஇடை மீன் விலை பகர்வோர் விளக்கமும் – சிலப்.புகார் 6/140
விலங்கு வலை பரதவர் மீன் திமில் விளக்கமும் – சிலப்.புகார் 6/142
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – சிலப்.புகார் 7/35
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – சிலப்.புகார் 7/54
புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி கண்டார்க்கு – சிலப்.புகார் 7/65
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க – சிலப்.புகார் 10/2
பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி – சிலப்.மது 13/17
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/7
இரவு வில் இடும் பகல் மீன் விழும் – சிலப்.மது 20/12
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் – மணி 6/182
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் – மணி 12/88
வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை – மணி 20/91
பல் மீன் விலைஞர் வெள் உப்பு பகருநர் – மணி 28/31

மேல்


மீன்_அரசு (1)

மீன்_அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து – சிலப்.புகார் 4/26

மேல்


மீன்_ஏற்று_கொடியோன் (1)

மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – சிலப்.புகார் 5/210

மேல்


மீன்களும் (1)

கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி 28/18,19

மேல்


மீன (2)

மீன கொடி பாடும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/185
விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து – மணி 5/5

மேல்


மீனத்து (4)

மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் – மணி 11/42
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் – மணி 11/42
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் – மணி 15/25
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் – மணி 15/25

மேல்


மீனின் (1)

தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – சிலப்.புகார் 1/27

மேல்


மீனினும் (1)

ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் – மணி 22/142

மேல்


மீனும் (1)

நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/133

மேல்