சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

அடியிற்கண்டுள்ள அட்டவணையில் உள்ள ஏதேனும் ஓர் எழுத்தைச் சுட்டியினால் தட்டினால், அவ் எழுத்தில் தொடங்கும் அனைத்துச் சொற்களின் கூட்டுத் தொடரடைவு அடிகள் கிடைக்கும்

கட்டுருபன்கள்


1. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள்
2. (மணிமேகலையில் இல்லாமல்)சிலப்பதிகாரத்தில் மட்டும் காணப்படும் சொற்கள்
3. (சிலப்பதிகாரத்தில் இல்லாமல்)மணிமேகலையில் மட்டும் காணப்படும் சொற்கள்

முக்கிய குறிப்பு

ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட சொற்களே பொதுவான சொற்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அஃது, அஃதே என்பன வெவ்வேறான சொற்கள்

சிலப்பதிகாரத்தில் உள்ள அகவையான் என்ற சொல் மணிமேகலையில் இல்லை. ஆனால் அகவையின் என்ற சொல் மணிமேகலையில் உண்டு.

சிலப்பதிகாரத்தில் உள்ள நோன்பாளர் என்ற சொல் மணிமேகலையில் இல்லை. ஆனால் நோன்பிகள் என்ற சொல் மணிமேகலையில் உண்டு.

எனவே,
(மணிமேகலையில் இல்லாமல்)சிலப்பதிகாரத்தில் மட்டும் காணப்படும் சொற்கள் –
என்ற பகுதியில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் மணிமேகலையில் உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும்.

சிலப்பதிகாரத்தில் காணப்படும் அகவல், அங்கம், எக்கர், கைதை, நொண்டு ஆகிய சொற்களும் அந்தச் சொற்களை ஒட்டிய சொற்களும் மணிமேகலையில் இல்லை.

மணிமேகலையில் காணப்படும் உபாகர், காரியம், தன்மம், தீபம், பிரத்தியம், புத்தி, விபக்கம், வைசேடிகன் ஆகிய சொற்களும் அந்தச் சொற்களை ஒட்டிய சொற்களும் சிலப்பதிகாரத்தில் இல்லை.

பொதுச் சொற்களுக்குரிய கூட்டுத் தொடரடைவுகளில் பொதுவான தொடர்கள் உள்ளனவா என்று கண்டறிதல் சிறப்பு.

முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

சிலப்பதிகாரம்

 1.புகார்க் காண்டம்
 2.மதுரைக் காண்டம்
 3.வஞ்சிக் காண்டம்

மணிமேகலை