மை – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

மை (19)

மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப – சிலப்.புகார் 4/56
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து – சிலப்.புகார் 6/108
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – சிலப்.புகார் 7/2
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி – சிலப்.புகார் 8/22
மை அறு சிறப்பின் வான நாடி – சிலப்.மது 11/215
மை இரும் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப – சிலப்.மது 15/51
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – சிலப்.மது 16/56
மை தடம் கண்ணார் மைந்தர்-தம்முடன் – சிலப்.மது 22/120
மை அறு சிறப்பின் ஐயை கோயில் – சிலப்.மது 23/107
மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – சிலப்.வஞ்சி 30/10
மை தட கண்ணார்-தமக்கும் எ பயந்த – மணி 2/70
மை_அறு படிவத்து வானவர் முதலா – மணி 3/128
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி 5/54
மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ – மணி 7/96
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி 13/110
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி 25/29
மை_அறு மண்டிலம் போல காட்ட – மணி 25/137
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த – மணி 26/70
மை நிண விலைஞர் பாசவர் வாசவர் – மணி 28/33

மேல்


மை_அறு (6)

மை_அறு படிவத்து வானவர் முதலா – மணி 3/128
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி 5/54
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி 13/110
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி 25/29
மை_அறு மண்டிலம் போல காட்ட – மணி 25/137
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த – மணி 26/70

மேல்


மை_ஈர்_ஓதி (1)

மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – சிலப்.வஞ்சி 30/10

மேல்


மை_ஈர்_ஓதியை (1)

மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – சிலப்.மது 16/56

மேல்


மைத்திரி (1)

மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து – மணி 30/256

மேல்


மைத்து (1)

மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி 12/85

மேல்


மைத்துன (1)

மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா – சிலப்.வஞ்சி 27/118

மேல்


மைத்துனன் (3)

மைத்துனன் ஆகிய பிரமதருமன் – மணி 9/15
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு – மணி 22/86
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி 22/97

மேல்


மைந்தர் (2)

வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர்
மலைத்து தலைவந்தோர் வாளொடு மடிய – சிலப்.வஞ்சி 27/34,35
புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர்
மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – சிலப்.வஞ்சி 27/38,39

மேல்


மைந்தர்-தம்முடன் (1)

மை தடம் கண்ணார் மைந்தர்-தம்முடன்
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை – சிலப்.மது 22/120,121

மேல்


மைந்தர்க்கு (1)

மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து – சிலப்.வஞ்சி 28/36

மேல்


மைந்தரும் (4)

மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த – சிலப்.மது 13/124
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி – சிலப்.மது 14/102
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
வான கடவுளரும் மாதவரும் கேட்டீ-மின் – சிலப்.மது 21/39,40
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப – சிலப்.வஞ்சி 28/41

மேல்


மைந்தற்கு (2)

மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் – சிலப்.வஞ்சி 27/88
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில் – மணி 21/6

மேல்


மைந்தன் (4)

மகர வெல் கொடி மைந்தன் திரிதர – சிலப்.புகார் 4/83
மகர வெல் கொடி மைந்தன் சேனை – சிலப்.புகார் 8/10
சோழன் மகள் ஈன்ற மைந்தன்
கொங்கர் செம் களம் வேட்டு – சிலப்.வஞ்சி 29/4,5
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் – மணி 22/158

மேல்


மைந்தனும் (1)

மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும்
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் – மணி 19/100,101

மேல்


மைந்தனை (2)

கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை
உயாவு துணையாக வயாவொடும் போகி – மணி 20/92,93
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது – மணி 29/10

மேல்


மைந்து (2)

மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – சிலப்.புகார் 8/120
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும் – மணி 0/76

மேல்


மைம் (2)

மைம் மலர் உண்கண் மடந்தையர் அடங்கா – சிலப்.வஞ்சி 28/15
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி 12/5

மேல்


மையல் (8)

மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் – சிலப்.புகார் 7/190
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/104
மையல் நெஞ்சமொடு வயந்தமாலையும் – மணி 2/74
மையல் உற்ற மகன் பின் வருந்தி – மணி 3/114
மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி 22/96
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி 23/103
மையல் தறியோ மகனோ என்றல் – மணி 27/66
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி 27/282

மேல்


மையலேன் (1)

எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி 18/85

மேல்