நே – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

நேமி (4)

நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/155
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/159
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – சிலப்.மது 15/1,2
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி 13/57

மேல்


நேர் (18)

நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – சிலப்.புகார் 7/47
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – சிலப்.புகார் 7/68
மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர் – சிலப்.புகார் 7/194
பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர் – சிலப்.புகார் 7/198
நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன் – சிலப்.வஞ்சி 24/71
நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும் – சிலப்.வஞ்சி 24/76
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி 2/16
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி 4/90
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி 6/36
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி 7/110
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி 9/44
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி 11/47
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி 12/12
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி 15/80
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி 22/44
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி 22/58
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி 23/66
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி 29/102

மேல்


நேர்_இழை (5)

நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி 6/36
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி 9/44
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி 11/47,48
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி 15/80
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி 22/44

மேல்


நேர்_இழை-தன்னை (1)

நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி – மணி 4/90,91

மேல்


நேர்_இழை-தன்னோடும் (1)

நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும்
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால் – சிலப்.வஞ்சி 24/76,77

மேல்


நேர்_இழைக்கு (2)

நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி 12/12
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி 22/58

மேல்


நேர்தல் (1)

காரணம் இன்றி காரியம் நேர்தல்
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/214,215

மேல்


நேர்ந்த (3)

நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/155
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/159
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து – சிலப்.மது 13/14

மேல்


நேர்ந்தது (1)

அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது
கவரா கேள்வியோர் கடவார் ஆகலின் – மணி 1/9,10

மேல்


நேர்ந்து (1)

நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த – சிலப்.வஞ்சி 25/178,179

மேல்


நேர்படுதலும் (1)

நின்ற சைவ வாதி நேர்படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன – மணி 27/87,88

மேல்


நேர (1)

நேர தோன்றும் வரியும் குரவையும் – சிலப்.மது 23/215

மேல்


நேரப்படுமே (1)

நிகழ்ந்த காலம் என நேரப்படுமே
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி 30/162,163

மேல்


நேரார் (1)

கடம் பூண் தெய்வமாக நேரார்
மடவர்-மன்ற இ சிறுகுடியோரே – சிலப்.வஞ்சி 24/98,99

மேல்


நேரிய (1)

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான – மணி 29/91

மேல்


நேரிவாயில் (1)

நேரிவாயில் நிலை செரு வென்று – சிலப்.வஞ்சி 28/117

மேல்


நேரும்-காலை (1)

நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை
குற்றமும் வினையும் பயனும் துன்பம் – மணி 30/174,175

மேல்