நொ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொங்க 1
நொச்சி 1
நொச்சியே 1
நொடி 8
நொடிக்கும் 1
நொடித்தான்மலை 9
நொடித்தான்மலையை 1
நொடிந்த 1
நொடிப்பது 2
நொடிப்பளவு 1
நொடிமையினார் 1
நொடிய 1
நொடியில் 3
நொடியின் 1
நொடியினில் 1
நொடிவது 1
நொந்த 1
நொந்தா 1
நொந்தார் 1
நொந்தினார் 1
நொய்ம் 1
நொய்ய 1
நொய்யது 1
நொய்யவர் 1
நொய்யன் 1
நொய்யன 1
நொய்யானை 1
நொய்யேனை 1

நொங்க (1)

திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3
மேல்


நொச்சி (1)

நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் – தேவா-சுந்:997/3
மேல்


நொச்சியே (1)

நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் – தேவா-சம்:1591/1
மேல்


நொடி (8)

நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/2
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே – தேவா-சம்:1408/4
நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும் – தேவா-சம்:2488/1
ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி
காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல் – தேவா-சம்:3152/2,3
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில் – தேவா-சம்:3727/1
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால் – தேவா-அப்:939/1
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
மேல்


நொடிக்கும் (1)

நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
மேல்


நொடித்தான்மலை (9)

ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1017/4
ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1018/4
தரமோ நெஞ்கமே நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1019/4
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1020/4
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1021/4
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1022/4
உலை அணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1023/4
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1024/4
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1025/4
மேல்


நொடித்தான்மலையை (1)

ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/1,2
மேல்


நொடிந்த (1)

நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2
மேல்


நொடிப்பது (2)

நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ – தேவா-அப்:303/3
நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார் – தேவா-சுந்:446/2
மேல்


நொடிப்பளவு (1)

நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் – தேவா-அப்:459/3
மேல்


நொடிமையினார் (1)

உள்வேர் போல நொடிமையினார் திறம் – தேவா-சம்:582/1
மேல்


நொடிய (1)

வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/2
மேல்


நொடியில் (3)

நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில்
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த – தேவா-சம்:3497/2,3
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
மேல்


நொடியின் (1)

உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ – தேவா-அப்:713/3
மேல்


நொடியினில் (1)

ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி – தேவா-சம்:1342/2
மேல்


நொடிவது (1)

நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/2
மேல்


நொந்த (1)

நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார் – தேவா-சம்:758/1
மேல்


நொந்தா (1)

நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன் – தேவா-சுந்:209/1
மேல்


நொந்தார் (1)

நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
மேல்


நொந்தினார் (1)

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே – தேவா-அப்:2078/1,2
மேல்


நொய்ம் (1)

நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார் – தேவா-சம்:1916/1
மேல்


நொய்ய (1)

நோயனை தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய – தேவா-சுந்:346/1
மேல்


நொய்யது (1)

நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
மேல்


நொய்யவர் (1)

நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
மேல்


நொய்யன் (1)

ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1
மேல்


நொய்யன (1)

நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
மேல்


நொய்யானை (1)

ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/2
மேல்


நொய்யேனை (1)

நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனை பொருள்படுத்து – தேவா-சுந்:528/2

மேல்