மோ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

மோகம் (1)

முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


மோட்டு (4)

முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி – தேவா-சம்:50/1
பொன் இயல் சீவரத்தார் புளி தட்டையர் மோட்டு அமணர் குண்டர் – தேவா-சம்:1150/1
வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை – தேவா-சம்:3303/3
மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர் – தேவா-சம்:3436/1
மேல்


மோடி (3)

மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர் – தேவா-சம்:2263/1
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/2,3
போகம் ஆர் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் – தேவா-அப்:646/1
மேல்


மோடியை (1)

போகம் கொண்டார் கடல் கோடியில் மோடியை பூண்பது ஆக – தேவா-சுந்:169/3
மேல்


மோடு (1)

மோடு உடைய சமணர்க்கும் முடை உடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த – தேவா-சுந்:921/3
மேல்


மோத்தையை (1)

மோத்தையை கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன் – தேவா-அப்:732/1
மேல்


மோத (8)

கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி – தேவா-சம்:814/1
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி – தேவா-சம்:2422/3
தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே – தேவா-சம்:3690/4
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத – தேவா-அப்:2118/1
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே – தேவா-சுந்:440/2
மேல்


மோதம் (1)

நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/3
மேல்


மோதி (8)

கடல் ஏறி திரை மோதி காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி – தேவா-சம்:1395/3
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து – தேவா-சம்:1410/2,3
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் – தேவா-சம்:1994/1
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3779/2,3
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4129/3,4
முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:85/3,4
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/3
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:504/3
மேல்


மோதிய (1)

படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் – தேவா-சம்:4068/2
மேல்


மோதியும் (1)

கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:499/2
மேல்


மோதிரம் (1)

முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட – தேவா-சுந்:1029/3
மேல்


மோதும் (2)

தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:335/4
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே – தேவா-அப்:340/4
மேல்


மோதுவிப்பாய் (2)

மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:956/4
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய் – தேவா-சுந்:233/2
மேல்


மோந்து (1)

ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு – தேவா-சம்:939/3
மேல்


மோந்தை (1)

மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/2
மேல்


மோந்தையோடு (1)

மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:506/3
மேல்


மோழைமை (1)

முன்பு எலாம் சில மோழைமை பேசுவர் – தேவா-அப்:1368/1
மேல்


மோழைமையால் (1)

முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே – தேவா-சுந்:69/2
மேல்


மோறாந்து (1)

மோறாந்து ஓர் ஒரு-கால் நினையாது இருந்தாலும் – தேவா-சுந்:211/1
மேல்


மோறை (1)

மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:501/3
மேல்


மோனிகளாய் (1)

மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/4

மேல்