தேவாரம், இரண்டாம் திருமுறை


பதிக எண்கள்
1 || 51 || 101

2 || 52 || 102

3 || 53 || 103

4 || 54 || 104

5 || 55 || 105

6 || 56 || 106

7 || 57 || 107

8 || 58 || 108

9 || 59 || 109

10 || 60 || 110

11 || 61 || 111

12 || 62 || 112

13 || 63 || 113

14 || 64 || 114

15 || 65 || 115

16 || 66 || 116

17 || 67 || 117

18 || 68 || 118

19 || 69 || 119

20 || 70 || 120
21 || 71 || 121

22 || 72 || 122

23 || 73 || —–

24 || 74 || —–

25 || 75 || —–

26 || 76 || —–

27 || 77 || —–

28 || 78 || —–

29 || 79 || —–

30 || 80 || —–

31 || 81 || —–

32 || 82 || —–

33 || 83 || —–

34 || 84 || —–

35 || 85 || —–

36 || 86 || —–

37 || 87 || —–

38 || 88 || —–

39 || 89 || —–

40 || 90 || —–

41 || 91 || —–

42 || 92 || —–

43 || 93 || —–

44 || 94 || —–

45 || 95 || —–

46 || 96 || —–

47 || 97 || —–

48 || 98 || —–

49 || 99 || —–

50 || 100 || —–

1. திருப்பூந்தராய் : பண் – இந்தளம்

#1470
செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர்
பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே

மேல்

#1471
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன் திகழ் கமல பழனம் புகு பூந்தராய்
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ பெருமானிரே

மேல்

#1472
சங்கு செம்பவள திரள் முத்து அவை தாம் கொடு
பொங்கு தெண் திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்
துங்க மால் களிற்றின் உரி போர்த்து உகந்தீர் சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே

மேல்

#1473
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்
சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர்
காமன் வெண்பொடி ஆக கடைக்கண் சிவந்ததே

மேல்

#1474
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன
புள்ளும் நாள்-தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய்
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர்
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே

மேல்

#1475
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர்
காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே

மேல்

#1476
வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள்
தரு கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்
துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே

மேல்

#1477
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர்
கரிய மால் அயன் நேடி உமை கண்டிலாமையை

மேல்

#1478
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல்
புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய்
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர்
குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே

மேல்

#1479
மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய்
புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய்
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார்
அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவரே

மேல்

2. திருவலஞ்சுழி : பண் – இந்தளம்

#1480
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர்
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே

மேல்

#1481
பாரல் வெண் குருகும் பகு வாயன நாரையும்
வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர்
ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே

மேல்

#1482
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய்
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி
சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர்
விண்ணவர் தொழ வெண் தலையில் பலி கொண்டதே

மேல்

#1483
கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி
சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர்
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே

மேல்

#1484
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய்
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர்
சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே

மேல்

#1485
பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பன் மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர்
ஏச வெண் தலையில் பலி கொள்வது இலாமையே

மேல்

#1486
கந்த மா மலர் சந்தொடு கார் அகிலும் தழீஇ
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர்
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே

மேல்

#1487
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே

மேல்

#1488
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர்
சீர்த்த வெண் தலையில் பலி கொள்வதும் சீர்மையே

மேல்

#1489
உரம் மனும் சடையீர் விடையீர் உமது இன்னருள்
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி
பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே

மேல்

#1490
வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே

மேல்

3. திருத்தெளிச்சேரி : பண் – இந்தளம்

#1491
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன் கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்
மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம்
பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே

மேல்

#1492
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே

மேல்

#1493
வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ்
செம்பு அடுத்த செழும் புரிசை தெளிச்சேரியீர்
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே

மேல்

#1494
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரை பெயும்
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர்
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே

மேல்

#1495
பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்
செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர்
மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே

மேல்

#1496
தவள வெண் பிறை தோய்தரு தாம் பொழில் சூழ நல்
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்
குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே

மேல்

#1497
கோடு அடுத்த பொழிலின் மிசை குயில் கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையை
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே

மேல்

#1498
கொத்து இரைத்த மலர் குழலாள் குயில் கோலம் சேர்
சித்திர கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்
வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை
பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே

மேல்

#1499
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ்
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர்
மால் அடித்தலம் மா மலரான் முடி தேடியே
ஓலமிட்டிட எங்ஙனம் ஓர் உரு கொண்டதே

மேல்

#1500
மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர்
செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர்
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே

மேல்

#1501
திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே

மேல்

4. திருவான்மியூர் : பண் – இந்தளம்

#1502
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்
உரை உலாம் பொருளாய் உலகு ஆளுடையீர் சொலீர்
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே

மேல்

#1503
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம்
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர்
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே

மேல்

#1504
கான் அயங்கிய தண் கழி சூழ் கடலின் புறம்
தேன் அயங்கிய பைம் பொழில் சூழ் திரு வான்மியூர்
தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர்
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே

மேல்

#1505
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகை
செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர்
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே

மேல்

#1506
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர்
துண்ணென திரியும் சரிதை தொழிலீர் சொலீர்
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே

மேல்

#1507
போது உலாவிய தண் பொழில் சூழ் புரிசை புறம்
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர்
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர் சொலீர்
மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே

மேல்

#1508
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய்
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே

மேல்

#1509
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற
திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என் சொலீர்
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே

மேல்

#1510
பொருது வார் கடல் எண் திசையும் தரு வாரியால்
திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர்
எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே

மேல்

#1511
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம்
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்
மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர்
கை தவ சமண் சாக்கியர் கட்டுரைக்கின்றதே

மேல்

#1512
மாது ஓர் கூறு உடை நல் தவனை திரு வான்மியூர்
ஆதி எம்பெருமான் அருள்செய்ய வினா உரை
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே

மேல்

5. திருஅனேகதங்காவதம் : பண் – இந்தளம்

#1513
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை
சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே

மேல்

#1514
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல்
ஆலம் உண்ட பெருமான்-தன் அனேகதங்காவதம்
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர்
கோலம் உண்டு அளவு இல்லை குலாவிய கொள்கையே

மேல்

#1515
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர்
அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடி கொல் ஏறு உடை
நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே

மேல்

#1516
தந்தத்திந்தத்தடம் என்ற அருவி திரள் பாய்ந்து போய்
சிந்த வெந்த கதிரோனோடு மாசு அறு திங்கள் ஆர்
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம்
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே

மேல்

#1517
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய்
உறையும் கோயில் பசும்பொன் அணியார் அசும்பு ஆர் புனல்
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே

மேல்

#1518
தேனை ஏறு நறு மா மலர் கொண்டு அடி சேர்த்துவீர்
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம்
வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல்
ஆன் நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே

மேல்

#1519
வெருவி வேழம் இரிய கதிர் முத்தொடு வெண் பளிங்கு
உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள்
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம்
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே

மேல்

#1520
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன்
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம்
வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே

மேல்

#1521
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய்
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே

மேல்

#1522
மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர்
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம்
ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்
காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே

மேல்

#1523
தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே

மேல்

6. திருவையாறு : பண் – இந்தளம்

#1524
கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர்
ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார்
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1525
தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே
பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர்
துன்ன ஆடை உடுப்பர் சுடலை பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1526
கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண் தலை
மாறில் ஆரும் கொள்வார் இலை மார்பில் அணிகலன்
ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1527
பண்ணின் நல்ல மொழியார் பவள துவர் வாயினார்
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார்
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1528
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி
ஆன் அஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1529
எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும்
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய்
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1530
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம்
சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான்
வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய்
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1531
குரவ நாள் மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய்
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால்
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1532
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார்
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1533
மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன் கழல்
கோலமாய் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயானே

மேல்

#1534
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால்
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல
மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே

மேல்

#1535
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை
கலி கடிந்த கையான் கடல் காழியர் காவலன்
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய்
மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே

மேல்

7. திருவாஞ்சியம் : பண் – இந்தளம்

#1536
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்
தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம்
என்னை ஆளுடையான் இடம் ஆக உகந்ததே

மேல்

#1537
காலகாலர் கரி கானிடை மா நடம் ஆடுவர்
மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர்
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணிய பொலி கோயில் நயந்ததே

மேல்

#1538
மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவில் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர்
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்
பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே

மேல்

#1539
சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே
சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம்
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே

மேல்

#1540
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல்
தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர்
செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து
ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அரு நோய்களே

மேல்

#1541
அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகம்-தொறும்
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம்
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே

மேல்

#1542
விண்ணில் ஆன பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து
அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே

மேல்

#1543
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர்
வேடவேடர் திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே

மேல்

#1544
செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை
கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து
அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே

மேல்

#1545
பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார்
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லவே

மேல்

#1546
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால்
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார் உயர் வானமே

மேல்

8. திருச்சிக்கல் : பண் – இந்தளம்

#1547
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை
தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்_பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே

மேல்

#1548
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ்
திடம் கொள் மா மறையோரவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்_பெருமான் அடி மேவியே
அடைந்து வாழும் அடியாரவர் அல்லல் அறுப்பரே

மேல்

#1549
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண் கண்ணியினாளை ஒர்பாகன் வெண்ணெய்_பிரான்
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே

மேல்

#1550
கந்தம் உந்த கைதை பூத்து கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல்
சிந்தைசெய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே

மேல்

#1551
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு
தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்
வெம் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்_பிரான் அடி மேவவே
தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே

மேல்

#1552
வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ்
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி
கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே

மேல்

#1553
முன்னு மாடம் மதில் மூன்று உடனே எரியாய் விழ
துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான்
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி
உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே

மேல்

#1554
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை
பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி
உற்று நீ நினையாய் வினை ஆயின ஓயவே

மேல்

#1555
மாலினோடு அரு மா மறை வல்ல முனிவனும்
கோலினார் குறுக சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்_பிரான்
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே

மேல்

#1556
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா
கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர்
சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை
பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே

மேல்

#1557
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல்
செம் தண் பூம் பொழில் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி
சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே

மேல்

9. திருமழபாடி : பண் – இந்தளம்

#1558
களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு
அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே

மேல்

#1559
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிர திரள்
ஆச்சிலாத பளிங்கினன் அஞ்சும் முன் ஆடினான்
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின்
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே

மேல்

#1560
உரம் கெடுப்பவன் உம்பர்கள் ஆயவர்-தங்களை
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன்
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே

மேல்

#1561
பள்ளம் ஆர் சடையின் புடையே அடைய புனல்
வெள்ளம் ஆதரித்தான் விடை ஏறிய வேதியன்
வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே

மேல்

#1562
தேன் உலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள்
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன்
வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே

மேல்

#1563
தெரிந்தவன் புரம் மூன்று உடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான்
வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை
புரிந்து கைதொழு-மின் வினை ஆயின போகுமே

மேல்

#1564
சந்த வார் குழலாள் உமை தன் ஒருகூறு உடை
எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை
சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே

மேல்

#1565
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற
விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே

மேல்

#1566
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்
காலன் ஆருயிர் வீட்டிய மா மணி கண்டனார்
சால நல் அடியார் தவத்தார்களும் சார்விடம்
மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே

மேல்

#1567
கலியின் வல் அமணும் கரும் சாக்கிய பேய்களும்
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி
பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும்
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே

மேல்

#1568
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன்
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே

மேல்

10. திருமங்கலக்குடி : பண் – இந்தளம்

#1569
சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே

மேல்

#1570
பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே

மேல்

#1571
கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார்
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர் மலர் கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே

மேல்

#1572
பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று
முறையினால் வணங்குமவர் முன்நெறி காண்பரே

மேல்

#1573
ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர்
மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே

மேல்

#1574
தேனுமாய் அமுது ஆகி நின்றான் தெளி சிந்தையுள்
வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி
கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே

மேல்

#1575
வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே
வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி
ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே
கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே

மேல்

#1576
பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி
புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர்
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே

மேல்

#1577
ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன்
மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி
ஏல வார் குழலாள் ஒருபாகம் இடம் கொடு
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே

மேல்

#1578
மெய்யில் மாசினர் மேனி விரி துவர் ஆடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடி
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே

மேல்

#1579
மந்த மா பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே

மேல்

11. சீகாழி : பண் – இந்தளம்

#1580
நல்லானை நான்மறையோடு இயல் ஆறு அங்கம்
வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே

மேல்

#1581
நம் மானம் மாற்றி நமக்கு அருளாய் நின்ற
பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தணர் சேரும் அணி காழி
எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே

மேல்

#1582
அருந்தானை அன்பு செய்து ஏத்தகில்லார்-பால்
பொருந்தானை பொய் அடிமை தொழில் செய்வாருள்
விருந்தானை வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே

மேல்

#1583
புற்றானை புற்று அரவம் அரையின் மிசை
சுற்றானை தொண்டு செய்வாரவர்-தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி அமர் கோயில்
பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே

மேல்

#1584
நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம்
விதியானை விண்ணவர்தாம் வியந்து ஏத்திய
கதியானை கார் உலவும் பொழில் காழி ஆம்
பதியானை பாடு-மின் நும் வினை பாறவே

மேல்

#1585
செப்பு ஆன மென்முலையாளை திகழ் மேனி
வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடல் காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே

மேல்

#1586
துன்பானை துன்பம் அழித்து அருள் ஆக்கிய
இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார்
அன்பானை அணி பொழில் காழி நகர் மேய
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே

மேல்

#1587
குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும்
வென்றானை மென்மலரானொடு மால் தேட
நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள்
நன்றானை நம்பெருமானை நணுகுமே

மேல்

#1588
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின்
பூ ஆய கொன்றையினானை புனல் காழி
கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே

மேல்

#1589
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள்
ஒழியாது கோயில்கொண்டானை உகந்து உள்கி
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர
மொழிவார்கள் மூஉலகும் பெறுவார்களே

மேல்

12. திருக்கச்சியேகம்பம் : பண் – இந்தளம்

#1590
மறையானை மாசு இலா புன் சடை மல்கு வெண்
பிறையானை பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை
இறையானை ஏர் கொள் கச்சி திரு ஏகம்பத்து
உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே

மேல்

#1591
நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம்
உச்சியே புனைதல் வேடம் விடைஊர்தியான்
கச்சி ஏகம்பம் மேய கறை_கண்டனை
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே

மேல்

#1592
பார் ஆரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர்
ஏர் ஆர் பூம் கச்சி ஏகம்பனை எம்மானை
சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே

மேல்

#1593
குன்று ஏய்க்கும் நெடு வெண் மாட கொடி கூடி போய்
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன் கச்சியுள்
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்
சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே

மேல்

#1594
சடையானை தலை கை ஏந்தி பலி தருவார்-தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலி கச்சியுள்
புடையே பொன் மலரும் கம்பை கரை ஏகம்பம்
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே

மேல்

#1595
மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம்
கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே

மேல்

#1596
விண் உளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார்
கண் உளார் கழலின் வெல்வார் கரி காலனை
நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து
அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே

மேல்

#1597
தூயானை தூய ஆயம் மறை ஓதிய
வாயானை வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம்
மேயானை மேவுவார் என் தலைமேலாரே

மேல்

#1598
நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார்
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர்
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே

மேல்

#1599
போதியார் பிண்டியார் என்று இவர் பொய் நூலை
வாதியா வம்-மின் அம் மா எனும் கச்சியுள்
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே

மேல்

#1600
அம் தண் பூம் கச்சி ஏகம்பனை அம்மானை
கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால்
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட கெடும் பாவமே

மேல்

13. திருக்கோழம்பம் : பண் – இந்தளம்

#1601
நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே

மேல்

#1602
மை ஆன கண்டனை மான் மறி ஏந்திய
கையானை கடி பொழில் கோழம்பம் மேவிய
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே

மேல்

#1603
ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை வெண் குழை தோடு விளங்கிய
காதனை கடி பொழில் கோழம்பம் மேவிய
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே

மேல்

#1604
சடையானை தண் மலரான் சிரம் ஏந்திய
விடையானை வேதமும் வேள்வியும் ஆய நன்கு
உடையானை குளிர் பொழில் சூழ் திரு கோழம்பம்
உடையானை உள்கு-மின் உள்ளம் குளிரவே

மேல்

#1605
காரானை கடி கமழ் கொன்றை அம் போது அணி
தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய
சீரானை செறி பொழில் கோழம்பம் மேவிய
ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே

மேல்

#1606
பண்டு ஆலின் நீழலானை பரஞ்சோதியை
விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ
கண்டானை கடி கமழ் கோழம்பம் கோயிலா
கொண்டானை கூறு-மின் உள்ளம் குளிரவே

மேல்

#1607
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த
வில்லானை வேதமும் வேள்வியும் ஆனானை
கொல் ஆனை உரியானை கோழம்பம் மேவிய
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே

மேல்

#1608
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனை
குற்றானை திரு விரலால் கொடும் காலனை
செற்றானை சீர் திகழும் திரு கோழம்பம்
பற்றானை பற்றுவார் மேல் வினை பற்றாவே

மேல்

#1609
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர்
படியானை பண்டங்க வேடம் பயின்றானை
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின்
கொடியானை கூறு-மின் உள்ளம் குளிரவே

மேல்

#1610
புத்தரும் தோகை அம் பீலி கொள் பொய்ம்மொழி
பித்தரும் பேசுவ பேச்சு அல்ல பீடு உடை
கொத்து அலர் தண் பொழில் கோழம்பம் மேவிய
அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே

மேல்

#1611
தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே

மேல்

14. திருவெண்ணியூர் : பண் – இந்தளம்

#1612
சடையானை சந்திரனோடு செம் கண் அரா
உடையானை உடை தலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே

மேல்

#1613
சோதியை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட எம்
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை வேதியர்தாம் தொழும் வெண்ணியில்
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே

மேல்

#1614
கனிதனை கனிந்தவரை கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை
நனிதனை நல்லவர்தாம் தொழும் வெண்ணியில்
இனிதனை ஏத்துவர் ஏதம் இலாதாரே

மேல்

#1615
மூத்தானை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியாய்
காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக
ஆர்த்தானை அழகு அமர் வெண்ணி அம்மான்-தன்னை
ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே

மேல்

#1616
நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை
தாரானை தையல் ஓர்பாகம் உடையானை
சீரானை திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை
ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே

மேல்

#1617
முத்தினை முழு வயிர திரள் மாணிக்க
தொத்தினை துளக்கம் இலாத விளக்கு ஆய
வித்தினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே

மேல்

#1618
காய்ந்தானை காமனையும் செறு காலனை
பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில்
மேய்ந்தானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே

மேல்

#1619
மறுத்தானை மா மலையை மதியாது ஓடி
செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி
இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் என
பொறுத்தானை போற்றுவார் ஆற்றல் உடையாரே

மேல்

#1620
மண்ணினை வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினை கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே

மேல்

#1621
குண்டரும் குணம் இலாத சமண் சாக்கிய
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்-மின்
விண்டவர்-தம் புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே

மேல்

#1622
மரு ஆரும் மல்கு காழி திகழ் சம்பந்தன்
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை
உரு ஆரும் ஒண் தமிழ் மாலை இவை வல்லார்
பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே

மேல்

15. திருக்காறாயில் : பண் – இந்தளம்

#1623
நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை
தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும்
சீரானே சீர் திகழும் திரு காறாயில்
ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே

மேல்

#1624
மதியானே வரி அரவோடு உடன் மத்தம் சேர்
விதியானே விதி உடை வேதியர்தாம் தொழும்
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில்
பதியானே என்பவர் பாவம் இலாதாரே

மேல்

#1625
விண்ணானே விண்ணவர் ஏத்த விரும்பும் சீர்
மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே கடி பொழில் சூழ் திரு காறாயில்
எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே

மேல்

#1626
தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே ஆய நல் அன்பர்க்கு அணியானே
சேயானே சீர் திகழும் திரு காறாயில்
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே

மேல்

#1627
கலையானே கலை மலி செம்பொன் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர் திகழும் திரு காறாயில்
நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே

மேல்

#1628
ஆற்றானே ஆறு அணி செம் சடை ஆடு அரவு
ஏற்றானே ஏழ்உலகும் இமையோர்களும்
போற்றானே பொழில் திகழும் திரு காறாயில்
நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே

மேல்

#1629
சேர்த்தானே தீவினை தேய்ந்து அற தேவர்கள்
ஏத்தானே ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர்
காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில்
ஆர்த்தானே என்பவர் மேல் இடர் அடராவே

மேல்

#1630
கடுத்தானே காலனை காலால் கயிலாயம்
எடுத்தானை ஏதம் ஆகம் முனிவர்க்கு இடர்
கெடுத்தானே கேழ் கிளரும் திரு காறாயில்
அடுத்தானே என்பவர் மேல் வினை அடராவே

மேல்

#1631
பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே எழில் திகழும் திரு காறாயில்
உறைவானே என்பவர் மேல் வினை ஓடுமே

மேல்

#1632
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும்
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை
கடி ஆரும் பூம் பொழில் சூழ் திரு காறாயில்
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை குற்றமே

மேல்

#1633
ஏய்ந்த சீர் எழில் திகழும் திரு காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே

மேல்

16. திருமணஞ்சேரி : பண் – இந்தளம்

#1634
அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே

மேல்

#1635
விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான்
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
பதியானை பாட வல்லார் வினை பாறுமே

மேல்

#1636
எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய
இப்பாலாய் எனையும் ஆள உரியானை
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே

மேல்

#1637
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம்
உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே

மேல்

#1638
எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம்
வெறி ஆரும் செம் சடை ஆர மிலைந்தானை
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரி
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே

மேல்

#1639
மொழியானை முன் ஒரு நான்மறை ஆறு அங்கம்
பழியாமை பண் இசை ஆன பகர்வானை
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே

மேல்

#1640
எண்ணானை எண் அமர் சீர் இமையோர்கட்கு
கண்ணானை கண் ஒருமூன்றும் உடையானை
மண்ணானை மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே

மேல்

#1641
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள்
கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே

மேல்

#1642
சொல்லானை தோற்றம் கண்டானும் நெடு மாலும்
கல்லானை கற்றன சொல்லி தொழுது ஓங்க
வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே

மேல்

#1643
சற்றேயும் தாம் அறிவு இல் சமண் சாக்கியர்
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே

மேல்

#1644
கண் ஆரும் காழியர்_கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே

மேல்

17. திருவேணுபுரம் : பண் – இந்தளம்

#1645
நிலவும் புனலும் நிறை வாள் அரவும்
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல் ஆர் வேணுபுரமே

மேல்

#1646
அரவு ஆர் கரவன் அமை ஆர் திரள் தோள்
குரவு ஆர் குழலாள் ஒருகூறன் இடம்
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு
விரவு ஆக வல்லார் வேணுபுரமே

மேல்

#1647
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம்
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள்
மேகம் தவழும் வேணுபுரமே

மேல்

#1648
காசு அ கடலில் விடம் உண்ட கண்டத்து
ஈசர்க்கு இடம் ஆவது இன் நறவ
வாச கமலத்து அனம் வன் திரைகள்
வீச துயிலும் வேணுபுரமே

மேல்

#1649
அரை ஆர் கலை சேர் அன மென் நடையை
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே

மேல்

#1650
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன்
தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம்
நளிரும் புனலின் நல செங்கயல் கண்
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே

மேல்

#1651
ஏவும் படை வேந்தன் இராவணனை
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம்
தாவும் மறி மானொடு தண் மதியம்
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே

மேல்

#1652
கண்ணன் கடி மா மலரில் திகழும்
அண்ணல் இருவர் அறியா இறை ஊர்
வண்ண சுதை மாளிகை மேல் கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே

மேல்

#1653
போகம் அறியார் துவர் போர்த்து உழல்வார்
ஆகம் அறியா அடியார் இறை ஊர்
மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல்
மீகம் அறிவார் வேணுபுரமே

மேல்

#1654
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு நல்
புலம் ஆர்தரு வேணுபுரத்து இறையை
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே

மேல்

18. திருமருகல் : பண் – இந்தளம் – விடந்தீர்த்த பதிகம்

#1655
சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே

மேல்

#1656
சிந்தாய் எனுமால் சிவனே எனுமால்
முந்தாய் எனுமால் முதல்வா எனுமால்
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே

மேல்

#1657
அறை ஆர் கழலும் அழல் வாய் அரவும்
பிறை ஆர் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே

மேல்

#1658
ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம்
பலி நீ திரிவாய் பழி இல் புகழாய்
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே

மேல்

#1659
துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன
மணி நீல கண்டம் உடையாய் மருகல்
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம்
அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே

மேல்

#1660
பலரும் பரவப்படுவாய் சடை மேல்
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல்
புலரும்தனையும் துயிலாள் புடை போந்து
அலரும் படுமோ அடியாள் இவளே

மேல்

#1661
வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே

மேல்

#1662
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப
துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே

மேல்

#1663
எரி ஆர் சடையும் அடியும் இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே

மேல்

#1664
அறிவு இல் சமணும் அலர் சாக்கியரும்
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார்
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான்
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே

மேல்

#1665
வய ஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே

மேல்

19. திருநெல்லிக்கா : பண் – இந்தளம்

#1666
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி
மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த
திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள்
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1667
பதிதான் இடுகாடு பைம் கொன்றை தொங்கல்
மதிதான் அது சூடிய மைந்தனும் தான்
விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும்
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1668
நலம்தான் அவன் நான்முகன்-தன் தலையை
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான்
புலம் தான் புகழால் எரி விண் புகழும்
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1669
தலைதான் அது ஏந்திய தம் அடிகள்
கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம்
மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1670
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல்
உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய
சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில்
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1671
வெறி ஆர் மலர் கொன்றை அம் தார் விரும்பி
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்
குறியால் குறி கொண்டவர் போய் குறுகும்
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1672
பிறைதான் சடை சேர்த்திய எந்தை பெம்மான்
இறை தான் இறவா கயிலை மலையான்
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1673
மறைத்தான் பிணி மாது ஒருபாகம்-தன்னை
மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையை
குறைத்தான் சடை மேல் குளிர் கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1674
தழல் தாமரையான் வையம் தாயவனும்
கழல்தான் முடி காணிய நாண் ஒளிரும்
அழல்தான் அடியார்க்கு அருளாய் பயக்கும்
நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1675
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை
என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன்
மனத்தால் சமண் சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

மேல்

#1676
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின்
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன
பகர்வாரவர் பாவம் இலாதவரே

மேல்

20. திருஅழுந்தூர் : பண் – இந்தளம்

#1677
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே

மேல்

#1678
கடல் ஏறிய நஞ்சு அமுது உண்டவனே
உடலே உயிரே உணர்வே எழிலே
அடல் ஏறு உடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழ மா மடம் மேவினையே

மேல்

#1679
கழிகாடலனே கனல் ஆடலினாய்
பழிபாடு இலனே அவையே பயிலும்
அழிபாடு இலராய் அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே

மேல்

#1680
வானே மலையே என மன் உயிரே
தானே தொழுவார் தொழு தாள் மணியே
ஆனே சிவனே அழுந்தையவர் எம்
மானே என மா மடம் மன்னினையே

மேல்

#1681
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான்
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும்
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ
நிலையா அது கொள்க என நீ நினையே

மேல்

#1682
நறவு ஆர் தலையின் நயவா உலகில்
பிறவாதவனே பிணி இல்லவனே
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர்
மறவாது எழ மா மடம் மன்னினையே

மேல்

#1683
தடுமாறு வல்லாய் தலைவா மதியம்
சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில்
அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர்
நெடு மா நகர் கைதொழ நின்றனையே

மேல்

#1684
பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறும்
கரியாய் கரி காடு உயர் வீடு உடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழ மா மடம் மேவினையே

மேல்

#1685
மணி நீள் முடியால் மலையை அரக்கன்
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த
அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர்
மணி மா மடம் மன்னி இருந்தனையே

மேல்

#1686
முடி ஆர் சடையாய் முனம்நாள் இருவர்
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள்
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர்
படியால் தொழ மா மடம் பற்றினையே

மேல்

#1687
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடை பெருமான் அவனை
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்
உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே

மேல்

21. திருக்கழிப்பாலை : பண் – இந்தளம்

#1688
புனல் ஆடிய புன் சடையாய் அரணம்
அனல் ஆக விழித்தவனே அழகு ஆர்
கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய்
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே

மேல்

#1689
துணை ஆக ஒர் தூ வள மாதினையும்
இணை ஆக உகந்தவனே இறைவா
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய்
இணை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே

மேல்

#1690
நெடியாய் குறியாய் நிமிர் புன் சடையின்
முடியாய் சுடு வெண்பொடி முற்று அணிவாய்
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்
அடியார்க்கு அடையா அவலம் அவையே

மேல்

#1691
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ
வளி காயம் என வெளி மன்னிய தூ
ஒளியாய் உனையே தொழுது உன்னுமவர்க்கு
அளியாய் கழிப்பாலை அமர்ந்தவனே

மேல்

#1692
நடம் நண்ணி ஒர் நாகம் அசைத்தவனே
விடம் நண்ணிய தூ மிடறா விகிர்தா
கடல் நண்ணு கழிப்பதி காவலனே
உடல் நண்ணி வணங்குவன் உன் அடியே

மேல்

#1693
பிறை ஆர் சடையாய் பெரியாய் பெரிய
மறை ஆர்தரு வாய்மையினாய் உலகில்
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்
இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே

மேல்

#1694
முதிரும் சடையின் முடி மேல் விளங்கும்
கதிர் வெண் பிறையாய் கழிப்பாலை உளாய்
எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு
அதிரும் வினை ஆயின ஆசு அறுமே

மேல்

#1695
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே
விரி ஆர்தரு வீழ் சடையாய் இரவில்
கரி காடலினாய் கழிப்பாலை உளாய்
உரிது ஆகி வணங்குவன் உன் அடியே

மேல்

#1696
நல நாரணன் நான்முகன் நண்ணலுற
கனல் ஆனவனே கழிப்பாலை உளாய்
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே

மேல்

#1697
தவர் கொண்ட தொழில் சமண் வேடரொடும்
துவர் கொண்டன நுண் துகில் ஆடையரும்
அவர் கொண்டன விட்டு அடிகள் உறையும்
உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே

மேல்

#1698
கழி ஆர் பதி காவலனை புகலி
பழியா மறை ஞானசம்பந்தன சொல்
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார்
கெழியார் இமையோரொடு கேடு இலரே

மேல்

22. திருக்குடவாயில் : பண் – இந்தளம்

#1699
திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே

மேல்

#1700
ஓடும் நதியும் மதியோடு உரகம்
சூடும் சடையன் விடை தொல் கொடி மேல்
கூடும் குழகன் குடவாயில்-தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே

மேல்

#1701
கலையான் மறையான் கனல் ஏந்து கையான்
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்
கொலை ஆர் சிலையான் குடவாயில்-தனில்
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே

மேல்

#1702
சுலவும் சடையான் சுடுகாடு இடமா
நல மென்முலையாள் நகைசெய்ய நடம்
குலவும் குழகன் குடவாயில்-தனில்
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே

மேல்

#1703
என்தன் உளம் மேவி இருந்த பிரான்
கன்றன் மணி போல் மிடறன் கயிலை
குன்றன் குழகன் குடவாயில்-தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே

மேல்

#1704
அலை சேர் புனலன் அனலன் அமலன்
தலை சேர் பலியன் சதுரன் விதிரும்
கொலை சேர் படையன் குடவாயில்-தனில்
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே

மேல்

#1705
அறை ஆர் கழலன் அழலன் இயலின்
பறை யாழ் முழவும் மறை பாட நடம்
குறையா அழகன் குடவாயில்-தனில்
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே

மேல்

#1706
வரை ஆர் திரள் தோள் அரக்கன் மடிய
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான்
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும்
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே

மேல்

#1707
பொன் ஒப்பவனும் புயல் ஒப்பவனும்
தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான்
கொல் நல் படையான் குடவாயில்-தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே

மேல்

#1708
வெயிலின் நிலையார் விரி போர்வையினார்
பயிலும் உரையே பகர் பாவிகள்-பால்
குயிலன் குழகன் குடவாயில்-தனில்
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே

மேல்

#1709
கடுவாய் மலி நீர் குடவாயில்-தனில்
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை
தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன்
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே

மேல்

23. திருவானைக்கா : பண் – இந்தளம்

#1710
மழை ஆர் மிடறா மழுவாள் உடையாய்
உழை ஆர் கரவா உமையாள்_கணவா
விழவு ஆரும் வெண் நாவலின் மேவிய எம்
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே

மேல்

#1711
கொலை ஆர் கரியின் உரி மூடியனே
மலை ஆர் சிலையா வளைவித்தவனே
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய்
நிலையா அருளாய் எனும் நேர்_இழையே

மேல்

#1712
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்
பாலோடு நெய் ஆடிய பால்_வணனே
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய்
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே

மேல்

#1713
சுறவ கொடி கொண்டவன் நீறு அதுவாய்
உற நெற்றி விழித்த எம் உத்தமனே
விறல் மிக்க கரிக்கு அருள்செய்தவனே
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே

மேல்

#1714
செம் கண் பெயர் கொண்டவன் செம்பியர்_கோன்
அம் கண் கருணை பெரிது ஆயவனே
வெம் கண் விடையாய் எம் வெண் நாவல் உளாய்
அங்கத்து அயர்வு ஆயினள் ஆய்_இழையே

மேல்

#1715
குன்றே அமர்வாய் கொலை ஆர் புலியின்
தன் தோல் உடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரம் மூன்றை வெண் நாவலுளே
நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே

மேல்

#1716
மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள்
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய்
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே

மேல்

#1717
திரு ஆர்தரு நாரணன் நான்முகனும்
அருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம்
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே

மேல்

#1718
புத்தர் பலரோடு அமண் பொய்த்தவர்கள்
ஒத்த உரை சொல் இவை ஓரகிலார்
மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய்
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே

மேல்

#1719
வெண் நாவல் அமர்ந்து உறை வேதியனை
கண் ஆர் கமழ் காழியர்-தம் தலைவன்
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோரவர் ஏத்த விரும்புவரே

மேல்

24. திருநாகேச்சரம் : பண் – இந்தளம்

#1720
பொன் ஏர்தரு மேனியனே புரியும்
மின் நேர் சடையாய் விரை காவிரியின்
நன் நீர் வயல் நாகேச்சுர நகரின்
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே

மேல்

#1721
சிறவார் புரம் மூன்று எரிய சிலையில்
உற வார் கணை உய்த்தவனே உயரும்
நறவு ஆர் பொழில் நாகேச்சுர நகருள்
அறவா என வல்வினை ஆசு அறுமே

மேல்

#1722
கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின்
வில்லான் எழில் வேவ விழித்தவனே
நல்லார் தொழும் நாகேச்சுர நகரில்
செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே

மேல்

#1723
நகு வான் மதியோடு அரவும் புனலும்
தகு வார் சடையின் முடியாய் தளவம்
நகு வார் பொழில் நாகேச்சுர நகருள்
பகவா என வல்வினை பற்று அறுமே

மேல்

#1724
கலைமான் மறியும் கனலும் மழுவும்
நிலை ஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுர நகருள்
தலைவா என வல்வினைதான் அறுமே

மேல்

#1725
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி
வரையான்மகள் காண மகிழ்ந்தவனே
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம்
அரைசே என நீங்கும் அரும் துயரே

மேல்

#1726
முடை ஆர்தரு வெண் தலை கொண்டு உலகில்
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே
நடை ஆர்தரு நாகேச்சுர நகருள்
சடையா என வல்வினைதான் அறுமே

மேல்

#1727
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற
நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுர
தாயே என வல்வினைதான் அறுமே

மேல்

#1728
நெடியானொடு நான்முகன் நேடலுற
சுடு மால் எரியாய் நிமிர் சோதியனே
நடு மா வயல் நாகேச்சுர நகரே
இடமா உறைவாய் என இன்புறுமே

மேல்

#1729
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண்
கலம் பாவியர் கட்டுரை விட்டு உலகில்
நலம் பாவிய நாகேச்சுர நகருள்
சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே

மேல்

#1730
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்_கோன்
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன்
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனை
சொலல் மாலைகள் சொல்ல நிலா வினையே

மேல்

25. திருப்புகலி : பண் – இந்தளம்

#1731
உகலி ஆழ் கடல் ஓங்கு பார் உளீர்
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்-மினே

மேல்

#1732
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி
கண்ணியார் கமழ் கொன்றை சேர் முடி
புண்ணியன் உறையும் புகலியை
நண்ணு-மின் நலம் ஆன வேண்டிலே

மேல்

#1733
வீசும் மின் புரை காதல் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசும் நீற்றினன் பூம் புகலியை
பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே

மேல்

#1734
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடி கொள் மேனியன் பூம் புகலியுள்
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே

மேல்

#1735
பாதத்து ஆர் ஒலி பல் சிலம்பினன்
ஓதத்து ஆர் விடம் உண்டவன் படை
பூதத்தான் புகலி நகர் தொழ
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே

மேல்

#1736
மறையினான் ஒலி மல்கு வீணையன்
நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம்
பொறையினான் உறையும் புகலியை
நிறையினால் தொழ நேசம் ஆகுமே

மேல்

#1737
கரவிடை மனத்தாரை காண்கிலான்
இரவிடை பலி கொள்ளும் எம் இறை
பொரு விடை உயர்த்தான் புகலியை
பரவிட பயில் பாவம் பாறுமே

மேல்

#1738
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்
விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான் பொழில் ஆர் புகலி ஊர்
இருப்பினான் அடி ஏத்தி வாழ்த்துமே

மேல்

#1739
மாலும் நான்முகன்தானும் வார் கழல்
சீலமும் முடி தேட நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள்
பால் அது ஆடிய பண்பன் அல்லனே

மேல்

#1740
நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல்
ஒன்று அது ஆக வையா உணர்வினுள்
நின்றவன் நிகழும் புகலியை
சென்று கைதொழ செல்வம் ஆகுமே

மேல்

#1741
புல்லம் ஏறி தன் பூம் புகலியை
நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே

மேல்

26. திருநெல்வாயில் : பண் – இந்தளம்

#1742
புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார்
நடையின் நால் விரல் கோவணம் நயந்த
உடையினார் எமது உச்சியாரே

மேல்

#1743
வாங்கினார் மதில் மேல் கணை வெள்ளம்
தாங்கினார் தலை ஆய தன்மையர்
நீங்கு நீர நெல்வாயிலார் தொழ
ஓங்கினார் எமது உச்சியாரே

மேல்

#1744
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ
இச்சையால் உறைவார் எம் ஈசனார்
கச்சை ஆவது ஓர் பாம்பினார் கவின்
இச்சையார் எமது உச்சியாரே

மேல்

#1745
மறையினார் மழுவாளினார் மல்கு
பிறையினார் பிறையோடு இலங்கிய
நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும்
இறைவனார் எமது உச்சியாரே

மேல்

#1746
விருத்தன் ஆகி வெண் நீறு பூசிய
கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர்
நிருத்தனார் அம் நெல்வாயில் மேவிய
ஒருத்தனார் எமது உச்சியாரே

மேல்

#1747
காரின் ஆர் கொன்றை கண்ணியார் மல்கு
பேரினார் பிறையோடு இலங்கிய
நீரினார் அம் நெல்வாயிலார் தொழும்
ஏரினார் எமது உச்சியாரே

மேல்

#1748
ஆதியார் அந்தம் ஆயினார் வினை
கோதியார் மதில் கூட்டு அழித்தவர்
நீதியார் அம் நெல்வாயிலார் மறை
ஓதியார் எமது உச்சியாரே

மேல்

#1749
பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார் ஒரு கால் விரல் உற
நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும்
பெற்றியார் எமது உச்சியாரே

மேல்

#1750
நாடினார் மணி_வண்ணன் நான்முகன்
கூடினார் குறுகாத கொள்கையா
நீடினார் அம் நெல்வாயிலார் தலை
ஓடினார் எமது உச்சியாரே

மேல்

#1751
குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல்
பண்டம் ஆக வையாத பண்பினர்
விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை
உண்ட கண்டர் எம் உச்சியாரே

மேல்

#1752
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனை
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை
பண் பயன்கொள பாட வல்லவர்
விண் பயன்கொளும் வேட்கையாளரே

மேல்

27. திருஇந்திரநீலப்பருப்பதம் : பண் – இந்தளம்

#1753
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான் அடி உள்க நல்குமே

மேல்

#1754
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர்
இறைவன் இந்திரநீலப்பர்ப்பதத்து
உறைவினான்-தனை ஓதி உய்ம்-மினே

மேல்

#1755
என் பொன் என் மணி என்ன ஏத்துவார்
நம்பன் நான்மறை பாடு நாவினான்
இன்பன் இந்திரநீலப்பர்ப்பதத்து
அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே

மேல்

#1756
நாசம் ஆம் வினை நன்மைதான் வரும்
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம்
ஈசன் இந்திரநீலப்பர்ப்பதம்
கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே

மேல்

#1757
மருவு மான் மட மாது ஒர்பாகமாய்
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்
இரவன் இந்திரநீலப்பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே

மேல்

#1758
வெண் நிலா மதி சூடும் வேணியன்
எண்ணிலார் மதில் எய்த வில்லினன்
அண்ணல் இந்திரநீலப்பர்ப்பதத்து
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே

மேல்

#1759
கொடி கொள் ஏற்றினர் கூற்று உதைத்தவர்
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திரநீலப்பர்ப்பதம்
உடைய வாணர் உகந்த கொள்கையே

மேல்

#1760
எடுத்த வல் அரக்கன் கரம் புயம்
அடர்த்தது ஓர் விரலான் அவனை ஆட்
படுத்தன் இந்திரநீலப்பர்ப்பதம்
முடித்தலம் உற முயலும் இன்பமே

மேல்

#1761
பூவினானொடு மாலும் போற்றுறும்
தேவன் இந்திரநீலப்பர்ப்பதம்
பாவியாது எழுவாரை தம் வினை
கோவியா வரும் கொல்லும் கூற்றமே

மேல்

#1762
கட்டர் குண்டு அமண் தேரர் சீர் இலர்
விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம்
எள்தனை நினையாதது என்-கொலோ
சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே

மேல்

#1763
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான்
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து
அந்தமில்லியை ஏத்து ஞானசம்
பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்-மினே

மேல்

28. திருக்கருவூரானிலை : பண் – இந்தளம்

#1764
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு
உண்ட ஆருயிர் ஆய தன்மையர்
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார் அருள் ஈயும் அன்பரே

மேல்

#1765
நீதியார் நினைந்து ஆய நான்மறை
ஓதியாரொடும் கூடலார் குழை
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியார் அடியார்-தம் அன்பரே

மேல்

#1766
விண் உலாம் மதி சூடி வேதமே
பண் உளார் பரம் ஆய பண்பினர்
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே

மேல்

#1767
முடியர் மும்மத யானை ஈர் உரி
பொடியர் பூம் கணை வேளை செற்றவர்
கடியுளார் கருவூருள் ஆன்நிலை
அடிகள் யாவையும் ஆய ஈசரே

மேல்

#1768
பங்கயம் மலர் பாதர் பாதி ஓர்
மங்கையர் மணி நீல கண்டர் வான்
கங்கையர் கருவூருள் ஆன்நிலை
அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே

மேல்

#1769
தேவர் திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர் மும்மதில் எய்த வில்லியர்
காவலார் கருவூருள் ஆன்நிலை
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே

மேல்

#1770
பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய்
பெண்ணினார் பிறை தாங்கும் நெற்றியர்
கண்ணினார் கருவூருள் ஆன்நிலை
நண்ணினார் நமை ஆளும் நாதரே

மேல்

#1771
கடுத்த வாள் அரக்கன் கயிலையை
எடுத்தவன் தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை
கொடுத்தவன் அருள் கூத்தன் அல்லனே

மேல்

#1772
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால்
தொழுது மா மலரோனும் காண்கிலார்
கழுதினான் கருவூருள் ஆன்நிலை
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே

மேல்

#1773
புத்தர் புன் சமண் ஆதர் பொய் உரை
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய்
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்-மினே

மேல்

#1774
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தையில் துயர் ஆய தீர்வரே

மேல்

29. திருப்புகலி : திருவிராகம் : பண் – இந்தளம்

#1775
முன்னிய கலைப்பொருளும் மூஉலகில் வாழ்வும்
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே

மேல்

#1776
வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர்
புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை
தெண் திரை கடல் பொலி திரு புகலி ஆமே

மேல்

#1777
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர்
பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர
தே வண விழா வளர் திரு புகலி ஆமே

மேல்

#1778
மை தவழும் மா மிடறன் மா நடம் அது ஆடி
கைவளையினாளொடு கலந்த பதி என்பர்
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே

மேல்

#1779
முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில்
புன்னைய மலர் பொழில்கள் அக்கின் ஒளி காட்ட
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே

மேல்

#1780
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர்
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே

மேல்

#1781
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி
வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே

மேல்

#1782
பரப்புறு புகழ் பெருமையாளன் வரைதன்னால்
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல் இடம் என்பர்
நெருக்குறு கடல் திரைகள் முத்தம் மணி சிந்த
செருக்குறு பொழில் பொலி திரு புகலி ஆமே

மேல்

#1783
கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல்
ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும்
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே

மேல்

#1784
கற்ற அமணர் உற்று உலவு தேரர் உரைசெய்த
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும்
செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே

மேல்

#1785
செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல்
அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே

மேல்

30. திருப்புறம்பயம் : திருவிராகம் : பண் – இந்தளம்

#1786
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்

மேல்

#1787
விரித்தனை திரு சடை அரித்து ஒழுகு வெள்ளம்
தரித்தனை அது அன்றியும் மிக பெரிய காலன்
எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்

மேல்

#1788
விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை
திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்

மேல்

#1789
வளம் கெழு கடும் புனலொடும் சடை ஒடுங்க
துளங்கு அமர் இளம் பிறை சுமந்தது விளங்க
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்

மேல்

#1790
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம்
கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே

மேல்

#1791
அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும்
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே
தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்

மேல்

#1792
மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம்
அறத்துறை ஒறுத்து உனது அருள் கிழமை பெற்றோர்
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும்
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்

மேல்

#1793
இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலில் முழங்க
உலம் கெழு தட கைகள் அடர்த்திடலும் அஞ்சி
வலம்கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்

மேல்

#1794
வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி
கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார்
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய்

மேல்

#1795
விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என
உடற்கு உடை களைந்தவர் உடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம்
அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே

மேல்

#1796
கருங்கழி பொரும் திரை கரை குலவு முத்தம்
தரும் கழுமலத்து இறை தமிழ் கிழமை ஞானன்
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்
பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே

மேல்

31. திருக்கருப்பறியலூர் : திருவிராகம் : பண் – இந்தளம்

#1797
சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து
குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1798
வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே
கொண்டு அணைசெய் கோலம் அது கோள் அரவினோடும்
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஒர் அம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1799
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆக
போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற
நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1800
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன்
உடம்பினை விட கருதி நின்ற மறையோனை
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1801
ஒருத்தி உமையோடும் ஒருபாகம் அது ஆய
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய
விருத்தன் அவன் வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1802
விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள் மெய் தேன்
பண் அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1803
ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர்
சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க
காதினன் இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1804
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்ச
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1805
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1806
அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர்
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு
குற்றம் அறியாத பெருமான் கொகுடி கோயில்
கற்றென இருப்பது கருப்பறியலூரே

மேல்

#1807
நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளை
பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே

மேல்

32. திருவையாறு : திருவிராகம் : பண் – இந்தளம்

#1808
திரு திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்
உரு திகழ் எழில் கயிலை வெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர்
மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே

மேல்

#1809
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர்
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும்
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே

மேல்

#1810
கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில்
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர்
வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே

மேல்

#1811
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர்
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே

மேல்

#1812
வென்றி மிகு தாருகனது ஆருயிர் மடங்க
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே

மேல்

#1813
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி
பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே

மேல்

#1814
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே
என்ன சதி என்று உரைசெய் அங்கணன் இடம் சீர்
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே

மேல்

#1815
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர்
அரக்கன் முடி பத்து அலை புயத்தொடும் அடங்க
துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர்
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே

மேல்

#1816
பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி
பெருத்த உரு அதுவாய் உலகு இடந்தவனும் என்றும்
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார்
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே

மேல்

#1817
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர்
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம்
நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால்
மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே

மேல்

#1818
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள்
ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்
நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே

மேல்

33. திருநள்ளாறு : திருவிராகம் : பண் – இந்தளம்

#1819
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே

மேல்

#1820
விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல்
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே

மேல்

#1821
விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர்
வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே

மேல்

#1822
கொக்கு அரவர் கூன் மதியர் கோபர் திரு மேனி
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே

மேல்

#1823
நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார்
வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர்
அஞ்ச முதுகு ஆகியவர் கைதொழ எழுந்த
நஞ்சு அமுதுசெய்தவன் இருப்பிடம் நள்ளாறே

மேல்

#1824
பாலன் அடி பேண அவன் ஆருயிர் குறைக்கும்
காலன் உடன் மாள முன் உதைத்த அரனூர் ஆம்
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர்
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே

மேல்

#1825
நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும்
ஓதி அரன் நாமமும் உணர்த்திடும் நள்ளாறே

மேல்

#1826
கடுத்து வல் அரக்கன் முன் நெருக்கி வரை-தன்னை
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும்
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட
நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே

மேல்

#1827
உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து உலகம் எல்லாம்
பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர்
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே

மேல்

#1828
சிந்தை திருகல் சமணர் தேரர் தவம் என்னும்
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர்
மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத
சந்தம் விரவி பொழில் முழங்கிய நள்ளாறே

மேல்

#1829
ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல்
பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே

மேல்

34. திருப்பழுவூர் : திருவிராகம் : பண் – இந்தளம்

#1830
முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன்
அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர்
மை தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே

மேல்

#1831
கோடலொடு கோங்கு அவை குலாவு முடி-தன் மேல்
ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர்
மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள்
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே

மேல்

#1832
வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த
போலிய ஒருத்தர் புரி நூலர் இடம் என்பர்
வேலியின் விரை கமலம் அன்ன முக மாதர்
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே

மேல்

#1833
எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார்
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர்
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே

மேல்

#1834
சாதல்புரிவார் சுடலை-தன்னில் நடம் ஆடும்
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர்
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன்
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே

மேல்

#1835
மேவு அயரும் மும்மதிலும் வெம் தழல் விளைத்து
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே

மேல்

#1836
மந்தணம் இருந்து புரி மாமடி-தன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர்
பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே

மேல்

#1837
உர கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து அன்று
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர்
குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு
பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே

மேல்

#1838
நின்ற நெடு மாலும் ஒரு நான்முகனும் நேட
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள்
மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே

மேல்

#1839
மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர்
முட்டைகள் மொழிந்த முனிவான்-தன் இடம் என்பர்
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம்
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே

மேல்

#1840
அந்தணர்கள் ஆன மலையாளரவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை ஆர
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே

மேல்

35. திருத்தென்குரங்காடுதுறை : பண் – இந்தளம்

#1841
பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி
அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர்
குரவ பொழில் சூழ் குரங்காடுதுறையே

மேல்

#1842
விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன்
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம்
கொண்டான் நகர் போல் குரங்காடுதுறையே

மேல்

#1843
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும்
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவு இல்லவன் ஊர் குரங்காடுதுறையே

மேல்

#1844
விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி
தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன்
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே

மேல்

#1845
நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன்
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர்
கூறான் நகர் போல் குரங்காடுதுறையே

மேல்

#1846
நளிரும் மலர் கொன்றையும் நாறு கரந்தை
துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில்
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே

மேல்

#1847
பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும்
முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும்
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும்
குழகன் நகர் போல் குரங்காடுதுறையே

மேல்

#1848
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம்
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல்
குரை ஆர் பொழில் சூழ் குரங்காடுதுறையே

மேல்

#1849
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணா
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின்
கொடியான் நகர் போல் குரங்காடுதுறையே

மேல்

#1850
துவர் ஆடையர் வேடம் அலா சமண் கையர்
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம்
நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே

மேல்

#1851
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறை மேல்
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த
வல்லாரவர் வானவரோடு உறைவாரே

மேல்

36. திருவிரும்பூளை : பண் – இந்தளம் – வினாவுரை

#1852
சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தே

மேல்

#1853
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்
குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கழல்தான் கரி கானிடை ஆடு கருத்தே

மேல்

#1854
அன்பால் அடி கைதொழுவீர் அறிவீரே
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி
இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
பொன் போல் சடையில் புனல் வைத்த பொருளே

மேல்

#1855
நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர்
கச்சி பொலி காமக்கொடியுடன் கூடி
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சி தலையில் பலி கொண்டு உழல் ஊணே

மேல்

#1856
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர்
நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
புற்று ஆடு அரவோடு பூண்ட பொருளே

மேல்

#1857
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர்
சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி
ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே

மேல்

#1858
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர்
பரு கை மத வேழம் உரித்து உமையோடும்
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே

மேல்

#1859
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி
இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே

மேல்

#1860
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர்
பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே

மேல்

#1861
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார்
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே

மேல்

37. திருமறைக்காடு :: பண் – இந்தளம் – கதவு அடைக்கப் பாடிய பதிகம்

#1862
சதுரம்மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன்
கதவம் திருக்காப்பு கொள்ளும் கருத்தாலே

மேல்

#1863
சங்கம் தரளம் அவை தான் கரைக்கு எற்றும்
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல்
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே

மேல்

#1864
குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல்
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே

மேல்

#1865
படர் செம்பவளத்தொடு பல் மலர் முத்தம்
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா
உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல்
கடல் நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே

மேல்

#1866
வானோர் மறை மா தவத்தோர் வழிபட்ட
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல்
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே

மேல்

#1867
பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா
உலகு ஏழ் உடையாய் கடை-தோறும் முன் என்-கொல்
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே

மேல்

#1868
வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும்
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன் என்-கொல்
கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே

மேல்

#1869
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரை மேல்
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த
அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்த ஆறே

மேல்

#1870
கோன் என்று பல் கோடி உருத்திரர் போற்றும்
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல்
வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே

மேல்

#1871
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய்
ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல்
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே

மேல்

#1872
காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார்
வாழி உலகோர் தொழ வான் அடைவாரே

மேல்

38. திருச்சாய்க்காடு : பண் – இந்தளம்

#1873
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி
தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே

மேல்

#1874
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்
வெண் தலை கரும் காடு உறை வேதியன் கோயில்
கொண்டலை திகழ் பேரி முழங்க குலாவி
தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே

மேல்

#1875
நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு
ஆறு சூடும் அமரர்பிரான் உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை
தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே

மேல்

#1876
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்கல் ஓசையும் ஈட்டிய சாத்தொடும் ஈண்டி
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே

மேல்

#1877
ஏழைமார் கடை-தோறும் இடு பலிக்கு என்று
கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம்
தாழை வெண் மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே

மேல்

#1878
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில்
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில்
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்
சங்கும் வாரி தடம் கடல் உந்து சாய்க்காடே

மேல்

#1879
வேத நாவினர் வெண் பளிங்கின் குழை காதர்
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில்
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே

மேல்

#1880
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில்
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம்
தரு குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே

மேல்

#1881
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த
வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில்
சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே

மேல்

#1882
ஊத்தை வாய் சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்தம் ஆக அறிவு அரிது ஆயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே

மேல்

#1883
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை
ஞானசம்பந்தன் காழியர்_கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய்
வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே

மேல்

39. திருக்ஷேத்திரக்கோவை : பண் – இந்தளம்

#1884
ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே

மேல்

#1885
அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே

மேல்

#1886
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள்
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும்
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும்
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே

மேல்

#1887
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளை பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால்
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே

மேல்

#1888
ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர்
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே

மேல்

#1889
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும்
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும்
கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே

மேல்

#1890
மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்
கோட்டூர் திரு ஆமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திரு குணவாயில்

மேல்

#1891
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம்
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே

மேல்

#1892
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே

மேல்

#1893
குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும்
அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே

மேல்

#1894
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே

மேல்

40. திருப்பிரமபுரம் : பண் – சீகாமரம்

#1895
எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும்
கம்ப மா கரி உரித்த காபாலி கறை_கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே

மேல்

#1896
தாம் என்றும் மனம் தளரா தகுதியராய் உலகத்து
காம் என்று சரண் புகுந்தார்-தமை காக்கும் கருணையினான்
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே

மேல்

#1897
நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே
உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும்
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே

மேல்

#1898
சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும்
கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும்
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே

மேல்

#1899
கண்_நுதலான் வெண்நீற்றான் கமழ் சடையான் விடை_ஏறி
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான்
விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே

மேல்

#1900
எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் எருது ஏறி
கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும்
சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே

மேல்

#1901
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன்
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால்
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே

மேல்

#1902
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள்
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான்
உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே

மேல்

#1903
கரியானும் நான்முகனும் காணாமை கனல் உருவாய்
அரியான் ஆம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான்
தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர
உரியார்தாம் ஏழ்உலகும் உடன் ஆள உரியாரே

மேல்

#1904
உடை இலார் சீவரத்தார் தன் பெருமை உணர்வு அரியான்
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன்
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும்
சடையில் ஆர் வெண் பிறையான் தாள் பணிவார் தக்காரே

மேல்

#1905
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை தத்துவனை
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார்
பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே

மேல்

41. திருச்சாய்க்காடு : பண் – சீகாமரம்

#1906
மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும்
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி
தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே

மேல்

#1907
போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார்
சாய்க்காடே பதி ஆக உடையானும் விடையானும்
வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த
பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே

மேல்

#1908
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே

மேல்

#1909
கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய்
மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்
பட்டினத்து சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே

மேல்

#1910
கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம்
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ்
ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே

மேல்

#1911
சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன்
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல்
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள்
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே

மேல்

#1912
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை
தொங்கலான் அடியார்க்கு சுவர்க்கங்கள் பொருள் அலவே

மேல்

#1913
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும்
தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை
இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே

மேல்

#1914
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை
தெய்வமா பேணாதார் தெளிவு உடைமை தேறோமே

மேல்

#1915
குறங்கு ஆட்டும் நால் விரல் கோவணத்துக்கு உலோவி போய்
அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும்
திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின்
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார் சாய்க்காடே

மேல்

#1916
நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார்
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும்
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே

மேல்

42. திருஆக்கூர்த்தான்றோன்றிமாடம் : பண் – சீகாமரம்

#1917
அக்கு இருந்த ஆரமும் ஆடு அரவும் ஆமையும்
தொக்கு இருந்த மார்பினான் தோல் உடையான் வெண்நீற்றான்
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1918
நீர் ஆர வார் சடையான் நீறு உடையான் ஏறு உடையான்
கார் ஆர் பூம் கொன்றையினான் காதலித்த தொல் கோயில்
கூர் ஆரல் வாய் நிறைய கொண்டு அயலே கோட்டகத்தில்
தாரா மல்கு ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1919
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில்
வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1920
கொங்கு சேர் தண் கொன்றை மாலையினான் கூற்று அடர
பொங்கினான் பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான் பூம் கோயில்
அங்கம் ஆறோடும் அரு மறைகள் ஐ வேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1921
வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு
ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண்
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1922
பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான்
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில்
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம்
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1923
வீங்கினார் மும்மதிலும் வில் வரையால் வெந்து அவிய
வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில்
பாங்கின் ஆர் நான்மறையோடு ஆறு அங்கம் பல் கலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1924
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில்
பொன் அடிக்கே நாள்-தோறும் பூவோடு நீர் சுமக்கும்
தன் அடியார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1925
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய
தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில்
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1926
நா மருவு புன்மை நவிற்ற சமண் தேரர்
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில்
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை
தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே

மேல்

#1927
ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
மாடம் அமர்ந்தானை மாடம் சேர் தண் காழி
நாடற்கு அரிய சீர் ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே

மேல்

43. திருப்புள்ளிருக்குவேளூர் : பண் – சீகாமரம்

#1928
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம்
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாம் இருவர்
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1929
தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம்
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1930
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம்
யோசனை போய் பூ கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1931
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம்
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண்
போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1932
கீதத்தை மிக பாடும் அடியார்கள் குடி ஆக
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1933
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை
புறம்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1934
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி
பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம்
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1935
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம்
எண் இன்றி முக்கோடி வாணாள் அது உடையானை
புண் ஒன்ற பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1936
வேதித்தார் புரம் மூன்றும் வெம் கணையால் வெந்து அவிய
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம்
ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1937
கடுத்து வரும் கங்கை-தனை கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம்
விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா
புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

மேல்

#1938
செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான்
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை
கடி ஆர்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே

மேல்

44. திருஆமாத்தூர் : பண் – சீகாமரம்

#1939
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன்
பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே

மேல்

#1940
கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வான்_உலகில்
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம்
பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே

மேல்

#1941
பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர்
தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான்
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே

மேல்

#1942
கோள் நாக பேர் அல்குல் கோல் வளை கை மாதராள்
பூண் ஆகம் பாகமா புல்கி அவளோடும்
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை
காணாத கண் எல்லாம் காணாத கண்களே

மேல்

#1943
பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான்
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே

மேல்

#1944
சாமவரை வில் ஆக சந்தித்த வெம் கணையால்
காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான்
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே

மேல்

#1945
மாறாத வெம் கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

மேல்

#1946
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்-தன்
நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால்
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை
கேளா செவி எல்லாம் கேளா செவிகளே

மேல்

#1947
புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம்
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே

மேல்

#1948
பிச்சை பிறர் பெய்ய பின் சார கோ சார
கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான்
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான்-தன் ஆமாத்தூர்
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே

மேல்

#1949
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை
கோடல் இரும் புறவின் கொச்சை வய தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன்-தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே

மேல்

45. திருக்கைச்சினம் : பண் – சீகாமரம்

#1950
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான்
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான்
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர்
கை உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே

மேல்

#1951
விடம் மல்கு கண்டத்தான் வெள்_வளை ஓர்கூறு உடையான்
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான்
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
கடம் மல்கு மா உரியான் உறை கோயில் கைச்சினமே

மேல்

#1952
பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண் மதியம் துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ
காடலான் மேவி உறை கோயில் கைச்சினமே

மேல்

#1953
பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே

மேல்

#1954
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான்
வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான்
சாய்ந்து அமரர் வேண்ட தடம் கடல் நஞ்சு உண்டு அநங்கை
காய்ந்த பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே

மேல்

#1955
மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான்
அங்கை ஓர் வெண் தலையான் ஆடு அரவம் பூண்டு உகந்தான்
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல்
கங்கையினான் மேவி உறை கோயில் கைச்சினமே

மேல்

#1956
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான்
பொரி சுடலை ஈம புறங்காட்டான் போர்த்தது ஓர்
கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே

மேல்

#1957
போது உலவு கொன்றை புனைந்தான் திரு முடி மேல்
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும்
காதலினான் மேவி உறை கோயில் கைச்சினமே

மேல்

#1958
மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும்
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்
பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல்
கண் உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே

மேல்

#1959
தண் வயல் சூழ் காழி தமிழ் ஞானசம்பந்தன்
கண்_நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார்
விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே

மேல்

46. திருநாலூர்மயானம் : பண் – சீகாமரம்

#1960
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும்
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான்
நாலூர்மயானத்து நம்பான்-தன் அடி நினைந்து
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே

மேல்

#1961
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக
நாடும் சிறப்பு ஓவா நாலூர்மயானத்தை
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே

மேல்

#1962
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று
எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தை
சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே

மேல்

#1963
கோலத்து ஆர் கொன்றையான் கொல் புலி தோல் ஆடையான்
நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான்
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர்மயானத்தில்
சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே

மேல்

#1964
கறை ஆர் மணி மிடற்றான் காபாலி கட்டங்கன்
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம்
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே

மேல்

#1965
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி
நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே

மேல்

#1966
கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான்
பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான்
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே

மேல்

#1967
பத்துத்தலையோனை பாதத்து ஒரு விரலால்
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான்
நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என்
அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே

மேல்

#1968
மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய்
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம்
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே

மேல்

#1969
துன்பு ஆய மாசார் துவர் ஆய போர்வையார்
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள்
நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே

மேல்

#1970
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான்
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தை
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே

மேல்

47. திருமயிலாப்பூர் : பண் – சீகாமரம் – பூம்பாவையை எழுப்பிய பதிகம்

#1971
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை
கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1972
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை
கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அரும் தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1973
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1974
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில்
கார் தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1975
மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை
கை பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1976
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசி
கடல் ஆட்டு கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1977
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை
கலி விழா கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
பலி விழா பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழா காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1978
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்
கண் ஆர் மயிலை கபாலீச்சுரம் அமர்ந்தான்
பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள்
கண் ஆர காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1979
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியை
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான்
பொன் தாப்பு காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1980
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண் உடையை போர்க்கும்
இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில்
கரும் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான்
பெரும் சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்

மேல்

#1981
கான் அமர் சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான்
தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே

மேல்

48. திருவெண்காடு : பண் – சீகாமரம்

#1982
கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

மேல்

#1983
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர்
தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே

மேல்

#1984
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன்
விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே

மேல்

#1985
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண் புறவில்
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று
தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே

மேல்

#1986
வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடி கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன்
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

மேல்

#1987
தண் மதியும் வெய்ய அரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை
வெண் முகில் சேர் கரும் பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே

மேல்

#1988
சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனை பிளந்தானும்
அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்
மு குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே

மேல்

#1989
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க
விண் மொய்த்த பொழில் வரி வண்டு இசை முரலும் வெண்காடே

மேல்

#1990
கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான்
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே

மேல்

#1991
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே

மேல்

#1992
தண் பொழில் சூழ் சண்பையர்_கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண் பிறை சென்னி விகிர்தன் உறை வெண்காட்டை
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே

மேல்

49. சீகாழி : பண் – சீகாமரம்

#1993
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே

மேல்

#1994
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும்
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை
விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே

மேல்

#1995
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில்
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே

மேல்

#1996
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும்
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர்
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே

மேல்

#1997
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ
கலி கடிந்த கையார் மருவும் கலி காழி
வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட
மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே

மேல்

#1998
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும்
கற்ற சிந்தையராய் கருதும் கலி காழி
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை
செற்ற மாந்தர் என தெளி-மின்கள் சிந்தையுளே

மேல்

#1999
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில்
கானலின் விரை சேர விம்மும் கலி காழி
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று
ஆன் நலம் கொடுப்பார் அருள் வேந்தர் ஆவாரே

மேல்

#2000
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும்
கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி
அத்தனே அரனே அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய் உன கழல்
பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே

மேல்

#2001
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள்
கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே

மேல்

#2002
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர்
கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி
தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி
அண்டவாணன் என்பார்க்கு அடையா அல்லல்தானே

மேல்

#2003
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ்
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே

மேல்

50. திருஆமாத்தூர் : பண் – சீகாமரம்

#2004
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில்
வென்ற ஆறு எங்ஙனே விடை ஏறும் வேதியனே
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2005
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்
வெருவ உண்டு உகந்த அருள் என்-கொல் விண்ணவனே
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர்
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2006
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன்
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என்
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2007
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2008
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர்
உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம்
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2009
ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி
நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என்
சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2010
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம்
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு
அம் கையல் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2011
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை
வென்று அடர்த்து ஒருபால் மட மாதை விரும்புதல் என்
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர
அன்று அடர்த்து உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2012
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி
வெய்ய ஆர் அழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என்
தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு
ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2013
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என்
முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே

மேல்

#2014
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம்
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை
கோடல் நாகம் அரும்பு பைம் பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே

மேல்

51. திருக்களர் : பண் – சீகாமரம்

#2015
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில்
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள்
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி
ஆர நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2016
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய
தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள்
வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா விரும்பும் அடியாரை
ஆள் உகந்தவனே அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2017
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள்
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம்
ஆட வல்லவனே அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2018
அம்பின் நேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள்
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2019
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய
தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள்
மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து
அம் கையில் படையாய் அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2020
கோல மா மயில் ஆல கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயலிடை
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள்
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி
ஆல நீழல் உளாய் அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2021
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ
திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள்
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பே
ரம்பலத்து உறைவாய் அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2022
குன்று அடுத்த நல் மாளிகை கொடி மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல்
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள்
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி
அன்று அடர்த்து உகந்தாய் அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2023
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள்
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல்
அண்ணல் ஆய எம்மான் அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2024
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய
தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள்
வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய்
ஆக்கி நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2025
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன்
செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள்
அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்
பந்தன் சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே

மேல்

52. திருக்கோட்டாறு : பண் – சீகாமரம்

#2026
கரும் தடம் கணின் மாதரார் இசைசெய்ய கார் அதிர்கின்ற பூம் பொழில்
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள்
வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே

மேல்

#2027
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை
குன்றில் நேர்ந்து குத்தி பணிசெய்யும் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர்
பொன்றும் ஆறு அறியார் புகழ் ஆர்ந்த புண்ணியரே

மேல்

#2028
விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில்
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே

மேல்

#2029
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில்
நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே

மேல்

#2030
பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே

மேல்

#2031
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில்
மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர்
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே

மேல்

#2032
கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர்
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே

மேல்

#2033
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை
கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில்
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை
மிண்டு எலாம் தவிர்த்து என் உகந்திட்ட வெற்றிமையே

மேல்

#2034
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின்
குருதி மெய் கலப்ப உரி கொண்டு கோட்டாற்றில்
விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள்
எருது உகந்தவனே இரங்காய் உனது இன்னருளே

மேல்

#2035
உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர்
கொடை இலார் மனத்தார் குறை ஆரும் கோட்டாற்றில்
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை
அடைகிலாத வண்ணம் அருளாய் உன் அடியவர்க்கே

மேல்

#2036
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய்
கோல வார் குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே

மேல்

53. திருப்புறவார்பனங்காட்டூர் : பண் – சீகாமரம்

#2037
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெம் கணையால் எய்தாய் வரி
பண் அமர்ந்து ஒலி சேர் புறவார்பனங்காட்டூர்
பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை
கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே

மேல்

#2038
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர்
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள்
ஆடும் சங்கரனே அடைந்தார்க்கு அருளாயே

மேல்

#2039
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல்
பாளை ஒண் கமுகம் புறவார்பனங்காட்டூர்
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை
தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே

மேல்

#2040
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை
பாய்ந்த தண் பழன புறவார்பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர்
சாய்ந்து அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே

மேல்

#2041
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு
பங்கயம் மலரும் புறவார்பனங்காட்டூர்
கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி
அம் கை ஆடலனே அடியார்க்கு அருளாயே

மேல்

#2042
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியா புறவார்பனங்காட்டூர்
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும்
சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே

மேல்

#2043
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி
பை அரா விரியும் புறவார்பனங்காட்டூர்
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும்
பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே

மேல்

#2044
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை
பாவில் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர்
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள்
ஏவிய பெருமான் என்பவர்க்கு அருளாயே

மேல்

#2045
அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை
பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர்
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர்
சந்தம் ஆயவனே தவத்தார்க்கு அருளாயே

மேல்

#2046
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை
பாணி யாழ் முரலும் புறவார்பனங்காட்டூர்
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை
ஊண் உரியவனே உகப்பார்க்கு அருளாயே

மேல்

#2047
மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை
பைய தேன் பொழில் சூழ் புறவார்பனங்காட்டூர்
ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன்
செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே

மேல்

54. திருப்புகலி : பண் – காந்தாரம்

#2048
உரு ஆர்ந்த மெல்_இயல் ஓர்பாகம் உடையீர் அடைவோர்க்கு
கரு ஆர்ந்த வான்_உலகம் காட்டி கொடுத்தல் கருத்து ஆனீர்
பொரு ஆர்ந்த தெண் கடல் ஒண் சங்கம் திளைக்கும் பூம் புகலி
திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே

மேல்

#2049
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர்
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர்
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி
சீர் ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே

மேல்

#2050
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர்
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி
எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே

மேல்

#2051
கயில் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் கடிய கரியின் தோல்
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர்
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி
எயில் ஆர்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே

மேல்

#2052
நா ஆர்ந்த பாடலீர் ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர்
பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும்
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி
தே ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே

மேல்

#2053
மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும்
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர்
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன் புகலி
கண் ஆர்ந்த கோயிலே கோயிலாக கலந்தீரே

மேல்

#2054
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர்
அளி புல்கு பூ முடியீர் அமரர் ஏத்த அருள்செய்தீர்
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி
ஒளி புல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே

மேல்

#2055
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு
உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார்
புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி
வரம் தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2056
சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும்
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர்
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி
நலம் தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே

மேல்

#2057
நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும்
கடிது ஆய கட்டுரையால் கழற மேல் ஓர் பொருள் ஆனீர்
பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த
வடிவு ஆரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2058
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை
அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன்
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே

மேல்

55. திருத்தலைச்சங்காடு : பண் – காந்தாரம்

#2059
நல சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால் வேதம்
சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்
குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும்
தலைச்சங்கை கோயிலே கோயிலாக தாழ்ந்தீரே

மேல்

#2060
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர்
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர்
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே

மேல்

#2061
சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர்
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த
தார் கொண்ட நூல்மார்பர் தக்கோர் வாழும் தலைச்சங்கை
ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே

மேல்

#2062
வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள்
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச்சங்கை
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும்
மாடம் சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2063
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர்
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர்
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயிலாக கொண்டீரே

மேல்

#2064
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து
புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார்
சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை
நல நீர கோயிலே கோயிலாக நயந்தீரே

மேல்

#2065
அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி
கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர்
பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை
கடி புல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே

மேல்

#2066
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென்_இலங்கை கோமானை
வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்றும் மாண்பினீர்
அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே

மேல்

#2067
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும்
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார்
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை
சேய் ஓங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே

மேல்

#2068
அலை ஆரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கீயர்
தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்
தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை
நிலை ஆர்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே

மேல்

#2069
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே

மேல்

56. திருஇடைமருதூர் : பண் – காந்தாரம்

#2070
பொங்கு நூல் மார்பினீர் பூத படையினீர் பூம் கங்கை
தங்கு செம் சடையினீர் சாமவேதம் ஓதினீர்
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில்
மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2071
நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர்
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர்
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில்
சீர் ஆர்ந்த கோயிலை கோயிலாக சேர்ந்தீரே

மேல்

#2072
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்
எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில்
பொழில் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே

மேல்

#2073
பொல்லா படுதலை ஒன்று ஏந்தி புறங்காட்டு ஆடலீர்
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர்
எல்லா கணங்களும் முறையால் ஏத்த இடைமருதில்
செல்வாய கோயிலே கோயிலாக சேர்ந்தீரே

மேல்

#2074
வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாக புக்கீரே

மேல்

#2075
சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர்
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர்
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில்
புலம் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே

மேல்

#2076
புனம் மல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவு ஆர்ந்த
சினம் மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர்
இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில்
கனம் மல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே

மேல்

#2077
சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன்
தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர்
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில்
நலம் மொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே

மேல்

#2078
மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர்
கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர்
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில்
நிறை மல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே

மேல்

#2079
சின் போர்வை சாக்கியரும் மாசு சேரும் சமணரும்
துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில்
அன்பு ஆய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே

மேல்

#2080
கல்லின் மணி மாட கழுமலத்தார் காவலவன்
நல்ல அரு மறையான் நல் தமிழ் ஞானசம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும்
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே

மேல்

54. திருநல்லூர் : பண் – காந்தாரம்

#2081
பெண் அமரும் திரு மேனி உடையீர் பிறங்கு சடை தாழ
பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்
திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்
மண் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2082
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில்
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர்
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர்
மலை மல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2083
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர்
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்
மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2084
கூன் அமரும் வெண் பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர்
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்
வான் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2085
நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள்
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர்
மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2086
கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர்
ஏர் மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே

மேல்

#2087
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்
வான் தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2088
காது அமரும் வெண் குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர்
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர்
மாது அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2089
போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மை காணாது
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர்
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர்
மாதராளவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே

மேல்

#2090
பொல்லாத சமணரொடு புறம்கூறும் சாக்கியர் ஒன்று
அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்று ஓவா
நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர்
மல் ஆர்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

மேல்

#2091
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குல வேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர்
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல்
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே

மேல்

58. திருக்குடவாயில் : பண் – காந்தாரம்

#2092
கலை வாழும் அம் கையீர் கொங்கை ஆரும் கரும் கூந்தல்
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர்
குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில்
நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே

மேல்

#2093
அடி ஆர்ந்த பைம் கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்
செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்
படி ஆர்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே

மேல்

#2094
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று
அழல் ஆரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர்
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில்
நிழல் ஆர்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே

மேல்

#2095
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர்
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில்
நெறி ஆரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே

மேல்

#2096
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர்
குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில்
விழவு ஆர்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே

மேல்

#2097
அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர்
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர்
குரவு ஆர்ந்த பூம் சோலை வாசம் வீசும் குடவாயில்
திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே

மேல்

#2098
பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர்
ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர்
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில்
நீடல் ஆர் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே

மேல்

#2099
கொங்கு ஆர்ந்த பைம் கமலத்து அயனும் குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன்
தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர் குடவாயில்
பங்கு ஆர்ந்த கோயிலே கோயிலாக பரிந்தீரே

மேல்

#2100
தூசு ஆர்ந்த சாக்கியரும் தூய்மை இல்லா சமணரும்
ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில்
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற
தேசு ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே

மேல்

#2101
நளிர் பூம் திரை மல்கு காழி ஞானசம்பந்தன்
குளிர் பூம் குடவாயில் கோயில் மேய கோமானை
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார்
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே

மேல்

59. சீகாழி : பண் – காந்தாரம்

#2102
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள்-தன்னில் கொண்டு கரை சேர் கலி காழி
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அரு நோயே

மேல்

#2103
ஊர் ஆர் உவரி சங்கம் வங்கம் கொடுவந்து
கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி
நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற தீரும் பிணிதானே

மேல்

#2104
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலி காழி
முடி கொள் சடையாய் முதல்வா என்று முயன்று ஏத்தி
அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லல் அவலமே

மேல்

#2105
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலி காழி
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே

மேல்

#2106
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே

மேல்

#2107
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி
பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி
சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே

மேல்

#2108
புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி
பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த
முயல்வார்-தம் மேல் வெம்மை கூற்றம் முடுகாதே

மேல்

#2109
அரக்கன் முடி தோள் நெரிய அடர்த்தான் அடியார்க்கு
கரக்ககில்லாது அருள்செய் பெருமான் கலி காழி
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல்
பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே

மேல்

#2110
மாணாய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை புகழ்ந்து ஏத்தி
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே

மேல்

#2111
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர்
கஞ்சி காலை உண்பார்க்கு அரியான் கலி காழி
தஞ்சம் ஆய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே

மேல்

#2112
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார்
வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே

மேல்

60. திருப்பாசூர் : பண் – காந்தாரம்

#2113
சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார்
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும்
பைம் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே

மேல்

#2114
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மான் என்று
ஆரும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே

மேல்

#2115
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்-கண்
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும்
பை வாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே

மேல்

#2116
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொலிவு எய்த
கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார்
தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும்
பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே

மேல்

#2117
ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும்
சேட செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார்
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும்
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே

மேல்

#2118
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக
தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும்
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே

மேல்

#2119
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார் கழல் உன்னி
எண்ணும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்
உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே

மேல்

#2120
தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை
கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும்
பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே

மேல்

#2121
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும்
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார்
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும்
பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே

மேல்

#2122
தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார்
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார்
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும்
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே

மேல்

#2123
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே

மேல்

61. திருவெண்காடு : பண் – காந்தாரம்

#2124
உண்டாய் நஞ்சை உமை ஓர்பங்கா என்று உள்கி
தொண்டாய் திரியும் அடியார்-தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும்
வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே

மேல்

#2125
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே

மேல்

#2126
தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான்-தனை உன்னி
கண் முத்து அரும்ப கழல் சேவடி கைதொழுவார்கள்
உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும்
வெண் முத்து அருவி புனல் வந்து அலைக்கும் வெண்காடே

மேல்

#2127
நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன்
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும்
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே

மேல்

#2128
பிள்ளை பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள்
தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும்
வெள்ளை சுரி சங்கு உலவி திரியும் வெண்காடே

மேல்

#2129
ஒளி கொள் மேனி உடையாய் உம்பராளீ என்று
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு
எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே

மேல்

#2130
கோள் வித்து அனைய கூற்றம்-தன்னை குறிப்பினால்
மாள்வித்து அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்காய்
ஆள்வித்து அமரர்_உலகம் அளிப்பான் ஊர் போலும்
வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே

மேல்

#2131
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி
முளை ஆர் மதியம் சூடி என்றும் முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும்
விளை ஆர் கழனி பழனம் சூழ்ந்த வெண்காடே

மேல்

#2132
கரியானோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு
உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும்
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே

மேல்

#2133
பாடும் அடியார் பலரும் கூடி பரிந்து ஏத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே

மேல்

#2134
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண்காட்டை
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே

மேல்

62. திருமீயச்சூர் : பண் – காந்தாரம்

#2135
காய செவ்வி காமன் காய்ந்து கங்கையை
பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன்
மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே

மேல்

#2136
பூ ஆர் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர்
நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே

மேல்

#2137
பொன் நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின் நேர் சடைகள் உடையான் மீயச்சூரானை
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார்
அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே

மேல்

#2138
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே

மேல்

#2139
விடை ஆர் கொடியார் சடை மேல் விளங்கும் பிறை வேடம்
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார்
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார்
விடை ஆர் நடை ஒன்று உடையார் மீயச்சூராரே

மேல்

#2140
குளிரும் சடை கொள் முடி மேல் கோலம் ஆர் கொன்றை
ஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன் கை கோடி
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன்
மிளிரும் அரவம் உடையான் மீயச்சூரானே

மேல்

#2141
நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார்
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே

மேல்

#2142
புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர்
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச
வலிய திரள் தோள் வன்கண் அரக்கர்_கோன்-தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே

மேல்

#2143
காதில் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார்
போதிலவனும் மாலும் தொழ பொங்கு எரி ஆனார்
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே

மேல்

#2144
கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டை
கொண்டார் சொல்லை குறுகார் உயர்ந்த கொள்கையார்
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரை வில்லா
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே

மேல்

#2145
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி
ஆடும் அடியார் அகல் வான்_உலகம் அடைவாரே

மேல்

63. திருஅரிசிற்கரைப்புத்தூர் : பண் – காந்தாரம்

#2146
மின்னும் சடை மேல் இள வெண் திங்கள் விளங்கவே
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு
பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே

மேல்

#2147
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால்
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும்
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே

மேல்

#2148
பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி
கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால்
பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர் புனிதரே

மேல்

#2149
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய
பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே

மேல்

#2150
என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர்
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர்
பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே

மேல்

#2151
வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும்
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர்
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும்
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே

மேல்

#2152
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே

மேல்

#2153
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும்
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான்
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான
புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே

மேல்

#2154
முள் ஆர் கமலத்து அயன் மால் முடியோடு அடி தேட
ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும்
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள்
புள் ஆர் பொய்கை பூ பல தோன்றும் புத்தூரே

மேல்

#2155
கை ஆர் சோறு கவர் குண்டர்களும் துவருண்ட
மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே

மேல்

#2156
நறவம் கமழ் பூம் காழி ஞானசம்பந்தன்
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல்
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே

மேல்

64. திருமுதுகுன்றம் : பண் – காந்தாரம்

#2157
தேவா சிறியோம் பிழையை பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்று அங்கு அடியார்-தங்கட்கு அருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே

மேல்

#2158
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தை உள்ளே கோயிலாக திகழ்வானை
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு
முந்தி தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே

மேல்

#2159
நீடும் அலரும் புனலும் கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தை உள்ளே திகழ்வானை
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே

மேல்

#2160
தெரிந்த அடியார் சிவனே என்று திசை-தோறும்
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர்
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே

மேல்

#2161
வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம்
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார்
கொத்து ஆர் சந்தும் குரவும் வாரி கொணர்ந்து உந்தும்
முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே

மேல்

#2162
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில்
கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே

மேல்

#2163
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை
நாசம்செய்த நங்கள் பெருமான் அமர் கோயில்
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே

மேல்

#2164
அல்லி மலர் மேல் அயனும் அரவின்_அணையானும்
சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை அயலே முறுவல்செய்யும் முதுகுன்றே

மேல்

#2165
கருகும் உடலார் கஞ்சி உண்டு கடுவே தின்று
உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே

மேல்

#2166
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழி சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றை
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள்
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே

மேல்

65. திருப்பிரமபுரம் : பண் – காந்தாரம்

#2167
கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
பிறையும் சடைக்கு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2168
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும்
தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும்
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2169
சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும்
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்
பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2170
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும்
கச்சு தரித்திலர் போலும் கங்கை தரித்திலர் போலும்
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2171
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும்
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும்
பீடு மிகுத்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2172
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி அழித்திலர் போலும்
அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும்
வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும்
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2173
பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும்
கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும்
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2174
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும்
பிரச மலர் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2175
அடி முடி மால் அயன் தேட அன்றும் அளப்பிலர் போலும்
கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும்
படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடி நடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2176
வெற்று அரை சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும்
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே

மேல்

#2177
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவரொடு இனிதாக வீற்றிருப்பார் அவர்தாமே

மேல்

66. திருஆலவாய் : திருநீற்றுப்பதிகம் : பண் – காந்தாரம்

#2178
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே

மேல்

#2179
வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே

மேல்

#2180
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே

மேல்

#2181
காண இனியது நீறு கவினை தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு
சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே

மேல்

#2182
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே

மேல்

#2183
அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே

மேல்

#2184
எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு
அயிலை பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

மேல்

#2185
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே

மேல்

#2186
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே

மேல்

#2187
குண்டிகை கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே

மேல்

#2188
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றை
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே

மேல்

67. திருப்பெரும்புலியூர் : பண் – காந்தாரம்

#2189
மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார்
விண்ணும் ஓர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர்
கண்ணும் ஓர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார்
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2190
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள்
மின்னு சுடர் கொடி போலும் மேனியினார் ஒரு கங்கை
கன்னிகளின் புனையோடு கலை மதி மாலை கலந்த
பின்னு சடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2191
கள்ளம் மதித்த கபாலம் கை-தனிலே மிக ஏந்தி
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர்
வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற
பிள்ளை மதி பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2192
ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம்
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும்
ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2193
தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2194
கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண்
முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் வேதபுராணர்
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2195
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார்
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர்
கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார்
பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2196
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி
துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி
மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2197
சீர் உடையார் அடியார்கள் சேடர் ஒப்பார் சடை சேரும்
நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை
தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய
பேர் உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2198
உரிமை உடைய அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டி அருள்செயும் ஆதிமுதல்வர்
கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா
பெருமை உடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

மேல்

#2199
பிறை வளரும் முடி சென்னி பெரும்புலியூர் பெருமானை
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே

மேல்

68. திருக்கடம்பூர் : பண் – காந்தாரம்

#2200
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை
தேன் அமர் கொன்றையினானை தேவர் தொழப்படுவானை
கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே

மேல்

#2201
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும்
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே

மேல்

#2202
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற
தெளிபடு கொள்கை கலந்த தீ தொழிலார் கடம்பூரில்
ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே

மேல்

#2203
பறையொடு சங்கம் இயம்ப பல் கொடி சேர் நெடு மாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில்
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும்
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே

மேல்

#2204
தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில்
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்_நுதலான் கடம்பூரில்
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே

மேல்

#2205
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக
கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில்
பெண் புனை கூறு உடையானை பின்னு சடை பெருமானை
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே

மேல்

#2206
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில்
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன்
புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே

மேல்

#2207
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே

மேல்

#2208
திரு மரு மார்பிலவனும் திகழ்தரு மா மலரோனும்
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கரு வரை காலில் அடர்த்த கண்_நுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே

மேல்

#2209
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன்
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே

மேல்

#2210
விடை நவிலும் கொடியானை வெண் கொடி சேர் நெடு மாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே

மேல்

69. திருப்பாண்டிக்கொடுமுடி : பண் – காந்தாரம்

#2211
பெண் அமர் மேனியினாரும் பிறை புல்கு செம் சடையாரும்
கண் அமர் நெற்றியினாரும் காது அமரும் குழையாரும்
எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும்
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2212
தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள்
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2213
சடை அமர் கொன்றையினாரும் சாந்த வெண் நீறு அணிந்தாரும்
புடை அமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும்
விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2214
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த
கறை வளர் மா மிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை
பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2215
போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள்
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி
பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2216
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும்
பொடிபட முப்புரம் செற்ற பொரு சிலை ஒன்று உடையாரும்
வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும்
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2217
ஊன் அமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும்
தேன் அமரும் மொழி மாது சேர் திரு மேனியினாரும்
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல்
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2218
புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும்
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும்
கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2219
திருமகள் காதலினானும் திகழ்தரு மா மலர் மேலை
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான்
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே
பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2220
புத்தரும் புந்தி இலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால்
மெய் தவம் பேசிடமாட்டார் வேடம் பலபலவற்றால்
சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே

மேல்

#2221
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்
பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே

மேல்

70. திருப்பிரமபுரம் : பண் – காந்தாரம் – திருச்சக்கரமாற்று

#2222
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு பெருநீர் தோணி
புரம் மன்னு பூந்தராய் பொன் அம் சிரபுரம் புறவம் சண்பை
அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே

மேல்

#2223
வேணுபுரம் பிரமனூர் புகலி பெரு வெங்குரு வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி
கோணிய கோட்டாற்று கொச்சைவயம் சண்பை கூரும் செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே

மேல்

#2224
புகலி சிரபுரம் வேணுபுரம் சண்பை புறவம் காழி
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே

மேல்

#2225
வெங்குரு தண் புகலி வேணுபுரம் சண்பை வெள்ளம் கொள்ள
தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர்
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே

மேல்

#2226
தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே

மேல்

#2227
தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே

மேல்

#2228
சீர் ஆர் சிரபுரமும் கொச்சைவயம் சண்பையொடு புறவம் நல்ல
ஆரா தராய் பிரமனூர் புகலி வெங்குருவொடு அம் தண் காழி
ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே

மேல்

#2229
புறவம் சிரபுரமும் தோணிபுரம் சண்பை மிகு புகலி காழி
நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர்
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே

மேல்

#2230
சண்பை பிரமபுரம் தண் புகலி வெங்குரு நல் காழி சாயா
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல்
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே

மேல்

#2231
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய
கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய
விழுமிய சீர் வெங்குருவொடு ஓங்கு தராய் வேணுபுரம் மிகு நல் மாட
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே

மேல்

#2232
கொச்சைவயம் பிரமனூர் புகலி வெங்குரு புறவம் காழி
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர்
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே

மேல்

#2233
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை
நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே

மேல்

71. திருக்குறும்பலா : பண் – காந்தாரம்

#2234
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம்
பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய்
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே

மேல்

#2235
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல்
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட
கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே

மேல்

#2236
வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல்
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே

மேல்

#2237
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி
காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில்
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல்
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே

மேல்

#2238
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல்
குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே

மேல்

#2239
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர்
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில்
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல்
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே

மேல்

#2240
பொன் தொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடி
பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே

மேல்

#2241
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல்
பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே

மேல்

#2242
அரவின்_அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல் சென்னி
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த
குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே

மேல்

#2243
மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு
காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில்
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய
கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே

மேல்

#2244
கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல்
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே

மேல்

72. திருநணா : பண் – காந்தாரம்

#2245
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல்
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட
செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே

மேல்

#2246
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே

மேல்

#2247
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில்
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே

மேல்

#2248
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் மிடைந்து வானோர்
ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்க
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே

மேல்

#2249
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த
அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி
தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே

மேல்

#2250
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே

மேல்

#2251
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்
நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே

மேல்

#2252
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி
முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம்
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில்
செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே

மேல்

#2253
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும்
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே

மேல்

#2254
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில்
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே

மேல்

#2255
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே

மேல்

73. திருப்பிரமபுரம் : பண் – காந்தாரம்

#2256
விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல்
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே

மேல்

#2257
திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் அயனூர் தெய்வத்
தரு வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே

மேல்

#2258
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர்
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன்
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர்_கோன்ஊர்
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே

மேல்

#2259
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான்
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர்
பூமகனூர் பொலிவு உடைய புறவம் விறல் சிலம்பனூர் காழி சண்பை
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே

மேல்

#2260
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல்
விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர்
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே

மேல்

#2261
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர்
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர்
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே

மேல்

#2262
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர்
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே

மேல்

#2263
மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர்
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர்
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே

மேல்

#2264
இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர்
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர்
வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே

மேல்

#2265
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல்
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே

மேல்

#2266
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர்
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர்
பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர்
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே

மேல்

#2267
அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர்
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ
சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே

மேல்

74. திருப்பிரமபுரம் : பண் – காந்தாரம் – திருக்கோமூத்திரி அந்தாதி

#2268
பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல்
மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே

மேல்

#2269
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட
உரு திகழ் வெங்குரு புகலி ஓங்கு தராய் உலகு ஆரும் கொச்சை காழி
திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ
தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே

மேல்

#2270
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே

மேல்

#2271
தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர்
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம்
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே

மேல்

#2272
விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம் ஏய்க்கும்
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர்
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே

மேல்

#2273
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர்
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம்
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே

மேல்

#2274
திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர்
மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர்
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே

மேல்

#2275
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில்
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர்
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே

மேல்

#2276
மிக்க கமலத்து அயனூர் விளங்கு புறவம் சண்பை காழி கொச்சை
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர்
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள்
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே

மேல்

#2277
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும்
பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர்
கைம்மாவை உரிசெய்தோன் காழி அயனூர் தராய் சண்பை காரின்
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே

மேல்

#2278
இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர்
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர்
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே

மேல்

#2279
அம்மான் சேர் கழுமலம் மா சிரபுரம் வெங்குரு கொச்சை புறவம் அம் சீர்
மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர்
அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல்
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே

மேல்

75. சீகாழி : பண் – காந்தாரம்

#2280
விண் இயங்கும் மதிக்கண்ணியான் விரியும் சடை
பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல்
கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள்
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே

மேல்

#2281
வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும்
பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான்
கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள்
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே

மேல்

#2282
சுற்றல் ஆம் நல் புலி தோல் அசைத்து அயன் வெண் தலை
துற்றல் ஆயது ஒரு கொள்கையான் சுடு நீற்றினான்
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள்
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே

மேல்

#2283
பல் அயங்கு தலை ஏந்தினான் படுகானிடை
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும்
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள்
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே

மேல்

#2284
தூ நயம் கொள் திரு மேனியில் பொடி பூசி போய்
நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமா
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள்
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே

மேல்

#2285
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன்
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலி காழியுள்
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே

மேல்

#2286
முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும்
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலி காழியுள்
கொடி இலங்கும் இடையாளொடும் குடிகொண்டதே

மேல்

#2287
வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி
கல் அரக்க விறல் வாட்டினான் கலி காழியுள்
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே
தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே

மேல்

#2288
மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும்
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர்
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே

மேல்

#2289
நன்றி ஒன்றும் உணராத வன் சமண் சாக்கியர்
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான்
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள்
வென்றி சேர் வியன் கோயில் கொண்ட விடையாளனே

மேல்

#2290
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள்
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல்
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே

மேல்

76. திருஅகத்தியான்பள்ளி : பண் – காந்தாரம்

#2291
வாடிய வெண் தலைமாலை சூடி வயங்கு இருள்
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியை
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே

மேல்

#2292
துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண் நீற்றினான்
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை
உன்னம்செய்த மனத்தார்கள்தாம் வினை ஓடுமே

மேல்

#2293
உடுத்ததுவும் புலி தோல் பலி திரிந்து உண்பதும்
கடுத்து வந்த கழல் காலன்-தன்னையும் காலினால்
அடர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகள் ஆகவே

மேல்

#2294
காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக்கண்ணினால்
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை
ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான்மகள் ஒருபாகமே

மேல்

#2295
போர்த்ததுவும் கரியின் உரி புலி தோல் உடை
கூர்த்தது ஓர் வெண் மழு ஏந்தி கோள் அரவம் அரைக்கு
ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே

மேல்

#2296
தெரிந்ததுவும் கணை ஒன்று முப்புரம் சென்று உடன்
எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை
அரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
புரிந்ததுவும் உமையாள் ஓர்பாகம் புனைதலே

மேல்

#2297
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய்
சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும்
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை
நீதியால் தொழுவாரவர் வினை நீங்குமே

மேல்

#2298
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம்
ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம்
அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்-தன் தோள்கள் இருபதே

மேல்

#2299
சிரமும் நல்ல மத மத்தமும் திகழ் கொன்றையும்
அரவும் மல்கும் சடையான் அகத்தியான்பள்ளியை
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே

மேல்

#2300
செம் துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியை
சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே

மேல்

#2301
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள்
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லாரவர்-தங்கள் மேல் வினை மாயுமே

மேல்

77. திருஅறையணிநல்லூர் : பண் – காந்தாரம்

#2302
பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல்
ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே

மேல்

#2303
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன்
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே

மேல்

#2304
என்பினார் கனல் சூலத்தார் இலங்கும் மா மதி உச்சியான்
பின்பினால் பிறங்கும் சடை பிஞ்ஞகன் பிறப்பிலி என்று
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு
அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே

மேல்

#2305
விரவு நீறு பொன் மார்பினில் விளங்க பூசிய வேதியன்
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும்
அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர்
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே

மேல்

#2306
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ
ஆயினாய் கொன்றையாய் அனல் அங்கையாய் அறையணிநல்லூர்
மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை
பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே

மேல்

#2307
விரையின் ஆர் கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய
அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர்
நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர்
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே

மேல்

#2308
வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின்
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர்
வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே

மேல்

#2309
தக்கனார் பெரு வேள்வியை தகர்த்து உகந்தவன் தாழ் சடை
முக்கணான் மறை பாடிய முறைமையான் முனிவர் தொழ
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர்
நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே

மேல்

#2310
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார்
செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில்
ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர்
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே

மேல்

#2311
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின்
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி
ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர்
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே

மேல்

#2312
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர்
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே

மேல்

78. திருவிளநகர் : பண் – காந்தாரம்

#2313
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர்
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார்
மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே

மேல்

#2314
அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி
புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே

மேல்

#2315
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய்
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட
காளம் மல்கிய கண்டத்தர் கதிர் விரி சுடர் முடியினர்
மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே

மேல்

#2316
கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார்
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார்
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார்
மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே

மேல்

#2317
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என
சென்னி திங்களை பொங்கு அரா கங்கையோடு உடன்சேர்த்தினார்
மின்னு பொன் புரி நூலினார் மேயது விளநகர் அதே

மேல்

#2318
தேவரும் அமரர்களும் திசைகள் மேல் உள தெய்வமும்
யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார்
மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும்
மேவ அரும் பொருள் ஆயினார் மேயது விளநகர் அதே

மேல்

#2319
சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார்
கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார்
மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார்
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே

மேல்

#2320
படர்தரும் சடைமுடியினார் பைம் கழல் அடி பரவுவார்
அடர்தரும் பிணி கெடுக என அருளுவார் அரவு அரையினார்
விடர் தரும் மணி மிடறினார் மின்னு பொன் புரி நூலினார்
மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே

மேல்

#2321
கை இலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார்
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார்
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார்
மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே

மேல்

#2322
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும்
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும்
உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல்
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே

மேல்

#2323
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய
நன் பிறைநுதல் அண்ணலை சண்பை ஞானசம்பந்தன் சீர்
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய்
துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே

மேல்

79. திருவாரூர் : பண் – காந்தாரம்

#2324
பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே
கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

மேல்

#2325
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

மேல்

#2326
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால்
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும்
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே

மேல்

#2327
நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள்
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

மேல்

#2328
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

மேல்

#2329
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை
கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

மேல்

#2330
ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

மேல்

#2331
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம்
புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

மேல்

#2332
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர்
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

மேல்

#2333
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

மேல்

#2334
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர்
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே

மேல்

80. திருக்கடவூர்மயானம் : பண் – காந்தாரம்

#2335
வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி
எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2336
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார்
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2337
ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி
காடு அது இடமா உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2338
இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார்
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2339
வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க
கள்ளம் நகு வெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2340
பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார்
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார்
பின் தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2341
பாசம் ஆன களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார்
காசை மலர் போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2342
செற்ற அரக்கன் அலற திகழ் சேவடி மெல் விரலால்
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார்
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல்
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2343
வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார்
கருமான் உரி தோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணா
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2344
தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள்
காய வேவ செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர்
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

மேல்

#2345
மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த
அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியல் ஆக
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே

மேல்

81. திருவேணுபுரம் : பண் – காந்தாரம்

#2346
பூதத்தின் படையினீர் பூம் கொன்றை தாரினீர்
ஓதத்தின் ஒலியோடும் உம்பர் வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே

மேல்

#2347
சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல்
உடை ஆடை அது கொண்டீர் உமையாளை ஒருபாகம்
அடையாளம் அது கொண்டீர் அம் கையினில் பரசு எனும்
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே

மேல்

#2348
கங்கை சேர் சடைமுடியீர் காலனை முன் செற்று உகந்தீர்
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர்
மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே

மேல்

#2349
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே

மேல்

#2350
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சி கைதொழ மெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே

மேல்

#2351
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர்
துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர்
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே

மேல்

#2352
நீலம் சேர் மிடற்றினீர் நீண்ட செம் சடையினீர்
கோலம் சேர் விடையினீர் கொடும் காலன்-தனை செற்றீர்
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும்
கோலம் சேர் கோயிலே கோயிலாக கொண்டீரே

மேல்

#2353
திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன்
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின்
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர்
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே

மேல்

#2354
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால்
போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற அரிய திருவடியீர்
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே

மேல்

#2355
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடும் குண்டர் சாக்கியர்கள்
புலை ஆனார் அறவுரையை போற்றாது உன் பொன் அடியே
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும்
விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே

மேல்

82. திருத்தேவூர் : பண் – காந்தாரம்

#2356
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான்
விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி
தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

மேல்

#2357
ஓதி மண்தலத்தோர் முழுது உய்ய வெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர்
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர்
ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

மேல்

#2358
மறைகளால் மிக வழிபாடு மாணியை கொல்வான்
கறுவு கொண்ட அ காலனை காய்ந்த எம் கடவுள்
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர்
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

மேல்

#2359
முத்தன் சில் பலிக்கு ஊர்-தொறும் முறைமுறை திரியும்
பித்தன் செம் சடை பிஞ்ஞகன்-தன் அடியார்கள்
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர்
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

மேல்

#2360
பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால்
கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி
தேடுவார் பொருள் ஆனவர் செறி பொழில் தேவூர்
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

மேல்

#2361
பொங்கு பூண் முலை புரி குழல் வரி வளை பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான்
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர்
அங்கணன்-தனை அடைந்தனம் அல்லல் ஒன்றே இலமே

மேல்

#2362
வன் புயத்த அ தானவர் புரங்களை எரிய
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க
தென் தமிழ் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

மேல்

#2363
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அ தசமுகன் நெரிந்து
வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான்
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர்
அரவு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

மேல்

#2364
முந்தி கண்ணனும் நான்முகனும் அவர் காணா
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான்
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர்
அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

மேல்

#2365
பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பல நாள்
கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு
தேறி மிக்க நம் செம் சடை கடவுள் தென் தேவூர்
ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

மேல்

#2366
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன்
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே

மேல்

83. திருக்கொச்சைவயம் : பண் – பியந்தைக்காந்தாரம்

#2367
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின்
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே

மேல்

#2368
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன்
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான்
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ்
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே

மேல்

#2369
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான்
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே

மேல்

#2370
எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே

மேல்

#2371
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன்
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே

மேல்

#2372
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான்
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே

மேல்

#2373
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின்
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே

மேல்

#2374
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி
கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான்
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே

மேல்

#2375
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார்
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன்
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே

மேல்

#2376
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய்
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே

மேல்

84. திருநனிபள்ளி : பண் – பியந்தைக்காந்தாரம்

#2377
காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2378
சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான்
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும்
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2379
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான்
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான்
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ்
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2380
குளிர் தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான்
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2381
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2382
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன்
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2383
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2384
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2385
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார்
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான்
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2386
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும்
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும்
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்

மேல்

#2387
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன்
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல்
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே

மேல்

85. பொது : பண் – பியந்தைக்காந்தாரம் – கோளறுபதிகம்

#2388
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2389
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2390
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும்
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2391
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2392
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2393
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய்
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால்
கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2394
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர்
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2395
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய்
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால்
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2396
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும்
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2397
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மேல்

#2398
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே

மேல்

86. திருநாரையூர் : பண் – பியந்தைக்காந்தாரம்

#2399
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின்
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2400
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும்
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன்
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல்
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2401
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும்
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும்
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2402
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின்
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும்
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல்
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2403
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான்
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும்
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர்
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2404
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில்
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும்
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2405
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின்
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும்
முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர்
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2406
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர்
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின்
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள்
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2407
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும்
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய்
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2408
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும்
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே

மேல்

#2409
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார்
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான்
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார்
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே

மேல்

87. திருநறையூர்ச்சித்தீச்சரம் : பண் – பியந்தைக்காந்தாரம்

#2410
நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான்
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2411
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில்
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன்
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2412
சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான்
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன்
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2413
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள்
ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார்
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2414
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன்
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான்
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2415
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான்
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன்
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2416
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம்
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன்
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும்
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2417
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன்
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2418
குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்
றில பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன்
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின்
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2419
துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும்
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன்
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும்
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே

மேல்

#2420
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே

மேல்

88. தென்திருமுல்லைவாயில் : பண் – பியந்தைக்காந்தாரம்

#2421
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன்
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர்
களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின்
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2422
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன்
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2423
வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2424
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய்
அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர்
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2425
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர்
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர்
செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2426
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன்
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர்
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2427
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன்
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர்
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2428
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர்
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2429
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன்
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர்
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில்
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2430
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர்
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே

மேல்

#2431
அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார்
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல்
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே

மேல்

89. திருக்கொச்சைவயம் : பண் – பியந்தைக்காந்தாரம்

#2432
அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல்
பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத
குறைவு இல் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே

மேல்

#2433
சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூத
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல்
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே

மேல்

#2434
பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும்
கோல மா மணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே

மேல்

#2435
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர்
பொடிகள் பூசிய மார்பின் புனைவர் நல் மங்கை ஒர்பங்கர்
கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து
கொடிகள் ஓங்கிய மாட கொச்சைவயம் அமர்ந்தாரே

மேல்

#2436
ஆடல் மா மதி உடையார் ஆயின பாரிடம் சூழ
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார்
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி
கூடி தண் பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே

மேல்

#2437
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல்
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம் அமர்ந்தாரே

மேல்

#2438
அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது பொரு கடல் இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்
குன்றம் அன்ன பொன் மாட கொச்சைவயம் அமர்ந்தாரே

மேல்

#2439
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும்
கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே

மேல்

#2440
குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர்
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும்
கொண்டல் சேர் மணி மாட கொச்சைவயம் அமர்ந்தாரே

மேல்

#2441
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அரு மறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய்
முந்தி வானவரோடும் புக வலர் முனை கெட வினையே

மேல்

90. திருநெல்வாயிலரத்துறை : பண் – பியந்தைக்காந்தாரம்

#2442
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி
சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல்
அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2443
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால்
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
ஆரும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2444
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால்
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
அணி கலந்த நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2445
துன்ன ஆடை ஒன்று உடுத்து தூய வெண்நீற்றினர் ஆகி
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல்
அன்னம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2446
வெருகு உரிஞ்சு வெம் காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2447
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால்
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
அரவம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2448
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2449
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான்
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2450
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2451
சாக்கியப்படுவாரும் சமண்படுவார்களும் மற்றும்
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால்
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல்
ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே

மேல்

#2452
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய்
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே

மேல்

91. திருமறைக்காடு : பண் – பியந்தைக்காந்தாரம்

#2453
பொங்கு வெண் மணல் கானல் பொரு கடல் திரை தவழ் முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம்
திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும்
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே

மேல்

#2454
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை
ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம்
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப
தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே

மேல்

#2455
நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில்
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன்
தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப
கண்ணிதானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே

மேல்

#2456
ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி
தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம்
மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின்
நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே

மேல்

#2457
அரவம் வீக்கிய அரையும் அதிர் கழல் தழுவிய அடியும்
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான்
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே

மேல்

#2458
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர்
அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள்
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம்
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே

மேல்

#2459
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட
ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே

மேல்

#2460
தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே

மேல்

#2461
விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவு_அணையானும்
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான்
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே

மேல்

#2462
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா
கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள்
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள்
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே

மேல்

#2463
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு அமர்ந்தாரை
கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன்
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய்
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே

மேல்

92. திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் : பண் – பியந்தைக்காந்தாரம்

#2464
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில்
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2465
முயல் வளாவிய திங்கள் வாள் முகத்து அரிவையில் தெரிவை
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான்
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும்
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2466
தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும்
கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம்
கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2467
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம்
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2468
ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான்
பூசும் மாசு இல் வெண்நீற்றர் பொலிவு உடை பூம் புகலூரில்
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல்
வாச மா மலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2469
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி
கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில்
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல்
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2470
தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில்
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2471
சாமவேதம் ஓர் கீதம் ஓதி அ தசமுகன் பரவும்
நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த
காமதேவனை வேவ கனல் எரி கொளுவிய கண்ணார்
வாமதேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2472
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு
நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து அருளுதல்பொருட்டால்
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2473
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம்
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல்
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
மை கொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே

மேல்

#2474
பொங்கு தண் புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில்
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே

மேல்

93. திருத்தெங்கூர் : பண் – பியந்தைக்காந்தாரம்

#2475
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற
கரைசெய் மால் கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர்
விரை செய் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2476
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும்
கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன்
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த
வித்தன் தாழ் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2477
அடையும் வல்வினை அகல அருள்பவர் அனல் உடை மழுவாள்
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன்
சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண்
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2478
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார்
கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர்
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2479
சுழித்த வார் புனல் கங்கை சூடி ஒர் காலனை காலால்
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை
கழித்த வெண் தலை ஏந்தி காமனது உடல் பொடி ஆக
விழித்தவர் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2480
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர்
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற
வில்லினார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2481
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார்
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி
வெறி கொள் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2482
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர்
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடைமுடி சதுரர்
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2483
தேடித்தான் அயன் மாலும் திரு முடி அடி இணை காணார்
பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால்
ஆடத்தான் மிக வல்லர் அருச்சுனற்கு அருள்செய கருதும்
வேடத்தார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2484
சடம் கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல் தவிர
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை
கடம் கொள் மால் களிற்று உரியர் கடல் கடைந்திட கனன்று எழுந்த
விடம் கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

மேல்

#2485
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரை
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல்
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே

மேல்

94. திருவாழ்கொளிபுத்தூர் : பண் – பியந்தைக்காந்தாரம்

#2486
சாகை ஆயிரம் உடையார் சாமமும் ஓதுவது உடையார்
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார்
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2487
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார் கையும் ஓர் ஆயிரம் உடையார்
பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமை ஓர் ஆயிரம் உடையார்
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2488
நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும்
வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்
முடியும் ஆயிரம் உடையார் மொய்குழலாளையும் உடையார்
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2489
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார்
குஞ்சி மேகலை உடையார் கொந்து அணி வேல் வலன் உடையார்
அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈர் உரி உடையார்
வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2490
பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார்
விரவுவாரையும் உடையார் வெண் தலை பலி கொள்வது உடையார்
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம்பேர் மிக உடையார்
வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2491
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமை கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல உடையார்
கண்டுகோடலும் அரியார் காட்சியும் அரியது ஒர் கரந்தை
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2492
மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார்
தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த
ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2493
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பு அவர் பலபல உடையார்
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2494
வென்றி மா மலரோனும் விரி கடல் துயின்றவன்தானும்
என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி
முன்றில் மா மலர் வாசம் முது முதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2495
மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர்
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல
துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும்
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே

மேல்

#2496
நலம் கொள் பூம் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே

மேல்

95. திருஅரசிலி : பண் – பியந்தைக்காந்தாரம்

#2497
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி
வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே

மேல்

#2498
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி
வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம்
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே

மேல்

#2499
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென்
கொங்கையாள் ஒருபாகம் மருவிய கொல்லை வெள்ஏற்றன்
சங்கையாய் திரியாமே தன் அடியார்க்கு அருள்செய்து
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே

மேல்

#2500
மிக்க காலனை வீட்டி மெய் கெட காமனை விழித்து
புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே

மேல்

#2501
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மா மறை ஓதி
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே

மேல்

#2502
பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக
பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய
கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு
அரிய ஆரமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே

மேல்

#2503
வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன்
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு
அண்ணலாய் அருள்செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே

மேல்

#2504
குறிய மாண் உரு ஆகி குவலயம் அளந்தவன்தானும்
வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும்
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே

மேல்

#2505
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து
திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல்
பொருளை பொய்யிலி மெய் எம் நாதனை பொன் அடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே

மேல்

#2506
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை காழி
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே

மேல்

96. சீகாழி : பண் – பியந்தைக்காந்தாரம்

#2507
பொங்கு வெண் புரி வளரும் பொற்பு உடை மார்பன் எம்பெருமான்
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில்
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும்
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே

மேல்

#2508
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி
நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு
ஆவ என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே

மேல்

#2509
கரியின் மா முகம் உடைய கணபதி தாதை பல் பூதம்
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே

மேல்

#2510
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம்
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே

மேல்

#2511
மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான்
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம்
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே

மேல்

#2512
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன்
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே

மேல்

#2513
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில்
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம்
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே

மேல்

#2514
கார் கொள் மேனி அ அரக்கன் தன் கடும் திறலினை கருதி
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில்
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே

மேல்

#2515
மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால்
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே

மேல்

#2516
புத்தர் பொய் மிகு சமணர் பொலி கழல் அடி இணை காணும்
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம்
சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு
முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே

மேல்

#2517
ஊழியானவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு

மேல்

97. சீகாழி : திருவிராகம் : பண் – நட்டராகம்

#2518
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர்
அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம்
உம்பர்நாதன் உத்தமன் ஒளி மிகுந்த செம் சடை
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே

மேல்

#2519
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும்
ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர்
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம்
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே

மேல்

#2520
சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு
ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம்
ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன்
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே

மேல்

#2521
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும்
உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்
பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார்
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே

மேல்

#2522
கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய்
உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம்
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுதுசெய்
கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே

மேல்

#2523
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர்
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்
கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே

மேல்

#2524
பொய் மிகுத்த வாயராய் பொறாமையோடு செல்லும் நீர்
ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம்
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன்
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே

மேல்

#2525
காலினோடு கைகளும் தளர்ந்து காமநோய்-தனால்
ஏல வார் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே

மேல்

#2526
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள்
முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவதன் முனம்
தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்ப அரியவன்
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே

மேல்

#2527
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை
அக்கினோடு அரவு அசைத்த அந்தி_வண்ணர் காழியை
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே

மேல்

98. திருத்துருத்தி : திருவிராகம் : பண் – நட்டராகம்

#2528
வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி
கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்
உரைத்தலை பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே

மேல்

#2529
அடுத்தடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம்
தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை
கடுத்து அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம்
எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே

மேல்

#2530
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செம் சடை
சங்கு இலங்கு வெண் குழை சரிந்து இலங்கு காதினாய்
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ

மேல்

#2531
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம்
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும்
ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய்
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே

மேல்

#2532
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்து அடி
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல்
பிறக்கும் ஆறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு
இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே

மேல்

#2533
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில்
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய்
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூ
எயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே

மேல்

#2534
கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர்
துணி சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல்
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே

மேல்

#2535
சுட பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன்
இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய்
கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை
அடல் பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே

மேல்

#2536
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும் மாலுமாய்
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்
துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி
உளம் குளிர்ந்தபோது எலாம் உகந்துஉகந்து உரைப்பனே

மேல்

#2537
புத்தர் தத்துவம் இலா சமண் உரைத்த பொய்-தனை
உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம்
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம்
பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே

மேல்

#2538
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அரும் தமிழ்
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால்
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே
குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே

மேல்

99. திருக்கோடிகா : பண் – நட்டராகம்

#2539
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையை போக விட்டு போது-மின்
மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல்
கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2540
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்
நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம்
கொல்லை வெள்ளைஏற்றினான் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2541
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்து நீர்
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின்
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல்
கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2542
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா
கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2543
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ
பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான்
கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2544
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட
கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2545
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ
பூணல் வெள் எலும்பினான் பொன் திகழ் சடைமுடி
கோணல் வெண் பிறையினான் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2546
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர்
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர்
குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2547
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா
வெம் கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர்
கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2548
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும்
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை
விட்ட புன் சடையினான் மேதகும் முழவொடும்
கொட்டு அமைந்த ஆடலான் கோடிகாவு சேர்-மினே

மேல்

#2549
கொந்து அணி குளிர் பொழில் கோடிகாவு மேவிய
செந்தழல்உருவனை சீர்மிகு திறல் உடை
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்
பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே

மேல்

100. திருக்கோவலூர் வீரட்டம் : திருவிராகம் : பண் – நட்டராகம்

#2550
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண்
இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே
குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள்
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2551
கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர்
விரவி நாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2552
உள்ளத்தீரே போது-மின் உறுதி ஆவது அறிதிரேல்
அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே
கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள்
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2553
கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும்
இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன்
பனைகள் உலவு பைம் பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர்
வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2554
உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்தபோதின்-கண்
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விளங்கு கோவணத்தினான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2555
கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும்
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும்
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள்
வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2556
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண்
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால்
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விரை கொள் சீர் வெண்நீற்றினான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2557
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை
ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல்
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள்
வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2558
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு
பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள்
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2559
குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும்
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல்
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில்
வெறி கொள் கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே

மேல்

#2560
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன்
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால்
அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில்
விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே

மேல்

101. திருஆரூர் : திருவிராகம் : பண் – நட்டராகம்

#2561
பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தரு கொள் சோலை சூழ நீடு மாட மாளிகை கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே

மேல்

#2562
விண்ட வெள்எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும்
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர்
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய்
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே

மேல்

#2563
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர்
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர்
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே

மேல்

#2564
அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில்
குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர்
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை
அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே

மேல்

#2565
சங்கு உலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர்
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம்
அங்கு உலாவி அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே

மேல்

#2566
கள்ள நெஞ்ச வஞ்சக கருத்தை விட்டு அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர்
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய்
அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே

மேல்

#2567
கங்கை பொங்கு செம் சடை கரந்த கண்டர் காமனை
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர்
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல்
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே

மேல்

#2568
வரை தலம் எடுத்தவன் முடி தலம் உரத்தொடும்
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர்
நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே

மேல்

#2569
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய்
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர்
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே

மேல்

#2570
பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம்
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே

மேல்

#2571
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா
அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே

மேல்

102. திருச்சிரபுரம் : பண் – நட்டராகம்

#2572
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார்
மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம்
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர்
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே

மேல்

#2573
கோல மா கரி உரித்தவர் அரவொடும் ஏன கொம்பு இள ஆமை
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை
போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே

மேல்

#2574
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று
கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம்
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள்
கோனை கும்பிடும் அடியரை கொடுவினை குற்றங்கள் குறுகாவே

மேல்

#2575
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார்
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார்
வேணி வெண் பிறை உடையவர் வியன் புகழ் சிரபுரத்து அமர்கின்ற
ஆணி பொன்னினை அடி தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே

மேல்

#2576
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு
வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே

மேல்

#2577
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம்
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார்
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே

மேல்

#2578
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில்
வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண்
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்தாம்
தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே

மேல்

#2579
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார்
புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும்
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே

மேல்

#2580
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று
கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம்
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே

மேல்

#2581
பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த
செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே

மேல்

#2582
பரசுபாணியை பத்தர்கள் அத்தனை பை அரவோடு அக்கு
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே

மேல்

103. திருஅம்பர்மாகாளம் : பண் – நட்டராகம்

#2583
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
அல்லும் நண்பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே

மேல்

#2584
அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம்
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே

மேல்

#2585
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே

மேல்

#2586
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே

மேல்

#2587
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய
கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில்
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே

மேல்

#2588
கண் உலாவிய கதிர் ஒளி முடி மிசை கனல்விடு சுடர் நாகம்
தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே

மேல்

#2589
தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை
பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய
மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே

மேல்

#2590
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில்
மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே

மேல்

#2591
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும்
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே

மேல்

#2592
பிண்டிபாலரும் மண்டை கொள் தேரரும் பீலி கொண்டு உழல்வாரும்
கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே

மேல்

#2593
மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே

மேல்

104. திருக்கடிக்குளம் : பண் – நட்டராகம்

#2594
பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க
கடி கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தை தம்
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே

மேல்

#2595
விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும்
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம்
கண்கள் ஆர்தர கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே

மேல்

#2596
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம்
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே

மேல்

#2597
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும்
கார் கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம்-தன்னை
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே

மேல்

#2598
சுரும்பு சேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம்
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே

மேல்

#2599
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம்
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக
காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின்
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே

மேல்

#2600
குலவு கோலத்த கொடி நெடு மாடங்கள் குழாம் பல குளிர் பொய்கை
உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர்
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே

மேல்

#2601
மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே

மேல்

#2602
நீரின் ஆர் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடி முடி காணார்
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி
காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன்
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே

மேல்

#2603
குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட
கண்டர் முண்டம் நல் மேனியர் கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர்
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே

மேல்

#2604
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன்
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும்
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே

மேல்

105. திருக்கீழ்வேளூர் : பண் – நட்டராகம்

#2605
மின் உலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும்
பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர்
பொன் உலாவிய கொன்றை அம் தாரினர் புகழ் மிகு கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே

மேல்

#2606
நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர்
சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே

மேல்

#2607
வெண் நிலா மிகு விரி சடை அரவொடும் வெள்எருக்கு அலர் மத்தம்
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர்
பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே

மேல்

#2608
சேடு உலாவிய கங்கையை சடையிடை தொங்கவைத்து அழகாக
நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர்
பீடு உலாவிய பெருமையர் பெரும் திரு கோயிலுள் பிரியாது
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே

மேல்

#2609
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும்
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே

மேல்

#2610
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர்
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும்
முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே

மேல்

#2611
பிறை நிலாவிய சடையிடை பின்னலும் வன்னியும் துன் ஆரும்
கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர்
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும்
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே

மேல்

#2612
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன்
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர்
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள்
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே

மேல்

#2613
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும்
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே

மேல்

#2614
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார்
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர்
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே

மேல்

#2615
குருண்ட வார் குழல் சடை உடை குழகனை அழகு அமர் கீழ்வேளூர்
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே

மேல்

106. திருவலஞ்சுழி : பண் – நட்டராகம்

#2616
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே

மேல்

#2617
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில்
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே

மேல்

#2618
திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே

மேல்

#2619
கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார்
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே

மேல்

#2620
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம்
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல்
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே

மேல்

#2621
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர் மட மாதர்
இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம்
அருவராதது ஒர் வெண் தலை கை பிடித்து அகம்-தொறும் பலிக்கு என்று
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே

மேல்

#2622
குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம்
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார்
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால்
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே

மேல்

#2623
குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே

மேல்

#2624
அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும்
கழலும் சென்னியும் காண்பு அரிதாயவர் மாண்பு அமர் தட கையில்
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே

மேல்

#2625
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர்
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே

மேல்

#2626
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே

மேல்

107. திருக்கேதீச்சரம் : பண் – நட்டராகம்

#2627
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும்
கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம்
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ கடுவினை அடையாவே

மேல்

#2628
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர்
ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம்
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே

மேல்

#2629
பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு
உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே

மேல்

#2630
பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும்
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே

மேல்

#2631
நல்லர் ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே

மேல்

#2632
பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம்
மாழை அம் கயல்கண்ணி-பால் அருளிய பொருளினர் குடிவாழ்க்கை
வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே

மேல்

#2633
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடம் கைதொழ காதலித்து உறை கோயில்
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே

மேல்

#2634
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள்
தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்-வாய் அ
பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து
உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே

மேல்

#2635
பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும்
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே

மேல்

#2636
புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர்
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து
அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே

மேல்

#2637
மாடு எலாம் மண முரசு என கடலினது ஒலி கவர் மாதோட்டத்து
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே

மேல்

108. திருவிற்குடிவீரட்டம் : பண் – நட்டராகம்

#2638
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த
கடி கொள் கொன்றை அம் சடையினர் கொடியினர் உடை புலி அதள் ஆர்ப்பர்
விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம்
அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே

மேல்

#2639
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி
உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து
விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம்
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே

மேல்

#2640
கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணி மார்பினர் வலங்கையில்
எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர்
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம்
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே

மேல்

#2641
பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார்
வேதம் ஓதிய நா உடையான் இடம் விற்குடிவீரட்டம்
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே

மேல்

#2642
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும்
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடிவீரட்டம்
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே

மேல்

#2643
பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த
அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளிவர் அரியவர் அல்லார்க்கு
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம்
எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே

மேல்

#2644
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று
திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த
விடம் கொள் மா மிடறு உடையவன் உறை பதி விற்குடிவீரட்டம்
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே

மேல்

#2645
செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த
வெம் கண் மால் வரை கரி உரித்து உகந்தவன் விற்குடிவீரட்டம்
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே

மேல்

#2646
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின்
விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம்
கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே

மேல்

#2647
விலங்கலே சிலை இடம் என உடையவன் விற்குடிவீரட்டத்து
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே

மேல்

109. திருக்கோட்டூர் : பண் – நட்டராகம்

#2648
நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை
சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே

மேல்

#2649
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல்
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென்
கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே

மேல்

#2650
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம்
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே

மேல்

#2651
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே

மேல்

#2652
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள்
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும்
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே

மேல்

#2653
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி
பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே

மேல்

#2654
மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலை
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய
கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே

மேல்

#2655
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த
குளிர் கொள் பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினை தொழுவார்கள்
தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே

மேல்

#2656
பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை
தேடி மால் அயன் காண ஒண்ணாத அ திருவினை தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே

மேல்

#2657
கோணல் வெண் பிறை சடையனை கோட்டூர் நற்கொழுந்தினை செழும் திரளை
பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும்
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே
பேணல்செய்து அரனை தொழும் அடியவர் பெருமையை பெறுவாரே

மேல்

#2658
பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும்
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம்
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த
சந்து உலாம் தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே

மேல்

110. திருமாந்துறை : பண் – நட்டராகம்

#2659
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே

மேல்

#2660
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ
துளவ மால்மகன் ஐங்கணை காமனை சுட விழித்தவன் நெற்றி
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே

மேல்

#2661
கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும்
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே

மேல்

#2662
இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம்
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த
மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே

மேல்

#2663
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி
தாங்குவாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே

மேல்

#2664
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி
பொருது காவிரி வடகரை மாந்துறை புளிதன் எம்பெருமானை
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த
மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே

மேல்

#2665
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால்
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே

மேல்

#2666
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை
நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை
சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே

மேல்

#2667
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும்
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே

மேல்

#2668
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம்
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே

மேல்

#2669
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன்
அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே

மேல்

111. திருவாய்மூர் : பண் – நட்டராகம்

#2670
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார்
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல்
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2671
வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர்
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார்
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2672
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு
உண்ண பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார்
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2673
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார்
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும்
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2674
அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே
வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2675
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார்
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2676
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர்
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார்
பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும்
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2677
கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில்
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2678
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2679
சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர்
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

மேல்

#2680
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர்
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே

மேல்

112. திருஆடானை : பண் – நட்டராகம்

#2681
மாது ஓர்கூறு உகந்து ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து ஏத்துவார்-தமை
வாதியா வினை மாயுமே

மேல்

#2682
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று
ஆடலான் உறை ஆடானை
தோடு உலாம் மலர் தூவி கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே

மேல்

#2683
மங்கை கூறினன் மான் மறி உடை
அம் கையான் உறை ஆடானை
தம் கையால் தொழுது ஏத்த வல்லார்
மங்கு நோய் பிணி மாயுமே

மேல்

#2684
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை
அண்ணலான் உறை ஆடானை
வண்ண மா மலர் தூவி கைதொழ
எண்ணுவார் இடர் ஏகுமே

மேல்

#2685
கொய் அணி மலர் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கை அணி மலரால் வணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே

மேல்

#2686
வான் இளம் மதி மல்கு வார் சடை
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை
தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த
ஊனம் உள்ள ஒழியுமே

மேல்

#2687
துலங்கு வெண் மழு ஏந்தி சூழ் சடை
அலங்கலான் உறை ஆடானை
நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும்
வலம்கொள்வார் வினை மாயுமே

மேல்

#2688
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை
அந்தம் இல்லவன் ஆடானை
கந்த மா மலர் தூவி கைதொழும்
சிந்தையார் வினை தேயுமே

மேல்

#2689
மறைவலாரொடு வானவர் தொழுது
அறையும் தண் புனல் ஆடானை
உறையும் ஈசனை ஏத்த தீவினை
பறையும் நல்வினை பற்றுமே

மேல்

#2690
மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மா மலர் தூவி கைதொழ
தீய வல்வினை தீருமே

மேல்

#2691
வீடினார் மலி வெங்கடத்து நின்று
ஆடலான் உறை ஆடானை
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட நோய் பிணி பாறுமே

மேல்

113. சீகாழி : பண் – செவ்வழி

#2692
பொடி இலங்கும் திருமேனியாளர் புலி அதளினர்
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம்
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே

மேல்

#2693
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள்
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம்
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே

மேல்

#2694
கூர்வு இலங்கும் திருசூலவேலர் குழை காதினர்
மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர்
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய்
கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே

மேல்

#2695
குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர்
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான் இடம்
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம்
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே

மேல்

#2696
விருது இலங்கும் சரிதை தொழிலார் விரி சடையினார்
எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால்
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே

மேல்

#2697
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர்
பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின்
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே

மேல்

#2698
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம்
இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால்
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே

மேல்

#2699
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன்
அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன்
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே

மேல்

#2700
பூவினானும் விரி போதில் மல்கும் திருமகள்-தனை
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து
ஓவி அங்கே அவர்க்கு அருள்புரிந்த ஒருவர்க்கு இடம்
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே

மேல்

#2701
உடை நவின்றார் உடை விட்டு உழல்வார் இரும் தவத்தார்
முடை நவின்ற மொழி ஒழித்து உகந்த முதல்வன் இடம்
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர
கடை நவின்ற நெடு மாடம் ஓங்கும் கடல் காழியே

மேல்

#2702
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியுள்
உரகம் ஆரும் சடை அடிகள்-தம்-பால் உணர்ந்து உறுதலால்
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ்
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே

மேல்

114. திருக்கேதாரம் : பண் – செவ்வழி

#2703
தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே

மேல்

#2704
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம்
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம்
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே

மேல்

#2705
முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர்
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால்
மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ
கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே

மேல்

#2706
உள்ளம் மிக்கார் குதிரை முகத்தார் ஒரு காலர்கள்
எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால்
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய்
கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே

மேல்

#2707
ஊழிஊழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால்
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால்
மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே

மேல்

#2708
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல்
தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால்
ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும்
கீறி நாளும் முசு கிளையொடு உண்டு உகளும் கேதாரமே

மேல்

#2709
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால்
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல்
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே

மேல்

#2710
அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால்
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால்
குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல்
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே

மேல்

#2711
ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர்
தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால்
வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே

மேல்

#2712
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள் மாசு உடம்பினர்
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால்
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே

மேல்

#2713
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான்
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே

மேல்

115. திருப்புகலூர் : பண் – செவ்வழி

#2714
வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர்
பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள்
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே

மேல்

#2715
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல்
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள்
போழ்ந்த திங்கள் புரி சடையினான்-தன் புகலூரையே
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள் உங்கள் துயர் தீருமே

மேல்

#2716
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள்
தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை
அடைய வல்லார் அமர்_உலகம் ஆளப்பெறுவார்களே

மேல்

#2717
பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால்
யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம்
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே

மேல்

#2718
அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய்
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள்
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால்
இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே

மேல்

#2719
குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால்
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன்
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள்
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே

மேல்

#2720
ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவு ஆரமா
பூணுமேனும் புகலூர்-தனக்கு ஓர் பொருள் ஆயினான்
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம்
பேணுமேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே

மேல்

#2721
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன்
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால்
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம்
பொய்கை சூழ்ந்த புகலூர் புகழ பொருள் ஆகுமே

மேல்

#2722
நேமியானும் முகம் நான்கு உடையம் நெறி அண்ணலும்
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான்
சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே

மேல்

#2723
வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும்
போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள்
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால்
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே

மேல்

#2724
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்-தனுள்
வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே

மேல்

116. திருநாகைக்காரோணம் : பண் – செவ்வழி

#2725
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா
வேனல் பூத்தம் மராம் கோதையோடும் விராவும் சடை
வான_நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவது
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2726
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான்
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல்
கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2727
வெறி கொள் ஆரும் கடல் கைதை நெய்தல் விரி பூம் பொழில்
முறி கொள் ஞாழல் முட புன்னை முல்லை முகை வெண் மலர்
நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2728
வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன்
கொண்ட கோலம் குளிர் கங்கை தங்கும் குருள் குஞ்சியுள்
உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம்
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2729
வார் கொள் கோல முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே
நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2730
விடை அது ஏறி விட அரவு அசைத்த விகிர்தர் அவர்
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர்
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம் ஆவது
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2731
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை
செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார்
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2732
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற
அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது
மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல்
கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2733
நல்ல போதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால்
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல்
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2734
உயர்ந்த போதின் உருமத்து உடை விட்டு உழல்வார்களும்
பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும்
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே

மேல்

#2735
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான்
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே

மேல்

117. திருஇரும்பைமாகாளம் : பண் – செவ்வழி

#2736
மண்டு கங்கை சடையில் கரந்தும் மதி சூடி மான்
கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம்
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள்
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே

மேல்

#2737
வேத வித்தாய் வெள்ளை நீறு பூசி வினை ஆயின
கோது வித்தா நீறு எழ கொடி மா மதில் ஆயின
ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள்
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே

மேல்

#2738
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான்
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள்
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில்
மந்தி ஏறி கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே

மேல்

#2739
நஞ்சு கண்டத்து அடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம்
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள்
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே

மேல்

#2740
பூசும் மாசு இல் பொடியான் விடையான் பொருப்பன்மகள்
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள்
மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே

மேல்

#2741
குறைவது ஆய குளிர் திங்கள் சூடி குனித்தான் வினை
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள்
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே

மேல்

#2742
பொங்கு செம் கண் அரவும் மதியும் புரி புன் சடை
தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம்
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள்
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே

மேல்

#2743
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான்
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள்
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே

மேல்

#2744
அட்ட காலன்-தனை வவ்வினான் அ அரக்கன் முடி
எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான்
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள்
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே

மேல்

#2745
அரவம் ஆர்த்து அன்று அனல் அங்கை ஏந்தி அடியும் முடி
பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் இடம்
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள்
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே

மேல்

#2746
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில்
அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே

மேல்

118. திருத்திலதைப்பதி : பண் – செவ்வழி

#2747
பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம்
கொடிகள் ஓங்கி குலவும் விழவு ஆர் திலதைப்பதி
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே

மேல்

#2748
தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம்
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே

மேல்

#2749
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான் அடியார் அமரர் தொழ
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள் இடம்
திடல் அடங்க செழும் கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே

மேல்

#2750
கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம்
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே

மேல்

#2751
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான்
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்
விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள்
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே

மேல்

#2752
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும்
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம்
தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே

மேல்

#2753
ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொன் தொடி
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால்
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே

மேல்

#2754
கடுத்து வந்த கன மேனியினான் கருவரை-தனை
எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய்
மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே

மேல்

#2755
படம் கொள் நாகத்து_அணையானும் பைம் தாமரையின் மிசை
இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம்
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே

மேல்

#2756
புத்தர் தேரர் பொறி இல் சமணர்களும் வீறு இலா
பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம்
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே

மேல்

#2757
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல்
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்
பந்தன் மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய்
சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே

மேல்

119. திருநாகேச்சரம் : பண் – செவ்வழி

#2758
தழை கொள் சந்தும் அகிலும் மயில் பீலியும் சாதியின்
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே

மேல்

#2759
பெண் ஒர்பாகம் அடைய சடையில் புனல் பேணிய
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார்
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம்
கண்ணினால் காண வல்லாரவர் கண் உடையார்களே

மேல்

#2760
குறவர் கொல்லை புனம் கொள்ளைகொண்டும் மணி குலவு நீர்
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே

மேல்

#2761
கூசம் நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும்
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம்
தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல்
நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே

மேல்

#2762
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர்
பைம்பொன் வாரி கொழிக்கும் பழம் காவிரி தென்கரை
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே

மேல்

#2763
காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும்
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே

மேல்

#2764
வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய்
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம்
மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே

மேல்

#2765
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும்
மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம்
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே

மேல்

#2766
கரிய மாலும் அயனும் அடியும் முடி காண்பு ஒணா
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம்
பிரிவிலாத அடியார்கள் வானில் பிரியார்களே

மேல்

#2767
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும் வெள்ளிலங்காட்டிடை
நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம்
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே

மேல்

#2768
கந்தம் நாறும் புனல் காவிரி தென்கரை கண் நுதல்
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்
பந்தன் நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய்
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே

மேல்

120. திருமுக்கீச்சரம் : பண் – செவ்வழி

#2769
சாந்தம் வெண் நீறு என பூசி வெள்ளம் சடை வைத்தவர்
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ
வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே

மேல்

#2770
வெண் தலை ஓர் கலனா பலி தேர்ந்து விரி சடை
கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே

மேல்

#2771
மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை
உருவில் ஆர எரியூட்டியதும் உலகு உண்டதால்
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த
பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே

மேல்

#2772
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே
மின்னை அன்ன சடை கங்கையாள் மேவிய காரணம்
தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே

மேல்

#2773
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள்
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன்
அடல்_மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே

மேல்

#2774
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள்
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம்
அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே

மேல்

#2775
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம்
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான்
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே

மேல்

#2776
ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும்
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும்
ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்து அ அடல்
மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே

மேல்

#2777
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய்
சீருள் ஆரும் கழல் தேட மெய் தீத்திரள் ஆயினான்
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன்
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே

மேல்

#2778
வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்று அரை உழல்பவர்
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான்
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர்
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே

மேல்

#2779
மல்லை ஆர் மும் முடி மன்னர் மூக்கீச்சுரத்து அடிகளை
செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே

மேல்

121. திருப்பாதிப்புலியூர் : பண் – செவ்வழி

#2780
முன்ன நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து நீள்
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள்
பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே

மேல்

#2781
கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே
முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம்
புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே

மேல்

#2782
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல்
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான்
வெருளின் மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்த பின்
அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே

மேல்

#2783
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்ய புலியூர்-தனுள்
ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை
ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே

மேல்

#2784
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை
நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன்
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்-தனுள்
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே

மேல்

#2785
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும்
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள்
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே

மேல்

#2786
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய்
சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ
பொங்கு அரவம் உயர் பாதிரிப்புலியூர்-தனுள்
அங்கு அரவம் அரையில் அசைத்தானை அடை-மினே

மேல்

#2787
வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை
ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான்
பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே

மேல்

#2788
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள்
முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன்
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே

மேல்

#2789
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்திடை
திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும்
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின்
புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே

மேல்

#2790
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தன் நல்லார் பயில் பாதிரிப்புலியூர்-தனுள்
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்
வந்து தீய அடையாமையால் வினை மாயுமே

மேல்

122. திருப்புகலி : பண் – செவ்வழி

#2791
விடை அது ஏறி வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார் குலமும் உயர்ந்த மறையோர்கள்தாம்
புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே

மேல்

#2792
வேலை-தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார்
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே

மேல்

#2793
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது
கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி
புண்டரீக மலர் பொய்கை நிலாவும் புகலியே

மேல்

#2794
திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு
அரிய பெம்மான் அரவ குழையார்க்கு இடம் ஆவது
பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால் வெயில்
புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே

மேல்

#2795
ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர்
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ வாளை போய்
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே

மேல்

#2796
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது
கொக்கு வாழை பலவின் கொழும் தண் கனி கொன்றைகள்
புக்க வாசனை புன்னை பொன் திரள் காட்டும் புகலியே

மேல்

#2797
தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன்
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார்
பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே

மேல்

#2798
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய்
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில்
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே

மேல்

#2799
தடுக்கு உடுத்து தலையை பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது
மடுப்பு அடுக்கும் சுருதி பொருள் வல்லவர் வானுளோர்
அடுத்தடுத்து புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே

மேல்

#2800
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை
கைதவம் இல்லா கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில்
எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே