நூ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூக்க 3
நூக்கி 2
நூக்கியிட 1
நூபுர 1
நூபுரம் 1
நூல் 106
நூல்மார்பர் 2
நூலர் 20
நூலர்கள் 1
நூலரும் 1
நூலன் 5
நூலா 1
நூலார் 1
நூலால் 4
நூலாளர் 1
நூலானை 1
நூலின் 4
நூலினர் 4
நூலினன் 2
நூலினார் 2
நூலினால் 3
நூலினான் 1
நூலும் 19
நூலை 1
நூலொடு 2
நூற்று 1
நூறவன் 1
நூறாயிரம் 1
நூறி 1
நூறிய 2
நூறியும் 1
நூறினார் 1
நூறினான் 1
நூறு 7
நூறுபெயராய் 1
நூறும் 1
நூன்மையும் 1

நூக்க (3)

மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க
தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி – தேவா-அப்:353/1,2
குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/2,3
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால் – தேவா-அப்:1796/2
மேல்


நூக்கி (2)

பொட்ட நூக்கி புறப்படா முன்னமே – தேவா-அப்:1922/2
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/1,2
மேல்


நூக்கியிட (1)

நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
மேல்


நூபுர (1)

நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி – தேவா-சம்:3075/1
மேல்


நூபுரம் (1)

நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார் – தேவா-சம்:1916/1
மேல்


நூல் (106)

நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
பொறி ஆர்தரு புரி நூல் வரை மார்பன் புளமங்கை – தேவா-சம்:171/2
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல்
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/1,2
பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை – தேவா-சம்:476/1
பொடி ஆடு மார்பானை புரி நூல் உடையானை – தேவா-சம்:501/2
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு – தேவா-சம்:515/1
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை – தேவா-சம்:530/3
வேதம் ஓதி வெண் நூல் பூண்டு வெள்ளை எருது ஏறி – தேவா-சம்:722/1
செய்யார் கரிய மிடற்றார் வெண் நூல் சேர்ந்த அகலத்தார் – தேவா-சம்:728/2
பொடி கொள் உருவர் புலியின் அதளர் புரி நூல் திகழ் மார்பில் – தேவா-சம்:733/1
மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில் – தேவா-சம்:918/2
பொன் ஆர் புரி நூல் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1050/4
சோறு உடையார் சொல் தேறன்-மின் வெண் நூல் சேர் மார்பன் – தேவா-சம்:1100/2
வெந்த வெண் நீறு அணிந்து விரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1152/1
பொன் திகழ் ஆமையொடு புரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1156/1
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்
அடி புல்கு பைம் கழல் அடிகள் இடம் – தேவா-சம்:1202/1,2
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்வி பல் நூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே – தேவா-சம்:1262/3,4
துணிந்தவன் தோலொடு நூல் துதை மார்பினில் – தேவா-சம்:1293/2
வெந்த வெண்பொடி பூசும் மார்பின் விரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சம்:1427/1
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து – தேவா-சம்:1432/2
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல்
மீகம் அறிவார் வேணுபுரமே – தேவா-சம்:1653/3,4
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/2
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2060/3
பொங்கு நூல் மார்பினீர் பூத படையினீர் பூம் கங்கை – தேவா-சம்:2070/1
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் – தேவா-சம்:2150/2
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு – தேவா-சம்:2249/1
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார் – தேவா-சம்:2316/2
சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூத – தேவா-சம்:2433/1
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை – தேவா-சம்:2450/1
நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில் – தேவா-சம்:2455/1
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை – தேவா-சம்:2500/3
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு – தேவா-சம்:2530/3
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/2
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர் – தேவா-சம்:2694/2
தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர் – தேவா-சம்:2956/2
பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா – தேவா-சம்:3220/3
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே – தேவா-சம்:3250/4
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/3
மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே – தேவா-சம்:3387/2
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல்
உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும் – தேவா-சம்:3395/2,3
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை – தேவா-சம்:3408/2
பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த – தேவா-சம்:3417/1
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில் – தேவா-சம்:3674/1
துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3771/3
பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3774/3
சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல்
ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் – தேவா-சம்:3808/1,2
புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க – தேவா-சம்:3907/1
பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள – தேவா-சம்:4105/1
அரங்கிடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும் – தேவா-அப்:16/3
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல் இழை – தேவா-அப்:185/2
நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/2
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல்
உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் – தேவா-அப்:793/1,2
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல்
ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/3,4
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல்
கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு – தேவா-அப்:895/1,2
திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல்
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே – தேவா-அப்:1371/3,4
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட – தேவா-அப்:1618/1
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை – தேவா-அப்:1725/3
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் – தேவா-அப்:1872/1
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலா – தேவா-அப்:1886/1
சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2104/1
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா – தேவா-சுந்:191/3
பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சுந்:279/1
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே – தேவா-சுந்:461/4
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர் – தேவா-சுந்:541/1
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு – தேவா-சுந்:867/1
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம் – தேவா-சுந்:957/2
தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் – தேவா-சுந்:980/3
புல்கிய ஆரணன் எம் புனிதன் புரி நூல் விகிர்தன் – தேவா-சுந்:990/2
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல்
உரை பெருக உரைத்து அன்று உகந்து அருள்செய்தது என்னே – தேவா-சுந்:1010/1,2
மேல்


நூல்மார்பர் (2)

தார் கொண்ட நூல்மார்பர் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2061/3
பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2065/3
மேல்


நூலர் (20)

இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம் – தேவா-சம்:459/3
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர்
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே – தேவா-சம்:720/3,4
பொடி கொள் நூலர் புலியின் அதளர் புரி புன் சடை தாழ – தேவா-சம்:767/2
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/3
கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர் – தேவா-சம்:848/1
போலிய ஒருத்தர் புரி நூலர் இடம் என்பர் – தேவா-சம்:1832/2
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் – தேவா-சம்:2403/2
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர்
வீடர் முத்தீயர் நால் வேதத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2895/1,2
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/3
பொடி கொள் திருமார்பர் புரி நூலர் புனல் பொங்கு அரவு தங்கும் – தேவா-சம்:3694/1
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர்
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும் – தேவா-சம்:3799/2,3
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
பொடி அணி மெய்யர் போலும் பொங்கு வெண் நூலர் போலும் – தேவா-அப்:542/1
விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும் – தேவா-அப்:544/1
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர் – தேவா-அப்:619/1,2
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும் – தேவா-அப்:703/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர்
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/1,2
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர்
அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/2,3
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
மேல்


நூலர்கள் (1)

நுணங்கும் புரி_நூலர்கள் கூடி – தேவா-சம்:410/3
மேல்


நூலரும் (1)

கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய – தேவா-சம்:2592/2
மேல்


நூலன் (5)

பூண்ட வரை மார்பில் புரி_நூலன் விரி கொன்றை – தேவா-சம்:188/1
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும் – தேவா-சம்:819/2
முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன்
அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1830/1,2
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
மேல்


நூலா (1)

பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை – தேவா-சம்:2233/2
மேல்


நூலார் (1)

பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
மேல்


நூலால் (4)

நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த – தேவா-அப்:680/2
நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட – தேவா-அப்:1253/1
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


நூலாளர் (1)

பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2065/3
மேல்


நூலானை (1)

பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2376/1
மேல்


நூலின் (4)

இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே – தேவா-சம்:4049/2
நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று – தேவா-அப்:359/2
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:837/3
மேல்


நூலினர் (4)

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்து என் நன் நலம் வௌவினார் – தேவா-சம்:610/1,2
பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை – தேவா-சம்:2594/1
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2
நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3
மேல்


நூலினன் (2)

மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2910/1,2
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
மேல்


நூலினார் (2)

மின்னு பொன் புரி நூலினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2317/4
விடர் தரும் மணி மிடறினார் மின்னு பொன் புரி நூலினார்
மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2320/3,4
மேல்


நூலினால் (3)

நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர் – தேவா-சம்:617/3
நூலினால் மண மாலை கொணர்ந்து அடியார் புரிந்து ஏத்த – தேவா-சம்:660/2
வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய – தேவா-அப்:631/2
மேல்


நூலினான் (1)

நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ – தேவா-அப்:303/3
மேல்


நூலும் (19)

தோலும் நூலும் துதைந்த வரை மார்பர் – தேவா-சம்:295/2
முளி வெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய் – தேவா-சம்:792/1
தோலும் புரி நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சம்:879/2
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து – தேவா-சம்:1081/2
புரி நூலும் திருநீறும் புல்கு மார்பில் – தேவா-சம்:1289/2
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து – தேவா-சம்:1430/1
நூலும் தாம் அணி மார்பினர் – தேவா-சம்:1451/2
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே – தேவா-சம்:3202/4
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும்
காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும் – தேவா-அப்:12/2,3
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி – தேவா-அப்:245/2
பொடி-தனை பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார் – தேவா-அப்:375/1
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/3
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/4
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும் – தேவா-அப்:2297/1
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
மேல்


நூலை (1)

போதியார் பிண்டியார் என்று இவர் பொய் நூலை
வாதியா வம்-மின் அம் மா எனும் கச்சியுள் – தேவா-சம்:1599/1,2
மேல்


நூலொடு (2)

குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர் – தேவா-சம்:831/2
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி – தேவா-சம்:3679/1
மேல்


நூற்று (1)

தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய – தேவா-சம்:2197/3
மேல்


நூறவன் (1)

பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல் – தேவா-அப்:1953/1
மேல்


நூறாயிரம் (1)

நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார் – தேவா-அப்:1722/2
மேல்


நூறி (1)

விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
மேல்


நூறிய (2)

விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத – தேவா-சம்:105/1
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் – தேவா-சம்:2315/1
மேல்


நூறியும் (1)

கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும்
சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய் – தேவா-சம்:3197/1,2
மேல்


நூறினார் (1)

நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார்
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திரு கைகளால் – தேவா-சுந்:446/2,3
மேல்


நூறினான் (1)

கொல்லம் பேசி கொடும் சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1391/2,3
மேல்


நூறு (7)

பத்து நூறு பெயரனை – தேவா-சம்:611/2
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1
நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் – தேவா-சம்:2871/2
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார் – தேவா-அப்:1722/2
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை – தேவா-அப்:1953/2
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் – தேவா-அப்:2078/1
மேல்


நூறுபெயராய் (1)

ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
மேல்


நூறும் (1)

போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/3
மேல்


நூன்மையும் (1)

பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
சாலியாதவர்களை சாதியாதது ஓர் – தேவா-சம்:2952/1,2

மேல்