கீ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீண்ட 3
கீண்டலும் 1
கீண்டவன் 1
கீண்டார் 1
கீண்டான் 1
கீண்டானை 2
கீண்டு 5
கீண்டும் 1
கீத 3
கீதங்கள் 4
கீதத்தர் 2
கீதத்தாய் 1
கீதத்தான் 2
கீதத்தின் 1
கீதத்து 3
கீதத்தை 3
கீதம் 36
கீதமும் 4
கீதமொடு 2
கீதர் 5
கீதராய் 1
கீதனை 2
கீதா 2
கீர்த்தி 4
கீர்த்திமை 1
கீர்த்திமைகள் 1
கீழ் 135
கீழ்_உலகும் 1
கீழ்க்கணக்கு 1
கீழ்க்கோட்டத்து 11
கீழ்க்கோட்டம் 2
கீழ்ந்து 1
கீழ்ப்படக்கருதல் 1
கீழ்ப்படுக்க 1
கீழ்ப்படுத்தார் 1
கீழ்வேளூர் 23
கீழ்வேளூரும் 1
கீழ 1
கீழது 11
கீழவர்கட்கு 1
கீழனை 1
கீழாய் 1
கீழால் 1
கீழாலும் 1
கீழானை 1
கீழும் 3
கீழே 2
கீழையில் 1
கீழைவழி 1
கீழொடு 1
கீழோர் 1
கீள் 8
கீள 1
கீளர் 3
கீளானை 1
கீளும் 7
கீளொடு 2
கீளோடு 1
கீற்றினானை 1
கீறி 3
கீறிட்ட 1
கீறிய 1
கீறின் 1
கீறு 2
கீறும் 3
கீறுமோ 1
கீறுவது 1

கீண்ட (3)

புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின் – தேவா-சம்:456/1
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/1,2
மேல்


கீண்டலும் (1)

உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால் – தேவா-சம்:4166/2,3
மேல்


கீண்டவன் (1)

நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்
நாடி காணமாட்டா தழல் ஆய நம்பானை – தேவா-அப்:207/1,2
மேல்


கீண்டார் (1)

மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2302/1
மேல்


கீண்டான் (1)

பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
மேல்


கீண்டானை (2)

கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு – தேவா-அப்:2626/3
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/4
மேல்


கீண்டு (5)

கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட – தேவா-சம்:2235/3
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய் – தேவா-சம்:2798/1
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார் – தேவா-சம்:3774/2
கீண்டு தேன் சொரிதரும் கெடிலவாணரே – தேவா-அப்:103/4
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
மேல்


கீண்டும் (1)

கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா – தேவா-அப்:971/1
மேல்


கீத (3)

சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே – தேவா-சம்:720/4
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர் – தேவா-சம்:2434/2
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் – தேவா-சம்:2562/3
மேல்


கீதங்கள் (4)

நீதியால் வேத கீதங்கள் பாட – தேவா-சம்:1234/2
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:382/2
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட – தேவா-அப்:485/3
விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/3
மேல்


கீதத்தர் (2)

படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர்
சடை கொள் வெள்ளத்தர் சாந்த வெண்நீற்றினர் – தேவா-அப்:1313/1,2
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர்
கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் – தேவா-சுந்:541/1,2
மேல்


கீதத்தாய் (1)

விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
மேல்


கீதத்தான் (2)

கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2552/3
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1182/3
மேல்


கீதத்தின் (1)

கீதத்தின் பொலிந்த ஓசை கேள்வியர் வேள்வியாளர் – தேவா-அப்:619/3
மேல்


கீதத்து (3)

கீதத்து இசையோடும் கேள்வி கிடையோடும் – தேவா-சம்:883/3
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் – தேவா-சம்:2094/3
கீதத்து ஒலியும் கெழுமும் முழவோடு – தேவா-சம்:4154/3
மேல்


கீதத்தை (3)

கீதத்தை மிக பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1932/1
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண் – தேவா-அப்:2930/1
மேல்


கீதம் (36)

கீதம் உமை பாட கெடில வடபக்கம் – தேவா-சம்:499/3
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் – தேவா-சம்:772/3
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் – தேவா-சம்:783/3
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச – தேவா-சம்:1132/1
சாமவேதம் ஓர் கீதம் ஓதி அ தசமுகன் பரவும் – தேவா-சம்:2471/1
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே – தேவா-சம்:2736/4
கீதம் முன் இசைதர கிளரும் வீணையர் – தேவா-சம்:2977/1
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால் – தேவா-சம்:3356/3
கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை – தேவா-சம்:3400/2
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான் – தேவா-சம்:3462/2
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே – தேவா-சம்:3647/4
கீதம் ஏற்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4167/4
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/2
கீதராய் கீதம் கேட்டு கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:330/1
கன்னலின் கீதம் பாட கேட்டவர் காஞ்சி-தன்னுள் – தேவா-அப்:433/3
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/4
கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே – தேவா-அப்:528/4
மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:532/4
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் – தேவா-அப்:687/3
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/4
துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே – தேவா-அப்:1294/4
கீதம் கின்னரம் பாட கெழுவினான் – தேவா-அப்:1385/2
இட்ட கீதம் இசைத்த அரக்கனே – தேவா-அப்:1721/4
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/3
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/4
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
மேல்


கீதமும் (4)

பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் – தேவா-சம்:2801/3
செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர – தேவா-சம்:3098/2
மன்னி நான்மறையோடு பல் கீதமும்
பன்னினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1581/3,4
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும்
பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:370/2,3
மேல்


கீதமொடு (2)

கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் – தேவா-சம்:3531/2
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1
மேல்


கீதர் (5)

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/4
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர்
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/3,4
வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர் – தேவா-அப்:1147/1
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர்
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/3,4
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர்
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/3,4
மேல்


கீதராய் (1)

கீதராய் கீதம் கேட்டு கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:330/1
மேல்


கீதனை (2)

கீதனை கிளரும் நறும் கொன்றை அம் – தேவா-அப்:1683/2
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
மேல்


கீதா (2)

வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று – தேவா-அப்:599/1
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
மேல்


கீர்த்தி (4)

நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:44/3
பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில் – தேவா-சம்:312/3
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அட – தேவா-சம்:1294/1
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே – தேவா-சம்:2511/4
மேல்


கீர்த்திமை (1)

கீழ்ப்படக்கருதல் ஆமோ கீர்த்திமை உள்ளதாகில் – தேவா-அப்:570/1
மேல்


கீர்த்திமைகள் (1)

கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே – தேவா-அப்:1920/4
மேல்


கீழ் (135)

காடே இடம் ஆவது கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து – தேவா-சம்:338/2,3
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ்
தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/1,2
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/3,4
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/3,4
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய் – தேவா-சம்:566/2
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா – தேவா-சம்:828/1
கிடந்தான் இருந்தானும் கீழ் மேல் காணாது – தேவா-சம்:890/1
அரும் தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்
இருந்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1185/3,4
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம் – தேவா-சம்:1254/2
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட – தேவா-சம்:1411/1
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரை கீழ்
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம் – தேவா-சம்:1444/1,2
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ்
ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே – தேவா-சம்:1910/3,4
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் – தேவா-சம்:1968/2
வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடி கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் – தேவா-சம்:1986/1,2
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு – தேவா-சம்:2055/1
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் – தேவா-சம்:2153/2
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி – தேவா-சம்:2241/1
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2322/1
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி – தேவா-சம்:2590/1
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ்
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/5,6
கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும் – தேவா-சம்:2874/1
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர – தேவா-சம்:2896/1
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ்
ஒற்றியான் முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3412/3,4
படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான் – தேவா-சம்:3434/2
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/4
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ்
நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து – தேவா-சம்:3489/2,3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் – தேவா-சம்:3496/1
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச – தேவா-சம்:3497/1
நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் – தேவா-சம்:3510/2
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த – தேவா-சம்:3803/3
குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில் – தேவா-சம்:3806/2
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும் – தேவா-சம்:3902/3
சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே – தேவா-சம்:4032/3
சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே – தேவா-சம்:4032/3
உக்கு இருந்து ஒல்க உயர்வரை கீழ் இட்டு – தேவா-சம்:4144/2
ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய் – தேவா-அப்:10/2
அடர்ப்பு அரிய இராவணனை அரு வரை கீழ் அடர்த்தவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/1
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற – தேவா-அப்:107/3
புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான் – தேவா-அப்:341/2
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:359/1
காலின் கீழ் காலன்-தன்னை கடுக தான் பாய்ந்து பின்னும் – தேவா-அப்:359/3
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார் அடி இணை கீழ்
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/1,2
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி – தேவா-அப்:478/1
ஆறு உடை சடையினானை அர்ச்சித்தான் அடி இணை கீழ்
வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/2,3
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/2
வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ்
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும் – தேவா-அப்:621/1,2
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி – தேவா-அப்:678/1,2
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ்
நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் – தேவா-அப்:797/2,3
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ்
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் – தேவா-அப்:834/2,3
செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:873/4
சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:874/4
நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:875/4
பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:876/4
தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/4
தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/4
தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/4
சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:880/4
மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/4
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:882/4
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ்
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/3,4
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு முனிக்காய் – தேவா-அப்:1021/2
தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/4
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து – தேவா-அப்:1070/1
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே – தேவா-அப்:1151/4
கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை – தேவா-அப்:1188/3
சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு – தேவா-அப்:1232/2
அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1386/4
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/4
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1388/4
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1389/4
நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1390/4
செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1391/4
திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1392/4
சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1393/4
அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1394/4
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1395/4
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய – தேவா-அப்:1597/3
துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ்
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான் – தேவா-அப்:1721/1,2
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/2
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/3
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/3
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆல நிழல் கீழ் அமர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2658/1
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ்
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/3,4
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை – தேவா-அப்:2994/3
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார் – தேவா-அப்:3027/2
கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:219/3,4
அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து – தேவா-சுந்:281/1
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/4
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:792/4
பொன் நவிலும் கொன்றையினாய் போய் மகிழ் கீழ் இரு என்று – தேவா-சுந்:910/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற – தேவா-சுந்:1004/1
அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ்
இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1007/1,2
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


கீழ்_உலகும் (1)

ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
மேல்


கீழ்க்கணக்கு (1)

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1282/4
மேல்


கீழ்க்கோட்டத்து (11)

கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2837/4
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
மேல்


கீழ்க்கோட்டம் (2)

குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
மேல்


கீழ்ந்து (1)

கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே – தேவா-சம்:2711/4
மேல்


கீழ்ப்படக்கருதல் (1)

கீழ்ப்படக்கருதல் ஆமோ கீர்த்திமை உள்ளதாகில் – தேவா-அப்:570/1
மேல்


கீழ்ப்படுக்க (1)

கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4
மேல்


கீழ்ப்படுத்தார் (1)

கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3774/2,3
மேல்


கீழ்வேளூர் (23)

பொன் உலாவிய கொன்றை அம் தாரினர் புகழ் மிகு கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/3,4
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர்
சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே – தேவா-சம்:2606/3,4
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர்
பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2607/2,3
நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர்
பீடு உலாவிய பெருமையர் பெரும் திரு கோயிலுள் பிரியாது – தேவா-சம்:2608/2,3
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் – தேவா-சம்:2609/2,3
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர்
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2610/2,3
கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர்
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/2,3
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர்
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள் – தேவா-சம்:2612/2,3
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/3,4
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர்
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு – தேவா-சம்:2614/2,3
குருண்ட வார் குழல் சடை உடை குழகனை அழகு அமர் கீழ்வேளூர்
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2615/1,2
கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2756/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2757/4
கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2758/4
கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2759/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/4
கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/4
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/4
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/4
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/4
கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2765/4
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
மேல்


கீழ்வேளூரும் (1)

மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
மேல்


கீழ (1)

கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
மேல்


கீழது (11)

மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை – தேவா-சம்:478/1
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:801/4
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:802/4
அரியான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:803/4
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:804/4
அறுத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:805/4
ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/4
அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:807/4
அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:809/4
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:810/4
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:811/4
மேல்


கீழவர்கட்கு (1)

நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று – தேவா-அப்:359/2
மேல்


கீழனை (1)

அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
மேல்


கீழாய் (1)

கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர் – தேவா-சம்:113/1
மேல்


கீழால் (1)

பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரை கீழால்
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/1,2
மேல்


கீழாலும் (1)

மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
மேல்


கீழானை (1)

கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
மேல்


கீழும் (3)

நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
மேலும் கீழும் அளப்பரிது ஆயவர் – தேவா-அப்:1324/2
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
மேல்


கீழே (2)

உறைவதும் உம் அடி கீழே – தேவா-சம்:3837/4
சொன்ன எனை காணாமே சூளுறவு மகிழ் கீழே
என்ன வல்ல பெருமானே இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:910/2,3
மேல்


கீழையில் (1)

கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி அதே – தேவா-சுந்:118/4
மேல்


கீழைவழி (1)

கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும் – தேவா-சுந்:116/3
மேல்


கீழொடு (1)

விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
மேல்


கீழோர் (1)

நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால் – தேவா-சம்:4115/1
மேல்


கீள் (8)

சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்
உடையும் கொண்ட உருவம் என்-கொலோ – தேவா-சம்:239/3,4
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட – தேவா-சம்:2235/3
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் – தேவா-சம்:3526/1
கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண் – தேவா-அப்:400/1
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபட தான் – தேவா-அப்:949/2
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது – தேவா-அப்:1944/2
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் – தேவா-சுந்:240/1
மேல்


கீள (1)

காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4
மேல்


கீளர் (3)

தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர்
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி – தேவா-சம்:771/2,3
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் – தேவா-சம்:3638/2
உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும் – தேவா-அப்:544/3
மேல்


கீளானை (1)

கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2756/4
மேல்


கீளும் (7)

இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக – தேவா-சம்:2096/1
சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற – தேவா-அப்:19/1,2
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:376/1
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/3
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும்
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/1,2
மேல்


கீளொடு (2)

விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று – தேவா-அப்:2697/1
அரை ஆர் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து – தேவா-சுந்:274/1
மேல்


கீளோடு (1)

கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே – தேவா-சுந்:796/4
மேல்


கீற்றினானை (1)

கீற்றினானை கிளர் ஒளி செம் சடை – தேவா-அப்:2002/2
மேல்


கீறி (3)

கீறி நாளும் முசு கிளையொடு உண்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2708/4
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா – தேவா-சுந்:71/2
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/4
மேல்


கீறிட்ட (1)

கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால் – தேவா-அப்:275/3
மேல்


கீறிய (1)

கறை ஆர் மிடற்றான் கரி கீறிய கையான் – தேவா-சம்:331/2
மேல்


கீறின் (1)

கீறின் உடையினர் கெடிலவாணரே – தேவா-அப்:95/4
மேல்


கீறு (2)

ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான் – தேவா-சம்:3597/1
கீறு கோவண ஐ துகில் ஆடையர் – தேவா-அப்:1429/2
மேல்


கீறும் (3)

காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:466/4
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர் – தேவா-சம்:3699/1
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
மேல்


கீறுமோ (1)

பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் – தேவா-சுந்:435/3
மேல்


கீறுவது (1)

பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் – தேவா-சுந்:793/1

மேல்