நோ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்க 1
நோக்கங்கள் 1
நோக்கத்தில் 1
நோக்கத்திலே 1
நோக்கநோக்க 1
நோக்கம் 3
நோக்கமா 1
நோக்கமோ 1
நோக்கான் 1
நோக்கி 17
நோக்கிட 1
நோக்கிடினும் 1
நோக்கிடும் 1
நோக்கிடுவாய் 1
நோக்கிடுவீர் 1
நோக்கிய 1
நோக்கியிருக்கின்றான் 1
நோக்கியே 3
நோக்கினர் 1
நோக்கினன் 1
நோக்கினார் 1
நோக்கினாள் 3
நோக்கினான் 2
நோக்கினில் 1
நோக்கினிலே 1
நோக்கினும் 2
நோக்கினேன் 2
நோக்கு 2
நோக்குகிறாய் 1
நோக்குகின்றாயே 1
நோக்கும் 1
நோக்குவாய் 1
நோக்குறும் 1
நோக 1
நோய் 13
நோய்க்களம் 1
நோய்க்கு 2
நோய்கள் 1
நோய்களற்ற 1
நோய்களிலும் 1
நோய்களை 1
நோய்தான் 1
நோயாக 1
நோயாளி 1
நோயில் 2
நோயிலே 1
நோயின்றி 1
நோயினை 1
நோயுடையார் 1
நோயும் 2
நோவதுவும் 1
நோவர் 1
நோவாலே 1
நோவின் 1
நோவினையும் 1
நோவு 5
நோவுக்கும் 1
நோவுகண்டதும் 1
நோவுகள் 1
நோவும் 4
நோவுற 1
நோவையும் 1
நோற்பது 1
நோன் 1
நோன்பிலே 1
நோன்பினோன் 1

நோக்க (1)

திறம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பிய-கொல்லாம் இன்று விண்ணுலகு அடைந்துவிட்டாய் – தனி:19 4/2,3
மேல்

நோக்கங்கள் (1)

நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே – தோத்திர:22 6/2
மேல்

நோக்கத்தில் (1)

நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்தில் செல்லவிடும் பகை கண்டோம் – பிற்சேர்க்கை:8 5/2
மேல்

நோக்கத்திலே (1)

வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்க திறல் கொண்ட மல்லர்தம் சேனை –தேசீய:4 4/2,3
மேல்

நோக்கநோக்க (1)

நோக்கும் திசை எலாம் நான் அன்றி வேறில்லை நோக்கநோக்க களியாட்டம் –வேதாந்த:2 3/2
மேல்

நோக்கம் (3)

கொள்கை கருத்து குளிர்ந்திடும் நோக்கம்
ஈங்கு இதில் கலக்கம் எய்திடுமாயின் –தேசீய:24 1/70,71
திருவுள நோக்கம் செப்புவன் தெய்வ –தேசீய:42 1/39
உயரும் இ நோக்கம் நிறைவுற இணக்கம் ஒன்றுதான் மார்க்கம் என்பதுவும் –தேசீய:50 12/1
மேல்

நோக்கமா (1)

நோக்கமா கொண்டு நின் பதம் நோக்கினேன் – தோத்திர:1 28/13
மேல்

நோக்கமோ (1)

நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ
விதியே விதியே தமிழ சாதியை –தேசீய:24 1/4,5
மேல்

நோக்கான் (1)

சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் –தேசீய:32 1/178
மேல்

நோக்கி (17)

வில் எறிந்து இருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின்றனையால் –தேசீய:32 1/158,159
எண்ணிலா வீரர் இவ் உரு நோக்கி
வான்நின்று இறங்கிய மாந்திரிகன் முனர் –தேசீய:42 1/34,35
ஆசிகள் கூறி அவையினை நோக்கி
கடல் முழக்கு என்ன முழங்குவன் காணீர் –தேசீய:42 1/102,103
குழைவுற வாழ்த்தி குழாத்தினை நோக்கி
காண்டிரோ முதலாம் காலசா என்றனன் –தேசீய:42 1/151,152
வானை நோக்கி கைகள் தூக்கி வளருதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 5/1
அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய் –வேதாந்த:22 1/3
மேலை சுடர் வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே – தனி:1 1/2
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே – தனி:1 5/2
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கி இங்கு வந்திட்டேன் – தனி:1 13/1
ஒக்க தன் அருள் விழியால் என்னை நோக்கி ஒரு குட்டிச்சுவர் காட்டி பரிதி காட்டி – சுயசரிதை:2 27/2
மாலை பொழுதில் ஒரு மேடை மிசையே வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன் – கண்ணன்:17 1/1
வண்ணம் உயர் மணி நகரின் மருங்கு செல்வான் வழி இடையே நாட்டின் உறு வளங்கள் நோக்கி
எண்ணமுறலாகி தன் இதயத்துள்ளே இனைய பல மொழி கூறி இரங்குவானால் – பாஞ்சாலி:1 115/3,4
வீமனும் திகைத்துவிட்டான் இள விசயனை நோக்கி இங்கு இது சொலுவான் – பாஞ்சாலி:1 133/1
பாலை போல் மொழி பிதற்ற அவளை நோக்கி பார்த்தனும் அ பரிதி எழில் விளக்குகின்றான் – பாஞ்சாலி:1 147/4
கோணம் எலாம் சுற்றி மர கொம்பை எலாம் நோக்கி வந்தேன் – குயில்:4 1/27
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய் – குயில்:9 1/71
அற்பர் போல பிறர் கரம் நோக்கி யாம் அவனி வாழ்தல் ஆகாது என நன்கு இதை – பிற்சேர்க்கை:2 2/3
மேல்

நோக்கிட (1)

தன் எதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் –தேசீய:32 1/138,139
மேல்

நோக்கிடினும் (1)

இருள் கடல் ஆஹா எங்கு நோக்கிடினும்
ஒளி திரள் ஒளி திரள் வன்ன களஞ்சியம் – பாஞ்சாலி:1 152/16,17
மேல்

நோக்கிடும் (1)

மன்று வானிடை கொண்டு உலகு எல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா – தோத்திர:70 2/4
மேல்

நோக்கிடுவாய் (1)

பெண் இரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா பேணினோர்க்கு – தோத்திர:44 1/2
மேல்

நோக்கிடுவீர் (1)

நெஞ்சத்தே தைக்க நெடு நோக்கு நோக்கிடுவீர்
மஞ்சரே என்றன் மன நிகழ்ச்சி காணீரோ – குயில்:3 1/47,48
மேல்

நோக்கிய (1)

முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி – குயில்:9 1/224
மேல்

நோக்கியிருக்கின்றான் (1)

அவன் எப்போதும் இவற்றை நோக்கியிருக்கின்றான்
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன – வசனகவிதை:2 10/16,17
மேல்

நோக்கியே (3)

வேகம்தனை பொருள்செய்திடான் அங்கு வீற்றிருந்தோர்தமை நோக்கியே – பாஞ்சாலி:4 261/4
ஆண்டகையற்ற புலையன் என்று அவள் அச்சம் இலாது எதிர் நோக்கியே – பாஞ்சாலி:5 267/4
கூடி தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ – பாஞ்சாலி:5 272/4
மேல்

நோக்கினர் (1)

விழிகளை துடைத்து மீளவும் நோக்கினர்
ஜய ஜய குருமணி ஜய குரு சிங்கம் –தேசீய:42 1/95,96
மேல்

நோக்கினன் (1)

பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர் – பாஞ்சாலி:5 272/3
மேல்

நோக்கினார் (1)

குன்றா மணி தோள் குறிப்புடனே நோக்கினார்
தருமனும் மற்று ஆங்கே தலைகுனிந்து நின்றிட்டான் – பாஞ்சாலி:5 271/32,33
மேல்

நோக்கினாள் (3)

மும்மையிலும் காத்திடும் நல் விழியாலே நோக்கினாள் முடிந்தான் காலன் –தேசீய:52 4/4
மின் செய் கதிர் விழியால் வெம் நோக்கு நோக்கினாள்
மற்று அவர்தாம் முன் போல் வாய் இழந்து சீர் குன்றி – பாஞ்சாலி:5 271/44,45
கண் எடுக்காது என்னை கண பொழுது நோக்கினாள்
சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவள் அழகை – குயில்:9 1/230,231
மேல்

நோக்கினான் (2)

பாதகன் நெஞ்சம் இளகிடான் நின்ற பாண்டவர்தம் முகம் நோக்கினான் அவர் – பாஞ்சாலி:4 260/2
நின்னை அவன் நோக்கினான் நீ அவனை நோக்கி நின்றாய் – குயில்:9 1/71
மேல்

நோக்கினில் (1)

நோக்கினில் கதிர் உடையாய் இங்கு நூற்றுவர் கொடுமையை தவிர்த்து அருள்வாய் – பாஞ்சாலி:5 298/3
மேல்

நோக்கினிலே (1)

அன்ன ஒரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர் – குயில்:9 1/72
மேல்

நோக்கினும் (2)

எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்று ஆங்கே – தோத்திர:39 1/1
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர் இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர் – பாஞ்சாலி:2 155/3
மேல்

நோக்கினேன் (2)

நோக்கமா கொண்டு நின் பதம் நோக்கினேன்
காத்து அருள்புரிக கற்பக விநாயகா – தோத்திர:1 28/13,14
வானகம் நோக்கினேன் மற்று அதன் மாண்பினை – பிற்சேர்க்கை:17 1/14
மேல்

நோக்கு (2)

மின் செய் கதிர் விழியால் வெம் நோக்கு நோக்கினாள் – பாஞ்சாலி:5 271/44
நெஞ்சத்தே தைக்க நெடு நோக்கு நோக்கிடுவீர் – குயில்:3 1/47
மேல்

நோக்குகிறாய் (1)

போற்றி எதை நோக்குகிறாய் கூட்டம் அங்கு போவது என்னே – தனி:1 9/2
மேல்

நோக்குகின்றாயே (1)

காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே
மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை – தோத்திர:70 3/1,2
மேல்

நோக்கும் (1)

நோக்கும் திசை எலாம் நான் அன்றி வேறில்லை நோக்கநோக்க களியாட்டம் –வேதாந்த:2 3/2
மேல்

நோக்குவாய் (1)

விழி மயங்கி நோக்குவாய் போ போ போ –தேசீய:16 2/8
மேல்

நோக்குறும் (1)

உள்ளத்து ஓங்க நோக்குறும் விழியும் – தோத்திர:1 16/5
மேல்

நோக (1)

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ புலனில் –தேசீய:17 1/2
மேல்

நோய் (13)

கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடலாய் – தோத்திர:10 1/12
சார வந்த நோய் அழிந்துபோகும் – தோத்திர:24 20/5
மிடிமை நோய் தீர்ப்பான் வீணர்தம் உலக – தனி:13 1/25
நோய் எலாம் தவிர்ப்பான் நுமரே எனக்கு – தனி:24 1/35
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம் – கண்ணன்:1 2/3
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை – கண்ணன்:3 9/2
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல் – பாஞ்சாலி:1 103/3
எல்லா உடலும் நோய் தீர்க – வசனகவிதை:1 5/2
நோய் உண்டு மருந்து உண்டு – வசனகவிதை:3 3/6
அதை பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது – வசனகவிதை:3 6/16
நோய் மறைந்துவிட்டது – வசனகவிதை:3 6/18
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும் – வசனகவிதை:5 2/9
நோய் இல்லை வறுமை இல்லை நோன் பிழைப்பதிலே துன்பம் இல்லை – பிற்சேர்க்கை:1 5/1
மேல்

நோய்க்களம் (1)

நோய்க்களம் ஆகி அழிக எனும் நோக்கமோ –தேசீய:24 1/4
மேல்

நோய்க்கு (2)

சாதியின் நோய்க்கு தலையசைத்து ஏகினர் –தேசீய:24 1/92
கொல்லலும் நோய்க்கு மருந்து செய் போழ்தில் கூடும் வெம்மையதாய் பிணக்குற்றே – பாஞ்சாலி:1 85/1
மேல்

நோய்கள் (1)

சாஸ்த்ரம் இல்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி – வசனகவிதை:4 10/12
மேல்

நோய்களற்ற (1)

நோய்களற்ற உடலினாய் வா வா வா –தேசீய:16 6/6
மேல்

நோய்களிலும் (1)

பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல் –தேசீய:40 17/1
மேல்

நோய்களை (1)

மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன் – தோத்திர:33 1/2
மேல்

நோய்தான் (1)

வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
மேல்

நோயாக (1)

போராக நோயாக மரணமாக போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால் – சுயசரிதை:2 2/3
மேல்

நோயாளி (1)

நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான் – வசனகவிதை:4 8/4
மேல்

நோயில் (2)

ஒழிவறு நோயில் சாவார் ஊக்கம் ஒன்று அறியமாட்டார் –தேசீய:29 4/1
அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான் – கண்ணன்:1 9/4
மேல்

நோயிலே (1)

நோயிலே படுப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/3
மேல்

நோயின்றி (1)

அது நம்மை நோயின்றி காத்திடுக – வசனகவிதை:4 8/9
மேல்

நோயினை (1)

நோயினை போல் அஞ்சினேன் சகியே நுங்கள் உறவை எல்லாம் – கண்ணன்:10 2/4
மேல்

நோயுடையார் (1)

எண்ணிலா நோயுடையார் இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் –தேசீய:15 7/1
மேல்

நோயும் (2)

பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறு இனி யார்க்கோ –தேசீய:28 2/1
துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்து சுகம் அருளல் வேண்டும் – கண்ணன்:22 2/1
மேல்

நோவதுவும் (1)

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ –தேசீய:27 5/2
மேல்

நோவர் (1)

விதியை நோவர் தம் நண்பரை தூற்றுவர் வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர் – சுயசரிதை:1 13/1
மேல்

நோவாலே (1)

நொந்த புண்ணை குத்துவதில் பயன் ஒன்று இல்லை நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் – சுயசரிதை:2 5/3
மேல்

நோவின் (1)

மாதர் முகத்தை நினக்கு இணை கூறுவர் வெண்ணிலாவே அஃது வயதின் கவலையின் நோவின் கெடுவது வெண்ணிலாவே – தோத்திர:73 2/1
மேல்

நோவினையும் (1)

சாவினையும் நோவினையும் உண்ணு – தோத்திர:26 8/4
மேல்

நோவு (5)

நொந்தார்க்கு நீ அன்றி நோவு அழிப்பார் யார் உளரோ –தேசீய:27 8/2
நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன் – தோத்திர:1 20/14
கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமை துன்பம் – தோத்திர:71 2/1
குதூஹலம் தருவது நோவு தருவது நோவு தீர்ப்பது – வசனகவிதை:3 1/13
குதூஹலம் தருவது நோவு தருவது நோவு தீர்ப்பது – வசனகவிதை:3 1/13
மேல்

நோவுக்கும் (1)

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சம் இல்லாதபடி – தோத்திர:18 3/3
மேல்

நோவுகண்டதும் (1)

பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் பாங்கி உரோகிணிக்கு நோவுகண்டதும் – கண்ணன்:11 2/4
மேல்

நோவுகள் (1)

நெஞ்சில் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கி கொடுப்பவனை உயிர் நீள தருபவனை ஒளிர் நேர்மை பெரும் கனலை நித்தம் – தோத்திர:74 4/1
மேல்

நோவும் (4)

விளங்குக துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீக்கி சார்ந்த பல் உயிர் எலாம் – தோத்திர:1 32/10,11
மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவும் மற்று இவை போல் –வேதாந்த:18 1/3
நோவும் கொலையும் நுவலொணா பீடைகளும் – பாஞ்சாலி:4 252/21
சாவும் நோவும் சிவனடா சண்டையும் வாளும் சிவனடா – பிற்சேர்க்கை:21 3/1
மேல்

நோவுற (1)

நும்மையே அவுணர் நோவுற செய்தார் – வசனகவிதை:7 0/36
மேல்

நோவையும் (1)

விடத்தையும் நோவையும் வெம் பகையதனையும் – தோத்திர:1 4/14
மேல்

நோற்பது (1)

நோற்பது கைவிடேல் – பல்வகை:1 2/64
மேல்

நோன் (1)

நோய் இல்லை வறுமை இல்லை நோன் பிழைப்பதிலே துன்பம் இல்லை – பிற்சேர்க்கை:1 5/1
மேல்

நோன்பிலே (1)

நோன்பிலே உயிர்ப்பதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 1/4
மேல்

நோன்பினோன் (1)

நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும் – பாஞ்சாலி:2 171/2
மேல்