ஈ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 2
ஈகை 1
ஈங்கு 10
ஈச 2
ஈசர் 2
ஈசன் 11
ஈசன்தன்னை 1
ஈசனாம் 1
ஈசனார் 1
ஈசனுடைய 1
ஈசனும் 1
ஈசனை 1
ஈசனையும் 1
ஈசுவரன் 1
ஈட்டத்திலே 1
ஈட்டிய 1
ஈட்டியால் 1
ஈட்டினாய் 1
ஈட்டுவதாய் 1
ஈடற்ற 1
ஈடிலா 1
ஈடு 5
ஈடுபட்டு 1
ஈடுவைத்து 1
ஈடுறு 1
ஈடே 3
ஈண்டினன் 1
ஈண்டு 6
ஈண்டும் 1
ஈதல் 3
ஈது 4
ஈந்த 1
ஈந்ததும் 1
ஈந்ததோர் 1
ஈந்தனர் 1
ஈந்தாய் 1
ஈந்திடும் 1
ஈந்து 3
ஈந்தும் 1
ஈந்துவிட்டு 1
ஈந்தே 1
ஈந்தோம் 1
ஈமம் 1
ஈய 1
ஈயத்தை 1
ஈயும் 1
ஈயை 1
ஈயோம் 1
ஈர்ந்திட 1
ஈர 3
ஈரத்திலே 2
ஈரத்திலேயே 6
ஈரம் 4
ஈரமாகிவிட்டது 1
ஈரிரண்டு 1
ஈவள் 1
ஈவாய் 3
ஈவாள் 1
ஈற்று 1
ஈறாகும் 1
ஈறு 1
ஈன்றவளே 1
ஈன்றவன் 1
ஈன்றனை 1
ஈன்று 4
ஈன 9
ஈனமான 1
ஈனமுற்று 1
ஈனமுறும் 1
ஈனமே 1
ஈனமோ 1
ஈனர்க்கு 1

ஈ (2)

ஞாயிறு வீட்டுச்சுவர் ஈ மலை அருவி – வசனகவிதை:1 4/5
ஈ பறக்கின்றது – வசனகவிதை:3 2/8
மேல்

ஈகை (1)

ஈகை திறன் – பல்வகை:1 2/4
மேல்

ஈங்கு (10)

ஈங்கு இதில் கலக்கம் எய்திடுமாயின் –தேசீய:24 1/71
புல் அரக்க பாதகரின் பொய்யை எலாம் ஈங்கு இது காண் – தோத்திர:1 13/3
தெரிந்தனம் எம்முளே தெளிந்தவர் ஈங்கு இலை – தனி:8 4/4
ஈங்கு ஒர் கன்னியை பன்னிரண்டு ஆண்டனுள் எந்தை வந்து மணம்புரிவித்தனன் – சுயசரிதை:1 35/2
ஈங்கு இதற்கிடை எந்தை பெரும் துயர் எய்தி நின்றனன் தீய வறுமையான் – சுயசரிதை:1 39/1
ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் ஈங்கு இவற்றால் – கண்ணன்:4 1/30
ஈங்கு உனை சரண் என்று எய்தினேன் என்னை இரும் கலை புலவன் ஆக்குதியே – பாஞ்சாலி:3 205/4
நெஞ்சம் இளகி நிறுத்திவிட்டேன் ஈங்கு இதற்குள் – குயில்:8 1/39
எல்லாம் மறந்தீர் எம்மவர்காள் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 1/4
ஈமம் புகுதல் இவை புரிவார் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 2/4
மேல்

ஈச (2)

எங்கும் நிறைந்திருந்த ஈச வெள்ளம் என் அகத்தே –வேதாந்த:11 18/1
யாதுமாம் ஈச வெள்ளம் என்னுள் நிரம்பியது என்று –வேதாந்த:11 19/1
மேல்

ஈசர் (2)

ஈண்டு புவியோர் அவரை ஈசர் என போற்றுவரே –வேதாந்த:11 13/2
மருளாளர் ஈசர் அடியே தெருள் சேர் – பிற்சேர்க்கை:12 4/2
மேல்

ஈசன் (11)

ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த –தேசீய:50 2/1
ஈசன் என்றும் இதயத்து இலகியே –தேசீய:50 15/4
செயற்கையின் சக்தி என்பார் உயிர் தீ என்பர் அறிவு என்பர் ஈசன் என்பர் – தோத்திர:11 1/2
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் – தோத்திர:77 1/1
இந்த புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன் –வேதாந்த:15 7/2
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார் – பல்வகை:3 9/1,2
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்து அது பருகவென்றே – தனி:19 1/1
இலகிய அழகை ஈசன் இயற்றினான் சீர்த்தி இந்த – தனி:19 2/2
தங்கத்தால் பதுமை செய்தும் இரதலிங்கம் சமைத்தும் அவற்றினில் ஈசன் தாளை போற்றும் – சுயசரிதை:2 41/1
யாவரும் தெரிந்திடவே எங்கள் ஈசன் என்றும் கண்ணன் என்றும் சொல்லுவதுண்டு – கண்ணன்:3 3/2
வளரும் ஈசன் எழில் பதமே வெல் வயிரம் – பிற்சேர்க்கை:12 3/2
மேல்

ஈசன்தன்னை (1)

மங்களம் சேர் திருவிழியால் அருளை பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னை
சங்கரன் என்று எப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி – சுயசரிதை:2 41/3,4
மேல்

ஈசனாம் (1)

யாவுமே சுக முனிக்கு ஒர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம் – தோத்திர:53 3/1
மேல்

ஈசனார் (1)

என்றுமே தவறு இழைப்பனேல் என்னை ஈசனார் நாசமே புரிக –தேசீய:50 14/2
மேல்

ஈசனுடைய (1)

அறிவில்லாதவர்களுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி – வசனகவிதை:4 10/11
மேல்

ஈசனும் (1)

அபாயம் இலாது இக்கரையில் ஆர்ந்திருப்போர் ஈசனும்
உபாயம் அறியாத ஊமன் அன்றோ ஓர்ந்திடுங்கால் – பிற்சேர்க்கை:25 12/1,2
மேல்

ஈசனை (1)

ஈசனை போற்றி இன்பம் யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம் –வேதாந்த:15 3/4
மேல்

ஈசனையும் (1)

வாக்கினுக்கு ஈசனையும் நின்றன் வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய் – பாஞ்சாலி:5 298/1
மேல்

ஈசுவரன் (1)

அன்றொரு நாள் புதுவைநகர்தனிலே கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா – சுயசரிதை:2 23/1
மேல்

ஈட்டத்திலே (1)

ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே –தேசீய:4 8/2
மேல்

ஈட்டிய (1)

ஈட்டிய செல்வம் இறந்தமையானும் – தனி:20 1/6
மேல்

ஈட்டியால் (1)

ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழு-மின் –தேசீய:32 1/117
மேல்

ஈட்டினாய் (1)

ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல் ஓட்டினாய் பொருள் ஈட்டினாய் –தேசீய:38 2/2
மேல்

ஈட்டுவதாய் (1)

ஈண்டு பொருளாய் அதனை ஈட்டுவதாய் நிற்குமிதே –வேதாந்த:11 8/2
மேல்

ஈடற்ற (1)

ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள் – தோத்திர:54 1/5
மேல்

ஈடிலா (1)

ஈடிலா புகழினாய் எழுகவோ எழுக என்று –தேசீய:32 1/173
மேல்

ஈடு (5)

வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும் –தேசீய:13 5/3
ஈடு நினக்கு ஓர் தெய்வம் உண்டோ எனக்கு உனை அன்றி சரணும் உண்டோ – தோத்திர:58 3/3
ஈடு அழிந்து நரக வழி செல்வாய் யாது செய்யினும் இ மணம் செய்யல் காண் – சுயசரிதை:1 31/4
இங்கு புவித்தலம் ஏழையும் விலை ஈடு என கொள்ள தகாதவன் – பாஞ்சாலி:3 232/4
ஈடு அறியா மேன்மை அழகு ஏய்ந்தவரே பெண்மைதான் – குயில்:5 1/22
மேல்

ஈடுபட்டு (1)

ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர் – கண்ணன்:7 11/2
மேல்

ஈடுவைத்து (1)

என்று இவற்றை எல்லாம் தருமன் ஈடுவைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/4
மேல்

ஈடுறு (1)

ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/3
மேல்

ஈடே (3)

பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 1/4
பாரத நாடு பழம் பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கு இலை ஈடே –தேசீய:6 2/4
உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே ஓதுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே –தேசீய:6 3/4
மேல்

ஈண்டினன் (1)

இரண்டாம் பலி முடித்து ஈண்டினன் குரவன் –தேசீய:42 1/74
மேல்

ஈண்டு (6)

ஈண்டு நமது தோழராகி எம்மோடு அமுதம் உண்டு குலவ –வேதாந்த:4 1/3
ஈண்டு பொருளாய் அதனை ஈட்டுவதாய் நிற்குமிதே –வேதாந்த:11 8/2
ஈண்டு புவியோர் அவரை ஈசர் என போற்றுவரே –வேதாந்த:11 13/2
ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால் – சுயசரிதை:1 4/2
ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர் யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொள்-மின் – பாஞ்சாலி:2 197/3
ஈண்டு அழைத்துவா என்று இயம்பினான் ஆங்கே தேர்ப்பாகன் – பாஞ்சாலி:4 252/86
மேல்

ஈண்டும் (1)

இச்சை உணர்ந்தன போல் ஈண்டும் பறவை எலாம் – குயில்:4 1/23
மேல்

ஈதல் (3)

நன்றை நாடும் மனமும் நீ எந்நாளும் ஈதல் வேண்டும் – தோத்திர:31 4/3
வாழி ஈதல் வேண்டும் அன்னாய் வாழ்க நின்றன் அருளே – தோத்திர:31 7/4
பொற்புற பிறந்தோம் நமக்கு ஓர் வித பொருளும் அன்னியர் ஈதல் பொறுக்கிலேம் – பிற்சேர்க்கை:2 2/2
மேல்

ஈது (4)

தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார் – தோத்திர:31 6/2
ஈது அனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிட பெற்றாள் – தோத்திர:62 2/4
ஈது நல் விந்தை என்னை – தோத்திர:68 7/1
ஈது நல் விந்தை புத்தன் – தோத்திர:68 7/2
மேல்

ஈந்த (1)

பொன் அனையாய் வெண்பனி முடி இமய பொருப்பினன் ஈந்த பெரும் தவப்பொருளே –தேசீய:11 4/2
மேல்

ஈந்ததும் (1)

இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள் –தேசீய:3 2/1
மேல்

ஈந்ததோர் (1)

கடவுள் இ நாட்டிற்கு ஈந்ததோர் புனித கட்டளைதன்னினும் அதனை –தேசீய:50 7/1
மேல்

ஈந்தனர் (1)

எண்ணை பழிக்கும் தொகையுடையார் இளமஞ்சரை பலர் ஈந்தனர் மன்னர் இவர்தமக்கு தொண்டு இயற்றவே – பாஞ்சாலி:1 44/3
மேல்

ஈந்தாய் (1)

இன்பங்களும் எல்லாம் ஈந்தாய் நீ யாங்கள் உனக்கு – தோத்திர:1 21/3
மேல்

ஈந்திடும் (1)

ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி –தேசீய:4 7/3
மேல்

ஈந்து (3)

குறைந்தாரை காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும் – தோத்திர:1 10/2
பன்னிய சீர் மகாமகோபாத்தியாய பதவி பரிவின் ஈந்து
பொன் நிலவு குடந்தைநகர் சாமிநாதன்றனக்கு புகழ்செய்வாரேல் – தனி:21 2/2,3
யாம் நாடு பொருளை எமக்கு ஈந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய் – பிற்சேர்க்கை:11 7/2
மேல்

ஈந்தும் (1)

நம்பற்குரியர் அவ் வீரர் தங்கள் நல் உயிர் ஈந்தும் கொடியினை காப்பார் –தேசீய:14 4/2
மேல்

ஈந்துவிட்டு (1)

மீண்டு அவர்க்கே ஈந்துவிட்டு விநயமுடன் – பாஞ்சாலி:4 252/72
மேல்

ஈந்தே (1)

வீழச்செய்யாது விரும்பிய ஈந்தே அடியர் – பிற்சேர்க்கை:12 6/3
மேல்

ஈந்தோம் (1)

எழுந்தோம் காந்திக்கு ஈந்தோம் எமது உயிர் – பிற்சேர்க்கை:26 1/49
மேல்

ஈமம் (1)

ஈமம் புகுதல் இவை புரிவார் என்னே கொடுமை ஈங்கு இதுவே – பிற்சேர்க்கை:4 2/4
மேல்

ஈய (1)

பொருளாளர் ஈய வேல்போர் இளசை – பிற்சேர்க்கை:12 4/1
மேல்

ஈயத்தை (1)

ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/4
மேல்

ஈயும் (1)

தாகம் அறிந்து ஈயும் அருள் வான் மழைக்கே உண்டோ தாகத்தின் துயர் மழைதான் அறிந்திடுமோ என்றேன் – தனி:9 2/3
மேல்

ஈயை (1)

ஈயை கருடநிலை ஏற்றுவீர் எம்மை என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர் – தனி:11 4/2
மேல்

ஈயோம் (1)

பொன் அனைய கவிதை இனி வானவர்க்கே அன்றி மக்கள் புறத்தார்க்கு ஈயோம்
என்ன நமது உளத்து எண்ணியிருந்தோம் மற்று உன்னிடத்தே இமையோர்க்கு உள்ள – பிற்சேர்க்கை:11 6/2,3
மேல்

ஈர்ந்திட (1)

என்று சுயோதனன் கூறியே நெஞ்சம் ஈர்ந்திட கண்ட சகுனிதான் அட – பாஞ்சாலி:1 53/1
மேல்

ஈர (3)

இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும் – தோத்திர:19 4/2
ஈர சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே – தனி:3 2/2
எவ்வளவேனும் இலாதவன் கள்ளும் ஈர கறியும் விரும்புவோன் பிற – பாஞ்சாலி:5 264/3
மேல்

ஈரத்திலே (2)

ஈரத்திலே உபகாரத்திலே –தேசீய:4 2/2
பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஓரத்திலே அன்பு சூடி நெஞ்சம் – தோத்திர:7 1/3
மேல்

ஈரத்திலேயே (6)

தமிழ் மக்கள் எருமைகளை போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள் – வசனகவிதை:4 10/3
தமிழ் மக்கள் எருமைகளை போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள் – வசனகவிதை:4 10/3
ஈரத்திலேயே நடக்கிறார்கள் – வசனகவிதை:4 10/4
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல் ஈரத்திலேயே உணவு – வசனகவிதை:4 10/5
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல் ஈரத்திலேயே உணவு – வசனகவிதை:4 10/5
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல் ஈரத்திலேயே உணவு – வசனகவிதை:4 10/5
மேல்

ஈரம் (4)

ஈரம் இன்றி எப்போதும் உபதேசங்கள் எடுத்தெடுத்து பெண்களிடம் இயம்புவாரே – சுயசரிதை:2 55/4
ஈரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் அருளை மனத்து இசைத்துக்கொள்வாய் – சுயசரிதை:2 64/2
அது அமிழ்தம் நீ ஈரம் இல்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் – வசனகவிதை:4 10/16
ஈரம் இலா நெஞ்சுடையோர் நினை கண்டால் அருள் வடிவம் இசைந்துநிற்பார் – பிற்சேர்க்கை:11 4/2
மேல்

ஈரமாகிவிட்டது (1)

ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது
தமிழ் மக்கள் எருமைகளை போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள் – வசனகவிதை:4 10/2,3
மேல்

ஈரிரண்டு (1)

யாரோ உரைத்துவிட்டார் ஈரிரண்டு பாய்ச்சலிலே – குயில்:9 1/134
மேல்

ஈவள் (1)

ஈவள் பராசக்தி அன்னைதான் உங்கள் இன் அருளே என்று நாடுவோம் நின்றன் – தோத்திர:5 4/4
மேல்

ஈவாய் (3)

பொங்குதல் போக்கி பொறை எனக்கு ஈவாய்
மங்கள குணபதி மணக்குள கணபதி – தோத்திர:1 28/5,6
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து – தோத்திர:1 33/4
இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி – தோத்திர:10 1/18
மேல்

ஈவாள் (1)

நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/4
மேல்

ஈற்று (1)

ஆதரமுற்று ஒரு பக்கம் நிலைத்தவர் ஆணவமுற்றவர் ஈற்று மரித்திட யாவர் ஒருமித்து அதி நட்பொடு சட்டென வருவீரே – பிற்சேர்க்கை:24 1/4
மேல்

ஈறாகும் (1)

பேர் இமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்றே அறி –தேசீய:13 2/3,4
மேல்

ஈறு (1)

ஈறு நிற்கும் உண்மை ஒன்று இறைஞ்சி நிற்பள் வாழ்கவே –தேசீய:7 2/4
மேல்

ஈன்றவளே (1)

இதமுற வந்து எமை ஆண்டு அருள்செய்வாய் ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 5/4
மேல்

ஈன்றவன் (1)

முன்னை ஈன்றவன் செந்தமிழ் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன் – சுயசரிதை:1 20/2
மேல்

ஈன்றனை (1)

சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே –தேசீய:11 3/3
மேல்

ஈன்று (4)

இன் உயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இ நாடே எங்கள் –தேசீய:3 2/1
தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டி தழுவியது இ நாடே மக்கள் –தேசீய:3 3/2
முன் நாளில் இராமபிரான் கோதமனாதிய புதல்வர் முறையின் ஈன்று
பல் நாடு முடி வணங்க தலைமை நிறுத்திய எமது பரதகண்ட –தேசீய:43 1/1,2
என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண் எய்திய தாய்தனை – சுயசரிதை:1 20/1
மேல்

ஈன (9)

ஈன பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ –தேசீய:1 2/1
இகழுறும் ஈன தொண்டு இயற்றியும் வாழ்வதற்கு இச்சையுற்றிருப்பாரோ –தேசீய:26 2/2
ஏழை எளியவர்கள் வீட்டில் இந்த ஈன வயிறு படும் பாட்டில் – பல்வகை:9 4/1
ஈன கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான் – கண்ணன்:1 2/4
ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார் அவர் – கண்ணன்:7 11/2
ஈன மனித கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறிவான – கண்ணன்:7 12/3
என்ன பட்டது தன் உளம் என்றே ஈன மாமன் அறிந்திடும் வண்ணம் – பாஞ்சாலி:1 41/3
ஈன பறவை முதுகின் மிசை ஏறிவிட்டால் – குயில்:7 1/26
எங்கும் சிவனை காணடா ஈன பயத்தை துரத்தடா – பிற்சேர்க்கை:21 4/1
மேல்

ஈனமான (1)

ஈனமான தொழிலே உங்களுக்கு இசைவது ஆகும் போடா –தேசீய:34 9/2
மேல்

ஈனமுற்று (1)

ஈனமுற்று இருக்க எவன்-கொலோ விரும்புவன் –தேசீய:32 1/68
மேல்

ஈனமுறும் (1)

ஈனமுறும் கச்சை இதற்கு நிகராமோ – குயில்:5 1/42
மேல்

ஈனமே (1)

ஈனமே பொறாத இயல்பினர் இரு-மின் –தேசீய:32 1/94
மேல்

ஈனமோ (1)

எந்தம் ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ அவமானமோ –தேசீய:39 2/2
மேல்

ஈனர்க்கு (1)

ஈனர்க்கு உலகம்தனில் கிளியே –தேசீய:40 12/2
மேல்