ஊ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கங்கள் 1
ஊக்கத்திலே 1
ஊக்கத்தை 1
ஊக்கம் 10
ஊக்கமாய் 1
ஊக்கமும் 2
ஊக்கமும்தான் 1
ஊசலாடிக்கொண்டு 1
ஊசலாடுவாய் 1
ஊசலிட்டு 1
ஊசி 1
ஊசிகள் 1
ஊட்டத்திலே 1
ஊட்டி 2
ஊட்டிய 1
ஊட்டிவைப்பீரே 1
ஊட்டினாய் 1
ஊட்டு 1
ஊட்டுதல் 2
ஊட்டும் 1
ஊட்டுவாய் 1
ஊட்டுவான் 1
ஊட்டுவீர் 1
ஊடகத்தே 1
ஊடுருவி 1
ஊடுற்றதை 1
ஊடுற்றே 1
ஊண் 2
ஊண 1
ஊணர் 3
ஊணும் 1
ஊதடா 1
ஊதத்தொடங்கிவிட்டதே 1
ஊதி 3
ஊதிடும் 1
ஊதிவிடுவது 1
ஊதினாய் 1
ஊதினார் 1
ஊது 1
ஊது-மின் 1
ஊது-மினோ 1
ஊதுகின்றான் 2
ஊதும் 2
ஊதுவது 1
ஊதுவேன் 1
ஊதுவோமே 1
ஊதேடா 4
ஊமன் 1
ஊமை 2
ஊமையராய் 1
ஊமையாக 1
ஊர் 7
ஊர்க்காற்றை 1
ஊர்க்கே 1
ஊர்கள் 2
ஊர்களிலும் 1
ஊர்களிலே 1
ஊர்கின்ற 1
ஊர்தனிலே 1
ஊர்ந்திடுவாய் 1
ஊர்ந்து 2
ஊர்வசி 1
ஊர்வன 1
ஊர்வனகள் 1
ஊர்வனவும் 2
ஊர்வாள் 2
ஊர 1
ஊரவர் 2
ஊரவர்தம் 1
ஊரன் 1
ஊரார் 3
ஊரில் 2
ஊரிலுள்ளோர் 1
ஊரினிலே 1
ஊரினின்று 1
ஊருக்கு 3
ஊருக்குள் 1
ஊரும் 2
ஊரை 3
ஊழ் 1
ஊழ்வினை 1
ஊழாம் 1
ஊழி 1
ஊழியின் 1
ஊழியை 1
ஊழும் 1
ஊற்ற 1
ஊற்றத்தாலே 1
ஊற்றாய் 1
ஊற்றில் 1
ஊற்றினள் 1
ஊற்றினிலே 1
ஊற்றினை 1
ஊற்று 2
ஊற்றும் 2
ஊற்றே 1
ஊற 2
ஊறி 3
ஊறிடும் 2
ஊறு 3
ஊறுதே 1
ஊறும் 2
ஊன் 7
ஊன்ற 1
ஊன்றி 3
ஊன்றிய 2
ஊன்றும் 1
ஊன 1
ஊனங்கள் 1
ஊனத்தால் 1
ஊனம் 6
ஊனமற்று 1
ஊனமறு 1
ஊனுடல் 1
ஊனுடலை 1
ஊனை 3

ஊக்கங்கள் (1)

பல்வித ஊக்கங்கள் செயும் திறனும் ஒரு நிகரின்றி படைத்த வீரன் –தேசீய:43 3/2
மேல்

ஊக்கத்திலே (1)

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய –தேசீய:4 4/1
மேல்

ஊக்கத்தை (1)

ஓரத்திலே புணை கூடுதே கந்தன் ஊக்கத்தை என் உளம் நாடுதே மலை – தோத்திர:5 1/3
மேல்

ஊக்கம் (10)

ஒழிவறு நோயில் சாவார் ஊக்கம் ஒன்று அறியமாட்டார் –தேசீய:29 4/1
உண்மை வாழி ஊக்கம் வாழி – தோத்திர:1 40/14
ஆதி பரம்பொருளின் ஊக்கம் அதை அன்னை என பணிதல் ஆக்கம் – தோத்திர:23 1/1
உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார் – தனி:23 5/4
உயர்நிலைப்படுத்தலில் ஊக்கம் மிக்கவனாய் – கண்ணன்:6 1/27
ஓய்வடைந்திடாதே தருமா ஊக்கம் எய்துக என்றான் – பாஞ்சாலி:3 218/4
உயிர் தருகின்றாள் ஊக்கம் தருகின்றாள் – வசனகவிதை:2 3/6
சோர்வு தருவது ஊக்கம் தருவது – வசனகவிதை:3 1/15
அயர்வு கொல்லும் அதனை ஊக்கம் கொல்லும் – வசனகவிதை:3 3/7
ஊக்கம் தோளில் பொறுத்து – வசனகவிதை:6 3/5
மேல்

ஊக்கமாய் (1)

செய்கையாய் ஊக்கமாய் சித்தமாய் அறிவாய் – தோத்திர:10 1/16
மேல்

ஊக்கமும் (2)

ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றும் இல்லா –தேசீய:40 11/1
ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர் – தோத்திர:61 4/4
மேல்

ஊக்கமும்தான் (1)

ஒண்மையும் ஊக்கமும்தான் என்றும் ஊறிடும் திருவருள் சுனை ஆவாய் – தோத்திர:11 3/3
மேல்

ஊசலாடிக்கொண்டு (1)

இந்த கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/6
மேல்

ஊசலாடுவாய் (1)

ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்
அடுத்ததை நோக்கி அடுத்தடுத்து உலவுவாய் –வேதாந்த:22 1/2,3
மேல்

ஊசலிட்டு (1)

சின்னஞ்சிறிய குருவி அது ஜிவ்வென்று விண்ணிடை ஊசலிட்டு ஏகும் – தனி:2 2/2
மேல்

ஊசி (1)

வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது – வசனகவிதை:4 1/63
மேல்

ஊசிகள் (1)

ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் –தேசீய:5 12/2
மேல்

ஊட்டத்திலே (1)

ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே
தேட்டத்திலே அடங்காத நதியின் –தேசீய:4 8/2,3
மேல்

ஊட்டி (2)

தங்க மதலைகள் ஈன்று அமுது ஊட்டி தழுவியது இ நாடே மக்கள் –தேசீய:3 3/2
ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன் கவி ஓது எனும் வேறு ஒன்றே – தோத்திர:19 2/4
மேல்

ஊட்டிய (1)

அன்னம் ஊட்டிய தெய்வ மணி கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் – பல்வகை:5 9/1
மேல்

ஊட்டிவைப்பீரே (1)

நாட்டிலே அறம் கூட்டிவைப்பீரே நாடும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே
தேட்டம் இன்றி விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே – பல்வகை:8 3/3,4
மேல்

ஊட்டினாய் (1)

மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை மீட்டினாய் ஆசை ஊட்டினாய் –தேசீய:38 4/2
மேல்

ஊட்டு (1)

நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதினும் –வேதாந்த:1 2/3
மேல்

ஊட்டுதல் (2)

ஊட்டுதல் பெரிது என உண்ணுவோன் செல்க –தேசீய:32 1/88
கவிதை காவல் ஊட்டுதல் வளர்த்தல் – வசனகவிதை:3 2/18
மேல்

ஊட்டும் (1)

வண்ணமுறவைத்து எனக்கே என்றன் வாயினில் கொண்டு ஊட்டும் ஓர் வண்மையுடையாள் – கண்ணன்:2 1/2
மேல்

ஊட்டுவாய் (1)

இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய் இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய்
அருளும் இந்த மறையொலி வந்து இங்கே ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமை – பல்வகை:10 4/1,2
மேல்

ஊட்டுவான் (1)

ஆவல் அறிந்து அருள் கூட்டுவான் நித்தம் ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் – தோத்திர:5 3/4
மேல்

ஊட்டுவீர் (1)

ஸோம பாலொடு சொல்லமுது ஊட்டுவீர்
நும்மையே அவுணர் நோவுற செய்தார் – வசனகவிதை:7 0/35,36
மேல்

ஊடகத்தே (1)

ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார் – சுயசரிதை:2 52/2
மேல்

ஊடுருவி (1)

அஃது மேகங்களை ஊடுருவி செல்லுகின்றது – வசனகவிதை:3 2/4
மேல்

ஊடுற்றதை (1)

மூடி கிடக்கும் நெஞ்சின் ஊடுற்றதை அமரர் – தோத்திர:54 1/6
மேல்

ஊடுற்றே (1)

முன்னை காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி – பல்வகை:10 3/3,4
மேல்

ஊண் (2)

ஊண் மிக விரும்பு – பல்வகை:1 2/6
சென்றனை என்கின்றார் அ செய்தி என்னே ஊண் இன்றி – குயில்:6 1/11
மேல்

ஊண (1)

ஊண புலவோன் உரைத்துளன் முன் நாள் – பிற்சேர்க்கை:17 1/5
மேல்

ஊணர் (3)

ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு – தோத்திர:62 7/1
நெல்லையூர் சென்று அவ் ஊணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன் – சுயசரிதை:1 21/1
ஓங்கி நின்ற பெரும் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் – சுயசரிதை:1 39/2
மேல்

ஊணும் (1)

சக்தி தரும் இன்பமும் நல் ஊணும் – தோத்திர:24 40/5
மேல்

ஊதடா (1)

போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/1,2
மேல்

ஊதத்தொடங்கிவிட்டதே (1)

ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது உயிர் நேரிட்டிருக்கிறது – வசனகவிதை:4 13/6,7
மேல்

ஊதி (3)

உலையிலே ஊதி உலக கனல் வளர்ப்பாள் – தோத்திர:63 4/2
பண் ஒன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே – கண்ணன்:13 7/2
இவன் தனது பெருமையை ஊதி பறையடிக்கின்றான் – வசனகவிதை:2 9/7
மேல்

ஊதிடும் (1)

கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு – தோத்திர:51 5/1
மேல்

ஊதிவிடுவது (1)

ஊதிவிடுவது நிறுத்துவது ஓட்டுவது – வசனகவிதை:3 1/9
மேல்

ஊதினாய் (1)

காற்றை முன்னே ஊதினாய் காண் அரிய வான வெளி – குயில்:7 1/79
மேல்

ஊதினார் (1)

விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள் ஓதினார் – பாஞ்சாலி:1 44/4
மேல்

ஊது (1)

உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே – பல்வகை:5 6/2
மேல்

ஊது-மின் (1)

வெற்றி கூறு-மின் வெண்சங்கு ஊது-மின்
கற்றவராலே உலகு காப்புற்றது –தேசீய:12 5/1,2
மேல்

ஊது-மினோ (1)

ஊது-மினோ வெற்றி ஒலி-மினோ வாழ்த்தொலிகள் –தேசீய:12 6/1
மேல்

ஊதுகின்றான் (2)

பாம்புப்பிடாரன் குழல் ஊதுகின்றான்
இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம் – வசனகவிதை:3 6/1,2
பாம்புப்பிடாரன் குழல் ஊதுகின்றான்
குழலிலே இசை பிறந்ததா தொளையிலே பிறந்ததா – வசனகவிதை:3 7/1,2
மேல்

ஊதும் (2)

சக்தி சக்தி என்று குழல் ஊதும் சித்தம் – தோத்திர:24 26/3
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/4
மேல்

ஊதுவது (1)

எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று – வசனகவிதை:4 11/2,3
மேல்

ஊதுவேன் (1)

நான் விளங்கும் இடத்தே அவ் இரண்டும் இல்லை மாலையில் வந்து ஊதுவேன் அது மறுபடி பிழைத்துவிடும் – வசனகவிதை:4 1/73
மேல்

ஊதுவோமே (1)

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதை –தேசீய:31 2/3
மேல்

ஊதேடா (4)

பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 1/2
சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 2/2
ஐயுறலின்றி களித்திருப்பார் அவர் ஆரியராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 3/2
செய்யுறு காரியம் தாம் அன்றி செய்வார் சித்தர்களாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 4/2
மேல்

ஊமன் (1)

உபாயம் அறியாத ஊமன் அன்றோ ஓர்ந்திடுங்கால் – பிற்சேர்க்கை:25 12/2
மேல்

ஊமை (2)

ஊமை சனங்களடீ –தேசீய:40 10/3
ஊமை போல் இருந்தான் பின்னோன் உண்மை முற்று உணர்ந்தான் – பாஞ்சாலி:3 227/4
மேல்

ஊமையராய் (1)

ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர் –தேசீய:22 2/3
மேல்

ஊமையாக (1)

ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே – வசனகவிதை:4 13/6
மேல்

ஊர் (7)

சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் –தேசீய:15 3/1
வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே –வேதாந்த:25 2/2
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்க களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 5/2
ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம் – சுயசரிதை:1 33/2
உள்வீட்டு செய்தி எல்லாம் ஊர் அம்பலத்து உரைப்பார் – கண்ணன்:4 1/9
எண்ணிநின்றார் தம்மை எனில் ஒருகால் ஊர் வகுத்தல் – குயில்:5 1/26
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது – வசனகவிதை:4 10/2
மேல்

ஊர்க்காற்றை (1)

ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர் – வசனகவிதை:4 8/13
மேல்

ஊர்க்கே (1)

தீங்கதனை கருதாத தரும கோமான் திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே
நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ நெடும் கரத்து விதி காட்டும் நெறியில் நின்றே – பாஞ்சாலி:1 145/3,4
மேல்

ஊர்கள் (2)

நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி – தோத்திர:62 6/2
ஊர்கள் கலைந்துபோகவில்லை – வசனகவிதை:5 1/15
மேல்

ஊர்களிலும் (1)

வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
மேல்

ஊர்களிலே (1)

கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் – குயில்:7 1/46
மேல்

ஊர்கின்ற (1)

பறக்கின்ற பூச்சி கொல்லுகின்ற புலி ஊர்கின்ற புழு – வசனகவிதை:4 15/9
மேல்

ஊர்தனிலே (1)

தத்து புகழ் வள பாண்டிநாட்டினில் காரைக்குடி ஊர்தனிலே சால – தனி:23 5/3
மேல்

ஊர்ந்திடுவாய் (1)

சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர் பொருளே பேரடல் பொருளே – பாஞ்சாலி:5 296/4
மேல்

ஊர்ந்து (2)

எறும்பு ஊர்ந்து செல்கின்றது – வசனகவிதை:3 2/7
இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்தேவன் என்று வணங்குகிறோம் – வசனகவிதை:4 12/13
மேல்

ஊர்வசி (1)

அரம்பை ஊர்வசி போல் உள்ள அமர மெல்லியலார் செவ்வி – தனி:19 4/1
மேல்

ஊர்வன (1)

விலங்குகள் பறவைகள் ஊர்வன நீந்துவன – வசனகவிதை:1 3/7
மேல்

ஊர்வனகள் (1)

இறகுடை பறவைகளும் நிலம் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள்
அறை கடல் நிறைந்திடவே எண்ணில் அமைந்திடற்கு அரிய பல்வகைப்படவே – கண்ணன்:2 8/1,2
மேல்

ஊர்வனவும் (2)

உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றி பிற ஒன்று இல்லை ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம் – சுயசரிதை:2 18/1
ஊர்வனவும் நல்லன – வசனகவிதை:1 1/11
மேல்

ஊர்வாள் (2)

பரி மிசை ஊர்வாள் அல்லள் பார் அனைத்தும் அஞ்சும் –தேசீய:13 6/3
அரி மிசையே ஊர்வாள் அவள் –தேசீய:13 6/4
மேல்

ஊர (1)

அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர் – பாஞ்சாலி:1 117/1
மேல்

ஊரவர் (2)

ஊரவர் மலடி என்று உரைத்திடும் நாடு –தேசீய:32 1/23
ஊரவர் துயரில் நெஞ்சு உருகுவீர் இரு-மின் –தேசீய:32 1/99
மேல்

ஊரவர்தம் (1)

ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரம் ஆமோ – பாஞ்சாலி:5 271/17
மேல்

ஊரன் (1)

துணி நிலவு ஆர் செஞ்சடையன் தோள் இளசை ஊரன்
மணிகண்டன் பாதமலரே பிணி நரகில் – பிற்சேர்க்கை:12 6/1,2
மேல்

ஊரார் (3)

தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன் – சுயசரிதை:2 37/3
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ – கண்ணன்:8 4/2
உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் – பிற்சேர்க்கை:8 15/1
மேல்

ஊரில் (2)

வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட – பாஞ்சாலி:1 124/2
மருள் அற கற்றோர்கள் மருவு இளசை ஊரில்
வரும் இறைவன் பாதமலரே திருவன் – பிற்சேர்க்கை:12 7/1,2
மேல்

ஊரிலுள்ளோர் (1)

ஒன்றுமில்லை கண்ணன் என்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான் – கண்ணன்:4 1/28
மேல்

ஊரினிலே (1)

ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார் – சுயசரிதை:2 52/2
மேல்

ஊரினின்று (1)

சற்று முன்னே ஊரினின்று தான் வந்து இறங்கியவன் – குயில்:9 1/118
மேல்

ஊருக்கு (3)

ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் – பல்வகை:3 1/1
மாப்பிளை தான் ஊருக்கு வந்ததையும் பெண் குயிலி – குயில்:9 1/130
ஊருக்கு உழைத்திடல் யோகம் நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் – பிற்சேர்க்கை:8 17/1
மேல்

ஊருக்குள் (1)

ஊருக்குள் எல்லை தாண்டி உத்திரவு எண்ணிடாமல் –தேசீய:51 7/2
மேல்

ஊரும் (2)

ஊரும் புரவி உரை தத்தாய் தேரின் –தேசீய:13 6/2
நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி நன்மை தருக என வேண்டினன் அவன் – கண்ணன்:7 4/2
மேல்

ஊரை (3)

தேடு கல்வி இலாதது ஒர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல் – தோத்திர:62 6/3
ஊரை எழுப்பிவிட நிச்சயங்கொண்டீர் அன்னை ஒருத்தி உண்டு என்பதையும் மறந்துவிட்டீர் – கண்ணன்:11 1/3
ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை – பாஞ்சாலி:3 221/3
மேல்

ஊழ் (1)

ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன் – சுயசரிதை:1 1/4
மேல்

ஊழ்வினை (1)

ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் உயர்வே சக்தி – தோத்திர:21 3/4
மேல்

ஊழாம் (1)

ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/2
மேல்

ஊழி (1)

ஊழி முடிவும் இப்படியேதான் இருக்கும் – வசனகவிதை:4 2/11
மேல்

ஊழியின் (1)

முன்னை காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே – பல்வகை:10 3/3
மேல்

ஊழியை (1)

ஊழியை சமைத்த பிரான் இந்த உலகம் எலாம் உருக்கொண்ட பிரான் – தோத்திர:42 2/2
மேல்

ஊழும் (1)

சாவு பெறும் தீவினையும் ஊழும் – தோத்திர:24 18/5
மேல்

ஊற்ற (1)

கண்ணிலே பொய் நீர் கடகடென தான் ஊற்ற
பண் இசை போல் இன் குரலால் பாவி அது கூறிடுமால் – குயில்:8 1/41,42
மேல்

ஊற்றத்தாலே (1)

ஒண்மை உயர் கடவுளிடத்து அன்புடையார் அவ் அன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான சங்கம் ஒன்று சேர்த்திட்டாரே – தனி:23 6/3,4
மேல்

ஊற்றாய் (1)

உள்ளம் மிசை தான் அமுத ஊற்றாய் பொழியுமடா –வேதாந்த:11 15/2
மேல்

ஊற்றில் (1)

ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன் – கண்ணன்:17 2/3
மேல்

ஊற்றினள் (1)

உண்ணும் இதழ் அமுத ஊற்றினள் கண்ணம்மா – தோத்திர:54 2/8
மேல்

ஊற்றினிலே (1)

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே தென்றல் –தேசீய:4 7/1
மேல்

ஊற்றினை (1)

ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறி ததும்பும் விழிகளும் பத்து – தோத்திர:52 1/2
மேல்

ஊற்று (2)

மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று மதுர வாய் அமிர்தம் இதழ் அமிர்தம் – தோத்திர:55 2/1
ஊற்று அமுது என்ன ஒரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன் உருவம் நினக்கு அமைய பார்த்தன் அங்கு நான் – கண்ணன்:19 4/4
மேல்

ஊற்றும் (2)

உழை எலாம் இடையின்றி இவ் வான நீர் ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால் – தோத்திர:19 4/3
எல்லா திசையினும் எழில் பெற ஊற்றும்
சொல்லா இனிமை கொள் சோதி என்று ஓதினன் – பிற்சேர்க்கை:17 1/9,10
மேல்

ஊற்றே (1)

வலிமையின் ஊற்றே ஒளி மழையே உயிர் கடலே – வசனகவிதை:2 12/5
மேல்

ஊற (2)

கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/2
ஆசை ததும்பி அமுது ஊற பாடியதே – குயில்:5 1/56
மேல்

ஊறி (3)

அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறி ததும்பும் விழிகளும் பத்து – தோத்திர:52 1/2
ஈர சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே – தனி:3 2/2
மேல்

ஊறிடும் (2)

ஒண்மையும் ஊக்கமும்தான் என்றும் ஊறிடும் திருவருள் சுனை ஆவாய் – தோத்திர:11 3/3
ஊன் உருக பாடுவதில் ஊறிடும் தேன் வாரியிலும் – குயில்:3 1/34
மேல்

ஊறு (3)

ஒரு மனிதன் தனை பற்றி பல நாடு கடத்தியவர்க்கு ஊறு செய்தல் –தேசீய:47 2/1
ஊனமறு நல் அழகே ஊறு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 3/4
ஊறு இலா புள்ளும் அதன் உள்ளே மறைந்ததுவால் – குயில்:8 1/26
மேல்

ஊறுதே (1)

வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர் – தோத்திர:52 2/3
மேல்

ஊறும் (2)

சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும் கண்டீரோ – தோத்திர:25 7/1
கடைபட்ட தோள்களை பிய்ப்பேன் அங்கு கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன் – பாஞ்சாலி:5 305/2
மேல்

ஊன் (7)

பச்சை ஊன் இயைந்த வேல் படைகள் வந்த போதினும் –வேதாந்த:1 2/5
ஊன் அகத்தது உவட்டுறும் அன்புதான் ஒன்றும் இன்றி உயிர்களில் ஒன்றியே – சுயசரிதை:1 18/3
புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/2
ஓடும் குருதியை தேக்கவோ தமர் ஊன் குவை கண்டு களிக்கவோ அந்த – பாஞ்சாலி:1 56/2
ஊன் உருக பாடுவதில் ஊறிடும் தேன் வாரியிலும் – குயில்:3 1/34
அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கு ஒர் புல் நரி தந்திடும் ஊன் உணா – பிற்சேர்க்கை:2 1/1
ஊன் என கொள்வர் உயிரிலார் சிலரே – பிற்சேர்க்கை:16 1/12
மேல்

ஊன்ற (1)

ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை – கண்ணன்:7 6/3
மேல்

ஊன்றி (3)

ஆங்கு ஒர் கன்னியை பத்து பிராயத்தில் ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினன் – சுயசரிதை:1 35/1
ஓடும் யமுனை கரையிலே தடி ஊன்றி சென்றார் ஓர் கிழவனார் ஒளி – கண்ணன்:7 2/2
ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 53/3
மேல்

ஊன்றிய (2)

உடனுறு கடமை ஆகும் என்பதினும் ஊன்றிய நம்புதல் கொண்டும் –தேசீய:50 7/3
ஊன்றிய கொள்கை தழைப்பரோ துன்பம் உற்றிடும் என்பதொர் அச்சத்தால் விதி – பாஞ்சாலி:1 140/3
மேல்

ஊன்றும் (1)

சாதி முற்றும் நல் அறத்தில் ஊன்றும் – தோத்திர:24 11/5
மேல்

ஊன (1)

ஊன மா நாவினில் உரைத்தலும் படுமோ – பிற்சேர்க்கை:17 1/15
மேல்

ஊனங்கள் (1)

ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர் – தோத்திர:61 4/4
மேல்

ஊனத்தால் (1)

ஊனத்தால் உள்ளம் அஞ்சி ஒதுங்கிட மனம் ஒவ்வாமல் –தேசீய:51 3/3
மேல்

ஊனம் (6)

ஊனம் ஒன்று அறியா ஞான மெய் பூமி –தேசீய:32 1/38
உள்ளம் குளிராதோ பொய் ஆணவ ஊனம் ஒழியாதோ – தோத்திர:14 3/1
ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் – தோத்திர:62 8/2
ஊனம் தங்கிய மானிடர் தீது எலாம் ஒழிக்குமாறு பிறந்த பெரும் தவன் – தனி:18 3/4
ஊர் அழிந்து பிணம் என வாழும் இவ் ஊனம் நீக்க விரும்பும் இளையர்தாம் – சுயசரிதை:1 33/2
மருளர்தம் இசையே பழி கூறுவன் மா மகட்கு இங்கு ஒர் ஊனம் உரைத்திலன் – சுயசரிதை:1 43/4
மேல்

ஊனமற்று (1)

ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து –தேசீய:24 1/51
மேல்

ஊனமறு (1)

ஊனமறு நல் அழகே ஊறு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 3/4
மேல்

ஊனுடல் (1)

ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படுமாறு உளதோ –தேசீய:26 4/2
மேல்

ஊனுடலை (1)

ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர் –வேதாந்த:19 2/4
மேல்

ஊனை (3)

யோகத்து இருத்திவிடு அல்லால் என்றன் ஊனை சிதைத்துவிடு – தோத்திர:14 1/3
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம் – கண்ணன்:1 2/3
ஊனை சிதைத்திடும் போதினும் தனது உள்ளம் அருளின் நெகுதலும் – பாஞ்சாலி:1 82/4
மேல்