கே – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேக்க 2
கேட்க 10
கேட்கமாட்டான் 1
கேட்கலாம் 1
கேட்கலானேன் 1
கேட்கலீர் 1
கேட்கவும் 1
கேட்கவே 2
கேட்கவேண்டாம் 1
கேட்கா 1
கேட்காது 2
கேட்கில் 1
கேட்கிறது 1
கேட்கிறாயா 1
கேட்கின்றனம் 1
கேட்கின்றாய் 1
கேட்கின்றார் 1
கேட்கின்றாள் 2
கேட்கின்றான் 1
கேட்கின்றேன் 1
கேட்கும் 3
கேட்கையிலே 4
கேட்ட 5
கேட்டதனால் 1
கேட்டதால் 1
கேட்டது 4
கேட்டதுதான் 1
கேட்டபொழுதில் 1
கேட்டலால் 1
கேட்டலும் 1
கேட்டவர்க்கே 1
கேட்டவுடன் 1
கேட்டளவில் 1
கேட்டனர் 1
கேட்டனன் 3
கேட்டாய் 2
கேட்டார் 3
கேட்டால் 2
கேட்டான் 4
கேட்டி 1
கேட்டிருப்பாய் 1
கேட்டிருப்போம் 1
கேட்டிரோ 2
கேட்டிலார் 1
கேட்டிலிரோ 1
கேட்டிலும் 1
கேட்டிலே 1
கேட்டிலையோ 1
கேட்டினுக்கு 1
கேட்டீர் 1
கேட்டீர்களா 1
கேட்டீரோ 4
கேட்டு 21
கேட்டும் 7
கேட்டுவா 1
கேட்டுவிடடீ 1
கேட்டுள்ளோம் 1
கேட்டே 6
கேட்டேன் 15
கேட்டோம் 3
கேட்பதற்கு 1
கேட்பதற்கோர் 1
கேட்பதனால் 1
கேட்பது 1
கேட்பதுண்டோ 1
கேட்பதும் 2
கேட்பதுவும் 1
கேட்பதுவே 1
கேட்பாய் 2
கேட்பார் 1
கேட்பாரோ 1
கேட்பான் 1
கேட்பினும் 1
கேட்பீர் 1
கேட்பீரேல் 1
கேட்பேன் 5
கேட்பை 1
கேட்பையால் 3
கேட்போர் 1
கேடதனை 1
கேடற்ற 3
கேடற்றது 1
கேடற்றார் 1
கேடில் 1
கேடிலா 1
கேடு 5
கேடுற்ற 1
கேண்-மினோ 3
கேண்மை 3
கேண்மைகொண்டு 1
கேணி 2
கேணியிலே 1
கேதம் 1
கேலி 1
கேலிகள் 2
கேலிசெய்தே 1
கேலியை 1
கேள் 9
கேள்-மின் 1
கேள்வனை 1
கேள்வி 6
கேள்விக்கு 3
கேள்விகள் 2
கேள்விகளாம் 1
கேள்விகளை 1
கேள்வியுடையவன் 1
கேள்வியுண்டு 1
கேள்வியும் 1
கேளடா 1
கேளடீ 1
கேளப்பா 2
கேளா 1
கேளாத 1
கேளாது 1
கேளாய் 11
கேளாயோ 1
கேளி 1
கேளியும் 1
கேளீர் 15
கேளீரோ 5

கேக்க (2)

கிக்கீ என்றும் கேக்க கேக்க – வசனகவிதை:6 1/8
கிக்கீ என்றும் கேக்க கேக்க
கேட்க கேட்க எனவும் கெக்கெக்கே – வசனகவிதை:6 1/8,9
மேல்

கேட்க (10)

திருமொழி கேட்க செறிந்தனர் சீடர்கள் –தேசீய:42 1/21
கேட்க பாட்டும் காண நல் உலகும் – தோத்திர:1 24/14
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன் – தோத்திர:1 32/2
சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல் என்று ஹிரணியன்தான் உறுமி கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான் – சுயசரிதை:2 15/1,2
தின்றிட பண்டங்களும் செவி தெவிட்டற கேட்க நல் பாட்டுகளும் – கண்ணன்:2 7/1
கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே – பாஞ்சாலி:4 253/4
நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களை கேட்க திருப்புவார் அவர் – பாஞ்சாலி:4 262/2
நண்ணி இங்கு கேட்க நடத்திவந்தாய் போலும் எனை – குயில்:8 1/36
கேட்க கேட்க எனவும் கெக்கெக்கே – வசனகவிதை:6 1/9
கேட்க கேட்க எனவும் கெக்கெக்கே – வசனகவிதை:6 1/9
மேல்

கேட்கமாட்டான் (1)

சொன்னாலும் கேட்கமாட்டான்
ஆதலால் மானிடரே வாருங்கள் – வசனகவிதை:4 9/12,13
மேல்

கேட்கலாம் (1)

வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர் – பாஞ்சாலி:4 254/1
மேல்

கேட்கலானேன் (1)

சற்று நகைபுரிந்தவன்பால் கேட்கலானேன் தம்பிரானே இந்த தகைமை என்னே – சுயசரிதை:2 30/3
மேல்

கேட்கலீர் (1)

அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/4
மேல்

கேட்கவும் (1)

கேலிகள் கேட்கவும் உன்றன் சேயினை வைத்தனர் பாண்டவர் – பாஞ்சாலி:1 67/4
மேல்

கேட்கவே (2)

மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே – பாஞ்சாலி:5 270/4
மேல்

கேட்கவேண்டாம் (1)

சரி சரி என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம் என்றது வள்ளியம்மை – வசனகவிதை:4 1/32
மேல்

கேட்கா (1)

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன் – தோத்திர:1 32/2
மேல்

கேட்காது (2)

சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது
இன்று அப்படி இல்லை குஷால்வழியில் இருந்தது – வசனகவிதை:4 1/8,9
காற்று இல்லாவிட்டால் சிவனுக்கு காது கேட்காது
காற்றுக்கு காது இல்லை – வசனகவிதை:4 3/3,4
மேல்

கேட்கில் (1)

என்ன வழி என்று கேட்கில் உபாயம் இரு கணத்தே உரைப்பான் அந்த – கண்ணன்:1 1/2
மேல்

கேட்கிறது (1)

அவள் உள்ளத்திலே பாடுகிறாள் அது குழலின் தொளையிலே கேட்கிறது
பொருந்தாத பொருள்களை பொருத்திவைத்து அதிலே இசை உண்டாக்குதல் சக்தி – வசனகவிதை:3 7/8,9
மேல்

கேட்கிறாயா (1)

மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
மேல்

கேட்கின்றனம் (1)

தன் வாய் சொல்லினை கேட்கின்றனம் யாம் – பிற்சேர்க்கை:26 1/47
மேல்

கேட்கின்றாய் (1)

கூலி என்ன கேட்கின்றாய் கூறுக என்றேன் ஐயனே – கண்ணன்:4 1/33
மேல்

கேட்கின்றார் (1)

பின்னையும் ஓர் உடைமை உண்டோ என்று நம்மை பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால் – பாஞ்சாலி:5 286/2
மேல்

கேட்கின்றாள் (2)

பலி கேட்கின்றாள் பக்தர்காள் நும்முளே –தேசீய:42 1/68
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கென கேட்கின்றாள் – தோத்திர:19 3/4
மேல்

கேட்கின்றான் (1)

நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம் – பாஞ்சாலி:1 68/2
மேல்

கேட்கின்றேன் (1)

பெண்மைக்கு இரங்கி பிழை பொறுத்தல் கேட்கின்றேன்
அறிவும் வடிவும் குறுகி அவனியிலே – குயில்:3 1/22,23
மேல்

கேட்கும் (3)

சக்தி சொலும் மொழியது கேட்கும் செவி – தோத்திர:24 3/3
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா நின்றன் – தோத்திர:48 3/1
கேட்டிலே களியோடு செல்வாயோ கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ – பாஞ்சாலி:2 201/4
மேல்

கேட்கையிலே (4)

நிறுத்து வண்டி என்றே கள்ளர் நெருங்கி கேட்கையிலே எங்கள் –வேதாந்த:17 2/1
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே
பேடை குயில் இதனை பேசியது வானரரே – குயில்:5 1/20,21
யான் உணர சொல்வீர் என வணங்கி கேட்கையிலே
கூறுகின்றார் ஐயர் குயிலே கேள் முன் பிறப்பில் – குயில்:9 1/14,15
மாற்று இலையோ என்று மறுகி நான் கேட்கையிலே
தேற்றமுறு மா முனிவர் செப்புகின்றார் பெண் குயிலே – குயில்:9 1/199,200
மேல்

கேட்ட (5)

வில் நாண் ஒலி கேட்ட மேன்மை திருநாடு –தேசீய:48 10/2
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய் – தோத்திர:41 1/2
இங்கு இது கேட்ட சுயோதனன் மிக இங்கிதம் சொல்லினை மாமனே என்று – பாஞ்சாலி:1 57/1
பகட்டுதல் கேட்ட பின் பெரும் கோபத்தோடே திரிதாட்டிரன் அட – பாஞ்சாலி:1 71/2
இவ் உரை கேட்ட துச்சாதனன் அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன் இவன் – பாஞ்சாலி:5 264/1
மேல்

கேட்டதனால் (1)

நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ என பலர் சொல கேட்டதனால்
சில பொருள் விளையாட்டில் செலும் செலவினுக்கு அழிகலை என நினைத்தேன் – பாஞ்சாலி:2 168/3,4
மேல்

கேட்டதால் (1)

தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன் – பாஞ்சாலி:1 60/1
மேல்

கேட்டது (4)

கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
விந்தையை நீர் கேட்டது உண்டோ விலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் – பாஞ்சாலி:5 285/2
அன்று நான் கேட்டது அமரர்தாம் கேட்பாரோ – குயில்:1 1/32
மேல்

கேட்டதுதான் (1)

வற்புறுத்தி கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ – பாஞ்சாலி:5 271/83
மேல்

கேட்டபொழுதில் (1)

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லும் கேலி பொறுத்திடுவான் எனை – கண்ணன்:1 4/1
மேல்

கேட்டலால் (1)

என் நடை பழகலால் என் மொழி கேட்டலால்
மேம்பாடு எய்த வேண்டினோன் போலவும் – கண்ணன்:6 1/6,7
மேல்

கேட்டலும் (1)

அத்தினமாநகரத்தினில் வந்தனர் ஆரிய பாண்டவர் என்றது கேட்டலும்
தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள் சந்திகள் வீதிகள் சாலைகள் சோலைகள் – பாஞ்சாலி:2 155/1,2
மேல்

கேட்டவர்க்கே (1)

கேளீர் முனிவர்களே இந்த கீர்த்தி கொள் சரிதையை கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால் – தோத்திர:42 4/1,2
மேல்

கேட்டவுடன் (1)

திங்களை கண்டவுடன் கடல் திரையினை காற்றினை கேட்டவுடன்
கங்குலை பார்த்தவுடன் இங்கு காலையில் இரவியை தொழுதவுடன் – தோத்திர:61 1/2,3
மேல்

கேட்டளவில் (1)

பேயும் பிசாசும் திருடரும் என்றன் பெயரினை கேட்டளவில்
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/1,2
மேல்

கேட்டனர் (1)

விந்தை கொள் பாட்டு இசைப்ப அதை விழைவொடு கேட்டனர் துயில்புரிந்தார் – பாஞ்சாலி:2 161/2
மேல்

கேட்டனன் (3)

வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட – பாஞ்சாலி:1 137/2
பாகன் உரைத்தது கேட்டனன் பெரும் பாம்பு கொடியவன் சொல்கிறான் அவன் – பாஞ்சாலி:4 263/1
அண்ணன் உரைத்திடல் கேட்டனன் நல்லதாம் என்று உறுமி எழுந்தனன் – பாஞ்சாலி:5 266/4
மேல்

கேட்டாய் (2)

நன்று நீ கேட்டாய் பசுங்கிளியே நானும் இங்கு – தனி:1 14/2
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
மேல்

கேட்டார் (3)

காந்தி சொல் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே –தேசீய:12 9/4
இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார் எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சலிட்டார் – பாஞ்சாலி:5 287/1
இவ் உரை கேட்டார் ஐவர் பணிமக்கள் ஏவாமுன்னர் – பாஞ்சாலி:5 291/1
மேல்

கேட்டால் (2)

நின்பொருட்டு நின் அருளால் நின் உரிமை யாம் கேட்டால்
என்பொருட்டு நீ தான் இரங்காதிருப்பதுவோ –தேசீய:27 13/1,2
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும் சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும் – தோத்திர:27 4/1
மேல்

கேட்டான் (4)

இ மொழி கேட்டான் கண்ணன் – தோத்திர:68 22/1
இ மொழி கேட்டான் ஐயன் – தோத்திர:68 22/2
அக்கணமே கிணற்று உள தன் விம்பம் காட்டி அறிதி-கொலோ என கேட்டான் அறிந்தேன் என்றேன் – சுயசரிதை:2 27/3
அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான் – பாஞ்சாலி:3 207/1
மேல்

கேட்டி (1)

வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/3
மேல்

கேட்டிருப்பாய் (1)

கேட்டிருப்பாய் காற்றே துன்ப கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் –தேசீய:53 3/3
மேல்

கேட்டிருப்போம் (1)

கள்ளால் மயங்குவது போலே அதை கண் மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம் – கண்ணன்:9 6/2
மேல்

கேட்டிரோ (2)

நறிய பொன் மலர் மென் சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ – பல்வகை:4 3/4
கூடி தருமனை நோக்கியே அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ – பாஞ்சாலி:5 272/4
மேல்

கேட்டிலார் (1)

வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எள்துணை பயன் கண்டிலார் – சுயசரிதை:1 23/3,4
மேல்

கேட்டிலிரோ (1)

போற்றும் ஒளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ
நீச பிறப்பு ஒருவர் நெஞ்சிலே தோன்றி வரும் – குயில்:7 1/38,39
மேல்

கேட்டிலும் (1)

கேட்டிலும் துணிந்து நில் – பல்வகை:1 2/20
மேல்

கேட்டிலே (1)

கேட்டிலே களியோடு செல்வாயோ கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ – பாஞ்சாலி:2 201/4
மேல்

கேட்டிலையோ (1)

முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ
நல்லோர் தமது உள்ளம் நைய செயல் செய்தான் – பாஞ்சாலி:4 252/58,59
மேல்

கேட்டினுக்கு (1)

கேட்டினுக்கு இரையாவான் மதி கெடும் துரியோதனன் கிளையினரும் – பாஞ்சாலி:2 163/3
மேல்

கேட்டீர் (1)

இன்பம் கேட்டீர் எண்ணிய மறப்பீர் – வசனகவிதை:7 0/30
மேல்

கேட்டீர்களா (1)

கேட்டீர்களா கிராமங்களில் – பிற்சேர்க்கை:27 1/5
மேல்

கேட்டீரோ (4)

பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம் பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ – பல்வகை:4 4/4
நலத்தை காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ – பல்வகை:4 5/4
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம் உதயகன்னி உரைப்பது கேட்டீரோ – பல்வகை:4 7/4
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ – பல்வகை:4 9/4
மேல்

கேட்டு (21)

சாதிகள் எல்லாம் அதனை கேட்டு – தோத்திர:26 6/4
நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டு அறியீரோ – தனி:1 17/1
அன்னம் இது கேட்டு மகிழ்ந்து உரைக்கும் ஆம் காணும் – தனி:1 25/1
நயப்படு சந்நிதிதனிலே நான் பாட நீ கேட்டு நன்கு போற்றி – தனி:22 8/2
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/2
சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர் சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன் – கண்ணன்:19 4/1
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/2
எங்கும் பறையறைவாயடா தம்பி என்றது கேட்டு சகுனிதான் – பாஞ்சாலி:3 239/4
சொல் இதனை கேட்டு துரியோதன மூடன் – பாஞ்சாலி:4 252/79
நல்லது நீ சென்று நடந்த கதை கேட்டு வா – பாஞ்சாலி:4 252/103
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான் இதை கேட்டு வில் விஜயன் எதிர்த்து சொல்வான் – பாஞ்சாலி:5 282/1
விகருணன் சொல்லை கேட்டு வில் இசை கர்ணன் சொல்வான் – பாஞ்சாலி:5 288/1
சோதிக்கு சோதி அப்பா என்றன் சொல்லினை கேட்டு அருள்செய்திடுவாய் – பாஞ்சாலி:5 296/2
காலைக்கடனில் கருத்து இன்றி கேட்டு இருக்க – குயில்:1 1/16
ஆவலினால் பாடுகின்றேன் ஆரியரே கேட்டு அருள்வீர் – குயில்:5 1/52
சொல்லும் மொழி கேட்டு அதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி என – குயில்:7 1/12
போவதன் முன் ஒன்று புகல்வதனை கேட்டு அருள்வீர் – குயில்:9 1/2
அன்னியன் கொண்டு ஏகிடுவான் என்னும் அது கேட்டு
மாடன் மனம் புகைந்து மற்றை நாள் உன்னை வந்து – குயில்:9 1/44,45
கூத்தினுக்கு சென்றதனை கேட்டு குதூகலமாய் – குயில்:9 1/120
இதை கேட்டு மற்ற பக்ஷிகள் எல்லாம் கத்துகின்றன – வசனகவிதை:6 1/20
மேல்

கேட்டும் (7)

இஃது எலாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன் –தேசீய:24 1/42
பல கற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 1/5
வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே – தனி:10 4/4
கற்றும் கேட்டும் அறிவு முதிரும் முன் காதல் ஒன்று கடமை ஒன்று ஆயின – சுயசரிதை:1 36/4
மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மை சாத்திர கேள்விகள் கேட்டும்
பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானை தேனில் அகப்பையை போல்வார் – பாஞ்சாலி:1 98/1,2
மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே – பாஞ்சாலி:1 126/2
மன்று புனைந்தது கேட்டும் இ சூதின் வார்த்தையை கேட்டும் இங்கு என்றன் மனத்தே – பாஞ்சாலி:1 126/2
மேல்

கேட்டுவா (1)

முன்பு என் வினாவினை மீட்டும் போய் சொல்லி முற்றும் தெளிவுற கேட்டுவா – பாஞ்சாலி:4 258/4
மேல்

கேட்டுவிடடீ (1)

என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை யாவும் தெளிவுபெற கேட்டுவிடடீ – கண்ணன்:13 3/2
மேல்

கேட்டுள்ளோம் (1)

இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம்
ஆனால் இ பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோகரஸம் தவிர்ந்தது – வசனகவிதை:3 6/2,3
மேல்

கேட்டே (6)

உனது இயல் அன்னியர் உரைத்திட கேட்டே
தெரிந்தனம் எம்முளே தெளிந்தவர் ஈங்கு இலை – தனி:8 4/3,4
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரை தோளான் – பாஞ்சாலி:1 97/1
பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட – பாஞ்சாலி:1 113/1
தோல் விலைக்கு பசுவினை கொல்லும் துட்டன் இவ் உரை கூறுதல் கேட்டே
நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன் உளம் நொந்து இவை கூறும் – பாஞ்சாலி:2 171/1,2
தருமன் வார்த்தை கேட்டே துரியோதனன் எழுந்து சொல்வான் – பாஞ்சாலி:2 185/1
பாடி விளையாடும் பண்பு கேட்டே குரங்கன் – குயில்:9 1/132
மேல்

கேட்டேன் (15)

இன்று ஒரு சொல்லினை கேட்டேன் இனி ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள் –தேசீய:21 8/1
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்
நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன் – தோத்திர:1 20/13,14
இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி – தோத்திர:10 1/18
அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி – தோத்திர:10 1/20
விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/1,2
நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/2
நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினை தீ சுடினும் சிவசக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் – தோத்திர:13 2/2,3
தசையினை தீ சுடினும் சிவசக்தியை பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ – தோத்திர:13 2/3,4
அசைவறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கு எதும் தடை உளதோ – தோத்திர:13 2/4
தாளில் விழுந்து அபயம் கேட்டேன் அது தாராயெனில் உயிரை தீராய் துன்பம் – தோத்திர:32 3/3
வந்தித்து நினை கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான் – சுயசரிதை:2 59/2
காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிக – கண்ணன்:12 11/1
பீழை உனக்கு எய்தியது என் பேசாய் என கேட்டேன்
மாய குயில் அதுதான் மானுடவர் பேச்சினில் ஓர் – குயில்:3 1/10,11
போய் மற்றொரு முறை வரலாமா என்று கேட்டேன்
அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/29,30
அம்மா நல்ல நித்திரை போல் இருக்கிறதே என்று கேட்டேன்
ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/59,60
மேல்

கேட்டோம் (3)

கலகம் தோன்றும் இ பாலகனாலே காணுவீர் என சொல்லிட கேட்டோம் – பாஞ்சாலி:2 198/4
இடையின்றி அணுக்கள் எலாம் சுழலும் என இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றி கதிர்கள் எலாம் சுழலும் என வானூலார் இயம்புகின்றார் – பாஞ்சாலி:3 206/1,2
இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
மேல்

கேட்பதற்கு (1)

நின்று சற்றே கேட்பதற்கு என் நெஞ்சம் விரும்பிடவும் – குயில்:5 1/18
மேல்

கேட்பதற்கோர் (1)

காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் –தேசீய:5 7/1
மேல்

கேட்பதனால் (1)

வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால்
ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன் – பாஞ்சாலி:5 271/70,71
மேல்

கேட்பது (1)

சக்தி முகர்வது சுவைப்பது தீண்டுவது கேட்பது காண்பது – வசனகவிதை:3 1/24
மேல்

கேட்பதுண்டோ (1)

நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
கொல்ல துணிவின்றி நம்மையும் அ நிலை கூட்டிவைத்தார் பழி கூட்டிவிட்டார் – பல்வகை:6 4/1,2
மேல்

கேட்பதும் (2)

பிச்சை கேட்பதும் இல்லை இன்பத்தில் பித்து கொண்டு மயங்குவதில்லை – தனி:14 9/3
துச்சமென்று சுகங்களை கொள்ள சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை – தனி:14 9/4
மேல்

கேட்பதுவும் (1)

ஆழ மதியுடனே ஆவலுற கேட்பதுவும்
கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சில் அனல் – குயில்:7 1/8,9
மேல்

கேட்பதுவே (1)

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம் –வேதாந்த:12 1/3
மேல்

கேட்பாய் (2)

செய்தி ஒன்று அதனை தெளிவுற கேட்பாய்
ஊனமற்று எவைதாம் உறினுமே பொறுத்து –தேசீய:24 1/50,51
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மை கோவே –தேசீய:49 1/2
மேல்

கேட்பார் (1)

கூலி மிக கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார் – கண்ணன்:4 1/1
மேல்

கேட்பாரோ (1)

அன்று நான் கேட்டது அமரர்தாம் கேட்பாரோ
குக்குக்கூ என்று குயில் பாடும் பாட்டினிலே – குயில்:1 1/32,33
மேல்

கேட்பான் (1)

பாட்டினைத்தான் கேட்பான் பழவினையின் கட்டினால் – குயில்:9 1/176
மேல்

கேட்பினும் (1)

கற்பக தரு போல் எது கேட்பினும் கடிது நல்கிடும் பாரதநாட்டினில் – பிற்சேர்க்கை:2 2/1
மேல்

கேட்பீர் (1)

இ கதை உரைத்திடுவேன் உளம் இன்புற கேட்பீர் முனிவர்களே – தோத்திர:42 5/1
மேல்

கேட்பீரேல் (1)

பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல் பொழுது எலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் – சுயசரிதை:1 28/2
மேல்

கேட்பேன் (5)

நின்னை சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்று எனக்கு தருவாய் என்றன் – தோத்திர:32 5/1
வாராய் சுடரே வார்த்தை சில கேட்பேன்
தீயர்க்கு எல்லாம் தீமைகள் விளைத்து – தனி:8 5/1,2
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன் – கண்ணன்:4 1/17
நின்னிடம் ஒன்று கேட்பேன் நீ அது – கண்ணன்:6 1/83
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான் – பாஞ்சாலி:2 174/4
மேல்

கேட்பை (1)

நன்று மருவுக மைந்தனே பரஞானம் உரைத்திட கேட்பை நீ நெஞ்சில் – கண்ணன்:7 6/2
மேல்

கேட்பையால் (3)

ஒன்று உரைப்பேன் நல் உபாயம்தான் அதை ஊன்றி கருத்தொடு கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 53/3
கண் பசலைகொண்டு போயினான் இதன் காரணம் யாது என்று கேட்பையால் உயர் – பாஞ்சாலி:1 59/3
வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொல கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 91/1
மேல்

கேட்போர் (1)

அன்னங்கள் பொன் கமல தடத்தின் ஊர அளி முரல கிளி மழலை அரற்ற கேட்போர்
கன்னங்கள் அமுது ஊற குயில்கள் பாடும் கா இனத்து நறு மலரின் கமழை தென்றல் – பாஞ்சாலி:1 117/1,2
மேல்

கேடதனை (1)

கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய் – தோத்திர:41 1/2
மேல்

கேடற்ற (3)

கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
கேளப்பா மேற்சொன்ன உண்மை எல்லாம் கேடற்ற மதியுடையான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 36/1
கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது என கண்டே – பாஞ்சாலி:1 124/4
மேல்

கேடற்றது (1)

கேடற்றது என்று கண்டு கூட கருதும் ஒளி – தோத்திர:54 1/2
மேல்

கேடற்றார் (1)

குன்றின் மிசை ஒரு பாய்ச்சலாக பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார் – சுயசரிதை:2 34/4
மேல்

கேடில் (1)

கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான் – தனி:1 2/1
மேல்

கேடிலா (1)

கேள்வி பலவுடையோர் கேடிலா நல் இசையோர் – பாஞ்சாலி:5 271/35
மேல்

கேடு (5)

கிருத யுகத்தினை கேடு இன்றி நிறுத்த – தோத்திர:1 40/17
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயம் இல்லை கேடு இல்லை தெய்வம் உண்டு வெற்றி உண்டு – தோத்திர:27 5/2
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர் – தோத்திர:62 6/4
முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிட கேடு விளைந்ததாம் – பல்வகை:4 6/4
கேடு வர அறியாய் கீழ்மையினால் சொல்லிவிட்டாய் – பாஞ்சாலி:4 252/48
மேல்

கேடுற்ற (1)

கேடுற்ற மன்னர் அறம் கெட்ட சபைதனிலே – பாஞ்சாலி:5 271/25
மேல்

கேண்-மினோ (3)

பெண்ணால் அறிவு இழக்கும் பித்தர் எலாம் கேண்-மினோ
காதலினை போற்றும் கவிஞர் எலாம் கேண்-மினோ – குயில்:5 1/6,7
காதலினை போற்றும் கவிஞர் எலாம் கேண்-மினோ
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ – குயில்:5 1/7,8
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ – குயில்:5 1/8
மேல்

கேண்மை (3)

கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மை கோவே –தேசீய:49 1/2
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை கேண்மை கொள்ள வழி இவை கண்டீர் – தோத்திர:62 6/4
நத்தி மறங்கள் இழைப்பவன் என்றும் நல்லவர் கேண்மை விலக்கினோன் – பாஞ்சாலி:5 265/4
மேல்

கேண்மைகொண்டு (1)

கீழ்த்திசை வெள்ளியை கேண்மைகொண்டு இலகும் – தனி:8 1/3
மேல்

கேணி (2)

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகு இன்ப கேணி என்றே மிக –தேசீய:8 3/1
கேணி அருகினிலே தென்னை மரம் கீற்றும் இளநீரும் – தோத்திர:12 1/4
மேல்

கேணியிலே (1)

கேட்டிருப்பாய் காற்றே துன்ப கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் –தேசீய:53 3/3
மேல்

கேதம் (1)

மன கேதம் யாவினையும் மாற்றி எனக்கே – தோத்திர:1 33/2
மேல்

கேலி (1)

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லும் கேலி பொறுத்திடுவான் எனை – கண்ணன்:1 4/1
மேல்

கேலிகள் (2)

கேலிகள் பேசி கிளறியும் இன்னும் – கண்ணன்:6 1/62
கேலிகள் கேட்கவும் உன்றன் சேயினை வைத்தனர் பாண்டவர் – பாஞ்சாலி:1 67/4
மேல்

கேலிசெய்தே (1)

கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி – பாஞ்சாலி:1 65/2
மேல்

கேலியை (1)

பொய் அழுக்கை அறம் என்று கொண்டும் பொய்யர் கேலியை சாத்திரம் என்றும் – பாஞ்சாலி:2 181/1
மேல்

கேள் (9)

உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம் உனக்கு இல்லை மறந்திடடா –தேசீய:34 7/2
மேன்மைப்படுவாய் மனமே கேள் விண்ணின் இடி முன் விழுந்தாலும் – தோத்திர:1 23/1
ஐய கேள் இனி ஓர் சொல் அடியர் யாம் – தோத்திர:45 6/1
பெரிதினும் பெரிது கேள்
பேய்களுக்கு அஞ்சேல் – பல்வகை:1 2/71,72
செல்வ கேள் என் அரும் சேய்களை நின்னுடை – தனி:24 1/8
சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல் – பாஞ்சாலி:1 58/3
அச்சா கேள் மாதவிலக்கு ஆதலால் ஓராடைதன்னில் – பாஞ்சாலி:5 271/2
கூறுகின்றார் ஐயர் குயிலே கேள் முன் பிறப்பில் – குயில்:9 1/15
கேள் விடை கூறினள் மாதா நம்மிடை – பிற்சேர்க்கை:26 1/27
மேல்

கேள்-மின் (1)

நுமக்கு இனி தருமம் நுவன்றிட கேள்-மின்
ஒன்றாம் கடவுள் உலகிடை தோன்றிய –தேசீய:42 1/177,178
மேல்

கேள்வனை (1)

சித்த துணிவினை மானுடர் கேள்வனை தீமை அழிப்பவனை நன்மை சேர்த்து கொடுப்பவனை பல சீர்களுடையவனை புவி – தோத்திர:74 2/1
மேல்

கேள்வி (6)

பன்னரும் கல்வி கேள்வி படைத்து உயர்ந்திட்டாரேனும் –தேசீய:29 2/2
கேள்வி இலாது உன் மகன்றனை பலர் கேலிசெய்தே நகைத்தார் கண்டாய் புவி – பாஞ்சாலி:1 65/2
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி கேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு – பாஞ்சாலி:1 118/2
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிர கோமான் – பாஞ்சாலி:1 122/3
தேவல பெயர் மா முனிவோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர் – பாஞ்சாலி:2 171/3
கேள்வி பலவுடையோர் கேடிலா நல் இசையோர் – பாஞ்சாலி:5 271/35
மேல்

கேள்விக்கு (3)

கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது என கண்டே – பாஞ்சாலி:1 124/4
கேள்விக்கு ஒருவர் இல்லை உயிர் தேவியை கீழ்மக்கட்கு ஆளாக்கினான் – பாஞ்சாலி:4 245/4
பெண்ணரசி கேள்விக்கு பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை – பாஞ்சாலி:5 284/2
மேல்

கேள்விகள் (2)

மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மை சாத்திர கேள்விகள் கேட்டும் – பாஞ்சாலி:1 98/1
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர் – பாஞ்சாலி:4 254/1
மேல்

கேள்விகளாம் (1)

செந்தழல் வேள்விகளாம் மிக சீர்பெறும் சாத்திர கேள்விகளாம்
மந்திர கீதங்களாம் தர்க்க வாதங்களாம் தவ நீதங்களாம் – பாஞ்சாலி:1 8/2,3
மேல்

கேள்விகளை (1)

நின்றது என்னே என்று நெரித்துவிட்டார் கேள்விகளை
இன்னார்க்கு இது சொல்வது என்று தெரியாமல் – குயில்:6 1/12,13
மேல்

கேள்வியுடையவன் (1)

மற்று அதன் பின்னர் இருவரும் அரு மந்திர கேள்வியுடையவன் பெரும் – பாஞ்சாலி:1 58/1
மேல்

கேள்வியுண்டு (1)

கேள்வியுண்டு உடனே மீள கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் –தேசீய:51 8/4
மேல்

கேள்வியும் (1)

கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே கடலில் காயம் கரைத்தது ஒப்பு ஆமே – பாஞ்சாலி:2 200/4
மேல்

கேளடா (1)

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை – பிற்சேர்க்கை:14 3/1
மேல்

கேளடீ (1)

பக்தியினாலே இந்த பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ
சித்தம் தெளியும் இங்கு செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும் –வேதாந்த:15 1/1,2
மேல்

கேளப்பா (2)

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை கீழான் பன்றியினை தேளை கண்டு – சுயசரிதை:2 16/1
கேளப்பா மேற்சொன்ன உண்மை எல்லாம் கேடற்ற மதியுடையான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 36/1
மேல்

கேளா (1)

நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக – பாஞ்சாலி:3 215/1
மேல்

கேளாத (1)

கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மை கோவே –தேசீய:49 1/2
மேல்

கேளாது (1)

விளையாட வா என்று அழைப்பான் வீட்டில் வேலை என்றால் அதை கேளாது இழுப்பான் – கண்ணன்:9 8/1
மேல்

கேளாய் (11)

வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய் வீதி எலாம் அணுகுற்றனர் மாதர் –தேசீய:11 2/2
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி – தோத்திர:1 7/1
விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே – தோத்திர:1 30/1
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய்
ஒன்றையே பற்றி ஊசலாடுவாய் –வேதாந்த:22 1/1,2
மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய்
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன் –வேதாந்த:22 1/31,32
என்றவுடனே காக்கை என் தோழா நீ கேளாய்
மன்றுதனை கண்டே மனம் மகிழ்ந்து போற்றுகிறேன் – தனி:1 10/1,2
அதுவே நீ என்பது முன் வேத ஓத்தாம் அது என்றால் எது என நான் அறைய கேளாய்
அது என்றால் முன் நிற்கும் பொருளின் நாமம் அவனியிலே பொருள் எல்லாம் அதுவாம் நீயும் – சுயசரிதை:2 60/1,2
பூமியிலே வழங்கிவரும் மதத்துக்கு எல்லாம் பொருளினை நாம் இங்கு எடுத்து புகல கேளாய்
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/1,2
எந்தை நின்னொடு வாதிடல் வேண்டேன் என்று பல் முறை கூறியும் கேளாய்
வந்த காரியம் கேட்டி மற்று ஆங்கு உன் வார்த்தை இன்றி அ பாண்டவர் வாரார் – பாஞ்சாலி:1 97/2,3
சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும் சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல் – பாஞ்சாலி:3 222/3
மாதர் எலாம் கேண்-மினோ வல் விதியே கேளாய் நீ – குயில்:5 1/8
மேல்

கேளாயோ (1)

தாழ்வு பிறர்க்கு எண்ண தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/2
மேல்

கேளி (1)

முன் தொடர்பினில் உண்மை இருந்ததால் மூண்ட பின் அது ஒர் கேளி என்று எண்ணினேன் – சுயசரிதை:1 36/3
மேல்

கேளியும் (1)

உண்ண நல் கனி வகையும் களி உவகையும் கேளியும் ஓங்கினவே – பாஞ்சாலி:1 13/4
மேல்

கேளீர் (15)

சொற்றது கேளீர் புவி மிசை இன்று –தேசீய:12 5/16
ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர்
சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் –தேசீய:22 2/3,4
குணமதில் பலவாம் கூற கேளீர்
உள் செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும் – தோத்திர:1 4/9,10
கேளீர் முனிவர்களே இந்த கீர்த்தி கொள் சரிதையை கேட்டவர்க்கே – தோத்திர:42 4/1
தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர் தேவர் வந்து நமக்குள் புகுந்தே – தோத்திர:77 1/3
செப்புவேன் கேளீர் சில நாளா காக்கையுள்ளே – தனி:1 16/2
திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்கு உரிய உபாயம் இங்கு செப்ப கேளீர்
நண்ணி எலா பொருளினிலும் உட்பொருளாய் செய்கை எலாம் நடத்தும் வீறாய் – தனி:23 1/2,3
நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை – சுயசரிதை:2 6/4
நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை – சுயசரிதை:2 6/4
திருத்தணிகை மலை மேலே குமாரதேவன் திருக்கொலு வீற்றிருக்குமதன் பொருளை கேளீர்
திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல் – சுயசரிதை:2 11/1,2
யாம் கற்ற கல்வி எலாம் பலிக்கச்செய்தான் எம்பெருமான் பெருமையை இங்கு இசைக்க கேளீர்
தீங்கற்ற குணமுடையான் புதுவை ஊரார் செய்த பெரும் தவத்தாலே உதித்த தேவன் – சுயசரிதை:2 37/2,3
பெண்ணுக்கு விடுதலை என்று இங்கு ஓர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வம் அன்றோ மதிகெட்டீரே – சுயசரிதை:2 45/1,2
கண்ணிலா திரிதாட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர் – பாஞ்சாலி:1 19/4
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திட கேளீர்
மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாக – பாஞ்சாலி:1 123/1,2
கேளீர் தோழர்களே இவ் உலகத்தில் தற்கொலையை காட்டிலும் பெரிய குற்றம் வேறு இல்லை – வசனகவிதை:6 3/20
மேல்

கேளீரோ (5)

வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ –வேதாந்த:10 1/2
சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல –வேதாந்த:10 3/1
கொள்ளற்கு அரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ –வேதாந்த:10 8/2
பாகான தமிழினிலே பொருளை சொல்வேன் பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான் – சுயசரிதை:2 9/3
துன்ப கதையின் தொடர் உரைப்பேன் கேளீரோ – குயில்:6 1/46
மேல்