நு – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகர்தல் 1
நுகர்ந்திடுவார் 1
நுகர்ந்திருந்தேன் 1
நுகரும் 2
நுகருமாறே 1
நுங்கள் 3
நுங்களை 1
நுட்பங்கள் 2
நுட்பம் 2
நுட்பமாகிய 1
நுண் 2
நுண்ணறிவோடுதான் 1
நுண்ணியதாய் 1
நுண்மை 1
நுண்மையிலே 1
நுதல் 3
நுதலினாள் 1
நுந்தமக்கு 1
நுந்தை 1
நும் 5
நும்மால் 1
நும்மிடை 1
நும்முளே 1
நும்மை 5
நும்மையே 1
நும்மோடு 1
நுமக்கு 2
நுமக்கே 1
நுமது 1
நுமரால் 1
நுமரே 1
நுமை 2
நுரை 2
நுரையினிடை 2
நுவல 1
நுவலாது 1
நுவலொணா 1
நுவன்றிட 1
நுனி 1
நுனிகள் 1
நுனியளவு 1

நுகர்தல் (1)

காமம் நுகர்தல் இரந்து உண்டல் கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர் – பிற்சேர்க்கை:4 2/3
மேல்

நுகர்ந்திடுவார் (1)

சீர் இயல் மதி முகத்தார் மணி தேன் இதழ் அமுது என நுகர்ந்திடுவார்
வேரி அம் கள் அருந்தி எங்கும் வெம் மத யானைகள் என திரிவார் – பாஞ்சாலி:1 11/2,3
மேல்

நுகர்ந்திருந்தேன் (1)

காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் அதை – தோத்திர:64 3/2
மேல்

நுகரும் (2)

சக்தி திருச்சுவையினை நுகரும் சிவ – தோத்திர:24 5/4
வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினை கைப்பிடித்தோம் –வேதாந்த:2 1/2
மேல்

நுகருமாறே (1)

அலகிலா அறிவுக்கண்ணால் அனைத்தையும் நுகருமாறே – தனி:19 2/4
மேல்

நுங்கள் (3)

அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே ஆசை என்ற விண்மீன் ஒளிர்செய்ததே – பல்வகை:10 2/1
நின்று அவிந்தன நுங்கள் விளக்கு எலாம் நீங்கள் கண்ட கனாக்கள் எல்லாம் இசை – பல்வகை:10 2/3
நோயினை போல் அஞ்சினேன் சகியே நுங்கள் உறவை எல்லாம் – கண்ணன்:10 2/4
மேல்

நுங்களை (1)

நூறுதரம் சென்று அழைப்பினும் அவர் நுங்களை கேட்க திருப்புவார் அவர் – பாஞ்சாலி:4 262/2
மேல்

நுட்பங்கள் (2)

புத்தம் புதிய கலைகள் பஞ்சபூத செயல்களின் நுட்பங்கள் கூறும் –தேசீய:21 9/1
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் – பல்வகை:4 8/1
மேல்

நுட்பம் (2)

சக்தி நுட்பம் யாவினையும் நாடும் மனம் – தோத்திர:24 16/3
வித்தை நன்கு கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான் – கண்ணன்:5 13/2
மேல்

நுட்பமாகிய (1)

கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
மேல்

நுண் (2)

உடல் பரந்த கடலும் தன்னுள்ளே ஒவ்வொரு நுண் துளியும் வழியாக – தோத்திர:70 1/3
நூற்றிரண்டு மலைகளை சாடுவோம் நுண் இடை பெண் ஒருத்தி பணியிலே – பல்வகை:5 7/2
மேல்

நுண்ணறிவோடுதான் (1)

தேசத்தார் புகழ் நுண்ணறிவோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சினனாயினும் – சுயசரிதை:1 42/3
மேல்

நுண்ணியதாய் (1)

சாலவுமே நுண்ணியதாய் தன்மை எலாம் தான் ஆகி –வேதாந்த:11 5/2
மேல்

நுண்மை (1)

நுண்மை கொண்ட பொருள் இது கண்டீர் நொடியில் இஃது பயின்றிடலாகும் – தோத்திர:77 3/4
மேல்

நுண்மையிலே (1)

தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர் –தேசீய:4 5/2,3
மேல்

நுதல் (3)

எங்கள் கண்ணம்மா முகம் செந்தாமரைப்பூ எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன் – தோத்திர:55 0/2
சீத கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்று உடையாள் – பாஞ்சாலி:1 4/2
வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா – பிற்சேர்க்கை:19 1/2
மேல்

நுதலினாள் (1)

வில் வாள் நுதலினாள் மிக்க எழிலுடையாள் – பாஞ்சாலி:4 252/38
மேல்

நுந்தமக்கு (1)

தேவி நுந்தமக்கு எலாம் திருவருள் புரிக –தேசீய:32 1/13
மேல்

நுந்தை (1)

நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய் – பாஞ்சாலி:1 111/4
மேல்

நும் (5)

என் கரத்தால்-கொலோ நும் உயிர் எடுப்பன் –தேசீய:42 1/108
ஐம் முறைதானும் அன்பரை மறைத்து நும்
நெஞ்சக சோதனை நிகழ்த்தினன் யானே –தேசீய:42 1/109,110
அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாது ஒருவாறு பிழைத்ததே – சுயசரிதை:1 29/4
பின்னர் எனை தோற்றாரா என்றே நும் பேரவையை – பாஞ்சாலி:4 252/117
ஓலிடும் நும் பேர் ஒலியோடு ஒன்றுபட கத்துவேன் – குயில்:7 1/52
மேல்

நும்மால் (1)

அல்லது நும்மால் அகழ் பாதலங்களினும் – பிற்சேர்க்கை:25 22/1
மேல்

நும்மிடை (1)

பல விழைகின்றதால் பக்தர்கள் நும்மிடை
நெஞ்சினை கிழித்து நிலம் மிசை உதிரம் –தேசீய:42 1/45,46
மேல்

நும்முளே (1)

பலி கேட்கின்றாள் பக்தர்காள் நும்முளே
இன்னும் இங்கு ஒருவன் இரத்தமே தந்து இ –தேசீய:42 1/68,69
மேல்

நும்மை (5)

நும்மை மகிழ்ச்சிடன் நோக்கி இங்கு வந்திட்டேன் – தனி:1 13/1
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மை சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி – பாஞ்சாலி:1 122/4
அங்கு அதன் விந்தை அழகினை காண அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன் – பாஞ்சாலி:1 123/4
நாள் வைக்கும் சோதிடரால் இது மட்டும் நாயகன் நும்மை அழைத்திடவில்லை – பாஞ்சாலி:1 124/3
வந்து விருந்து களித்திட நும்மை வாழ்த்தி அழைத்தனன் என் அரு மக்காள் – பாஞ்சாலி:1 125/1
மேல்

நும்மையே (1)

நும்மையே அவுணர் நோவுற செய்தார் – வசனகவிதை:7 0/36
மேல்

நும்மோடு (1)

அல்லல் அற நும்மோடு அளவளாய் நான் பெறும் இவ் – குயில்:3 1/66
மேல்

நுமக்கு (2)

நுமக்கு இனி தருமம் நுவன்றிட கேள்-மின் –தேசீய:42 1/177
மந்திரம் ஒன்றும் மனத்திடை கொண்டான் வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன் – பாஞ்சாலி:1 125/4
மேல்

நுமக்கே (1)

பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே – பல்வகை:8 1/4
மேல்

நுமது (1)

நித்தம் நுமது அருகினிலே குழந்தை என்றும் நிற்பனவும் தெய்வம் அன்றோ நிகழ்த்துவீரே – சுயசரிதை:2 17/4
மேல்

நுமரால் (1)

ஆயிரம் எனை வந்து அடைந்துள நுமரால்
எனினும் இங்கு இவை எலாம் இறைவன் அருளால் – தனி:24 1/32,33
மேல்

நுமரே (1)

நோய் எலாம் தவிர்ப்பான் நுமரே எனக்கு – தனி:24 1/35
மேல்

நுமை (2)

சால நுமை கண்டு களித்தேன் சருவி நீர் – தனி:1 23/2
குற்றம் நுமை கூறுகிலேன் குற்றம் இலேன் யான் அம்ம – குயில்:8 1/54
மேல்

நுரை (2)

எல்லை அதில் காணுவதில்லை அலை எற்றி நுரை கக்கி ஒரு பாட்டு இசைக்கும் – கண்ணன்:2 5/3
சக்தி கடலிலே ஞாயிறு ஓர் நுரை
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம் – வசனகவிதை:3 1/35,36
மேல்

நுரையினிடை (2)

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய் சின்ன குமிழிகளில் என்ன கண்டிட்டாய் – கண்ணன்:17 3/3
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன் சின்ன குமிழிகளில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/2
மேல்

நுவல (1)

நொந்தோ பயனிலை நுவல யாது உளதே – தனி:20 1/29
மேல்

நுவலாது (1)

நொந்துபோய் ஒன்றும் நுவலாது இருந்துவிட்டார் – பாஞ்சாலி:4 252/120
மேல்

நுவலொணா (1)

நோவும் கொலையும் நுவலொணா பீடைகளும் – பாஞ்சாலி:4 252/21
மேல்

நுவன்றிட (1)

நுமக்கு இனி தருமம் நுவன்றிட கேள்-மின் –தேசீய:42 1/177
மேல்

நுனி (1)

வாள் நுனி காட்டி மாட்சியார் குரவன் –தேசீய:42 1/38
மேல்

நுனிகள் (1)

அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க – குயில்:4 1/4
மேல்

நுனியளவு (1)

நுனியளவு செல் – பல்வகை:1 2/58
மேல்