மொ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொக்குகள் 1
மொட்டை 1
மொந்தை 1
மொய் 2
மொய்க்கும் 3
மொய்குழலாளை 1
மொய்த்த 1
மொய்த்தவராய் 1
மொய்த்திடும் 1
மொய்த்து 3
மொய்ம்பில் 1
மொய்ம்பினிலே 1
மொய்ம்பு 2
மொய்ம்புடை 1
மொய்ம்புடையான் 1
மொய்ம்புற 3
மொழி 33
மொழிக்கு 1
மொழிக்கும் 1
மொழிகள் 9
மொழிகளில் 1
மொழிகளிலே 1
மொழிகளினுள்ளே 1
மொழிகளுமாக 1
மொழிகளை 1
மொழிகிறாய் 1
மொழிகுவது 1
மொழிகுவான் 1
மொழிதல் 1
மொழிந்த 1
மொழிந்ததும் 1
மொழிந்தனன் 1
மொழிந்தார் 1
மொழிந்தான் 1
மொழிந்திடல் 1
மொழிந்திடுதல் 1
மொழிந்திடுமோ 1
மொழிந்திடேல் 1
மொழிந்து 1
மொழிந்தேன் 1
மொழிபெயர்த்து 2
மொழிய 1
மொழியது 1
மொழியலாமோ 1
மொழியாலும் 1
மொழியில் 4
மொழியின் 1
மொழியினாய் 1
மொழியினாள் 1
மொழியினிடை 1
மொழியினும் 1
மொழியினை 2
மொழியும் 6
மொழியே 2
மொழியை 2
மொழியொணா 1
மொழிவது 2
மொழிவாய் 2
மொழிவான் 1
மொழிவேன் 1

மொக்குகள் (1)

மொக்குகள் தான் தோன்றி முடிவது போல –தேசீய:32 1/63
மேல்

மொட்டை (1)

மொட்டை புலியனும் தன் மூத்த மகனான – குயில்:9 1/35
மேல்

மொந்தை (1)

மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளை போலே – கண்ணன்:12 10/2
மேல்

மொய் (2)

முறத்தினால் புலியை தாக்கும் மொய் வரை குறப்பெண் போல –தேசீய:51 1/3
முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய் – பாஞ்சாலி:1 150/3
மேல்

மொய்க்கும் (3)

மொய்க்கும் கவலை பகை போக்கி முன்னோன் அருளை துணையாக்கி – தோத்திர:1 39/1
மொய்க்கும் மேகத்தின் வாடிய மா மதி மூடு வெம் பனி கீழுறு மென் மலர் – சுயசரிதை:1 16/1
மொய்க்கும் இன் கள் வகைகள் கொண்டு மோதினர் அரசினம் மகிழ்வுறவே – பாஞ்சாலி:1 36/2
மேல்

மொய்குழலாளை (1)

மூண்டு கடும் செயல் செய்யும் முன் அந்த மொய்குழலாளை இங்கு இட்டுவா – பாஞ்சாலி:4 254/4
மேல்

மொய்த்த (1)

முன்பு இருந்து எண்ணிலாது புவி மேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ – பாஞ்சாலி:2 179/4
மேல்

மொய்த்தவராய் (1)

முன் இழுத்து சென்றான் வழிநெடுக மொய்த்தவராய்
என்ன கொடுமை இது என்று பார்த்திருந்தார் – பாஞ்சாலி:5 271/15,16
மேல்

மொய்த்திடும் (1)

மூளும் நல் புண்ணியம்தான் வந்து மொய்த்திடும் சிவன் இயல் விளங்கிநிற்கும் – தோத்திர:42 4/3
மேல்

மொய்த்து (3)

முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே –தேசீய:5 4/1
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழு குடம் பற்பலவும் இங்கே தர முற்பட்டு நிற்பவனை பெரும் திரள் மொய்த்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 7/2
முத்து ஒளிர் மாடங்களாம் எங்கும் மொய்த்து அளி சூழ் மலர் சோலைகளாம் – பாஞ்சாலி:1 7/3
மேல்

மொய்ம்பில் (1)

மோன ஒளி சூழ்ந்திடவும் மொய்ம்பில் கொலுவிருந்தான் – குயில்:6 1/2
மேல்

மொய்ம்பினிலே (1)

முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே – தோத்திர:1 38/4
மேல்

மொய்ம்பு (2)

முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய் – பாஞ்சாலி:1 150/3
மோட்டு கூகையை காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/3
மேல்

மொய்ம்புடை (1)

மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான் – பாஞ்சாலி:1 132/4
மேல்

மொய்ம்புடையான் (1)

முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/4
மேல்

மொய்ம்புற (3)

முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற ஒன்று உடையாள் இவள் –தேசீய:9 3/1
முத்தமிழ் மா முனி நீள் வரையே நின்று மொய்ம்புற காக்கும் தமிழ்நாடு செல்வம் –தேசீய:20 4/1
மொய்ம்புற தவம்செய் – பல்வகை:1 2/83
மேல்

மொழி (33)

முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி –தேசீய:8 10/2
முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி –தேசீய:8 10/2
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்று உடையாள் –தேசீய:9 3/2
விதமுறு நின் மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறு உனை பாடுதும் காணாய் –தேசீய:11 5/3
தேன் ஆர் மொழி கிள்ளாய் தேவி எனக்கு ஆனந்தமானாள் –தேசீய:13 2/1
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே –தேசீய:23 1/2
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே –தேசீய:23 4/2
காலசா என்ப காலசா எனும் மொழி
முத்தர்தம் சங்க முறை எனும் பொருளது –தேசீய:42 1/119,120
கிள்ளை மொழி சிறு வள்ளி எனும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய் – தோத்திர:3 2/2
பெரும் புகழ் சேரவே முனிநாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர் – தோத்திர:5 2/2
பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா – தோத்திர:43 2/2
உய்ய நின் மொழி பற்றி ஒழுகியே – தோத்திர:45 6/2
இ மொழி கேட்டான் கண்ணன் – தோத்திர:68 22/1
இ மொழி கேட்டான் ஐயன் – தோத்திர:68 22/2
சுருதியின்கண் முனிவரும் பின்னே தூ மொழி புலவோர் பலர் தாமும் – தோத்திர:69 1/1
தீயை அகத்தினிடை மூட்டுவோம் என்று செப்பும் மொழி வலியதாகுமோ – தனி:11 4/1
பொதியமலை பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில் – தனி:21 3/3
பொருளிலார்க்கு இலை இவ் உலகு என்ற நம் புலவர்தம் மொழி பொய்ம்மொழி அன்று காண் – சுயசரிதை:1 43/1
ஒரு மொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர் – சுயசரிதை:2 63/2
முந்த ஒரு சூரியன் உண்டு அதன் முகத்து ஒளி கூறுதற்கு ஒர் மொழி இலையே – கண்ணன்:2 3/4
மோனத்திலே இருக்கும் ஒரு மொழி உரையாது விளையாட வரும் காண் – கண்ணன்:2 4/4
என் நடை பழகலால் என் மொழி கேட்டலால் – கண்ணன்:6 1/6
சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும் தோழமை இல்லையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 3/1
பேசுபொருள் நீ எனக்கு பேணும் மொழி நான் உனக்கு – கண்ணன்:21 5/2
எண்ணமுறலாகி தன் இதயத்துள்ளே இனைய பல மொழி கூறி இரங்குவானால் – பாஞ்சாலி:1 115/4
பருமம் கொள் குரலினனாய் மொழி பகைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான் – பாஞ்சாலி:1 130/2
வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட – பாஞ்சாலி:1 137/2
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
பாலை போல் மொழி பிதற்ற அவளை நோக்கி பார்த்தனும் அ பரிதி எழில் விளக்குகின்றான் – பாஞ்சாலி:1 147/4
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர் – பாஞ்சாலி:1 153/3
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன் – பாஞ்சாலி:4 262/3
சொல்லும் மொழி கேட்டு அதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி என – குயில்:7 1/12
நாடி சினத்துடனே நானா மொழி கூற – குயில்:9 1/46
மேல்

மொழிக்கு (1)

குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே –தேசீய:11 5/2
மேல்

மொழிக்கும் (1)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
மேல்

மொழிகள் (9)

மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/2
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன் கோன் –தேசீய:42 1/65
இயம்பு மொழிகள் புகழ் மறை ஆகும் எடுத்த வினை – தோத்திர:1 22/1
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும் – கண்ணன்:1 9/2
வித்தை பெயருடைய வீணியவளும் மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும் – கண்ணன்:11 3/4
சிந்தை வெதுப்பத்தினால் இவன் சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால் – பாஞ்சாலி:1 62/4
அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/4
நலம் கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி நின் அவைக்களத்தே அமைச்சராக – பாஞ்சாலி:3 215/1
தேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள்
பாவி துச்சாதனனும் பாங்கு இழந்து கூறினான் – பாஞ்சாலி:5 271/91,92
மேல்

மொழிகளில் (1)

வேய் இனிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேதம் அன்ன மொழிகளில் பார்த்தனே – பிற்சேர்க்கை:9 1/1
மேல்

மொழிகளிலே (1)

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் –தேசீய:22 1/1
மேல்

மொழிகளினுள்ளே (1)

ஆன்ற மொழிகளினுள்ளே உயர் ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன் –தேசீய:21 2/2
மேல்

மொழிகளுமாக (1)

கொஞ்சு மொழிகளுமாக காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு சொல்லியது போல் – வசனகவிதை:6 3/37
மேல்

மொழிகளை (1)

வேலின் மிசை ஆணை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தைசெய்வாய் என்று – தோத்திர:4 3/2
மேல்

மொழிகிறாய் (1)

காவல் இழந்த மதி கொண்டாய் இங்கு கட்டு தவறி மொழிகிறாய் தம்பி – பாஞ்சாலி:5 268/3
மேல்

மொழிகுவது (1)

பலபல மொழிகுவது ஏன் உனை பார்த்திவன் என்று எணி அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 168/2
மேல்

மொழிகுவான் (1)

பாம்பை கொடி என்று உயர்த்தவன் அந்த பாம்பு என சீறி மொழிகுவான் அட – பாஞ்சாலி:1 86/1
மேல்

மொழிதல் (1)

அஞ்செழுத்தினை சைவர் மொழிதல் போல் அன்பொடு ஓதும் பெயருடை ஆரியன் –தேசீய:46 2/4
மேல்

மொழிந்த (1)

மாதர்க்கு உண்டு சுதந்திரம் என்று நின் வண் மலர் திருவாயின் மொழிந்த சொல் – பல்வகை:4 2/1
மேல்

மொழிந்ததும் (1)

மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும்
குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/1,2
மேல்

மொழிந்தனன் (1)

மொய்ம்புடை விறல் வீமா என மொழிந்தனன் அறநெறி முழுது உணர்ந்தான் – பாஞ்சாலி:1 132/4
மேல்

மொழிந்தார் (1)

முன் நாளில் துன்பு இன்றி இன்பம் வராது என பெரியோர் மொழிந்தார் அன்றே –தேசீய:44 4/4
மேல்

மொழிந்தான் (1)

முன்னம் தான் நெஞ்சில் கூறிய எல்லாம் மூடன் பின்னும் எடுத்து மொழிந்தான் – பாஞ்சாலி:1 41/4
மேல்

மொழிந்திடல் (1)

தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே தார் இசைந்த நெடு வரை தோளான் – பாஞ்சாலி:1 97/1
மேல்

மொழிந்திடுதல் (1)

தெளிவுறவே அறிந்திடல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே – பாஞ்சாலி:2 154/1
மேல்

மொழிந்திடுமோ (1)

மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/4
மேல்

மொழிந்திடேல் (1)

இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல் – கண்ணன்:6 1/29
மேல்

மொழிந்து (1)

முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி –தேசீய:8 10/2
மேல்

மொழிந்தேன் (1)

வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன் – கண்ணன்:17 2/4
மேல்

மொழிபெயர்த்து (2)

பராவி என்றன் தமிழ் கவியை மொழிபெயர்த்து போற்றுகின்றார் பாரோர் ஏத்தும் – தனி:22 7/3
முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனை திருத்த சொல்லி – சுயசரிதை:2 23/3
மேல்

மொழிய (1)

நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளை – குயில்:3 1/45
மேல்

மொழியது (1)

சக்தி சொலும் மொழியது கேட்கும் செவி – தோத்திர:24 3/3
மேல்

மொழியலாமோ (1)

முன் இவன் அ பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ – தனி:21 2/4
மேல்

மொழியாலும் (1)

நாளும் பல் காட்டாலும் குறிப்பினாலும் நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான் – சுயசரிதை:2 36/2
மேல்

மொழியில் (4)

பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும் பாரதராணியின் கை –தேசீய:8 7/2
வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை – கண்ணன்:3 7/1
மதுர மொழியில் குசலங்கள் பேசி மன்னனொடும் திருமாளிகை சேர்ந்தார் – பாஞ்சாலி:1 119/4
கொன்றுவிட சித்தமோ கூறீர் ஒரு மொழியில்
அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது – குயில்:8 1/45,46
மேல்

மொழியின் (1)

கிள்ளை மொழியின் நலத்தையே இங்கு கேட்க விரும்பும் என் உள்ளமே – பாஞ்சாலி:4 253/4
மேல்

மொழியினாய் (1)

களிபடைத்த மொழியினாய் வா வா வா –தேசீய:16 5/3
மேல்

மொழியினாள் (1)

பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணும் இதழ் அமுத ஊற்றினள் கண்ணம்மா – தோத்திர:54 2/7,8
மேல்

மொழியினிடை (1)

யார் அறிவார் நின் பெருமை யார் அதனை மொழியினிடை அமைக்க வல்லார் – பிற்சேர்க்கை:11 4/4
மேல்

மொழியினும் (1)

பந்தை தெறு முலை மா பால் மொழியினும் கரிய – பிற்சேர்க்கை:13 1/1
மேல்

மொழியினை (2)

முன்னவன் கூறிய மொழியினை நினைந்தும் – தனி:13 1/43
சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள் – பாஞ்சாலி:4 255/3
மேல்

மொழியும் (6)

கலகலென்ற மொழியும் தெய்வ களி துலங்கு நகையும் – தோத்திர:57 1/3
ஓம் என்ற மொழியும் அவன் – தோத்திர:68 11/1
ஓம் என்ற மொழியும் நீல – தோத்திர:68 11/2
கோல கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடீ – கண்ணன்:10 4/2
யாவர் மொழியும் எளிது உணரும் பேறு பெற்றேன் – குயில்:3 1/26
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவது ஏன் – குயில்:9 1/12
மேல்

மொழியே (2)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
ஒரு மொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என்ற – சுயசரிதை:2 63/1
மேல்

மொழியை (2)

ஒரு மொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒரு மொழி ஓம் நமச்சிவாய என்பர் – சுயசரிதை:2 63/2
துதிகள் சொல்லும் விதுரன் மொழியை சுருதியாம் என கொண்டனை நீதான் – பாஞ்சாலி:1 98/3
மேல்

மொழியொணா (1)

மூட மகனே மொழியொணா வார்த்தையினை – பாஞ்சாலி:4 252/47
மேல்

மொழிவது (2)

வெள்ளை நிலா இங்கு வானத்தை மூடி விரிந்து மொழிவது கண்டாய் ஒளி – தோத்திர:7 2/1
நல் நயமே சிந்தைசெய்கின்றான் எனில் நன்கு மொழிவது அறிந்திலன் நெஞ்சை – பாஞ்சாலி:1 63/3
மேல்

மொழிவாய் (2)

முற்றும் இது பித்தருடை செய்கை அன்றோ மூட்டை சுமந்திடுவது என்னே மொழிவாய் என்றேன் – சுயசரிதை:2 30/4
மண்டு பெரும் காதல் மனத்து அடக்கி நீ மொழிவாய்
ஐயனே உங்கள் அரமனையில் ஐந்நூறு – குயில்:9 1/80,81
மேல்

மொழிவான் (1)

முடி ஏறி மோதியது என்று அருள் முகிலை கடுஞ்சொற்கள் மொழிவான் போல – பிற்சேர்க்கை:22 1/2
மேல்

மொழிவேன் (1)

முறை உனக்கு உரைத்தேன் இன்னும் மொழிவேன்
தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே – தோத்திர:1 36/12,13
மேல்