சு – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக 1
சுகங்களும் 1
சுகங்களை 1
சுகத்தினுக்கு 1
சுகத்தினை 2
சுகப்படுவதை 1
சுகம் 10
சுகம்தனிலே 1
சுகம்பெறலாகும் 1
சுகமாக 1
சுகமும் 2
சுகமே 1
சுட்ட 1
சுட்டாய் 1
சுட்டால் 1
சுட்டான் 1
சுட்டு 5
சுட்டும் 1
சுட 2
சுடர் 52
சுடர்க 1
சுடர்கள் 2
சுடர்கின்ற 1
சுடர்கொள 1
சுடர்செய் 1
சுடர்நாடு 1
சுடர்மயமாம் 1
சுடர்விடுக 1
சுடர்வீசிட 1
சுடராம் 6
சுடராய் 2
சுடருக்கும் 1
சுடரும் 3
சுடரே 9
சுடரை 4
சுடவுமொண்ணாது 1
சுடவே 1
சுடாதேன் 1
சுடினும் 1
சுடுகின்றாய் 2
சுடுசொற்கள் 1
சுடுதலும் 1
சுடுவதென்னே 1
சுண்ணம் 1
சுண்ணமும் 1
சுத்த 11
சுத்தமடையன் 1
சுத்தமாக்குகிறான் 1
சுதந்திர 8
சுதந்திரத்தில் 1
சுதந்திரத்தின் 1
சுதந்திரதேவி 1
சுதந்திரம் 15
சுதந்திரமும் 1
சுதந்திரை 1
சுதியில் 2
சுதியும் 1
சுந்தர 2
சுந்தரமாம் 1
சுந்தரி 1
சுப்பராமன் 2
சுப்பிரமண்ணியனை 1
சுப்பிரமணியர்க்கு 1
சுப்ரமண்யபாரதி 1
சுபத்திரை 1
சும்மா 2
சுமக்கிறாய் 1
சுமக்கின்றேன் 1
சுமக்கும் 1
சுமடர் 1
சுமந்தனவாய் 1
சுமந்திடுவது 1
சுமந்து 1
சுமந்துகொண்டு 2
சுமை 3
சுமையினுக்கு 1
சுமையும் 1
சுயநல 1
சுயராஜ்ய 1
சுயாதீனம் 1
சுயோதன 1
சுயோதனன் 8
சுயோதனன்தன்னை 1
சுயோதனன்றன் 1
சுயோதனனாம் 1
சுயோதனாதியரை 1
சுரக்க 1
சுரக்கும் 1
சுரத்திடை 1
சுரந்து 1
சுரம் 1
சுரர் 6
சுருக்கி 1
சுருக்கிடேல் 1
சுருங்க 1
சுருங்குகின்றனரே 1
சுருங்குது 1
சுருதி 6
சுருதிகள் 2
சுருதிசேர்த்துவிட்டது 1
சுருதியாம் 1
சுருதியில் 1
சுருதியின் 1
சுருதியின்கண் 1
சுருதியும் 1
சுருதியை 1
சுருள் 3
சுருளாக 1
சுருளுக்கு 1
சுவடி 1
சுவடியை 1
சுவர் 3
சுவர்கள் 1
சுவை 29
சுவைக்கே 1
சுவைகண்டு 2
சுவைத்து 1
சுவைதரும் 1
சுவைதான் 1
சுவைப்பது 1
சுவைபெற்று 1
சுவையதனை 1
சுவையதில் 1
சுவையுடைய 1
சுவையுடையது 1
சுவையும் 2
சுவையுறு 1
சுவையே 5
சுழல்கின்றது 3
சுழல்கின்றன 2
சுழல்வது 1
சுழல 1
சுழலுகிறது 1
சுழலுகின்றான் 1
சுழலும் 5
சுழலுவதை 1
சுழற்காற்று 1
சுழற்சியிலே 1
சுழற்றும் 1
சுழற்றுவதன் 1
சுழற்றுவது 2
சுழற்றுவோன் 1
சுழற்றுவோன்தன் 1
சுழன்றிடும் 1
சுழன்று 1
சுழன்றுகொண்டே 1
சுழிகளும் 1
சுளை 1
சுற்றத்தார் 1
சுற்றத்திலே 1
சுற்றம் 3
சுற்றமும் 1
சுற்றி 11
சுற்றிச்சுற்றி 1
சுற்று 1
சுற்றுகின்றார் 1
சுற்றும் 3
சுற்றுமுற்றும் 3
சுற்றுவேன் 1
சுறவுகள் 1
சுறுக்கெனவே 1
சுறுசுறுப்பு 1
சுனை 4
சுனைகள் 2
சுனைகளில் 1
சுனைகளும் 3
சுனையது 1

சுக (1)

யாவுமே சுக முனிக்கு ஒர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம் – தோத்திர:53 3/1
மேல்

சுகங்களும் (1)

சொந்த அரசும் புவி சுகங்களும் மாண்புகளும் –தேசீய:40 3/1
மேல்

சுகங்களை (1)

துச்சமென்று சுகங்களை கொள்ள சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை – தனி:14 9/4
மேல்

சுகத்தினுக்கு (1)

மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி – தோத்திர:23 5/2
மேல்

சுகத்தினை (2)

சுகத்தினை நான் வேண்டி தொழுதேன் எப்போதும் – தோத்திர:66 5/1
சோர்வுகள் போகும் பொய் சுகத்தினை தள்ளி சுகம்பெறலாகும் நல் –வேதாந்த:15 4/1
மேல்

சுகப்படுவதை (1)

நாம் சுகப்படுவதை பிறர் பார்ப்பதிலே நமக்கு ஸந்தோஷம்தானே – வசனகவிதை:4 1/35
மேல்

சுகம் (10)

துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது சுகம் என்று மதிப்பாரோ –தேசீய:26 3/2
சுற்றம் இங்கு அறுத்து சுகம் பெறல் விரும்பேன் –தேசீய:32 1/151
துவளாது இருத்தல் சுகம் – தோத்திர:17 1/4
சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/4
சொன்னால் அதுவே சுகம் – தோத்திர:66 4/4
சுத்த சுகம் தனி ஆநந்தம் என சூழ்ந்து கவலைகள் தள்ளியே – கண்ணன்:7 9/4
துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்து சுகம் அருளல் வேண்டும் – கண்ணன்:22 2/1
தேவ சுகம் கொண்டு விழியே திறக்கவில்லை – குயில்:9 1/145
நான் ப்ராணன் என்னாலேதான் அ சிறு கயிறு உயிர்த்திருந்தது சுகம் பெற்றது – வசனகவிதை:4 1/71
ஆவி சுகம் என்று அறிந்தது எல்லாம் துன்பம் அன்றி இலை – பிற்சேர்க்கை:19 2/3
மேல்

சுகம்தனிலே (1)

ஆவி கலப்பின் அமுத சுகம்தனிலே
மேவி அங்கு மூடியிருந்த விழி நான்கு – குயில்:9 1/146,147
மேல்

சுகம்பெறலாகும் (1)

சோர்வுகள் போகும் பொய் சுகத்தினை தள்ளி சுகம்பெறலாகும் நல் –வேதாந்த:15 4/1
மேல்

சுகமாக (1)

இந்த கயிறு ஒரு நாள் சுகமாக ஊசலாடிக்கொண்டு இருந்தது – வசனகவிதை:4 1/6
மேல்

சுகமும் (2)

இரணமும் சுகமும் பழியும் நல் புகழும் யாவும் ஓர் பொருள் என கொள்ளேன் – தோத்திர:33 1/3
இப்போது எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன – வசனகவிதை:3 4/14
மேல்

சுகமே (1)

கணமும் உள்ளத்திலே சுகமே காண கிடைத்ததில்லை – கண்ணன்:10 3/4
மேல்

சுட்ட (1)

சுத்த மோன பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று – தோத்திர:34 6/3
மேல்

சுட்டாய் (1)

வயம் மிக்க அசுரரின் மாயையை சுட்டாய்
வியன் உலகில் ஆநந்த விண் நிலவு பெய்தாய் – தோத்திர:72 1/2,3
மேல்

சுட்டால் (1)

நாணற்ற வார்த்தை அன்றோ வீட்டை சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ – சுயசரிதை:2 56/2
மேல்

சுட்டான் (1)

பாசத்தை அறுத்துவிட்டான் பயத்தை சுட்டான் பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான் – சுயசரிதை:2 21/2
மேல்

சுட்டு (5)

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்தி சொல்லுவேன் குத்தி கொல்லுவேன் –தேசீய:38 7/1
அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
சினம்கொள்வார் தமைத்தாமே தீயால் சுட்டு செத்திடுவார் ஒப்பாவார் சினம்கொள்வார்தாம் – சுயசரிதை:2 8/1
காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/4
அச்சமே நரகம் அதனை சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க – வசனகவிதை:7 0/89,90
மேல்

சுட்டும் (1)

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ – கண்ணன்:16 1/1
மேல்

சுட (2)

நெஞ்சம் சுட உரைத்தல் நேர்மை என கொண்டாயோ – பாஞ்சாலி:4 252/61
வந்து பறவை சுட வாய்ந்த பெரும் சோலை – குயில்:1 1/9
மேல்

சுடர் (52)

எழு பசும் பொன் சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி –தேசீய:11 1/2
தூக்கிய கரத்தில் சுடர் உமிழ்ந்து இருந்தது –தேசீய:42 1/32
நல் சுடர் பரிதி நகைபுரிந்தாங்கு –தேசீய:42 1/99
சக்தியே தானாம் தனி சுடர் பொருளை – தோத்திர:1 12/4
துணையே எனது உயிர் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் – தோத்திர:1 18/1
சுடர் தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும் – தோத்திர:1 28/12
தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே – தோத்திர:1 40/19
குமரா பிணி யாவையுமே சிதற குமுறும் சுடர் வேலவனே சரணம் – தோத்திர:2 4/2
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
தோகை மேல் உலவும் கந்தன் சுடர் கரத்து இருக்கும் வெற்றி – தோத்திர:6 1/1
முத்து சுடர் போலே நிலாவொளி முன்பு வர வேணும் அங்கு – தோத்திர:12 2/2
சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் – தோத்திர:13 1/2
நசை அறு மனம் கேட்டேன் நித்தம் நவம் என சுடர் தரும் உயிர் கேட்டேன் – தோத்திர:13 2/2
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணி பூண் – தோத்திர:18 1/1
அல்லினுக்குள் பெரும் சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார் – தோத்திர:19 5/2
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார் சுடர் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார் – தோத்திர:22 7/2
நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி அனைத்தும் அவள் ஆட்சி – தோத்திர:23 3/2
கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடலுறுதி தந்து சுடர்
நாளை கண்டதோர் மலர் போல் ஒளி நண்ணி திகழும் முகம் தந்து மதவேளை – தோத்திர:32 6/2,3
துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/2
சுத்த வெறும் பொய்யோடீ சுடர் மணியே திருவே – தோத்திர:58 1/5
தோரண பந்தரிலும் பசு தொழுவிலும் சுடர் மணி மாடத்திலும் – தோத்திர:59 4/2
நாட்டுப்புறங்களிலே நகர் நண்ணு சில சுடர் மாடத்திலே சில – தோத்திர:64 7/2
சுத்த மெய்ஞ்ஞான சுடர் முகம் கண்டேன் – தோத்திர:68 5/3
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
நான் எனும் பொய்யை நடத்துவோன் நான் ஞான சுடர் வானில் செல்லுவோன் நான் –வேதாந்த:13 7/1
செந்தோல் அசுரனை கொன்றிடவே அங்கு சிறு விறகு எல்லாம் சுடர் மணி வாள் –வேதாந்த:25 7/1
மேலை சுடர் வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே – தனி:1 1/2
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான் – தனி:1 2/1
வன்ன சுடர் மிகுந்த வானகத்தே தென்திசையில் – தனி:1 6/1
சீர இரும் சுடர் மீனொடு வானத்து திங்களையும் சமைத்தே – தனி:3 2/3
கார் சடை கரு மேகங்கள் எல்லாம் கனகம் ஒத்து சுடர் கொண்டு உலாவ – தனி:10 4/2
வேர் சுடர் பர மாண் பொருள் கேட்டும் மெலிவு ஒர் நெஞ்சிடை மேவுதல் என்னே – தனி:10 4/4
வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழும் சுடர் குலத்தை நாடுவோம் – தனி:11 9/1
எப்போதும் ஆனந்த சுடர் நிலையில் வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் – தனி:23 3/1
பேரருள் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும் – சுயசரிதை:1 25/3
ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/4
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் சுடர்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான் – கண்ணன்:1 7/3,4
நின் உளத்திற்கு தகுந்தவன் சுடர் நித்திய மோனத்து இருப்பவன் உயர் – கண்ணன்:7 3/2
தனி சுடர் நான் கண்டேன் அதன் ஆடல் உலகு என நான் கண்டேன் – கண்ணன்:7 12/4
தூண்டில் புழுவினை போல் வெளியே சுடர் விளக்கினை போல் – கண்ணன்:10 1/1
தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 1/4
பார் சுடர் பரிதியை சூழவே படர் முகில் – பாஞ்சாலி:1 152/1
தோணிகள் சுடர் ஒளி பொன் கரை இட்ட – பாஞ்சாலி:1 152/13
வேத சுடர் தீ முன் வேண்டி மணம்செய்து – பாஞ்சாலி:5 271/29
அவன் சுடர் மகளை அண்ணே ஆடி இழந்துவிட்டாய் – பாஞ்சாலி:5 276/1
சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர் பொருளே பேரடல் பொருளே – பாஞ்சாலி:5 296/4
தோழியரும் வேந்தன் சுடர் கோலம்தான் கண்டே – குயில்:9 1/73
சொல்லில் அகப்படுமோ தூய சுடர் முத்தை ஒப்பாம் – குயில்:9 1/235
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி – வசனகவிதை:2 2/1
விளக்குத்திரி காற்றாகி சுடர் தருகின்றது – வசனகவிதை:2 7/6
செட்டி மக்கள் குலத்தினுக்கு சுடர் விளக்கே பாரதமாதேவி தாளை – பிற்சேர்க்கை:11 2/1
புலன் ஆர சகோர பக்ஷி களிப்பதற்கு வேறு சுடர் பொருள் இங்கு உண்டோ – பிற்சேர்க்கை:11 5/4
மேல்

சுடர்க (1)

தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே –தேசீய:23 3/2
மேல்

சுடர்கள் (2)

வானத்து சுடர்கள் எல்லாம் மிக இனியன – வசனகவிதை:1 1/4
ஞாயிறு திங்கள் வானத்து சுடர்கள் எல்லாம் தெய்வங்கள் – வசனகவிதை:1 3/5
மேல்

சுடர்கின்ற (1)

விண்ணில் சுடர்கின்ற மீனை எல்லாம் பண்ணியதோர் – தோத்திர:17 4/2
மேல்

சுடர்கொள (1)

துயர் நீங்கி என் உளம் சுடர்கொள செய்தாய் – தோத்திர:72 1/4
மேல்

சுடர்செய் (1)

பொன்னும் நல்ல மணியும் சுடர்செய் பூண்கள் ஏந்தி வந்தாய் – தோத்திர:57 4/1
மேல்

சுடர்நாடு (1)

சொப்பனநாடு என்ற சுடர்நாடு அங்கு சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை –வேதாந்த:25 1/2
மேல்

சுடர்மயமாம் (1)

சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை – குயில்:6 1/33
மேல்

சுடர்விடுக (1)

தீயே நின்னை போல எமது உள்ளம் சுடர்விடுக
தீயே நின்னை போல எமது அறிவு கனலுக – வசனகவிதை:2 8/27,28
மேல்

சுடர்வீசிட (1)

நீர் எடுத்து வருவதற்கு அவள் மணி நித்தில புன்னகை சுடர்வீசிட
போர் எடுத்து வரும் மதன் முன் செல போகும் வேளை அதற்கு தினந்தொறும் – சுயசரிதை:1 9/1,2
மேல்

சுடராம் (6)

உள்ளத்து அழுக்கும் உடலில் குறைகளும் ஓட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/1
கள்ளத்தனங்கள் அனைத்தும் வெளிப்பட காட்ட வரும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 2/2
தோன்றும் உயிர்கள் அனைத்தும் நன்று என்பது தோற்றமுறும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/1
மூன்று வகைப்படும் காலம் நன்று என்பதை முன்னரிடும் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 3/2
பட்டினம்தன்னிலும் பார்க்க நன்று என்பதை பார்க்க ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/1
கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதை காண ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/2
மேல்

சுடராய் (2)

தான் என மாற்றும் சாகா சுடராய்
கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடலாய் – தோத்திர:10 1/11,12
வண்மை கொள் உயிர் சுடராய் இங்கு வளர்ந்திடுவாய் என்றும் மாய்வதிலாய் – தோத்திர:11 3/2
மேல்

சுடருக்கும் (1)

காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு – வசனகவிதை:2 7/7
மேல்

சுடரும் (3)

சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடி புகழ்கின்றது இங்கே – தோத்திர:70 1/4
அறிவு எது போல் சுடரும்
அறிவு தெய்வத்தின் கோயில் எது – வசனகவிதை:2 1/6,7
நின்னை போல எமது உயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக – வசனகவிதை:2 8/26
மேல்

சுடரே (9)

இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே – தோத்திர:1 18/4
சுடரே போற்றி கணத்தேவர் துரையே போற்றி எனக்கு என்றும் – தோத்திர:1 19/1
வேத சுடரே மெய்யாம் கடவுளே – தோத்திர:1 20/12
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி – தோத்திர:21 2/1
தூமகேது சுடரே வாராய் – தனி:8 1/4
வாராய் சுடரே வார்த்தை சில கேட்பேன் – தனி:8 5/1
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன் – கண்ணன்:21 5/3
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொன் சுடரே
முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே கண்ணம்மா – கண்ணன்:21 7/3,4
வையகம் காத்திடுவாய் கண்ணா மணிவண்ணா என்றன் மன சுடரே
ஐய நின் பதமலரே சரண் ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள் – பாஞ்சாலி:5 299/1,2
மேல்

சுடரை (4)

அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
தீ சுடரை வென்ற ஒளிகொண்ட தேவி நினைவிழந்தேனடி – தனி:15 2/4
ஒளியை மின்னலை சுடரை மணியை – வசனகவிதை:2 13/21
போத சுடரை புகை இருள் சூழ்ந்தது – வசனகவிதை:7 0/60
மேல்

சுடவுமொண்ணாது (1)

சுடவுமொண்ணாது புனல் நனையாது – தோத்திர:68 27/3
மேல்

சுடவே (1)

மன்னவனே நொந்தார் மனம் சுடவே சொல்லும் சொல் – பாஞ்சாலி:4 252/66
மேல்

சுடாதேன் (1)

தான் அகம் சுடாதேன் பிறர்தமை தான் எனும் – கண்ணன்:6 1/15
மேல்

சுடினும் (1)

தசையினை தீ சுடினும் சிவசக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் – தோத்திர:13 2/3
மேல்

சுடுகின்றாய் (2)

நீ சுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க – வசனகவிதை:2 2/7
நீ சுடுகின்றாய் நீ வருத்தம் தருகின்றாய் – வசனகவிதை:2 4/1
மேல்

சுடுசொற்கள் (1)

துரியோதனன் இ சுடுசொற்கள் கூறிடவும் – பாஞ்சாலி:4 252/45
மேல்

சுடுதலும் (1)

சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை –தேசீய:12 8/3
மேல்

சுடுவதென்னே (1)

கனலிலே சுடுவதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/2
மேல்

சுண்ணம் (1)

சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும் – குயில்:3 1/37
மேல்

சுண்ணமும் (1)

சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும் – பாஞ்சாலி:1 13/3
மேல்

சுத்த (11)

சுத்த மோன பகுதியும் வெண்பனி சூழ்ந்த பாகமும் சுட்ட வெந்நீரும் என்று – தோத்திர:34 6/3
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
சுத்த வெறும் பொய்யோடீ சுடர் மணியே திருவே – தோத்திர:58 1/5
சுத்த மெய்ஞ்ஞான சுடர் முகம் கண்டேன் – தோத்திர:68 5/3
சுத்த அறிவு நிலையில் களிப்பவர் தூயராம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 2/2
சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல –வேதாந்த:10 3/1
தூய அபேதாநந்தன் எனும் பெயர்கொண்டு ஒளிர் தருமி சுத்த ஞானி – தனி:18 4/1
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம் – சுயசரிதை:2 17/1
சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர் சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம் – சுயசரிதை:2 17/1
சுத்த சுகம் தனி ஆநந்தம் என சூழ்ந்து கவலைகள் தள்ளியே – கண்ணன்:7 9/4
சைவ சுத்த போசனமும் சாதுரிய பார்வைகளும் – குயில்:5 1/46
மேல்

சுத்தமடையன் (1)

சொன்ன வியாழ முனிவனை இவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும் – பாஞ்சாலி:1 87/2
மேல்

சுத்தமாக்குகிறான் (1)

வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான்
தாதியர் செய் குற்றம் எல்லாம் தட்டி அடக்குகிறான் – கண்ணன்:4 1/47,48
மேல்

சுதந்திர (8)

புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம் பொங்கியது எங்கும் சுதந்திர நாதம் –தேசீய:11 2/1
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் –தேசீய:28 1/1
தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா –தேசீய:34 1/1
நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் கனல் மூட்டினாய் –தேசீய:38 1/1
தூய சீர் உடைத்தாம் சுதந்திர துவசம் துளங்கிலா நாட்டிடை பிறந்தேன் –தேசீய:50 3/4
தோற்றி நின்றனை பாரதநாட்டிலே துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை – பல்வகை:4 1/3
வேர் எடுத்து சுதந்திர நல் பயிர் வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம் – சுயசரிதை:1 9/3
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு நல சுதந்திர வழி தெரி கரிசு அகல் திரு தகும் பெரியவர்களை அகமொடு சிறையூடே – பிற்சேர்க்கை:24 3/2
மேல்

சுதந்திரத்தில் (1)

சுதந்திரத்தில் ஆசை இன்று தோற்றினாள்-மன் வாழ்கவே –தேசீய:7 5/4
மேல்

சுதந்திரத்தின் (1)

மண்ணில் இன்பங்களை விரும்பி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ –தேசீய:26 6/1
மேல்

சுதந்திரதேவி (1)

சுதந்திரதேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே –தேசீய:29 1/4
மேல்

சுதந்திரம் (15)

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ என்றும் –தேசீய:26 1/1
கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின் கைகட்டி பிழைப்பாரோ –தேசீய:26 5/2
இன்ப சுதந்திரம் நின் இன் அருளால் பெற்றது அன்றோ –தேசீய:27 9/1
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று –தேசீய:31 0/2
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் –தேசீய:31 2/1
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம் உனக்கு இல்லை மறந்திடடா –தேசீய:34 7/2
சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள் தொழும்புகள் எல்லாம் வீணாய் போச்சு இது –தேசீய:35 2/1
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார் –தேசீய:36 2/2
சமத்துவம் உடையார் சுதந்திரம் சார்ந்தவர் –தேசீய:42 1/180
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீர –தேசீய:42 1/186,187
பொன் உயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய் சுதந்திரம் பூண்டது ஆகி –தேசீய:50 10/3
மாதர்க்கு உண்டு சுதந்திரம் என்று நின் வண் மலர் திருவாயின் மொழிந்த சொல் – பல்வகை:4 2/1
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல் அறம் வீர சுதந்திரம்
பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம் பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ – பல்வகை:4 4/3,4
ஐயம் விஞ்சி சுதந்திரம் நீங்கி என் அறிவு வாரி துரும்பு என்று அலைந்ததால் – சுயசரிதை:1 28/4
சுதந்திரம் பெரும் போர் ஓர்கால் தொடங்குமேல் – பிற்சேர்க்கை:28 1/3
மேல்

சுதந்திரமும் (1)

தோற்று தமது சுதந்திரமும் வைத்து இழந்தார் – பாஞ்சாலி:4 252/93
மேல்

சுதந்திரை (1)

நடுங்குவராயினர் நகைத்தனள் சுதந்திரை
ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறு –தேசீய:42 1/140,141
மேல்

சுதியில் (2)

சொல்ல நாவு கனியுதடா நல் சுதியில் ஒத்து துணையொடும் பாடி – தனி:14 5/3
சொல்ல நாவில் இனிக்குதடா வான் சுழலும் அண்ட திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை ஆடும் செல்வம் போல் ஒரு செல்வம் இங்கு உண்டோ – தனி:14 6/3,4
மேல்

சுதியும் (1)

பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள் பன்னி உபசரணை பேசுவது உண்டோ – கண்ணன்:19 3/2
மேல்

சுந்தர (2)

சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் –தேசீய:5 5/2
சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னகைதான் – கண்ணன்:16 2/1
மேல்

சுந்தரமாம் (1)

சொல்லை இசைத்து பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார் – பாஞ்சாலி:1 110/4
மேல்

சுந்தரி (1)

சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினை கண்டு என்றன் – தோத்திர:64 5/2
மேல்

சுப்பராமன் (2)

தோமறு சுப்பராமன் நல் பெயரோன் – தனி:20 1/22
என் அகம்நின்று அகலாதோன் அருள் சுப்பராமன் எனும் இணையிலா விற்பன்னனொடு – தனி:20 2/3
மேல்

சுப்பிரமண்ணியனை (1)

தூய பெரும் கனலை சுப்பிரமண்ணியனை
நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கி துயர் வருமோ – தோத்திர:76 5/1,2
மேல்

சுப்பிரமணியர்க்கு (1)

பணி சுப்பிரமணியர்க்கு அருள் – பிற்சேர்க்கை:18 1/4
மேல்

சுப்ரமண்யபாரதி (1)

என புகழ் வளரும் சுப்ரமண்யபாரதி தான் சமைத்த தூக்கு – தனி:22 4/4
மேல்

சுபத்திரை (1)

பொன் அவிர் மேனி சுபத்திரை மாதை புறங்கொண்டு போவதற்கே இனி – கண்ணன்:1 1/1
மேல்

சும்மா (2)

வாயை திறந்து சும்மா கிளியே –தேசீய:40 18/2
இல்லாவிட்டால் முகத்தை தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களை போல – வசனகவிதை:4 1/15
மேல்

சுமக்கிறாய் (1)

இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான் – சுயசரிதை:2 31/2
மேல்

சுமக்கின்றேன் (1)

புன்னகைபூத்து ஆரியனும் புகலுகின்றான் புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தின் உள்ளே – சுயசரிதை:2 31/1
மேல்

சுமக்கும் (1)

வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை – தோத்திர:6 1/2
மேல்

சுமடர் (1)

சுமடர் சடசடவென்று சரிந்திட்டார் புயல் காற்றும் சூறைதன்னில் –தேசீய:52 5/3
மேல்

சுமந்தனவாய் (1)

மாடுகள் பூட்டினவாய் பல வகைப்படு தானியம் சுமந்தனவாய்
ஈடுறு வண்டி கொண்டே பலர் எய்தினர் கரும்புகள் பல கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 35/2,3
மேல்

சுமந்திடுவது (1)

முற்றும் இது பித்தருடை செய்கை அன்றோ மூட்டை சுமந்திடுவது என்னே மொழிவாய் என்றேன் – சுயசரிதை:2 30/4
மேல்

சுமந்து (1)

ஆவியில் இனியவளை உயிர்த்து அணி சுமந்து உலவிடு செய் அமுதை – பாஞ்சாலி:4 243/2
மேல்

சுமந்துகொண்டு (2)

கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாத கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான் – சுயசரிதை:2 30/2
மகரந்தத்தூளை சுமந்துகொண்டு மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா – வசனகவிதை:4 6/2
மேல்

சுமை (3)

சுமை என பொறுப்பின் செயத்தினுக்கு அதுவே சூழ்ச்சியாம் என்பதை அறிந்தும் –தேசீய:50 8/4
சொல்லடி சிவசக்தி நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ – தோத்திர:13 1/4
நின் மேல் சுமை முழுதும் நேராக போட்டுவிட்டேன் – குயில்:8 1/60
மேல்

சுமையினுக்கு (1)

சுமையினுக்கு இளைத்திடேல் – பல்வகை:1 2/29
மேல்

சுமையும் (1)

மிஞ்சு புற சுமையும் வீர திருவாலும் – குயில்:7 1/24
மேல்

சுயநல (1)

வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

சுயராஜ்ய (1)

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய் விதை தூவினாய் –தேசீய:38 6/1
மேல்

சுயாதீனம் (1)

வான மழை இல்லையென்றால் வாழ்வு உண்டோ எந்தை சுயாதீனம்
எமக்கு இல்லையென்றால் தீனர் எது செய்வோமே –தேசீய:27 10/1,2
மேல்

சுயோதன (1)

சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/2
மேல்

சுயோதனன் (8)

என்று சுயோதனன் கூறியே நெஞ்சம் ஈர்ந்திட கண்ட சகுனிதான் அட – பாஞ்சாலி:1 53/1
இங்கு இது கேட்ட சுயோதனன் மிக இங்கிதம் சொல்லினை மாமனே என்று – பாஞ்சாலி:1 57/1
கொல்ல கருதி சுயோதனன் முன்பு சூத்திரமான சதி பல செய்தான் – பாஞ்சாலி:1 127/1
முன்பு சுயோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் கொடுங்கோலமும் இதன் – பாஞ்சாலி:1 137/3
பொங்கி எழுந்து சுயோதனன் அங்கு பூதல மன்னர்க்கு சொல்லுவான் ஒளி – பாஞ்சாலி:3 239/1
நன்றுநன்று என்று சுயோதனன் சிறு நாய் ஒன்று தேன் கலசத்தினை எண்ணி – பாஞ்சாலி:3 242/2
உள்ளம் துடித்து சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட – பாஞ்சாலி:4 253/1
ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன் மன்னர் – பாஞ்சாலி:5 270/1
மேல்

சுயோதனன்தன்னை (1)

நன்று நமக்கு நினைப்பவனல்லன் நம்பல் அரிது சுயோதனன்தன்னை – பாஞ்சாலி:1 126/4
மேல்

சுயோதனன்றன் (1)

மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால் என்றிட்டான் – பாஞ்சாலி:4 252/102
மேல்

சுயோதனனாம் (1)

முற்றும் சாதி சுயோதனனாம் ஓர் மூடற்காக முழுகிடலாமோ – பாஞ்சாலி:2 200/2
மேல்

சுயோதனாதியரை (1)

அறத்தினை பிரிந்த சுயோதனாதியரை
செறுத்து இனி மாய்ப்பது தீமை என்கின்றாய் –தேசீய:32 1/160,161
மேல்

சுரக்க (1)

விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

சுரக்கும் (1)

துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி – சுயசரிதை:2 38/2
மேல்

சுரத்திடை (1)

சுரத்திடை இன் நீர் சுனையது போன்றும் – தனி:20 1/14
மேல்

சுரந்து (1)

சோதிமணி முகத்தினளை செல்வம் எல்லாம் சுரந்து அருளும் விழியாளை திருவை மார்பில் – சுயசரிதை:2 50/2
மேல்

சுரம் (1)

என்னை புதியது ஓர் இன்ப சுரம் கவர – குயில்:3 1/52
மேல்

சுரர் (6)

பெரும் புகழ் சேரவே முனிநாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட இருள் பார மலைகளை சீறுவான் மறை – தோத்திர:5 2/2,3
குளிர் சுவை பாட்டு இசைத்தே சுரர் குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம் – தோத்திர:11 4/4
துக்கம் கெடுத்தான் சுரர் ஒக்கலும் வந்தார் சுடர் சூரியன் இந்திரன் வாயு மருத்துக்கள் – தோத்திர:49 2/2
மிக்க திரளாய் சுரர் இக்கணம்தன்னில் இங்கு மேவி நிறைந்தனர் பாவி அசுரர்கள் – தோத்திர:49 2/3
சுண்ணமும் நறும் புகையும் சுரர் துய்ப்பதற்கு உரிய பல் பண்டங்களும் – பாஞ்சாலி:1 13/3
சுரர் தமனியன் மால் தொழும் கால் கிரீடத்து – பிற்சேர்க்கை:12 1/3
மேல்

சுருக்கி (1)

ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கி சொல்வேன் – சுயசரிதை:2 22/3
மேல்

சுருக்கிடேல் (1)

நெற்றி சுருக்கிடேல்
நேர்பட பேசு – பல்வகை:1 2/60,61
மேல்

சுருங்க (1)

நெற்றி சுருங்க கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ – கண்ணன்:8 6/2
மேல்

சுருங்குகின்றனரே (1)

சுருங்குகின்றனரே அவர் துன்பத்தை நீக்க வழி இல்லையோ ஒரு –தேசீய:53 1/3
மேல்

சுருங்குது (1)

தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது – பல்வகை:11 5/3
மேல்

சுருதி (6)

சுருதி பொருளே வருக துணிவே கனலே வருக – தோத்திர:2 3/1
சுருதி கருதி கவலைப்படுவார் கவலை கடலை கடியும் வடிவேல் – தோத்திர:2 3/2
சுடரும் நின்றன் வடிவை உட்கொண்டே சுருதி பாடி புகழ்கின்றது இங்கே – தோத்திர:70 1/4
துச்சமென பிறர் பொருளை கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் என சுருதி சொல்லும் – சுயசரிதை:2 7/3
தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார் – சுயசரிதை:2 42/4
மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே இவர் – பாஞ்சாலி:1 153/3
மேல்

சுருதிகள் (2)

சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே –தேசீய:11 3/3
சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ பல –வேதாந்த:10 3/1
மேல்

சுருதிசேர்த்துவிட்டது (1)

பிடாரன் குழலையும் தொம்ப குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது சக்தி – வசனகவிதை:3 7/11
மேல்

சுருதியாம் (1)

துதிகள் சொல்லும் விதுரன் மொழியை சுருதியாம் என கொண்டனை நீதான் – பாஞ்சாலி:1 98/3
மேல்

சுருதியில் (1)

ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் அதே சுருதியில்
ஆ பொருள் கண்டுகொண்டேன் – வசனகவிதை:3 7/12,13
மேல்

சுருதியின் (1)

சோர்வோடு வீழ்ந்தனன் சுருதியின் முடிவாய் –தேசீய:32 1/156
மேல்

சுருதியின்கண் (1)

சுருதியின்கண் முனிவரும் பின்னே தூ மொழி புலவோர் பலர் தாமும் – தோத்திர:69 1/1
மேல்

சுருதியும் (1)

சுருதியும் அரிய உபநிடதத்தின் தொகுதியும் பழுதற உணர்ந்தோன் – தனி:18 1/1
மேல்

சுருதியை (1)

தாமரை பூவினிலே சுருதியை தனி இருந்து உரைப்பாள் – தோத்திர:65 4/1
மேல்

சுருள் (3)

சுருள் அலை வெள்ளம் போல தொகையிலா படைகள் கொண்டே –தேசீய:51 6/2
சிறிய தொண்டுகள் தீர்த்து அடிமை சுருள் தீயில் இட்டு பொசுக்கிட வேண்டுமாம் – பல்வகை:4 3/3
அவ்விதமாக பல வகைகளில் மாற்றி சுருள் சுருளாக வாசித்துக்கொண்டு போகிறான் – வசனகவிதை:3 6/10
மேல்

சுருளாக (1)

அவ்விதமாக பல வகைகளில் மாற்றி சுருள் சுருளாக வாசித்துக்கொண்டு போகிறான் – வசனகவிதை:3 6/10
மேல்

சுருளுக்கு (1)

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையை தொழுது நிற்பேன் – தனி:17 1/4
மேல்

சுவடி (1)

சூழ்ந்திருக்கும் பண்டை சுவடி எழுதுகோல் – குயில்:9 1/254
மேல்

சுவடியை (1)

போலி சுவடியை எல்லாம் இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டு என்பான் – கண்ணன்:3 8/4
மேல்

சுவர் (3)

இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ –தேசீய:52 6/4
வாசியை நீ கும்பகத்தால் வலிய கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் – சுயசரிதை:2 28/2
மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் – கண்ணன்:11 4/3
மேல்

சுவர்கள் (1)

பக்கத்து வீடு இடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனை ஒன்று இருந்தது அங்கே பரமயோகி – சுயசரிதை:2 27/1
மேல்

சுவை (29)

சாகும் பொழுதில் இரு செவி குண்டலம் தந்தது எவர் கொடை கை சுவை
பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும் பாரதராணியின் கை –தேசீய:8 7/1,2
தெள்ளு தமிழ் புலவோர்கள் பல தீம் சுவை காவியம் செய்துகொடுத்தார் –தேசீய:21 3/2
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார் –தேசீய:22 4/4
பண்டை சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவை
தெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிட செய்குவையே – தோத்திர:1 30/3,4
குளிர் சுவை பாட்டு இசைத்தே சுரர் குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம் – தோத்திர:11 4/4
பண்ண பெரு நிதியம் வேண்டும் அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும் சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல – தோத்திர:32 7/2,3
பண்ணில் இனிய சுவை பரந்த மொழியினாள் – தோத்திர:54 2/7
சித்திர மாளிகை பொன் ஒளிர் மாடங்கள் தேவ திருமகளிர் இன்பம் தேக்கிடும் தேன் இசைகள் சுவை தேறிடும் நல் இளமை நல்ல – தோத்திர:74 7/1
மட்டுப்படாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ் வான் ஒளி என்னும் மதுவின் சுவை உண்டு –வேதாந்த:3 1/2
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/4
கவிதையும் அரும் சுவை கான நூலும் – தனி:20 1/1
சுவை மிகுந்த பண் வளனும் அகன்றது என பகரலாமே – தனி:20 2/4
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
கன்னலிலே சுவை அறியும் குழந்தைகள் போல் தமிழ் சுவை நீ களித்தாய் அன்றே – தனி:22 5/4
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/3
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/2
கொன்றிடும் என இனிதாய் இன்ப கொடு நெருப்பாய் அனல் சுவை அமுதாய் – கண்ணன்:2 7/3
சோர்ந்தே படுத்திருக்கலாமோ நல்ல துண்ட கறி சமைத்து தின்போம் சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் நல்ல தேம் கள் உண்டு இனிது களிப்போம் – கண்ணன்:12 7/1,2
நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை நைந்த பழங்கதைகள் நான் உரைப்பதோ – கண்ணன்:19 3/1
கற்பனை தேன் இதழாள் சுவை காவியம் எனும் மணி கொங்கையினாள் – பாஞ்சாலி:1 5/1
சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதின் சுவை அறிவார் – பாஞ்சாலி:1 5/3
உண்ப சுவை இன்றி உண்கின்றான் பின் உடுப்பது இகழ உடுக்கின்றான் பழ – பாஞ்சாலி:1 59/1
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர் – பாஞ்சாலி:1 86/3
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும் – குயில்:3 1/37
நீச குயிலும் நெருப்பு சுவை குரலில் – குயில்:5 1/55
சுவை நன்று உயிர் நன்று நன்று நன்று – வசனகவிதை:1 6/18
நீ அமுதம் நீ சுவை
நீ நன்று நீ இன்பம் – வசனகவிதை:1 7/8,9
ஸோம பாலும் இவ் அமிழ்தமும் ஓர் சுவை – வசனகவிதை:7 0/28
வாரமுறும் சுவை இன் நறவு உண் கனி வான் மருந்து எனவே மாண் உயர் பாரததேவி விரும்பிடும் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 2/4
மேல்

சுவைக்கே (1)

எண்ணியெண்ணி பார்த்திடில் ஓர் எண்ணம் இலை நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா – கண்ணன்:21 4/3,4
மேல்

சுவைகண்டு (2)

சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்து – தனி:22 5/3
சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்து – தனி:22 5/3
மேல்

சுவைத்து (1)

துன்றும் உவகையில் வெற்றுநாவினை தோய்த்து சுவைத்து மகிழ்தல் போல் அவன் – பாஞ்சாலி:3 242/3
மேல்

சுவைதரும் (1)

துன்னற்கு இனியதுவாய் நல்ல சுவைதரும் நீருடை யமுனை எனும் – பாஞ்சாலி:1 15/2
மேல்

சுவைதான் (1)

மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய் – குயில்:1 1/18
மேல்

சுவைப்பது (1)

சக்தி முகர்வது சுவைப்பது தீண்டுவது கேட்பது காண்பது – வசனகவிதை:3 1/24
மேல்

சுவைபெற்று (1)

செம்பரிதி ஒளிபெற்றான் பைம் நறவு சுவைபெற்று திகழ்ந்தது ஆங்கண் – தனி:21 1/1
மேல்

சுவையதனை (1)

பாட்டின் சுவையதனை பாம்பு அறியும் என்று உரைப்பார் – குயில்:5 1/58
மேல்

சுவையதில் (1)

ஈர சுவையதில் ஊறி வரும் அதில் இன்புறுவாய் மனமே – தனி:3 2/2
மேல்

சுவையுடைய (1)

மிக்க நலமுடைய மரங்கள் பல விந்தை சுவையுடைய கனிகள் எந்த – கண்ணன்:12 1/1
மேல்

சுவையுடையது (1)

உயிர் சுவையுடையது
மனம் தேன் அறிவு தேன் உணர்வு அமுதம் – வசனகவிதை:1 2/2,3
மேல்

சுவையும் (2)

கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும் – தோத்திர:10 1/3
கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள் – கண்ணன்:2 6/4
மேல்

சுவையுறு (1)

கனியே சுவையுறு தேனே – தோத்திர:8 1/3
மேல்

சுவையே (5)

தீம் பழம்தன்னில் சுவையே சக்தி தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி – தோத்திர:21 2/2
எல்லையற்ற சுவையே எனை நீ என்றும் வாழவைப்பாய் – தோத்திர:57 5/4
ஊனமறு நல் அழகே ஊறு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 3/4
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா – கண்ணன்:21 5/4
போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீம் சுவையே
நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா – கண்ணன்:21 6/3,4
மேல்

சுழல்கின்றது (3)

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது
அவள் தீராத உயிருடையவள் பூமித்தாய் – வசனகவிதை:4 13/12,13
சந்திரன் சுழல்கின்றது ஞாயிறு சுழல்கின்றது – வசனகவிதை:4 13/16
சந்திரன் சுழல்கின்றது ஞாயிறு சுழல்கின்றது
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/16,17
மேல்

சுழல்கின்றன (2)

அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன
அவனுடைய சக்தி எல்லையை என்றும் கடந்துசெல்லமாட்டா – வசனகவிதை:2 10/14,15
பாலைவனத்து மணல்கள் எல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன
ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது – வசனகவிதை:4 4/6,7
மேல்

சுழல்வது (1)

கனாக்காண்பது கற்பனைபுரிவது தேடுவது சுழல்வது
பற்றி நிற்பது எண்ணமிடுவது பகுத்து அறிவது – வசனகவிதை:3 1/26,27
மேல்

சுழல (1)

அடிவானத்தே அங்கு பரிதி கோளம் அளப்பரிய விரைவினொடு சுழல காண்பாய் – பாஞ்சாலி:1 150/1
மேல்

சுழலுகிறது (1)

அகில முழுதும் சுழலுகிறது
சந்திரன் சுழல்கின்றது ஞாயிறு சுழல்கின்றது – வசனகவிதை:4 13/15,16
மேல்

சுழலுகின்றான் (1)

ஓலமிடுகின்றான் சுழலுகின்றான் துடிக்கின்றான் – வசனகவிதை:2 9/12
மேல்

சுழலும் (5)

சொல்ல நாவில் இனிக்குதடா வான் சுழலும் அண்ட திரளின் சுதியில் – தனி:14 6/3
இடையின்றி அணுக்கள் எலாம் சுழலும் என இயல்நூலார் இசைத்தல் கேட்டோம் – பாஞ்சாலி:3 206/1
இடையின்றி கதிர்கள் எலாம் சுழலும் என வானூலார் இயம்புகின்றார் – பாஞ்சாலி:3 206/2
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/2
ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/2
மேல்

சுழலுவதை (1)

வடிவானதொன்றாக தகடு இரண்டு வட்டமுற சுழலுவதை வளைந்து காண்பாய் – பாஞ்சாலி:1 150/4
மேல்

சுழற்காற்று (1)

பூமியதிர்ச்சி உண்டாச்சு விண்ணை பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று
சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும் – பாஞ்சாலி:5 308/2,3
மேல்

சுழற்சியிலே (1)

விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/2
மேல்

சுழற்றும் (1)

பட்டு துகில் எனலாமோ அதில் பாய்ந்து சுழற்றும் பெரும் புயல் காற்று –தேசீய:14 2/1
மேல்

சுழற்றுவதன் (1)

முடிவான வட்டத்தை காளி ஆங்கே மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய் – பாஞ்சாலி:1 150/3
மேல்

சுழற்றுவது (2)

புடைப்பது வீசுவது சுழற்றுவது
கட்டுவது சிதறடிப்பது தூற்றுவது – வசனகவிதை:3 1/7,8
எற்றுகிற சக்தி புடைக்கிற சக்தி மோதுகிற சக்தி சுழற்றுவது ஊதுவது – வசனகவிதை:4 11/2
மேல்

சுழற்றுவோன் (1)

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான் அவை பிழையாமே சுழற்றுவோன் நான் –வேதாந்த:13 6/1
மேல்

சுழற்றுவோன்தன் (1)

கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன் கணக்கில் சுழன்றிடும் சக்கரம் அது – பாஞ்சாலி:1 138/1
மேல்

சுழன்றிடும் (1)

கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன் கணக்கில் சுழன்றிடும் சக்கரம் அது – பாஞ்சாலி:1 138/1
மேல்

சுழன்று (1)

நில்லாது சுழன்று ஓட நியமம்செய்து அருள் நாயகன் – தோத்திர:78 1/3
மேல்

சுழன்றுகொண்டே (1)

வானத்து மீன்கள் எல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன – வசனகவிதை:4 13/18
மேல்

சுழிகளும் (1)

தத்துகின்ற திரையும் சுழிகளும் தாக்கி எற்றிடும் காற்றும் உள்ளோட்டமும் – தோத்திர:34 6/2
மேல்

சுளை (1)

பலாவின் கனி சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ – தனி:3 1/4
மேல்

சுற்றத்தார் (1)

சுற்றத்தார் இவர் என்றனை ஐயா தோற்றத்தாலும் பிறவியினாலும் – பாஞ்சாலி:1 102/1
மேல்

சுற்றத்திலே (1)

சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில் – பாஞ்சாலி:1 72/1
மேல்

சுற்றம் (3)

சுற்றம் இங்கு அறுத்து சுகம் பெறல் விரும்பேன் –தேசீய:32 1/151
சுற்றம் கொல்வேனோ என்றன் – தோத்திர:68 20/1
சுற்றம் கொல்வேனோ கிளை – தோத்திர:68 20/2
மேல்

சுற்றமும் (1)

சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் –தேசீய:32 1/178
மேல்

சுற்றி (11)

சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் – தோத்திர:65 3/2
சுற்றி இருக்கும் சுனைகளும் பொய்கையும் – தோத்திர:68 2/3
சுற்றி மார்பில் அருள் மது உண்டே தோகை சக்தியொடு இன்புற்று வாழ்வோம் – தனி:14 4/4
யாவன் நீ நினக்குள்ள திறமை என்னே யாது உணர்வாய் கந்தை சுற்றி திரிவது என்னே – சுயசரிதை:2 25/1
நாடு முழுதிலும் சுற்றி நான் பல நாள்கள் அலைந்திடும் போதினில் நிறைந்து – கண்ணன்:7 2/1
ஒன்பது வாயில் குடிலினை சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே – கண்ணன்:22 9/1
கோணம் எலாம் சுற்றி மர கொம்பை எலாம் நோக்கி வந்தேன் – குயில்:4 1/27
காடு எல்லாம் சுற்றி வந்து காற்றிலே எற்றுண்டு – குயில்:7 1/33
கானிடையே சுற்றி கழனி எலாம் மேய்ந்து நீர் – குயில்:7 1/54
காடு மலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் – குயில்:9 1/188
பல நாடு சுற்றி வந்தோம் பல கலைகள் கற்று வந்தோம் இங்கு பற்பல – பிற்சேர்க்கை:11 5/1
மேல்

சுற்றிச்சுற்றி (1)

தூண்டும் அருளால் யாம் ஓர் விளக்கை அவித்தால் அதுதான் சுற்றிச்சுற்றி
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி – பிற்சேர்க்கை:7 4/2,3
மேல்

சுற்று (1)

சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/3
மேல்

சுற்றுகின்றார் (1)

நின்னுடனே சுற்றுகின்றார் நீ இதனை தேர்கிலையோ – குயில்:9 1/192
மேல்

சுற்றும் (3)

கானகத்தே சுற்றும் நாளிலும் நெஞ்சில் கலக்கம் இலாது செய்வான் பெரும் – கண்ணன்:1 2/1
தப்பி மிகையும் குறையுமா சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை – பாஞ்சாலி:1 138/2
தூ இழை பொனாடை சுற்றும் தொண்டர்தம்மை வைத்தான் – பாஞ்சாலி:2 191/4
மேல்

சுற்றுமுற்றும் (3)

சுற்றுமுற்றும் பார்த்து பின் முறுவல் பூத்தான் தூய திருக்கமல பத துணையை பார்த்தேன் – சுயசரிதை:2 26/2
சுற்றுமுற்றும் பார்த்து துடித்து வருகையிலே – குயில்:5 1/2
சோலையினில் வந்து நின்று சுற்றுமுற்றும் தேடினேன் – குயில்:7 1/3
மேல்

சுற்றுவேன் (1)

சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் உறாமல் காப்பேன் – கண்ணன்:4 1/23
மேல்

சுறவுகள் (1)

சுறவுகள் மீன் வகைகள் என தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள் – கண்ணன்:2 8/3
மேல்

சுறுக்கெனவே (1)

துரியோதனனும் சுறுக்கெனவே தான் திரும்பி – பாஞ்சாலி:4 252/35
மேல்

சுறுசுறுப்பு (1)

தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது – பல்வகை:11 5/3
மேல்

சுனை (4)

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே தென்றல் –தேசீய:4 7/1
ஒண்மையும் ஊக்கமும்தான் என்றும் ஊறிடும் திருவருள் சுனை ஆவாய் – தோத்திர:11 3/3
நீர் சுனை கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள – தனி:10 4/1
நீரினை நித்தலும் காக்குமாம் இந்த நீள் சுனை போல்வர் பலர் உண்டே எனில் – பாஞ்சாலி:1 70/2
மேல்

சுனைகள் (2)

இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல் – தோத்திர:62 9/1
வஞ்சித்திடும் அகழி சுனைகள் முட்கள் மண்டி துயர்கொடுக்கும் புதர்கள் – கண்ணன்:12 2/2
மேல்

சுனைகளில் (1)

சுனைகளில் உன் மணி சொற்கள் போல் தண்ணிய – தனி:13 1/12
மேல்

சுனைகளும் (3)

தூ திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் –தேசீய:32 1/31
தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை – தோத்திர:34 5/2
சுற்றி இருக்கும் சுனைகளும் பொய்கையும் – தோத்திர:68 2/3
மேல்

சுனையது (1)

சுரத்திடை இன் நீர் சுனையது போன்றும் – தனி:20 1/14
மேல்