ஏ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 2
ஏஎ 1
ஏக்கமுற 2
ஏக்குற்று 1
ஏக 3
ஏகத்து 1
ஏகமோ 1
ஏகலவியனே 1
ஏகலாமோ 1
ஏகாந்தத்து 1
ஏகாமிர்தம் 1
ஏகி 9
ஏகிடவே 1
ஏகிடின் 1
ஏகிடு 1
ஏகிடுவாள் 1
ஏகிடுவான் 1
ஏகிவிட்டான் 1
ஏகிற்றால் 1
ஏகினர் 2
ஏகினன் 1
ஏகினும் 1
ஏகுக 1
ஏகுதிர் 1
ஏகும் 1
ஏகுமோ 2
ஏகுவம் 1
ஏகுவாய் 1
ஏகுவார் 1
ஏஹோவா 1
ஏங்கவிட்டு 1
ஏங்காமல் 1
ஏங்கி 3
ஏங்கிடுவான் 1
ஏங்குகின்ற 1
ஏங்குகின்றார் 1
ஏங்குவம் 1
ஏச்சிற்கு 1
ஏச்சு 1
ஏச்சுக்கள் 1
ஏச்சையும் 1
ஏச 1
ஏசி 1
ஏசினாய் 1
ஏசு 1
ஏசுவின் 1
ஏட்டை 2
ஏட்டையும் 1
ஏடா 2
ஏடி 2
ஏடீ 1
ஏடு 2
ஏடுகள் 1
ஏடுகளை 1
ஏணி 1
ஏத்தி 3
ஏத்திட 1
ஏத்து 1
ஏத்தும் 4
ஏத்துவாம் 1
ஏத்துவேன் 1
ஏத்துவோன் 1
ஏதடா 2
ஏதடி 1
ஏதமின்றி 1
ஏதமே 1
ஏதாயினும் 1
ஏதிலார் 1
ஏதினும் 1
ஏது 27
ஏதுக்கடீ 1
ஏதுக்காம் 1
ஏதுக்கு 2
ஏதுதான் 2
ஏதும் 22
ஏதுரைகள் 1
ஏதெது 1
ஏதெல்லாம் 2
ஏதெலாம் 1
ஏதெனில் 1
ஏதெனிலும் 2
ஏதெனினும் 1
ஏதேதோ 3
ஏதேனும் 1
ஏதையா 1
ஏதோ 3
ஏந்தல் 1
ஏந்தலே 1
ஏந்தி 3
ஏந்திட 2
ஏந்திநின்றான் 1
ஏந்திய 3
ஏந்திழையாளும் 1
ஏந்திழையை 1
ஏந்தினான் 1
ஏந்து 1
ஏந்தும் 1
ஏமாந்துபோகிறோம் 1
ஏமாற்றும் 1
ஏமாறி 1
ஏய் 1
ஏய்க்கிறோமோ 1
ஏய்ந்தவரே 1
ஏய்ந்தனை 1
ஏய்ந்து 1
ஏய்ப்போருக்கு 1
ஏர் 1
ஏரி 1
ஏரியிலும் 1
ஏலத்தில் 1
ஏலம் 1
ஏலு 1
ஏவல் 3
ஏவல்கள் 1
ஏவல்செய 1
ஏவல்பெண் 1
ஏவலுக்கே 1
ஏவலை 1
ஏவாமுன்னர் 1
ஏவியிருக்கிறாளா 1
ஏவினாய் 1
ஏவுகின்றான் 1
ஏழ் 2
ஏழ்மை 1
ஏழிரு 1
ஏழு 4
ஏழும் 1
ஏழுலகினையும் 1
ஏழுலகு 1
ஏழெட்டு 1
ஏழேழ் 1
ஏழை 12
ஏழைக்கு 1
ஏழைக்கும் 1
ஏழைகள் 2
ஏழைகளை 1
ஏழைதான் 1
ஏழைப்பட்டு 1
ஏழைமை 1
ஏழையம் 1
ஏழையர் 1
ஏழையர்க்கு 3
ஏழையாகி 1
ஏழையும் 2
ஏழையேற்கு 1
ஏழையேன் 3
ஏளனம் 1
ஏளனம்புரியும் 1
ஏற்கும் 1
ஏற்குமோ 1
ஏற்பட்டிருக்கின்றது 1
ஏற்பாரை 1
ஏற்ற 4
ஏற்றத்தை 1
ஏற்றது 1
ஏற்றதொரு 1
ஏற்றதோர் 1
ஏற்றப்படுகின்றது 1
ஏற்றம் 7
ஏற்றமும் 3
ஏற்றமுறவே 1
ஏற்றாய் 1
ஏற்றார் 1
ஏற்றாள் 1
ஏற்றான் 1
ஏற்றி 6
ஏற்றிடுவாய் 1
ஏற்றிருப்பாள் 1
ஏற்றிவைக்கிறோம் 1
ஏற்றிவைத்த 1
ஏற்றினிலே 1
ஏற்று 5
ஏற்றும் 2
ஏற்றுவார் 1
ஏற்றுவீர் 1
ஏற 6
ஏறல் 1
ஏறி 27
ஏறிக்கொண்டாள் 1
ஏறிக்கொண்டான் 1
ஏறிட்டு 1
ஏறியார்தமை 1
ஏறியோர் 1
ஏறிவரும் 1
ஏறிவிட்டது 1
ஏறிவிட்டால் 1
ஏறு 9
ஏறுகிறது 1
ஏறுகின்றாரால் 1
ஏறுதடீ 1
ஏறுதி 1
ஏறுதே 1
ஏறும் 5
ஏறுமே 1
ஏறுவதோ 1
ஏறுவாயோ 1
ஏறுவான் 1
ஏறுவோம் 1
ஏன் 19
ஏன்றவாறு 1
ஏனடா 3
ஏனெனில் 1
ஏனைய 1

ஏ (2)

ஏ ஏ அஃது உமக்கு இசையாது என்பர் –தேசீய:24 1/86
ஏ ஏ அஃது உமக்கு இசையாது என்பர் –தேசீய:24 1/86
மேல்

ஏஎ (1)

ஏஎ
வலியரே போலும் இவ் வஞ்சக அரக்கர் – வசனகவிதை:7 0/66,67
மேல்

ஏக்கமுற (2)

என்பு உடைபட்ட பொழுதும் நெஞ்சில் ஏக்கமுற பொறுப்பவர்தம்மை உகப்பான் – கண்ணன்:3 10/3
என்று பல எண்ணி ஏக்கமுற பாடிற்றால் – குயில்:1 1/31
மேல்

ஏக்குற்று (1)

ஏனடா நீ கரையில் ஏக்குற்று நிற்கின்றாய் – பிற்சேர்க்கை:25 4/1
மேல்

ஏக (3)

ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டும் என்றே – தோத்திர:22 3/2
பெருகு சீர்த்தி அ கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏக
திருகு நெஞ்ச சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே – பாஞ்சாலி:2 203/2,3
ஏக மவுனம் இயன்றது காண் மற்று அதில் ஓர் – குயில்:3 1/2
மேல்

ஏகத்து (1)

ஏகத்து இருந்து உலகம் இங்கு உள்ள யாவையும் செய்பவளே – தோத்திர:14 1/4
மேல்

ஏகமோ (1)

ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ என்றேன் இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள் – தனி:9 2/2
மேல்

ஏகலவியனே (1)

பற்றலர் அஞ்சும் பெரும் புகழ் ஏகலவியனே செம்பொன் பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும் – பாஞ்சாலி:1 50/3
மேல்

ஏகலாமோ (1)

நாணி ஏகலாமோ என்னை நன்கு அறிந்திலாயோ – தோத்திர:57 3/2
மேல்

ஏகாந்தத்து (1)

என்றுமே இ பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே –வேதாந்த:11 14/2
மேல்

ஏகாமிர்தம் (1)

ஏகாமிர்தம் ஆகிய நின் தாள் இணை சரண் என்றால் இது முடியாதா – தோத்திர:43 1/2
மேல்

ஏகி (9)

இவனையும் கோயிலுள் இனிது அழைத்து ஏகி
இரண்டாம் பலி முடித்து ஈண்டினன் குரவன் –தேசீய:42 1/73,74
அடிநா முள்ளினை அயல் சிறிது ஏகி
களைந்து பின் வந்து காண் பொழுது ஐயகோ – தனி:13 1/22,23
கோத்த சிந்தனையோடு ஏகி அதில் மகிழ்கொண்டு நாட்கள் பல கழித்திட்டனன் – சுயசரிதை:1 10/3
மங்கைதனை காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே – சுயசரிதை:2 51/2
ஈன மனித கனவு எலாம் எங்ஙன் ஏகி மறைந்தது கண்டிலேன் அறிவான – கண்ணன்:7 12/3
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான் தக்க பரிசுகள் கொண்டு இனிது ஏகி
எம்பியின் மக்கள் இருந்து அரசாளும் இந்திரமாநகர் சார்ந்து அவர்தம்பால் – பாஞ்சாலி:1 111/1,2
நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகி திரும்பிய பின்னர் – பாஞ்சாலி:1 112/2
ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னை – பாஞ்சாலி:4 261/2
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி
தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தால் அன்னாய் நீ செய்வது என்னே – பிற்சேர்க்கை:7 4/3,4
மேல்

ஏகிடவே (1)

இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள் இன் அமுதை கவர்ந்து ஏகிடவே
பிச்சை இங்கு எமக்கு அளித்தாய் ஒரு பெருநகர் உடல் எனும் பெயரினதாம் – தோத்திர:11 5/3,4
மேல்

ஏகிடின் (1)

இன்னம் ஒருகால் இளசைக்கு ஏகிடின் இவ் எளியன் மனம் என் படாதோ – தனி:20 4/4
மேல்

ஏகிடு (1)

இன்பம் எங்கண் உண்டோ அங்கே ஏகிடு என்று உரைத்தான் – பாஞ்சாலி:3 212/4
மேல்

ஏகிடுவாள் (1)

என்ன பிழைகள் கண்டோ அவள் என்னை புறக்கணித்து ஏகிடுவாள் அங்கு – தோத்திர:64 6/3
மேல்

ஏகிடுவான் (1)

அன்னியன் கொண்டு ஏகிடுவான் என்னும் அது கேட்டு – குயில்:9 1/44
மேல்

ஏகிவிட்டான் (1)

இன்னதொரு பழம் குப்பை சுமக்கிறாய் நீ என்று உரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான்
மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே – சுயசரிதை:2 31/2,3
மேல்

ஏகிற்றால் (1)

என்று சொல்லி அன்னம் பறந்து ஆங்கே ஏகிற்றால்
மன்று கலைந்து மறைந்தன அ புட்கள் எல்லாம் – தனி:1 27/1,2
மேல்

ஏகினர் (2)

சாதியின் நோய்க்கு தலையசைத்து ஏகினர்
என்பதே ஆகும் இஃது ஒரு சார்பாம் –தேசீய:24 1/92,93
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர்
வாங்கி உய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்த பின் யாது மதிப்பரோ – சுயசரிதை:1 39/3,4
மேல்

ஏகினன் (1)

இன்னான் தானும் எமை அகன்று ஏகினன்
என்னே நம்மவர் இயற்றிய பாவம் – தனி:20 1/24,25
மேல்

ஏகினும் (1)

துண்ணென வெம் சினம் எய்தியே அட சூதில் அரசு இழந்து ஏகினும் – பாஞ்சாலி:3 231/4
மேல்

ஏகுக (1)

என் நிலைமை கூறிடுவாய் ஏகுக நீ என்றிட்டாள் – பாஞ்சாலி:5 271/8
மேல்

ஏகுதிர் (1)

இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே –வேதாந்த:25 9/2
மேல்

ஏகும் (1)

சின்னஞ்சிறிய குருவி அது ஜிவ்வென்று விண்ணிடை ஊசலிட்டு ஏகும்
மன்ன பருந்து ஒர் இரண்டு மெல்ல வட்டமிட்டு பின் நெடுந்தொலை போகும் – தனி:2 2/2,3
மேல்

ஏகுமோ (2)

இதயத்துள்ளே இலங்கு மஹா பக்தி ஏகுமோ நெஞ்சம் வேகுமோ –தேசீய:39 7/2
தீமை அனைத்தும் இறந்து ஏகுமோ என்றன் சித்தம் தெளிவு நிலை கூடுமோ – தனி:11 2/2
மேல்

ஏகுவம் (1)

அன்னை நல் நாட்டின் மக்காள் ஏகுவம்
மன்னு புகழ் நாள் இதுவே – பிற்சேர்க்கை:27 1/1,2
மேல்

ஏகுவாய் (1)

ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த – பாஞ்சாலி:5 270/3
மேல்

ஏகுவார் (1)

களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலை சோதி கதிரவன் கோவிற்கே – பல்வகை:10 1/2
மேல்

ஏஹோவா (1)

பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும் – சுயசரிதை:2 64/4
மேல்

ஏங்கவிட்டு (1)

என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண் எய்திய தாய்தனை – சுயசரிதை:1 20/1
மேல்

ஏங்காமல் (1)

ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர் – சுயசரிதை:2 44/4
மேல்

ஏங்கி (3)

எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார் –தேசீய:15 3/4
பொருளிலார் பொருள்செய்தல் முதற்கடன் போற்றி காசினுக்கு ஏங்கி உயிர்விடும் – சுயசரிதை:1 43/3
என்று விதுரன் பெரும் துயர்கொண்டே ஏங்கி பல சொல் இயம்பிய பின்னர் – பாஞ்சாலி:1 114/1
மேல்

ஏங்கிடுவான் (1)

எண்ணும் முன்னே அன்னக்காவடி பிச்சை என்று ஏங்கிடுவான் குரலும் – தனி:3 5/4
மேல்

ஏங்குகின்ற (1)

இன்னும் இங்கு இருள் கூடியிருப்பினும் ஏங்குகின்ற நரகத்து உயிர்கள் போல் – பல்வகை:10 3/1
மேல்

ஏங்குகின்றார் (1)

மருந்து இதற்கு இலையோ செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்த –தேசீய:53 1/4
மேல்

ஏங்குவம் (1)

என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே –தேசீய:11 4/3
மேல்

ஏச்சிற்கு (1)

இடையன் வீரமிலாதவன் அஞ்சினோன் என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான் – கண்ணன்:5 3/2
மேல்

ஏச்சு (1)

மதம்பிடித்தது போல் ஆச்சு எங்கள் மனிதர்க்கு எல்லாம் வந்தது ஏச்சு –தேசீய:35 2/2
மேல்

ஏச்சுக்கள் (1)

என்னை பிடித்து இழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய் – பாஞ்சாலி:5 271/41
மேல்

ஏச்சையும் (1)

ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த ஏந்திழையாளும் எனை சிரித்தாள் இதை எண்ணுவாய் – பாஞ்சாலி:1 52/2
மேல்

ஏச (1)

சிறியர் பாதகர் என்று உலகு எல்லாம் சீ என்று ஏச உகந்து அரசாளும் – பாஞ்சாலி:2 204/3
மேல்

ஏசி (1)

இந்திராதி தேவர்தம்மை ஏசி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 4/1
மேல்

ஏசினாய் (1)

ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே ஏசினாய் வீரம் பேசினாய் –தேசீய:38 3/2
மேல்

ஏசு (1)

சக்தி அற்ற பேடிகளை ஏசு
சக்தி திருக்கோயில் உள்ளம் ஆக்கி அவள் – தோத்திர:26 4/2,3
மேல்

ஏசுவின் (1)

ஏசுவின் தந்தை என பல மதத்தினர் – பல்வகை:1 1/5
மேல்

ஏட்டை (2)

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல் – தோத்திர:62 5/3
ஏட்டை துடைப்பது கையாலே மனவீட்டை துடைப்பது மெய்யாலே –வேதாந்த:16 2/1
மேல்

ஏட்டையும் (1)

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார் – பல்வகை:6 2/1
மேல்

ஏடா (2)

இனையது கூறும் ஏடா நிற்க – தனி:13 1/48
ஏடா வீழ்ந்தனை யாவரும் வீழ்ந்தீர் – வசனகவிதை:7 0/44
மேல்

ஏடி (2)

வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன் – கண்ணன்:17 2/4
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய் எனக்கு எண்ணப்படுவதில்லை ஏடி கண்ணம்மா – கண்ணன்:19 1/4
மேல்

ஏடீ (1)

ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன் – கண்ணன்:12 10/1
மேல்

ஏடு (2)

ஏடு தரித்த முதல்வனும் குரு என்றிட மெய் புகழ் ஏறுவான் – தோத்திர:5 2/4
ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் அதை – தோத்திர:64 2/2
மேல்

ஏடுகள் (1)

இன்ப கதைகள் எல்லாம் உன்னை போல் ஏடுகள் சொல்வது உண்டோ – கண்ணன்:8 9/1
மேல்

ஏடுகளை (1)

புத்தகத்தின் ஏடுகளை கிழித்துவிட்டாய் – வசனகவிதை:4 9/6
மேல்

ஏணி (1)

ஏற தெரியாமல் ஏணி வைத்து சென்றாலும் – குயில்:5 1/39
மேல்

ஏத்தி (3)

முப்பொழுது ஏத்தி பணிவது முறையே – தோத்திர:1 16/20
என்று பணிந்து ஏத்தி பலவாறா நினது புகழ் பாடி வாய் – தோத்திர:32 2/3
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ – பல்வகை:4 9/4
மேல்

ஏத்திட (1)

நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/4
மேல்

ஏத்து (1)

வேளை ஒத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்து புகழும் – தோத்திர:31 7/2
மேல்

ஏத்தும் (4)

பெரிது நின்றன் பெருமை என்று ஏத்தும் பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன் – தோத்திர:69 1/2
எல்லோரும் வந்து ஏத்தும் அளவில் யம பயம் கெட செய்பவன் – தோத்திர:78 1/8
பராவி என்றன் தமிழ் கவியை மொழிபெயர்த்து போற்றுகின்றார் பாரோர் ஏத்தும்
தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா நின்பால் அ தமிழ் கொணர்ந்தேன் – தனி:22 7/3,4
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாத கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான் – சுயசரிதை:2 30/2
மேல்

ஏத்துவாம் (1)

மோசம்போகலிர் என்று இடித்து ஓதிய மோனி தாள் இணை முப்பொழுது ஏத்துவாம்
தேசத்தார் புகழ் நுண்ணறிவோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சினனாயினும் – சுயசரிதை:1 42/2,3
மேல்

ஏத்துவேன் (1)

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினை காளி என்று ஏத்துவேன் – தோத்திர:34 1/4
மேல்

ஏத்துவோன் (1)

முன்னை ஈன்றவன் செந்தமிழ் செய்யுளால் மூன்று போழ்தும் சிவனடி ஏத்துவோன்
அன்னவன் தவ பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான் – சுயசரிதை:1 20/2,3
மேல்

ஏதடா (2)

ஏதடா சொன்ன சொல் அழித்து உரைக்கின்றாய் – கண்ணன்:6 1/114
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/69
மேல்

ஏதடி (1)

பேச்சுக்கு இடம் ஏதடி நீ பெண் குலத்தின் வெற்றியடி – தனி:15 2/1
மேல்

ஏதமின்றி (1)

ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ – சுயசரிதை:1 15/2
மேல்

ஏதமே (1)

ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார் –தேசீய:32 1/50
மேல்

ஏதாயினும் (1)

ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமது உயிரே – தோத்திர:63 1/3
மேல்

ஏதிலார் (1)

ஏதிலார் தரும் கல்வி படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம் – சுயசரிதை:1 27/2
மேல்

ஏதினும் (1)

வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன் – சுயசரிதை:1 4/3
மேல்

ஏது (27)

இன் நறு நீர் கங்கையாறு எங்கள் யாறே இங்கு இதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே –தேசீய:6 1/2
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/3
இன்று ஒரு சொல்லினை கேட்டேன் இனி ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள் –தேசீய:21 8/1
பாமரர் ஏது அறிவார் –தேசீய:40 14/3
இணை ஏது உனக்கு உரைப்பேன் கடை வானில் எழும் சுடரே – தோத்திர:1 18/4
கடமைதான் ஏது கரிமுகனே வையத்திடம் – தோத்திர:1 21/1
ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம் – தோத்திர:1 24/4
ஏது நிகழினும் நமக்கு ஏன் என்று இரு – தோத்திர:1 36/14
இந்நாளிலே பொய்ம்மை பார்ப்பார் இவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார் – பல்வகை:9 5/2
நலங்கள் ஏது விரும்புவன் அங்கு அவை நண்ணுறப்பெறல் திண்ணமதாம் என – சுயசரிதை:1 11/2
வேகாத மனம் கொண்டு களித்து வாழ்வீர் மேதினியில் ஏது வந்தால் எமக்கு என் என்றே – சுயசரிதை:2 9/4
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன் – கண்ணன்:4 1/27
நேசம் உள்ள வான் சுடரே நின் அழகை ஏது உரைப்பேன் – கண்ணன்:21 5/3
ஏது செய்வம் என சொல்லி நைந்தான் எண்ணத்து உள்ளன யாவும் உரைத்தே – பாஞ்சாலி:1 40/4
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர் யாகத்தை என்றும் மறந்திடல் என்பது ஒன்று ஏது காண் – பாஞ்சாலி:1 43/1
கண்ணனை ஏது என கொண்டனை அவன் காலில் சிறு துகள் ஒப்பவர் நிலத்து – பாஞ்சாலி:1 80/3
மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமை சார்ந்து நன்கு உய்வார் – பாஞ்சாலி:1 105/4
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
எண்ணம் தனதிடை கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான் அருள் – பாஞ்சாலி:5 266/2
ஏது கருதி வைத்தாய் அண்ணே யாரை பணயம்வைத்தாய் – பாஞ்சாலி:5 274/1
தன்னை இவன் இழந்து அடிமை ஆன பின்னர் தாரம் எது வீடு ஏது தாதன் ஆன – பாஞ்சாலி:5 286/1
தீது ஏது நன்று ஏது செய்கை தெளிவு ஏது – குயில்:5 1/14
தீது ஏது நன்று ஏது செய்கை தெளிவு ஏது – குயில்:5 1/14
தீது ஏது நன்று ஏது செய்கை தெளிவு ஏது
அந்த கணமே அதையும் குரங்கினையும் – குயில்:5 1/14,15
ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய் – குயில்:6 1/9
என் சொல்கேன் எங்ஙன் உய்வேன் ஏது செய்கேன் ஐயனே – குயில்:8 1/57
நீ விலகி சென்றாய் நெறி ஏது காமியர்க்கே – குயில்:9 1/96
மேல்

ஏதுக்கடீ (1)

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம்கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடீ – கண்ணன்:16 3/1,2
மேல்

ஏதுக்காம் (1)

என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே – குயில்:9 1/103
மேல்

ஏதுக்கு (2)

இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்கு சண்டைகள் செய்வீர் – பல்வகை:3 21/2
இன்னும் கடைசி வரை ஒட்டு இருக்குமாம் இதில் ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே – கண்ணன்:19 5/4
மேல்

ஏதுதான் (2)

ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும் –தேசீய:24 1/44
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும் –தேசீய:24 1/44
மேல்

ஏதும் (22)

தொண்டை விக்குமோ ஏதும் சொல் அரியதாமோ –தேசீய:33 1/195
பான்மை தவறி நடுங்காதே பயத்தால் ஏதும் பயன் இல்லை – தோத்திர:1 23/2
ஏதும் செய்து உனை இடர் இன்றி காப்பேன் – தோத்திர:1 36/10
என்னை புதிய உயிர் ஆக்கி எனக்கு ஏதும் கவலை அற செய்து மதிதன்னை – தோத்திர:32 5/3
இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
எண்ணிடை கொள்வீர் நன்கு கண்ணை விழிப்பீர் இனி ஏதும் குறைவில்லை வேதம் துணை உண்டு – தோத்திர:49 1/4
பறவை ஏதும் ஒன்று உள்ளதுவோ இங்ஙன் பாடுமோ அமுத கனல் பாட்டு – தோத்திர:51 4/1
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதும் இல்லை –வேதாந்த:11 21/1
பழமையே அன்றி பார் மிசை ஏதும்
புதுமை காணோம் என பொருமுவாய் சீச்சீ –வேதாந்த:22 1/11,12
ஏழையர்க்கு ஏதும் இடர்செயாதே நீ – தனி:8 3/2
காவல் கட்டு விதி வழக்கு என்றிடும் கயவர் செய்திகள் ஏதும் அறிந்திலோம் – சுயசரிதை:1 17/4
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய் குலவிடு தனி பரம்பொருளே – சுயசரிதை:1 49/4
கற்ற வித்தை ஏதும் இல்லை காட்டு மனிதன் ஐயே – கண்ணன்:4 1/24
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதும் இல்லை – கண்ணன்:4 1/34
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு – பாஞ்சாலி:1 60/2
ஏதும் தடைகள் சொல்லாமலே எனது எண்ணத்தை நீ கொளல் வேண்டுமால் – பாஞ்சாலி:1 91/4
சென்று வருகுதி தம்பி இனிமேல் சிந்தனை ஏதும் இதில் செயமாட்டேன் – பாஞ்சாலி:1 114/2
இவளவான பின்னும் இளைஞர் ஏதும் வார்த்தை சொல்லார் – பாஞ்சாலி:3 226/3
என் தமிழில் ஏதும் இழுக்கு இலாமே அஃது – பிற்சேர்க்கை:12 0/3
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
புறம் மேவு பக்தர் மன மாசு அறுத்த புனிதா குறப்பெண் மணவாளா புகல் ஏதும் அற்ற தமியேமை ரட்சி பொரு வேல் பிடித்த பெருமாளே – பிற்சேர்க்கை:24 2/4
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே – பிற்சேர்க்கை:24 4/1
மேல்

ஏதுரைகள் (1)

ஏதுரைகள் பேசி இருக்கின்றீர் என்றிடவே – தனி:1 24/1
மேல்

ஏதெது (1)

ஏதெது கொண்டு வருகுது காற்று இவை எண்ணில் அகப்படுமோ – தனி:3 6/3
மேல்

ஏதெல்லாம் (2)

ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ –தேசீய:48 17/1
ஏதெல்லாம் யான் அறியாது என் மனிதர் பட்டனரோ –தேசீய:48 17/2
மேல்

ஏதெலாம் (1)

ஏதெலாம் நமக்கு இன்புற நிற்கும் எங்கள் தாய் அருள் பால் அது அன்றே – தனி:14 11/4
மேல்

ஏதெனில் (1)

அனைத்து ஒர் செய்தி மற்று ஏதெனில் கூறுவேன் அம்ம மாக்கள் மணம் எனும் செய்தியே – சுயசரிதை:1 30/3
மேல்

ஏதெனிலும் (2)

எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 1/2
எண்ணமதில் விலங்கு எனவே கணவர் எண்ணி ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன் – பாஞ்சாலி:5 284/3
மேல்

ஏதெனினும் (1)

தீச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து நாம் அவர் செல்வம் கவர்ந்து அவரை விட வேண்டும் தெருவிலே – பாஞ்சாலி:1 52/4
மேல்

ஏதேதோ (3)

கருதி ஏதேதோ செய்தேன் – கண்ணன்:6 1/132
ஏதேதோ கூறி இரங்கும் நிலை கண்டேன் – குயில்:5 1/13
என்று சினம் பெருகி ஏதேதோ சொல் உரைத்தேன் – குயில்:8 1/37
மேல்

ஏதேனும் (1)

காதலனை காணுங்கால் காய் சினத்தால் ஏதேனும்
தீது இழைத்தால் என் செய்கேன் தேவரே மற்று இதற்கு ஓர் – குயில்:9 1/197,198
மேல்

ஏதையா (1)

சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா – பாஞ்சாலி:1 89/4
மேல்

ஏதோ (3)

பெண்மைகொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய் –தேசீய:32 1/163
மருமகன் வைக்கொணாதோ இதிலே வந்த குற்றம் ஏதோ – பாஞ்சாலி:2 186/4
மாங்கிளையில் ஏதோ மனதில் எண்ணி வீற்றிருந்தேன் – குயில்:9 1/5
மேல்

ஏந்தல் (1)

எதிர்கொண்டு அழைத்து மணிமுடி தாழ்த்தி ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி – பாஞ்சாலி:1 119/3
மேல்

ஏந்தலே (1)

எப்பிறப்பு கொண்டாலும் ஏந்தலே நின் அழகை – குயில்:5 1/23
மேல்

ஏந்தி (3)

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல் ஒத்த தோள் எவர் தோள் எம்மை –தேசீய:8 6/1
பொன்னும் நல்ல மணியும் சுடர்செய் பூண்கள் ஏந்தி வந்தாய் – தோத்திர:57 4/1
சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லை கரத்துடையாய் – பாஞ்சாலி:5 294/1
மேல்

ஏந்திட (2)

சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திட சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட – பாஞ்சாலி:2 157/3
சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திட சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட
கோலிய பூமழை பெய்திட தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே – பாஞ்சாலி:2 157/3,4
மேல்

ஏந்திநின்றான் (1)

நாசத்தை அழித்துவிட்டான் யமனை கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான்
ஆசை எனும் கொடிக்கு ஒரு காழ் மரமே போன்றான் ஆதி அவன் சுடர் பாதம் புகழ்கின்றேனே – சுயசரிதை:2 21/3,4
மேல்

ஏந்திய (3)

காய் தழல் ஏந்திய பித்தன்தனை காதலிப்பாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/2
எடு-மினோ அற போரினை என்றான் எம் கோமேதகம் ஏந்திய காந்தி –தேசீய:12 8/4
என்று நம் முன்னோர் ஏந்திய வைதிக –தேசீய:24 1/103
மேல்

ஏந்திழையாளும் (1)

ஏச்சையும் அங்கு அவர் கொண்ட நகைப்பையும் எண்ணுவாய் அந்த ஏந்திழையாளும் எனை சிரித்தாள் இதை எண்ணுவாய் – பாஞ்சாலி:1 52/2
மேல்

ஏந்திழையை (1)

எவ்வாறு புகைந்தாலும் புகைந்துபோவீர் ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா – பாஞ்சாலி:5 287/3
மேல்

ஏந்தினான் (1)

மாதவனும் ஏந்தினான் வானோர்க்கேனும் மாதர் இன்பம் போல் பிறிதோர் இன்பம் உண்டோ – சுயசரிதை:2 50/3
மேல்

ஏந்து (1)

ஏந்து கரத்தான் கரியன் எண்கணன்தம் உள்ளத்து – பிற்சேர்க்கை:12 3/3
மேல்

ஏந்தும் (1)

யாரடா பணியாள் வாராய் பாண்டவர் மார்பில் ஏந்தும்
சீரையும் களைவாய் தையல் சேலையும் களைவாய் என்றான் – பாஞ்சாலி:5 290/3,4
மேல்

ஏமாந்துபோகிறோம் (1)

இப்படி பல நாட்களாக ஏமாந்துபோகிறோம்
இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையை பாடுகிறேன் – வசனகவிதை:5 2/16,17
மேல்

ஏமாற்றும் (1)

ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே இனி –தேசீய:31 3/2
மேல்

ஏமாறி (1)

ஏமாறி நிற்கும் இழிஞர்கள் இங்கு உள்ளாரே – பிற்சேர்க்கை:5 4/2
மேல்

ஏய் (1)

தேன் ஏய் கமல மலர் சீர் அடியே யானே முன் – பிற்சேர்க்கை:12 10/2
மேல்

ஏய்க்கிறோமோ (1)

கன்னம் வைக்கிறோமோ பல்லை காட்டி ஏய்க்கிறோமோ – பாஞ்சாலி:3 210/4
மேல்

ஏய்ந்தவரே (1)

ஈடு அறியா மேன்மை அழகு ஏய்ந்தவரே பெண்மைதான் – குயில்:5 1/22
மேல்

ஏய்ந்தனை (1)

பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை பரவும் வெய்ய கதிர் என காய்ந்தனை – தோத்திர:34 3/1
மேல்

ஏய்ந்து (1)

இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே – பாஞ்சாலி:1 2/4
மேல்

ஏய்ப்போருக்கு (1)

ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே –தேசீய:31 1/4
மேல்

ஏர் (1)

அன்பு நீர் பாய்ச்சி அறிவு என்னும் ஏர் உழுது – வசனகவிதை:3 2/21
மேல்

ஏரி (1)

கடல் பெரிய ஏரி விசாலமான குளம் பெரும் கிணறு – வசனகவிதை:5 1/7
மேல்

ஏரியிலும் (1)

குளத்திலும் ஏரியிலும் சிறு குன்றிலும் மலையினிலும் – பிற்சேர்க்கை:14 13/1
மேல்

ஏலத்தில் (1)

ஏலத்தில் விடுவது உண்டோ எண்ணத்தை என்றேன் எண்ணினால் எண்ணியது நண்ணும் காண் என்றாள் – தனி:9 3/3
மேல்

ஏலம் (1)

ஏலம் கருப்பூரம் நறும் இலவங்கம் பாக்கு நல் சாதி வகை – பாஞ்சாலி:1 30/1
மேல்

ஏலு (1)

ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
மேல்

ஏவல் (3)

ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே –தேசீய:31 1/4
விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ வெல்க காளி பதங்கள் என்பார்க்கே – தோத்திர:39 2/4
ஒப்பி உனது ஏவல் செய்வேன் உனது அருளால் வாழ்வேன் – தோத்திர:41 3/2
மேல்

ஏவல்கள் (1)

ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர் யாவரும் ஓர் குலம் அன்றோ – பல்வகை:3 6/1
மேல்

ஏவல்செய (1)

நித்த சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலா பெரும் செல்வம் உதவினான் – கண்ணன்:5 13/1
மேல்

ஏவல்பெண் (1)

இந்த விதம் செய்வது இல்லை சூதர் வீட்டில் ஏவல்பெண் பணயம் இல்லை என்றும் கேட்டோம் – பாஞ்சாலி:5 285/4
மேல்

ஏவலுக்கே (1)

நின்னை அழைக்கிறான் நீள் மனையில் ஏவலுக்கே
என்ன உரைத்து அவளை இங்கு கொணர்வாய் என்றான் – பாஞ்சாலி:4 252/43,44
மேல்

ஏவலை (1)

ஏவலை மைந்தர் புரிதற்கே வில் இராமன் கதையையும் காட்டினேன் புவி – பாஞ்சாலி:1 142/3
மேல்

ஏவாமுன்னர் (1)

இவ் உரை கேட்டார் ஐவர் பணிமக்கள் ஏவாமுன்னர்
தெவ்வர் கண்டு அஞ்சும் மார்பை திறந்தனர் துணியை போட்டார் – பாஞ்சாலி:5 291/1,2
மேல்

ஏவியிருக்கிறாளா (1)

முன்னும் பின்னுமாக வந்து உலகத்தை காக்கும்படி உங்கள் தாய் ஏவியிருக்கிறாளா
உங்களுக்கு மரணம் இல்லையா நீங்கள் அமுதமா – வசனகவிதை:2 5/10,11
மேல்

ஏவினாய் (1)

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய் விதை தூவினாய் –தேசீய:38 6/1
மேல்

ஏவுகின்றான் (1)

அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்
மழை இனிமையுற பெய்கின்றது – வசனகவிதை:2 11/9,10
மேல்

ஏழ் (2)

ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே –தேசீய:23 2/1
ஏழ் கடல் ஓடியும் ஓர் பயன் எய்திட வழி இன்றி இருப்பதுவும் – தோத்திர:59 2/3
மேல்

ஏழ்மை (1)

இறந்து மாண்பு தீரம் மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் –தேசீய:7 1/3
மேல்

ஏழிரு (1)

ஏழிரு புவனத்திலும் என்றும் இயல் பெரும் உயிர்களுக்கு உயிர் ஆவான் – தோத்திர:42 2/3
மேல்

ஏழு (4)

ஏழு நாள் முன்னே இறை மகுடம் தான் புனைந்தான் – தனி:1 19/1
ஏகி நமது உளம் கூறடா அவள் ஏழு கணத்தில் வரச்செய்வாய் உன்னை – பாஞ்சாலி:4 261/2
ஏழு உலகம் இன்ப தீ ஏற்றும் திறன் உடையாய் – குயில்:3 1/9
ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 5/2
மேல்

ஏழும் (1)

அல்லது நீங்கும் என்றே உலகு ஏழும் அறைந்திடுவாய் முரசே – தோத்திர:18 2/2
மேல்

ஏழுலகினையும் (1)

எண்ணளவதனால் ஏழுலகினையும்
விழுங்குதல் வேண்டுவீர் மீளவும் மறப்பீர் – வசனகவிதை:7 0/32,33
மேல்

ஏழுலகு (1)

ஒற்றை திகிரி கொண்டு ஏழுலகு ஆளும் ஒருவனையும் தொழுவாள் –தேசீய:9 7/2
மேல்

ஏழெட்டு (1)

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரண கயிற்றால் கட்டி – வசனகவிதை:4 1/2
மேல்

ஏழேழ் (1)

எ பணி விதித்து எமது ஏழேழ் பிறவியும் –தேசீய:42 1/23
மேல்

ஏழை (12)

ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில் –தேசீய:30 3/1
என்றும் இங்கு உளவாம் சலித்திடாய் ஏழை
நெஞ்சே வாழி நேர்மையுடன் வாழி – தோத்திர:1 24/16,17
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ – தோத்திர:34 2/3
வேதமாய் அதன் முன் உள்ள நாதமாய் விளங்கும் இந்த வீர சக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்தம் என்றன் ஏழை உள்ளம் – தோத்திர:38 1/4
ஏழை எளியவர்கள் வீட்டில் இந்த ஈன வயிறு படும் பாட்டில் – பல்வகை:9 4/1
மன்னர் மாளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம் – தனி:19 3/1
போர் தொகை அடங்கி என் ஏழை புத்திரர் – தனி:24 1/16
முன்பு மா முனிவோர்தமை வென்ற வில் முன்னர் ஏழை குழந்தை என் செய்வனே – சுயசரிதை:1 6/4
என்று அந்த பாண்டவர் தேவியும் சொல்ல என் செய்வன் ஏழை அ பாகனே என்னை – பாஞ்சாலி:4 259/1
ஐயனே என் உயிரின் ஆசையே ஏழை எனை – குயில்:8 1/43
எல்லா பொழுதினும் ஏழை மானுடர் – வசனகவிதை:7 0/62
ஏழை கரையில் இருப்பது எளிமையடா – பிற்சேர்க்கை:25 7/2
மேல்

ஏழைக்கு (1)

அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் – தோத்திர:62 9/4
மேல்

ஏழைக்கும் (1)

ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம் – பாஞ்சாலி:1 141/2
மேல்

ஏழைகள் (2)

எண்ணம் இரங்காதோ அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும் –தேசீய:53 2/2
ஏழைகள் யாரும் இல்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 8/1
மேல்

ஏழைகளை (1)

ஏழைகளை தோழமைகொள்வான் செல்வம் ஏறியார்தமை கண்டு சீறிவிழுவான் – கண்ணன்:3 5/1
மேல்

ஏழைதான் (1)

யாத்த தேருருளை படும் ஏழைதான் யாண்டு தேர் செலுமாங்கு இழுப்புற்று என – சுயசரிதை:1 10/2
மேல்

ஏழைப்பட்டு (1)

ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே ஏசினாய் வீரம் பேசினாய் –தேசீய:38 3/2
மேல்

ஏழைமை (1)

எல்லாம் ஆகி கலந்து நிறைந்த பின் ஏழைமை உண்டோடா மனமே –வேதாந்த:24 1/1
மேல்

ஏழையம் (1)

என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே –தேசீய:11 4/3
மேல்

ஏழையர் (1)

இன்னல் வந்து உற்றிடும் போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் –தேசீய:6 3/1
மேல்

ஏழையர்க்கு (3)

ஏழையர்க்கு எல்லாம் இரங்கும் பிள்ளை – தோத்திர:1 16/16
ஏழையர்க்கு ஏதும் இடர்செயாதே நீ – தனி:8 3/2
இ தரையில் மேலோர் முன் ஏழையர்க்கு நாணம் உண்டோ – குயில்:7 1/64
மேல்

ஏழையாகி (1)

என்று இவ்வாறு பலபல எண்ணி ஏழையாகி இரங்குதலுற்றான் – பாஞ்சாலி:1 38/1
மேல்

ஏழையும் (2)

இங்கு புவித்தலம் ஏழையும் விலை ஈடு என கொள்ள தகாதவன் – பாஞ்சாலி:3 232/4
பாவியும் ஏழையும் பாம்பும் பசுவும் பண்ணும் தானமும் தெய்வமடா – பிற்சேர்க்கை:21 3/2
மேல்

ஏழையேற்கு (1)

ஆசி கூறி அருளுக ஏழையேற்கு
ஈசன் என்றும் இதயத்து இலகியே –தேசீய:50 15/3,4
மேல்

ஏழையேன் (3)

காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கென கேட்கின்றாள் – தோத்திர:19 3/4
கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன் – சுயசரிதை:1 14/1
சீறும் அரசனுக்கு ஏழையேன் பிழை செய்தது உண்டோ அங்கு தேவியார்தமை – பாஞ்சாலி:4 262/1
மேல்

ஏளனம் (1)

என் துயர் தீர்த்தாயடா உயிர் மாமனே ஏளனம் தீர்த்துவிட்டாய் – பாஞ்சாலி:4 249/2
மேல்

ஏளனம்புரியும் (1)

இகழ்ச்சியோடு இரக்கமுற்று ஏளனம்புரியும்
நிலையும் வந்திட்டான் நெஞ்சிலே எனக்கு – கண்ணன்:6 1/49,50
மேல்

ஏற்கும் (1)

ஏற்கும் ஓர் தாமரைப்பூ அதில் இணை மலர் திருவடி இசைந்திருப்பாள் – தோத்திர:59 3/2
மேல்

ஏற்குமோ (1)

எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ தெய்வம் பார்க்குமோ –தேசீய:39 1/2
மேல்

ஏற்பட்டிருக்கின்றது (1)

அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது
இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள் – வசனகவிதை:3 5/9,10
மேல்

ஏற்பாரை (1)

ஏற்பாரை பணிகின்ற காலமும் போச்சே நம்மை –தேசீய:31 1/3
மேல்

ஏற்ற (4)

ஏற்ற இவ் ஆணை அனைத்தும் மேற்கொண்டே யான் செயும் சபதங்கள் இவையே –தேசீய:50 6/4
ஏற்ற நீர் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும் – குயில்:3 1/35
காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும் – பிற்சேர்க்கை:8 12/1
காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும் – பிற்சேர்க்கை:8 12/1
மேல்

ஏற்றத்தை (1)

என்ன இவனை மதிப்பவும் அவர் ஏற்றத்தை கண்டும் அஞ்சாமலே நின்றன் – பாஞ்சாலி:1 75/3
மேல்

ஏற்றது (1)

இயலு புன்மை உடலினுக்கு இன்பு எனும் எண்ணமும் சிறிது ஏற்றது அ காதலாம் – சுயசரிதை:1 7/2
மேல்

ஏற்றதொரு (1)

ஏற்றதொரு வீடு இதற்கு எல்லை ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 6/2
மேல்

ஏற்றதோர் (1)

இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
மேல்

ஏற்றப்படுகின்றது (1)

மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது
பாறையில் மோதிவிட்டது – வசனகவிதை:4 2/6,7
மேல்

ஏற்றம் (7)

ஏற்றம் இன்றி வாழுவாய் போ போ போ –தேசீய:16 2/2
இந்த நிறம் சிறிது என்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ – பல்வகை:3 16/2
இன்பம் என சில கதைகள் எனக்கு ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள் – கண்ணன்:2 2/1
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் – கண்ணன்:8 1/2
இந்த உரு எய்தி தன் ஏற்றம் விளக்குதல் போல் – குயில்:1 1/20
இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும் – பிற்சேர்க்கை:8 3/2
இன்பமே எம் வாழ்க்கை இதற்கு ஏற்றம் ஒன்று இல்லையடா – பிற்சேர்க்கை:14 16/2
மேல்

ஏற்றமும் (3)

எண்ணிலாத பொருள்குவைதானும் ஏற்றமும் புவி ஆட்சியும் ஆங்கே – தோத்திர:37 1/1
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும் – சுயசரிதை:1 24/4
இலகு புகழ் மனு ஆதி முதுவர்க்கும் மாமனே பொருள் ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டு-கொல் மாமனே – பாஞ்சாலி:1 42/2
மேல்

ஏற்றமுறவே (1)

அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர் குலம் ஏற்றமுறவே
வன்புகள் பல புரிவான் ஒரு மந்திரி உண்டு எந்தைக்கு விதி என்பவன் – கண்ணன்:3 6/2,3
மேல்

ஏற்றாய் (1)

நிருதர்கள் நடுக்குற சூல் கரத்து ஏற்றாய் நிர்மலையே பள்ளியெழுந்தருளாயே –தேசீய:11 3/4
மேல்

ஏற்றார் (1)

என்னுடன் ஒத்த தருமத்தை ஏற்றார் இயைந்த இவ் வாலிபர் சபைக்கே –தேசீய:50 10/1
மேல்

ஏற்றாள் (1)

மூலமாசக்தி ஒரு மூவிலை வேல் கை ஏற்றாள்
மாயை தொலைக்கும் மஹாமாயை தான் ஆவாள் – பாஞ்சாலி:4 252/16,17
மேல்

ஏற்றான் (1)

வெறியுடையோன் உமையாளை இடத்தில் ஏற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று – சுயசரிதை:2 35/2
மேல்

ஏற்றி (6)

ஏற்றி நின்னை தொழுவதென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 3/1
கோலமிட்டு விளக்கினை ஏற்றி கூடி நின்று பராசக்தி முன்னே – தனி:2 5/1
ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் ஞானம் என்ற விளக்கினை ஏற்றி
காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதொர் கோயிலின்கண்ணே – தனி:2 5/3,4
எப்பொழுதும் பிரமத்திலே சிந்தை ஏற்றி உலகம் ஒர் ஆடல் போல் எண்ணி – பாஞ்சாலி:3 229/1
ஏற்றி அதனோடே இன் அமுதை தான் கலந்து – குயில்:9 1/244
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
மேல்

ஏற்றிடுவாய் (1)

ஏற்றிடுவாய் என்னை இரும் கடலே நின் மீது – பிற்சேர்க்கை:25 20/1
மேல்

ஏற்றிருப்பாள் (1)

வெள்ளை கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டும் நல் யாழினை கொண்டிருப்பாள் – பாஞ்சாலி:1 3/1,2
மேல்

ஏற்றிவைக்கிறோம் (1)

உனக்கு தூப தீபங்கள் ஏற்றிவைக்கிறோம்
வருணா இந்திரா நீவிர் வாழ்க – வசனகவிதை:5 2/5,6
மேல்

ஏற்றிவைத்த (1)

குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ – பாஞ்சாலி:1 143/2
மேல்

ஏற்றினிலே (1)

ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி –தேசீய:4 7/3
மேல்

ஏற்று (5)

இரை என மாய்வன் ஏற்று அருள்புரிகவே –தேசீய:42 1/55
வாள் குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் –தேசீய:42 1/81
ஏற்று மனம் மகிழ்ந்தே அடி என்னோடு இணங்கி மணம்புரிவாய் என்று – தோத்திர:64 3/3
இங்கு இவை யாவும் தவறிலா விதி ஏற்று நடக்கும் செயல்களாம் முடிவு – பாஞ்சாலி:1 139/1
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் உயிர் எத்தனை உண்டு அவை யாவிற்கும் நித்தம் – பாஞ்சாலி:1 141/2
மேல்

ஏற்றும் (2)

புவி அனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ்மொழியை புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே – தனி:22 6/1,2
ஏழு உலகம் இன்ப தீ ஏற்றும் திறன் உடையாய் – குயில்:3 1/9
மேல்

ஏற்றுவார் (1)

வாரி பழம் பொருள் ஏற்றுவார் இந்த வண்மையும் நீ அறியாததோ – பாஞ்சாலி:1 70/4
மேல்

ஏற்றுவீர் (1)

ஈயை கருடநிலை ஏற்றுவீர் எம்மை என்றும் துயரம் இன்றி வாழ்த்துவீர் – தனி:11 4/2
மேல்

ஏற (6)

என்றன் உள்ள வெளியில் ஞானத்து இரவி ஏற வேண்டும் – தோத்திர:31 4/1
எண்ணும் காரியங்கள் எல்லாம் வெற்றி ஏற புரிந்து அருளல் வேண்டும் தொழில் – தோத்திர:32 7/1
அத்தனையும் சுடர் ஏற திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை உருத்திரன் அன்பு திருமகனை பெரும் திரள் ஆகி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 2/2
ஏற தெரியாமல் ஏணி வைத்து சென்றாலும் – குயில்:5 1/39
எண் திசையும் இன்ப களி ஏற பாடியதே – குயில்:7 1/70
வெம்மை ஏற ஒளி தோன்றும் – வசனகவிதை:2 8/2
மேல்

ஏறல் (1)

பையப்பைய ஓர் ஆமை குன்று ஏறல் போல் பாருளோர் உண்மை கண்டு இவண் உய்வரால் – சுயசரிதை:1 45/4
மேல்

ஏறி (27)

இணை விழி ஆலவாயமாம் சிங்க முதுகினில் ஏறி வீற்றிருந்தே –தேசீய:12 10/2
சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய தீவு பலவினும் சென்று ஏறி அங்கு –தேசீய:20 8/1
இந்த பெரும் பழி தீரும் புகழ் ஏறி புவி மிசை என்றும் இருப்பேன் –தேசீய:21 12/2
ஏறி நின்றது காண் இளமையும் திறலும் –தேசீய:42 1/28
மாடத்தில் ஏறி ஞான கூடத்தில் விளையாடி – தோத்திர:54 1/3
செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன் – தோத்திர:57 5/1
எட்டு திசையும் பறந்து திரிகுவை ஏறி அ காற்றில் விரைவொடு நீந்துவை –வேதாந்த:3 1/1
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/2
எட்டு லச்சுமியும் ஏறி வளருது – பல்வகை:11 5/4
இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது – தனி:2 3/2
உன்னை குதிரைகொண்டு ஏறி திரியும் ஓர் உள்ளம் படைத்துவிட்டோம் – தனி:3 4/2
ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால் – சுயசரிதை:1 4/2
ஏதிலார் தரும் கல்வி படுகுழி ஏறி உய்தற்கு அரிய கொடும்பிலம் – சுயசரிதை:1 27/2
எங்கணும் இன்றி எவற்றினும் என்றும் ஏறி இடையின்றி செல்வதாம் ஒரு – பாஞ்சாலி:1 139/2
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் – பாஞ்சாலி:2 157/1
அஞ்சல் இன்றி சமர்க்களத்து ஏறி ஆக்கும் வெற்றியதனை மதிப்பார் – பாஞ்சாலி:2 172/2
சிங்கத்தில் ஏறி சிரிப்பால் உலகு அழிப்பாள் – பாஞ்சாலி:4 252/19
சிங்கத்தில் ஏறி சிரித்து எவையும் காத்திடுவாள் – பாஞ்சாலி:4 252/20
கண்ணும் முகமும் களி ஏறி காமனார் – குயில்:4 1/3
பராசக்தி ஒளி ஏறி என் அகத்திலே விளங்கலாயினள் – வசனகவிதை:3 6/19
அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/4
முனிவர் விடுத்த முயலகன் மீது ஏறி
தனி நடனம் செய்ததுவே தான் – பிற்சேர்க்கை:12 9/3,4
முடி ஏறி மோதியது என்று அருள் முகிலை கடுஞ்சொற்கள் மொழிவான் போல – பிற்சேர்க்கை:22 1/2
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/4
முன்னி அவற்றின் முடி ஏறி மேல் எழுங்கால் – பிற்சேர்க்கை:25 10/2
தோற்றிடாது ஏறி போய் வானுலகு துய்ப்பேன் யான் – பிற்சேர்க்கை:25 20/2
இடியுற கூறி வெற்றி ஏறி
ஒடிபட தளைகள் ஓங்குதும் யாமே – பிற்சேர்க்கை:26 1/62,63
மேல்

ஏறிக்கொண்டாள் (1)

பீடத்தில் ஏறிக்கொண்டாள் மன – தோத்திர:54 0/1
மேல்

ஏறிக்கொண்டான் (1)

பீடத்தில் ஏறிக்கொண்டான் – தோத்திர:54 0/2
மேல்

ஏறிட்டு (1)

இந்த கணமட்டும் காலன் என்னை ஏறிட்டு பார்க்கவும் அஞ்சியிருந்தான் –தேசீய:21 7/2
மேல்

ஏறியார்தமை (1)

ஏழைகளை தோழமைகொள்வான் செல்வம் ஏறியார்தமை கண்டு சீறிவிழுவான் – கண்ணன்:3 5/1
மேல்

ஏறியோர் (1)

ஏழைகள் யாரும் இல்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை – பிற்சேர்க்கை:14 8/1
மேல்

ஏறிவரும் (1)

அவை வாயு அல்ல வாயு ஏறிவரும் தேர் – வசனகவிதை:4 12/8
மேல்

ஏறிவிட்டது (1)

இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்கு களி ஏறிவிட்டது
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டுவர போனேன் – வசனகவிதை:4 1/53,54
மேல்

ஏறிவிட்டால் (1)

ஈன பறவை முதுகின் மிசை ஏறிவிட்டால்
வாலை குழைத்து வளைத்து அடிக்கு நேர்மையும் பல் – குயில்:7 1/26,27
மேல்

ஏறு (9)

ஏறு போல் நடையினாய் வா வா வா –தேசீய:16 5/8
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு ஒரு – தோத்திர:26 9/1
புல்லை நெல் என புரிதல் பன்றி போத்தை சிங்க ஏறு ஆக்கல் மண்ணை – தோத்திர:32 8/2
ஏறு போல் நட – பல்வகை:1 2/8
நன்று அறியா சகுனி சபை நடுவினில் ஏறு என களித்து இருந்தான் – பாஞ்சாலி:2 164/2
என்றாள் விஜயனுடன் ஏறு திறல் வீமனுமே – பாஞ்சாலி:5 271/31
கடி ஏறு மலர் பந்து மோதியது என்று இனியாளை காய்கின்றானால் – பிற்சேர்க்கை:22 1/3
வடி ஏறு வேல் என வெவ் விழி ஏறி என் ஆவி வருந்தல் காணான் – பிற்சேர்க்கை:22 1/4
நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/4
மேல்

ஏறுகிறது (1)

வண்டியை மாடு இழுத்து செல்கிறது அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது
வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது – வசனகவிதை:4 13/8,9
மேல்

ஏறுகின்றாரால் (1)

நாம் இ பூதலத்தே குறைவு எய்த நாளும் பாண்டவர் ஏறுகின்றாரால்
நேமி மன்னர் பகை சிறிது என்றே நினைவு அயர்ந்திருப்பார் எனில் நோய் போல் – பாஞ்சாலி:1 103/2,3
மேல்

ஏறுதடீ (1)

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குற வள்ளீ சிறு கள்ளீ – தோத்திர:7 0/1,2
மேல்

ஏறுதி (1)

கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா – தோத்திர:70 1/1
மேல்

ஏறுதே (1)

எங்கள் வேள்வி கூடம் மீதில் ஏறுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/1
மேல்

ஏறும் (5)

சக்தி தரும் திறன் அதில் ஏறும் மெய்யை – தோத்திர:24 6/3
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதோர் நல் அறமும் கலந்து ஒளி ஏறும் தவ கனலை பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 5/2
காதலினால் உயிர் தோன்றும் இங்கு காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவு எய்தும் இங்கு காதல் கவிதை பயிரை வளர்க்கும் – தனி:2 4/1,2
எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ் ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில் – பாஞ்சாலி:3 233/3
கடா எருமை ஏறும் கரு நிறத்து காலனார் – பாஞ்சாலி:4 252/23
மேல்

ஏறுமே (1)

தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு செய்கையதனில் வெற்றி ஏறுமே – தனி:11 7/2
மேல்

ஏறுவதோ (1)

கோல நல் பட்டுக்களின் வகை கூறுவதோ எண்ணில் ஏறுவதோ – பாஞ்சாலி:1 31/4
மேல்

ஏறுவாயோ (1)

கப்பல் ஏறுவாயோ அடிமை கடலை தாண்டுவாயோ –தேசீய:34 4/1
மேல்

ஏறுவான் (1)

ஏடு தரித்த முதல்வனும் குரு என்றிட மெய் புகழ் ஏறுவான் – தோத்திர:5 2/4
மேல்

ஏறுவோம் (1)

எள்துணை மதியாது ஏறுவோம் பழம் போர் – பிற்சேர்க்கை:26 1/56
மேல்

ஏன் (19)

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் இவ்வாறு அங்கே –தேசீய:52 4/1
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்
வித்தைக்கு இறைவா கணநாதா மேன்மை தொழிலில் பணி எனையே – தோத்திர:1 27/3,4
ஏது நிகழினும் நமக்கு ஏன் என்று இரு – தோத்திர:1 36/14
நமக்கு ஏன் பொறுப்பு நான் என்று ஓர் தனிப்பொருள் – தோத்திர:1 36/16
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் – தனி:3 4/4
எந்த மார்க்கமும் தோற்றிலது என் செய்கேன் ஏன் பிறந்தனன் இ துயர் நாட்டிலே – சுயசரிதை:1 46/4
மைந்த நினக்கு வருத்தம் ஏன் இவன் வார்த்தையில் ஏதும் பொருள் உண்டோ நினக்கு – பாஞ்சாலி:1 60/2
அவல மொழிகள் அளப்பது ஏன் தொழில் ஆயிரம் உண்டு அவை செய்குவீர் – பாஞ்சாலி:1 77/4
பலபல மொழிகுவது ஏன் உனை பார்த்திவன் என்று எணி அழைத்துவிட்டேன் – பாஞ்சாலி:2 168/2
நிச்சயம் நீ வெல்வாய் பல நினைகுவது ஏன் களி தொடங்குக என்றான் – பாஞ்சாலி:2 170/4
அழுதல் ஏன் இதற்கே என்றே அங்கர் கோன் நகைத்தான் – பாஞ்சாலி:2 187/2
செல்வாய் விதுரா நீ சிந்தித்திருப்பது ஏன்
வில் வாள் நுதலினாள் மிக்க எழிலுடையாள் – பாஞ்சாலி:4 252/37,38
கூண்டில் பறவையும் அல்லளே ஐவர் கூட்டு மனைவிக்கு நாணம் ஏன் சினம் – பாஞ்சாலி:4 254/3
இன்னல் விளைந்து இவை கூறுவாள் தம்பி என்றனை வீணில் அழைப்பது ஏன் – பாஞ்சாலி:4 255/4
மேலோர் இருக்கின்றீர் வெம் சினம் ஏன் கொள்கிலரோ – பாஞ்சாலி:5 271/37
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவது ஏன்
மானுடர் போல் சித்தநிலை வாய்த்திருக்கும் செய்தி ஏன் – குயில்:9 1/12,13
மானுடர் போல் சித்தநிலை வாய்த்திருக்கும் செய்தி ஏன்
யான் உணர சொல்வீர் என வணங்கி கேட்கையிலே – குயில்:9 1/13,14
சில சமயங்களில் அசையாமல் உம்மென்று இருக்கும் கூப்பிட்டால்கூட ஏன் என்று கேட்காது – வசனகவிதை:4 1/8
திசைவெளியில் ஏன் சிதறி போய்விடவில்லை – வசனகவிதை:5 1/3
மேல்

ஏன்றவாறு (1)

எற்றி நல்ல வழக்குரை செய்தே ஏன்றவாறு நயங்கள் புகட்ட – பாஞ்சாலி:1 84/4
மேல்

ஏனடா (3)

ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால் – கண்ணன்:4 1/3
ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய் – குயில்:6 1/9
ஏனடா நீ கரையில் ஏக்குற்று நிற்கின்றாய் – பிற்சேர்க்கை:25 4/1
மேல்

ஏனெனில் (1)

ஏனெனில்
சிலப்பதிகார செய்யுளை கருதியும் –தேசீய:24 1/19,20
மேல்

ஏனைய (1)

ஏனைய திசைகளில் இரும் திரை கடலும் –தேசீய:32 1/29
மேல்