ஞா – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாயிற்றிலிருந்து 1
ஞாயிற்றின் 4
ஞாயிற்றின்கண் 1
ஞாயிற்றினிடத்தே 2
ஞாயிற்று 3
ஞாயிற்றை 7
ஞாயிறாய் 2
ஞாயிறு 16
ஞாயிறுதன்னை 1
ஞாயிறுதான் 3
ஞாயிறும் 1
ஞாயிறே 8
ஞால 3
ஞாலத்தில் 1
ஞாலத்து 1
ஞாலத்துள் 1
ஞாலத்தை 1
ஞாலம் 10
ஞாலமும் 1
ஞான 24
ஞானகங்கைதனை 1
ஞானகுரு 2
ஞானகுருதேசிகனை 1
ஞானங்கள் 1
ஞானசம்பந்தன் 1
ஞானசுந்தரி 1
ஞானத்தால் 1
ஞானத்தாலே 1
ஞானத்தில் 1
ஞானத்திலே 1
ஞானத்து 1
ஞானத்தை 2
ஞானபாநு 3
ஞானம் 24
ஞானமும் 7
ஞானமே 1
ஞானாகாசத்து 1
ஞானானுபவத்தில் 1
ஞானி 8
ஞானியர் 3
ஞானியர்தம் 1
ஞானியர்தமை 1
ஞானியரே 1

ஞாயிற்றிலிருந்து (1)

இவை எல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்பர் – வசனகவிதை:2 10/6
மேல்

ஞாயிற்றின் (4)

ஞாயிற்றின் மகளா – வசனகவிதை:2 6/2
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம் – வசனகவிதை:2 6/3
ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயிர் – வசனகவிதை:2 6/5
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று – வசனகவிதை:2 12/23
மேல்

ஞாயிற்றின்கண் (1)

நன்று வாழ்ந்திட செய்குவை ஐயா ஞாயிற்றின்கண் ஒளி தரும் தேவா – தோத்திர:70 2/3
மேல்

ஞாயிற்றினிடத்தே (2)

ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம் – வசனகவிதை:2 6/4
ஞாயிற்றினிடத்தே தீயே நின்னைத்தான் போற்றுகின்றோம் – வசனகவிதை:2 8/29
மேல்

ஞாயிற்று (3)

ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு – தோத்திர:62 7/1
நட்பு குருவியே ஞாயிற்று இளவெயிலில் – தனி:1 12/1
ஞாயிற்று தெய்வமே நின்னை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 8/30
மேல்

ஞாயிற்றை (7)

ஞாயிற்றை எண்ணி என்றும் நடுமை நிலை பயின்று – தோத்திர:76 4/1
ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ – சுயசரிதை:2 22/2
செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன – வசனகவிதை:2 10/12
ஞாயிற்றை துதிப்போம் வாருங்கள் – வசனகவிதை:2 11/2
அதன் வீடாகிய ஞாயிற்றை புகழ்கின்றோம் – வசனகவிதை:2 12/22
ஞாயிற்றை திங்களை வானத்து வீடுகளை மீன்களை – வசனகவிதை:2 13/22
ஞாயிற்றை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 13/25
மேல்

ஞாயிறாய் (2)

பிணி இருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்
யான் எனது இன்றி இருக்கும் நல் யோகியர் – தோத்திர:10 1/13,14
இருளுக்கு ஞாயிறாய் எமது உயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு – தனி:17 1/2
மேல்

ஞாயிறு (16)

ஞாயிறு என்ற கோளம் தரும் ஓர் நல்ல பேரொளிக்கே – தோத்திர:31 6/1
ஞாயிறு போற்று – பல்வகை:1 2/38
ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடி தொழுதிடும் தன்மை போல் அவர் – பாஞ்சாலி:1 66/3
ஞாயிறு நன்று திங்களும் நன்று – வசனகவிதை:1 1/3
ஞாயிறு திங்கள் வானத்து சுடர்கள் எல்லாம் தெய்வங்கள் – வசனகவிதை:1 3/5
ஞாயிறு வீட்டுச்சுவர் ஈ மலை அருவி – வசனகவிதை:1 4/5
ஞாயிறு
அது நன்று – வசனகவிதை:2 1/8,9
தீ தான் ஞாயிறு
தீயின் இயல்பே ஒளி – வசனகவிதை:2 8/7,8
ஞாயிறு மிக சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும் – வசனகவிதை:2 10/19
ஞாயிறு வித்தைகாட்டுகின்றான் – வசனகவிதை:2 11/7
சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம் – வசனகவிதை:3 1/1
சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர் – வசனகவிதை:3 1/2
சக்தி கடலிலே ஞாயிறு ஓர் நுரை – வசனகவிதை:3 1/35
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு ஒரு ஸ்வரஸ்தானம் – வசனகவிதை:3 1/36
ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிர ஒளியாகிய நீர் பாய்ச்சுகிறது – வசனகவிதை:3 2/2
சந்திரன் சுழல்கின்றது ஞாயிறு சுழல்கின்றது – வசனகவிதை:4 13/16
மேல்

ஞாயிறுதன்னை (1)

சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னை சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு – கண்ணன்:7 8/2
மேல்

ஞாயிறுதான் (3)

கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான் – தனி:1 2/1
வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோன ஒளி சூழ்ந்திடவும் மொய்ம்பில் கொலுவிருந்தான் – குயில்:6 1/1,2
ஞாயிறுதான் வெம்மைசெயில் நாள்மலர்க்கு வாழ்வு உளதோ – குயில்:8 1/47
மேல்

ஞாயிறும் (1)

ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் – தோத்திர:1 24/10
மேல்

ஞாயிறே (8)

ஆள்வதும் பேரொளி ஞாயிறே அனைய – தோத்திர:1 28/11
ஞாயிறே இருளை என்ன செய்துவிட்டாய் – வசனகவிதை:2 5/1
ஞாயிறே உன்னை புகழ்கின்றேன் – வசனகவிதை:2 5/13
ஞாயிறே
நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது – வசனகவிதை:2 7/1,2
ஞாயிறே நீதான் ஒளித்தெய்வம் – வசனகவிதை:2 9/20
ஞாயிறே நின் முகத்தை பார்த்த பொருள் எல்லாம் ஒளி பெறுகின்றது – வசனகவிதை:2 10/1
வெம்மை தெய்வமே ஞாயிறே ஒளி குன்றே – வசனகவிதை:2 12/2
ஞாயிறே நின்னை பரவுகின்றோம் – வசனகவிதை:2 12/8
மேல்

ஞால (3)

ஞால வெளியினிலே நின்றன் ஞான ஒளி வீசுதடி – தனி:15 3/3
ஞால வாழ்வினது மாயம் நவின்றிடற்கு அரியது அன்றோ – தனி:19 5/4
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே – பாஞ்சாலி:2 198/2
மேல்

ஞாலத்தில் (1)

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் – தனி:9 3/2
மேல்

ஞாலத்து (1)

மா இரு ஞாலத்து உயர்ந்ததாம் மதி வான் குலத்திற்கு முதல்வனாம் ஒளி – பாஞ்சாலி:1 66/2
மேல்

ஞாலத்துள் (1)

வாலை வளரும் மலை கூறாய் ஞாலத்துள்
வெற்பு ஒன்றும் ஈடு இலதாய் விண்ணில் முடி தாக்கும் –தேசீய:13 5/2,3
மேல்

ஞாலத்தை (1)

நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தை தான் என கொள்ளலும் பர – பாஞ்சாலி:1 82/1
மேல்

ஞாலம் (10)

நடையும் பறப்பும் உணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் –தேசீய:5 10/2
ஞாலம் அறிந்திடவே நாங்கள் இதை பாட்டிசைத்தோம் – தனி:1 28/2
ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் ஞானம் என்ற விளக்கினை ஏற்றி – தனி:2 5/3
நம்பரும் திறலோடு ஒரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும் – சுயசரிதை:1 24/3
ஞாலம் முற்றிலும் நிறைந்தே மிக நயம்தரு பொம்மைகள் எனக்கெனவே – கண்ணன்:2 6/3
மா இரு ஞாலம் அவர்தமை தெய்வ மாண்புடையார் என்று போற்றும் காண் ஒரு – பாஞ்சாலி:1 83/3
ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க – பாஞ்சாலி:1 116/3
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ – குயில்:6 1/39
ஞாலம் பலவினிலும் நாள்தோறும் தாம் பிறந்து – குயில்:7 1/88
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை – பிற்சேர்க்கை:8 12/2
மேல்

ஞாலமும் (1)

நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ –வேதாந்த:12 2/4
மேல்

ஞான (24)

பூரணமா ஞான புகழ் விளக்கை நாட்டுவித்த –தேசீய:13 1/3
காவிய நூல்கள் ஞான கலைகள் வேதங்கள் உண்டோ –தேசீய:29 3/3
ஊனம் ஒன்று அறியா ஞான மெய் பூமி –தேசீய:32 1/38
ஞான பெரும் கடல் நல் இசை கவிஞன் –தேசீய:42 1/6
பாபேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்த பரமன் ஞான
ரூபேந்திரன்தனக்கு பின்வந்தோன் விண்ணவர்தம் உலகை ஆள் ப்ரதாபேந்திரன் –தேசீய:44 1/1,2
தெள்ளிய ஞான பெரும் செல்வமே நினை சேர விரும்பினன் கண்டாய் – தோத்திர:7 2/4
தனியே ஞான விழியாய் நிலவினில் – தோத்திர:8 1/5
ஞான மா மகுட நடு திகழ் மணியாய் – தோத்திர:10 1/15
மாடத்தில் ஏறி ஞான கூடத்தில் விளையாடி – தோத்திர:54 1/3
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன் பாவம் எலாம் கெட்டு ஞான கங்கை – தோத்திர:61 2/2
ஞான மலையினை கண்டேன் – தோத்திர:68 13/3
பேடியர் ஞான பிதற்றல் சொல்லாதே – தோத்திர:68 24/3
ஞான மேனி உதய கன்னி நண்ணிவிட்டாளே இ நேரம் – தோத்திர:75 5/2
நான் எனும் பொய்யை நடத்துவோன் நான் ஞான சுடர் வானில் செல்லுவோன் நான் –வேதாந்த:13 7/1
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல் அறம் வீர சுதந்திரம் – பல்வகை:4 4/3
திமிர்ந்த ஞான செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் – பல்வகை:4 7/2
ஞால வெளியினிலே நின்றன் ஞான ஒளி வீசுதடி – தனி:15 3/3
மலை விளக்கே எம் அனையர் மன இருளை மாற்றுதற்கு வந்த ஞான
நிலை விளக்கே நினை பிரிந்த இசைத்தேவி நெய் அகல நின்ற தட்டின் – தனி:20 3/2,3
மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண் பெரும் கதிரின் ஓர் இரு கிரணம் என் – தனி:24 1/26,27
தீத்திறன் கொள் அறிவற்ற பொய் செயல் செய்து மற்றவை ஞான நெறி என்பர் – சுயசரிதை:1 38/3
பாவியரை கரையேற்றும் ஞான தோணி பரமபதவாயில் எனும் பார்வையாளன் – சுயசரிதை:2 40/3
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞான பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – சுயசரிதை:2 58/4
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம் – கண்ணன்:21 3/3
அரைக்கணமாயினும் உன்னை திரிகரண தூய்மையுடன் அன்னாய் ஞான
திரை கடலே அருள்கடலே சீர் அனைத்தும் உதவு பெரும் தேவே இந்த – பிற்சேர்க்கை:7 3/1,2
மேல்

ஞானகங்கைதனை (1)

நாசத்தை அழித்துவிட்டான் யமனை கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான் – சுயசரிதை:2 21/3
மேல்

ஞானகுரு (2)

ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ – சுயசரிதை:2 22/2
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே – சுயசரிதை:2 29/4
மேல்

ஞானகுருதேசிகனை (1)

ஞானகுருதேசிகனை போற்றுகின்றேன் நாடு அனைத்தும் தான் ஆவான் நலிவிலாதான் – சுயசரிதை:2 19/1
மேல்

ஞானங்கள் (1)

நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று – தோத்திர:64 2/3
மேல்

ஞானசம்பந்தன் (1)

கனகன் மைந்தன் குமரகுருபரன் கனியும் ஞானசம்பந்தன் துருவன் மற்று – சுயசரிதை:1 8/1
மேல்

ஞானசுந்தரி (1)

நவ்வியை போன்ற கண்ணாள் ஞானசுந்தரி பாஞ்சாலி – பாஞ்சாலி:5 291/3
மேல்

ஞானத்தால் (1)

குப்பாய ஞானத்தால் மரணம் என்ற குளிர் நீக்கி எனை காத்தான் குமாரதேவன் – சுயசரிதை:2 20/4
மேல்

ஞானத்தாலே (1)

வருவது ஞானத்தாலே வையகம் முழுவதும் எங்கள் – தோத்திர:71 1/3
மேல்

ஞானத்தில் (1)

ஞானத்தில் புட்களிலும் நன்கு சிறந்து உள்ளாய் – குயில்:3 1/16
மேல்

ஞானத்திலே (1)

ஞானத்திலே பரமோனத்திலே உயர் –தேசீய:4 1/1
மேல்

ஞானத்து (1)

என்றன் உள்ள வெளியில் ஞானத்து இரவி ஏற வேண்டும் – தோத்திர:31 4/1
மேல்

ஞானத்தை (2)

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் – பல்வகை:3 9/1
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே நேர்வதே மானுடர்க்கு சின தீ நெஞ்சில் – சுயசரிதை:2 7/4
மேல்

ஞானபாநு (3)

பெருமைதான் நிலவி நிற்க பிறந்தது ஞானபாநு – தோத்திர:71 1/4
நவமுறு ஞானபாநு நண்ணுக தொலைக பேய்கள் – தோத்திர:71 2/4
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின் – தோத்திர:71 4/4
மேல்

ஞானம் (24)

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கு எது வேண்டும் –தேசீய:1 4/2
பூரண ஞானம் பொலிந்த நல் நாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு –தேசீய:6 2/3
வெல்லு ஞானம் விஞ்சியோர் செய் மெய்மை நூல்கள் தேயவும் –தேசீய:7 3/2
இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என் என்று புகழ்ந்து உரைப்போம் அதனை இந்நாள் –தேசீய:12 4/3
ஞானம் படை தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு –தேசீய:20 10/2
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே –தேசீய:30 2/4
நாடு காப்பதற்கே உனக்கு ஞானம் சிறிதும் உண்டோ –தேசீய:34 8/1
ஞானம் ஒத்தது அம்மா உவமை நான் உரைக்கொணாதாம் – தோத்திர:31 5/3
ஞானம் ஓங்கி வளர்ந்திட செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள் – தோத்திர:37 2/4
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர் – தோத்திர:62 8/1
தினத்து ஒளி ஞானம் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர் – தோத்திர:71 3/3
ஞாலம் முற்றும் பராசக்தி தோற்றம் ஞானம் என்ற விளக்கினை ஏற்றி – தனி:2 5/3
நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு ஞானம் எனும் பயிரை நச்சி – தனி:18 2/3
ஞானம் தங்கும் இ நாட்டினை பின்னரும் நண்ணினான் என தேசுறும் அவ் விவேகானந்தம் – தனி:18 3/2
மாயம் எலாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாரும் வண்ணம் ஞானம்
தோய நனி பொழிந்திடும் ஓர் முகில் போன்றான் இவன் பதங்கள் துதிக்கின்றோமே – தனி:18 4/3,4
ஐயம் எனும் பேயை எலாம் ஞானம் எனும் வாளாலே அறுத்துத்தள்ளி – தனி:23 2/4
ஞானம் முந்துறவும் பெற்றிலாதவர் நானிலத்து துயர் அன்றி காண்கிலர் – சுயசரிதை:1 48/1
பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் – சுயசரிதை:2 28/4
ஐயன் எனக்கு உணர்த்தியன பலவாம் ஞானம் அதற்கு அவன் காட்டிய குறிப்போ அநந்தம் ஆகும் – சுயசரிதை:2 29/3
சாத்திரம் கோடி வைத்தாள் அவைதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் – கண்ணன்:2 9/1
ஞானியர்தம் இயல் கூறினேன் அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் என – கண்ணன்:7 12/1
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
ஞானம் தவம் கல்வி நான்கும் துறக்கலீர் – பிற்சேர்க்கை:23 1/3
உலகினுக்கு அளித்தாய் உனது ஒளி ஞானம்
இலகிட நீ இங்கு எழுந்தருளுகவே – பிற்சேர்க்கை:26 1/7,8
மேல்

ஞானமும் (6)

ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி –தேசீய:24 1/54
ஞானமும் அறியா நவைபுரி பகைவர் –தேசீய:32 1/44
குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கி –தேசீய:41 2/2
இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கு – தோத்திர:1 40/6
பொங்கி ததும்பி திசை எங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய் திருக்கோலம் – தோத்திர:55 4/2
சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும்
மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதா – தனி:8 8/1,2
ஞானமும் அஞ்ஞானமும் ஸமானமா – வசனகவிதை:6 2/27
மேல்

ஞானமும (1)

மேல்

ஞானமே (1)

யான் எனது அற்றார் ஞானமே தானாய் – தோத்திர:1 16/12
மேல்

ஞானாகாசத்து (1)

ஞானாகாசத்து நடுவே நின்று நான் – தோத்திர:1 32/8
மேல்

ஞானானுபவத்தில் (1)

ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர் நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான் – சுயசரிதை:2 13/4
மேல்

ஞானி (8)

ஒன்னார் என்று எவரும் இலான் உலகு அனைத்தும் ஓருயிர் என்று உணர்ந்த ஞானி
அன்னானை சிறைப்படுத்தார் மேலோர்தம் பெருமை எதும் அறிகிலாதார் –தேசீய:44 4/2,3
கற்றறிந்த ஞானி கடவுளையே நேர் ஆவான் – தனி:1 18/2
தூய அபேதாநந்தன் எனும் பெயர்கொண்டு ஒளிர் தருமி சுத்த ஞானி
நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு – தனி:18 4/1,2
தேசத்தார் இவன் பெயரை குள்ளச்சாமி தேவர்பிரான் என்று உரைப்பார் தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான் பயத்தை சுட்டான் பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான் – சுயசரிதை:2 21/1,2
அப்பனே தேசிகனே ஞானி என்பார் அவனியிலே சிலர் நின்னை பித்தன் என்பார் – சுயசரிதை:2 24/2
மாங்கொட்டைச்சாமி புகழ் சிறிது சொன்னோம் வண்மை திகழ் கோவிந்த ஞானி பார் மேல் – சுயசரிதை:2 37/1
தேவி பதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி ஆவான் – சுயசரிதை:2 40/2
மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி
ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன் – சுயசரிதை:2 57/1,2
மேல்

ஞானியர் (3)

நல்ல கீதம் சிவ தனி நாதம் நடன ஞானியர் சிற்சபை ஆட்டம் – தனி:14 6/1
இலங்கு நூல் உணர் ஞானியர் கூறுவர் யானும் மற்றது மெய் என தேர்ந்துளேன் – சுயசரிதை:1 11/3
ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இ பேறுகள் ஞானியர் இவை – பாஞ்சாலி:1 83/1
மேல்

ஞானியர்தம் (1)

ஞானியர்தம் இயல் கூறினேன் அந்த ஞானம் விரைவினில் எய்துவாய் என – கண்ணன்:7 12/1
மேல்

ஞானியர்தமை (1)

வேலாயுத விருதினை மனதில் மதிக்கிறேன் என்றன் வேதாந்தம் உரைத்த ஞானியர்தமை எண்ணி துதிக்கிறேன் ஆதிமூலா –வேதாந்த:7 1/1
மேல்

ஞானியரே (1)

ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய்யாமல் என்றும் அருள் ஞானியரே எமக்கு வேந்தர் – சுயசரிதை:2 44/4
மேல்