மி – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 38
மிக்கதொர் 1
மிக்கதோர் 1
மிக்கவர் 2
மிக்கவனாய் 2
மிக்கார் 1
மிக்கு 6
மிக்குள்ளோர் 1
மிக்குற 1
மிக 72
மிகமிக 2
மிகலுற்றே 1
மிகவும் 11
மிகவே 2
மிகு 8
மிகுக-மன்னோ 1
மிகுத்தி 1
மிகுத்து 1
மிகுதல் 1
மிகுதியால் 2
மிகுதியுற்று 1
மிகுந்த 16
மிகுந்தது 2
மிகுந்தவர் 1
மிகுந்தனை 1
மிகுந்தீர் 1
மிகுந்து 4
மிகுந்துவரல் 1
மிகுந்தேன் 1
மிகும் 6
மிகுவதன் 1
மிகைபட 1
மிகையால் 3
மிகையும் 1
மிகையுறும் 1
மிச்ச 1
மிச்சத்தை 1
மிச்சம் 1
மிசிரம் 2
மிசை 80
மிசையே 3
மிஞ்ச 2
மிஞ்சவிடலாமோ 1
மிஞ்சி 7
மிஞ்சிய 3
மிஞ்சியிருக்கும் 1
மிஞ்சு 4
மிஞ்சுவான் 1
மிடி 4
மிடிமை 3
மிடிமையில் 1
மிடிமையும் 3
மிடிமையை 2
மிண்டி 1
மித்திரா 1
மித்தைகள் 1
மித்ரன் 1
மிதக்கும் 1
மிதத்து 1
மிதந்த 1
மிதந்திடும் 1
மிதந்து 1
மிதம் 1
மிதமிஞ்சிய 1
மிதிக்கிறார் 1
மிதிக்கிறேன் 1
மிதித்திடலாமோ 1
மிதித்திடுவேனடா 1
மிதித்திடுவோம் 1
மிதித்து 1
மிதித்துவிடு 1
மிதித்தே 1
மிதிலாதிபன் 1
மிதிலை 1
மிதிலைக்கு 1
மிருக 3
மிருகங்கள் 1
மிலேச்ச 1
மிலேச்சர் 5
மிலேச்சர்தம் 1
மிலேச்சரை 4
மிளிரும் 1
மின் 15
மின்கொடி 1
மின்சக்தி 1
மின்படு 1
மின்மினி 1
மின்மினிதன்னை 1
மின்னல் 17
மின்னல்கொடியார் 1
மின்னல்பூ 1
மின்னலும் 1
மின்னலை 4
மின்னாள் 1
மின்னி 2
மின்னிற்றே 1
மின்னு 1
மின்னுகின்ற 2
மின்னும் 2
மின்னுற்று 1
மின்னென 1
மின்னே 1
மின்னை 1
மின்னையே 1

மிக்க (38)

இறந்து மாண்பு தீரம் மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் –தேசீய:7 1/3
திறம் மிக்க நல் வயிர சீர் திகழும் மேனி –தேசீய:12 2/1
அறம் மிக்க சிந்தை அறிவு பிற நலங்கள் –தேசீய:12 2/2
சோதி மிக்க மணியிலே காலத்தால் –தேசீய:16 4/7
வீரம் மிக்க மராட்டியர் ஆதரம் மேவி பாரததேவி திருநுதல் –தேசீய:46 3/1
வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல் – தோத்திர:7 1/2
மிக்க திரளாய் சுரர் இக்கணம்தன்னில் இங்கு மேவி நிறைந்தனர் பாவி அசுரர்கள் – தோத்திர:49 2/3
வயம் மிக்க அசுரரின் மாயையை சுட்டாய் – தோத்திர:72 1/2
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண் எலாம் மதுரம் மிக்க ஹரி நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/1
மது நமக்கு மது நமக்கு மது மனத்தொடு ஆவியும் மதுரம் மிக்க சிவம் நமக்கு மது என கதித்தலால் – தனி:14 12/4
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க
நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என்று நன்கு – தனி:22 6/3,4
அருமை மிக்க மயிலை பிரிந்தும் இவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ – சுயசரிதை:1 22/4
ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன் – சுயசரிதை:1 40/3
அருத்தம் மிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் – சுயசரிதை:2 11/4
மிக்க மகிழ்கொண்டு அவனும் சென்றான் யானும் வேதாந்த மரத்தில் ஒரு வேரை கண்டேன் – சுயசரிதை:2 27/4
சிங்க நிகர் வீரர் பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனும் சென்று பல துன்பம் உற்றான் – சுயசரிதை:2 51/3
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/2
வீரம் இலா நெஞ்சுடையார் சிவனை காணார் எப்போதும் வீரம் மிக்க வினைகள் செய்வாய் – சுயசரிதை:2 64/3
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய் – கண்ணன்:4 1/32
மிக்க நலமுடைய மரங்கள் பல விந்தை சுவையுடைய கனிகள் எந்த – கண்ணன்:12 1/1
வேத திருவிழியாள் அதில் மிக்க பல் உரை எனும் கரு மை இட்டாள் – பாஞ்சாலி:1 4/1
பெற்றி மிக்க விதுரன் அறிவை பின்னும் மற்றொரு கண் என கொண்டோன் – பாஞ்சாலி:1 84/2
வேம்பு நிகர் இவனுக்கு நான் சுவை மிக்க சருக்கரை பாண்டவர் அவர் – பாஞ்சாலி:1 86/3
மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே – பாஞ்சாலி:1 109/3
நின்னை மிக்க பணிவொடு கேட்பேன் நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான் – பாஞ்சாலி:2 174/4
விளையும் இன்ப நூல்கள்தம்மில் மிக்க தேர்ச்சியோடு – பாஞ்சாலி:2 190/3
தீரம் மிக்க தருமன் உள்ள திடன் அழிந்திடாதே – பாஞ்சாலி:2 192/2
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/2
மீது சென்று மலையிடை தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன் – பாஞ்சாலி:2 199/3
பற்று மிக்க இ பாண்டவர்தம்மை பாதகத்தில் அழித்திடுகின்றாய் – பாஞ்சாலி:2 200/3
குருகுல தலைவன் சபைக்கண்ணே கொற்றம் மிக்க துரோணன் கிருபன் – பாஞ்சாலி:2 203/1
நேமம் மிக்க நகுலன் ஐயோ நினைவு அயர்ந்துவிட்டான் – பாஞ்சாலி:3 227/3
புண்ணியம் மிக்க தருமனை அந்த புல்லன் வினவிய போதினில் தர்மன் – பாஞ்சாலி:3 231/3
வில் வாள் நுதலினாள் மிக்க எழிலுடையாள் – பாஞ்சாலி:4 252/38
மிக்க உணவு உண்டு வாய் மென்று அசைதான் போடுகையில் – குயில்:7 1/55
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது – வசனகவிதை:4 13/12
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க வழியே தகர்த்த சதியாளர் மதம் மேவு மிக்க குடிகேடர் உக்கிர மனம் மேவும் அற்பர் நசையாலே – பிற்சேர்க்கை:24 2/1
அறமே அழிந்து வசையே தழைத்த அதி நீசர் மிக்க அகம் மேவி அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி அதி ஆணவத்தர் முறையாலே – பிற்சேர்க்கை:24 2/2
மேல்

மிக்கதொர் (1)

மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர் – தோத்திர:42 7/3
மேல்

மிக்கதோர் (1)

அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கு இங்கு அருவருப்பாவதை – சுயசரிதை:1 21/4
மேல்

மிக்கவர் (2)

கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமை காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ என்று – பாஞ்சாலி:3 231/2
பாதகம் நித்தமும் மெத்த இழைப்பவர் பாரகம் முற்றவும் நத்து சினத்தவர் பாவம் இயற்றிடும் அ துறை மிக்கவர் விரகாலே – பிற்சேர்க்கை:24 1/2
மேல்

மிக்கவனாய் (2)

உயர்நிலைப்படுத்தலில் ஊக்கம் மிக்கவனாய்
இன்னது செய்திடேல் இவரொடு பழகேல் – கண்ணன்:6 1/27,28
இகழும் மிக்கவனாய் என் மனம் வருந்த – கண்ணன்:6 1/44
மேல்

மிக்கார் (1)

உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார் – தனி:23 5/4
மேல்

மிக்கு (6)

பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் எனில் –தேசீய:9 6/1
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கு ஓங்குக –தேசீய:25 1/7
வேள்வியில் வீழ்வது எல்லாம் வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண்டு உலகிற்கு என்றே வேதங்கள் விதிக்கும் என்பர் –தேசீய:51 8/1,2
ஞாலம் எலாம் பசி இன்றி காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலம் மிக்கு ஓங்க – பாஞ்சாலி:1 116/3
கொற்றம் மிக்கு உயர் கன்னன் பணி கொடியோன் இளையவர் சகுனியொடும் – பாஞ்சாலி:2 159/2
அணி மிக்கு உயர் தமிழை தரு – பிற்சேர்க்கை:18 1/5
மேல்

மிக்குள்ளோர் (1)

ஐயகோ நங்கள் பாரதநாட்டில் அறிவிலார் அற பற்று மிக்குள்ளோர்
நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் – பாஞ்சாலி:2 181/2,3
மேல்

மிக்குற (1)

பேதை நீயும் முகம் மலர்வு எய்தி பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய் – பாஞ்சாலி:2 199/2
மேல்

மிக (72)

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகு இன்ப கேணி என்றே மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரதநாயகிதன் திருக்கை –தேசீய:8 3/1,2
துஞ்சுது முகட்டில் என்பார் மிக துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார் –தேசீய:15 1/4
ஞானம் படை தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு –தேசீய:20 10/2
எ நகரிலும் இது முழக்கம் மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் –தேசீய:35 1/2
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
சக்தியும் சிறப்பும் மிக பெறுவாய் சிவ – தோத்திர:26 10/3
தாயே எனக்கு மிக நிதியும் அறம்தன்னை காக்கும் ஒரு திறனும் தருவாயே – தோத்திர:32 2/2
வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை – தோத்திர:32 4/2
மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டு இருக்க செய்வாய் – தோத்திர:32 5/4
நண்ணும் பாட்டினொடு தாளம் மிக நன்றா உளத்து அழுந்தல் வேண்டும் பல – தோத்திர:32 7/3
எண் இரண்டு கோடியினும் மிக பலவாம் வீண் கவலை எளியனேற்கே – தோத்திர:44 1/4
வேதாவின் தாயே மிக பணிந்து வாழ்வோமே – தோத்திர:63 1/4
சின்னமும் பின்னமுமா மனம் சிந்தி உளம் மிக நொந்திடுவேன் அம்மா – தோத்திர:64 6/4
கண்ணன் நல் தேரில் மிக
எண் அயர்ந்தான் ஒர் இளைஞனை கண்டேன் – தோத்திர:68 15/2,3
நல்லியலார் யவனத்தியர் மேனியை வெண்ணிலாவே மூடு நல் திரை மேனி நயம் மிக காட்டிடும் வெண்ணிலாவே – தோத்திர:73 5/2
ஊண் மிக விரும்பு – பல்வகை:1 2/6
பாலை பொழிந்து தரும் பாப்பா அந்த பசு மிக நல்லதடி பாப்பா – பல்வகை:2 4/1
சோம்பல் மிக கெடுதி பாப்பா தாய் சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா – பல்வகை:2 10/1
மெல்ல பயந்து மிக பதுங்கி ஒரு வேற்றுவரும் கண்ட பொழுது ஒதுங்கி – பல்வகை:9 8/1
உயிரிலா செய்திகட்கு உயிர் மிக கொடுத்து – தனி:12 1/14
துன்பு நேரினும் இன்பு என கொள்வார் துய்ப்பர் இன்பம் மிக சுவை கொண்டே – தனி:14 8/4
விராவு புகழ் ஆங்கில தீம் கவியரசர்தாமும் மிக வியந்து கூறி – தனி:22 7/2
அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய் தனை சாரும் அன்பர்க்கு இங்கு – தனி:23 4/1
வீடுறாவணம் யாப்பதை வீடு என்பார் மிக இழிந்த பொருளை பொருள் என்பார் – சுயசரிதை:1 31/1
மிக தானும் உயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீர பிரான் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 43/2
சொன்னபடி நடவாவிடிலோ மிக தொல்லை இழைத்திடுவான் கண்ணன்தன்னை – கண்ணன்:1 6/3
பெண்மை குணமுடையான் சில நேரத்தில் பித்தர் குணமுடையான் மிக
தண்மை குணமுடையான் சில நேரம் தழலின் குணமுடையான் – கண்ணன்:1 8/3,4
கொல்லும் கொலைக்கு அஞ்சிடாத மறவர் குணம் மிக தான் உடையான் கண்ணன் – கண்ணன்:1 9/1
நானத்தை கணக்கிடவே மனம் நாடி மிக முயல்கினும் கூடுவதில்லை – கண்ணன்:2 4/2
மெல்லமெல்ல போய் அவைதாம் விழும் விரி கடல் பொம்மை அது மிக பெரிதாம் – கண்ணன்:2 5/2
ஞாலம் முற்றிலும் நிறைந்தே மிக நயம்தரு பொம்மைகள் எனக்கெனவே – கண்ணன்:2 6/3
கல்வியில் மிக சிறந்தோன் அவன் கவிதையின் இனிமை ஓர் கணக்கில் இல்லை – கண்ணன்:3 2/2
சிறந்தது பார்ப்பனருள்ளே சில செட்டி மக்களொடு மிக பழக்கம் உண்டு – கண்ணன்:3 4/2
நயம் மிக தெரிந்தவன் காண் தனி நடுநின்று விதி செயல் கண்டு மகிழ்வான் – கண்ணன்:3 9/4
இன்பத்தை எண்ணுபவர்க்கே என்றும் இன்பம் மிக தருவதில் இன்பமுடையான் – கண்ணன்:3 10/4
கூலி மிக கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார் – கண்ணன்:4 1/1
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் – கண்ணன்:4 1/2
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர் – கண்ணன்:4 1/11
என் உளத்து ஆசை அறிந்தவர் மிக இன்புற்று உரைத்திடலாயினர் தம்பி – கண்ணன்:7 3/1
சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/4
காதால் இந்த உரை கேட்டேன் அட கண்ணா என்று அலறி வீழ்ந்தேன் மிக
போதாகவில்லை இதற்குள்ளே என்றன் போதம் தெளிய நினை கண்டேன் – கண்ணன்:12 11/1,2
பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக பீழை இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 7/1
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
முன்னை மிக பழமை இரணியனாம் எந்தை மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ – கண்ணன்:19 5/1
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
செந்தழல் வேள்விகளாம் மிக சீர்பெறும் சாத்திர கேள்விகளாம் – பாஞ்சாலி:1 8/2
இங்கு இது கேட்ட சுயோதனன் மிக இங்கிதம் சொல்லினை மாமனே என்று – பாஞ்சாலி:1 57/1
சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி – பாஞ்சாலி:1 61/2,3
வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக
நொய்யதொர் கண்ணனுக்கு ஆற்றினார் மன்னர் நொந்து மனம் குன்றிப்போயினர் பணிசெய்யவும் – பாஞ்சாலி:1 67/2,3
பாண்டவர் செல்வம் விழைகின்றான் புவி பாரத்தை வேண்டி குழைகின்றான் மிக
நீண்ட மகிதலம் முற்றிலும் உங்கள் நேமி செலும் புகழ் கேட்கின்றான் குலம் – பாஞ்சாலி:1 68/1,2
துப்பு இதழ் மைத்துனி தான் சிரித்திடில் தோஷம் இதில் மிக வந்ததோ – பாஞ்சாலி:1 76/4
இது மிக தீது என்றே அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன் – பாஞ்சாலி:1 128/3
விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா – பாஞ்சாலி:1 134/4
வெம் திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள்தோறும் ஒலி மிக செய்தன – பாஞ்சாலி:2 156/2
நா திறன் மிக உடையாய் எனில் நம்மவர் காத்திடும் பழ வழக்கை – பாஞ்சாலி:2 175/3
ஓரி கழுகு என்று இவை எலாம் தமது உள்ளம் களிகொண்டு விம்மல் போல் மிக
சீரிய வீமனை சூதினில் அந்த தீயர் விழுந்திட காணலும் நின்று – பாஞ்சாலி:3 237/2,3
என்று அந்த மாமன் உரைப்பவே வளர் இன்பம் மனத்தில் உடையனாய் மிக
நன்றுநன்று என்று சுயோதனன் சிறு நாய் ஒன்று தேன் கலசத்தினை எண்ணி – பாஞ்சாலி:3 242/1,2
வேள்வி தவங்கள் மிக புரிந்த வேதியர்கள் – பாஞ்சாலி:5 271/36
மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய் – குயில்:1 1/18
சால மிக பெரிய சாதனை காண் இஃது எல்லாம் – குயில்:7 1/91
கானாமுதம் படைத்த காட்சி மிக விந்தையடா – குயில்:7 1/94
வானத்து சுடர்கள் எல்லாம் மிக இனியன – வசனகவிதை:1 1/4
உங்கள் கூட்டம் மிக இனிது – வசனகவிதை:2 9/22
ஞாயிறு மிக சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும் – வசனகவிதை:2 10/19
பசுவே இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்கு புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே – வசனகவிதை:6 3/28
பொன்னும் மணியும் மிக பொங்கிநின்ற இ நாட்டில் – பிற்சேர்க்கை:5 9/1
என்னானும் தகுதியிலேம் மிக பொல்லேம் பழியுடையேம் இழிவு சான்றேம் – பிற்சேர்க்கை:7 1/2
கவிதை மிக நல்லதேனும் அ கதைகள் பொய் என்று தெளிவுற கண்டோம் – பிற்சேர்க்கை:8 10/1
சின்னஞ்சிறு குடிலிலே மிக சீரழி வீடுகளில் – பிற்சேர்க்கை:14 11/1
பூ நிறை தருக்களிலும் மிக பொலிவுடை சோலையிலும் – பிற்சேர்க்கை:14 12/1
தானே தளைப்பட்டு மிக சஞ்சலப்படும் மனிதா – பிற்சேர்க்கை:14 18/1
அளப்பரும் குணநலம் மிக நினைப்பவர் அகத்து எழும் படர் அலரி முன்பனி என அகற்று செந்திரு மட மயில் தழுவிய பெருமாளே – பிற்சேர்க்கை:24 3/8
மேல்

மிகமிக (2)

நேயமுற்றது வந்து மிகமிக நித்தலும் அதற்கு ஆசை வளருமால் – சுயசரிதை:1 41/3
செயிர்த்த சிந்தையர் பண நசை மிகமிக வருத்த வந்த வல் வினைபுரி முகடிகள் சிறக்கும் மன்பதை உயிர் கவர் எம படர் எனவாகி – பிற்சேர்க்கை:24 3/1
மேல்

மிகலுற்றே (1)

சாமி அந்த பகை மிகலுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய் – பாஞ்சாலி:1 103/4
மேல்

மிகவும் (11)

பருவம் பொறுத்திருந்தேனே மிகவும் நம்பி – தோத்திர:56 1/5
வேண்டும் உபாயம் மிகவும் எளிதாகுமடா –வேதாந்த:11 16/2
அன்பு மிகவும் உடையான் தெளிந்த அறிவினில் உயிர் குலம் ஏற்றமுறவே – கண்ணன்:3 6/2
கண்டு மிகவும் களிப்புடனே நான் அவனை – கண்ணன்:4 1/40
கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொல கூசா சழக்கன் – கண்ணன்:9 10/1
கூண்டுக்கிளியினை போல் தனிமைகொண்டு மிகவும் நொந்தேன் – கண்ணன்:10 1/3
மனிதர் மிகவும் இனியர் – வசனகவிதை:1 1/14
உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன – வசனகவிதை:1 2/1
வலிமைதான் அழகுடன் கலக்கும் இனிமை மிகவும் பெரிது – வசனகவிதை:2 3/11
ஆனால் இ பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோகரஸம் தவிர்ந்தது – வசனகவிதை:3 6/3
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான் உள்ளதை சொல்லிவிடுவதிலே என்ன குற்றம் – வசனகவிதை:4 1/36
மேல்

மிகவே (2)

செயல் இங்கு சித்த விருப்பினை பின்பற்றும் சீர் மிகவே
பயிலும் நல் அன்பை இயல்பு என கொள்ளுதிர் பாரிலுள்ளீர் – தோத்திர:1 38/2,3
அதி ஆசை விஞ்சி நெறி ஏதும் இன்றி அவமான வஞ்சம் மிகவே
துதி மேவும் எங்கள் பழநாடு கொண்டு தொலையாத வண்மை அறம் நீள் – பிற்சேர்க்கை:24 4/1,2
மேல்

மிகு (8)

சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு –தேசீய:4 2/3
இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும் –தேசீய:29 1/1
நாண் இலகு வில்லினொடு தூணி நல்ல நாதம் மிகு சங்கொலியும் பேணி – பல்வகை:9 2/1
வாசம் மிகு துழாய் தாரான் கண்ணன் அடி மறவாத மனத்தான் சக்திதாசன் – தனி:22 4/3
செவ்விதின் வாழ்க அ சீர் மிகு சாதியின் – தனி:24 1/42
கன்னங்கரியதுவாய் அகல் காட்சியதாய் மிகு மாட்சியதாய் – பாஞ்சாலி:1 15/1
முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/4
காற்றும் ஒளியும் மிகு ஆகாயமே எங்களுக்கு – பிற்சேர்க்கை:14 6/1
மேல்

மிகுக-மன்னோ (1)

விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ –தேசீய:43 5/4
மேல்

மிகுத்தி (1)

வேதனை பற்பல உற்றன நல் திறல் வீரம் அழித்து அதி துக்கம் மிகுத்தி மேதகு நல் கலை முற்ற ஒழித்தனம் இனியேனும் – பிற்சேர்க்கை:24 1/3
மேல்

மிகுத்து (1)

மது மிகுத்து உண்டவன் போல் ஒரு வார்த்தையையே பற்றி பிதற்றுகிறான் – பாஞ்சாலி:1 128/4
மேல்

மிகுதல் (1)

ஆபத்து அரசர்க்கு வேறு உண்டோ தம்மில் அன்னியர் செல்வம் மிகுதல் போல் – பாஞ்சாலி:1 64/4
மேல்

மிகுதியால் (2)

தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள் அன்பு மிகுதியால்
ஒன்று பலவினும் இனிது அன்றோ – வசனகவிதை:2 3/15,16
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் நோய் வருகிறது அதனை மாற்றி அருள வேண்டும் – வசனகவிதை:5 2/9
மேல்

மிகுதியுற்று (1)

நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேய் இரண்டும் – குயில்:9 1/203
மேல்

மிகுந்த (16)

வீரியம் மிகுந்த மேன்மையோர் இரு-மின் –தேசீய:32 1/92
பக்தியுடையார் காரியத்தில் பதறார் மிகுந்த பொறுமையுடன் – தோத்திர:1 27/1
வெல் வயிர சீர் மிகுந்த வேல் – தோத்திர:66 3/4
சீத மணி நெடு வான குளத்திடை வெண்ணிலாவே நீ தேசு மிகுந்த வெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே – தோத்திர:73 4/2
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா – பல்வகை:2 9/2
வன்ன சுடர் மிகுந்த வானகத்தே தென்திசையில் – தனி:1 6/1
சுவை மிகுந்த பண் வளனும் அகன்றது என பகரலாமே – தனி:20 2/4
பெண்கள் எல்லோரும் அவர் வீடு சென்றிட்டார் பிரியம் மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான் – கண்ணன்:11 6/2
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிர கோமான் – பாஞ்சாலி:1 122/3
களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான் – பாஞ்சாலி:2 188/2
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே – குயில்:3 1/18
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும் – குயில்:3 1/37
மானிடரும் தம்முள் வலி மிகுந்த மைந்தர்தமை – குயில்:7 1/19
மோசம் மிகுந்த முழு மாய செய்கை பல – குயில்:9 1/204
இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு – வசனகவிதை:4 6/3
வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்கு காற்று ஓடிவருகிறது – வசனகவிதை:5 2/1
மேல்

மிகுந்தது (2)

நேரம் மிகுந்தது இன்னும் நித்திரை இன்றி உங்கள் நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர் – கண்ணன்:11 1/1
சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/4
மேல்

மிகுந்தவர் (1)

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் – தோத்திர:62 10/1
மேல்

மிகுந்தனை (1)

ஆற்றலின் மிகுந்தனை அரும் பதம் கூட்டுவை –தேசீய:19 3/5
மேல்

மிகுந்தீர் (1)

காளையர்தம்முள்ளே கனம் மிகுந்தீர் ஆரியரே – குயில்:7 1/21
மேல்

மிகுந்து (4)

மட்டு மிகுந்து அடித்தாலும் அதை மதியாது அவ் உறுதிகொள் மாணிக்க படலம் –தேசீய:14 2/2
பதம் திரு இரண்டும் மாறி பழி மிகுந்து இழிவுற்றாலும் –தேசீய:29 1/2
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வி தேவியின் ஒளி மிகுந்து ஓங்க – தோத்திர:62 7/4
இங்கு இதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில் – கண்ணன்:4 1/13
மேல்

மிகுந்துவரல் (1)

பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால் – கண்ணன்:4 1/43
மேல்

மிகுந்தேன் (1)

வாணியை சரண்புகுந்தேன் அருள் வாக்கு அளிப்பாள் என திடம் மிகுந்தேன்
பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள் – பாஞ்சாலி:1 6/1,2
மேல்

மிகும் (6)

சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் – தோத்திர:13 1/2
வியப்பு மிகும் புத்திசையில் வியத்தகும் என் கவிதையினை வேந்தனே நின் – தனி:22 8/1
நயம் மிகும் தனி மாதை மா மணம் நண்ணு பாலர் தமக்கு உரித்தாம் அன்றோ – சுயசரிதை:1 7/3
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
மிகும் உரை சொல்லிவிட்டாய் விரகிலாய் புலனும் இல்லாய் – பாஞ்சாலி:5 288/4
எங்கள் சிவனார் எழில் பதமே துங்கம் மிகும்
வேத முடியின் மிசையே விளங்கு நல் – பிற்சேர்க்கை:12 5/2,3
மேல்

மிகுவதன் (1)

மிகுவதன் முன்பு சகுனியும் ஐய வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்க – பாஞ்சாலி:3 230/3
மேல்

மிகைபட (1)

மெல்லிய மேக திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே உன்றன் மேனி அழகு மிகைபட காணுது வெண்ணிலாவே – தோத்திர:73 5/1
மேல்

மிகையால் (3)

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் –தேசீய:5 2/2
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர் –தேசீய:42 1/87
அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின் ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல் – பாஞ்சாலி:1 144/2
மேல்

மிகையும் (1)

தப்பி மிகையும் குறையுமா சுற்றும் தன்மை அதற்கு உளதாகுமோ இதை – பாஞ்சாலி:1 138/2
மேல்

மிகையுறும் (1)

மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமை சார்ந்து நன்கு உய்வார் – பாஞ்சாலி:1 105/4
மேல்

மிச்ச (1)

ஒரு மூங்கில் கழியிலே கொஞ்சம் மிச்ச கயிறு தொங்குகிறது – வசனகவிதை:4 1/4
மேல்

மிச்சத்தை (1)

மிச்சத்தை பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை – சுயசரிதை:2 7/2
மேல்

மிச்சம் (1)

மிச்சம் இல்லை பழம் துயர் குப்பை வெற்றி உண்டு விரைவினில் உண்டு – பிற்சேர்க்கை:1 6/2
மேல்

மிசிரம் (2)

சீன மிசிரம் யவனர் அகம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசி கலை –தேசீய:20 10/1
தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும் – தோத்திர:62 7/3
மேல்

மிசை (80)

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நல் நாட்டு இளம்பெண்களுடனே –தேசீய:5 5/1
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே பார் மிசை ஏது ஒரு நூல் இது போலே –தேசீய:6 1/3
பருதியின் பேரொளி வானிடை கண்டோம் பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம் –தேசீய:11 3/1
சொற்றது கேளீர் புவி மிசை இன்று –தேசீய:12 5/16
தலைவனா கொண்டு புவி மிசை தருமமே –தேசீய:12 5/21
பரி மிசை ஊர்வாள் அல்லள் பார் அனைத்தும் அஞ்சும் –தேசீய:13 6/3
மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/2
இந்த பெரும் பழி தீரும் புகழ் ஏறி புவி மிசை என்றும் இருப்பேன் –தேசீய:21 12/2
படி மிசை தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய் –தேசீய:41 2/3
படி மிசை புதிதா சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய் –தேசீய:41 3/4
நெஞ்சினை கிழித்து நிலம் மிசை உதிரம் –தேசீய:42 1/46
தாரணி விளக்காம் என் அரு நாட்டின் தவ பெயரதன் மிசை ஆணை –தேசீய:50 1/2
ஆயவற்று என் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும் பகை அதன் மிசை ஆணை –தேசீய:50 3/2
தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/4
யாருக்கே பகை என்றாலும் யார் மிசை இவன் சென்றாலும் –தேசீய:51 7/1
பாவி நெஞ்சே பார் மிசை நின்னை – தோத்திர:1 36/3
வேலின் மிசை ஆணை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தைசெய்வாய் என்று – தோத்திர:4 3/2
வெள்ளை மலர் மிசை வேத கருப்பொருளாக விளங்கிடுவாய் – தோத்திர:18 5/1
சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/4
மாறுதல் இன்றி பராசக்திதன் புகழ் வையம் மிசை நித்தம் பாடுகின்றோம் – தோத்திர:22 6/1
ஓம் சக்தி மிசை பாடல் பல பாடு ஓம் – தோத்திர:26 2/1
மண்ணில் ஆர்க்கும் துயர் இன்றி செய்வேன் வறுமை என்பதை மண் மிசை மாய்ப்பேன் – தோத்திர:37 1/4
திண்ணமுடையான் மணி வண்ணமுடையான் உயிர் தேவர் தலைவன் புவி மிசை தோன்றினன் – தோத்திர:49 1/2
பொக்கென வீழ்ந்தார் உயிர் கக்கி முடித்தார் கடல் போல ஒலிக்குது வேதம் புவி மிசை – தோத்திர:49 2/4
உன்னை அன்றி இன்பம் உண்டோ உலக மிசை வேறே – தோத்திர:58 2/1
தலையிலே தாங்கி தரணி மிசை வாழ்வோமே – தோத்திர:63 4/4
கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா – தோத்திர:70 1/1
மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை – தோத்திர:70 3/2
மயல் கொண்ட காதலரை மண் மிசை காப்பாய் – தோத்திர:72 1/5
பின்னிய மேக சடை மிசை கங்கையும் வெண்ணிலாவே நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/4
எட்டும் புகழ் வளர்ந்து ஓங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே புவி மிசை இன்பம் பெருகிடவே பெரும் திரள் எய்தி பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 3/2
உள்ளம் மிசை தான் அமுத ஊற்றாய் பொழியுமடா –வேதாந்த:11 15/2
சித்தம் மிசை கொள்ளும் சிரத்தை ஒன்றே போதுமடா –வேதாந்த:11 24/2
பழமையே அன்றி பார் மிசை ஏதும் –வேதாந்த:22 1/11
கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன் – பல்வகை:1 1/3
விண்ணினின்று எமை வானவர் காப்பார் மேவி பார் மிசை காப்பவர் நீரே – பல்வகை:8 2/4
அன்னம் அந்த தென்னை அருகினில் ஓர் மாடம் மிசை
வன்னமுற வீற்றிருந்து வாழ்க துணைவரே – தனி:1 22/1,2
மணி சிறு மீன் மிசை வளர்வால் ஒளிதர – தனி:8 1/2
வெற்றி ஐந்து புலன் மிசை கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும் – தனி:14 4/1
நாரதமுனிவன் நமர் மிசை அருளால் – தனி:20 1/18
பாழ் கடந்த பரநிலை என்று அவர் பகரும் அ நிலை பார்த்திலன் பார் மிசை
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ உண்மைதன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன் – சுயசரிதை:1 1/3,4
என்பது யார்க்கும் வியப்பினை நல்குமால் என் செய்கேன் பழி என் மிசை உண்டு-கொல் – சுயசரிதை:1 6/2
மாதரார் மிசை தாம் உறும் காதலை மற்றவர் தர பெற்றிடும் மாந்தரே – சுயசரிதை:1 15/4
நேராக மோன மஹானந்த வாழ்வை நிலத்தின் மிசை அளித்து அமரத்தன்மை ஈவாள் – சுயசரிதை:2 2/4
ஆனாலும் புவியின் மிசை உயிர்கள் எல்லாம் அநியாய மரணம் எய்தல் கொடுமை அன்றோ – சுயசரிதை:2 13/1
என்று இந்த உலகின் மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தர் என்பார் பரமதர்ம – சுயசரிதை:2 34/3
குன்றின் மிசை ஒரு பாய்ச்சலாக பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார் – சுயசரிதை:2 34/4
உருவம் காட்டினான் பின்னர் என்னை தரணி மிசை பெற்றவளின் வடிவம் உற்றான் – சுயசரிதை:2 39/2
காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 42/2
நீங்காத சிவசக்தி அருளை பெற்றோம் நிலத்தின் மிசை அமரநிலை உற்றோம் அப்பா – சுயசரிதை:2 44/2
இங்கு புவி மிசை காவியங்கள் எல்லாம் இலக்கியம் எல்லாம் காதல் புகழ்ச்சி அன்றோ – சுயசரிதை:2 51/4
பாயின் மிசை நானும் தனியே படுத்திருக்கையிலே – கண்ணன்:10 2/1
பாண்டவர் முடி உயர்த்தே இந்த பார் மிசை உலவிடு நாள் வரை நான் – பாஞ்சாலி:1 20/1
எங்கும் புவி மிசை உன்னை போல் எனக்கு இல்லை இனியது சொல்லுவோர் என்று – பாஞ்சாலி:1 57/3
போத துயில்கொளும் நாயகன் கலை போந்து புவி மிசை தோன்றினான் இந்த – பாஞ்சாலி:1 81/3
தாம் பெற்ற மைந்தர்க்கு தீது செய்திடும் தந்தையர் பார் மிசை உண்டு-கொல் கெட்ட – பாஞ்சாலி:1 86/2
ஆர் அமர் தமரல்லார் மிசை ஆற்றி நல் வெற்றியில் ஓங்குதியேல் – பாஞ்சாலி:1 94/2
வாலிகன் தந்ததொர் தேர் மிசை ஏறி அ மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள் – பாஞ்சாலி:2 157/1
புன் தொழில் கவறதனில் இந்த புவி மிசை இணையிலை எனும் புகழான் – பாஞ்சாலி:2 164/1
நீர் பிறக்கும் முன் பார் மிசை மூடர் நேர்ந்தது இல்லை என நினைந்தீரோ – பாஞ்சாலி:2 180/1
படி மிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்விக மலர் கொடியை – பாஞ்சாலி:4 244/1
இன்பமும் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம் எனில் – பாஞ்சாலி:4 258/1
தேவர் புவி மிசை பாண்டவர் அவர் தேவி துருபதன் கன்னி நான் இதை – பாஞ்சாலி:5 268/1
கரிய நல் நிறமுடையாய் அன்று காளிங்கன் தலை மிசை நடம்புரிந்தாய் – பாஞ்சாலி:5 293/3
கானத்து பொய்கையிலே தனி கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள் – பாஞ்சாலி:5 295/3
மா திக்கு வெளியினிலே நடுவானத்தில் பறந்திடும் கருடன் மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர் பொருளே பேரடல் பொருளே – பாஞ்சாலி:5 296/3,4
வம்புரை செய்யும் மூடா என்று மகன் மிசை உறுமி அ தூண் உதைத்தான் – பாஞ்சாலி:5 297/2
நல் ஒளிக்கு வேறு பொருள் ஞாலம் மிசை ஒப்பு உளதோ – குயில்:6 1/39
ஈன பறவை முதுகின் மிசை ஏறிவிட்டால் – குயில்:7 1/26
தாலம் மிசை நின்றன் சமர்த்து உரைக்க வல்லார் யார் – குயில்:7 1/92
பாட்டினை போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா – குயில்:7 1/96
மெய்ம்மை அறிவு இழந்தேன் வீட்டிலே மாடம் மிசை
சித்தம் திகைப்புற்று ஓர் செய்கை அறியாமல் – குயில்:8 1/4,5
வையம் மிசை வைக்க திருவுளமோ மற்று எனையே – குயில்:8 1/44
கண்டதுமே நின் மிசை நான் காதல் கொண்டேன் என்று இசைக்க – குயில்:9 1/79
விந்தையுறு காந்தம் மிசை வீழும் இரும்பினை போல் – குயில்:9 1/115
என்றும் மறத்தல் இயலுமோ பாரின் மிசை
நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணி பெண்ணரசின் – குயில்:9 1/237,238
மன்னர் மிசை செல்வர் மிசை தமிழ் பாடி எய்ப்புற்று மனம் கசந்து – பிற்சேர்க்கை:11 6/1
மன்னர் மிசை செல்வர் மிசை தமிழ் பாடி எய்ப்புற்று மனம் கசந்து – பிற்சேர்க்கை:11 6/1
கடல்புற மணல் மிசை தனியே கண் அயர்ந்து – பிற்சேர்க்கை:17 1/12
பல்லாயிரம் இது போல் பார் மிசை வேறு உள்ளனவே – பிற்சேர்க்கை:25 6/2
மேல்

மிசையே (3)

அரி மிசையே ஊர்வாள் அவள் –தேசீய:13 6/4
மாலை பொழுதில் ஒரு மேடை மிசையே வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன் – கண்ணன்:17 1/1
வேத முடியின் மிசையே விளங்கு நல் – பிற்சேர்க்கை:12 5/3
மேல்

மிஞ்ச (2)

மிஞ்ச நல் பொருள் வாணிகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் – தோத்திர:62 3/3
ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன் – சுயசரிதை:1 40/3
மேல்

மிஞ்சவிடலாமோ (1)

மிஞ்சவிடலாமோ ஹே வீர மாகாளி சாமுண்டி காளீஸ்வரி –தேசீய:53 4/4
மேல்

மிஞ்சி (7)

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டு –தேசீய:41 1/2
களிப்பு மிஞ்சி ஒளியினை பண்டு ஒரு காலம் நீர் சென்று தேடியதில்லையோ – பல்வகை:10 1/4
நல் நலம் கொண்ட குடி படை இந்த நானிலம் எங்கும் பெரும் புகழ் மிஞ்சி
மன்னும் அ பாண்டவ சோதரர் இவை வாய்ந்தும் உனக்கு துயர் உண்டோ – பாஞ்சாலி:1 61/3,4
மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன் – குயில்:4 1/14
ஆத்திரம்தான் மிஞ்சி நின்னை ஆங்கு எய்தி காண வந்தான் – குயில்:9 1/121
வீரிய ஞானம் அரும் புகழ் மங்கிட மேவி நல் ஆரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை இருள் கணம் வீவுற வங்க மகா – பிற்சேர்க்கை:3 1/3
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனா முதல் வேறு உள ஊர்களிலும் விஞ்சை எனும்படி அன்புடன் யாரும் வியந்திடும் மந்திரமும் – பிற்சேர்க்கை:3 2/2
மேல்

மிஞ்சிய (3)

மிஞ்சிய அருளால் மிதமிஞ்சிய – தோத்திர:68 21/1
மெய்ப்பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும் – கண்ணன்:6 1/87
மிஞ்சிய பொழுது எலாம் அவருடன் மேவி – கண்ணன்:6 1/90
மேல்

மிஞ்சியிருக்கும் (1)

நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள் மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள் – வசனகவிதை:4 10/9
மேல்

மிஞ்சு (4)

மிஞ்சு பொருள் அதற்கு ஆற்றுவன் என்றான் மிக்க உவகையொடு ஆங்கு அவர் சென்றே – பாஞ்சாலி:1 109/3
மிஞ்சு சீர்த்தி கொள் பாரதநாட்டில் மேவும் ஆரியர் என்றனர் மேலோர் – பாஞ்சாலி:2 172/4
மிஞ்சு புற சுமையும் வீர திருவாலும் – குயில்:7 1/24
மிஞ்சு நின்றன் காதல் விழி குறிப்பினால் அறிந்தே – குயில்:9 1/93
மேல்

மிஞ்சுவான் (1)

மிஞ்சுவான் ஆகி வீதியில் பெரியோர் – கண்ணன்:6 1/47
மேல்

மிடி (4)

பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் மிடி
பயம் கொல்லுவார் துயர் பகை வெல்லுவார் –தேசீய:5 0/1,2
சோர வாழ்க்கை துயர் மிடி ஆதிய –தேசீய:29 9/2
பார்வைகள் தோன்றும் மிடி பாம்பு கடித்த விஷம் அகன்றே நல்ல –வேதாந்த:15 4/2
தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர் – சுயசரிதை:1 46/1
மேல்

மிடிமை (3)

மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை மீட்டினாய் ஆசை ஊட்டினாய் –தேசீய:38 4/2
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல் சிறிது ஏகி – தனி:13 1/21,22
மிடிமை நோய் தீர்ப்பான் வீணர்தம் உலக – தனி:13 1/25
மேல்

மிடிமையில் (1)

மிடிமையில் அழிந்திடேல் – பல்வகை:1 2/77
மேல்

மிடிமையும் (3)

விளங்குக துன்பமும் மிடிமையும் நோவும் – தோத்திர:1 32/10
துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்து சுகம் அருளல் வேண்டும் – கண்ணன்:22 2/1
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் – கண்ணன்:23 2/1
மேல்

மிடிமையை (2)

கூறும் எங்கள் மிடிமையை தீர்ப்பது குற்றமோ இதில் செற்றமோ –தேசீய:39 5/2
தேவர் மன்னன் மிடிமையை பாடல் போல் தீய கைக்கிளை யான் எவன் பாடுதல் – சுயசரிதை:1 17/1
மேல்

மிண்டி (1)

மிண்டி குதித்திடுகின்றான் திசை வெற்பு குதிக்குது வானத்து தேவர் – தனி:4 3/2
மேல்

மித்திரா (1)

இந்திரா வருணா அர்யமா பகா மித்திரா உங்கள் கருணையை பாடுகிறேன் – வசனகவிதை:5 2/17
மேல்

மித்தைகள் (1)

மித்தைகள் தள்ளிடடா வெறும் வேஷங்கள் தள்ளிடடா – பிற்சேர்க்கை:14 22/2
மேல்

மித்ரன் (1)

வருணன் மித்ரன் அர்யமானும் மதுவை உண்பாரே ஐயோ நாம் – தோத்திர:75 12/1
மேல்

மிதக்கும் (1)

தங்க திமிங்கிலம் தாம் பல மிதக்கும்
இருள் கடல் ஆஹா எங்கு நோக்கிடினும் – பாஞ்சாலி:1 152/15,16
மேல்

மிதத்து (1)

கிரி வகுத்த ஓடையிலே மிதத்து செல்லும் கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்குமேற்காம் – பாஞ்சாலி:1 146/3
மேல்

மிதந்த (1)

மீள விழியில் மிதந்த கவிதை எலாம் – குயில்:9 1/234
மேல்

மிதந்திடும் (1)

நீல பொய்கையின் மிதந்திடும் தங்க – பாஞ்சாலி:1 152/12
மேல்

மிதந்து (1)

துன்பம் இலாதே மிதந்து துள்ளி விளையாடுவதே – பிற்சேர்க்கை:25 5/2
மேல்

மிதம் (1)

மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
மேல்

மிதமிஞ்சிய (1)

மிஞ்சிய அருளால் மிதமிஞ்சிய
அருளால் அந்த – தோத்திர:68 21/1,2
மேல்

மிதிக்கிறார் (1)

சீமை துணி என்றால் உள்ளம் கொதிக்கிறார் சீர் இல்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்
தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசி குதிக்கிறார் –தேசீய:36 4/1,2
மேல்

மிதிக்கிறேன் (1)

கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட –வேதாந்த:7 0/2
மேல்

மிதித்திடலாமோ (1)

மெலிவு கண்டாலும் குழந்தைதன்னை வீழ்த்தி மிதித்திடலாமோ – பல்வகை:3 25/2
மேல்

மிதித்திடுவேனடா (1)

சாக மிதித்திடுவேனடா என்று தார் மன்னன் சொல்லிட பாகனும் மன்னன் – பாஞ்சாலி:4 261/3
மேல்

மிதித்திடுவோம் (1)

வற்புறுத்தி பெண்ணை கட்டிக்கொடுக்கும் வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம் – பல்வகை:6 5/2
மேல்

மிதித்து (1)

மிதித்து தராதலத்தில் போக்கியே – பாஞ்சாலி:5 271/19
மேல்

மிதித்துவிடு (1)

மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா – பல்வகை:2 8/2
மேல்

மிதித்தே (1)

அம்மி மிதித்தே அருந்ததியை காட்டி எனை – பாஞ்சாலி:5 271/28
மேல்

மிதிலாதிபன் (1)

கேள்விக்கு ஒரு மிதிலாதிபன் ஒத்தோன் கேடற்ற மாதம் இது என கண்டே – பாஞ்சாலி:1 124/4
மேல்

மிதிலை (1)

மிதிலை எரிந்திட வேத பொருளை வினவும் சனகன் மதி தன் –தேசீய:8 11/1
மேல்

மிதிலைக்கு (1)

போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/3
மேல்

மிருக (3)

மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன் காரணம் யாது – வசனகவிதை:6 3/32
டுபுக் வெயில் காற்று ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களை காட்டிலும் எங்களுக்கு அதிகம் – வசனகவிதை:6 3/33
ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதை காட்டிலும் – வசனகவிதை:6 3/35
மேல்

மிருகங்கள் (1)

பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் – சுயசரிதை:2 54/3
மேல்

மிலேச்ச (1)

ஆற்றல் மிலேச்ச மன்னர் தொலை அரபியர் ஒட்டைகள் கொணர்ந்து தந்தார் – பாஞ்சாலி:1 33/4
மேல்

மிலேச்சர் (5)

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது –தேசீய:24 1/38
வேதநூல் பழிக்கும் வெளி திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரததேவி –தேசீய:32 1/16,17
தாய்த்திருநாட்டை தறுகண் மிலேச்சர்
பேய் தகை கொண்டோர் பெருமையும் வன்மையும் –தேசீய:32 1/42,43
மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும் –தேசீய:32 1/75
செம்மை தீர் மிலேச்சர் தேசமும் பிறிதாம் –தேசீய:32 1/185
மேல்

மிலேச்சர்தம் (1)

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் – சுயசரிதை:1 25/4
மேல்

மிலேச்சரை (4)

தாய்த்திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை
மாய்த்திட விரும்பான் வாழ்வும் ஓர் வாழ்வு-கொல் –தேசீய:32 1/65,66
கலையறு மிலேச்சரை கடிபவர் இரு-மின் –தேசீய:32 1/98
செற்று இனி மிலேச்சரை தீர்த்திட வம்-மின் –தேசீய:32 1/116
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார் – பாஞ்சாலி:2 172/3
மேல்

மிளிரும் (1)

சந்ததமும் இன்பமுற மிளிரும் – தோத்திர:24 41/5
மேல்

மின் (15)

கரிய மேக திரள் என செல்லுவை காலும் மின் என வந்து உயிர் கொல்லுவை – தோத்திர:34 3/2
மின் ஒளி தரும் நன் மணிகள் மேடை உயர்ந்த மாளிகைகள் – தோத்திர:58 2/3
மின் திகழும் பச்சைக்கிளி வந்து வீற்றிருந்தே – தனி:1 11/2
துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னை பார் என்று சொன்னாள் – தனி:9 1/3
அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே – பாஞ்சாலி:1 151/1
இமை குவிய மின் வட்டின் வயிர கால்கள் எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய் – பாஞ்சாலி:1 151/3
கடி கமழ் மின் உருவை ஒரு கமனிய கனவினை காதலினை – பாஞ்சாலி:4 244/2
மின் செய் கதிர் விழியால் வெம் நோக்கு நோக்கினாள் – பாஞ்சாலி:5 271/44
பொன் போல் குரலும் புது மின் போல் வார்த்தைகளும் – குயில்:7 1/14
மின் சக்தி இல்லாத இடம் இல்லை – வசனகவிதை:2 13/8
நமது வாக்கு மின் போல் அடித்திடுக – வசனகவிதை:2 13/17
மின் மெலியதை கொல்லும் – வசனகவிதை:2 13/18
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது – வசனகவிதை:4 2/6
காற்றே நீரில் சூறாவளி காட்டி வானத்தில் மின் ஏற்றி நீரை நெருப்பாக்கி நெருப்பை நீராக்கி – வசனகவிதை:4 2/19
நெற்றி மேல் மேகத்து மின் அடிகள் நேர்வித்தான் – பிற்சேர்க்கை:25 16/1
மேல்

மின்கொடி (1)

நின்ற ஒரு மின்கொடி போல் நேர்ந்த மணி பெண்ணரசின் – குயில்:9 1/238
மேல்

மின்சக்தி (1)

காற்றிலே வரையிலே எங்கும் மின்சக்தி உறங்கிக்கிடக்கின்றது – வசனகவிதை:2 13/11
மேல்

மின்படு (1)

மின்படு சிவசக்தி எங்கள் வீரை நின் திருவடி சரண்புகுந்தோம் – தோத்திர:11 2/4
மேல்

மின்மினி (1)

விண்ணில் இரவிதனை விற்றுவிட்டு எவரும் போய் மின்மினி கொள்வாரோ –தேசீய:26 5/1
மேல்

மின்மினிதன்னை (1)

ஞாயிறு நிற்பவும் மின்மினிதன்னை நாடி தொழுதிடும் தன்மை போல் அவர் – பாஞ்சாலி:1 66/3
மேல்

மின்னல் (17)

இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலி புகழ்வது இங்கு உனையே –தேசீய:41 3/2
இழையும் மின்னல் சரேலென்று பாயவும் ஈர வாடை இரைந்து ஒலி செய்யவும் – தோத்திர:19 4/2
மின்னல் விளக்கிற்கு வானகம் கொட்டும் இவ் வெட்டொலி ஏன் கொணர்ந்தாய் – தனி:3 4/4
வெட்டி அடிக்குது மின்னல் கடல் வீர திரை கொண்டு விண்ணை இடிக்குது – தனி:4 2/1
மின்னல் அனைய திறல் ஓங்குமே உயிர் வெள்ளம் கரை அடங்கி பாயுமே – தனி:11 7/1
இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து – பாஞ்சாலி:1 150/2
மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய் – குயில்:1 1/18
மின்னல் கொடிகள் விளையாடுதல் போலே – குயில்:9 1/62
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது – வசனகவிதை:1 1/5
மின்னல் பருத்தி – வசனகவிதை:1 4/9
மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து – வசனகவிதை:2 2/2
மழை பெய்கிறது காற்று அடிக்கின்றது இடி குமுறுகின்றது மின்னல் வெட்டுகின்றது – வசனகவிதை:2 13/1
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம் – வசனகவிதை:2 13/3
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக – வசனகவிதை:2 13/13
நமது நெஞ்சிலே மின்னல் விசிறி பாய்க – வசனகவிதை:2 13/14
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக – வசனகவிதை:2 13/15
நமது பாட்டு மின்னல் உடைத்தாகுக – வசனகவிதை:2 13/16
மேல்

மின்னல்கொடியார் (1)

மின்னல்கொடியார் வினவிவர தாம் பணித்தார் – பாஞ்சாலி:4 252/118
மேல்

மின்னல்பூ (1)

மேக குழந்தைகள் மின்னல்பூ சொரிகின்றன – வசனகவிதை:2 13/7
மேல்

மின்னலும் (1)

இடியும் மின்னலும் நினது வேடிக்கை – வசனகவிதை:2 12/12
மேல்

மின்னலை (4)

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும் எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள் – தோத்திர:55 1/1
புலவர்களே மின்னலை பாடுவோம் வாருங்கள் – வசனகவிதை:2 13/2
மின்னலை தொழுகின்றோம் – வசனகவிதை:2 13/5
ஒளியை மின்னலை சுடரை மணியை – வசனகவிதை:2 13/21
மேல்

மின்னாள் (1)

மின்னாள் இங்கு இந்நாளின் முதியோளாய் பிறர் எள்ள வீழ்ந்த காலை –தேசீய:43 1/3
மேல்

மின்னி (2)

மின்னி நின்றீர் தேவர் எங்கள் வேள்வி கொள்வீரே இ நேரம் – தோத்திர:75 16/2
வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளை போல் மின்னி நிறைந்திருக்கும் – கண்ணன்:2 4/1
மேல்

மின்னிற்றே (1)

பார்த்த வெளி எல்லாம் பகல் ஒளியாய் மின்னிற்றே – தனி:1 2/2
மேல்

மின்னு (1)

மின்னு நவரத்தினம் போல் மேனி அழகுடையாள் – தோத்திர:63 3/2
மேல்

மின்னுகின்ற (2)

மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே – தனி:1 5/2
மேல்

மின்னும் (2)

மின்னும் நின்றன் வடிவில் பணிகள் மேவி நிற்கும் அழகை – தோத்திர:57 4/2
மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள் – பாஞ்சாலி:3 241/3
மேல்

மின்னுற்று (1)

நீர் சுனை கணம் மின்னுற்று இலக நெடிய குன்றம் நகைத்து எழில்கொள்ள – தனி:10 4/1
மேல்

மின்னென (1)

மின்னென பாய்ந்து மீண்டு வந்து உற்றனன் –தேசீய:42 1/63
மேல்

மின்னே (1)

அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே பின்னே அசைவுறும் ஓர் மின் செய்த வட்டு முன்னே – பாஞ்சாலி:1 151/1
மேல்

மின்னை (1)

பொன்னை பொழிந்திடு மின்னை வளர்த்திடு போற்றி உனக்கு இசைத்தோம் – தோத்திர:18 4/1
மேல்

மின்னையே (1)

பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் – தோத்திர:53 1/1
மேல்