யோ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யோக (5)

பற்று அற்ற யோக படையால் உட்பகைகள் ஆறும் – வில்லி:2 53/3
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக தொட்ட – வில்லி:2 93/3
பந்தனை இலாதான் யோக துயில் வர பள்ளிகொண்டான் – வில்லி:25 7/4
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் – வில்லி:43 36/4
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி – வில்லி:46 199/1

மேல்


யோகத்து (1)

அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே – வில்லி:45 246/1,2

மேல்


யோகம் (3)

சிவம் உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம்
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில் – வில்லி:2 66/1,2
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி – வில்லி:38 38/2
பல் நாளும் யோகம் பயில்வோரின் பதின்மடங்கா – வில்லி:46 105/1

மேல்


யோகி (1)

யோகி அம் கையின் அணைத்து உயக்கம் மாற்றியே – வில்லி:41 191/4

மேல்


யோகிகள் (1)

யோகியாய் இருந்தும் யோகிகள் முதலா உரைப்ப அரும் பல பொருளாயும் – வில்லி:12 78/2

மேல்


யோகிகளும் (1)

ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும் தம்பிமாரும் – வில்லி:12 19/3

மேல்


யோகியாய் (1)

யோகியாய் இருந்தும் யோகிகள் முதலா உரைப்ப அரும் பல பொருளாயும் – வில்லி:12 78/2

மேல்


யோகினை (1)

அன்று அரன் இருந்த யோகினை அகற்றி அறிவு இலாது அநங்கனா வெந்த – வில்லி:12 66/1

மேல்


யோகு (1)

யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே – வில்லி:12 125/4

மேல்


யோசனை (11)

யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி – வில்லி:1 97/2
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து – வில்லி:2 5/3
அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி – வில்லி:9 56/1
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
ஒன்றிய யோசனை ஓர் இருநூறு – வில்லி:14 62/2
சென்ற பின் யோசனை சிற்சில சென்றால் – வில்லி:14 62/3
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம் – வில்லி:27 69/3
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார் – வில்லி:27 72/4
எண் அறு பரப்பினிடை யோசனை களத்தினிடை இரு படையும் நிற்ப எவரும் – வில்லி:28 66/1
பாப்பு வெம் பதாகை பார்த்திவன் பணியால் பத்து இரண்டு யோசனை பரப்பில் – வில்லி:42 5/1
பகைவன் நின்ற அ நிலம் பதிற்றிரண்டு யோசனை
புகலுகின்ற பொழுது சென்றது என்று அவண் பொறாமல் மால் – வில்லி:42 15/2,3

மேல்


யோசனைக்கும் (1)

யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் – வில்லி:42 78/1

மேல்


யோதன (1)

புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா – வில்லி:41 109/2

மேல்


யோதனத்தில் (1)

யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் – வில்லி:42 78/1

மேல்


யோதனமே (1)

நாவலருக்கும் உரைப்பு அரிது அந்த நனம் தலை யோதனமே – வில்லி:44 63/4

மேல்


யோனி (3)

ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி – வில்லி:12 98/2
எந்தஎந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன – வில்லி:30 1/1
திங்கள் அன்ன கும்ப யோனி சேனை-தன்னை இகழுவார் – வில்லி:40 35/2

மேல்


யோனி-தோறும் (1)

அந்தஅந்த யோனி-தோறும் ஆவி ஆன தன்மையை – வில்லி:30 1/2

மேல்


யோனிகட்கும் (1)

எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும் – வில்லி:7 55/3

மேல்


யோனிகள் (2)

தக்க பல யோனிகள் சராசரம் அனைத்தும் – வில்லி:23 1/2
பிறிந்த யோனிகள் அனைத்துமாய் முதலுமாய் பெருமிதம் மறந்து ஈண்டு – வில்லி:42 36/3

மேல்


யோனிகள்-தம்மில் (1)

உற்ற யோனிகள்-தம்மில் உற்பவியாமல் மானுட உற்பவம் – வில்லி:26 6/1

மேல்


யோனிகள்-தோறும் (1)

துன்றும் துணையாய் பல யோனிகள்-தோறும் எய்தி – வில்லி:5 78/2

மேல்


யோனிகளும் (1)

அமரரானவரும் அமர யோனிகளும் அமரருக்கு அதிபனானவனும் – வில்லி:45 245/1

மேல்


யோனியில் (2)

தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும் – வில்லி:6 10/1
இன்னம் பலபல யோனியில் எய்தா நெறி பெறவே – வில்லி:7 18/1

மேல்


யோனியிலும் (1)

எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன இருந்துழி இருந்துழி அரோ – வில்லி:12 107/4

மேல்


யோனியும் (1)

கட்புலனாக வேறு ஓர் யோனியும் காண்கலாத – வில்லி:16 33/1

மேல்