கெ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெட்ட 2
கெட்டது 3
கெட்டமை 1
கெட்டவர் 1
கெட்டவர்கள் 1
கெட்டன 1
கெட்டனர் 2
கெட்டனன் 2
கெட்டார் 1
கெட்டு 6
கெட்டேன் 1
கெட 11
கெடாத 2
கெடாதவாறும் 1
கெடாது 2
கெடாமல் 1
கெடு 1
கெடுத்தனன் 1
கெடுத்தனையே 1
கெடுத்தான் 1
கெடுதரு 1
கெடுப்பது 1
கெடும் 5
கெடுமோ 2
கெடுவர் 1
கெண்டினான் 1
கெண்டை 1
கெதாயு 1
கெழு 29
கெழும் 2
கெழுமி 2
கெழுமிய 1
கெழுமின 2
கெழுமினாரே 1
கெழுமுற்று 1
கெழுவு 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கெட்ட (2)

கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா – வில்லி:22 24/1
கெட்ட நிலை கண்டு உரககேதனன் உரைப்ப – வில்லி:29 55/2

மேல்


கெட்டது (3)

உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார் – வில்லி:40 35/1
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என – வில்லி:40 35/3
கெட்டது நாககேதனன் வீரம் கிளர் சேனை – வில்லி:43 30/2

மேல்


கெட்டமை (1)

கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா – வில்லி:22 24/1

மேல்


கெட்டவர் (1)

கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால் – வில்லி:41 10/4

மேல்


கெட்டவர்கள் (1)

கெட்டவர்கள் இன்னர் என – வில்லி:41 78/1

மேல்


கெட்டன (1)

கெட்டன பட்டது உரைக்க உண்டோ கேட்கின் – வில்லி:14 115/4

மேல்


கெட்டனர் (2)

கெட்டனர் நிசாசரர்கள் கிரிகள் என வீழ்ந்தார் – வில்லி:37 25/4
கெட்டனர் முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார் – வில்லி:45 119/2

மேல்


கெட்டனன் (2)

கிருபனும் அவனை கண்டு கெட்டனன் கேடு இலாத – வில்லி:22 96/1
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன் மா – வில்லி:44 46/3

மேல்


கெட்டார் (1)

கெட்டார் அரசன் பெரும் சேனையில் கேடு இல் வேந்தர் – வில்லி:36 25/4

மேல்


கெட்டு (6)

அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1
கெட்டு முதுகிட்டனரே – வில்லி:41 67/4
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/2
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் – வில்லி:42 189/3
கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம் – வில்லி:44 47/2

மேல்


கெட்டேன் (1)

நிச்சயம் கொடிது கெட்டேன் இந்த நிட்டூரம் என்னோ – வில்லி:16 40/4

மேல்


கெட (11)

முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில் – வில்லி:1 22/3
தங்கிய சோகமும் தாபமும் கெட
பங்கய விழிகளால் பருகினான் அரோ – வில்லி:1 42/3,4
வரித்த மன்னர் மறம் கெட வன்பினால் – வில்லி:1 124/1
பெருகும் துறை ஏழேழு பிறப்பும் கெட மூழ்கி – வில்லி:7 16/2
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/2
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் – வில்லி:35 10/1
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/3
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும் – வில்லி:43 23/1
இன்றோ தாகம் கெட நாவுக்கு இசைந்த தண்ணீர் பருகிடும் நாள் – வில்லி:45 138/3
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் – வில்லி:46 53/4
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் – வில்லி:46 183/1

மேல்


கெடாத (2)

தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து – வில்லி:27 248/2
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் – வில்லி:38 23/3

மேல்


கெடாதவாறும் (1)

உரத்தினார் கெடாதவாறும் உணர்ந்து தன் பேதை இன்னம் – வில்லி:5 2/3

மேல்


கெடாது (2)

வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன – வில்லி:2 3/2
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/4

மேல்


கெடாமல் (1)

கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர் – வில்லி:11 117/3

மேல்


கெடு (1)

சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – வில்லி:27 23/2

மேல்


கெடுத்தனன் (1)

கெடுத்தனன் அனந்தரமே – வில்லி:41 65/4

மேல்


கெடுத்தனையே (1)

கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ – வில்லி:41 144/4

மேல்


கெடுத்தான் (1)

கெடுத்தான் அரசற்கு இளையோர் எதிர் கிட்டி மீண்டும் – வில்லி:36 29/3

மேல்


கெடுதரு (1)

கேளொடு கெடுதரு கீசகன் கழல் – வில்லி:21 74/1

மேல்


கெடுப்பது (1)

யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே – வில்லி:45 266/4

மேல்


கெடும் (5)

இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் – வில்லி:4 51/4
கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என கரைந்தான் – வில்லி:9 28/4
கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார் – வில்லி:11 221/4
நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் – வில்லி:21 14/4
செல்வி தூரியள் ஆய்விடும் சுற்றமும் சேனையும் கெடும் என்றான் – வில்லி:24 14/4

மேல்


கெடுமோ (2)

நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி – வில்லி:21 13/3
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள் – வில்லி:40 75/1

மேல்


கெடுவர் (1)

கெடுவர் என்பது கேட்டு அறியீர்-கொலோ – வில்லி:12 14/4

மேல்


கெண்டினான் (1)

கெண்டினான் முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான் – வில்லி:29 43/4

மேல்


கெண்டை (1)

கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம் – வில்லி:42 52/3,4

மேல்


கெதாயு (1)

கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/4

மேல்


கெழு (29)

வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல் – வில்லி:1 2/3
நல் நலம் திகழ் கவி-தனக்கு கெழு நண்பாம் – வில்லி:1 24/3
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார் – வில்லி:1 105/3
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/3
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி – வில்லி:5 29/2
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/3
மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால் – வில்லி:7 75/3
பந்தம் உறு பெரும் சிறையில் படை கெழு வேல் சராசந்தன் படுத்தினானே – வில்லி:10 14/4
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் – வில்லி:11 32/2
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற – வில்லி:11 75/3
நா நலம் புனல் கெழு நாடும் கானமும் – வில்லி:11 105/1
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் – வில்லி:14 7/4
கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும் – வில்லி:19 6/1
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/3
தாளொடு தாள் உற தாக்கி மல் கெழு
தோளொடு தோள் உற தோய்ந்து கன்னல் வில் – வில்லி:21 74/2,3
வென்று போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி – வில்லி:27 94/2
இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள் எயிற்று ஓர் – வில்லி:33 25/1
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத – வில்லி:37 28/3
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு
தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில் – வில்லி:40 54/1,2
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம் – வில்லி:43 14/1
துறை கெழு கலைகள் வல்லாய் துன்னலர் செகுக்கும் போரும் – வில்லி:43 14/3
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/3
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் – வில்லி:44 26/3
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் – வில்லி:45 224/1
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி – வில்லி:46 37/3
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும் – வில்லி:46 40/3
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே – வில்லி:46 167/4
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3

மேல்


கெழும் (2)

உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை – வில்லி:41 118/3
அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி – வில்லி:46 110/3

மேல்


கெழுமி (2)

கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் – வில்லி:1 110/2,3
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல் – வில்லி:27 110/2

மேல்


கெழுமிய (1)

பண்டி நிறைவுறு பின்பு பிறிதொரு பண்டி கெழுமிய பண்டமே – வில்லி:4 46/4

மேல்


கெழுமின (2)

துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை – வில்லி:41 89/1
இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின
இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே – வில்லி:44 32/3,4

மேல்


கெழுமினாரே (1)

தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே – வில்லி:2 114/4

மேல்


கெழுமுற்று (1)

கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க – வில்லி:46 236/1

மேல்


கெழுவு (1)

எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2

மேல்