நோ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்க 9
நோக்கப்பட்டு 1
நோக்கலேன் 1
நோக்கா 1
நோக்காது 1
நோக்கார் 1
நோக்கான் 1
நோக்கி 157
நோக்கிநோக்கி 4
நோக்கிய 3
நோக்கியர் 1
நோக்கியே 5
நோக்கிலேன் 1
நோக்கின் 1
நோக்கினர் 2
நோக்கினள் 1
நோக்கினன் 1
நோக்கினார் 1
நோக்கினாரே 1
நோக்கினான் 6
நோக்கினானே 2
நோக்கினை 1
நோக்கும் 2
நோக்கேன் 1
நோதக 2
நோதகு 1
நோதகும்படி 1
நோதல் 1
நோய் 13
நோய்கொண்டு 1
நோயன் 1
நோயினால் 1
நோயும் 1
நோன் 3
நோன்மைக்கு 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நோக்க (9)

வான் மொழி மறையால் உன்னி வானவர்க்கு அரசை நோக்க
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ – வில்லி:2 81/2,3
மெய் தவம் விளங்க வேழவில்லியும் விழைந்து நோக்க
மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார் – வில்லி:2 88/3,4
கனத்து அனைய திருமேனி கண்ணனும் தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம் – வில்லி:10 12/2,3
நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட – வில்லி:11 59/3
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க – வில்லி:11 244/3
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க
ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் – வில்லி:11 244/3,4
என்-கொலாம் இவண் அழைத்தது இன்று என அவன் இருந்த மாமனை நோக்க
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி – வில்லி:16 6/2,3
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை – வில்லி:27 224/1
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க
இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த – வில்லி:46 243/2,3

மேல்


நோக்கப்பட்டு (1)

ஆகனால் நோக்கப்பட்டு அணுகியதால் அரும் தவன் மேல் அந்த ஏனம் – வில்லி:12 89/4

மேல்


நோக்கலேன் (1)

இழிபடு பிறர் முகம் என்றும் நோக்கலேன்
கழிபடர் உற்றது என் காம நோய் எனா – வில்லி:21 68/2,3

மேல்


நோக்கா (1)

உரு கிளர் மேனியை ஊடுற நோக்கா
வெருக்கொடு தாள் மிசை வீழ்ந்தனன் மீண்டும் – வில்லி:14 56/2,3

மேல்


நோக்காது (1)

மித்திரர் என்று நோக்காது என்னுடன் விளைந்த நண்பால் – வில்லி:45 50/1

மேல்


நோக்கார் (1)

சொல்வன அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் நோக்கார்
வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – வில்லி:27 141/2,3

மேல்


நோக்கான் (1)

மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான்
என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/3,4

மேல்


நோக்கி (157)

பிரிந்த நாள் எண்ணி பகீரதி பெருக்கை பேதுறும் குறிப்பொடு நோக்கி
கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும் – வில்லி:1 88/1,2
விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி
பழுது பட்டது இ குருகுலம் மீள நின் பார்வையால் கடல் ஞாலம் – வில்லி:2 9/2,3
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி
பார மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு அழுது அஞ்சி – வில்லி:2 38/2,3
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி
செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான் – வில்லி:2 56/3,4
பண்புடை வதனம் நோக்கி பார்த்திவன் பாண்டு என்பான் – வில்லி:2 68/2
கரு உறு தாயை நோக்கி கையறும் என்று கன்றி – வில்லி:2 72/1
பாம்பு என பருவம் நோக்கி இருந்தனள் பழுது இலாதாள் – வில்லி:2 73/4
ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே யாதவன் மகளை நோக்கி
பாண்டு மன் இரந்து பல்கால் பணித்தலும் பவனன்-தன்னை – வில்லி:2 74/1,2
தம்பிரான் பாண்டு ஈன்ற தருமதேவதையை நோக்கி
அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே – வில்லி:2 113/2,3
வேத முனிவன் இருந்த வேத்து முனியை நோக்கி
பூதம்-தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் – வில்லி:3 36/1,2
தந்த மகவை நோக்கி தாயும் பெருக தளர்ந்தாள் – வில்லி:3 41/4
வெறி படு முளரி மொக்குள் விரி பதம் நோக்கி சுற்றும் – வில்லி:5 12/1
கொண்டு உறை வலிமை நோக்கி குறிப்பினால் உவகை கூர்ந்தார் – வில்லி:5 13/4
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினை பொலிய நோக்கி
பைம் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி – வில்லி:5 28/2,3
எனக்குஎனக்கு என்றுஎன்று ஏமாந்து இருந்த காவலரை நோக்கி
சின கடம் ஒழுகும் கன்ன களிற்றினான் திட்டத்துய்மன் – வில்லி:5 30/2,3
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி
சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான் – வில்லி:5 35/1,2
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே – வில்லி:5 54/4
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செம் கண் பங்கயத்தால் பாங்காக பரிந்து நோக்கி
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/3,4
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் – வில்லி:5 70/3
முன்னோனை நோக்கி தவம் செய்தனள் மூரல் வாயாள் – வில்லி:5 80/4
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி
என் என்று இவளை இமையோர் பதி எய்தினானே – வில்லி:5 82/3,4
நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி
திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான் தேவரும் மனிதரும் வியப்ப – வில்லி:6 9/1,2
கொந்து இராநின்ற சோலையும் தடமும் கொற்றவன் கோயிலும் நோக்கி
இந்திராபதி அ இந்திரன் பெயரால் இந்திரப்பிரத்தம் என்று இட்டான் – வில்லி:6 13/3,4
இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி
உருளுடை ஒற்றை நேமி உறு பரி தேரோன் சீற – வில்லி:6 30/2,3
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி
நமர் புர கிழத்தி உம்பர் நாயகன் புரத்தினோடும் – வில்லி:6 31/2,3
விசும்புற நான்கு திக்கும் மிசை மிசை எழுதல் நோக்கி
பசும் புயல் ஏழு அன்று இன்னும் பல உளவாகும் என்பார் – வில்லி:6 32/3,4
விதம் உற எழுந்து காள மேகங்கள் படிதல் நோக்கி
கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின் – வில்லி:6 34/2,3
பூட்டிய சிகரி சால புரிசையின் புதுமை நோக்கி
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த – வில்லி:6 35/2,3
புராரியை நோக்கி முன் நாள் புரி பெரும் தவத்தின் மிக்கார் – வில்லி:6 42/2
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி
அந்தணர் அல்லீர் யாவர் நீர் என்றான் அ உரைக்கு அமலனும் உரைப்பான் – வில்லி:10 18/3,4
திரமுற பெற்று வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி
நரபதி-தானும் மற்றை நால்வரும் நீலமேனி – வில்லி:10 70/2,3
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே – வில்லி:10 77/4
வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி
அம் கண் மிளிர அரும் புருவ வில் முரிய – வில்லி:10 82/2,3
சாலையை நோக்கும் வேந்தன் தம்பியை நோக்கி முந்நீர் – வில்லி:10 100/2
சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி – வில்லி:10 111/4
சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி – வில்லி:10 111/4
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் – வில்லி:10 112/3,4
வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி கொற்ற – வில்லி:11 30/1
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி
சொல் நவைக்கு ஏற்றது என்று தொழுதகு தாதை-தன்பால் – வில்லி:11 46/2,3
மூத்த தாதை-தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்தமை நோக்கி
வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் மனுநெறி வழுவாதோன் – வில்லி:11 63/1,2
மன் கருத்தையும் அவன் திருவுளம் நிகர் மகன் கருத்தையும் நோக்கி
நின் கருத்தை நீ உரை என விதுரனும் நிகழ்ந்தன உரைக்கின்றான் – வில்லி:11 67/3,4
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி
பன்னக துவசன் கேட்டோர் பலரும் மெய் பனிக்க சொல்வான் – வில்லி:11 193/3,4
இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான் – வில்லி:11 196/1,2
சொல்ல பாவி தரியாமல் துச்சாதனனை முகம் நோக்கி
அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி ஆகிய அ – வில்லி:11 211/2,3
காணேம் என்று நிலன் நோக்கி கதிர் வேல் நிருபர் இருந்து இரங்க – வில்லி:11 226/3
சோரும் கொடியை முகம் நோக்கி துச்சாதனன் மெய் சுட சொன்னான் – வில்லி:11 230/4
என்னா மன்னர் முகம் நோக்கி எல்லார் இதயங்களும் மகிழ – வில்லி:11 239/1
அன்னான் இளவல் முகம் நோக்கி அருக்கன் குமரன் அறைகின்றான் – வில்லி:11 239/4
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி – வில்லி:11 244/2
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க – வில்லி:11 244/2,3
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த – வில்லி:11 250/2
தந்தை விழி இருள் போல தகு மனத்தோனும் துச்சாதனனை நோக்கி
பைம்_தொடியை கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக என பணித்திட்டானே – வில்லி:11 252/3,4
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/2
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி
கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும் – வில்லி:12 26/2,3
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி
நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே – வில்லி:12 38/3,4
பண்ணுக்கு வாம் பரி தேர் ஆதபனும் பணிந்து பசுபதியை நோக்கி
மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான் – வில்லி:12 43/1,2
மாதிரம்-தொறும் செம் பல்லவ செம் தீ வளர்த்து வான்மணியினை நோக்கி
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன ஒளி கூர் பணையுடை பாதபங்களுமே – வில்லி:12 56/3,4
விருத்த மா முனிவன் ஆகி விசயனை நோக்கி யாது – வில்லி:12 69/1
சிரித்தது ஏன் என்ன மீண்டும் திருமகன்-தன்னை நோக்கி
வருத்தமே அன்றி இந்த மா தவம் பயன் இன்று என்றான் – வில்லி:12 71/1,2
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த – வில்லி:12 71/3
பாகசாதனி தவம் செய் பாக்கிய பூமியை நோக்கி பரிவினோடும் – வில்லி:12 89/2
என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி
பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என மிகவும் பயப்பட்டாயோ – வில்லி:12 95/1,2
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே – வில்லி:12 98/4
உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி
திரம் பட்ட சிலை கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது அ – வில்லி:13 96/1,2
அன்னார் நகரத்து அழகும் தொல் அரணும் நோக்கி
மின் ஆரும் வேலான் விறல் மாதலி-தன்னை மீண்டும் – வில்லி:13 104/1,2
அம் மாதர் தந்தை தனை நோக்கி அனந்த காலம் – வில்லி:13 107/1
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான் – வில்லி:13 154/3,4
உரோமச முனியை நோக்கி உரைத்தனன் உற்ற எல்லாம் – வில்லி:13 160/4
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:14 4/1
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ – வில்லி:14 5/1
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே – வில்லி:14 11/4
அன்ன போழ்தினில் அகம் மகிழ்ந்து அருளுடன் நோக்கி
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் – வில்லி:14 31/3,4
கோது இலாத அ குரிசிலும் குமரனை நோக்கி
தீது இலாய் இது கேட்க என செப்புவன் மாதோ – வில்லி:14 41/3,4
பாண்டவன்-தனை பண்புற பரிவினால் நோக்கி
வேண்டும் நல் வரம் வேண்டுக ஈண்டை நீ என்றான் – வில்லி:14 47/3,4
அரி துவசன்-தனை நோக்கி அரக்கன் – வில்லி:14 73/3
புண்டரீகன்-தன் நாடு பொருக்கென நோக்கி அப்பால் – வில்லி:14 83/2
துப்புடன் தொலைத்து வாயு_சுதன் நின்ற உறுதி நோக்கி
மை படி வரைகள் போல்வார் வாள் எயிற்று அரக்கர் பின்னும் – வில்லி:14 101/2,3
தன் துணை நின்ற சங்கோடணனை நோக்கி
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்-தன்னை – வில்லி:14 110/1,2
தாதை உருத்திரசேனன் தன்னை நோக்கி
மாதர் மலர் பொழிலூடு வந்த மனித்தன் – வில்லி:14 119/2,3
கண்டு மருத்து அருள் காளை-தன்னை நோக்கி
வண்டும் இடை பயிலாத காவில் வந்து – வில்லி:14 121/1,2
நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான் – வில்லி:14 130/2
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று – வில்லி:14 135/3
மறத்துடன் தொழுது வணங்கி முன் நின்ற வாயுவின் மதலையை நோக்கி
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி – வில்லி:15 4/1,2
எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி இன்னே – வில்லி:16 22/3
நல் துணை சிறுவனோடு நகுலனை நோக்கி அந்தோ – வில்லி:16 29/1
ஆங்கு அவண் எழுந்த பூதம் அம் முனி-தன்னை நோக்கி
பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள் என்ன நெஞ்சில் – வில்லி:16 34/2,3
செம்பொனின் ஒளிரும் மேனி தெய்வ மா முனியை நோக்கி
வெம்பு கான் உறைவோர் இன்று என் விழிக்கு இலக்கு அல்லரானால் – வில்லி:16 36/2,3
வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி
ஏந்து_இழை சொல்ல ஓராது இனிய இ கனி இன்று ஈர்ந்தாய் – வில்லி:18 9/1,2
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி
இளைத்தவர் இன்னல் ஒழித்து மீண்டு அகன்றான் இவரும் மீண்டு இறைஞ்சி ஆங்கு இருந்தார் – வில்லி:18 23/3,4
தொல் அற கடவுள் அருளுடன் அளித்த தோன்றல் தன் துணைவரை நோக்கி
கல் அமர் கிரியும் கானமும் இடமா கழித்தனம் ஒழிந்தன காலம் – வில்லி:19 2/1,2
முனித்தகை உணர்ந்து அவன் முகத்தை நோக்கி இ – வில்லி:21 34/2
நிலை பெறு கற்பினாளை நேர் உற நோக்கி பின்னும் – வில்லி:21 53/3
திரு தகு பாவை அந்த தீயவன்-தன்னை நோக்கி
வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும் – வில்லி:21 55/2,3
எல்லையை நோக்கி சென்றான் யமன் திசை என்ன மன்னோ – வில்லி:21 60/4
இங்கிதத்துடனே நோக்கி இருந்தனன் இமைப்பு இலாதான் – வில்லி:21 62/4
நின்ற மங்கையர்-தங்களை நிரைநிரை நோக்கி
சென்ற காவலன் வரும் துணை செம் கையில் படை கொண்டு – வில்லி:22 28/2,3
உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி
சிந்தையில் அன்பு கூர சேவடி பணிந்து போற்றி – வில்லி:22 86/1,2
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் – வில்லி:22 131/4
சிவன்-தன்னை நோக்கி சிவேதன் தவம் செய்தவாறும் – வில்லி:23 19/1
அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி
முரச கேதனன் நீ எழுந்தருள்க என முனிவனை தொழுது ஏத்தி – வில்லி:24 7/1,2
மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை – வில்லி:25 4/2,3
வந்தமை அறிந்து கொற்ற வாயிலோர்-தம்மை நோக்கி
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று – வில்லி:25 7/1,2
முந்துற விழித்து நோக்கி முகம் மலர்ந்து அருள்செய்தானே – வில்லி:25 9/4
பட அரவு உயர்த்த வென்றி பார்த்திவன்-தன்னை நோக்கி
நடையுடை புரவி திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி – வில்லி:25 15/2,3
தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி
தூ நறும் தண் துளவோனை தூது விடுவதற்கு எண்ணி சுனைகள்-தோறும் – வில்லி:27 2/2,3
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் – வில்லி:27 4/3
பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர் கை பணித்து நோக்கி
குருகுலத்தோர் போர் ஏறே குற்றமது பார்க்குங்கால் சுற்றம் இல்லை – வில்லி:27 15/1,2
பைம் பொன் நெடும் தனி திகிரி பரந்தாமன் கருணையுடன் பரிந்து நோக்கி
அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல் – வில்லி:27 19/2,3
நீண்ட கரும் குழல் சோர நின்றாளை முகம் நோக்கி
ஈண்டு அவரில் இளையோனும் சந்து மிக இனிது என்றான் – வில்லி:27 39/3,4
குரிசிலை வணங்கி ஆங்கண் இருப்ப அ குரிசில் நோக்கி
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் – வில்லி:27 139/2,3
மாயனும் மகிழ்ந்து நோக்கி மாசுணம் உயர்த்த மன்னன் – வில்லி:27 143/1
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி
வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி என்றாள் – வில்லி:27 147/3,4
தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி
பாதப வனத்தில் போன பாண்டவர்-தம்மை மீண்டும் – வில்லி:27 167/1,2
தம்பியை முனிந்து சீறி தமையனை நோக்கி சொல்வான் – வில்லி:27 172/2
வீ மலர் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி
தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் – வில்லி:27 186/3,4
துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே – வில்லி:27 225/4
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:28 9/2,3
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:29 8/2,3
மாயவன் அவனை நோக்கி வாகை அம் தாமம் சூட – வில்லி:29 13/2
சொரியும் கண்ணீர் துடைத்து துரியோதனனை நோக்கி
வரியும் சாப கன்னன் மன்னர்க்கு உருமேறு அன்னான் – வில்லி:38 44/1,2
நோய் இல் அயர்வும் மெய்யில் நுழைய காலம் நோக்கி
வீயின் முத்தி இல்லை என்ன இருந்தான் விருந்தா – வில்லி:38 45/2,3
வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி
என் மகன் இறக்க என்னை இருத்தினை ஆயின் அம்ம – வில்லி:41 152/2,3
கங்கை அம் பழன நாடன் கண்ணனை வணங்கி நோக்கி
இங்கு அயல் எழுந்த கோடம் யாது என யாதும் சொல்லான் – வில்லி:41 155/2,3
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற – வில்லி:41 242/2,3
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து ஆயிரங்கண்ணன் மைந்தனை நோக்கி
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன – வில்லி:42 39/2,3
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி
என்றும்என்றும் நாம் நுகர் புனல் அன்று நல் இன் அமுது இது என்பார் – வில்லி:42 68/2,3
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி
மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண் – வில்லி:42 111/2,3
கன துரங்கமும் முடுகு தேர் வய படை காவலன் முகம் நோக்கி
உனது தம்பியர் இருவரை செற்றவன் முடி தலை ஒடியேனேல் – வில்லி:42 133/2,3
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி
ஆறு அல் வெம் சமத்து என்னுடன் முனைந்தனை முனைந்தனையானாலும் – வில்லி:42 136/1,2
கொல்லுவான் முனைந்து மற்றை கோமகன் அடர்த்தல் நோக்கி
கல்லினின் மாரி காத்தோன் கண்டு வில் விசயனோடும் – வில்லி:42 157/2,3
அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற நோக்கி
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் – வில்லி:42 169/3,4
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன் – வில்லி:43 35/1
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க – வில்லி:45 17/2
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு – வில்லி:45 25/2
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் – வில்லி:45 26/1
நின்ற அ கன்னன்-தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி
வென்றனம் பூசல் இன்றே விசயனும் தாதை-தன்பால் – வில்லி:45 45/1,2
மறம் இட்ட வாளி பல தூவி வருதல் நோக்கி
அறம் இட்ட சிந்தை அரசன்-தன் அனுசர்-தம்மில் – வில்லி:45 70/3,4
பெகுலம் தொடுத்து வரு காளையை பெட்பின் நோக்கி
நகுலன் சிறிது நகைசெய்து நகை செய் வாளி – வில்லி:45 73/2,3
மதலையை நோக்கி பாகன் வன் பகை தோன்ற சொன்னான் – வில்லி:45 95/4
கன்னனை உவகை கருத்தினால் நோக்கி கை புனலுடன் தருக என்ன – வில்லி:45 241/2
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் – வில்லி:46 15/2,3
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே – வில்லி:46 77/4
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/4
ஏறிய பாதம் போல இறங்கிய பாதம் நோக்கி
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி – வில்லி:46 116/1,2
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கிநோக்கி – வில்லி:46 116/2,3
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும் – வில்லி:46 140/2
திண் திறல் வீமனை நோக்கி சிலை முதல் ஆம் படை கொண்டோ – வில்லி:46 144/3
அ தலத்தின் திசை நோக்கி அனீகினியும் அனைவோரும் – வில்லி:46 155/1
பம்பி எழ நடக்கின்ற பரிசு-தனை முகம் நோக்கி
எம்பியரும் எம் கிளையும் இறக்க இருந்தனம் என்றே – வில்லி:46 156/2,3
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் – வில்லி:46 164/2
சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி
காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினர் அன்றே – வில்லி:46 205/3,4
வைத்த சென்னியை நோக்கி வயா உறு – வில்லி:46 224/1
கொந்து அலரும் முகம் நோக்கி கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து – வில்லி:46 248/3
வினை அகற்றும் பசும் துளவோன் துவரை நகர் திசை நோக்கி மீண்டான் சீர்த்தி – வில்லி:46 250/3

மேல்


நோக்கிநோக்கி (4)

ஆடுதல் நோக்கிநோக்கி அகம் மகிழ்ந்து ஏகினாரே – வில்லி:5 15/4
நோக்கிய கண் இமையாமல் நோக்கிநோக்கி நுண்ணிய மென் புலவியிலே நொந்துநொந்து – வில்லி:7 42/1
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் – வில்லி:46 74/2,3
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கிநோக்கி
கூறிய அரசன்-தன்னை கூவினர் அழைக்கலுற்றார் – வில்லி:46 116/3,4

மேல்


நோக்கிய (3)

நோக்கிய வருணனை நுவலும் நான்மறை – வில்லி:1 65/1
நோக்கிய கண் இமையாமல் நோக்கிநோக்கி நுண்ணிய மென் புலவியிலே நொந்துநொந்து – வில்லி:7 42/1
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான் – வில்லி:21 25/2

மேல்


நோக்கியர் (1)

மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன் – வில்லி:19 31/3

மேல்


நோக்கியே (5)

தங்கிய முகிழ் முலை தடமும் நோக்கியே
இங்கித முறைமை நன்று என்று வேந்தனும் – வில்லி:1 46/2,3
வைய மன்னன் வய நிலை நோக்கியே
ஐயம் உற்றனர் அன்புறு காதலார் – வில்லி:1 129/3,4
மீளவும் தலைப்புதல்வனை நோக்கியே மிக மகிழ்வு உறா அன்னை – வில்லி:2 13/1
நாசக கடவுள் போல் நகைத்து நோக்கியே – வில்லி:21 69/4
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர் எதிர்த்தனர் அமரை நோக்கியே – வில்லி:42 195/4

மேல்


நோக்கிலேன் (1)

இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று – வில்லி:2 23/1

மேல்


நோக்கின் (1)

வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின்
கடவுளர்க்கு அமைத்த யாக தலம் என கவினிற்று அம்மா – வில்லி:10 91/3,4

மேல்


நோக்கினர் (2)

ஈரும் நெஞ்சினர் ஏமுறு நோக்கினர்
பேர் அறன் தரு பிள்ளையை பார்த்து அருள் – வில்லி:12 7/2,3
சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர்
எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட – வில்லி:42 202/1,2

மேல்


நோக்கினள் (1)

பூண் உறு முலை முகம் பொருந்த நோக்கினள்
சேண் உறு தனது மெய் தேசு போல் நகை – வில்லி:1 48/2,3

மேல்


நோக்கினன் (1)

தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார் – வில்லி:27 79/4

மேல்


நோக்கினார் (1)

நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார்
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால் – வில்லி:3 78/2,3

மேல்


நோக்கினாரே (1)

நூபுரத்து அரவ வீதி அகலமும் நோக்கினாரே – வில்லி:6 28/4

மேல்


நோக்கினான் (6)

உரு தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான் – வில்லி:1 64/4
புளினமும் கானலும் பொற்ப நோக்கினான்
நளினமும் புறம்தரு நயன வேந்தனே – வில்லி:11 102/3,4
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம் – வில்லி:12 88/4
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான்
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை – வில்லி:21 3/2,3
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான்
பாக்கியம் நெஞ்சுற பலித்தது என்னவே – வில்லி:21 25/2,3
விடவியை பிடுங்குவான் வெகுண்டு நோக்கினான் – வில்லி:21 33/4

மேல்


நோக்கினானே (2)

தன்னுழை வைகும் மல்லர்-தங்களை நோக்கினானே – வில்லி:20 4/4
நொந்து இனி என் செய்வோம் என்று ஊர் புக நோக்கினானே – வில்லி:22 95/4

மேல்


நோக்கினை (1)

நுங்கு அழல் அனையாள் நாணமும் துகிலும் நோக்கினை காக்கும் நாயகனே – வில்லி:45 9/4

மேல்


நோக்கும் (2)

மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும்
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/1,2
சாலையை நோக்கும் வேந்தன் தம்பியை நோக்கி முந்நீர் – வில்லி:10 100/2

மேல்


நோக்கேன் (1)

இந்து நுதலாய் மனிதர் யார் முகமும் நோக்கேன்
வந்தனன் நின் மாளிகையின் வைகும்வகை என்றாள் – வில்லி:19 33/3,4

மேல்


நோதக (2)

நொந்து கண் துயில் பெறாதே நோதக புரிந்தேன் மன்னோ – வில்லி:11 206/4
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 90/3

மேல்


நோதகு (1)

மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும் – வில்லி:41 230/3

மேல்


நோதகும்படி (1)

சூரன் மெய் துணை நோதகும்படி உடன் தொலைத்தான் – வில்லி:42 119/3

மேல்


நோதல் (1)

நும்மின் நாடி அவனை இம்பர் நோதல் செய்து கொணர்-மினே – வில்லி:3 73/4

மேல்


நோய் (13)

இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான் – வில்லி:2 113/4
கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று – வில்லி:4 4/3
துன்பம் பயம் மிடி நோய் பகை சோரம் கொலை எய்தாது – வில்லி:7 1/1
மிக விருப்ப நோய் வளர்தலின் மெலிந்த தோள் விசயன் – வில்லி:7 70/3
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் – வில்லி:10 21/3
பழகுவார் மிக சிந்தை நோய் தாங்களே படுக்குமாறு உணராமல் – வில்லி:11 65/2
காமம் மிக்க உன் கட்டுரை சாப நோய்
பூமி பொய்ப்பினும் பொய்ப்பது அன்றால் அரோ – வில்லி:12 174/1,2
பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா – வில்லி:21 7/1
விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய்
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/3,4
தாக்கிய காம நோய் தழைக்க அன்புற – வில்லி:21 25/1
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு – வில்லி:21 41/2
கழிபடர் உற்றது என் காம நோய் எனா – வில்லி:21 68/3
நோய் இல் அயர்வும் மெய்யில் நுழைய காலம் நோக்கி – வில்லி:38 45/2

மேல்


நோய்கொண்டு (1)

குச்சித்தல் இன்றி நுகர்ந்தாள் கொடும் காம நோய்கொண்டு
இச்சித்த இன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள் – வில்லி:5 75/3,4

மேல்


நோயன் (1)

சோதித்தல் உன்னி தணியாத துவக்கு நோயன்
கோதித்த நெஞ்சன் பெரு மூப்பினன் கூர்ந்து நாளும் – வில்லி:5 74/2,3

மேல்


நோயினால் (1)

விழுந்து அழும் தெரிவையை வேட்கை நோயினால்
அழுந்திய காமுகன் அச்சம் இன்றியே – வில்லி:21 30/2,3

மேல்


நோயும் (1)

தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் – வில்லி:21 12/2

மேல்


நோன் (3)

நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே – வில்லி:11 212/1
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் – வில்லி:11 271/4
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலை கை முனி படை – வில்லி:40 31/3

மேல்


நோன்மைக்கு (1)

நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய புரிவித்தார் – வில்லி:3 84/4

மேல்