வில்லி பாரதம் – பாகம் 2

சருக்கங்கள்

(சபா பருவம்)

11.சூதுபோர்ச் சருக்கம்

(ஆரணிய பருவம்)

12.அருச்சுனன் தவநிலைச் சருக்கம்

13.நிவாதகவசர் காலகேயர் வதைச் சருக்கம்

14.முண்டகச் சருக்கம்

15.சடாசுரன் வதைச் சருக்கம்

16.நச்சுப் பொய்கைச் சருக்கம்

17.துருவாசமுனிச் சருக்கம்

18.பழம் பொருந்து சருக்கம்

(விராட பருவம்)

19.நாடு கரந்துறை சருக்கம்

20.மற்போர்ச் சருக்கம்

21.கீசகன் வதைச் சருக்கம்

22.நிரை மீட்சிச் சருக்கம்

23.வெளிப்பாட்டுச் சருக்கம்

(உத்தியோக பருவம்)

24.உலூகன் தூதுச் சருக்கம்

25.வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கம்

26.சஞ்சயன் தூதுச் சருக்கம்

11. சூதுபோர்ச் சருக்கம்

*யாகம் முற்றியபின் துரியோதனன் தன் துணைவர்
*முதலியவருடன் அத்தினாபுரியை அடைதல்
$11.1

#1
தாமரை அனைய செம் கண் தரணிபன் இராயசூய
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர்
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வ
கோமகன் இளைஞரோடும் குறித்தது கூறலுற்றாம்

மேல்
$11.2

#2
கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற
துணைவரும் தானும் கங்கா_சுதனும் மற்று எவரும் சூழ
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான்
கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான்

மேல்
*அரசவையில் துரியோதனன் மன்னர் சூழ வீற்றிருத்தல்
$11.3

#3
சென்றுழி எவரும் தம்தம் செழு மனை எய்தி வாசம்
துன்றிய அமளி கங்குல் துயில் புரிந்து எழுந்த பின்னை
நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது தம் நியமம் முற்றி
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார்

மேல்
$11.4

#4
இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து எதிர்ந்த வேந்தர்
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்த போதில்
அறம் செறி தானம் வண்மை அளவிலாது அளித்து நாளும்
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்

மேல்
*கன்னன், சகுனி, துச்சாதனன், மூவரும் முறையே எழுந்து பேசுதல்
$11.5

#5
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற
மேதகு வேள்வி செல்வம் வேந்தரில் யாவர் பெற்றார்
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று
பாதக நினைவை தானும் பகர்ந்தனன் பரிவு கூர

மேல்
$11.6

#6
விதரண வினோதன் சொன்ன வார்த்தையும் வேந்தர்_வேந்தன்
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையை சகுனி கண்டு
புதை நக மடங்கல் நாளும் புறம் செலாது ஒடுங்குமானால்
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான்

மேல்
$11.7

#7
சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி
வில் இடை நின்று தம்முன் வெம் மனம் களிக்க சொன்னான்
அல் இடை நிறைந்ததேனும் அமுத வெண் கிரண திங்கள்
எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும் என்றே

மேல்
*மயனது கருத்தைத் துச்சாதனன் வலியுறுத்திப் பேசுதல்
$11.8

#8
தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து நீதி
அமைதரு தந்தை கேட்ப அவன் பெருந்தாதை கேட்ப
கமை பெறு விதுரன் கேட்ப கார்முக கன்னன் கேட்ப
இமையவன் துரோணன் கேட்ப யாவரும் கேட்ப சொல்வான்

மேல்
$11.9

#9
இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்பு செய்ய
சுந்தர பொன் தோள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய
தந்திர வெள்ள சேனை தருமனே தலைவன் ஆனான்

மேல்
$11.10

#10
இனி அவன் சில் நாள் செல்லின் எம்மனோர் வாழ்வும் கொள்ளும்
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார்
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால்
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே

மேல்
$11.11

#11
போது உற விரைந்து மற்று அ புரவலன் செல்வம் யாவும்
பேதுற கவர்ந்திலேனேல் பின்னை யார் முடிக்க வல்லார்
மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று
தீது உற புரிந்தே ஆதல் கொள்வதே சிந்தை என்றான்

மேல்
*தமையனது கருத்தைத் துச்சாதனன் வலியுறுத்திப் பேசுதல்
$11.12

#12
என்னலும் உரிய தம்பி எழுவதே கருமம் இன்றே
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான்
நென்னல் அங்கு எய்த வீமன் நகைத்ததும் நேயமான
கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும் கண்டிலீரோ

மேல்
$11.13

#13
எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார்
அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம்
கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த
முத்தனை அன்றி பின்னை யாரையே முதன்மை செய்தான்

மேல்
$11.14

#14
நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப
எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம்
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான்

மேல்
$11.15

#15
தன் புய வலியும் நான்கு தம்பியர் வலியும் மாயன்
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான்

மேல்
$11.16

#16
எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்-தானும்
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான்
சொல்லிய கருமம் வாய்ப்ப சூழ் வலை படுத்தி கொண்ட
வல்லியம் என்ன சூழ்ந்து மலைவதே கருமம் என்றான்

மேல்
*துரியோதனன் ஐவரை அடக்குவதற்கு உரைத்த உபாயம்
$11.17

#17
வேந்தனும் ஒருப்பட்டு அந்த வெண்ணெய் வாய் கள்வன் மீள
போந்து இவர்-தமக்கும் இன்று பொரு துணை ஆக மாட்டான்
சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது
ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே

மேல்
$11.18

#18
வஞ்சனை கொண்டே ஆதல் வாரணம் மணி தேர் வாசி
நஞ்சு அனையவரால் ஆதல் நாளையே அழித்தல் வேண்டும்
கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட
நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான்

மேல்
*’போர் வழியே யன்றி வஞ்சனை வழி ஆகாது’
*எனக் கன்னன் மறுத்தல்
$11.19

#19
வெம் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின் வெகுண்ட வேந்தர்
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார்
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல
அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர்_கோமான்

மேல்
*’மாயச் சூதினாலே ஐவரை அடக்குதல் வேண்டும்’
*எனச் சகுனி உரைத்தல்
$11.20

#20
யாவரும் மொழிந்த வார்த்தை இன்புற கேட்டு பின்னும்
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான்
மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்தபோதும்
கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ

மேல்
$11.21

#21
இடிம்பனை பகனை வை வேல் இகல் சராசந்தன்-தன்னை
நெடும் பணை புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க
கடும் படை பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின்
தொடும் படை தட கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ

மேல்
$11.22

#22
துப்பு உறழ் அமுத செ வாய் திரௌபதி துணை தோள் வேட்டு
கை படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ
மெய் படு முனியாய் வந்து விசயன் வில் வளைத்தபோதும்
இப்பொழுது இருந்த வீரர் யாவரும் இருந்திலேமோ

மேல்
$11.23

#23
இ பிறப்பு ஒழிய இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்
மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை வெல்ல மாட்டோம்
ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால்
தப்பு அற சூது கொண்டு சதிப்பதே கருமம் என்றான்

மேல்
*துச்சாதனன் சகுனியின் சூது உபாயத்திற்கு உடன்படுதல்
$11.24

#24
தன் பெரு மாமன் சொல்ல தரணிபன் தம்பி-தானும்
வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார்
இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே மாய
புன் பெரும் சூது கொண்டு பொருவதே புந்தி என்றான்

மேல்
*துரியோதனன் சகுனியை அருகில் அமரச் செய்து சூதால்
*வெல்லும் வகையைக் கேட்க, சகுனி உரைத்த உபாயம்
$11.25

#25
கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து பேர் உவகை கூர்ந்து
மாமனை தவிசின் கண்ணே வருதி என்று இருத்திக்கொண்டு
பா மரு பனுவல் மாலை பாண்டவர்-தம்மை நின் கை
காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி என்றான்

மேல்
$11.26

#26
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர்
பொன்னுலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று ஆக
பன்னு நூல் சிற்பம் குன்றா பல் தொழில் வினைஞர்-தம்மால்
நல் நில விரிவு உண்டாக நாளையே இயற்றுவிப்பாய்

மேல்
$11.27

#27
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால்
கண்டு கண் களித்து மற்று அ காவலர் இருந்த போதில்
புண்டர விசால நெற்றி புரவல பொழுது போக
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம்

மேல்
$11.28

#28
அதிர் முரசு உயர்த்த கோவும் ஐ என துணியும் பின்னை
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால்
விதி என பொருது வாழ்வும் மேதகும் அரசும் தங்கள்
பதி முதல் பலவும் தோற்கும்படி செகுத்திடுவல் என்றான்

மேல்
*துரியோதனன் முதலியோரின் மகிழ்ச்சி
$11.29

#29
இன்னதே கருமம் என்று என்று இளைஞரும் விழைந்து சொன்னார்
அன்னதே கருமம் ஆக அவர் வழி ஒழுகும் நீரான்
தன்னதே ஆகும் இந்த தலம் எனும் கருத்தால் மாமன்
சொன்னதே துணிந்து மார்பும் தோள்களும் பூரித்திட்டான்

மேல்
*துரியோதனன் சகுனி உரைத்த உபாயத்தை விதுரனுக்குக் கூற,
*அவன் மறுத்து மொழிதல்
$11.30

#30
வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி கொற்ற
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன்
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம்
சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான்

மேல்
$11.31

#31
வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின்
பொய் அடர் சூது கொண்டு புன்மையின் கவர வேண்டா
ஐய நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால்
மெய்யுற மறுத்து சொல்லார் வேண்டின தருவர் அன்றே

மேல்
$11.32

#32
தந்தை-தன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும்
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர்
முந்துற நுமதே ஆகும் முழுதும் வாழ்வு எழுதும் செம் பூண்
பைம் தொடை அரசர் கேட்டால் பாவமும் பழியும் ஆகா

மேல்
$11.33

#33
தீதினால் வரித்து நெஞ்சம் தீயவர் ஆடும் மாய
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று
போதில் நான்முகனும் மாலும் புரி சடையவனும் கேள்வி
ஆதி நான்மறையும் உள்ள அளவும் இ வசை அறாதே

மேல்
*துரியோதனன் விதுரன் கருத்தை மறுத்துச் சினத்துடன்
*மொழிய, அவனும் சினத்துடன் துரியோதனனுக்குப்
*பரிந்து அறவுரை கூறுதல்
$11.34

#34
என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி
ஒன்றிய கேண்மை தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி இன்று எமக்கு தந்தால்
புன் தொழில் வசையே அன்றி புகழ்-கொலோ புகல்வது அம்மா

மேல்
$11.35

#35
நினக்கு இது தொழிலால் என்றும் நேயமும் அவர்கள் மேலே
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன்
உனக்கும் உன் கிளைக்கும் நாளும் உண்டியும் வாழ்வும் இங்கே
மன கருத்து அங்கே என்றான் மாசுண துவசன் மாதோ

மேல்
$11.36

#36
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர பின்னும்
வெம் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ
புந்தியில் மறு இலாதோய் புதல்வரில் ஒரு சார் அன்பு
தந்தையர்க்கு இல்லை என்றாய் யானும் அ தந்தை அன்றோ

மேல்
$11.37

#37
நீங்களும் அவரும் நேய நெறிமுறை தவறாது என்றும்
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால்
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து நும் வாயில் நிற்பர்
ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே

மேல்
$11.38

#38
உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால்
தங்களின் எதிர்ந்தார் அம்மா குருகுல தலைவர் என்னா
பொங்கு அளி நிகழும் கஞ்ச புரவலன் ஒழிவு கண்ட
திங்களின் உயர்ச்சி போல தெவ்வரும் திகழ்வர் அன்றே

மேல்
$11.39

#39
ஆதலால் உறுதி சொன்னேன் ஆம் முறை தெரிந்து கோடி
ஏதிலார் போல யானும் இனி உனக்கு யாதும் சொல்லேன்
தீது அலாது உணரா வஞ்ச சிந்தையார் பரிந்து கூறும்
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே

மேல்
*விதுரன் மனம் வருந்தத் துரியோதனன் நகையாடுதலும்,
*அது பொறாது விதுரன் எழுந்து தன் இருப்பிடம் சேறலும்
$11.40

#40
நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும் குரவர் ஏவல்
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய்
செறுத்தவர் ஆவி கொள்வாய் அடியனேன் செய்தது எல்லாம்
பொறுத்தருள் என்ன கையால் போற்றினன் முறுவல் செய்தான்

மேல்
$11.41

#41
செழும் திரு விரும்பும் மார்பன் செப்பிய கொடுமை கேட்டு
விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு இசைவுறாமல்
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான்

மேல்
*துரியோதனன் ஆணைப்படி அழகியதோர் மண்டபம் சமைத்தல்
$11.42

#42
புரிவு இலா மொழி விதுரன் போகலும் புரிவில் ஒன்றும்
சரிவு இலா வஞ்ச மாய சகுனியும் தம்பிமாரும்
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே விசாரம் ஆக
வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான்

மேல்
$11.43

#43
பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட முற்பட்டு ஓடி
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின் இயன்ற எல்லாம்
அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும்
பொருந்தவே கொணர்வித்து ஆங்கண் பொன் சுவர் இயற்றினாரே

மேல்
$11.44

#44
சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர
செம் கையின் அமைத்த கோல சித்திர தூணம் நாட்டி
அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால் முற்றும் வேய்ந்தார்

மேல்
$11.45

#45
ஓவியம் சிறக்க தீட்டி ஒண் கொடி நிரைத்து செம் சொல்
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி
வாவிய புரவி திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புற சமைந்தது அன்றே

மேல்
*மண்டபம் அமைத்தமையைத் தந்தைக்குத் துரியோதனன்
*சொல்லி, பாண்டவரை வரவழைக்கத் தூது அனுப்ப வேண்டுதல்
$11.46

#46
மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி
சொல் நவைக்கு ஏற்றது என்று தொழுதகு தாதை-தன்பால்
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன் விளம்பலுற்றான்

மேல்
$11.47

#47
அரும் பெறல் ஐய கேட்டி அடியனேன் கருத்து முற்ற
கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று
பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன் பெருமை காண
வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான்

மேல்
*திருதராட்டிரன் மகிழ்ந்து, விதுரனைத் தூது அனுப்புதல்
$11.48

#48
மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வு உறு தந்தை-தானும்
மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர்
அகம் நெடும் போர் செய்தாலும் ஐவரை அடர்க்க ஒணாது
சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான்

மேல்
$11.49

#49
விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து நீ போய்
மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார்
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர்
வழியிலாய் ஒழுகும்வண்ணம் மருட்டி நீ கொணர்தி என்றான்

மேல்
$11.50

#50
தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன
பைம் பொனின் ஓலை மீது பண்புற எழுதி இன்னே
எம்பியும் ஏகுக என்றான் ஏவலின் அவனும் போனான்

மேல்
*பரிவாரங்கள் சூழ, விதுரன் பாண்டவர் வாழ் நகரை அடைதல்
$11.51

#51
கார் என களிறு சுற்ற காற்று என புரவி ஈண்ட
தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ
வீரரில் பலரும் போற்ற விதுரனும் இரண்டு நாளால்
பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான்

மேல்
*இந்திரப்பிரத்த நகரின் எழில்
$11.52

#52
புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு ஆம் என்ன
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ வான் பதி என்ன
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான்

மேல்
$11.53

#53
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின்
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம்
பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை
நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல்

மேல்
$11.54

#54
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை
குருகு எலாம் வளர் பழனம் அ புள் எலாம் கூடல் இன்புற ஊடல்
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம்
பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம்

மேல்
$11.55

#55
ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து ஆதுலர்க்கு அமுது அன்ன
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம்
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும்
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ

மேல்
*பாண்டவர் விதுரனை எதிர்கொண்டு உபசரித்தல்
$11.56

#56
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன்
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார்
சிந்தை அன்புடன் தொழத்தொழ மைந்தரை செம் கையால் தழீஇ கொண்டே
அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான்

மேல்
$11.57

#57
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர்
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த
கண்டு வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து தன் கருத்தினால் விடை ஈந்தான்

மேல்
*விதுரன் தான் வந்த காரியத்தை உணர்த்துதல்
$11.58

#58
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்துழி வண்டு
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான்
கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன
யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே

மேல்
$11.59

#59
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து யாவரும் நெடு மாட
கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக
நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான்

மேல்
$11.60

#60
தம்பிமாரொடும் தகை இலா துன்மதி சகுனி-தன்னொடும் எண்ணி
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன
அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார்

மேல்
$11.61

#61
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில்
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர்
மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன் கருத்து இனி தெரியாதே

மேல்
*விதுரன் கொடுத்த திருதராட்டிரன் திருமுகச் செய்தி
*உணர்ந்து, தருமன் பேசுதல்
$11.62

#62
திருதராட்டிரன் திருமுகம் இது என சென்று இறைஞ்சினன் வாங்கி
விரதம் ஆக்கம் என்று அறிந்து அறம் பேணுவான் வினைஞர் கை கொடுத்திட்டான்
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும் அது கேட்டு
வரதனால் பணிப்புறு தொழில் யாவர் நாம் மறுக்க என்று உரைசெய்தான்

மேல்
$11.63

#63
மூத்த தாதை-தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்தமை நோக்கி
வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் மனுநெறி வழுவாதோன்
சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான்

மேல்
$11.64

#64
அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும் அழகும் வென்றியும் தம்தம்
குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும்
படியும் மா மறை ஒழுக்கமும் புகழும் முன் பயின்ற கல்வியும் சேர
மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார்

மேல்
$11.65

#65
குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர் குறிப்பு இலாமையின் நாளும்
பழகுவார் மிக சிந்தை நோய் தாங்களே படுக்குமாறு உணராமல்
அழகு பேர் அறிவாகவே கொண்டவர் அற தொழில் புரியாமல்
கழகம் ஆடவும் பெறுவரோ இதனினும் கள் உணல் இனிது அன்றே

மேல்
$11.66

#66
மேதக தெரி ஞானநூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும்
பாதகத்தில் ஒன்று என்னவே முன்னமே பலபட பழித்திட்டார்
தீது அகப்படு புன் தொழில் இளைஞரின் சிந்தனை சிறிது இன்றி
தோதகத்துடன் என்னையோ சகுனி-தன் சூதினுக்கு எதிர் என்றான்

மேல்
$11.67

#67
தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இ முறை தருமன் மைந்தனும் கூறி
என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார்
மன் கருத்தையும் அவன் திருவுளம் நிகர் மகன் கருத்தையும் நோக்கி
நின் கருத்தை நீ உரை என விதுரனும் நிகழ்ந்தன உரைக்கின்றான்

மேல்
*’நின் கருத்து உரை’ என வேண்டிய தருமனுக்கு விதுரன் கூறிய மாற்றம்
$11.68

#68
இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும் யானும் அன்னவர் கேட்ப
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார்
பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து
தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான்

மேல்
*வீமன் தன் கருத்தை உரைத்தல்
$11.69

#69
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து அரிய வஞ்சனை செய்தான்
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான்
வென்று சூதினில் யாவையும் கவரவே விரகினால் அழைத்திட்டான்
என்றுதான் நமக்கு அன்புடை துணைவனாய் இருந்தது அ இகலோனே

மேல்
$11.70

#70
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி
விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா
வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி
களையிலே நமக்கு இருப்பு உளது என்றனன் காற்று அருள் கூற்று அன்னான்

மேல்
*விசயன் முதலிய தம்பியரும் அத்தினபுரிக்குச் செல்லுதலை
*மறுத்துரைக்க, தருமன்; ‘தந்தை சொல் மறுப்பது தகாது’ எனல்
$11.71

#71
தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும்
மாறலாருடன் மலைதலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே
ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார்
கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான்

மேல்
$11.72

#72
விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார்
வசை அறும் புகழ் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை ஆயினும் பெற்ற
அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான்

மேல்
$11.73

#73
ஆவி யார் நிலைபெறுபவர் நீதி கூர் அரிய வான் புகழ் அன்றி
பாவியானது அங்கு அணுகுறாது ஒழியினும் பலித்திடும் நினைவு இன்றி
மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல்
காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே

மேல்
*தருமன் ஆணைப்படி அத்தினாபுரி செல்ல,
*படைத்தலைவர் முதலியோர் திரளுதல்
$11.74

#74
நாளை ஏகுதும் எந்தை வாழ் அத்தினா நகர்க்கு என தருமன்-தன்
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார்
வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும் வந்துற்றார்

மேல்
$11.75

#75
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர்
சாதுரங்கமும் தந்திர தலைவரும் தரணி மன்னரும் சூழ
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற
போது உரங்கமும் நெளிந்தன பல் தலை பொறாமையின் இரு நான்கும்

மேல்
*ஐவரும் தேர்மீது ஏற, நாற்படைகளும் சூழ்தல்
$11.76

#76
ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன
ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன
ஐந்து வாளியே உறழ்வு என வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார்

மேல்
$11.77

#77
விழியின் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உததியின் விதி படைப்பினின் தோன்றி
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண்
இழியும் வெண் சுடர் கற்றையின் சாமரம் இரட்டின இருபாலும்

மேல்
$11.78

#78
மை திறத்தின் நின்று அதிர்வன முதிர்வன வரை திறத்தினும் ஓங்கும்
மெய் திறத்தன எழு திறத்தினும் மிக விடுவன மத தாரை
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த
மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை

மேல்
$11.79

#79
வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ
என்ற போதக தானையின் பெருமையை எங்ஙனம் புகல்கிற்பாம்
நின்றபோது உடல் முகிலிடை மறைந்தது நிரைநிரை நெறிப்பட்டு
சென்றபோது வெம் படை கடல் செய்தது ஓர் சேதுபந்தனம் போலும்

மேல்
$11.80

#80
சுற்றும் நீளமும் உயரமும் நிகர்ப்பன சுழியின் மிக்கன தீமை
அற்று மேதகு நிறத்தன கவினுடை அவயவத்தன ஆகி
எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார்
முற்றும் மாதிரத்து அளவும் ஐம் கதியினால் முடிப்பன இமைப்போதில்

மேல்
$11.81

#81
ஆளின் நெஞ்சமும் வார்த்தையும் செம் கையும் ஆசனத்தொடு தாளும்
கோளில் இன்புற குறிப்பன எவற்றினும் குறைகள் அற்றன ஆகி
யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால் விசும்பு எங்கும்
தூளி கொண்டிட மிடைந்து வந்தன நெடும் துரகதம் பல கோடி

மேல்
$11.82

#82
வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி
படியினில் சிறிது அமைவுற மிதித்தில பவன வெம் கதி போல
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம்
அடி படைத்தது படைத்தது இங்கு இவற்றினுக்கு அவயவம் குறையாமல்

மேல்
$11.83

#83
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல்
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி
நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக
கூடுமால் வரை இல் என பரந்தனர் கொடிய வெம் படை வீரர்

மேல்
$11.84

#84
அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன் அகல் வானுக்கு
எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும்
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும்
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார்

மேல்
$11.85

#85
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ்
படுத்த வானமே வானமா மறைந்தது மீதுற பகிர் அண்டம்
அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம்
கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம்

மேல்
$11.86

#86
அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து அமரருக்கு உரை செய்ய
செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல்
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி
விழுந்த தூளியும் தடுத்தன நிலன் உற விசும்பு உறும்படி நின்றே

மேல்
*தம்பியர் சூழத் தருமன் புறப்படுதல்
$11.87

#87
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெரும் தகவுடன் போத
அ நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான்

மேல்
*அரச மகளிர்கள் பிடியின் மேலும், திரௌபதி
*சிவிகையிலும் செல்லுதல்
$11.88

#88
அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன்
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான்

மேல்
$11.89

#89
ஏவின பல்லியும் இடத்திலே வர
தாவின குக்கிலும் தருமன்-தன் எதிர்
வாவின நெடும் கலை வரத நூல் வலோர்
ஓவினர் உரைக்கவும் உணர்கலாமையால்

மேல்
*வழியிலுள்ள ஒரு சோலையில் இளைப்பாறி, மேலே செல்லுதல்
$11.90

#90
மடந்தையர் அளகமும் மாந்தர் மாலையும்
உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே
தடம்-தொறும் முரல் அளி தமரின் நண்புற
தொடர்ந்து உடன் வரவர சோலை எய்தினார்

மேல்
$11.91

#91
சம்பகம் பாடலம் தமால நாள்மலர்
வம்பு எழ மிலைச்சுவார் வாவி ஆடுவார்
செம் பலவு ஆமிரம் கதலி தீம் கனி
உம்பரின் அமிழ்து என உடன் அருந்துவார்

மேல்
*நால் வகை நிலக் காட்சிகள்
$11.92

#92
பச்சிளம் கமுகின் மென் பாளை சூடுவார்
அ செழும் காய் கனி கவர்ந்து அருந்துவார்
கொச்சை அம் கடைசியர் குழுமி வாழ்த்தவே
வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார்

மேல்
$11.93

#93
தடா நிறை வெண்ணெயும் தயிரும் கொண்டு எதிர்
அடா முடை நாறு தோள் ஆயர் கைதொழ
படா முதல் முல்லையின் பரிமளம் கொளா
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார்

மேல்
$11.94

#94
தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான்
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால்
கானில் அங்கு உறைதரு கலைகளோடு இள
மான் இனம் பேர்கலா மருங்கு வைகுமால்

மேல்
$11.95

#95
செரு இளம் காளையர் சேனையின் திறம்
வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல்
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர்
கருவிளம் கண் கொடு கலந்து கண்டவே

மேல்
$11.96

#96
புழை நெடும் தட கை வெம் போதகங்களை
மழை முகில் என களி மயில்கள் ஆடின
தழல் எழு கானகம் தண்ணெனும்படி
செழு மத அருவியின் திவலை வீசவே

மேல்
$11.97

#97
வன நெறி கடந்து போய் மன்னவர்க்கு எலாம்
தினகரன் என தகு செய்ய கோலினன்
இன முகில் தவழ்தலின் இரங்கு பேர் இசை
தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான்

மேல்
$11.98

#98
குன்று உறை கட கரி குழாங்கள் சேனையின்
ஒன்றிய களிறு கண்டு உட்கி ஓடின
துன்றிய புற இப சுவடு கண்டு உடன்
சென்றில வெகுண்டு இவன் சேனை யானையே

மேல்
$11.99

#99
வாளியின் வரும் பரிமாவின் வண் குர
தூளிகள் விசும்புற துன்றி ஓங்கலால்
ஆளிகள் சிகரம் என்று அதிர்ந்து பாய்வன
மீளியர் வேலின்-வாய் வீழ்ந்து மாய்ந்தவே

மேல்
$11.100

#100
கார் தவழ் கொடு முடி கான மால் வரை
வார் தவழ் முலை அர_மாதரார் செவி
தார் தவழ் தடம் புய தரணி மன்னவர்
தேர் தவழ் ஓதையின் செவிடு பட்டவால்

மேல்
$11.101

#101
வரை நிலம் கழிந்து எறி மகர வாரிதி
திரை நிலம் புகுந்தனன் சேனை சூழ்வர
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான்
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான்

மேல்
$11.102

#102
ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல்
களி நறும் சுரும்பு இமிர் கண்டல் வேலி சூழ்
புளினமும் கானலும் பொற்ப நோக்கினான்
நளினமும் புறம்தரு நயன வேந்தனே

மேல்
$11.103

#103
பெரும் கட மலை குலம் பெயர்த்தும் வந்தன
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே எனா
இரும் கட களிறு தேர் எண் இல் சேனை கண்டு
அரும் கடல் வாய் திறந்து அலறி ஆர்த்ததே

மேல்
$11.104

#104
நல் நெடும் துறை எலாம் நாளிகேரமோடு
இன் நெடும் பனம் கனி எடுத்து அருந்தினார்
புன்னையின் புது மலர் புனைந்து கைதையின்
மென் நிழல் வைகினார் விலாச வீரரே

மேல்
*அத்தினபுரியின் புறத்தே சேனைகளுடன்
*பாண்டவர் தங்கியிருத்தல்
$11.105

#105
நா நலம் புனல் கெழு நாடும் கானமும்
ஏனல் அம் புனக்கிரி இடமும் நெய்தல் அம்
கானலும் இ வகை கடந்து காவலன்
தூநலம் திகழ் பதி தோன்ற எய்தினார்

மேல்
$11.106

#106
அத்தினபுரி-தனக்கு அருகு வால் வளை
முத்து இனம் நிலவு எழ முகைக்கும் தாமரை
தொத்தின பொய்கையும் சுரும்பு அறா மலர்
கொத்தின சோலையும் குறுகி வைகினார்

மேல்
$11.107

#107
மொட்டின பரு மணி முடி கொள் தேர் பரி
வெட்டின பரிகளும் வெம்மை ஆறின
மட்டின பரிமள மரங்கள் யாவையும்
கட்டின கழை பொரு கவள யானையே

மேல்
$11.108

#108
தரித்தனர் வீரரும் தம்தம் மாதரும்
சரித்தன சும்மைகள் தங்கு பண்டியும்
பரித்தன நல் நிற படங்கு வீடுகள்
விரித்தனர் இடம்-தொறும் வேந்தர் எய்தினார்

மேல்
$11.109

#109
கை வரு தண்டுடை காளை வெம் சிலை
தைவரு செம் கையான் தாரை வெம் பரி
மெய் வரு குமரன் வேல் விடலை வேந்தனோடு
ஐவரும் அமர்ந்தனர் ஆண்மை ஏறு அனார்

மேல்
$11.110

#110
மறத்து இரும் தானையான் வஞ்சம் எண்ணினான்
அறத்து இருந்திலன் எனா அஞ்சி அந்த ஊர்
புறத்து இருந்தது என புனிதன் பாசறை
நிறத்து இருந்தது பிற நிகர்ப்ப இல்லையே

மேல்
*பாண்டவர் வரவு அறிந்து,
*துரியோதனாதியர் மகிழ்தல்
$11.111

#111
மீண்டவர் வரி சிலை விதுரன் ஏவலால்
பாண்டவர் வரவு முன் பணிந்து கூறவே
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம்
பூண்டவர் களித்து மெய் புளகம் ஏறினார்

மேல்
$11.112

#112
தேசு அறை இடங்களும் தேம் கொள் கானமும்
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும்
வீசு அறல் வன நதி விதமும் மேல்கொள
பாசறை இருந்தவா பகரல் ஆகுமோ

மேல்
*சூரியன் மறைவும் சந்திரன் தோற்றமும்
$11.113

#113
விருந்துறு சேனை வெவ் வீரர் இன் அமுது
அருந்தினர் மெய் குளிர்ந்து அசைவு தீர்தலும்
வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும் என்று
இரும் தபனனும் இவர்க்கு இரவு நல்கினான்

மேல்
$11.114

#114
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்
பண் வளர் நல் இசை பல மகீபரும்
கண் வளர் பாளையம் காண எண்ணியே
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான்

மேல்
$11.115

#115
மருள் மிகு சுரும்பு இனம் மணந்த சோலையின்
இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர்
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே

மேல்
$11.116

#116
கானிடை சிலசில கடி கொள் தேன் உமிழ்
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால்
வானிடை முறைமுறை வளரும் மா மதி
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே

மேல்
$11.117

#117
பொரு இல் வெண் துகில்கொடு பொதிந்தது என்னவே
பரி நெடும் தேர் மிசை பால் நிலா எழ
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர்
இருள் என விளங்கின யானை வெள்ளமே

மேல்
*சேனையில் நிகழ்ந்த சில செயல்கள்
$11.118

#118
பரியன கந்துகம் பரிந்து மா மத
கரி சில பாகையும் கை கடந்தன
அரிவையர் பலர் துயில் அனந்தலோடு தம்
சுரி குழல் மேகலை சோர ஓடினார்

மேல்
$11.119

#119
நீடுறு தருக்களின் நிரைத்த மா அதன்
கோடு இற எறிந்து கைக்கொள்ளும் ஓதையால்
மாடு உறு பொங்கர்-வாய் வதிந்த புள் வெரீஇ
பேடொடு சேவல் மெய் பிரிந்து தேடுமால்

மேல்
$11.120

#120
ஊதையின் மரன் அசைவுற பொறா வடம்
மோதுறு முளையுடன் முடுகு வேட்டமாய்
தீது அறு பரி சில செல்வன் பாசறை
மாதிரம் உற பல வாளி போதுமால்

மேல்
$11.121

#121
ஆடுவர் சிலர் சிலர் ஐவர் வான் புகழ்
பாடுவர் சிலர் சிலர் பாயல் இன்புற
கூடுவர் சிலர் சிலர் கோதை மாதரோடு
ஊடுவர் சிலர் சிலர் ஓகை வீரரே

மேல்
*சூரியன் தோன்ற, படைகளைப் பாசறையில் நிறுத்தி,
*பாண்டவர் அத்தினாபுரிக்குச் செல்லுதல்
$11.122

#122
பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின்
வஞ்சகம் இயற்றுவான் மனம்-கொல் என்னவே
மிஞ்சிய குளிர் மதி மேல் பொறாது இகல்
செம் சுடரவன் குண திசையில் தோன்றினான்

மேல்
$11.123

#123
துயில் உணர்ந்து பைம் தொடையல் மார்பினான்
வெயில் எழுந்து தன் விரதம் உற்ற பின்
பயில் பெரும் சனம் பாசறை படுத்து
எயில் வளைந்த மா நகரி எய்தினான்

மேல்
*திருதராட்டிரனைப் பாண்டவர் வணங்குதலும்,
*அவன் மைந்தரைத் தழுவி, நயவுரை கூறுதலும்
$11.124

#124
இரு மருங்கினும் இளைஞர் நால்வரும்
தரும வல்லியும் தானும் ஆகவே
அரு மடங்கல் ஏறு அனைய ஆண்மையான்
குரவன் இன்புறும் கோயில் நண்ணினான்

மேல்
$11.125

#125
சிந்தை அன்புற செல்வ வாயிலோர்
வந்த மைந்தர்-தம் வரவு கூறவே
முந்தை ஏவலால் மொழிய உள் புகுந்து
அந்த மீளி சேவடி வணங்கினார்

மேல்
$11.126

#126
தம்பி மைந்தரை தழுவி நும்மை இன்று
எம்பி காண நல்வினை இயன்றிலான்
உம்பிமாரொடும் ஒத்து வாழ்க நீர்
நம்பி என்று நல் நயம் விளம்பினான்

மேல்
*வணங்கிய திரௌபதியைக் காந்தாரியிடம்
*செல்லப் பணித்து, மைந்தருடன் அளவளாவுதல்
$11.127

#127
பாவை தன் செழும் பணிவு கூறலும்
மேவி வாழ்க எனா மெய் களிக்கவே
தேவி தன்னுழை செல்க என்று கொண்டு
ஏவி மைந்தரோடு இவை விளம்பினான்

மேல்
$11.128

#128
கருமம் நீதி சீர் கல்வி மந்திரம்
பெருமை ஆண்மை தாள் பீடு நீடு பேர்
தருமம் யாவும் நும் தன்மையாதலால்
அருமை இன்றியே அரசு செல்லுமே

மேல்
$11.129

#129
இகல் எறிந்து நீள் இராயசூய மா
மகம் உழந்ததும் வண்மை செய்ததும்
திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும்
தொகுதி கொண்ட நும் துணைவர் கூறினார்

மேல்
$11.130

#130
எண் திசாமுகத்து எல்லை எங்கணும்
கொண்டது ஆகும் முன் குருகுலத்து உளோர்
துண்டியாமல் நும் துணைவர் தம்மொடும்
பண்டு போல மண் பரவ வைகுவீர்

மேல்
$11.131

#131
சேண் இருந்து நும் சீர் செவிப்படுத்து
யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களை
காணுமாறு செம் கண் படைத்திலேன்

மேல்
$11.132

#132
நேயம் உண்டு போல் நெஞ்சொடு இன்ன சொல்
தூய மைந்தரை சொல்லி நீவிர் போய்
யாயையும் பணிந்து எந்தை தாள் மலர்
சேய பங்கயம் சேர்-மின் என்னவே

மேல்
*காந்தாரியை வணங்கி, அவளுடைய வாழ்த்தை
*மைந்தர் பெறுதல்
$11.133

#133
இருந்த மைந்தரும் ஏவலோடு சென்று
அருந்ததிக்கு நேர் அன்னை-தன்னையும்
பரிந்து இறைஞ்சினார் பயில வாழ்த்தினாள்
திருந்து பூணினாள் சிறுவர்-தம்மையே

மேல்
$11.134

#134
முந்த வந்து தாள் முளரி கைதொழும்
அம் தண் வல்லியும் ஐவர் மைந்தரும்
வந்து நிற்றலும் மகிழ்வொடு உன்னினாள்
குந்தி செய் தவம் கூரும் என்னவே

மேல்
*திரௌபதியைக் காந்தாரியிடத்து இருத்தி, பாண்டவர்
*சென்று வீடுமன் முதலியோரை வணங்குதல்
$11.135

#135
வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து
யாயையும் பணிந்து எழில் கொள் தோளினார்
போய் அகண்டமும் போற்று கங்கையாள்
சேயை அன்புடன் சென்று இறைஞ்சினார்

மேல்
$11.136

#136
வேந்து அழைத்ததும் விதுரன் ஏவலின்
போந்து அழைத்ததும் புகல வந்ததும்
தாம் தழைக்கவே தந்தைதந்தை முன்
தேம் தழைத்த தார் செல்வர் கூறினார்

மேல்
$11.137

#137
புள் அலங்கலார் புரிவு உரைத்திட
கொள்ளை வன் திறல் குருகுலேசனும்
கள்ள வஞ்சர் வெம் கருவி செய்யினும்
உள்ளது உண்டு எனா உண்மை கூறினான்

மேல்
$11.138

#138
தாதைதாதையை தாம் அகன்று பின்
கோதை வெம் சிலை குருவை மைந்தனை
கீத நான்மறை கிருபனை செழும்
பாதநம் செய்தார் பரிவொடு ஏகியே

மேல்
*பாண்டவர் விதுரன் மாளிகையில் புகுந்து
*தங்க, சூரியன் மறைதல்
$11.139

#139
சதுர மா மறை தலைவர்-தங்களால்
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே
மதுர மன்றல் நாள் மாலை மன்னரும்
விதுரன் மந்திரம் மீள மன்னினார்

மேல்
$11.140

#140
தமது இல் மெய்யுற தம்மது ஆகவே
அமிழ்து அருந்தி அங்கு அவர் இருந்த பின்
திமிர நாசனன் செய்ய மேனியன்
கமல நாயகன் கடலில் மூழ்கினான்

மேல்
*மாலைப் பொழுதில் விதுரன் மாளிகையின் தோற்றம்
$11.141

#141
தினகரன் கரம் திகழ் கமண்டலம்
பனி கொள் செக்கர் தம் படம்-அது ஆகவே
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர்
புனிதர் ஒத்தது அ புன்கண் மாலையே

மேல்
$11.142

#142
காய்ந்த மெய் செழும் கதிரவன் கரம்
ஏய்ந்த அ பதத்து எழில் எறித்தலால்
ஆய்ந்து பத்தி கொண்டு அடர் பசும் பொனால்
வேய்ந்தது ஒக்குமால் வேந்தன் மாடமே

மேல்
*சந்திரனது தோற்றக் காட்சி
$11.143

#143
மன் குலத்துளோர் வஞ்சகம் செயார்
என் குலத்துளோர் என்-கொல் ஈது என
தன் குலத்துளோர்-தமை விலக்கவோ
நன் குலத்துளோன் உதயம் நண்ணினான்

மேல்
$11.144

#144
குருகுலாதிபன் கொடிய நெஞ்சமே
இருள் நிறைந்தது என்று யாம் வெறுக்கவோ
மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள்
கரியன் என்னுமா காணல் ஆனதே

மேல்
$11.145

#145
உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள்
வெண் நிலாவினால் வெளுத்த எங்கணும்
கண் இலான் மகன் கடுமை அஞ்சி இ
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார்

மேல்
*திரௌபதியும் விதுரன் மாளிகை வந்து சேர்தல்
$11.146

#146
விந்தை வாழ்வு கூர் விறல் மிகுத்த தோள்
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன்
சிந்தை காமுற தெரிவை வந்து இளம்
தந்தை கோயிலில் தானும் நண்ணினாள்

மேல்
*விதுரன் மாளிகையில் இரவைக் கழித்தபின், காலைக்கடன்
*கழித்து, தம்பியருடன் தருமன் இனிது இருந்து, முனிவரர்
*முதலியோர்க்குத் தானம் முதலியன வழங்குதல்
$11.147

#147
மங்குல் சுற்றும் மா மண்டபத்திடை
கங்குலில் தடம் கண் துயின்ற பின்
பொங்கு உலைப்படும் பொன் தசும்பு என
செம் குல கதிர் திகிரி தோன்றவே

மேல்
$11.148

#148
பாயல் மன்னு கண்படை உணர்ந்து உளம்
தூயவன் பொலம் சுடர் பணிந்த பின்
சாயை அன்ன தன் தம்பிமாரொடும்
சீயம் என்னவே திகழ வைகினான்

மேல்
$11.149

#149
முனிவரர்க்கு எலாம் முதன்மை ஆகவே
தனதனின் பெரும் தானம் உய்த்திடும்
பனுவல் வித்தக பாவலர்க்கு எலாம்
கனம் என தரும் கனக மாரியே

மேல்
$11.150

#150
கண்டுகண்டு தன் கழல் வணங்கும் மா
மண்டலேசரும் மாலை மன்னரும்
கொண்டு வாழ்வுற குரகதம் குடை
தண்டு சாமரம் தந்தி நல்குமே

மேல்
$11.151

#151
பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய்
ஏந்து தோளினான் இவண் இருந்துழி
பாந்தள் அம் கொடி பார் மகீபனை
சேர்ந்த மன்னர்-தம் செயல் விளம்புவாம்

மேல்
*புதிய மண்டபத்தில் யாவரும் ஈண்டி இருக்கும்போது,
*பாண்டவரை அழைத்து வருமாறு பிராதிகாமி
*என்பவனைத் துரியோதனன் அனுப்புதல்
$11.152

#152
தானும் மாமனும் குறித்த தம்பிமாரும் அங்கர்-தம்
கோனும் மாசு இல் தந்தைதந்தை கொடுமர கை விதுரனும்
வான் உலாவு புகழ் படைத்த மைந்தனும் துரோணனும்
ஏனையோரும் வந்து கூடி இனிது இருந்த எல்லையே

மேல்
*பிராதிகாமி பாண்டவர்க்குச் செய்தி தெரிவித்தல்
$11.153

#153
மண்டபத்தின் அழகு காண மன்னர் ஐவர்-தம்மை நீ
கொண்டு இமைப்பின் வருக என்று கொற்றவன் பணிக்கவே
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி வான்
அண்டர் கற்பம் என இருந்த அரசர்-தம்மை அணுகினான்

மேல்
$11.154

#154
சென்று யாகபதி கழல் திரு பதம் பணிந்து கீழ்
நின்று வாய் புதைத்து அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய்
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ
என்று கூறி ஏவினான் இங்கு என்னை என்று இயம்பினான்

மேல்
*திரௌபதியைத் தந்தை இல்லிற்கு அனுப்பி,
*துணைவருடன் தருமன் சபையை அடைதல்
$11.155

#155
ராயசூய பன்னி-தன்னை எந்தை இல்லில் யாயொடும்
போய் இருந்து வருக என்று புரை இலா மனத்தினான்
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு நன்றி இல்
பேய் இருந்தது என இருந்த பீடு இலானை எய்தினான்

மேல்
*தருமன் வீடுமன் முதலியோரை முறைப்படி வணங்கி,
*ஆசனத்து அமர்ந்து, அம் மண்டபத்தின் அழகை
*வியந்து கூறுதல்
$11.156

#156
மன் இருந்த பேர் அவை-கண் வந்து முந்தை வரிசையால்
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று
இன்ன இருந்த தலைவர் தாள் இறைஞ்சி முன்னர் இட்டது ஓர்
மின் இருந்த ஆசனத்தின் மீது இருந்து வினவினான்

மேல்
$11.157

#157
இந்த மண்டபம் சமைந்த இனிமை-தன்னை என் சொல்வேன்
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான தேவர் ஊர்
அந்த மண்டபத்தும் இல்லை அதனை அன்றி மண்ணின் மேல்
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ

மேல்
$11.158

#158
என வியந்து தருமராசன் இனிது இயம்ப யாளி வெம்
சின விலங்கல் என்னுமாறு சேரவந்த இளைஞரும்
மனு விளங்கு முறைமையான் வணங்கி மன்னர் மன்னன் முன்
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின் மீது வைகினார்

மேல்
*துரியோதனன் தருமனைச் சூதாடத் தூண்டுதல்
$11.159

#159
புரை கொள் பாவமே நிறைந்து புண்ணியம் குறைந்து நீள்
நரகின் ஊழிகாலம் வாழ்தி நாகர் வாழ்வின் உள்ளதும்
தரணி மீது பெறுக என்று தந்தது ஒக்கும் வான் உளோர்
அரவ ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே

மேல்
$11.160

#160
மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும்
நீயும் இன்று சூது கொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம்
போய் அருந்தும் அளவும் இங்கு இருந்து போது போகவே

மேல்
*தருமன் சூதாடுதலை வெறுத்து உரைத்தல்
$11.161

#161
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும்
கோது எடுத்துரைத்தல் நண்புகொண்டு அயிர்த்தல் கொடிய வெம்
சூது எடுத்து விழைதல் உற்ற சூள் பிழைத்தல் இன்னவே
தீது எடுத்த நூலில் முன்பு தீய என்று செப்பினார்

மேல்
$11.162

#162
வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனை
சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர்
ஏது கொண்டது அது நுமக்கு அளிப்பன் இம்பர் என்னவே

மேல்
*சகுனி நயவுரைகளால் தருமனைச் சூதாட அழைத்தல்
$11.163

#163
ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து சகுனியும்
தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால்
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார்

மேல்
$11.164

#164
வேணும் ஆகில் வேணும் அன்றி விரகு என கழன்று தான்
நாணும் ஆகில் விடுதியே நடக்க என்று நவிலுவீர்
பூணும் ஆகில் இனிமையோடு பொருது மற்று இருந்த நீர்
காணுமாறு நானும் இன்று கற்றவாறு இயற்றலாம்

மேல்
$11.165

#165
நீடுகின்ற தரும நீதி நிருப கேள் விழைந்து நாம்
ஆடுகின்ற சூதில் வெற்றி அழிவு நம்மில் ஒக்குமால்
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து நீ
ஓடுகின்றது ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ

மேல்
$11.166

#166
யான் எறிந்த கவறு வெல்லின் இசைவு எனக்கு அளித்தி நீ
தான் எறிந்த கவறு வெல்லின் அதின் இரட்டி தருகுவேன்
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய்
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே

மேல்
*சகுனியின் உரைக்கு மாறு உரையாது உதிட்டிரன் இருக்க,
*விசயனும் வருந்துமாறு கன்னன் தருமனை
*நோக்கி உரை பகர்தல்
$11.167

#167
என்று மாமன் உற்று உரைப்ப இவை-தமக்கு அ அவையில் வேறு
ஒன்றும் மாறு உரைத்திடாது உதிட்டிரன் இருக்கவும்
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம்
கன்றுமாறு உரைத்தனன் சொல் கன்னன் என்னும் மன்னனே

மேல்
$11.168

#168
போது போகுமாறு இருந்து பொருதும் வருதி என்னவும்
சூது போரும் அஞ்சியே தொலைந்து உளம் துளங்குவாய்
மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர்
மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே

மேல்
*வெகுண்டு எழுந்த விசயனை அடக்கி, தருமன்
*சூதாடுதற்கு ஒருப்படுதல்
$11.169

#169
இல் எடுத்து விரகினோடும் எமை அழைத்து மாயை கூர்
வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும்
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் என்று கன்னன் மேல்
வில் எடுத்தனன் பொறாமல் வீர வாளி விசயனே

மேல்
$11.170

#170
ஏதிலாரின் எம்பி நீ இருக்க என்று இருத்தி முன்
காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர்
ஓதில் ஆண்மை குன்றும் என்று உருத்து எழுந்து மாய நின்
சூதில் ஆடல் புரிதும் என்று தருமனும் தொடங்கினான்

மேல்
*துரியோதனன் சகுனிக்காக ஒட்டம் வைப்பதாகக் கூறி,
*தருமனையும் ஈடுபடுத்துதல்
$11.171

#171
நின்னை வெல்லின் ஒட்டம் யாவும் நீ கொடுக்க நீ இவன்
தன்னை வெல்லின் யான் விரைந்து தருவன் என்று தருமனை
பின்னை வெல்ல ஒணாது என பிணிப்புடன் மருட்டினான்
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே

மேல்
*தருமனும் சகுனியும் சூதாடுதல்
$11.172

#172
அவிர் பசும் பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து பூம்
தவிசில் ஒன்றிட புகுந்து தருமன் வைக மாமனும்
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள்
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன் பொருந்தவே

மேல்
$11.173

#173
கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில்
பவளமான நீலமான கருவி முன் பரப்பினார்
தவளமான கவறு கை தரித்து மெய் தரித்த தார்
துவள மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார்

மேல்
$11.174

#174
ஈரம் வைத்த சிந்தை மன்னன் இசைவு என கழுத்தின் முத்து
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல்
வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி
சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே

மேல்
$11.175

#175
இருவரும் கவற்றினால் எறிந்தபோது எறிந்தவாறு
ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான்
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள்
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான்

மேல்
$11.176

#176
வைத்த ஆரம் அவன் எடுக்க மாயவன் கொடுத்த நல்
மெய் தவாத தேர் குறித்து மீளவும் பரப்பினான்
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர
பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே

மேல்
$11.177

#177
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத
கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ
பார் கொடுத்தும் அரசு கூர் பதம் கொடுத்தும் உரிய தம்
ஊர் கொடுத்தும் அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே

மேல்
$11.178

#178
வெம் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன்
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள்
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று
இங்கு இரா நரேசன் உற்ற இசைவினால் அளிக்கவே

மேல்
*யாவற்றையும் தருமன் சூதில் இழந்துவிட, மன்னன்
*குறிப்பின் வண்ணம் பாண்டவர்களையே பணையமாக
*வைக்கச் சகுனி தூண்டுதல்
$11.179

#179
யாவையும் கொடுத்து இருப்ப இளைஞரோடு மெய் தவ
கோவையும் குறிக்க என்று குருகுலேசன் மொழியவே
ஈவையும் குறித்து வெற்றி எய்த எய்த இவர்கள்-தம்
வீவையும் குறித்து வென்ற மேன்மையான் விளம்புவான்

மேல்
$11.180

#180
உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார் இனம்
தன்னையும் குறித்து இசைந்து தருக வந்து பொருக என
பின்னையும் குறிப்பு உறாது பொருது கை பிழைக்க மேல்
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான்

மேல்
*தருமன் தங்கள் ஐவரையும் சூதில் ஒட்டித் தோல்வியுற,
*சகுனி திரௌபதியைப் பணையமாக வைக்கத் தூண்டுதல்
$11.181

#181
மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால்
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர்
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ
கைவரும் கவற்றின் இன்னம் எறிக என்று கழறினான்

மேல்
*விதுரன் மனம் வருந்தித் திருதராட்டிரனை
*நோக்கிச் சில கூறுதல்
$11.182

#182
அன்ன போதில் அருள் விதூரன் அந்தனை புகன்று எழா
நின் அபோதம் அன்றி வேறு நிருபர்-தாம் நினைப்பரோ
இன்ன போதுமோ நமக்கு இயற்கை அன்று இது என்று நீ
சொன்னபோது நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ

மேல்
$11.183

#183
திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி இளைஞர் தீமை செய்தகால்
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ
மிருகம் அன்று பறவை அன்று இரக்கம் இன்றி மேவு நின்
அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே

மேல்
$11.184

#184
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே
முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால் அடர்ப்பரோ
அன்பு இறந்ததேனும் நீதி அழிய நீ நடத்தினால்
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே

மேல்
$11.185

#185
வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி மற்று இவன்
தரும வஞ்சி-தனை இசைந்து பொருதும் என்கை தருமமோ
கருமம் அன்று உனக்கு நாச காலம் வந்ததாகலின்
பெரும தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் என்று பேசினான்

மேல்
$11.186

#186
விதுரன் நொந்து நீதி கூற விழி இலாமை அன்றியே
வெதிரனும்-கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான்
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும்
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான்

மேல்
*தருமன் திரௌபதியையும் சூதில் இழந்து,
*சிறிதும் கலங்காதிருத்தல்
$11.187

#187
காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன் மேல்
நேயம் உற்று நின்று தானும் நிகர் பிடித்தது என்னவே
மாயம் உற்ற கவறும் அந்த மாமன் வல்லபத்திலே
தாயம் உற்று இடம் கொடாது தருமனை சதித்ததே

மேல்
$11.188

#188
இன்ன தாயம் வேண்டும் என்று எறிந்தபோது மற்று அவன்
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின்
தன்னது ஆய அரசு வாழ்வு தரணி மன்னன் நல்கினான்
அன்னது ஆயபோதும் நெஞ்சு அசைந்திலான் அசஞ்சலன்

மேல்
*தருமனது தோல்வி கண்டு, அவையோர் வருந்தி மொழிதல்
$11.189

#189
முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று
பரசுவது ஒன்றும் இல்லா பான்மையோடு இருந்த காலை
விரை செறி அலங்கல் சோர மெய் குலைந்து உள்ளம் வெம்பி
அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார்

மேல்
$11.190

#190
குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார்
மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார்
தருமன் இத்தனை நாள் செய்த தருமமும் பொய்யோ என்பார்
உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார்

மேல்
$11.191

#191
பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன் உறவும் என்பார்
மாய்ந்தவே அறமும் தேசும் மனுநெறி வழக்கும் என்பார்
பூம் தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது என்பார்
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார்

மேல்
$11.192

#192
பழியுடை தந்தை ஒன்றும் பகர்கலாது இருக்கும் என்பார்
விழியுடையவரை அன்றோ மேன்மையோர் வெறுப்பது என்பார்
அழியுமே இவனால் மைந்தர் அரும் பெரும் செல்வம் என்பார்
வழிவழியாக நிற்கும் வசை இவன் புரிந்தது என்பார்

மேல்
*துரியோதனன் வீடுமனை நோக்கிக் கூறிய தகாத உரை
$11.193

#193
இன்னன தரணி வேந்தர் இருந்துழி இருந்து கூற
மன்னனும் தம்பி-தானும் மாமனும் மாறா வண்மை
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி
பன்னக துவசன் கேட்டோர் பலரும் மெய் பனிக்க சொல்வான்

மேல்
$11.194

#194
தண்ணிய தருமன் செய்த பாவமோ சகுனி செய்த
புண்ணிய நெறியோ அந்த பொதுமகள் யாகசாலை
நண்ணிய தவறோ மற்றை நால்வரும் தகைமை கூர
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான்

மேல்
*வீடுமன் அறிவுரையைத் துரியோதனன் செவிக் கொள்ளாது,
*வெகுளி மிக, விதுரனை நோக்கிக் கூறிய மொழிகள்
$11.195

#195
தகா மொழி தலைவன் கூற தவத்தினால் உயர்ந்த கோவும்
நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல்
மிகாது இனி நிகழ்ந்த செற்றம் விடுக என செவியில் சற்றும்
புகாது உளம் வெகுளி கூர புரிந்தனன் போதம் இல்லான்

மேல்
$11.196

#196
இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான்
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற
துரங்கமும் களிறும் தேரும் துறைதுறை கவர சொற்றி

மேல்
$11.197

#197
தொல்லை மா நகரும் நாடும் தோரணம் நாட்ட சொற்றி
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி
சொல்லிய இளைஞர்-தாமும் தொண்டினராக சொற்றி

மேல்
$11.198

#198
இவர்-தமக்கு உரியள் ஆகி யாக பத்தினியும் ஆன
துவர் இதழ் தவள மூரல் சுரி_குழல்-தன்னை இன்னே
உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண
கவர்தர புகறி என்றான் கண் அருள் சிறிதும் இல்லான்

மேல்
*விதுரன் துரியோதனனது செய்கையை இடித்து மொழிதல்
$11.199

#199
அறம் தரும் மைந்தன்-தன்னை அறன் அலாது இயற்றி நம்பி
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய்
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே

மேல்
$11.200

#200
திரு தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும் செவ்வி
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர்
உரு தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம்
கருத்தினில் நினையல் கண்டாய் கடவுளர் கற்பம் வாழ்வாய்

மேல்
$11.201

#201
விண்ணில் அங்கு அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா
பண் நலம் கடந்த மென் சொல் பாவையை பழிக்க நீ இன்று
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான்

மேல்
*’நீ கேட்ட சொல் என்?’ என்ற துரியோதனனுக்கு
*விதுரன் விரித்து உரைத்தல்
$11.202

#202
கேட்ட சொல் வினவும் நாககேதனன் கேட்ப மீண்டும்
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ
நாட்டமும் நல் நீர் மல்க நா அமிழ்து ஊற பின்னும்
கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான்

மேல்
$11.203

#203
தானவர் ஆகி உம்மை தனித்தனி இறந்தோர் யாரும்
மானவர் ஆகி இம்மை வந்தனர் இம்பர் என்றே
தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண்
மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள்

மேல்
$11.204

#204
நான்முகன்-தானும் ஏனை நாகரும் நாகர் கோனும்
பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும்
தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வண் துளப மாலை
மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான்

மேல்
$11.205

#205
மின் இடை விளங்கும் மேக மேனியான் அவனி மானை
நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம்
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன்
தன்னிடை விடுதும் என்று சாற்றியே தளர்வு தீர்த்தான்

மேல்
$11.206

#206
அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால
நொந்து கண் துயில் பெறாதே நோதக புரிந்தேன் மன்னோ

மேல்
$11.207

#207
ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர்
இரு திறத்தவரும் நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால்
வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி
பொருது இறப்பதற்கே சற்றும் புரிவிலீர் புரிகின்றீரே

மேல்
*விதுரனைத் துரியோதனன் நகையாடி அவமதித்து, அருகில் நின்ற
*பிராதிகாமியிடம் திரௌபதியை அழைத்துவரப் பணித்தல்
$11.208

#208
என்று அவன் உரைப்ப தானும் எறிந்து கை நகை கொண்டாடி
அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி
நின்றவன் ஒருவன்-தன்னை நீ நனி விரைவின் ஓடி
சென்று அவண் இருந்த கோல தெரிவையை கொணர்தி என்றான்

மேல்
*பிராதிகாமி திரௌபதி இருக்குமிடம் செல்லாமலே
*மீண்டு வந்து, அவள் கூற்றாகச் சிலவற்றைப்
*படைத்து மொழிதல்
$11.209

#209
பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி
இருந்துழி எய்துறாமல் இடைவழி-நின்றும் மீள
விரைந்தனன் ஓடி வந்து வேந்தனுக்கு ஏற்ப சொன்னான்

மேல்
$11.210

#210
என்னை தோற்று மனுநெறி கூர் இசையோன் தன்னை தோற்றனனோ
தன்னை தோற்று தனது மன தளர்வால் என்னை தோற்றனனோ
முன்னை தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி
பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ நினைக்க பெறாது என்றாள்

மேல்
*துரியோதனன் மனம் பொறாமல், திரௌபதியை அழைத்துவரத்
*துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்
$11.211

#211
செல்வ பாவை திருவுள்ளம் இது என்று அந்த தேர்ப்பாகன்
சொல்ல பாவி தரியாமல் துச்சாதனனை முகம் நோக்கி
அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி ஆகிய அ
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின் அழை என்றான்

மேல்
*திரௌபதி இருந்த இடத்தை அணுகி, துச்சாதனன் அவளை அழைத்து,
*’என் பின்னே போதுக!’ *என அவளது கையைப் பற்றுதல்
$11.212

#212
நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான்
தோன்றா நயன துணைவனை போல் துணை கண் துகிலின் சூழ்ந்திருந்த
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி இவை சொல்வான்

மேல்
$11.213

#213
தானே சூது பொருது அழிந்து தலைவன்-தனக்கு உன் பதியான
கோனே சொல்லி யாவையும் முன் கொடுத்தான் கொடுத்த பின் இசைவு
யானே என்றும் வீமன் முதல் இளையோர் என்றும் என் வேள்வி
மானே என்றும் குறித்து இழந்தான் வழக்கால் வென்றோம் வருவாயே

மேல்
$11.214

#214
பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல
மன்னை சிரித்த செம் கனி வாய் மாறாது இரங்கி அழுது அரற்ற
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன்
தன்னை சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே

மேல்
$11.215

#215
தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவி தழுவி தனித்தனியே
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய்
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என
பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே

மேல்
*திரௌபதி காந்தாரியின் அருகில் செல்ல, அவள்,
*’துச்சாதனன் பின் அஞ்சாது போ’ என்று கூறுதல்
$11.216

#216
சிலை வாய் அங்கை அவன் தீண்ட செல்லாள் ஆகி அல்லல் உழந்து
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு
வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள்

மேல்
$11.217

#217
பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள்
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள்
மேவார் அல்லர் தமர் அழைத்தால் மேல் உன் கருத்து விளம்பிவர
பாவாய் அஞ்சாது ஏகு என்றாள் பல பாதகரை பயந்தாளே

மேல்
*திரௌபதி கூந்தலைச் செண்டால் பற்றி இழுத்து
*அவை நோக்கிச் செல்லுதல்
$11.218

#218
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை
செண்டால் அவள் பைம் குழல் பற்றி தீண்டான் ஆகி செல்கின்றான்
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய
கொண்டார் இருப்பர் என்று நெறி கொண்டாள் அந்தோ கொடியாளே

மேல்
$11.219

#219
சூழும் கனல் வாய் உரும் அன்றி துளி வாய் முகிலும் மகிதலத்து
வீழும்-கொல்லோ உற்பாதம் விரவிற்று என்றே வெரூஉக்கொள்ள
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய தழீஇக்கொண்டு
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற மண் மேல் இழுத்து வருகின்றான்

மேல்
*திரௌபதியின் நிலை கண்டோர் பலரும் வருந்தி மொழிதல்
$11.220

#220
தழலோ என்னும் கற்புடைய தனி நாயகி-தன் தாம நறும்
குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார்
நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம்
கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார்

மேல்
$11.221

#221
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர்
சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார்
மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை
கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார்

மேல்
$11.222

#222
இரும்போ நெஞ்சம் மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க இருந்து என்பார்
பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார்
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார்
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார்

மேல்
$11.223

#223
என்னே குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இ ஊர் இனி என்பார்
முன்னே ஓடி முறையிட்டால் முனியும்-கொல்லோ எமை என்பார்
பின்னே இரங்கி அழுதுஅழுது பேதுற்று இன்னல் பெரிது உழைப்பார்
அன்னே துன்பம் களைந்து இன்பம் ஆவாய் என்றே அருள் புரிவார்

மேல்
$11.224

#224
பறை வன் களிற்று பல் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர்க்கு
இறைவன் பாவை யாம் காண இவையோ படுவது என்று உரைப்பார்
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார்

மேல்
*திரௌபதி அவையில் புக, திருதராட்டிரன் முதலியோர் வாளா
*இருத்தலும், ஏனைய மன்னர் துயருறுதலும்
$11.225

#225
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள்
கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர
தடுமாறு உள்ளம் தனி சோர தலைநாள் அளித்த தழல் போல்வாள்

மேல்
$11.226

#226
நாணே முதலாம் நாற்குணனும் நண்ணும் கற்பும் நயந்து அணிந்த
பூணே அனையாள் அழுது அரற்றி புன் பேர் அவையில் புகும் சோகம்
காணேம் என்று நிலன் நோக்கி கதிர் வேல் நிருபர் இருந்து இரங்க
கோணே நேர்பாடாய் இருந்தான் குருடு என்று உரைக்கும் கொடியோனே

மேல்
$11.227

#227
மேகம் குருதி பொழிந்து அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி
பூகம்பமும் உற்று உற்பாதம் போது யாவும் புரிந்தனவால்
நாகம் புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வருமே
சோகம் பிறவாது இருந்தார் மற்று ஒழிந்தார் யாரும் சோகித்தார்

மேல்
*தம்பியரின் கிளர்ந்தெழுந்த சினத்தைத் தருமன் தணிவித்தல்
$11.228

#228
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில் சினம் மூட்ட
தூமம் படு செம் தழல் அவிய சோனை மேகம் சொரிவது போல்
நாமம் தருமன் என தக்கோன் இளையோர் ஆற நவிலுற்றான்

மேல்
$11.229

#229
தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது
வேம் போது அங்கு வாழ்வ எலாம் வெம் கானுடனே வேவாவோ
ஆம்போது ஆகும் அது அன்றி ஆய பொருள்கள் அம் முறையே
போம்போது அனைத்தும் போம் முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும் என்றான்

மேல்
*துயருடன் அலறும் திரௌபதியை நோக்கி, துச்சாதனன் சுடுமொழி சொல்லுதல்
$11.230

#230
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ
கூரும் துயரினுடன் வீழ்ந்து கோகோ என்று கோ சபையில்
சோரும் கொடியை முகம் நோக்கி துச்சாதனன் மெய் சுட சொன்னான்

மேல்
$11.231

#231
மன் வந்து இருந்த சங்கத்து உன் மாமன் இருந்தான் ஐவரும் உன்
முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர்
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு
என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான்

மேல்
*திரௌபதியின் முறையீடும், வீடுமன் மறுமொழியும்
$11.232

#232
பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும்
சொல்லாது இருந்த பேர் அவையை தொழுதாள் அழுதாள் சோர்வுற்றாள்
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள்

மேல்
$11.233

#233
இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்-தனை கண்டு இரக்கம் உறா
மன்னற்கு இளையோய் தவறு உரைத்தல் வழக்கோ வடமீன் அனையாளை
என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான்
முன்னர் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம் வாய்மை மொழியோனே

மேல்
*திரௌபதி அவையோரை நோக்கி, நீதி வேண்டி முறையிட,
*அவையோர் ஓவியம் போல அசைவற்றிருத்தல்
$11.234

#234
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில்
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற
பின் தோற்றனனோ கரியாக பெரியோர் உண்மை பேசுக என
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள்

மேல்
$11.235

#235
மையோடு அரி கண் மழை பொழிய வாடும் கொடியின் மொழிக்கு ஆகார்
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு
பொய்யோ அன்று மெய்யாக புனை ஓவியம் போல் இருந்தாரை
ஐயோ அந்த கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு அதி பாவம்

மேல்
*விகருணன் சபையோரை நோக்கி உரைத்தல்
$11.236

#236
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும்
சொல்லாது ஊமர் கணம் போல தொல் போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப
மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர்
பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே

மேல்
$11.237

#237
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி
நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ
இறையோன் முனியும் என நினைந்தோ இருந்தால் உறுதி எடுத்து இயம்பல்
குறையோ கண் கண்டது நாளும் குலத்து பிறந்தோர் கூறாரோ

மேல்
$11.238

#238
தன் நேர் இல்லா நெறி தருமன் தன என்று உரைக்கத்தக்க எலாம்
முன்னே தோற்று தங்களையும் முறையே தோற்று முடிவுற்றான்
சொல் நேர் உரைக்கு தான் பிறர்க்கு தொண்டாய்விட்டு சுரி_குழலை
பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ என்று பேசீரோ

மேல்
*கன்னன் விகருணனைக் கடிந்து உரைத்து, அவையோரை நோக்கிக் கூறியவை
$11.239

#239
என்னா மன்னர் முகம் நோக்கி எல்லார் இதயங்களும் மகிழ
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின்
நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு
அன்னான் இளவல் முகம் நோக்கி அருக்கன் குமரன் அறைகின்றான்

மேல்
$11.240

#240
இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ இராச நீதி
குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ

மேல்
$11.241

#241
தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன் தோற்று தனையும் தோற்றான்
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம் அன்றி வேறே-கொல்லோ
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின்
யான் படைத்த மொழி அன்றே எங்கணும் இல் எனப்பட்டாள் இல்லாள் அன்றோ

மேல்
$11.242

#242
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி
தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே

மேல்
*ஐவரையும் திரௌபதியையும் துகில் உரியுமாறு தம்பிக்குத் துரியோதனன் பணித்தல்
$11.243

#243
என்ன வெகுண்டிடுகின்ற எல்லை-தனில் எழு உறழ் தோள் இராசராசன்
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற
மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை
சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ

மேல்
*சினம் கொண்ட தம்பியரைத் தருமன் அடக்குதல்
$11.244

#244
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர்
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க
ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான்

மேல்
*ஐவரும் தமது உத்தரீயங்களைத் தாமே கழற்றிக் கொடுக்க,
*திரௌபதியின் துகில் உரியத் துச்சாதனன் நெருங்குதல்
$11.245

#245
தருக துகில் என எழுந்து தங்களை வன்பொடு துச்சாதனன் சொலா முன்
வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார்
அருகு அணுகி மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான் அமைந்த போதில்
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள்

மேல்
*கோவிந்தா என்று உளம் உருகித் திரௌபதி கதற, கண்ணன் அருள் செய்தல்
$11.246

#246
ஆறாகி இரு தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர அளகம் சோர
வேறான துகில் தகைந்த கை சோர மெய் சோர வேறு ஓர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே

மேல்
$11.247

#247
அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க அமரர் போற்றும்
திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான்

மேல்
*துச்சாதனன் அவளது துகிலை உரிந்து கை ஓய்தல்
$11.248

#248
உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு
அடுத்த நிறம் பற்பல பெற்று ஆயிரம் ஆயிரம் கோடி ஆடையாக
கொடுத்தருள உரிந்தன பட்டு இருந்த பெரும் தனி கூடம் கொள்ளாது ஓடி
எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான்

மேல்
*வீடுமன் முதலியோர் திரௌபதியைப் புகழ்தலும் வானோர்
*மலர்மழை பொழிதலும்
$11.249

#249
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர
செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார்
அம் கண் அகல் வானோரும் ஆனகமும் வலம்புரியும் அதிர தங்கள்
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார்

மேல்
*வீமன் சினம் மிக்கு, நூற்றுவரைப் போருக்கு அழைத்தல்
$11.250

#250
அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள
பழுது படா அடல் ஆண்மை பவன குமரன் தட கை படை மேல் வைத்தான்

மேல்
$11.251

#251
அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும்
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பது போல் அமர் புரியாது இருக்கின்றேமால்
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள்
பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான்

மேல்
*திரௌபதியைத் தன் மடிமீது இருத்துமாறு துச்சாதனனுக்குத் துரியோதனன் பணித்தல்
$11.252

#252
கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா
மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண
தந்தை விழி இருள் போல தகு மனத்தோனும் துச்சாதனனை நோக்கி
பைம்_தொடியை கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக என பணித்திட்டானே

மேல்
*திரௌபதி துரியோதனனுக்கு இட்ட சாபமும், மொழிந்த சபதமும்
$11.253

#253
என்ற பொழுது அருந்ததிக்கும் எய்தாத கற்புடையாள் இடியேறுண்ட
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி
புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள்

மேல்
$11.254

#254
அரசவையில் எனை ஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி அளகம் தீண்டி
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி
முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள்

மேல்
*வீமன் வஞ்சினம் மொழிதல்
$11.255

#255
பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது படையாம் மேழி
போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே
தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள
வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே

மேல்
$11.256

#256
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை
தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக
கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே

மேல்
*அருச்சுனனும் நகுல சகாதேவர்களும் உரைத்த சபதம்
$11.257

#257
பகலவன்-தன் மதலை உயிர் பகை புலத்து கவர்வன் என பார்த்தன் சொன்னான்
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான்
சகுனி-தனை இமைப்பொழுதில் சாதேவன் துணித்திடுவேன் சமரில் என்றான்
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே

மேல்
*அங்கு நிகழ்ந்த உற்பாதங்கள்
$11.258

#258
மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு ஊர் கோளும் வெயிலை சூழ்ந்து
பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி
யாகம் செய் நெடும் சாலை இன் பாலும் செந்நீராய் இருந்த வேந்தர்
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே

மேல்
*திருதராட்டிரன் திரௌபதியைப் பணிந்து, நிகழ்ந்த பிழை பொறுக்க வேண்டுதல்
$11.259

#259
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன்
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான்

மேல்
$11.260

#260
உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல்
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே
பித்தர் மொழி என கருதி மறந்தருள் என்று ஒரு கோடி பிதற்றினானே

மேல்
*பாண்டவரின் கோபத்தை அகற்றி, சூதில் இழந்த பொருள்களை மீண்டும்
*கொடுத்து, ஊருக்குச் செல்ல விடை கொடுத்தல்
$11.261

#261
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர்
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள்
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும்
கைவரையும் பரிமாவும் செல்வமும் யாவையும் மீண்டும் கைக்கொள்வீரே

மேல்
$11.262

#262
கோமன்றில் அருந்ததியை கொண்டு இனி நீர் நில்லாமல் குறுக ஊரே
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி
யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால் யானும் முதல் அறிந்திலேனே

மேல்
$11.263

#263
என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு
மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான்

மேல்
*பாண்டவர் வாழ்வு பெற்றது கண்டு, சகுனி மனம் பொறாது கூறுதல்
$11.264

#264
படை கொடுத்தான் இவன் இழந்த பார் கொடுத்தான் அரசு ஆள பண்டு போல் வெண்
குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட
தடை கொடுத்தான் அகப்பட்டும் தலையழிக்க நினையாமல் தானே அம்ம
விடைகொடுத்தான் இனி விடுமோ வய புலியை வால் உருவி விடுகின்றீரே

மேல்
$11.265

#265
யாது ஒரு கருமமேனும் எண்ணியே துணிக என்றும்
காதலின் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று என்றும்
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே
பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீரே

மேல்
$11.266

#266
தீயினால் சுட்ட செம் புண் ஆறும் அ தீயின் தீய
வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ வடுவே அன்றோ
பேயினால் புடையுண்டாரோ மறப்பரோ பெரியோர் என்றான்
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு வேந்தன் மாமன்

மேல்
*துரியோதனன் ஆணைப்படி, துச்சாதனன் தருமனுடன் வழக்கு உரைத்தல்
$11.267

#267
சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும்
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான்
துகிலினை உரிந்த வன் கை சூரனும் தருமராசன்
மகனுடன் வெகுளி தோன்ற வழக்குற மொழிதலுற்றான்

மேல்
$11.268

#268
சரதம் என்று உண்மையாக சபையில் நீ இசைந்து தோற்ற
இரதமும் களிறும் மாவும் யாவையும் மீண்டும் தாரோம்
சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின்
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ

மேல்
$11.269

#269
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன்
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான்

மேல்
*துச்சாதனன் வார்த்தை கேட்டு, திருதராட்டிரன் வீடுமன்,
*விதுரன் முதலியோருடன் உசாவுதல்
$11.270

#270
என்றலும் தந்தை மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி மீண்டும்
வென்றி கொள் அரசனோடும் வெம் சிலை விதுரனோடும்
ஒன்றிய அமைச்சரோடும் உறுவன உசாவலுற்றான்

மேல்
*துரோணன் உண்மை நிலையை எடுத்துரைத்தல்
$11.271

#271
மேல் வரு கருமம் எண்ணா வெகுளியால் மிக்க வீரர்
நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார்
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன்

மேல்
*துரோணன் கருத்தையே ஏனையோரும் கூற,
*திருதராட்டிரன் தருமனுக்கு இட்ட ஆணை
$11.272

#272
வில் மகன் உரைக்க ஏனை அமைச்சரும் விதுரன்-தானும்
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார்
கல் மன நெடும் குன்று அன்னான் கருதி அ கணத்தே மீள
தன் மனை யாவர் நெஞ்சும் சருகு என தழைக்க சொன்னான்

மேல்
$11.273

#273
உன் உணர்வு உனக்கே உள்ளது உன் பெரும் துணைவர் ஆன
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன கொடுத்தல் ஒல்லார்
பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக என்றான்

மேல்
*அரசன் மாற்றத்தைத் துரோணன் தருமனுக்கு விளங்க
*உரைத்தலும், வீடுமன் முதலியோர் அதற்கு உடன்பட்டு மொழிதலும்
$11.274

#274
அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து செல்வ
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி
உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து சில நாள்
வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான்

மேல்
$11.275

#275
அரிவையோடு அகன்று நீவிர் ஐவரும் அடவி எய்தி
சுரர் தினம் ஈர்_ஆறு அம் கண் துன்னுதிர் மன்னும் நாட்டில்
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர் உங்கள்
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுற பெறுதிர் என்றான்

மேல்
$11.276

#276
மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர் ஈண்டு உளார் என்று
அறிந்திடின் மீண்டும் இவ்வாறு அரணியம் அடைதிர் என்றான்
பிறந்த இ மாற்றம் கேட்டு பிதாமகன் முதலாய் உள்ளோர்
சிறந்தது ஒன்று இதனின் இல்லை இசைத்ததே செய்-மின் என்றார்

மேல்
*திரௌபதி, ‘உரிமை பெற மீண்டும் சூதாட வேண்டும்’
*என, தருமன் மன்னவர் காண மறு சூது ஆடுதல்
$11.277

#277
சுரி குழல் குலைய நின்ற திரௌபதி சுருதி முந்நூல்
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர்
அரசரும் எனது மைந்தர் ஐவரும் யானும் மீண்டும்
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள்

மேல்
$11.278

#278
தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு நாங்கள்
கையறு தொண்டர் ஆகி கான் புகல் வழக்கும் அன்றால்
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும் அரும் சூது என்றான்
மெய்யுற இருந்த வேந்தர் மீளவும் காணலுற்றார்

மேல்
*தருமன் தன் புண்ணியத்தை ஒட்டமாக வைத்துக் கவறு
*ஆடி, தன் உரிமையை மீண்டும் பெறுதல்
$11.279

#279
சத்திய விரதன்-தானும் தன் பெருந்தேவி சொல்ல
பத்தியால் வணங்கி மாயன் பன்னிரு நாமம் ஏத்தி
ஒத்த வெண் கவறு வாங்க சகுனி யாது ஒட்டம் என்றான்
புத்தியால் அவனும் யான் செய் புண்ணியம் அனைத்தும் என்றான்

மேல்
$11.280

#280
உருட்டிய கவறு நேமி உடையவன் அருளினாலே
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான்

மேல்
*தருமன் இளைஞர் முதலியோருடன் குரவரை
*வணங்கி, காட்டிற்குச் செல்லுதல்
$11.281

#281
வென்று தன் இளைஞரோடும் மேதகு புதல்வரோடும்
மன்றல் அம் தெரிவையோடும் மற்றுளோர் தங்களோடும்
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம்
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான்

மேல்
*பாண்டவர் பிரிவினால் நகரமாந்தர் வருந்திப் புலம்புதல்
$11.282

#282
ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய ஏனை
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம
குழைவினால் நுகர்தல் இன்றி கொற்ற மா நகரி மாக்கள்
தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார்

மேல்
*தருமன் கானகம் சென்ற போதும், கலக்கம்
*இன்றி உவகையுடன் இருத்தல்
$11.283

#283
நாட்டிடை எல்லை பொன் தாள் நறு மலர் சிவக்க ஏகி
காட்டிடை புகுந்தபோதும் கலக்கம் அற்று உவகை கூர்ந்தான்
கூட்டிடை இன்ப துன்ப கொழும் பயன் துய்த்து மாறி
வீட்டிடை புகுதும்போது மெய் மகிழ் விபுதர் போல்வான்

மேல்

12. அருச்சுனன் தவநிலைச் சருக்கம்

*தருமன் துணைவருடன் முனிவர் சூழ, காமிய வனம் புகுதல்
$12.1

#1
பெருமித வலியும் பாரும் பேணலார் கவர இன் சொல்
தருமனும் தம்பிமாரும் தழல் எழு தையலாளும்
அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத
கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே

மேல்
*பாண்டவர் வருகையால் காமிய வனம் கவினுறுதல்
$12.2

#2
ஆரமும் அகிலும் நாறும் அருவியும் சுனையும் மத்த
வாரணம் பிடிகளோடு வாரி தோய் கானியாறும்
ஈரமும் நிழலும் காயும் கனிகளும் யாவும் ஈண்டி
கார் இனம் பொழியும் அந்த கானகத்து அழகு கண்டார்

மேல்
$12.3

#3
அங்கு இவர் புகுந்த பின்னர் அங்கியின் புகையும் மாறி
பொங்கிய ஓம தீயின் புகையினால் முகில் உண்டாக
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல்
எங்கணும் அழகு பெற்றது இமகிரி சாரல் போன்றே

மேல்
*துருபதன் முதலியோரும் கண்ணனும்
*பாண்டவரை வந்து காணுதல்
$12.4

#4
துருபனும் திட்டத்துய்மனும் சோமக
நிருபர் ஆனவர் யாவரும் நேர்ந்து உடன்
விரவு தானை விராடனும் சுற்றமும்
மருவினார் அ வனத்து இருந்தோரையே

மேல்
$12.5

#5
மற்றும் மற்றும் மகீபரில் அன்பினால்
உற்ற உற்ற உறவுடையோர்களும்
கற்ற கற்ற கலைவித மாக்களும்
சுற்றும் மொய்த்தனர் தோம் அறு கேண்மையார்

மேல்
$12.6

#6
மா தவத்தின் பயன் என மாதவன்
யாதவ குலத்து ஏறு இமையோர் பதி
ஆதபத்துக்கு அரு நிழல் போல் அருள்
வேத வித்தக வீரனும் மேவினான்

மேல்
*வந்தோர் அன்பினால் பல பல உரை பகர்தல்
$12.7

#7
பார் இழந்த இ பாதக சூது கேட்டு
ஈரும் நெஞ்சினர் ஏமுறு நோக்கினர்
பேர் அறன் தரு பிள்ளையை பார்த்து அருள்
கூர அன்பொடு இவையிவை கூறுவார்

மேல்
$12.8

#8
மரபின் வல்லியை மன் அவை ஏற்றிய
குருகுலேசனை கொற்ற வெம் சேனையோடு
இரிய எற்றுதும் இப்பொழுதே என
உரமும் சீற்றமும் தோற்ற உரைசெய்வார்

மேல்
$12.9

#9
தம்பிமாரை தனித்தனியே உயிர்
வெம்பி வீழ விரைந்து வில் வாங்கி இன்று
உம்பர் காண உயிர் அழிப்போம் என
தும்பை சூட கருதினர் சொல்லுவார்

மேல்
$12.10

#10
வஞ்சக சுபலன் தரு மைந்தனை
வெம் சமத்தினில் வீழ கணத்திடை
செம் சரத்தின் வழி உயிர் செல்லவே
எஞ்சுவிக்க எழும் என்று இயம்புவார்

மேல்
$12.11

#11
சீத வெண்குடை வேந்தர்-தம் தேர் விடும்
சூதன் மைந்தன் சுயோதனன் தோழனை
மாதிரங்களில் வானவர் காண இப்
போது உடற்றுவம் என்ன புகலுவார்

மேல்
$12.12

#12
உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய்
முந்த முந்த முடுகு சினத்தராய்
அந்த அந்த அவனிபர் யாவரும்
இந்த இந்த உரைகள் இயம்பவே

மேல்
*கண்ணன் வேந்தர்களின் சினத்தைத் தணித்தல்
$12.13

#13
கேட்டு இருந்தருள் கேசவன் வாசவன்
காட்டு இருந்தனன் என்ன கவின்பெறும்
தோட்டு இருந்து அளி தேன் நுகர் சோலையின்
மாட்டு இருந்த மகீபர்க்கு உரைசெய்வான்

மேல்
$12.14

#14
விடுக இந்த வெகுளியை பின்புற
அடுக நும் திறல் ஆண்மைகள் தோன்றவே
வடு மனம் கொடு வஞ்சகம் செய்பவர்
கெடுவர் என்பது கேட்டு அறியீர்-கொலோ

மேல்
$12.15

#15
இயைந்து உரைத்த இயைபின்படி இனி
வியந்து இருக்கும் விபினம்-தொறும் இருந்து
உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல்
அயர்ந்து உரைத்தல் அலாது இலை ஆவதே

மேல்
*’அன்னை, புதல்வர், முதலியோரை உறவினர் இருப்பிடங்கட்கு
*அனுப்பிவிட்டு, நீவிர் மட்டும் கானின் உறைதல்
*நன்று’ எனக் கண்ணன் தருமனுக்கு உரைத்தல்
$12.16

#16
கேட்டி நீ முரசகேது கிளைஞர்-தம் இருக்கை-தோறும்
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து
காட்டிடை நீவிர் வைகி கடவ நாள் கழித்து மீண்டு
நாட்டிடை வந்தால் காண்டி நலன் உளோர் நலன்கள் எல்லாம்

மேல்
$12.17

#17
அன்னையை சுபலன் பாவை அருகுற இருத்தி உங்கள்
தன்னையர்-தம்மை யாகசேனன் ஊர்-தன்னில் வைத்து
பின்னையும் வேண்டுவோரை பிரிவுற நெறியில் போக்கி
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை என்றான்

மேல்
*கண்ணன் உரைப்படியே யாவரையும் அனுப்பி,
*தருமன் கானில் வாழ்தல்
$12.18

#18
அச்சுதன் உரைத்த மாற்றம் அறன் சுதன் மகிழ்ந்து கேட்டு
மெய் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம்
இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும்
அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான்

மேல்
*கண்ணன் முதலிய வேந்தரும் தத்தம் இருப்பிடத்திற்கு மீளுதல்
$12.19

#19
சோனை மா முகிலின் மேனி தோன்றலும் துவரை புக்கான்
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார்
ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும் தம்பிமாரும்
கானமே தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார்

மேல்
*வியாத முனிவன் வருகையும், பாண்டவரது முறையீடும்
$12.20

#20
அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர்
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும்
செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன
இ வன சரிதர்-தம்மை இனைவுடன் எய்தினானே

மேல்
$12.21

#21
கண்டு எதிர் சென்று போற்றி கண்ணினும் சென்னி மீதும்
கொண்டனர் அவன்-தன் பாதம் குளிர்ந்தனர் உயிரும் மெய்யும்
புண்டர நுதலினானை பூசனை செய்த பின்னர்
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார்

மேல்
*வியாதன் பாண்டவரைத் தேற்றி, ‘பகை முடிக்கப் பார்த்தன்
*பாசுபதம் பெறல் வேண்டும்’ என்றல்
$12.22

#22
செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ முனியும் முன்னே
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது பாவம்
பிறிந்தன தாயம்-தன்னில் பெரும் பகை இனிது என்று அன்றோ
அறிந்தவர் உரைத்தார் ஐய அவாவினுக்கு அவதி உண்டோ

மேல்
$12.23

#23
துன்றினர் இன்னல் எய்த துன்னலர் ஆகி தம்மில்
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி
கன்றினர் கவலை தீர்த்தான் கண்ணுடை கருணை மூர்த்தி
குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டோ

மேல்
$12.24

#24
நீவிரே அல்லிர் முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி
நா விரி கீர்த்தியாளன் நளன் எனும் நாம வேந்தன்
காவிரி என்ன தப்பா கருணையான் சூதில் தோற்று
தீ விரி கானம் சென்ற காதை நும் செவி படாதோ

மேல்
$12.25

#25
தோத்திரம் ஆன தெய்வ சுருதிகள் யாவும் நான்கா
கோத்தவன் பின்னும் சொல்வான் குன்ற வில்லவன்-பால் இன்று
பார்த்தனே சென்று பாசுபத கணை வாங்கின் அல்லால்
ஆர்த்த பைம் கழலாய் எய்தாது அரும் பகை முடித்தல் என்றான்

மேல்
*முனிவன் மொழிப்படி பாசுபதம் பெறுமாறு தருமன் கூற,
*அருச்சுனன் விடை பெற்று ஏகுதல்
$12.26

#26
பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து தன் தலை மேல் கொண்டு
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி
கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும்
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா

மேல்
$12.27

#27
என விடை கொடுப்ப மண்ணில் இணை இலா வியாதன் பாதம்
மனன் உற இறைஞ்சி ஆங்கு ஓர் மந்திரம் முறையின் பெற்று
நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்-தன்னில்
தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான்

மேல்
*’அஞ்சலிர்’ என்று கூறி, முனியும் மீண்டு போதல்
$12.28

#28
வெம் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி
நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும்
சஞ்சலம் உம்மை போலும் தரணிபர் உறுதல் செய்யார்
அஞ்சலிர் என்று மீள ஆரண முனியும் போனான்

மேல்
*அருச்சுனன் தவ வேடம் கொண்டு, வடதிசை
*முடிவைக் காணுதல்
$12.29

#29
மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி
சரமுடன் அங்கி ஈந்த தனுவினன் தவத்தின் மேலே
புரிதரு மனத்தன் எல்லா புண்ணியங்களுக்கும் தானே
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான்

மேல்
$12.30

#30
நெறி இரு புறத்தும் ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க
செறி தரு வனமும் சிங்கம் சிந்துரம் செரு செய் சாரல்
பொறைகளும் வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும்
உறைதரு குவடும் நீங்கி உத்தர முடிவு கண்டான்

மேல்
*இமகிரியில் முனிவரை வணங்கி, அருச்சுனன் மகிழ்தல்
$12.31

#31
அ திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து மிக்க
பத்தியோடு அம்மை-தன்னை பயந்த குன்று என்று போற்றி
சத்தியவிரதன் தம்பி தபோவனம்-தோறும் தங்கள்
மு தழல் வளர்ப்போர் பாத முளரிகள் முடி மேல் கொண்டான்

மேல்
$12.32

#32
சாரணர் இயக்கர் விச்சாதரர் முதல் பலரும் செம் சொல்
ஆரணப்படியே சூழ்ந்த அடவிகள்-தோறும் வைகி
நாரணன் மலரோன் உம்பர்_நாயகன் பதங்கள் நச்சி
காரண தவம் செய்வோரை கண்டு கண்டு உவகை கூர்ந்தான்

மேல்
*கைலை மலையை எய்தி, அருச்சுனன் தவம் புரிதல்
$12.33

#33
அரியும் வெம் கரியும் தம்மில் அமர் புரி முழக்கம் கேட்டும்
கிரியினின் முழக்கம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும்
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த
புரி_குழலோடும் வைகும் புண்ணிய பொருப்பை சேர்ந்தான்

மேல்
$12.34

#34
கைம்மலை உரிவையோடு கட்செவி கச்சும் சாத்தும்
செம்மலை விழியின் காணான் சிந்தையால் கண்டு போற்றி
அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற
விம்மலை நீங்கி ஆங்கண் மெய் தவ விரதன் ஆனான்

மேல்
$12.35

#35
எயில் ஒரு மூன்றும் செற்றோன் ஏந்து_இழையுடனே வைகும்
கயிலையின் பெருமை-தன்னை கட்டுரை செய்வது எங்ஙன்
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள்
அயிலும் நல் அமுதோர் சூழ்வந்து அன்புடன் போற்றுவாரே

மேல்
$12.36

#36
உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும்
அருவி நீர் புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனி கடவுள் வந்து
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால்

மேல்
$12.37

#37
ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி
பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான்
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம்
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ

மேல்
$12.38

#38
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும்
கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி
நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே

மேல்
$12.39

#39
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர்
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ
காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ
நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான்

மேல்
$12.40

#40
வல பாகம் செழும் பவள சோதி என்ன வாள் நீல சோதி என்ன மற்றை பாகம்
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி என மேனை ஈன்ற
குல பாவையுடன் கயிலை குன்றில் வாழ் விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி
புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே

மேல்
$12.41

#41
கரும் துறுகல் என கருதி பிடியும் கன்றும் களிற்று இனமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற
பரிந்து வெயில் நாள் மழை நாள் பனி நாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில்
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே

மேல்
$12.42

#42
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும்
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான்
சகல கலைகளுக்கும் இவன்-தானே இங்ஙன் தவம் புரிய நினைப்பதே சார்ந்த பாவம்

மேல்
$12.43

#43
பண்ணுக்கு வாம் பரி தேர் ஆதபனும் பணிந்து பசுபதியை நோக்கி
மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான்
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ

மேல்
$12.44

#44
அங்கியால் அங்கியை வெதுப்பி வெம்மையை
பொங்கிய வாயுவால் போக்கி மெய் சிரம்
தங்கிய அமுதினால் தண்ணெனும்படி
இங்கிதத்து ஒடுக்கினன் இதயம்-தன்னையே

மேல்
$12.45

#45
ஈண்டு தன் கருத்தினோடு இயைந்த மா தவம்
பூண்டு இள மதி முடி புண்ணியன்-தனை
வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான்
பாண்டியன் உயர் குல பாவை கேள்வனே

மேல்
*அருச்சுனன் தவநிலை தெரிய, இந்திரன்
*குருவுடன் ஆலோசித்தல்
$12.46

#46
நிரந்தரம் அநேக நாள் நினைவு வேறு அற
உரம் தரு புலன்களை ஒடுக்கி ஆயுதம்
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம்
புரந்தரன் அறிந்து மெய் புளகம் ஏறவே

மேல்
$12.47

#47
குருவுடன் விரகுற கூறி ஈசனை
மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை
கரு_மயில்_பாகனை காண்டல் வேண்டிய
திருமகன் தவ நிலை தெரிய உன்னினான்

மேல்
$12.48

#48
அரும் பகை வலிமையால் அவுணர் ஊர் சுடும்
பெரும் பிறை அணி சடை பிஞ்ஞகன்-தனது
இரும் பகழிகள் பெற எண்ணியே-கொலாம்
விரும்பியது இ தவம் வில்வலான் அரோ

மேல்
$12.49

#49
நல் தவத்து உறுதியும் நரன் கருத்தும் நாம்
முற்று அறிகுவம் என முன்னும் சிந்தையான்
கற்றை அம் சடையவன் கயிலை அம் கிரி
உற்று அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான்

மேல்
*அருச்சுனன் தவவுறுதியை அறிய இந்திரன் அனுப்பிய
*தேவமாதரின் வருகை
$12.50

#50
தூ நகை உருப்பசி அரம்பை தொண்டை வாய்
மேனகை திலோத்தமை என்று வேலையில்
மான் என மயில் என வந்த மாதரீர்
ஆனவாறு அறிதிர் போய் அவன்-தன் எண்ணமே

மேல்
$12.51

#51
என்று கொண்டு இந்திரன் இயம்ப மற்று அவன்
துன்றிய பேர் அவை தோற்றம் மிக்கவர்
குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார்
சென்றனர் அவ்வுழி செய்ய வாயினார்

மேல்
*மாதருக்கு உதவியாக மன்மதனும் உடன் வருதல்
$12.52

#52
காமனை நினைந்தனர் காமராசனும்
மா மலர் வாளியும் மதுர சாபமும்
தேமரு மலர் கையில் சேர்த்தி சேனையோடு
ஆம்முறை புகுந்தனன் அரனும் அஞ்சவே

மேல்
$12.53

#53
செந்தமிழ் வரை தரு தேரன் செக்கர் வான்
அந்தி யானையன் மதி ஆதபத்திரன்
சிந்து வெம் முரசினன் செவ்வி கூரவே
வந்தனன் காலமும் வசந்தம் ஆக்கியே

மேல்
$12.54

#54
கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய் கண்ணுதற்கு எதிராய்
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி
இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே

மேல்
$12.55

#55
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம்
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே

மேல்
*அழல் நடுவண் தவம் செய்யும் அருச்சுனனைத் தேவமாதர் காணுதல்
$12.56

#56
பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி புரிசடையுடன் புருகூதன்
காதல் அம் புதல்வன் அரும் தவம் புரிதல் கண்டு பாவிப்பன போல
மாதிரம்-தொறும் செம் பல்லவ செம் தீ வளர்த்து வான்மணியினை நோக்கி
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன ஒளி கூர் பணையுடை பாதபங்களுமே

மேல்
$12.57

#57
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து
புள்ளுடை கொடியோர் இருவரும் காணா புண்ணியன் பொருப்பிடை தவம் செய்
வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும்

மேல்
$12.58

#58
நீறு பட்டு இலங்கும் மெய் நிலவு ஒளியால் நெஞ்சினில் இருளினை அகற்றி
மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால்
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும்
ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால்

மேல்
$12.59

#59
அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர்
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார்
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார்

மேல்
*தவத்தைக் கலைக்கத் தேவமாதர் புரிந்த பல இங்கிதச் செயல்கள்
$12.60

#60
அந்தரத்து அமரர் துந்துபி முழங்க அநங்க துந்துபி எதிர் முழங்க
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க
பந்து அடித்திடுவார் அம்மனை எறிவார் பயில் கழங்கு ஆடுவார் நெற்றி
சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார்

மேல்
$12.61

#61
குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார்
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார்
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார்

மேல்
$12.62

#62
கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார்
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார்
பூம் துகில் நனைய நறும் சுனை படிவார் புழுகு சந்தனம் நறும் பனி நீர்
காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார்

மேல்
$12.63

#63
பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார் பைம் குழல் குறிப்பார்
பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார்
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார்
எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி

மேல்
*அருச்சுனன் மேல் ஐங்கணை எய்தும் அவன்
*சலியாமையால், மன்மதன் இளைத்து மீளுதல்
$12.64

#64
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து
பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி
மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும்
ஏவும் முன் பெற்ற இறைவனை எய்துஎய்து இளைத்தனன் இரதி கேள்வனுமே

மேல்
$12.65

#65
கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும்
ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும் அல்லதை யாவையும் கருதான்
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும்

மேல்
$12.66

#66
அன்று அரன் இருந்த யோகினை அகற்றி அறிவு இலாது அநங்கனா வெந்த
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி
நின்றிலன் மதனன் நிற்குமோ நெற்றி நெருப்பினால் நீறுபட்டுள்ளோன்

மேல்
*தெய்வ மகளிர் முதலியோர் பயன் இன்றித் திரும்பிச் செல்லுதல்
$12.67

#67
வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர் மகளிரும் தம்மால்
ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார்
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி கான வண்டு இமிர்தர புகுந்த
வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான்

மேல்
*இந்திரன் முனிவனாய் வந்து அருச்சுனன் மனநிலை அறிய உரையாடுதல்
$12.68

#68
இந்திரன் சுதன்-தன் எண்ணம் யாவது என்று இனிதின் எண்ணி
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி
இந்திரநீலம்-தன்னில் இறைவனுக்கு உரைத்தார் அந்த
இந்திரன்-தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான்

மேல்
$12.69

#69
விருத்த மா முனிவன் ஆகி விசயனை நோக்கி யாது
கருத்து நீ தவம் செய்கின்ற காரணம் என்னை என்ன
திருத்தகு சிந்தையோடும் செம் தழலிடை நின்றோனும்
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான்

மேல்
$12.70

#70
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து
ஈசன் வந்து எய்துகாறும் இ தவம் புரிவேன் என்ன
ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான்

மேல்
$12.71

#71
சிரித்தது ஏன் என்ன மீண்டும் திருமகன்-தன்னை நோக்கி
வருத்தமே அன்றி இந்த மா தவம் பயன் இன்று என்றான்
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த
கருத்து நான் வீடேன் என்றான் கடும் கனல் ஊடு நின்றான்

மேல்
*அருச்சுனனது மனவுறுதி கண்டு மகிழ்ந்து, இந்திரன்
*தன் உண்மை வடிவுடன் அருள் புரிதல்
$12.72

#72
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ
தந்தையும் விருத்த வேடம்-தனை ஒரு கணத்தில் மாற்றி
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து
பைம்_தொடி_பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான்

மேல்
*சேடியரால் அருச்சுனன் தவநிலை அறிந்த உமை,
*சிவபெருமானுக்கு அதனை அருளிச் செய்தல்
$12.73

#73
என்று உரைத்து அமரர் கோமான் ஏகிய பின்னர் வெள்ளி
குன்றுடை புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி
நின்று நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை எல்லாம்
சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே

மேல்
$12.74

#74
மேனை முன் பெற்ற கிள்ளை வேலையும் சேலினோடு
மானையும் பொருத செம் கண் மரகதவல்லி கேட்டு
தானையும் கரிய பேர் உத்தரியமும் ஆக சாத்த
ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து அருளிச்செய்தாள்

மேல்
$12.75

#75
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான்
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன்

மேல்
$12.76

#76
ஆடியானனன்-தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு அழிந்து
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை
நீடு பேர் அமரில் பகைவரை செகுக்கும் நினைவினால் நெருப்பிடை நம்மை
நாடியே அரிய தவம் புரிகின்றான் நாம் இது முன்னமே அறிவோம்

மேல்
$12.77

#77
பருகு நீர் துறந்து காற்றும் வெவ் வெயிலும் பாதபங்களின் சினை உதிர்ந்த
சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான்
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே
செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான்

மேல்
*மூகாசுரனை வதைத்து, அருச்சுனனுக்கு அருள்புரிய, சிவனும்
*உமையும் வேடவடிவம் கொண்டு கணங்களுடன் வருதல்
$12.78

#78
போகமாய் விரிந்தும் போகியாய் பரந்தும் புலன்களின் வழி மனம் செலுத்தா
யோகியாய் இருந்தும் யோகிகள் முதலா உரைப்ப அரும் பல பொருளாயும்
ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில்
பாகமாய் விளங்கும் பைம்_தொடியுடனே பரிவுடன் சில் மொழி பகர்வான்

மேல்
$12.79

#79
கேட்டி நீ செ வாய் கிளி நிகர் மொழியாய் கிரீடியை துணைவர்களுடனே
காட்டிலே ஒதுக்கி இளைஞரும் தானும் கடிய வஞ்சனையினால் கவர்ந்த
நாட்டிலே வாழ்வோன் ஏவலால் மூக நாம தானவன் இவன்-தன்னை
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால்

மேல்
$12.80

#80
மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும்
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான்
கல் தவர் வளைத்து திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினால் காண்போன்

மேல்
$12.81

#81
நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி
வினை படு கேழல் வேட்டை நாம் இன்றே வேடராய் ஆடுதல் வேண்டும்
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று
மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார்

மேல்
$12.82

#82
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார்
கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே

மேல்
$12.83

#83
நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன்
கால் இணையில் செருப்பு அணிந்து செய்ய திருவடிவு மிக கரியன் ஆனான்

மேல்
$12.84

#84
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம்
அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம்
தொடக்கி உரைசெய நினைக்கில் ஆயிரம் நா உடையோற்கும் சொல்லல் ஆமோ

மேல்
$12.85

#85
குறைந்த சந்திர கிரணமும் பீலியும் கொன்றை அம் திரு தாரும்
புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார்
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும்

மேல்
$12.86

#86
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி
விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர்
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ

மேல்
*கணங்களோடு இறைவன் வந்து, ஏனத்தின் சுவடு நோக்குதல்
$12.87

#87
ஓர் ஏனம் தனை தேட ஒளித்தருளும் இரு பாதத்து ஒருவன் அந்த
போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம்
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி
பார் ஏனை உலகு அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி பின் வந்தாள்

மேல்
$12.88

#88
அனந்த வேதமும் இறைவன் ஏவலினால் ஞாளிகளாய் அருகு சூழ
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய் அருகு போத
அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம்

மேல்
*எதிர்ந்த பன்றிமேல் அருச்சுனனும் சிவபெருமானும் அம்பு எய்தல்
$12.89

#89
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ
பாகசாதனி தவம் செய் பாக்கிய பூமியை நோக்கி பரிவினோடும்
ஏக சாபமும் வணக்கி ஏகினான் ஏகுதலும் இலங்கு வெண்ணீற்று
ஆகனால் நோக்கப்பட்டு அணுகியதால் அரும் தவன் மேல் அந்த ஏனம்

மேல்
$12.90

#90
அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும்
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம்
பிதிர்ந்திட வில் நாண் எறிந்து வேடன் அதன் அபராங்கம் பிளக்க எய்தான்

மேல்
*வேடர்கள் அருச்சுனனோடு பூசலிட, அவன் சிவபெருமானோடு பேசுதல்
$12.91

#91
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு உடல் உருவி ஏனம் வீழ
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார்

மேல்
$12.92

#92
புராதனாகம வேத கீத புராண ரூபம் ஒழித்து வெம்
கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான்
விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல்
இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான்

மேல்
$12.93

#93
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ
பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால்
வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ திறல் வின்மையோ
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார்

மேல்
$12.94

#94
எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால்
உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே

மேல்
*’தவம் புரியும் நீ பன்றியைக் கொன்றது தகுமோ?’ என வேடன் உரைத்து,
*அருச்சுனனது தவ நோக்கத்தை வினாவுதல்
$12.95

#95
என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி
பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என மிகவும் பயப்பட்டாயோ
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல்
பொன்றிடினும் நீ அறிய பசுத்தோல் போர்த்து புலி பாய்ச்சல் பாய்வரோ புரிவிலாதாய்

மேல்
$12.96

#96
மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே

மேல்
*அருச்சுனன் என்று அறிந்த வேடன், பழம் பகை கூறி, அவனைப் போருக்கு அழைத்தல்
$12.97

#97
கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய்
பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால்

மேல்
$12.98

#98
கன்றிவரு கனல் கடவுள் கையில் தேரும் காண்டீவ கார் முகமும் கணையும் வாங்கி
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி
குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர்
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே

மேல்
$12.99

#99
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும்
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே
சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும்
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான்

மேல்
*இருவரும் போரிடுதல்
$12.100

#100
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல்
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி
வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான்

மேல்
$12.101

#101
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல்
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான்
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான்

மேல்
$12.102

#102
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின்
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த
விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர்
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே

மேல்
$12.103

#103
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில்
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன்
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர்
வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா

மேல்
$12.104

#104
வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில்
நாணி அற முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண் அற வெட்டுதலுமே
கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு பல கோல்கள் விட இந்த்ரகுமரன்
பாணியுடனே தொடை நடுங்கி அயல் நின்றது ஒரு பாதவ மருங்கு அணுகினான்

மேல்
$12.105

#105
கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை
பண்டு தவமே புரி இளைப்பு அற மனத்தின் மிகு பரிவுடையன் ஆகி வெகுளா
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ

மேல்
*விசயனது வில்லால் வேடன் அடியுண்ண,
*எல்லாப் பொருள்களும் அந்த அடியை ஏற்றல்
$12.106

#106
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில்
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின்
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள்
எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ

மேல்
$12.107

#107
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ்
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள் கட்செவி மகீபன் முதலோர்
எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன இருந்துழி இருந்துழி அரோ

மேல்
$12.108

#108
வேதம் அடியுண்டன விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன ஓர் ஐம்
பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின்
பேதம் அடியுண்டன பிறப்பு இலி இறப்பு இலி பிறங்கல் அரசன்-தன் மகளார்
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே

மேல்
*விசயனுக்கும் சிவ வேடனுக்கும் மற்போர் நிகழ்தல்
$12.109

#109
என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன்
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன்
பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா

மேல்
$12.110

#110
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள்
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள்
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால்
வள்ளல் எனை ஆளுடைய மாதவனும் மா தவனும் மல் அமர் தொடங்கியுறவே

மேல்
*வேடன் விசயனை விண்ணில் வீச, அவன் மீண்டு வந்து போர் புரிய எண்ணுதல்
$12.111

#111
மல் அமர் தொடங்கி இவர் இருவரும் வெகுண்டு பொர மாதிரமும் மாநிலமும் மேல்
எல்லையும் அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து இமைய இன்ப மயில் கேள்வன் வெகுளா
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால்
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ

மேல்
$12.112

#112
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல்
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான்
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான்

மேல்
*அப்பொழுது கணநாதர் முதலியோர் சூழ, சிவபெருமான் காட்சி தருதல்
$12.113

#113
வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும்
செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே
துய்ய விடை மீது ஒரு செழும் சுடர் எழுந்தது தொழும் தகையது ஆகும் அளவோ

மேல்
$12.114

#114
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல்
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம்
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா

மேல்
$12.115

#115
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும்
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான்
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர்
அம்பையுடனே விடையின் மீது ஒளிர நின்றதனை அஞ்சலி செய்து அன்பொடு தொழா

மேல்
*அருச்சுனன் சிவனது திருக்கோலம் கண்டு,
*ஆடிப் பாடிப் பரவுதல்
$12.116

#116
ஆடினன் களித்தனன் அயர்ந்து நின்றனன்
ஓடினன் குதித்தனன் உருகி மாழ்கினன்
பாடினன் பதைத்தனன் பவள மேனியை
நாடினன் நடுங்கினன் நயந்த சிந்தையான்

மேல்
$12.117

#117
விழுந்து அரு வினையினின் மெலிந்து நாயினும்
அழுந்திய பிறவியின் அயருவேன் முனம்
செழும் சுடர் மணி பணி திங்கள் மௌலியாய்
எழுந்தருளிய இஃது என்ன மாயமோ

மேல்
$12.118

#118
ஆதியே அண்டமும் அனைத்துமாய் ஒளிர்
சோதியே கொன்றை அம் தொங்கல் மௌலியாய்
வாதியே மரகத வல்லியாள் ஒரு
பாதியே பவளமாம் பரம ரூபியே

மேல்
$12.119

#119
பை அரா அணி மணி பவள மேனியாய்
செய்ய வாய் மரகத செல்வி பாகனே
ஐயனே சேவடி அடைந்தவர்க்கு எலாம்
மெய்யனே எங்குமாய் விளங்கும் சோதியே

மேல்
$12.120

#120
முக்கணும் நிலவு எழ முகிழ்த்த மூரலும்
சக்கர வதனமும் தயங்கு வேணியும்
மை கயல் மரகத வல்லி வாழ்வுறு
செக்கர் மெய் வடிவமும் சிறந்து வாழியே

மேல்
$12.121

#121
அன்பு உறு தருமனுக்கு அநுசன் ஆயினேன்
நன் பரம்பொருளுக்கு நண்பும் ஆயினேன்
பொன் புரை மேனியாய் போற்றினேன் உனை
என் பெரும் தவ பயன் யார் பெற்றார்களே

மேல்
*சிவபெருமான் அருச்சுனனைத் தழுவி,
*அருள் மொழி கூறித் தேற்றுதல்
$12.122

#122
என்று கொண்டு இ முறை இவன் இயம்பவே
மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான்
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான்
தன் திரு மதலையை தழுவினான் அரோ

மேல்
$12.123

#123
தழுவினன் பெரும் துயர் அகற்றி தண்ணளி
பொழிதரு கண்ணினன் புரக்கும் சிந்தையன்
அழிவு அற ஒழிவு அற அமர்ந்த சோதியன்
பழுது அறு மொழி சில பகர்ந்து தேற்றினான்

மேல்
$12.124

#124
சூதினில் யாவையும் தோற்று கானிடை
ஏதிலர் போல நீர் இளைத்து வாடினீர்
வாது செய் புலன்களை அடக்கி மண்ணின் மேல்
நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ

மேல்
$12.125

#125
மூகன் என்று உரைக்கும் அ மூக தானவன்
வேகமோடு ஏனமாய் விரைவில் வந்தனன்
நாக வெம் கொடியவன் நவின்ற வாய்மையால்
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே

மேல்
$12.126

#126
வந்து அவன் முந்தும் முன் மங்கை-தன்னுடன்
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய்
சுந்தர மரகத சோதி வீரனே
அந்த வல் அசுரனை அம்பின் வீழ்த்தினேன்

மேல்
$12.127

#127
நின்னுடன் அமர் செய்து நின் வில் நாண் அறுத்து
அ நெடு வில்லினால் அடியும் உண்டனன்
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன்
என் இனி உன் கருத்து என்று கூறினான்

மேல்
*அருச்சுனன் பாசுபதம் வேண்ட, சிவபெருமான்
*அளித்து, கயிலைக்கு மீளுதல்
$12.128

#128
அந்த வில் விசயனும் அவன் பதம் பணிந்து
எந்தை பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய்
சிந்த நின் பேர் பெறு தெய்வ வாளியை
தந்தருள் என்றனன் தவத்தின் மேல் நின்றான்

மேல்
$12.129

#129
ஐயனும் அம்மையோடு அருள் புரிந்து பின்
வெய்ய பொன் தூணியும் வில்லும் மந்த்ரமும்
துய்ய பாசுபத மெய் தொடையும் முட்டியும்
ஒய்யென நிலையுடன் உதவினான் அரோ

மேல்
$12.130

#130
பெற்றனன் விசயனும் பேயும் பூதமும்
சுற்றிய கணங்களும் சுருதி ஓசையும்
வெற்றி கொள் பெற்றமும் விழைந்து சூழவே
கற்றை அம் சடையவன் கயிலை ஏகினான்

மேல்
*பின்னர், இந்திரன் வந்து, விசயனைத் தழுவி
*வானுலகிற்கு அழைத்துச் செல்லுதல்
$12.131

#131
ஏகிய பின்னர் ஆயிரம் கண் நாதனும்
மோகர துந்துபி முழங்க தேரின் மேல்
நாகரும் முனிவரும் நண்ணி வாழ்த்தவே
வாகை கொள் விசயனை வந்து புல்லியே

மேல்
$12.132

#132
நீ புரி தவ பயன் நீடு வாழியே
சாபமும் தூணியும் சரமும் வாழியே
தீப மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும்
மா பெரு நீல மெய் வாழி வாழியே

மேல்
$12.133

#133
என்று கொண்டு இணை அடி இறைஞ்சும் மைந்தனை
தன் திரு தேரின் மேல் தாழ்ந்த கைகளால்
ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன்
சென்றனன் தன் பெரும் தெய்வ வானமே

மேல்
$12.134

#134
ஒரு பெரு மாதலி ஊரும் தேரின் மேல்
இரு மரகத கிரி இருந்த என்னவே
மரு வரு கற்பக மாலை மௌலியும்
விரி புகழ் மைந்தனும் விளங்கினார் அரோ

மேல்
$12.135

#135
ஆயிரம் பொலம் கிரி அழித்து வானின் மேல்
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே
பாயிர மறை புகழ் பரமன் தேசு என
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால்

மேல்
$12.136

#136
விண்ணவர் முனிவர் உள் விளங்கி வாழ்தலால்
நண்ணிய முடிப்பெயர் நாகம் பூணலால்
எண்ண அரு மகபதி இருந்த மா நகர்
புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்குமால்

மேல்
$12.137

#137
மாவலி சிறைப்பட வைத்த தாள் மலர்
தாவிய விண்ணிடை தயங்கு பொன் நகர்
தேவரும் தொழு கழல் தேவன் உந்தி அம்
பூ இருந்தது என பொலிந்து தோன்றுமால்

மேல்
*தேவ மண்டபத்தில் இந்திரன் விசயனோடு
*ஓர் ஆசனத்தில் இருத்தல்
$12.138

#138
பொலிவுறும் அ நகர் புகுந்து தாதையும்
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும்
மெலிவுறு மின் இடை நுடங்க மீனினும்
பலர் அர_மாதரார் பரிவு கூரவே

மேல்
$12.139

#139
பரு மணி வெயில் எழ பணில மா நிரை
தரும் மணி நிலவு எழ தமனிய பெரும்
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார்

மேல்
*இந்திராணி வர, அவளை விசயன் வணங்குதலும்,
*அவள் அவனை வாழ்த்திச் செல்லுதலும்
$12.140

#140
முருகு அவிழ் பரிமளம் மொய்த்த தண் துழாய்
மரகத கிரி திரு மைத்துனன்-தனை
பெருமித அபிமனை பெற்ற காளையை
அருள் பெறும் உவகையோடு அன்னை எய்தினாள்

மேல்
$12.141

#141
அன்னையை மின் இடை அரிய பாவையை
கன்னலை அமுதொடு கலந்த சொல்லியை
உன்ன அரும் தவ பயன் உற்ற மைந்தனும்
சென்னியை அவள் பதம் சேர்த்து நின்றனன்

மேல்
$12.142

#142
நின்ற அ குமரனை தழுவி நேயமோடு
ஒன்றிய உவகையள் உரை வழுத்தினாள்
வென்றி கொள் ஐய நீ விபுதர் தம் பிரான்
தன் திரு செல்வமும் தாங்குவாய் எனா

மேல்
$12.143

#143
ஆயிரம் பதின்மடங்கு ஆக அன்னையும்
மா இரும் புதல்வனை வாழ்த்தி வாழ்த்தியே
தூய செம் பரு மணி சுடரும் மாளிகை
ஏயினள் இந்திரன் இதயம் போன்று உளாள்

மேல்
*துந்துபி முதலியன முழங்க, இந்திரனுடன்
*விசயன் வீற்றிருந்த சிறப்பு
$12.144

#144
அந்தர துந்துபி அதிரும் பேர் ஒலி
முந்திய மறை ஒலி முழங்கும் சங்கு ஒலி
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி
சுந்தர முகில் ஒலி தூங்க தூங்குமால்

மேல்
$12.145

#145
பத்தி கொள் நவ மணி பயின்று செம் துகிர்
கொத்து ஒளிர் தளிருடன் குலவு கற்பகம்
சித்திர விசய வில் விசயன் சென்னி மேல்
வைத்தது முருகு அவிழ் வாச மாலையே

மேல்
$12.146

#146
கிளர் இசை தும்புரு கிளரும் கற்பக
தளை அவிழ் நாள்மலர் சாத்தும் நாரதன்
அளி பயில் அமுதம் உண்டு அகம் மகிழ்ந்து உள
களியொடு கின்னரர் கானம் பாடவே

மேல்
$12.147

#147
செம் மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே
கை மணி வரி வளை கலந்து பொங்கவே
பெய் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே
துய் மணி ஒளி அர_மாதர் சூழவே

மேல்
$12.148

#148
இவ்வாறு இவர் இருவோர்களும் இணை மா முகில் எனவே
செ வாள் அரி கிளர்கின்றது ஓர் செம்பொன் தவிசிடையே
மை வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும்
அ வானவர் புடை சூழ்தர அழகு எய்தி இருந்தார்

மேல்
*ஊர்வசி நடனம் ஆட, விசயன் கண்டு
*களித்துப் புகழ்தல்
$12.149

#149
இருந்தார் இவர் குளிர் சாமரை இரு பாலும் இரட்ட
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ்
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும்
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள்

மேல்
$12.150

#150
மானே தரு விழியாள் திரு மாதே நிகர் எழிலாள்
தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள்
தானே தனை நிகர்வாள் பெயர்தரு நாடகம் எல்லாம்
கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார்

மேல்
$12.151

#151
இ நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார்
மின் ஆர் இடை மின் நேர் இழை மென் கொம்பை அலாதார்
என்னா விழி களியா மனம் உருகா இசை எழுதும்
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான்

மேல்
*இந்திரன் வானோர் முதலிய யாவர்க்கும்
*விடை கொடுத்து அனுப்புதல்
$12.152

#152
திகழ்கின்றன உரை தந்தை செவி போது உற மகிழா
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும்
மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட விட்டான்

மேல்
*இந்திரனும் விசயனும் அமுது உண்டு, இனிது இருத்தல்
$12.153

#153
மகனும் புகழ் புனை தந்தையும் மந்தாகினி ஆடி
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே
அகில் துன்றிய குழலார் பலர் அர_மாதர் அளிக்கும்
நிகரம் பயில் அமுது உண்டவர் நிறைவு எய்தி இருந்தார்

மேல்
*இந்திரன் ஆணைப்படி விசயன் தனி மாளிகையில் சென்று
*தங்க, சூரியன் மறைதலும் சந்திரன் தோன்றுதலும்
$12.154

#154
தருக்கும் களி அமுது உண்டு அவர் தனி வாழ்வுறும் எல்லை
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று
இருக்கும்படி விசயன் பெற ஈந்தான் விடை அது கண்டு
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான்

மேல்
$12.155

#155
மேலை திசை காலை சுடர் வீழ்தந்திடும் முன்னம்
மாலை சுடர் காலை திசை வாழ்வு உற்றிட வந்தான்
சோலை தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி
பாலை பொழிவது போல் நிலவு ஒளி கொண்டு பரப்பா

மேல்
*உருப்பசி அருச்சுனனிடத்திற்கு வர, அவள் பாதங்களை
*வணங்கி, வந்த காரியத்தை வினாவுதல்
$12.156

#156
அந்த சிலை மகவான் மகன் அ மாளிகையிடையே
முந்து உற்றது ஓர் தவிசில் கரு முகில் போல இருந்தான்
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு உளம் உருகா
நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண்

மேல்
$12.157

#157
அ கங்குலினிடையே மலர் அரிசந்தன வாசம்
மை கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம் அணிந்தாள்
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள்
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள்

மேல்
$12.158

#158
ஓர் ஆயிரம் அகல் வான்மணி ஒக்கும் தவிசிடையே
ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழவே
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயன
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும்

மேல்
$12.159

#159
எந்தை பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவ திரு நகையாய்
கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய்
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான்

மேல்
*உருப்பசி சினமொழி புகன்று, விசயனைப்
*பேடியாகச் சபித்துச் செல்லுதல்
$12.160

#160
இவ்வாறு இவன் அவள் தாள்கள் இறைஞ்சி புறம் நின்றான்
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும்
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள்

மேல்
$12.161

#161
இந்த தனி இரவின்-கண் நின் இரு தோள் தழுவுறவே
வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா
நிந்தித்தனை நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம்
வெந்துற்று அரு நீறாய் எழ விடுவேன் என வெகுளா

மேல்
$12.162

#162
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய்
பொன் போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய்
வன்போ அருள் நலமோ பெருமிதமோ வளர் புகழோ

மேல்
$12.163

#163
என மன்னனை நீ பேடியர் இயல்பு ஆக என விதியா
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள்
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள்
அனலன் தரு சிலை வீரனும் அஃது எய்தினன் அந்தோ

மேல்
*சாபத்தால் பேடியான விசயன், உளம் நொந்து,
*ஆடையால் மூடித் துயிலுதல்
$12.164

#164
ஆடி திருமுக மன்னவன் அநுசன் தரு விசயன்
பேடி பெயர் நாமோ பெறுவோம் என்று எழில் வடிவம்
வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால்
மூடி துயில் கொண்டான் மணி முடி மன்னவர் திலகன்

மேல்
*காலையில் இந்திரன் முப்பத்து மூவர் சூழச்
*சபா மண்டபத்தை அடைதல்
$12.165

#165
அ காலையில் விசயன்-தனது இடர் ஆர் இருள் அகல
செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ
மை கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய
தொக்கான் உயர் குண திக்கினில் அகிலம் தொழு சூரன்

மேல்
$12.166

#166
கதிர் உதித்த அ காலையில் மா மறை
முதல்வர் முப்பத்து மூவரும் சூழ்வர
புதல்வன் உற்றது உணரான் புரந்தரன்
வித மணி பணி மண்டபம் மேவினான்

மேல்
*விசயனை அழைத்துவர இந்திரன் ஒரு கந்தருவனை
*ஏவ, அவன் விசயன்பால் உற்று, நிகழ்ந்தது
*தெரிந்து வந்து கூறுதல்
$12.167

#167
கண் பரப்பி ஒர் கந்தருவன்-தனை
விண் புரக்கும் அ வேந்தன் இருந்த பின்
மண் புரக்கும் வரி சிலை வீரனை
எண் பெற கொணர்வாய் என ஏவினான்

மேல்
$12.168

#168
மற்று அவன் திரு தாள் மலர் போற்றி அ
கொற்றவன் திரு முன்னர் குறுகி ஆங்கு
உற்ற யாவும் உணர்ந்தனன் மீண்டு போய்
சொற்றனன் சுரர் கோ முன் தொழுது அரோ

மேல்
*தேவர் சூழ இந்திரன் விசயனை அணுகி,
*’சாபம் தணியும்’ என்று தேற்றுதல்
$12.169

#169
சொன்ன வாசகம் கேட்ட சுரபதி
கன்னம் வெந்து கண் ஆயிரமும் புனல்
துன்ன வானவர் சூழ்வர தானும் போய்
அ நராதிபன்-தன்னை அணுகினான்

மேல்
$12.170

#170
அணுகி மைந்தனை அன்பொடு உற தழீஇ
கணிகை இட்ட கடும் கொடும் சாபம் நீ
தணிதி அஞ்சல் என்றான் ஒரு தையலால்
பிணி உழந்து முன் பேர் பெறும் பெற்றியான்

மேல்
*இந்திரன் தேவருடன் உருப்பசியின் இடத்திற்குச் செல்ல,
*அவள் அஞ்சி வணங்குதல்
$12.171

#171
அன்ன மென் நடை ஆய்_இழை தன்னுழை
துன்னினன் சுரரோடும் சுரேசன் போய்
மின்னின் நுண் இடையாளும் வெருவுறா
மன்னவன் பதம் வந்து வணங்கினாள்

மேல்
*தேவர்கள் விசயனுக்குச் சாபவிடை அருளுமாறு
*அவளைத் துதித்து வேண்டுதல்
$12.172

#172
வணங்கும் முன்னம் மட நடை ஓதிம
கணம் கொல் என்ன கவின் பெறு கோதையை
சுணங்கு அறா முலை தோகையை வார் குழல்
அணங்கை அண்டர் அனைவரும் போற்றியே

மேல்
$12.173

#173
அன்னை நீ அவற்கு ஆயினும் ஆசையின்
இன்னல் தீர்ப்பது எவர்க்கும் இயல்பு அரோ
மன்னன் ஆயினும் வான் பிழை செய்தனன்
என்ன நாகர் அவட்கு இதம் கூறியே

மேல்
$12.174

#174
காமம் மிக்க உன் கட்டுரை சாப நோய்
பூமி பொய்ப்பினும் பொய்ப்பது அன்றால் அரோ
வேய் மலர் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள்
ஆம் அவற்கு இ உரு அருள் செய்தி நீ

மேல்
*தேவர் உரைப்படி விசயன் வேண்டும் காலத்துப் பேடி உரு
*எய்துமாறு அவள் சாப நீக்கம் அருளுதலும், விசயன்
*முன்னை வடிவு பெறுதலும்
$12.175

#175
என்று வானவர் யாவரும் ஏத்தவே
அன்று அவற்கு அ வரம் கொடுத்தாள் அவள்
வென்றி வார் சிலை மீளியும் தன் பெரும்
துன்று கோலம் சிறந்திட தோன்றினான்

மேல்

13. நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம்

*சுதன்மையில் சிங்காதனத்தில் விசயனுடன் இந்திரன்
*வீற்றிருந்த போது, தேவர்களுக்கு அவனது
*சிறப்பைத் தெரிவித்தல்
$13.1

#1
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி
கை வரு சிலையினானை கடவுளர்க்கு இறைவன் கொண்டு
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி
வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை

மேல்
$13.2

#2
தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து மேன்மேல்
மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல் அடைவே சொல்லி
காண்டவம் எரித்த வீரன் இவன் என காட்டினானே

மேல்
*தேவர்களும் இந்திரனும் விசயனுக்கு சிறப்பு செய்தல்
$13.3

#3
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால்
திவ்விய மறையின் மிக்க தெக்கிணை பலவும் செய்தார்
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி
வி விரவாத வாச தாமமும் விழைந்து சூட்டி

மேல்
$13.4

#4
ஆயிரம் கதிரும் திங்கள் அனந்தமும் அடங்க மேன்மேல்
காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா
சே ஒளி தவழ்வது ஆகி திசைமுகன்-தனக்கு நல்கும்
மா இரும் கிரண ரத்ந மவுலியும் கவித்தான் அன்றே

மேல்
$13.5

#5
ஆடையும் கலனும் தெவ்வை அடும் திறல் படையும் நல்கி
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி என்றும்
தேடுதற்கு அரிய தூய அமுது செம்பொன் கலத்தில்
கூட உண்டு அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்பும் செய்தான்

மேல்
*இந்திராணி விசயனை மானுடன் என்று இகழ, இந்திரன் தகாது
*என்பதை ஏதுக் காட்டி உணர்த்துதல்
$13.6

#6
அன்னது நிகழ்ந்த காலை அவன் திரு தேவி கண்டு
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள்
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன்
தன்னுடன் ஒக்க உண்ண தக்கதோ உரைத்தி என்றே

மேல்
$13.7

#7
என்றலும் கடவுள் வேந்தன் இரு புயம் துளங்க நக்கு
மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன் எனக்கு மைந்தன்
கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்-தன்னை
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான்

மேல்
*’இவன் வந்தது தக்க செயல் புரிதற்கே’ என்று தேவர்கள் கூறுதல்
$13.8

#8
ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து அரிய வேந்தே
பூம்_கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு
ஓங்கு மைத்துனனே ஆகில் இதனின் மற்று உறுதி உண்டோ
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும் என்றார்

மேல்
*’விசயன் தனக்குச் செய்த சிறப்புத் தகாது’ என்ன, இந்திரன்
*அவனது பெருமை கூறி, ஒரு வரம் வேண்டுதல்
$13.9

#9
தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான்
யாவரும் பரவும் உன்-தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து
மேவரு முடியும் சூட பொறுக்குமோ விமல என்றே

மேல்
$13.10

#10
அவன் உரை மகிழ்ந்து கேட்டு ஆங்கு அமரருக்கு அதிபன் சொல்வான்
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ
சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ
கவன வாம் பரியும் தேரும் கணையும் கார்முகமும் பெற்றாய்

மேல்
$13.11

#11
பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த
வரம் மிகும் மறையும் கொற்ற வான் பெரும் படையும் பெற்றாய்
அரு மறை முறையே பார்க்கின் அமரர் மற்று உன்னின் உண்டோ
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய்

மேல்
$13.12

#12
கற்றவர் கலைகள் யாவும் கசடு அற கற்பித்தோர்கள்
பெற்றிட கொடுக்கும் செல்வம் உண்டு என்று பெரியோர் சொல்வர்
கொற்றவ உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும்
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான்

மேல்
*யான் செய்ய வேண்டுவது யாது என்ற விசயனுக்கு இந்திரன்
*நிவாதகவசரை வென்று அழிக்குமாறு கூறுதல்
$13.13

#13
தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு தனுவினுக்கு ஒருவன் ஆன
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப
இந்திரன்-தானும் மீண்டும் இன்னன பகரலுற்றான்

மேல்
$13.14

#14
ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர் ஆழியானும்
ஊழியின் நாதன்-தானும் உருப்பினும் உலப்பு இலாதோர்
ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர்
கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால்

மேல்
$13.15

#15
தவாத போர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர்
சுவாதமே வீசி எல்லா உலகையும் துளக்குகிற்போர்
விவாதமே விளைக்கும் சொல்லர் வெகுளியே விளையும் நெஞ்சர்
நிவாத கவசத்தர் என்னும் பெயருடைய கொடிய நீசர்

மேல்
$13.16

#16
மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை ஆகி நிற்போர்
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும் வலியின் மிக்கோர்
செற்றிட நின்னை அன்றி செகத்தினில் சிலர் வேறு உண்டோ
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான்

மேல்
*விசயன் ஒருப்பட, இந்திரன் தேர் முதலியன அளித்து,
*அவனுக்கு விடை கொடுத்தவன்
$13.17

#17
செரு என்ற மாற்றம் கேட்டு சிந்தையில் உவகை பொங்க
மரு ஒன்றும் அலங்கல் மார்பும் வாகு பூதரமும் பூரித்து
உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால்

மேல்
$13.18

#18
காற்று என கடிய வேக கனல் என கொடிய என்றும்
மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ
கூற்றமும் முகிலும் உட்க குமுறும் வெம் குரலும் மேன்மேல்
சீற்றமும் திறலும் மிக்க தீ கதி செலாத தூய

மேல்
$13.19

#19
ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும்
மா இரும் கலையின் மிக்க மாதலி-தனையும் நல்கி
காய் இரும் கிரண செம்பொன் கவசமும் கொடுத்து பின்னர்
வேய் இரும் தெரியலாற்கு சுரபதி விடையும் ஈந்தான்

மேல்
*விசயன் போர்க்கோலம் பூண்டு, மாதலி தேரில் செல்லும்போது,
*அவ் அசுரர் இயல்பைச் சாரதியிடம் கேட்டு அறிதல்
$13.20

#20
விடை என தொழுது போந்து வெம் சிலை வினோத வீரன்
சுடு சர தூணி கொற்ற புயத்தினில் துதைய தூக்கி
இடு மணி கவசம் மெய்யில் எழில் உற புனைந்து தன்னை
திடமுடை சிங்கம் அன்னான் செரு தொழில் கோலம் செய்தான்

மேல்
$13.21

#21
மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை பலவும் கொள்ளா
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு
மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான்
சூதனும் அவனுக்கு அன்னோர் இயல்பு எலாம் தோன்ற சொல்வான்

மேல்
$13.22

#22
தோயமாபுரம் என்று உண்டு தொடு கடல் அழுவத்து ஒன்று
மாய மா புரமே ஒக்கும் அ புரம் அதனில் வாழ்வோர்
தீயவர் என்று செப்பி சித்திரசேனன்-தன்னை
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை

மேல்
*தேவ மகளிரின் நகைப்பும், வானவரின் வாழ்த்தும்
$13.23

#23
மொய் திறல் கடவுளோர் முப்பத்துமுக்கோடியாலும்
செய்து அமர் தொலைக்க ஒண்ணா தெயித்தியர் சேனை-தன்னை
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார்
மை தவழ் கரும் கண் செ வாய் வானவர் மகளிர் எல்லாம்

மேல்
$13.24

#24
மங்கையர் வாய்மை கேட்டு மணி குறு முறுவல் செய்து
கங்கை அம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல
அங்கு அவன்-தன்னை கண்ட அணி கழல் அமரர் எல்லாம்
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார்

மேல்
$13.25

#25
கார் கோல மேனியானை கண்ட பின் ஐயம் நீங்கி
போர் கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது புகறி என்று
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி
வார் கோல புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான்

மேல்
$13.26

#26
என்று அவன் உரைத்த மாற்றம் இன்புற கேட்டு நெஞ்சில்
துன்றிய உவகை தூண்ட சுருதியால் ஆசி சொல்லி
வென்று மீள்க என்று வாழ்த்தி விரைவினில் வீரன் தன்னை
சென்றிடுக என்று தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார்

மேல்
$13.27

#27
சம்புவன் சம்புமாலி எனும் பெயர் தனுசர் தம்மை
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும்
தும்பை அம் சடையான் வெற்பை துளக்கிய சூரன் மாள
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர்

மேல்
$13.28

#28
ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு
பேதியா கவசம் பெற்று பிறங்கு பொன் முடியும் பெற்றாய்
கோதிலாய் எங்கள் நெஞ்சில் குறை எலாம் தீர்த்தி என்றார்
போதில் வாழ் அயனும் ஒவ்வா வாய்மொழி புலவர் எல்லாம்

மேல்
*விசயன் உவகையுடன் சென்று கடலை அடுத்தபோது, அந்த
*அவுணரின் இயல்பை வினவ, மாதலி விளங்க உரைத்தல்
$13.29

#29
வீரனும் உவகை தூண்ட விண்ணவர் மலர்த்தாள் போற்றி
சாரதி தடம் தேர் தூண்ட தபனனில் விசும்பில் சென்றான்
கார் நிற குன்றம் ஒன்றை கனக வான் குன்று ஒன்று ஏந்தி
சீர் உற பறந்து வானில் திசை உற செல்வது ஒத்தே

மேல்
$13.30

#30
திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்
குரகத தடம் தேர் போய் குறுகலும்
மரகத கொண்டல் மாதலிக்கு அன்பினால்
விரகுற சில மாற்றம் விளம்பினான்

மேல்
$13.31

#31
இ புரத்தில் அவுணர் இயல்பு எலாம்
செப்பு எனக்கு தெரிதர என்றலும்
அ புரத்தவர் ஆண்மையும் தோற்றமும்
செப்பலுற்றனன் திண் திறல் தேர்வலான்

மேல்
$13.32

#32
தெழித்த சொல்லினர் சீற்ற வெம் தீ உக
விழித்த கண்ணினர் விண் முகிலை கவின்
அழித்த மேனியர் ஆழ் வெம் பிலத்தையும்
பழித்து அகன்ற பெரும் பகு வாயினார்

மேல்
$13.33

#33
மண்ணும் நீரும் அனலும் மருத்துடன்
விண்ணும் வேண்டின் விரைவின் முருக்குவார்
எண்ணெய் ஊட்டி இருள் குழம்பால் எழில்
பண்ணி யாக்கை வகுத்து அன்ன பான்மையார்

மேல்
$13.34

#34
மல் புயாசலத்தின் வலியால் இகல்
சற்பராசன் தலைச்சுமை மாற்றுவார்
அற்ப வாழ்வுடை அம்போருகத்தர் தம்
கற்ப கோடி கடையுற காண்குவார்

மேல்
$13.35

#35
பாழி ஆடக வெற்பில் படர் சிரம்
கீழது ஆக கிளர் மூச்சு அடக்கி நின்று
ஊழி நாளும் தவம் முயன்று ஓங்குவார்
ஆழி நீரும் அளவிடும் தாளினார்

மேல்
$13.36

#36
ஏதி சூலம் எழு மழு ஈட்டியின்
சாதி சக்கரம் தாங்கும் தட கையார்
மோது போர் எனின் மொய்ம்புடன் முந்துவோர்
ஓதம் ஏழும் உடன் உண்டு உமிழுவோர்

மேல்
$13.37

#37
கூரும் நல் உரை கூறினும் கூற்றுடன்
கார்-தொறும் இடி சேர்ந்து அன்ன காட்சியார்
தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை
போர்-தொறும் புறங்கண்டு அன்றி போகலார்

மேல்
$13.38

#38
மூன்று கோடி அசுரர் முகில் என
தோன்றும் மேனியர் தோம் அறும் ஆற்றலர்
ஏன்று போர் பொரின் எவ்வெவ் உலகையும்
கீன்று சேர கிழிக்கும் எயிற்றினார்

மேல்
$13.39

#39
செப்பு உரத்தினில் செம் சடை வானவன்
முப்புரத்தை முனிந்த அ நாளினும்
தப்பு உரத்தர் சதமகன் தன்னை வென்று
இ புரத்தை இவர் கவர்ந்தார் எனா

மேல்
*சித்திரசேனனை நிவாதகவசரிடம் தூது போக்கி,
*மண்ணின்மீது தேரை நடத்துதல்
$13.40

#40
தீது இலா திறல் சித்திரசேனனை
கோது இலாத குனி சிலை வீரற்கு
மோது போர் தர மொய்ம்புடை வஞ்சர்-பால்
தூது போக என போக்கி தொலைவு இலான்

மேல்
$13.41

#41
விண்ணின் மீது விரைவுறும் தேரினை
மண்ணின் மீது நடத்தினன் மாதலி
அண்ணலும் தன் அரும் சிலை நாணியின்
துண்ணென் ஓதை தொடர துரத்தினான்

மேல்
*அருச்சுனன் நாண் ஒலி முதலியன கேட்டு,
*’இந்திரன் பொர வந்தான்!’ என அவுணர் சினத்தல்
$13.42

#42
தேரின் ஆர்ப்பு ஒலியும் சிறு நாண் எனும்
காரின் ஆர்ப்பு ஒலியும் கலந்து எங்கணும்
பாரும் மேல் திசையும் பகிர் அண்டமும்
சேரும் நால் திசையும் செவிடு ஆக்கவே

மேல்
$13.43

#43
அந்த ஓசை அவுணர் செவி புக
முந்த ஓடி முடுகி முறுவலித்து
இந்திரன் பொர வந்தனன் என்று தம்
சிந்தை கன்றி விழியும் சிவந்திட்டார்

மேல்
*தூதன் உரைத்த செய்தி கேட்டு, அவுணர் இகழ்ந்து கூறி,
*சினங்கொள்ளுதல்
$13.44

#44
போய தூதனும் செம்பொன் புரிசை சூழ்
தோயமாபுரம்-தன்னில் துதைந்த அ
மாய வஞ்சர் மறுக வெம் புண்ணின் மேல்
தீயை ஒப்பன சில் உரை சொல்லுவான்

மேல்
$13.45

#45
ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர்
குருகுலத்தில் குனி சிலை வீரற்கு
தருக யுத்தம் திறலுடை தானவர்
வருக மற்றும் வரூதினி தன்னொடும்

மேல்
$13.46

#46
என்று தூதன் இசைத்தது கேட்டலும்
நன்று என கை புடைத்து நகைத்திடா
கன்று நெஞ்சினர் கண்கள் செம் தீ உக
துன்று கோபத்துடன் அவர் சொல்லுவார்

மேல்
$13.47

#47
பூசை ஒன்று புலியின் குழாத்துடன்
ஆசை கொண்டு பொர வந்து அழைப்பதே
வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் ஒரு
நாசம் வந்து புகுந்தது எனா நகா

மேல்
$13.48

#48
வரை உளானும் மலரின் உளானும் வெண்
திரை உளானும் செகுப்ப அரு நம்முடன்
தரை உளான் வந்து போர் பொர தக்கதோ
உரை உளார் என்று உரையீர் உணரவே

மேல்
$13.49

#49
தனுசர் தானை-தனை மதியாது ஒரு
மனுசன் வந்து மலைய மதிப்பதோ
அனுசரும் கொலை ஆடல் அவுணரும்
குனி செயும் சிலை என்று கொதித்திட்டார்

மேல்
$13.50

#50
செம் கண் நாக கொடியவன் செல்வமும்
தங்கள் நாடும் கவர தரிப்பு அற
பொங்கு கானில் புகும் சிலை வீரனோ
எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான்

மேல்
*அசுரர் ஆயுதங்களுடன் திரண்டு வந்து,
*அருச்சுனன் தேரை வளைத்தல்
$13.51

#51
என்று கூறி இகல் அசுராதிபர்
துன்று சேனை குழாம் புடை சூழ்வர
சென்று உகாந்த திரை கடல் ஆர்ப்ப போல்
ஒன்ற யாரும் ஒருங்கு சென்று உற்றனர்

மேல்
$13.52

#52
ஆனை தேர் பரி ஆள் எனும் நால் வகை
தானையோடும் எழுந்தனர் தானவர்
வானும் மண்ணும் திசையும் மற்று எண் பெறும்
ஏனை லோகமும் எங்கும் நடுங்கவே

மேல்
$13.53

#53
சங்கும் பேரியும் தாரையும் சின்னமும்
துங்க மா முழவும் துடி ஈட்டமும்
அம் கண் மா முரசும் உக அந்தத்தில்
பொங்கும் வேலை ஒலியின் புலம்பவே

மேல்
$13.54

#54
சூலம் நேமி எழு மழு தோமரம்
கோலும் வார் சிலை குந்தம் கொடும் கணை
நாலு தானை நடுவும் சுடர் அயில்
வேலும் வாளின் விதமும் மிடையவே

மேல்
$13.55

#55
முந்து கோப அசுரர் முடுகு தேர்
உந்து வீரன் ஒரு தனி தேரினை
வந்து சூழ வளைத்தார் மது மலர்
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே

மேல்
*அவுணர் சுடுசரம் தூவ, அருச்சுனன் தானும்
*கணைகள் எய்து, வஞ்சினம் கூறுதல்
$13.56

#56
நீல மால் வரை ஒன்றின் நெருக்கி வீழ்
கால மா முகில் என்ன கடியவர்
கோலும் வார் சிலை கொண்டல் அன்னான் மிசை
சூலம் நேமி சுடு சரம் தூவினார்

மேல்
$13.57

#57
அ கார்முக வீரனும் அங்கு அவர் தம்
மை கார் முகில் என்ன வழங்கிய திண்
மெய் காய் கணை சாபம் விசித்து விடா
நக்கான் இவை நின்று நவின்றனனே

மேல்
$13.58

#58
திக்கு ஓடிய நும் திறலும் புகழும்
தொக்கு ஓடி உடற்று படை தொகையும்
கை கோடிய வெம் சிலையின் கணையால்
மு கோடியும் இன்று முருக்குவனால்

மேல்
$13.59

#59
முன் போர்-தொறும் வந்து முனைந்து வெரீஇ
வென் போகிய விண் உறை வீரர் அலேன்
பொன் போலும் நும் மேனி பொடி செய்திடா
பின் போகுவன் என்று இவை பேசலுமே

மேல்
*அசுரர், அருச்சுனனை இகழ, அவன் கணை பல
*தூவி வெகுள, அவர்கள் அஞ்சுதல்
$13.60

#60
தழல் வந்தருள் பாவை தடம் துகிலும்
குழலும் கவர்தந்து அடல் கூரும் உமக்கு
அழல் துன்றிய கானம் அளித்தவரை
கழல் வெம் சிலை வீர கடிந்திலையே

மேல்
$13.61

#61
என்னா அசுரேசர் இசைத்தலுமே
மன் ஆகவ வீரனும் வார் சிலை நாண்
தன் ஆகம் உற தழுவ தழல் வாய்
மின் ஆர் கணை தூவி வெகுண்டனனே

மேல்
$13.62

#62
பொய் தானவர் போர் அரி அன்னவன் மேல்
மொய்த்தார் முகில் செம் கதிர் மூடுவ போல்
வைத்தாரை வடி கணை வாள் மழு வேல்
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே

மேல்
$13.63

#63
என் முன் அவன் என்முன் எனா எவரும்
முன்முன் வர முந்த முருக்கினனால்
தன் முன் ஒரு வீரர் தராதலம் மேல்
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன்

மேல்
$13.64

#64
ஒரு தேர் கொடு வீரன் உடன்றவர்-தம்
கரி தேர் பரி ஆள் அணி கையற முன்
நிருதேசரை வென்றவன் நேர் என மேல்
வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே

மேல்
$13.65

#65
வீரன் சரம் வஞ்சகர் மெய் முழுதும்
கூரும்படி சென்று குளித்திடலால்
ஆரும் பொர அஞ்சினர் அப்பொழுதில்
தேர் உந்தினர் எண்ணில் தெயித்தியரே

மேல்
*அஞ்சிய அசுரரை நோக்கி, அஞ்சாதவர் கூறிய வீர உரை
$13.66

#66
என்னே ஒரு மானுடனுக்கு எவரும்
கொன்னே அடல் ஆண்மை கொடுக்கும் அதோ
இன்னே இவன் ஆவி அழித்து இமையோர்
முன்னே வய வாகையும் முற்றுவமால்

மேல்
*அசுரருடன் கடும்போர் செய்து, விசயன்
*பிரமாத்திரம் தொடுத்தல்
$13.67

#67
காள புயல் என்ன நிறம் கரியார்
மீள படை கொண்டு விரைந்து வெகுண்டு
ஆளி திறல் மொய்ம்பனை அங்கு அடலால்
வாள கிரி என்ன வளைந்து எவரும்

மேல்
$13.68

#68
ஆர்த்தார் அகல் வானமும் ஆழ் கடலும்
தூர்த்தார் சுடர் வெம் படைகொண்டு எவரும்
தேர் தானவர் வான் உறை தேவரும் மெய்
வேர்த்தார் இனிமேல் விளைவு ஏது எனவே

மேல்
$13.69

#69
கூற்று ஒப்பன பல் படை கொண்டு அவன் மேல்
சீற்றத்தொடு எறிந்தனர் தீயவரும்
ஆற்றல் சிலை வீரனும் அவ்வவ் எலாம்
மாற்றி சர மாரி வழங்கினனால்

மேல்
$13.70

#70
அவன் விட்ட சரங்கள் அறுத்து அணி தேர்
கவன பரி பாகு கலக்கம் உற
பவனத்துடன் அங்கி பரந்தது போல்
துவனித்து அவர் வெம் படை தூவுதலும்

மேல்
$13.71

#71
கட்டு ஆர் முது கார்முக வீரனும் முன்
கிட்டா உலகோர் புகழ் கேழ் கிளர் சீர்
முள் தாமரை மேல் முனிவன் படையை
தொட்டான் அசுரேசர் தொலைந்து உகவே

மேல்
*பிரமாத்திரத்தினால் அசுரர் பட்ட பாடு
$13.72

#72
காற்றாய் மிக மண்டு கடும் கனலாய்
கூற்றாய் அவர் ஆவி குடித்து உகு செம்
சேற்றால் ஒரு பாதி சிவந்தது பார்
ஏற்றான் ஒரு பங்கு என எங்கணுமே

மேல்
$13.73

#73
நூறாயிர தேர் அணி நூறியும் மேல்
ஆறாத சினத்துடன் அ கணை போய்
மாறாய் அவர் மார்பமும் வாள் முகமும்
சீறா எதிர் சென்று செறிந்ததுவே

மேல்
*ஒரு கோடி அசுரர் பட, இரு கோடி அசுரர் திரண்டு
*பொருதலும், பல படை ஏவி அருச்சுனன் அவர்களைத் தேய்த்தலும்
$13.74

#74
குருகோடு இயையும் குருதி கடல்-வாய்
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு
அருகு ஓடிய வாளி அடர்ப்பது கண்டு
இரு கோடியும் உற்றன மற்று இவன் மேல்

மேல்
$13.75

#75
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும்
புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி
திரண்டது திருகி மீண்டும் திறலுடை தகுவர் சேனை

மேல்
$13.76

#76
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும்
அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான்
சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம்
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான்

மேல்
$13.77

#77
கார்முக கொண்டல் அன்னான் மிசை கடும் கணைகள் ஏவி
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய
போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும்
கூர் முக பகு வாய் மாயோன் கொடும் கடும் பகழி கோத்தான்

மேல்
$13.78

#78
விண்ணிடத்து அசனி நாகர் மேல் வெகுண்டிடுவது என்ன
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த
பண் என படுத்தது அந்த பைம் துழாய் பரமன் வாளி

மேல்
$13.79

#79
தசையும் வெம் பிணமும் துன்ற தனித்தனி பெருகி எல்லா
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று
விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார்

மேல்
$13.80

#80
விட்ட வெம் படைகள் எல்லாம் விண்ணிடை சுண்ணம் ஆக
கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க
எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச
வட்ட வார் சிலையினானும் மண்டு அழல் படையால் மாற்ற

மேல்
$13.81

#81
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய
சண்ட வாயுவின் பேர் வாளி தானவர் அவன் மேல் ஏவ
அண்டமும் துளங்க ஓங்கும் அரு வரை பகழி விட்டான்
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான்

மேல்
$13.82

#82
காற்றும் வெம் கனலும் காரும் இடியும் கல்மழையும் எங்கும்
தோற்றிய இருளும் மின்னும் திசை-தொறும் சூழ்ந்து பொங்க
கூற்றும் வாய் குழறி அஞ்ச கொடிய மா மாய வாளி
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார்

மேல்
$13.83

#83
கல்மழை சொரிந்து வேக கனல்_மழை வீசி எங்கும்
மின் மழை சிந்தி மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற
வில் மழை பொழிவான்-தன்னை வளைந்தது வெய்ய மாயை

மேல்
$13.84

#84
கோது இலா இரதம் பூண்ட குரகத குழாமும் உட்கி
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி
தீது இலா அமோக பாணம் சிந்தையால் தொழுது விட்டான்

மேல்
$13.85

#85
மாய வல் இருளை எல்லாம் வான் கதிர் செல்வன் என்ன
சேய அ பகுவாய் வாளி திசை-தொறும் கடிந்த எல்லை
ஆய அம் முறைமை தப்பா அறம் பொருள் இன்பம் முற்றும்
தூயவர் இதயம் என்ன தொலைந்தது சூழ்ந்த மாயை

மேல்
$13.86

#86
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும்
நெஞ்சினில் அறிவு தூண்ட நிரைநிரை தடம் தேர் தூண்டி
செம் சரம் சூலம் விட்டேறு எழு மழு திகிரி வாளம்
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை

மேல்
$13.87

#87
கடும் சிலை விரைவும் வீரன் கைத்தொழில் விரைவும் மேன்மேல்
விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால்
கொடும் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரமும் அன்னோர்
படும்படும் துயரும் எங்கும் காணலாம் பார் உளோர்க்கும்

மேல்
$13.88

#88
ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன மேன்மேல்
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது எங்கும்
மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல
தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை

மேல்
$13.89

#89
படாது ஒழி அவுணர் மீண்டும் பரிபவ படுத்தாய் எம்மை
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா
கடாமலை வயவன் மீது கடும் படை பலவும் விட்டார்
தொடா நெடும் பகழி-தன்னால் சூரனும் துணித்து வீழ்த்தி

மேல்
$13.90

#90
உரங்களும் தோளும் கண்ணும் உதரமும் அதரத்தோடு
சிரங்களும் தாளும் நாளும் செய் தவம் முயன்று பெற்ற
வரங்களும் மறையும் மேன்மேல் வான் படை கலங்கள் வீசும்
கரங்களும் சரங்கள் கொண்டு கணத்திடை கண்டம் கண்டான்

மேல்
*விசயன் கை சலித்து நின்ற போது அசரீரி அந்த
*அசுரர்களை வெல்லும் உபாயத்தை கூறுதல்
$13.91

#91
அற்றன குறைகள் எல்லாம் அவயவம் பொருந்தி மீண்டும்
உற்றன மூன்று கோடி சேனையும் உருத்து எழுந்த
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து
மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை

மேல்
$13.92

#92
வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய கேளாய்
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால்
என்று அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா

மேல்
$13.93

#93
வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர் மெய் நூறு ஆக
கொய்யினும் உருவம் மீண்டும் கூடுவர் குறிப்பின் நின்று
கையில் நாவுடன் வாய் சென்று கலந்திடும் கணத்தின் அம்பால்
எய்திடுக என்று வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே

மேல்
*விசயன் தன் தேரைத் திருப்பி, கணப்பொழுதில்
*பாசுபதக் கணை விட, அசுரர் பொடியாதல்
$13.94

#94
வானிடத்து அரூபி சொன்ன வாசகம் மனத்தில் கொள்ளா
தேனுடை தெரியல் வீரன் தேரினை திரிய ஓட்டி
கானிடை கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு
தானுடை தனுவில் பூட்டி அநுப்பட சமைந்தது ஓரார்

மேல்
$13.95

#95
தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து ஆற்றாது அஞ்சி
மானவன் முதுகு தந்தான் என்று வாள் அசுரர் எல்லாம்
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி
ஆன தம் கை வாய் சேர்த்தி ஆவலம் கொட்டி ஆர்த்தார்

மேல்
$13.96

#96
உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி
திரம் பட்ட சிலை கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது அ
சரம் பட்ட தனுசர் அங்கம் சங்கரன் செம் கை அம்பால்
புரம் பட்ட பரிசு பட்டு பொடிந்தன பொடியாய் மன்னோ

மேல்
$13.97

#97
உருத்தது மிகவும் அண்டம் உடைந்திட உடன்று பொங்கி
சிரித்தது தனுசர் மெய்யும் சிந்தையும் சேர பற்றி
எரித்தது தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து
தரித்தது மீண்டும் அந்த சங்கரன் செம் கை வாளி

மேல்
*அசுரர் வீர சுவர்க்கம் அடைய, அருச்சுனன் வெற்றிப்
*பெருமிதத்துடன் நிற்றல்
$13.98

#98
துவசத்தொடு தேர் களம் வீழ சுடர் நிவாத
கவசத்தொடு மெய் கடல் வீழ கடுகி அற்றை
திவசத்து இவறா அர_மங்கையர் வீழ சென்றார்
அவசத்துடன் அந்தகன் ஊரில் அசுரர் எல்லாம்

மேல்
$13.99

#99
ஆர்த்தார் அணி கூர் அலர் மா மழையால் விசும்பை
தூர்த்தார் துதித்தார் மதித்தார் நனி துள்ளுகின்றார்
போர் தானவர் தம் செருக்கால் படு புன்மை எல்லாம்
தீர்த்தான் இவன் என்று அகல் வான் உறை தேவர் எல்லாம்

மேல்
$13.100

#100
கூரும் படையும் குடையும் கொடியும் கொழித்து
தேரும் கரியும் பரியும் திரை-தோறும் உந்தி
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல்
போரும் பொர போய் அணியோடு புகுவ போலும்

மேல்
$13.101

#101
தத்தி குருதி கடல் பொங்க தனித்தனி நின்று
எ திக்கினும் வெம் பிண குன்றம் எழிலொடு ஓங்க
பத்திப்பட மேல் பருந்தின் குலம் பந்தர் செய்ய
கொத்துற்ற தண் தார் திறல் கோதண்ட வீரன் நின்றான்

மேல்
*அசுரமாதர் அரற்றும் ஓசையால், அருச்சுனன்
*சினம் தீர்ந்து, தேரை வானுலகிற்கு மீண்டு
*செலுத்துமாறு மாதலிக்குக் கூறுதல்
$13.102

#102
மின் போல் நுடங்க இடை வேல் விழி நீர் ததும்ப
பொன் போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப
அன்போடு அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும்

மேல்
$13.103

#103
இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி ஏங்க
மை வாள் விழியின் வழி அஞ்சன வாரி பாய
தெவ் ஆறிய பின்னரும் தீர்ந்தில தீர்ந்த அன்றே
கை வார் சிலையான் கடும் கோபமும் கண் சிவப்பும்

மேல்
$13.104

#104
அன்னார் நகரத்து அழகும் தொல் அரணும் நோக்கி
மின் ஆரும் வேலான் விறல் மாதலி-தன்னை மீண்டும்
நல் நாகர் ஊரில் தடம் தேரை நடாத்துக என்ன
சொன்னான் அவனும் துனை தேர் நனி தூண்டும் எல்லை

மேல்
*தேரில் மீளும் விசயன், அந்தரத்தில் ஓர் ஊரைக்
*கண்டு, மாதலியை வினவ, அவன் அங்கு வாழும்
*காலகேயரைப் பற்றி உரைத்தல்
$13.105

#105
செம்பொன் புரிசை திகழ் கோபுர செம்பொன் மாடத்து
அம் பொன் கொடி சேர் நகர் அந்தரத்து ஒன்று காணா
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை
விம்ப திறல் வார் சிலை வீரன் வினவ அன்னான்

மேல்
$13.106

#106
மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்ச
கன்னம் கரிய குழல் காலகை காமர் சோதி
பொன் அம் கொடி போல் எழில் கூர் நுண் இடை புலோமை
என்னும் பெயரார் இருவோர் உளர் என்றும் உள்ளார்

மேல்
$13.107

#107
அம் மாதர் தந்தை தனை நோக்கி அனந்த காலம்
செம் மால் வரையில் தவம் செய்தனர் செய்த நாளில்
மை மான் விழியார்-தமக்கு அந்த வனச வாணன்
எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான்

மேல்
$13.108

#108
தம் மக்கள் ஆய அசுரேசர் அதிதி தந்த
அ மக்கள்-தம்மால் அழியாமையும் ஆடகத்தால்
மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரும் மொய்ம்பின் இந்த
செம்மை புரமும் கொடுத்தான் அ திசை முகத்தோன்

மேல்
$13.109

#109
பொன் காலும் மெய்யர் பொறி கால் பொலம் குண்டலத்தர்
முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர்
மின் கால் படையர் விடம் காலும் விழியர் வெம் போர்
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர்

மேல்
$13.110

#110
வரு முப்பொழுதும் மறை அந்தணர் அம் கை வாரி
உருமு புயல் போல் கவர்வோர் முன் உகாந்த நாதன்
பொரு முப்புரத்தில் உறை தானவர் போலும் வீரர்
இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால்

மேல்
*’இவரையும் முடித்த பின்பே அமராவதி செல்வேன்; தேரை
*அங்குச் செலுத்து’என விசயன் கூற, அவனும்
*அவ்வாறே செய்தல்
$13.111

#111
தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல
குன்றே அனையான் கொடும் போர் வஞ்சினங்கள் கூறி
இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி பின்னர்
அன்றே இனி நான் அமராவதி செல்வது என்றான்

மேல்
$13.112

#112
இந்த புரத்தின் மிசை தேரினை ஏவுக என்னா
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற
சிந்தைக்கும் முந்தும் தடம் தேரை தனுசர் வைகும்
அந்த புரத்தில் விடுத்தான் மற்று அவனும் மாதோ

மேல்
*தேர் ஒலியும் நாண் ஒலியும் கேட்டு, காலகேயர் திடுக்கிட்டு,
*சினமுற்றுப் போருக்கு எழுதல்
$13.113

#113
தேர் ஆரவாரத்துடனே திண் சிலை வலான்-தன்
போர் ஆரவார சிலை நாண் ஒலி மீது போக
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார்
கார் ஆரவாரம் என பொங்கும் அ காலகேயர்

மேல்
$13.114

#114
இந்த ஓதை எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும்
அந்த ஓதையோ அது அன்றி ஆழி பொங்கும் ஓதையோ
கந்தன் வானின் மீது தேர் கடாவுகின்ற ஓதையோ
எந்த ஓதை என்று அயிர்த்து உயிர்த்து வஞ்சர் யாவரும்

மேல்
$13.115

#115
தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ
விழித்து மீசை நுனி முறுக்கி வெய்ய வீர வாள் உறை
கழித்து எழுந்து பொங்குகின்ற காளகூடம் என்னவே
கொழித்து அழன்று மண்ணும் விண்ணும் இன்று கோறும் நாம் எனா

மேல்
$13.116

#116
ஓடுவாரும் அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல்
நாடுவாரும் நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா நகைத்து
ஆடுவாரும் அமரர் வாழ்வு பாழ்படுத்தும் ஆயுதம்
தேடுவாரும் எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே

மேல்
$13.117

#117
கூளி கோடி உய்ப்ப குஞ்சரங்கள் கோடி உய்ப்ப பேர்
ஆளி கோடி உய்ப்ப வாயு கதி கொடு அந்தரத்தின் மேல்
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப வாவு தேர்
ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி முந்தினார்

மேல்
*அருச்சுனனை, ‘இவன் யார்?’ என அசுரர் ஐயுறுதலும்,
*அவன் அவ் அசுரரின் அழகு கண்டு நொந்து கூறுதலும்
$13.118

#118
அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன் அபயம் முன்
தந்த இந்திரன்-தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான்
கந்தன் என்னில் ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை மேல்
எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே

மேல்
$13.119

#119
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி
குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல்
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம்
கண்டு கண்டு அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான்

மேல்
$13.120

#120
கன்னல் வேளை வென்ற இ கவின் படைத்த காட்சியும்
மின்னு பூண் விளங்கு மார்பும் விபுதருக்கும் இல்லையால்
என்ன பாவம் இவரை ஆவி ஈடு அழிப்பது என்று போர்
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா

மேல்
*காலகேயர் விசயன்மீது பகழி தூவி இகழ்ந்து பேச, அவன்,
*’உங்கள் உயிர்க்கு இறுதி வந்தது’ என்று மொழிதல்
$13.121

#121
வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடை
செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும்
மல் வளைத்த சிகர வாகு கிரியின் மீதும் மார்பினும்
கொல் வளைத்த பகழி தூவி இன்ன நின்று கூறுவார்

மேல்
$13.122

#122
உழுவை கண்ட உழைகள் போல ஓடி ஓடி மேருவின்
முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன்
இழிவு இல் சந்தனம் கடாவி இங்கு வந்தது என் அடா
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ

மேல்
$13.123

#123
என்று காலகேயர் நின்று இசைத்த சொல் செவிக்கொளா
நன்று காலகேயர் சொன்ன வாய்மை நன்று எனா நகைத்து
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை
கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே

மேல்
*அருச்சுனன் மொழியால் அழன்று காலகேயர் படைகள் விட,
*அவனும் பல அம்புகளால் அவற்றை விலக்குதல்
$13.124

#124
காலகேயர் விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு
ஆலகாலம் என உருத்து அழன்று பொங்கி அயில் முனை
சூலம் நேமி பாலம் வெய்ய சுடு சரம் துரத்தினார்
நீல மேனி செம் புண்நீரினால் நிறம் சிவக்கவே

மேல்
$13.125

#125
விண் சுழன்று திசை சுழன்று வேலையும் சுழன்று சூழ்
மண் சுழன்று வரை சுழன்று வானில் நின்ற வானுளோர்
கண் சுழன்று யாதினும் கலங்குறாத கலை_வலோர்
எண் சுழன்று மற்றும் உள்ள யாவையும் சுழன்றவே

மேல்
$13.126

#126
அவர் விடுத்த படைகள் யாவும் அழிய வானுடை கணை
கவர் தொடுத்து விலகி மீள அவர்கள் காயம் எங்கணும்
துவர் நிறத்த குருதி சோர்தர சரம் துரத்தினான்
தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன்

மேல்
*அவுணர் மாயத்தால் மறைந்து பொர, அருச்சுனன்
*அம்பு மழை பொழிதல்
$13.127

#127
பார்த்தன் எய்த வாளி மெய் பட பட பதைத்து மீது
ஆர்த்து எழுந்து நகரினோடும் அந்தரத்தின் எல்லை போய்
வார் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய அ
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ

மேல்
$13.128

#128
அண்ணல் தேரின் முன்னது ஆகும் அளவு இறந்த தேரொடும்
விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ
கண்ணும் ஆகும் அ கணத்தில் மீளவும் கரந்திடும்
எண்ணல் ஆவது அன்று அது அன்று இயற்றும் இந்த்ரசாலமே

மேல்
$13.129

#129
அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து அருச்சுனன்
சிந்தை கன்றி விழி சிவந்து தெய்வ வாகை வில்லையும்
மைந்துடன் குனித்து வாளி வாயு வேகமுடன் விடுத்து
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான்

மேல்
*அருச்சுனன் வில் திறம் கண்டு வியந்து, அவுணர்
*மேலும் கடுகிப் பொருதல்
$13.130

#130
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல்
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று மேல்
கனிவுறும் சர குழாம் விசும்பின் எல்லை காட்டும் ஓர்
மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே

மேல்
$13.131

#131
புருவ வில் வளைவுற விழி கனல் பொதுள
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி
சர மழை இடி மழை தழல் மழை சொரியா
பெரு மழை என நனி பிளிறினர் எவரும்

மேல்
$13.132

#132
இவர் உயிர் கவர்தர இடம் இது எனவே
நவை அறு திறலுடை நகு சரம் உகையா
அவரவர் அகலமும் அணி கிளர் கரமும்
தவருடன் விழவிழ ஒரு தனி பொருதான்

மேல்
$13.133

#133
அவன் விடும் அடு கணை அடையவும் நொடியில்
பவனனது எதிர் சருகு என நனி பறிய
கவனமொடு எழு பரி ரத கதி குலைய
துவனியொடு எறி படை எதிரெதிர் தொடவே

மேல்
$13.134

#134
வரி சிலை விறலுடை மகபதி மகனும்
எரி விழி அவுணரும் முறைமுறை இகலி
பொருதனர் ரகுபதி புதல்வனும் அடு போர்
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே

மேல்
*அருச்சுனன் பாசுபதக்கணையால், காலகேயர்களை அழித்தல்
$13.135

#135
இ படைகளின் உயிர் அழிகிலர் இவர் என்று
அ படைகளை ஒழிதர அடல் அடையார்
மெய் புகும் விறலது விடையவன் அருளும்
கை பகழியை மனன் உற நனி கருதா

மேல்
$13.136

#136
மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள்
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண்
நச்சு அரவு அனையது நகம் இறும் முனைவாய்
வச்சிரம் அனையது வருதலும் மகிழா

மேல்
$13.137

#137
பசுபதி அருளிய பகழி முன் வரலும்
விசயனும் நறை விரி மலர் கொடு பரவி
திசை-தொறும் அமர் புரி திறலுடை வடி வேல்
அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே

மேல்
$13.138

#138
அ கணை விசையுடன் அகல் வெளி மிசை போய்
நக்கது பிறை எயிறு இள நிலவு எழவே
முக்கணும் அழல் உக முரணொடு முடுகி
புக்கது தனுசர்-தம் உடல் பொடிபடவே

மேல்
$13.139

#139
மாருதம் விசையுடன் வட அனல் கொளுவி
கார்-தொறும் நிரைநிரை கடிகுவது அது போல்
தேர்-தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து
ஓர் ஒரு கணை ஒரு நொடியினில் உறவே

மேல்
*அவுணர் பட்ட களத்தின் தோற்றம்
$13.140

#140
மகபதி அரி சிறை வரை நிகர் எனவே
திகை-தொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி
புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள
கக படலமும் முறை கஞலின களமே

மேல்
$13.141

#141
ஆடின அறுகுறை அலகைகளுடன் நின்று
ஓடின திசை-தொறும் உகு குருதியின் நீர்
நீடின பிணமலை நிரைநிரை நெறி போய்
தேடின கதிர்களும் மிசை வழி செலவே

மேல்
*மாதலி விசயனது அடி தொழுதலும், தேவர் முதலியோர்
*பகை நீங்கியமை கண்டு மகிழ்தலும்
$13.142

#142
மா தவம் மிகு திறல் அசுரரை மறலிக்கு
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர்
சூதனும் விசயனது இணை அடி தொழுதான்

மேல்
$13.143

#143
தள்ளினர் தம துயர் சலம் இனி இலது என்று
உள்ளினர் விசயனது உறுதியும் உரனும்
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா
துள்ளினர் இமையவர் சுரபதி முதலோர்

மேல்
*காலகேயரின் இரணியபுரமும் மறைதல்
$13.144

#144
தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ
தானவர் தானை எல்லாம் மடிந்த அ தளர்வினாலோ
போனது கரந்து வஞ்சர் இரணியபுரமும் மன்னோ

மேல்
*அருச்சுனன் இளைப்பாறி, தேர்மேல் வானுலகு
*செல்ல, சித்திரசேனன் முன்னே சென்று, இந்திரனுக்கு
*வெற்றிச் செய்தி தெரிவித்தல்
$13.145

#145
வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்-தம் மகளிர் தெய்வ
பூணொடு குழைகள் வாங்க புனை வய வாகை வாங்கும்
நாண் உயர் தனுவின் வாங்கி நயந்து இளைப்பாறி நின்றான்
தூணொடு பறம்பு வாங்கும் சுடர் மணி கடக தோளான்

மேல்
$13.146

#146
பார் கொண்டது அசுரர் மெய்யில் பரந்த செம் குருதி வெள்ளம்
கார் கொண்ட விசும்பு கொண்டது அவர் பிண காயம் வானோர்
ஊர் கொண்டது உரிமையோடும் அவர் உயிர் மீண்டும் என்றால்
தார் கொண்ட அமரர்க்கு எவ்வாறு இவன் பகை தடிந்தது அம்மா

மேல்
$13.147

#147
இ வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான்
வை வரும் முனை வேல் சித்ரசேனன் வாசவனுக்கு ஓடி
நைவரு துயரம் நீங்க நவின்றனன் புரிந்த எல்லாம்

மேல்
*செய்தி அறிந்த இந்திரன் நகரை அலங்கரித்து, விசயனை
*எதிர்கொள்ளுதல்
$13.148

#148
சித்திரசேனன் மாற்றம் செவிக்கு அமுதாக கேட்டு
பத்தி கொள் விமான சோதி பைம் பொன் மா நகரி கோடித்து
எ திசையவரும் ஏனை இமையவர் குழாமும் சூழ
வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே

மேல்
$13.149

#149
கின்னரமிதுனம் இன் சொல் கீதங்கள் இனிது பாட
துன்னி எங்கு எங்கும் சேர துந்துபி குழாம் நின்று ஆர்ப்ப
பன்ன அரும் மறைகள் தெய்வ முனிவரர் பகர்ந்து வாழ்த்த
மன்னவர்_மன்னன்-தன்னை வாசவன் தழுவிக்கொள்ளா

மேல்
*யானைமேல் விசயனை நகர் வலம் செய்விக்க,
*அது தகாது என்ற விஞ்சையனுக்கு இந்திரன்
*அவனது உயர்வு எடுத்து உரைத்தல்
$13.150

#150
கையுடை கயிலை அன்ன கட கரி பிடரின் வைத்து
மையுடை கொண்டல்வாகன் நகர் வலம் செய்த போதில்
மெய்யுடை கலைகள் வல்லான் விஞ்சையன் ஒருவன் கண்டு
பொய்யுடை தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ புனித என்றான்

மேல்
$13.151

#151
விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்_கோன் செவியில் சென்று
நஞ்சு என புகுதலோடும் நயனங்கள் செம் தீ கால
நெஞ்சினில் அறிவு இலாதாய் நீ இது கேட்டி என்னா
மஞ்சு என கரிய மெய்யான் மனம் கனன்று இனைய சொல்வான்

மேல்
$13.152

#152
ஆதி நாயகன் மா மாயன் அமரர்-தம் துயரும் ஏனை
பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல
ஓத நீர் உலகில் மீண்டும் அருச்சுனன் உருவம் கொண்டான்

மேல்
$13.153

#153
ஆதலால் மனிதன் என்று இ அருச்சுனன் தன்னை இன்னே
நீதியால் அமரர் யாரும் நெஞ்சினில் இகழல் என்று
மாதர்கள் வீதி-தோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த
கோதிலா அமரர் கோமான் கொண்டு தன் கோயில் சேர்ந்தான்

மேல்
*இந்திரன் தனது சபையில் அருச்சுனனைப் பீடத்து அமர்த்தி,
*அவன் போர் வன்மையைக் கூறுமாறு மாதலியிடம் வினவுதல்
$13.154

#154
அரிமுக கனக பீடத்து அண்ணலை இருத்தி அண்டர்
இரு புடை மருங்கும் நிற்ப இந்திரன் இருந்த பின்னர்
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான்

மேல்
*மாதலி விசயனது போர் வன்மையைப் புகழ்தல்
$13.155

#155
மற்று அவன் தொழுது போற்றி வானவர் குழுவுக்கு எல்லாம்
கொற்றவ என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால்
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர
இற்றது கண்டேன் பின்னர் வில்லின் நாண் இடியும் கேட்டேன்

மேல்
$13.156

#156
ஆயது நிகழ்ந்த பின்னர் அயன் அருள் வரத்தினாலே
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரை
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன் இமைப்பில் முற்றும்
மாயமோ மனிதன் வில்லின் வன்மையோ தெரிந்தது இல்லை

மேல்
*தேவர்கள் விசயனுக்குப் பல படைகள் வழங்குதல்
$13.157

#157
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில்
துன்றிய அமரர் யாரும் தனித்தனி சுருதியோடும்
வென்றிடு படையும் மற்றும் வேண்டுவ பலவும் ஈந்தார்

மேல்
*அருச்சுனன் தருமனிடம் செல்ல விடை கேட்க, இந்திரன் சில
*நாள் தங்குமாறு கூறி, தனி மாளிகை முதலியன அளித்தல்
$13.158

#158
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற
காவலன் கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து போற்றி
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள்
மேவர வேண்டும் இன்னே விடை எனக்கு அருளுக என்றான்

மேல்
$13.159

#159
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு
தந்தையும் இன்னம் சில் நாள் தங்குக இங்கு என்று ஏத்தி
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர்
ஐந்தொடு ஆயிரரும் வேறோர் அம் பொன் மாளிகையும் ஈந்தான்

மேல்
*விசயனது வெற்றியைத் தருமனுக்கு உரைக்குமாறு உரோமச
*முனிக்கு இந்திரன் சொல்ல, முனிவன் போதல்
$13.160

#160
வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும்
புரோசன பகைவற்கு ஈந்து புரந்தரன் இருந்த பின்னர்
சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை
உரோமச முனியை நோக்கி உரைத்தனன் உற்ற எல்லாம்

மேல்
$13.161

#161
வரி சிலை விசயன் வந்து வான் தவம் புரிந்தவாறும்
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும்
இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும்
தருமனுக்கு உரைத்தி என்ன தபோதன முனியும் போனான்

மேல்

14. முண்டகச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$14.1

#1
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம்
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன்
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம்
சொல் கொண்டு துதித்து எழுந்து துள்ளி நாளும் தொழுமவரே எழு பிறவி துவக்கு அற்றாரே

மேல்
*உரோமச முனி தருமனிடம் வந்து, இந்திரன் விருப்பின்படி
*விசயனைப் பற்றிய செய்தி தெரிவித்தல்
$14.2

#2
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில்
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில்
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம்

மேல்
$14.3

#3
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன்
சிறகு இழந்த பறவை என துணைவரோடும் திறல் வேந்தன் சிந்தனை உற்று இருந்த காலை
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே

மேல்
$14.4

#4
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத
அந்த முனிவரனும் அவர்க்கு அன்பால் துன்பம் அணுகாத அந்தம் இலா ஆசி கூறி
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம்

மேல்
$14.5

#5
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான்
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன்
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும்

மேல்
$14.6

#6
தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற தனஞ்சயன் அங்கு இருந்ததன் பின் தயங்கும் சோதி
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல்
உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால்
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான்

மேல்
*பாண்டவர் உரோமசன் காட்டிய வழியே உடன் சென்று,
*காந்தர்ப்ப மலையில் தங்கியிருத்தல்
$14.7

#7
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார்

மேல்
$14.8

#8
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு
தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார்

மேல்
$14.9

#9
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே

மேல்
$14.10

#10
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே

மேல்
*அங்கே இருக்கும் காலத்தில், பொற்றாமரை மலர் ஒன்று
*திரௌபதியின் முன் வீழ, அதனை நோக்கி அவள் சிந்தித்தல்
$14.11

#11
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும்
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில்
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே

மேல்
$14.12

#12
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும்
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில்
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி
கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள்

மேல்
*திரௌபதி அம் மலரை வீமனுக்குக் காட்டி, ‘இதை ஒத்த *மலர் கொணரவேண்டும்’
*என்ன, அவன் உரோமசமுனிவனிடம் மலரைப் பற்றிக் கேட்டு அறிதல்
$14.13

#13
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே

மேல்
$14.14

#14
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள்
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த
பின்பு இதனை கண்டு அறிவார் இல்லை என்று பேசினான் யாவரொடும் பேச்சு இலாதான்

மேல்
*வீமன் மலர் கொணர அளகைக்குத் தனியே செல்லுதல்
$14.15

#15
இயக்கர் பதி-தனில் உளது என்று இசைத்த மாற்றம் இன்புற கேட்டு ஒருகாலும் ஈறு இலாத
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில்
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே

மேல்
*வீமன் வேகத்துடன் காஞ்சனவனம் கடந்து, கதலி வனத்தைக் காணுதல்
$14.16

#16
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன்

மேல்
$14.17

#17
இலங்கை நகர்-தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன் சோலை எலாம் இறுத்தவா போல்
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம்
கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து காஞ்சன பேர் எழில் வனமும் கடந்திட்டானே

மேல்
$14.18

#18
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன்
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின்
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான்

மேல்
*கதலி வனத்து எதிர்ந்த காவலரது ஆவி போக்கி, வீமன்
*சிங்கநாதம் செய்ய, யாவும் கலக்கமுறுதல்
$14.19

#19
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ

மேல்
$14.20

#20
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர்
திரை கலங்க திசை கலங்க ஈறு இலாத செகம் கலங்க உகம் கலங்க சிந்தை தூயோர்
உரை கலங்க உளம் கலங்க துளங்கி மெய்யில் ஊன் கலங்க விலங்கொடு புள் இனங்கள் யாவும்
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா

மேல்
*சிங்கநாதம் கேட்ட அனுமன் வீமன் செல்லும் வழியில்
*முந்தச் சென்று இருத்தல்
$14.21

#21
அந்த ஓதை அ பொழிலிடை தவம் புரிந்தருளும்
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய்
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி

மேல்
$14.22

#22
வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி
பொன் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி
அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும்
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க

மேல்
$14.23

#23
எம்பிரான்-தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியா
செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ
விம்ப மால் வரை மீது ஒரு மேருவே ஒக்கும்
அம் பொன் மால் வரை இருந்து என இருந்தனன் அனுமான்

மேல்
*அனுமனைக் கண்டு வீமன் திகைத்து நிற்க, அனுமன்,
*’நீ யார்?’ என்ன, வீமனும் மாறாக அங்ஙனமே வினாவுதல்
$14.24

#24
குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி
நகைத்து நாகமும் நாகமும் நடுங்கிட நடந்து
மிகைத்த வாள் அரி போல் வரும் வீமன் முன் கண்டு
திகைத்து நின்றனன் மறமையும் திறமையும் உடையான்

மேல்
$14.25

#25
அண்டர் தானவர் அரக்கரும் அணுகுறா வனத்தில்
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட ஆர்த்து
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான்
சண்ட வாயுவின் தனயனை மற்று அவன் தமையன்

மேல்
$14.26

#26
தம்முன் ஆகிய வானரம் சாற்றிய உரை கேட்டு
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான்
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர்
தம் முன் ஆயினும் நா தவறா அடல் வீமன்

மேல்
*’வல்லையேல் என் வாலைக் கடந்து போ’ என அனுமன் கூற,
*’அனுமன் வால் அன்றி, ஒரு குரங்கின் வாலைக்
*கடப்பது அரிதோ?’ என வீமன் கூறுதல
$14.27

#27
துன்னும் வெம் சிலை வலி-கொலோ தோள் இணை வலியோ
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா
மன்னும் வால்-தனை கடந்து போ வல்லையேல் என்றான்

மேல்
$14.28

#28
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா
வரம் கொள் வார் சிலை இராகவன் மா பெரும் தூதன்
தரங்க வாரிதி தாவும் என் தம்முன் வால் அன்றி
குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ கூறாய்

மேல்
*அனுமன், ‘மனிதனைச் சுமந்த அனுமனை என்னுடன்
*ஒப்புக் கூறலாமோ?’ என்ன, வீமன் இராகவ
*அனுமர்களின் பெருமையைக் கூறுதல்
$14.29

#29
என்று தன் திரு துணைவன் நின்று இசைத்தது கேட்டு
நன்று நன்று நீ நவின்றது நன்று என நகையா
துன்று வார் சிலை மனிதனை சுமந்து தோள் வருந்தும்
புன் தொழில் சிறு குரங்கையோ என்னொடும் புகல்வாய்

மேல்
$14.30

#30
குரக்கு_நாயகன் அ உரை கூறலும் கேட்டு
தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா
அரக்கர்_நாயகன் ஊர் அழல் ஊட்டி இ அகிலம்
புரக்கும் நாயகன்-தன்னையோ இழித்து நீ புகல்வாய்

மேல்
*’யார்?’ என அனுமன் மீண்டும் வினாவ, வீமன்
*தன்னை இன்னான் என அறிவித்தல்
$14.31

#31
பின்னும் வார் சிலை இராகவன் பெருமையும் அனுமான்
மன்னு தோள் இணை வலிமையும் மாருதி சாற்ற
அன்ன போழ்தினில் அகம் மகிழ்ந்து அருளுடன் நோக்கி
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான்

மேல்
$14.32

#32
தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும
நாம நாயகற்கு இளையவன் நரனுக்கு மூத்தோன்
வீமன் வாயுவின் புதல்வன் யான் என்றனன் விறலோன்

மேல்
*’இராகவன் சீர்த்தியை யார் சொல அறிந்தாய்? என்ன,
*’பரத்துவாசன் சொலக் கேட்டேன்’ என்று
*வீமன் விடை பகர்தல்
$14.33

#33
அன்ன வாசகம் அவன் உரைத்தலும் இகல் அனுமான்
கன்ன பாகமும் சிந்தையும் முந்துற களித்து
மின்னு வார் சிலை இராகவன் மெய் பெரும் சீர்த்தி
சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான்

மேல்
$14.34

#34
வரத்தினால் அரு மறையினால் வார் சிலை பயிற்றும்
பரத்துவாசன் முன் பகர்தர கேட்டனன் பலகால்
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி என்றான்
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன்

மேல்
*அனுமன் தன்னைப் பற்றிய உண்மையை வெளியிட,
*வீமன் அவன் திருவடிகளில் வணங்குதல்
$14.35

#35
குந்தி கான்முளை கூறிய வாசகம் கேட்டு
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான்
சிந்து சீகர சிந்து முன் கடந்து செம் தீயால்
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும்

மேல்
$14.36

#36
அந்த வார் சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும்
சிந்தையால் அவன் திரு பதம் சிந்தைசெய்பவனும்
உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவனும்
இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன்

மேல்
$14.37

#37
என்ற வாசகம் இரு செவிக்கு அமுது என கேட்டு
துன்று நெஞ்சினில் உவகையன் துதித்தனன் துள்ளி
என்றும் யாம் முயல் தவ பயன் இருந்தவா என்னா
சென்று இறைஞ்சினன் திரை கடல் கடந்த சேவடி மேல்

மேல்
*தம்பியை அனுமன் தழுவி, அவன் தனியாக வனம் வந்தது
*பற்றி வினவ, வீமன் மலரின்பொருட்டு வந்தமை கூறுதல்
$14.38

#38
தம்பியை துணை தாழ் தட கைகளால் எடுத்து
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து
பம்பு செம் தழல் கானிடை பத மலர் சிவப்ப
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான்

மேல்
$14.39

#39
தாயத்தாரும் வல் வஞ்சனை சகுனியும் கூடி
மாயத்தால் ஒரு கவறுகொண்டு எங்கள் மண் கொண்டு
நேயத்தால் நெடும் கானகம் நேர்ந்தனர் என்றான்
சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான்

மேல்
$14.40

#40
திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லென செல்ல
சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா
அகைந்த இ துணை மலர் எனக்கு அருளுதி என்றாள்

மேல்
$14.41

#41
ஆதலால் இவண் யானும் இன்று அணுகினன் என்று
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற
கோது இலாத அ குரிசிலும் குமரனை நோக்கி
தீது இலாய் இது கேட்க என செப்புவன் மாதோ

மேல்
*மலர் இருக்கும் இடத்தையும், பெறுதற்குரிய வீமனது
*தகுதியையும் அனுமன் உரைத்தல்
$14.42

#42
அரு நிதி கிழவன்-தனது அளகை மா நகரில்
மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில்
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று
உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால்

மேல்
$14.43

#43
ஈறு இலா இகல் அரக்கரோடு இயக்கர்-தம் காவல்
கூறும் வாசகம் பொய்ப்பவர் கூர் தவம் முயலும்
பேறு இலாதவர் பேர் அருள் இலாதவர் பிறிதும்
ஆறு இலாதவர் தமக்கும் அங்கு அணுகுதல் அரிதால்

மேல்
$14.44

#44
அறிவும் வாய்மையும் தூய்மையும் அன்பும் இன் அருளும்
பொறையும் ஞானமும் கல்வியும் புரி பெரும் தவமும்
நெறியும் மானமும் வீரமும் நின்ன ஆதலினால்
பெற உனக்கு அரிது ஆயது ஏது என்றனன் பெரியோன்

மேல்
*உற்ற துணைகள், ‘எனக்கு வாய்த்துள்ளமையால்,
*யாவர் காவல் புரியினும் மலரைக்
*கவர்வேன்’ என வீமன் உரைத்தல்
$14.45

#45
முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு
பின்னவன் தொழுது இவையிவை பேசினன் பின்னும்
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால்

மேல்
$14.46

#46
தேவர் காக்கினும் தெயித்தியர் காக்கினும் சிறந்த
மூவர் காக்கினும் முறைமுறை மொழிந்த மூஉலகில்
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி
காவின் மேல் பயில் கடி மலர் கவருவேன் என்றான்

மேல்
*’வேண்டும் வரம் கேள்’ என்ற அனுமனிடம், ‘பாரதப்போரில்
*விசயனது தேர்க் கொடியில் நீர் உவந்து
*ஆடவேண்டும்’ என வீமன் வேண்டுதல்
$14.47

#47
ஆண்டு அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி
பாண்டவன்-தனை பண்புற பரிவினால் நோக்கி
வேண்டும் நல் வரம் வேண்டுக ஈண்டை நீ என்றான்

மேல்
$14.48

#48
நெடிய கானகம் நீங்கி யாம் நெறியின் நேரலரை
கடிய வெம் செரு புரி பெரும் குருதி வெம் களத்தில்
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர்
கொடியின் மீது நின்று உவந்து கூத்து ஆடுதிர் என்றான்

மேல்
*அனுமன் வரம் கொடுக்க, பின்னும், வீமன் அனுமனிடம்,
*’இலங்கையில் தீ இட்ட நாளில் கொண்ட
*பெரு வடிவைக் காட்டுக!’ என வேண்டுதல்
$14.49

#49
நீட்டும் அ வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான்
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன் வீமன்
ஈட்டும் மா நிதி இலங்கை தீ இட்ட நாள் இசைந்த
மோட்டு உருத்தனை காட்டுக என்று இறைஞ்சினன் முதல்வன்

மேல்
*அனுமன் தன் பெரு வடிவைக் காட்டுதலும், அதனைத்
*தன் கண்ணால் முற்றும் காண முடியாது, அவ்
*உருவைச் சுருக்கிக்கொள்ள வீமன் வேண்டுதலும்
$14.50

#50
என்று அடல் வீமன் இசைத்திடும் முன்னம்
ஒன்றி இ ஏழ் உலகங்களும் ஒன்றாம்
மன்று உள தார் புனை வாமனனை போல்
நின்று நிமிர்ந்தனன் நித்தமும் உள்ளான்

மேல்
$14.51

#51
படியினது எல்லை பதத்தினது எல்லை
மடியினது எல்லை அ வானினது எல்லை
அடியினது எல்லை அளப்பரிது என்றால்
முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ

மேல்
$14.52

#52
அந்தரம் எங்கும் அடக்கிய மெய்யில்
சுந்தர வாலதி சுற்றிய தோற்றம்
முந்திய நீள் உடல் வாசுகி முன் நாள்
மந்தர வெற்பை வளைத்தது மானும்

மேல்
$14.53

#53
நீள் அகல் வானம் நெருங்க மருங்கே
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன்
நாளொடு தாரகை ஞாயிறு முதலாம்
கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான்

மேல்
$14.54

#54
இ வகை முன்னம் இலங்கை எரித்தான்
பை வரு நாகர் பணம் சுழிய திண்
மெய் வகை கொண்டது கண்டு வியந்தார்
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம்

மேல்
$14.55

#55
மேல் அளவாது விளங்கிய சொல் மெய்
நூல் அளவாகிய நுண் அறிவோர் போல்
மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான்
கால் அளவு அல்லது கண்டிலன் வீமன்

மேல்
$14.56

#56
அருக்கனின் மு மடி ஆர் ஒளி வீசும்
உரு கிளர் மேனியை ஊடுற நோக்கா
வெருக்கொடு தாள் மிசை வீழ்ந்தனன் மீண்டும்
சுருக்குக என்று துதித்தனன் வீமன்

மேல்
*அனுமன் பெரு வடிவைச் சுருக்கிக்கொள்ள, வீமன்
*அவனை வணங்கிப் பிழை பொறுக்க வேண்டுதல்
$14.57

#57
அந்தமும் ஆதியும் அற்றவருக்கு அம்
செந்தமிழ் செய்து திரட்டினரை போல்
அந்தர வானும் அகண்டமும் ஒன்றா
உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா

மேல்
$14.58

#58
இந்திரசாலம் இயற்றினரை போல்
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து
அந்தம் இலாய் அடியேன் பிழை எல்லாம்
புந்தி உறாது பொறுத்தருள் என்றான்

மேல்
*வீமனுக்கு அனுமன் அருள் செய்தல்
$14.59

#59
திருவடி-தன் இரு சேவடியில் போய்
மரு வடி தார் புனை மாருதி தொழவே
அருள் வடிவாகி அகண்டமும் எங்கும்
ஒரு வடிவு ஆனவன் உற்று உரைசெய்வான்

மேல்
$14.60

#60
உன் அருகே பயில் உம்பியரோடும்
மின் அருகே பயில் வேந்தொடும் வாழ்வுற்று
என் அருகே வருக என்றனன் என்றும்
தன் அருகு ஏதம் உறாத தவத்தோன்

மேல்
*அளகைக்குச் செல்லும் வழியை வீமன் கேட்க,
*அனுமன்வழி கூறி, மலர் பெறுதற்குரிய
*உபாயத்தையும் தெரிவித்தல்
$14.61

#61
அங்கு அவன் அ மொழி கூறலும் ஐயா
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே
பங்கய மா நிதி வாழ் பதி எய்த
சங்கை இல் நல் நெறி சாற்றுக என்றான்

மேல்
$14.62

#62
என்றலும் இந்த வனத்தினது எல்லை
ஒன்றிய யோசனை ஓர் இருநூறு
சென்ற பின் யோசனை சிற்சில சென்றால்
மன்றல் மலர் பொழில் வாவியில் மன்னும்

மேல்
$14.63

#63
அ பொழில் காவல் அரக்கர் அநேகர்
எ பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார்
துப்புடனே அவர் ஆவி தொலைத்தால்
செப்பிய மா மலர் சென்று உறலாகும்

மேல்
$14.64

#64
அல்லது நீடு அளகாபதி-தானும்
மெல்_இயலும் பொழில் மேவியபோது
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால்
மல்லல் மலர் தருவோடு வழங்கும்

மேல்
*அனுமன் விடை கொடுக்க, வீமன் செல்லுதல்
$14.65

#65
உறுதியும் ஒன்னலர் ஊக்கமும் ஏகும்
நெறியினது எல்லையின் நீர்மையும் நெறியில்
குறிகளும் யாவையும் அன்பொடு கூறி
அறிவுடையான் விடை அன்பொடு அளித்தான்

மேல்
$14.66

#66
மொய்ம்புடை மாருதி தாள் இணை முன்னா
வெம்பிய கானிடை மேவிய பயன் இங்கு
எம்பெருமான் உனை எய்தினன் என்னா
நம்பியும் நாழிகை ஒன்றில் நடந்தான்

மேல்
*சக்கரமலை கடந்து, திவாகரமலையைச் சேர்ந்தபோது,
*புண்டரீகன் என்னும் அரக்கன் வீமனுடன்
*மாறு கொண்டு எழுதல்
$14.67

#67
அக்கணம் ஆசுவின் ஆசுகன் மைந்தன்
மிக்கு உயர் விஞ்சையர் நாட்டிடை விட்டு
திக்கு உறை நாகர் திரண்டு துதிக்கும்
சக்கர நாகம் அதன் புடை சார்ந்தான்

மேல்
$14.68

#68
தவா மறைவாணர் தவம் புரியும் தண்
கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர்
உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும்
திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை

மேல்
$14.69

#69
அஞ்சன மேகமொடு ஆலம் அளாவி
வஞ்சனை கொண்டு வகுத்தன மெய்யான்
குஞ்சிகள் வானினிடை கொடி ஓடி
செம் சுடர் கால்தருகின்ற சிரத்தான்

மேல்
$14.70

#70
குளிர் வரை ஒன்றிய நீள் குகரம் போல்
அளவு இல் பெரும் பகு வாய் அதில் மதியின்
பிளவு எனலா வளையும் பிறழும் தண்
இள நிலவு என்ன இலங்கும் எயிற்றான்

மேல்
$14.71

#71
ஆறு இரு காதம் அகன்று உயர் தோளான்
நூறு இரு காதம் நொடிக்குள் நடப்பான்
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும்
மாறொடு காதி மலைந்திட வல்லான்

மேல்
$14.72

#72
எண் திசையும் திறை கொண்டு இகலோடும்
புண்டரிக பெயர் நாடு பொறித்தோன்
திண் திறல் மாருதி சேய் வருவானை
கண்டனன் அங்கு அழல் கான்றிடு கண்ணான்

மேல்
$14.73

#73
உருத்து முகில் குலம் உருமுடன் மட்க
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு
அரி துவசன்-தனை நோக்கி அரக்கன்
கருத்துடன் நின்று இவை கட்டுரை செய்வான்

மேல்
$14.74

#74
யான் உறை கானகம் என்று இமையோரும்
தானவர்-தாமும் இதற்கிடை சாரார்
மானுடன் நீ இவண் வந்தது சுவையாம்
ஊன் இடவோ இஃது உரைத்திடுக என்றான்

மேல்
$14.75

#75
வென்றி அரக்கன் விளம்புதல் கேளா
குன்றன தோள்கள் குலுங்க நகைத்து ஆங்கு
உன்-தனது ஆவியும் உண்டிட வந்தேன்
என்றனன் முன்னம் இடிம்பனை வென்றோன்

மேல்
*வீமன் புண்டரீகனுடன் பொர, அசரீரி எழுதல்
$14.76

#76
மற்று அது கூற மறத்தொடு அரக்கன்
உற்று எதிர் ஓடி உறுக்கியபோது அ
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டி
பற்றினன் வந்தவன் ஆவி பறிப்பான்

மேல்
$14.77

#77
குன்றொடு குன்று அமர் கூடுவதே போல்
நின்று நெடும் பொழுதாக மலைந்தும்
வன் திறலும் தம வாகுவின் வலியும்
ஒன்றும் இளைத்திலர் ஒத்த உரத்தார்

மேல்
$14.78

#78
எல்லை இலா அமர் இங்கு இவர் இவ்வாறு
ஒல்லையின் மோதி உடன்றிடு போழ்தில்
தொல்லையில் ஓர் முனி சொல்லிய சாபம்
மல்லல் அரூபி வழங்கியது அன்றே

மேல்
$14.79

#79
ஒன்றினும் ஆவி உனக்கு இவன் ஒல்கான்
துன்றிடு தோள் மிசை தோமரம் ஏவி
கொன்றிடுவாய் இனி வாயு_குமாரா
என்றது வானினிடத்து அசரீரி

மேல்
*அசரீரி வாக்குப்படி, வீமன் கதையை
*அவன் தோளில் எறிந்து வீழ்த்துதல்
$14.80

#80
அங்கு அசரீரி அரற்றிய மாற்றம்
சங்கை உறாது சமீரணி கேட்டு
பங்கய நாம நிசாசரபதி-தன்
துங்க வய புயம் மேல் கதை தொட்டான்

மேல்
$14.81

#81
தொட்ட கொடும் கதை தோள் உறும் முன்னர்
பட்டு உளம் நொந்து பதைத்து அடல் வஞ்சன்
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று
இட்ட பெரும் கிரி என்ன விழுந்தான்

மேல்
$14.82

#82
ஏற்றத்தோடு இகலி இவ்வாறு இடை வழி-அதனில் வந்து
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை
பாற்றுக்கும் பகு வாய் பேய்க்கும் பருந்துக்கும் வருந்துகின்ற
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான்

மேல்
*வீமன் அளகாபுரியில், தான் நாடி வந்த மலர்
*இருக்கும் பொழிலைக் காணுதல்
$14.83

#83
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி
புண்டரீகன்-தன் நாடு பொருக்கென நோக்கி அப்பால்
தெண் திரை அளித்த தெய்வ செல்வ மா நிதிகள் ஓங்கும்
அண்டர் மா நகரும் ஒவ்வா அளகை மா நகரம் கண்டான்

மேல்
$14.84

#84
அந்த மா நகரின் தென் பால் அகல் விசும்பு உற நின்று ஓங்கும்
விந்தமாம் என்ன நின்று விளங்கு தோள் வீமசேனன்
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி அந்த
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான்

மேல்
*பொழில் காவலாளர் மானுட நாற்றம் அறிந்து திரண்டு
*எழுந்து, வீமனைச் சூழ்ந்து, அதட்டி வினாவுதல்
$14.85

#85
ஆயிடை குறுகும் எல்லை அ பொழில் துப்பின் காப்போர்
சேயிடை பரந்த மார்பர் சேணிடை கடந்த தோளர்
வாயிடை பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர் வஞ்ச
தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என சுழல் செம் கண்ணர்

மேல்
$14.86

#86
சூழ் இருள் பிழம்பு நஞ்சு தோய்ந்து அன்ன துவக்கர் உன்னின்
நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார்
வாழி மந்தரம் மத்தாக வாசுகி கயிறா மாயோன்
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழ கடைந்த வீரர்

மேல்
$14.87

#87
மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து நாளும்
அறத்தொடு பகைக்கும் நெஞ்சர் பிலத்தினும் அகன்ற வாயர்
புறத்தினில் முகத்தர் மார்பில் புழை முழை மூக்கர் இன்ன
திறத்தினர் குஞ்சி செம் தீ சிரத்தினர் வரத்தின் மிக்கோர்

மேல்
$14.88

#88
கரங்கள் ஆயிரத்தர் நண்ணும் கால்கள் ஆயிரத்தர் குஞ்சி
சிரங்கள் ஆயிரத்தர் பூழை செவிகள் ஆயிரத்தர் வென்றி
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற
வரங்கள் ஆயிரத்தர் மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ

மேல்
$14.89

#89
வை தாரை வாளம் வில் வேல் மழு எழு திகிரி சூலம்
கை தாரைபட கொண்டு என்றும் கண் இமையாது காப்போர்
மை தாரை மாரி ஒப்பார் மானுட நாற்றம் கேட்டு
மொய்த்தார் அ கடவுள் வாச மொய் மலர் சோலை எல்லாம்

மேல்
$14.90

#90
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல
கொண்டலின் குமுறி ஆர்த்து குறுகிய கொடிய நீசர்
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி தனயன்-தன்னை
கண்டனர் சூல பாச காலனை கண்டது அன்னார்

மேல்
$14.91

#91
எற்ற என்பாரும் சூலத்து எறிய என்பாரும் எய்தி
பற்ற என்பாரும் ஆவி பறிக்க என்பாரும் யாக்கை
சுற்ற என்பாரும் சென்னி துணிக்க என்பாரும் ஆகி
உற்றனர் அரக்கர் நூறாயிரர் உருத்து உரைக்கலுற்றார்

மேல்
$14.92

#92
இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும் இந்த
கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார்
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி
சிந்து முன் செப்புக என்னா தெழித்தனர் தீயோர் எல்லாம்

மேல்
*வீமன் அவர் உரை கேட்டுச் சிரித்து, ‘உம்மை எல்லாம்
*கொன்று, மலர் கொய்து போக வந்தேன்’ எனல்
$14.93

#93
அருள் இலா அரக்கர் இவ்வாறு அகங்கரித்து அரற்றும் இந்த
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம் புகலான் ஆகி
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு இலங்க நக்கான்
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான்

மேல்
$14.94

#94
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ
புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன்
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன்
மனிதனோ வான் உளானோ மறத்திரோ வஞ்சர் என்றான்

மேல்
*அரக்கர் வீமனைச் சூழ்ந்து பொர, அவன் அவர்களை
*எல்லாம் தண்டினால் அழித்தல்
$14.95

#95
மா விந்தம் அனைய பொன் தோள் மாருதி வாய்மை கேட்டு
பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி என்று அழன்று பொங்கி
நா இந்த உரை தந்து இன்னும் இருப்பதோ நரனுக்கு என்னா
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் சூழ்ந்தார்

மேல்
$14.96

#96
வானகம் மறைய வீசி வான் படை கலங்கள் வால
சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார்
கானுடை தொடையலானும் காலனுக்கு ஆவி அன்ன
தானுடை தண்டம் ஏந்தி புகுந்தனன் சலிப்பு இலாதான்

மேல்
$14.97

#97
தண்டினால் அவர்கள் விட்ட படை எலாம் தகர்த்து மீள
மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான்
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்ற
கிண்டினான் மூளை சேற்றில் கிடத்தினான் படுத்து மன்னோ

மேல்
$14.98

#98
தாக்கினான் சிலரை தண்டால் தட கையால் சிலரை வானில்
தூக்கினான் கறங்கின் நின்று சுழற்றினான் சிலரை எற்றி
நூக்கினான் சிலரை தாளால் நொறுக்கினான் சிலரை வாளால்
வீக்கினான் சிலரை ஆவி வேறு இட்டான் சிலரை வீமன்

மேல்
$14.99

#99
பிடித்தனன் சிலரை அள்ளி பிசைந்தனன் சிலரை மண்ணில்
அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம்
முடித்தனன் சிலரை போக முகிழ்த்தனன் சிலரை கண்டம்
ஒடித்தனன் சிலரை அஞ்ச உறுக்கினன் சிலரை மன்னோ

மேல்
$14.100

#100
கர கழுந்து-அதனினானும் கன வரை தோளினானும்
வர கொடும் கதையினானும் மராமர பணையினானும்
உர கடும் காலினானும் ஒருக்கினான் உரைப்பது என்னோ
அரக்கரை என்றால் பின்னை விடும்-கொலோ அனுமன் பின்னோன்

மேல்
*பின்னர் எதிர்ந்த நூறாயிர அரக்க வீரரை வீமன்
*வில்லினால் பொருது அழித்தல்
$14.101

#101
இப்படி எதிர்ந்த சேனை யாவையும் இமைக்கும் முன்னம்
துப்புடன் தொலைத்து வாயு_சுதன் நின்ற உறுதி நோக்கி
மை படி வரைகள் போல்வார் வாள் எயிற்று அரக்கர் பின்னும்
கை படை கொண்டு நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார்

மேல்
$14.102

#102
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து
பவர் கொண்ட பனகம் என்ன சூழ்வரும் பரிசு பாரா
கவர் கொண்ட தொடையலானும் கதை ஒழிந்து இலங்கு செம் கை
தவர் கொண்டு நெடு நாண் அண்டம் தகர்தர தழங்க ஆர்த்தான்

மேல்
$14.103

#103
அன்ன நாண் ஓதை எங்கும் அண்டமும் பொதுள தாக்க
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ
துன்னும் வாய் நஞ்சு கக்கி சுழன்று மண் சுமக்கும் கொற்ற
பன்னகாதிபனும் உள்ளம் பதைத்து வெம் படங்கள் சோர்ந்தான்

மேல்
$14.104

#104
உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த
சிரங்களில் தோளில் மார்பில் கண்களில் செருக சென்று
கரன் படை குழாத்து முன்னம் காகுத்தன் கதிர் கொள் கூர் வாய்
சரம் பட தளர்ந்தது என்ன தளர்ந்தது அ தளர்வு இல் சேனை

மேல்
$14.105

#105
சக்கரம் சூலம் பாசம் தண்டம் வேல் கப்பணம் வாள்
முற்கரம் கணையம் விட்டேறு எழு கொழு முசுண்டி குந்தம்
எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி
அ கணம்-தன்னில் மீண்டும் அகங்கரித்து ஆர்த்த காலை

மேல்
$14.106

#106
அ படை தொகைகள் எல்லாம் அறுத்துஅறுத்து அவர்கள் தம்தம்
மெய் பட சரங்கள் சிந்தி சிரங்கள் வெவ்வேறது ஆக்கி
இப்படிக்கு அரக்கர் சேனை யாவையும் துணித்து மீண்டும்
செப்படிப்பவரின் நின்று சிரித்தனன் சிங்கம் போல்வான்

மேல்
*காவலாளர் குபேரனிடம் ஓடி நிகழ்ந்தன தெரிவிக்க, அவன்
*வெகுண்டு, வீமனைக் கட்டிக் கொணருமாறு
*சங்கோடணனை ஏவுதல்
$14.107

#107
அந்த வய படை அவ்வாறு ஆதல் கண்டு
கந்த மலர் பொழில் காக்கும் காவலாளர்
புந்தி மயக்கு உற நொந்து புகுந்த எல்லாம்
முந்தி இயக்கர் பிரானுக்கு ஓடி மொழிந்தார்

மேல்
$14.108

#108
எம் பெருமான் இது கேட்டி என்று இறைஞ்சி
வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து
பம்பிய சேனையிடத்து ஏழ் மதமும் பாயும்
உம்பலின் வாவி புகுந்து உழக்குகின்றான்

மேல்
$14.109

#109
என்று அவர் வாய் கை புதைத்து இசைத்தல் கேட்டு
குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு
கன்றிய சிந்தையன் அங்கி கால் செம் கண்ணான்
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து உரைத்தான்

மேல்
$14.110

#110
தன் துணை நின்ற சங்கோடணனை நோக்கி
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்-தன்னை
சென்று அவன் ஆவி செகுத்தல் செய்யாது இன்னே
துன்று புயங்கள் துவக்கி எய்த சொன்னான்

மேல்
*சங்கோடணன் சேனைகளுடன் சென்று வீமனை வளைத்தல்
$14.111

#111
அந்த இயக்கர் பிரானும் அ கணத்தில்
வந்து நிதி கிழவன்-தன் பாதம் மன்னி
துந்துபி கொட்ட அளப்பு இல் சேனை சூழ
உந்தி இமைப்பில் மலர் தண் சோலை உற்றான்

மேல்
$14.112

#112
மன்னு குருக்கள் குலத்து மன்னர்_மன்னன்
தன்னை இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர்
துன்னு படை கடலோடும் பொங்கி சூழ்ந்தார்
மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார்

மேல்
$14.113

#113
மான அரக்கர் குலத்தை வானில் ஏற்றி
ஊனொடு இரத்தம் உகுக்கும் சோலையூடே
தானை வளைத்திட நின்ற சாப வீரன்
யானை இனங்கள் வளைக்கும் யாளி போன்றான்

மேல்
*வீமன் சரங்களைப் போக்கி, சேனைகளை நிலைகெட்டோடச்
*செய்ய, சங்கோடணனும் புறங்கொடுத்தல்
$14.114

#114
விண்ணில் இயக்கர் படை கலங்கள் வீசி
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில்
வண்ண வரி சிலை கோலி வாயு_மைந்தன்
துண்ணென உட்க வடி சரங்கள் தொட்டான்

மேல்
$14.115

#115
தொட்ட சரங்கள் துளைத்து மார்பும் தோளும்
முட்ட விசும்பினது எல்லை எங்கும் மூட
பட்டது ஒழிந்து படாத சேனை எல்லாம்
கெட்டன பட்டது உரைக்க உண்டோ கேட்கின்

மேல்
$14.116

#116
மன் அளகாபதி சேனை நாதன் மார்பில்
தன் அடையாளம் உற தண்டாலே தாக்க
மின் இடை நாகம் வெருக்கொண்டு என்ன மீண்டான்
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்-தான்

மேல்
*’வீமனுடன் சமாதானம் செய்யவேண்டும்’
*எனச் சங்கோடணன் குபேரனுக்குக் கூறுதல்
$14.117

#117
கருத்தொடு சென்று அளகேசன் பாத கமலம்
சிரத்தினில் வைத்து இவை நின்று செப்பலுற்றான்
உருத்திரன் மானுட உருவம் கொண்டது அன்றேல்
வரத்து இவன் மானுடன் அல்லன் மன்ன என்றே

மேல்
$14.118

#118
பண்புடன் இ கணம் வேண்டும் நிதிகள் பலவும்
நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின்
விண் புகும் இ புரம் வேந்த என்றான் மெய்யில்
புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான்

மேல்
*வீமன் விருப்பம் அறிய, குபேரன் தன் மகன்
*உருத்திரசேனனை அனுப்புதல்
$14.119

#119
கோதில் இயக்கன் யாவும் கூற கேட்டு
தாதை உருத்திரசேனன் தன்னை நோக்கி
மாதர் மலர் பொழிலூடு வந்த மனித்தன்
ஏதில் அருத்தியன் என்ன கேட்டி என்றான்

மேல்
*உருத்திரசேனன் வீமனைக் கண்டு வினாவி, அவன்
*வந்த காரியம் அறிந்துகொள்ளுதல்
$14.120

#120
தந்தை உரைத்தருள் வாய்மை தலைமேல்கொள்ளா
மைந்தனும் அ பொழிலூடு சென்று மன்னி
சிந்தி அரக்கர் சிரங்கள் குன்றம் செய்து
கந்தனின் நிற்கும் மறத்தினானை கண்டான்

மேல்
$14.121

#121
கண்டு மருத்து அருள் காளை-தன்னை நோக்கி
வண்டும் இடை பயிலாத காவில் வந்து
மிண்டும் அரக்கர் குலத்தை வீணே ஆவி
கொண்டு படுத்தனை யார் நீ கூறுக என்றான்

மேல்
$14.122

#122
நின் அளகாபதி மைந்தர் சாபம் நீக்க
முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு
இன் அருள் மைத்துனன் மண்ணில் யாரும் போற்றும்
மன்னவன் வீமன் மருத்தின் மைந்தன் என்றான்

மேல்
$14.123

#123
மாயவன் அற்புதன் நாதன் கண்ணன் வையம்
தாயவன் மைத்துனன் ஆகின் ஐய தனி நீ
ஏய வனத்தினில் வந்தது என்-கொல் என்றான்
தூயவன் உற்றன யாவும் தோன்ற சொன்னான்

மேல்
*உருத்திரசேனன் வீமன் விரும்பிய மலரை வழங்கி,
*தந்தையிடம் சென்று, செய்தி தெரிவித்து இருத்தல்
$14.124

#124
மற்று அவன் அ உரை கூற மகிழ்வொடு அம் தண்
பொன்தரு நண்பின் வழங்கி போக என்று அருளி
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து ஆங்கு
உற்றது தாதை-தனக்கு உரைத்து இருந்தான்

மேல்
*மலர் பெற்ற வீமன் பொய்கையில் நீராடி, இளைப்பாறுதல்
$14.125

#125
அண்ணல் தரு பெற்ற பின் அந்த வய மீளி அ காவினில்
தண் நித்தில பொய்கை படிவுற்று இன் அமுது அன்ன தண்ணீர் குடித்து
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு இருந்து அங்கு இளைப்பாறினான்
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான வடி வாளினான்

மேல்
*தருமன் வீமனைக் காணாது, திரௌபதியிடம் வினவி,
*நிகழ்ந்தன அறிதல்
$14.126

#126
இவ்வாறு இவன் செய்கை இவன் வந்தது அறியாமல் எழில் கூர் வனத்து
அவ்வாறு பயில்கின்ற அருள்வாரி-தான் உற்ற அது கூறுவாம்
கை வார் கதை காளையை கண்ணுற சூழல் காணாது முன்
செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான்

மேல்
$14.127

#127
வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும்
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும்
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர் மீது தனி சென்றதும்
கான் நின்ற குழலாளும் மன்னற்கு முன் கட்டுரைத்தாள் அரோ

மேல்
*விசயன் பிரிவால் உளம் நொந்திருந்த தருமன், வீமன்
*பிரிவு கேட்டு மேலும் வருந்துதல்
$14.128

#128
கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன்
உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான்
மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான்
தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான்

மேல்
*கடோற்கசனைத் தருமன் நினைந்த அளவில், அவன் வந்து
*தருமனை வணங்க, வீமனைத் தேடி அவனுடன்
*அளகை நோக்கிப் புறப்படுதல்
$14.129

#129
வாளி பரி தேர் மன் இவ்வாறு துயர் எய்தி மனனம் செய
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல்
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன்
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான்

மேல்
$14.130

#130
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன்
நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான்
உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட
சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான்

மேல்
$14.131

#131
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர்
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா
வெம்புற்ற பைம் கானினிடை மின்னும் இளையோரும் உடன் மேவவே
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான்

மேல்
$14.132

#132
கர கும்ப கம்ப கடா யானை மன்னன் கருத்தோடு சென்று
அரக்கன் தடம் தேரில் அவனோடும் நீடு அந்தரத்து ஏகினான்
பரக்கும் பெரும் புண்யமும் பாவமும் தா இல் பகிரண்டமும்
புரக்கும் பரஞ்சோதியும் பொங்கும் மா மாயையும் போலவே

மேல்
*கடோற்கசன் தேரில் வான் வழியாக நாலு நாழிகைக்குள்
*வீமன் இருந்த சோலையைத் தருமன் அடைதல்
$14.133

#133
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர்
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர்
ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன்
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே

மேல்
*தருமனும் கடோற்கசனும் வீமனைக் கண்டு இன்புறுதல்
$14.134

#134
ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம்
சேனை குழாம் நூறி அதனூடு பயில் வாயு சிறுவன்-தனை
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான்
ஏனை திரு தாதையை கண்டு தேர் நின்று இழிந்து இன்புறா

மேல்
*மலர் கொண்டு பாதம் வணங்கிய வீமனைத் தருமன் தன்
*ஏவலின்றி வந்தமை குறித்துச் சினத்தல்
$14.135

#135
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும்
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும் இவை கூறுவான்

மேல்
$14.136

#136
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ
மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான்

மேல்
*சினம் ஆறி, தருமன் வீமனுடன் கடோற்கசன் தேரில் ஏறி,
*தம்பியர் இருக்கும் வனத்தை அடைதல்
$14.137

#137
என்று இந்த உரை கூறி முனிவு ஆறி இறையோனும் இகலோனுடன்
சென்று அம் தண் மலர் வாவி படிவுற்று வாச திரு தார் புனைந்து
அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை கானினிடை மேவினான்

மேல்
*உரோமச முனிவனை வணங்கி, திரௌபதி மகிழ மலர் அளித்து,
*கடோற்கசனுக்கு விடை கொடுத்து அனுப்புதல்
$14.138

#138
மேவி பெரும் தெய்வமுனி பாத மலர் சென்னி மிசை வைத்து மென்
காவி கயல் கண் இணை சே இதழ் பாவை களி கூரவே
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல்
ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று அளித்தான் அரோ

மேல்
*திரௌபதியும் தருமன் முதலியோரும் வனத்தில் வாழ்ந்த வகை
$14.139

#139
மின் புரை மருங்குல் மின்னும் வேந்தரும் அந்த கானில்
அன்புடை முனிவன் கூற அவன் மலர் பாதம் போற்றி
துன்பமும் துனியும் மாறி நாள்-தொறும் தோகை_பாகன்
தன் பெரும் கதையும் கேட்டு தங்கினர் என்ப மாதோ

மேல்

15. சடாசுரன் வதைச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$15.1

#1
அழுதும் வாள் முறுவல் அரும்பியும் களித்தும் ஆடியும் பாடியும் மகிழ்ந்தும்
தொழுதும் ஆதரித்தும் விழுந்தும் மேல் எழுந்தும் துதித்திட தன் பதம் தருவான்
முழுதுமாய் ஓங்கும் முச்சுடர் ஆகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய்
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே

மேல்
*முனிவர் விலங்குகளினால் துன்புற்று, தருமனிடம் அபயம் புக,
*அவன் அவர்களது குறை போக்க உடன்படுதல்

#2
இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று இருந்த அ நாளில்
அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அரும் தவ முனிவரர் பலரும்
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால்

மேல்
$15.3

#3
அரும் தவ முனிவர் எனை பலர் இவ்வாறு அபயம் என்று அழுங்கு சொல் கேட்டு
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன
பொருந்திய கொடிய விலங்கினால் தமக்கு புகுந்துள யாவையும் புகன்றே
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான்

மேல்
*முனிவர் துயர் தீர்க்க வீமனை அனுப்பி, தருமன் இருந்த
*பொழுது, சடாசுரன் அங்கு வந்து வஞ்சனை புரிதல்
$15.4

#4
மறத்துடன் தொழுது வணங்கி முன் நின்ற வாயுவின் மதலையை நோக்கி
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ

மேல்
*சடாசுரனின் தோற்றம்
$15.5

#5
தோள் இரண்டினும் நாள்-தொறும் இரண்டு அம் தண் சுரும்பினை விரும்பினன் சுமந்து
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான்
கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான்

மேல்
$15.6

#6
முருக்கின் நாள்மலரும் கறுத்திட சிவக்கும் மொய் அழல் பெய் செழும் கண்ணன்
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச
திருக்கினால் அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன் தீமையே புரிந்து
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன் எனும் பெயர் சழக்கன்

மேல்
*சடாசுரன் திரௌபதியை வஞ்சமாய் வானத்தில் கொண்டு
*செல்ல, நகுல சகாதேவர் வில்லேந்தி அவனைத் தொடர்தல்
$15.7

#7
அந்தணர் வடிவம் கொண்டு இலங்கையில் வாழ் ஆதி வாள் அரக்கனை போல
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி
பைம்_தொடி-தனை கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழி உணராதான்

மேல்
$15.8

#8
அபயம் என்று அவள் அந்தரத்தின் மீது அரற்றும் அ உரை கேட்டு மாத்திரி-தன்
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி
இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார்

மேல்
*நகுல சகாதேவர் நிருதனைப் பழித்துக் கூறி, சரமாரி ஏவ, அரக்கனும் கனன்று
*எதிர்கின்ற எல்லையில், மீண்டு வரும் வீமன் காணுதல்
$15.9

#9
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக
பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய்
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா

மேல்
$15.10

#10
என்று இவ்வாறு உரைத்து சரத்தின் மா மாரி இருவரும் விரைவுடன் ஏவ
கன்றி வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து கண் சிவந்து உருத்து எழும் எல்லை
ஒன்றி வாழ் மறையோர் அரும் துயர் ஒழித்து ஆங்கு ஒரு நொடிப்பொழுதினில் மீளும்
வென்றி வாள் வீமன் உற்றதும் நிருதன் வெகுள்வதும் விசும்பிடை கண்டான்

மேல்
*வீமன் சினம் மிக்கு, சடாசுரனை நெருங்கி அடர்த்தல்
$15.11

#11
கண்டனன் இரண்டு கண்களும் கருத்தும் கனன்று செம் தீ சுடர் கால
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன்

மேல்
$15.12

#12
பகன் விறல் இடிம்பன் பண்பு இல் புண்டரீகன் இவர் உயிர் பறித்து அளகேசன்
நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா

மேல்
*அழன்ற அசுரன் திரௌபதியை விடுத்து, வீமனுடன் பொருது அழிதல்
$15.13

#13
நெடும் பணை பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை நேர்ந்தது அங்கு அதனை
பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில்
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று
படும் பணை குன்றம் ஒன்று வேரோடும் பறித்து அவன் மேல் பட எறிந்தான்

மேல்
$15.14

#14
விட்ட குன்றினை தன் மேல் படாவண்ணம் விசும்பிடை பொடிபட கதையால்
தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி
கட்டினன் குறங்கை குறங்கினால் வீசி கம்பம் உற்று அகிலமும் கலங்க
கிட்டினன் தலத்தின் மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட மேற்பட விழுந்தான்

மேல்
$15.15

#15
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு
பொன்னின் மால்வரை ஓர் அரக்கனை தானும் புவிப்படுத்து அரைப்பதே போல
கன்னம் வாய் நெரிய கரங்களால் மலக்கி கழுத்தையும் புறத்தினில் திருப்பி
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும் சுளிதர தாளினால் துகைத்தான்

மேல்
$15.16

#16
விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து வெகுண்டு இவன்-தனை தளி மீண்டும்
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன்
அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின்
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால்

மேல்
$15.17

#17
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன்
நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான்
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான்

மேல்
$15.18

#18
முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும் முறைமுறை ஆக
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து
கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப கரம் கரத்தொடு நனி பிணங்க
ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர்

மேல்
$15.19

#19
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால்
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு அவன்-தன் அவயவம் யாவையும் ஒன்றா
சுருக்கி அந்தரத்தில் சுழற்றினன் எறிந்தான் தொடு கழல் இராகவன் தம்பி
குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே

மேல்
$15.20

#20
எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு அவ்வளவும் போய்
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான்
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால் ஆர்-கொலோ படாதன படாதார்

மேல்
*திரௌபதியையும் தம்பியரையும் கொண்டு, தமது
*இருப்பிடத்தை வீமன் அடைதல்
$15.21

#21
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள்
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள்

மேல்
$15.22

#22
அடாது செய் சடாசுரனது ஆவியையும் அம் பொன்
படா முலைகள் தாமுடைய பைம்_தொடியையும் போய்
தடா அமர் விடாதுடைய தம்பியரையும் கொண்டு
இடா விறல் கொள் மாருதி இருக்கும் வனம் உற்றான்

மேல்
*வீமன் தருமனைத் தொழுது நிகழ்ந்தன கூற, தருமன்
*எல்லோருடனும் பதரிகாச்சிரமத்தை அடைதல்
$15.23

#23
உற்றபடி தம்முன் இரு தாள் தொழுது உரைத்தான்
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும்
கொற்றம் மிகு தம்பியரொடும் குழுமி அன்றே
நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி

மேல்
*அங்குச் சில நாள் தங்கிய பின், அஷ்டகோண முனிவன்
*வைகும் வனத்தை அடைதல்
$15.24

#24
அங்கு அவன் மலர் பதம் வணங்கி அருள் பெற்று
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும்
தங்கினர்கள் சிற்சில் பகல் தங்கிய பின் அப்பால்
சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார்

மேல்
$15.25

#25
ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டு
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான்
மாணுடை மலர் பதம் வணங்கினர் துதித்தார்
தாணு அனையானும் அவர்-தம்மை எதிர்கொண்டான்

மேல்
$15.26

#26
அப்பொழுது வானுலகம் அதனினிடை-நின்றும்
மை பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான்
செப்ப அரிய ஐவர்களும் தேவியுடனே அ
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர் உறைந்தார்

மேல்
$15.27

#27
அன்பொடு ஒரு நாள் என அனந்த நெடு நாள் அங்கு
இன்பமொடு இருந்தனர்கள் எ கதையும் கேட்டு ஆண்டு
ஒன்பது கழித்தனர்கள் இ வகை ஒருங்கே
பின்பு அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம்

மேல்

16. நச்சுப் பொய்கைச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$16.1

#1
சேய பங்கய சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய்
ஆயர் மங்கையர் இடஇட அமுது செய்து ஆடிய திருக்கூத்தும்
நேயமும் குறு முறுவலும் புரிந்து பார்த்தருளிய நெடும் கண்ணும்
மாயவன் திருவடிவமும் அழகும் என் மனத்தை விட்டு அகலாவே

மேல்
*விண்டுசிந்த முனிவன் வாழும் காட்டை அடைந்து,
*பாண்டவர் இனிது இருத்தல்
$16.2

#2
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி
கொண்டு சிந்தனை அற இருந்தனர் குல குந்தி முன் பயந்தோரே

மேல்
*பாண்டவரைக் கொல்லுதற்குத் துரியோதனன் முதலிய
*நால்வரும் சூழ்ச்சி செய்தல்
$16.3

#3
ஆண்டு மற்று அவர் உறைதரு காலையில் அரவ வெம் கொடியோனும்
மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி
மீண்டும் இ புவி வேண்டுவர் இருக்கின் நாம் விரகுடன் முற்கோலி
பாண்டு புத்திரர் கோறும் என்று அருள் இலா பாவியர் துணிந்தாரே

மேல்
*துரியோதனன் ஒரு முனிவனை அனுப்பி, காளமாமுனியை
*வரவழைத்து, அவனை வணங்கி, ‘என்னை ஈடேற்றவேண்டும்’ எனல்
$16.4

#4
காளமாமுனி-தனை கொடுவருக என கலந்த நீற்று ஒளி கூரும்
தூள மா முனி ஒருவனோடு அறிவு இலா சுயோதனன் உரைசெய்ய
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய்
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா

மேல்
$16.5

#5
ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம்
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது
இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற
திருவுளத்து அருள்செய்குக என அவன் சேவடிகளில் வீழ்ந்தான்

மேல்
*’அழைத்தது ஏன்?’ என்ற முனிவனுக்குத் துரியோதனனது
*குறிப்பால், சகுனி, ‘இவன் பகை களைக!’ எனல்
$16.6

#6
நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி என்னை
என்-கொலாம் இவண் அழைத்தது இன்று என அவன் இருந்த மாமனை நோக்க
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி
மின் குலாவரு வேணியாய் நீ இவன் வெம் பகை களைக என்றான்

மேல்
*’பாண்டவரை அழிக்க வஞ்சக வேள்வி இயற்ற வேண்டும்’ என,
*முனிவன் வருந்தி, அதன் விளைவு பற்றிக் கூறுதல்
$16.7

#7
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அ கொடிய பாவியும் ஐவர்
விடுத்த பார் இனம் வேண்டுவர் இருக்கின் அ வேந்தரை விண் ஏற்றற்கு
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதியாயின் இ எழு பாரும்
கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான்

மேல்
$16.8

#8
கன்னன் வாசகம் கேட்டபோது இரண்டு தன் கன்னமும் நெருப்புற்றது
என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான்
பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி

மேல்
$16.9

#9
எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை
மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும்
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய்
விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ வீவு இல்லார்

மேல்
$16.10

#10
தொடங்கி யான் புரி தீவினை என்னையே சுடுவது அல்லது கொற்ற
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான்
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான்

மேல்
*யாவரும் வணங்கி வேண்டவே, முனிவன் இசைந்து, வேள்வி
*இயற்ற மலைப் புறத்தைச் சார்தல்
$16.11

#11
அசைவு இலா மனத்து அரும் தவ முனிவனை அனைவரும் பணிந்து ஏத்தி
இசையுமாறு செய்து ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ்
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான்

மேல்
$16.12

#12
போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை மிடை நெடும் கள்ளி
கானமானது புகுந்து பாரிடங்களும் கழுகு இனங்களும் துன்றி
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து எரி வெயில் கழை முத்தம்
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான்

மேல்
*முனிவன் ஓமம் புரிய, அதினின்றும் எழுந்த பூதத்தைக்
*கண்டு முனிவன் நடுங்குதல்
$16.13

#13
அண்டர் யாவரும் மானுட முனிவரும் அகலிடந்தனில் மற்றும்
கண்ட கண்டவர் யாவரும் வெருவர கடும் பலி பல நல்கி
உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம
குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடும் தருக்களில் சேர்த்தான்

மேல்
$16.14

#14
மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்-தம்மில்
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல்
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து
ஒக்க மந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே

மேல்
$16.15

#15
தன்தன் இச்சையின் அன்றி ஏழ் கடலுடை தராதலம்-தனை ஆளும்
மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம்
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார்
குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான்

மேல்
*பாண்டவரைத் தப்புவிக்க அறக்கடவுள் அந்தணச்
*சிறுவனாய் வந்து, மான் கொண்டு ஓடிய தன் மான் தோலை
*மீட்டுத் தர வேண்ட, அவர்கள் மானைத் தொடர்தல்
$16.16

#16
இப்பால் இவ்வாறு ஓமம் செய்து இவன் இ பூதம் இனிது எழுப்ப
அப்பால் இருந்த வன சரிதர் ஐவர்க்கு அமைந்தவாறு உரைப்பாம்
முப்பாலினுக்கும் முதல் பாலாய் மும்மை புவனங்களும் காக்கும்
தப்பா வாய்மை அற கடவுள் அறிந்தான் எண்ணம் தப்புவிப்பான்

மேல்
$16.17

#17
தன் மைந்தனும் அ தம்பியரும் சரியா நின்ற தபோவனத்து
நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை
வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான்
தொல் மைந்தனை போல் ஓர் உழைகொண்டு ஓடிற்று என்னால் சொல உண்டோ

மேல்
$16.18

#18
மறை வாய் சிறுவன் கலை தோலை மான் கொண்டு ஓடி வான் இடையில்
பொறை-வாய் புகுந்தது அபயம் என புகுந்து ஆங்கு அமுது புலம்புதலும்
நறை வாய் தொடையல் அறன் மகனும் இளைய வீரர் நால்வரும் தம்
துறை-வாய் சிலையோடு அம்பு ஏந்தி தொடர்ந்தார் அதனை சூழ் புலி போல்

மேல்
*மானைத் தொடர்ந்த பாண்டவர், அதனைப் பற்ற இயலாது,
*மாயம் என்று ஆசை ஒழிதல்
$16.19

#19
அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல்
மிகப்பட்டு ஓடும் தோன்றாமல் வெளிக்கே ஒளிக்கும் விழி இணைக்கு
முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும்
தகைப்பட்டு ஒழிந்தார் அதில் ஆசை ஒழிந்தார் இந்த்ரசாலம் எனா

மேல்
$16.20

#20
தடம் கானகமும் வானகமும் சாரல் பொருப்பும் தாழ் வரையும்
மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று
தொடங்கா இவரை இளைப்பித்த தொழிலை சொல்லின் ஒரு நாவுக்கு
அடங்காது இன்னும் ஆயிரம் உண்டானால் அதற்கும் அடங்காதே

மேல்
*அறக்கடவுள் கானில் நச்சுப் பொய்கையாய் விளங்குதல்
$16.21

#21
கான் ஈது இவர்க்கு தலை தெரியா கானம் கருத்து மிக கலங்கி
பானீயத்துக்கு ஐவரும் மெய் பதையாநிற்பர் என அறிந்து
தூ நீர் நச்சு சுனையாய் அ சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய்
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே

மேல்
*தருமன் நீர் கொணருமாறு சகாதேவனைப் பணிக்க, அவன் செல்லுதல்
$16.22

#22
தருமனும் தம்பிமாரும் தாலுவும் புலர்ந்து தாகத்து
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண்
எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி இன்னே
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான்

மேல்
*சகாதேவன் நச்சு நீரைப் பருகி இறந்து விழுந்தது தெரியாது,
*தருமன் ஏனையோரையும் ஒருவர் பின் ஒருவராக அனுப்புதல்
$16.23

#23
அ கணத்தினில் சாதேவன் அடவிகள்-தோறும் தேடி
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா
புக்கனன் பருகலுற்றான் பொலிவு அற புலர்ந்த நாவான்

மேல்
$16.24

#24
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி
விழுந்தமை அறிவுறாது மீளவும் நகுலன்-தன்னை
அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான்
எழும் படை விசயன்-தன்னை ஏவினன் அவனும் போனான்

மேல்
$16.25

#25
தம்பியர் கிடந்த தன்மை கண்டும் அ தலைவன் மேன்மேல்
வெம்புறு கொடிய தாக மிகுதியால் விரைந்து வாரி
பைம் புனல் அருந்தி அவ்வாறு இறந்தனன் பரிதாபத்தோடு
எம்பியர் என் செய்தார் என்று இறைவனும் இனைந்து சோர்ந்தான்

மேல்
*இறுதியில் சென்ற வீமன் நச்சு நீரால் நேர்ந்த விளைவு
*என்று எண்ணி வருந்தி, தருமன் அறியும் பொருட்டு,
*மணலில் எழுதி, தானும் நீரைப் பருகி, உயிர் துறத்தல்
$16.26

#26
வீமன் அங்கு அவனை தேற்றி மெலிவுறு சோகத்தோடும்
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி
சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை
ஆம் என கருதாது ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான்

மேல்
$16.27

#27
பின்னவர் மூவர் சேர பிணங்களாய் கிடத்தல் கண்ட
மன்னவன்-தனக்கு தாகம் மாறுமோ வளர்ந்து மேன்மேல்
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ முன்
சொன்னவன்-தானும் இந்த சோகமோ தொகுக்க மாட்டான்

மேல்
$16.28

#28
குசையுடை புரவி திண் தேர் குரக்கு வெம் பதாகையானை
அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர்
விசையனை தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே

மேல்
$16.29

#29
நல் துணை சிறுவனோடு நகுலனை நோக்கி அந்தோ
என் துணை இழந்தேன் என்னும் என் செய்வது இனி நான் என்னும்
முன் துணைவனும் அ கானில் முடிந்திடும் மொழிய வேறு ஓர்
பின் துணை காண்கலாதேன் யாரொடு பேசுவேனே

மேல்
$16.30

#30
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால்
அணிதரு நச்சு தோயம் அருந்தவும் கூடும் என்னா
பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால்
துணிவுற எழுதி அந்த தோயமே தானும் துய்த்தான்

மேல்
$16.31

#31
பொருப்பினும் வலிய கொற்ற புயமுடை வீமன் என்றால்
அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ ஆலம் என்னும்
உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான்
நெருப்பினும் சொல்லின் நா வேம் நினைப்பினும் நெஞ்சம் வேமால்

மேல்
*தம்பியர் வரவு காணாது, சோகமும் தாகமும் விஞ்ச,
*தருமன் மயங்கி விழுதல்
$16.32

#32
ஆர் உயிர் பொன்றும் காலை அமுதமும் விடமாம் என்று
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அற பலித்த காலை
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்-தம்மோடு
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான்

மேல்
$16.33

#33
கட்புலனாக வேறு ஓர் யோனியும் காண்கலாத
வெட்புலம் தன்னில் சோகம் மிஞ்சவே தாகம் விஞ்சி
உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான்
நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே

மேல்
*இங்கு இவ்வாறு இவர் இருக்க, ஐவரைக் கொல்லுமாறு,
*ஓமத்தில் தோன்றிய பூதத்தை முனிவன் ஏவுதல்
$16.34

#34
ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில் எரி செய் ஓமத்து
ஆங்கு அவண் எழுந்த பூதம் அம் முனி-தன்னை நோக்கி
பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள் என்ன நெஞ்சில்
தீங்கு இலா முனியும் பூத அரசுடன் செப்புவானே

மேல்
$16.35

#35
நின்றிடாது இமைப்பில் குந்தி மைந்தராய் நெடிய கானில்
துன்றிடா வைகும் வேந்தும் துணைவரும் இருந்த சூழல்
சென்றிடா ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலை சேர
கொன்றிடா வருதி என்று கூறிய உறுதி கேளா

மேல்
*’பாண்டவர் இன்று எனக்கு இலக்காகாவிடின், நின்னையே
*கொல்வேன்’ என்று சொல்லி, பூதம் ஏகுதல்
$16.36

#36
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அ பெரும் பூதம் சாதி
செம்பொனின் ஒளிரும் மேனி தெய்வ மா முனியை நோக்கி
வெம்பு கான் உறைவோர் இன்று என் விழிக்கு இலக்கு அல்லரானால்
எம்பிரான் நினையே கொல்வன் என தொழுது ஏகிற்று அன்றே

மேல்
*ஐவரின் நிலை கண்டு, பூதம் வருந்துதல்
$16.37

#37
காட்டுறு கோடை வெப்பம் களைகுவான் கரிய மேகம்
மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி
காட்டுறை வாழ்க்கையானை கண்ணுற கண்டது அன்றே

மேல்
$16.38

#38
அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில் அறனால் வந்த
மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி
சந்தன தருவில் சார்ந்து சாய் முடி தலையன் ஆகி
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான்

மேல்
$16.39

#39
சிறந்த மெய் நிழல் போல் சூழும் துணைவரும் சேர விட்டு
துறந்தனர் போலும் யாண்டும் துப்பு இலா வெப்பம்-தன்னால்
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி
நிறைந்த நீர் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா

மேல்
$16.40

#40
பச்செனும் புனலால் மிக்க பங்கய சுனையும் கொல்லும்
நச்சு வெம் சுனையே போலும் நால்வரும் சேர மாண்டார்
இ சுனை அருந்தி போலும் என் நினைந்து ஏது செய்தார்
நிச்சயம் கொடிது கெட்டேன் இந்த நிட்டூரம் என்னோ

மேல்
*பூதம் முனிவனிடம் மீண்டு வந்து, தான் முன் உரைத்தபடி
*அவனைச் சூலத்தால் எறிந்து கொல்லுதல்
$16.41

#41
காவலன் வார்த்தை கேட்டு காளமாமுனிவன் என்னும்
நாவலன் ஓம தீயில் நம்மை உற்பவித்து விட்டான்
மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர் இந்த பாவம்
கேவலம் அல்ல என்று கிளர் சினம் மூண்டு மீண்டே

மேல்
$16.42

#42
காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள் நீ கலக்கம் எய்தி
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு
சீலம் கொள் வாய்மையாய் செம் தீ எழு கானில் சில் நீர்
ஆலம் கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளி செய்தாய்

மேல்
$16.43

#43
பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்கு
தாண்டவ நடனம் செய்ய தக்கது ஓர் தழல் வெம் கானில்
பாண்டவர்-தம்மை கொல்ல பணித்தனை ஒருகால் ஆவி
மாண்டவர் பின்னும் பின்னும் மாள்வரோ மதி இலாதாய்

மேல்
$16.44

#44
நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை என்று கோப
தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி
மூஇலை சூலம்-தன்னால் முனிதலை துணிந்து வீழ
ஏவலில் பழுது இல் பூதம் இவனையே எறிந்தது அன்றே

மேல்
$16.45

#45
எறிந்து அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க கானில்
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க தம்மில்
பிறிந்தவர் மீண்டும் ஆவி பெற்றவா பேச கேண்மோ

மேல்
*தருமன் உணர்வு பெற்று, தம்பியர் சென்ற சுவடு நோக்கிச்
*சென்று, பொய்கைக்கரையில் துணைவரைக் காணுதல்
$16.46

#46
மூச்சு அற புலர்ந்து உயங்கிய முரச வெம் கொடியோன்
மா சினை தடம் சந்தன மகீருக நிழலில்
வீச்சுற பயில் தென்றலால் மெய் உயிர் எய்தி
நா சுவை படு ஞான நல் மந்திரம் நவிலா

மேல்
$16.47

#47
தனை பயந்த நல் தரும தேவதை திருவருளால்
வினை பயன்களால் உறு துயர் யாவையும் வீட்டி
சுனை பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற
நினைப்பும் எய்தி அ தம்பியர் தம்மையும் நினைந்தான்

மேல்
$16.48

#48
ஆன தன் மன வலியுடன் ஆண்டு நின்று எழுந்து
கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை
போன தம்பியர் சேவடி சுவட்டினில் போய் அ
தூ நிற புனல் உண்டு வீழ் துணைவரை கண்டான்

மேல்
*தம்பியர் இறந்தது எதனால் என்று எண்ணிய தருமன்,
*மணலில் வீமன் எழுதிய குறிப்புக் கண்டு, தானும்
*அந் நீரைப் பருகச் செல்லுதல்
$16.49

#49
ஊறு இலாமை கண்டு உடற்றினர் இல் என உணர்ந்து
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார்
சேறு இலாத வெம் சுரத்திடை செழும் புனல் நுகரும்
பேறு இலாமையின் இறந்தனர் போலும் இ பெரியோர்

மேல்
$16.50

#50
அண்டகோளகை அனையது ஓர் ஆதபத்திரத்தால்
மண்டலங்கள் ஈர்_ஒன்பதும் புரந்திட வல்லான்
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை
கண்டு நஞ்சம் இ கயத்து அறல் என்பது கண்டான்

மேல்
$16.51

#51
வெம் சமம் செய வருவர்-கொல் மீண்டும் என்று அருள் இல்
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து
நஞ்ச நீர் கொடு தானும் தன் நாவினை நனைக்கும்
நெஞ்சன் ஆகி அ நிறை புனல் கயத்திடை நேர்ந்தான்

மேல்
*அப்பொழுது, அசரீரி அவனைத் தடுத்து மொழிதல்
$16.52

#52
திருந்து நல் வரை செம் கையால் அள்ளிய நீரை
அருந்தும் அ வயின் அகல் விசும்பிடை அசரீரி
கரும் தடம் புனல் நஞ்சு இது நுகர்வது கருதேல்
விருந்தர் நால்வரும் என் மொழி கேட்டிலர் வெய்யோர்

மேல்
$16.53

#53
உன்னை யான் வினவு உரை-தனக்கு உத்தரம் உரைத்து
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை
அன்னை போல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே
என்னையோ பெரும் தாகம் விஞ்சிடினும் இன்று எனவே

மேல்
$16.54

#54
பெரு நலம் பெறு மகனை அ பேர் அற கடவுள்
இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம்
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி
பொருவு இலா மகன் புகலுவ புகறி நீ என்றான்

மேல்
*தருமனும் தரும தேவதையும் உரையாடல்
$16.55

#55
சொல்லும் நூல்களில் பெரியது ஏது அரிய மெய் சுருதி
இல்லறத்தினுக்கு உரியது ஏது எண்ணுடை இல்லாள்
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி
நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே

மேல்
$16.56

#56
முனி குலம் தொழு கடவுள் யார் மொய் துழாய் முகுந்தன்
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண்
தனம் மிகுந்தவர்க்கு ஏது அரண் தகை பெறு தானம்
இனியது ஏது இரு செவிக்கு இளம் குதலையர் இன்சொல்

மேல்
$16.57

#57
நிற்பது ஏது-கொல் நீடு இசை ஒன்றுமே நிற்கும்
கற்பது ஏது-கொல் கசடு அற கற்பதே கல்வி
அற்பம் ஆவது ஏது அனைத்தினும் அயல் கரத்து ஏற்றல்
சிற்பம் ஆம் இவை செப்பு என செப்பினன் சிறுவன்

மேல்
*தருமன் விடைகளால் உவப்புற்ற தருமதேவதை
*அவன் முன் தோன்றி, மேற் கொள்ளவேண்டும்
*உபாயங்களைத் தெரிவித்தல்
$16.58

#58
இ வகை பல வினவலும் இயம்பிய மகனை
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி
வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ

மேல்
*தேவதை, ‘மிக்க அன்புடைய ஒருவனை இம் மறையால்
*எழுப்புக!’ என, தருமன் சகாதேவனை எழுப்புதல்
$16.59

#59
அற பெரும் கடவுள் என்று அறிந்து தாதையை
சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய
மற பெரும் புதல்வனை மகிழ்ந்து நும்பியர்
இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு எனா

மேல்
$16.60

#60
நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில்
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்-தன்னை நீ
இச்சையால் இ மறை இயம்பி எண்ணி ஓர்
அச்சம் அற்று அழை என அருள் செய்தான் அரோ

மேல்
$16.61

#61
தாதை கூறிய மறை-தனை கொண்டே சுதன்
ஏதம் உற்றிடாவகை இளைய தம்பியை
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான்
வேதமும் நிகர் இலா விரத வாய்மையான்

மேல்
*சகாதேவனை எழுப்பியதற்குக் காரணத்தைத் தருமன்
*கூறக் கேட்டு மகிழ்ந்து, யாவரையும் எழுப்பி, பல
*படை முதலியன அளித்தல்
$16.62

#62
கண்டு நின்று அற பெரும் கடவுள் வாயுவின்
திண் திறல் மா மகன் தேவர் கோமகன்
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என் என்றான்

மேல்
$16.63

#63
குத்திரம் இலா மொழி குந்திக்கு யான் ஒரு
புத்திரன் உளன் என புரிந்து நல்கினாய்
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை வல்லவர்
சித்திரம் வகுத்து என திகழும் மேனியாய்

மேல்
$16.64

#64
என்று தன் தந்தையோடு இயம்ப தந்தையும்
மன்றல் அம் தொடை முடி மைந்தனுக்கு அமர்
வென்றிடு மறைகளும் வில்லொடு ஏவு வேல்
என்ற பல் படைகளும் யாவும் நல்கினான்

மேல்
*தேவதை நிகழ்ந்தவற்றைக் கூறி, ‘கானில் வாழ் நாள்
*கழிந்தது; ஒருவரும் அறிவுறாது இனிது வாழ்திர்’ என்று
*அறிவுறுத்திச் செல்லுதல்
$16.65

#65
கருதலன் அழைத்ததும் காளமாமுனி
புரி தழல் வளர்த்ததும் பூதம் வந்ததும்
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும்
விரி சினத்துடன் அது மீண்டு போனதும்

மேல்
$16.66

#66
முனிவனை கொன்றதும் முனிவன் வாய்மையில்
துனி வனத்து உழையினை தொடர்ந்து போயதும்
தனி வனத்திடை விட தடாகம் செய்ததும்
இனிமையின் புத்திரற்கு யாவும் கூறினான்

மேல்
$16.67

#67
நன் பெரு வனம் செறி நாள் அகன்றன
பின் பிறர் அறிவுறா பெற்றி பெற்று நீர்
துன்புறாது இரும் என சொல்லி ஏகினான்
அன்பினால் அருள் புரிந்து அரிய தாதையே

மேல்
*பாண்டவர் தம் இருப்பிடம் சேர்ந்து, திரௌபதிக்கு
*யாவற்றையும் கூறியிருத்தல்
$16.68

#68
தம்பியர் அனைவரும் தத்தம் ஆவி பெற்று
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன்
அம்பகம் மலர்ந்து தம் அடவி எய்தினார்

மேல்
$16.69

#69
தீது அற கானிடை செறிந்த ஐவரும்
பேதுற தொடர்ந்து ஒரு பிணை பின் போனதும்
ஏதம் உற்று இறந்ததும் எழுந்து மீண்டதும்
ஆழ் துயர் திரௌபதிக்கு அறிய கூறினார்

மேல்

17. துருவாச முனிச் சருக்கம்

*துருவாச முனிவன் பாண்டவர் இருப்பிடம் வருதலும்,
*அவர்கள் முனிவனை வணங்கி, உபசரித்தலும்
$17.1

#1
சாபத்தாலும் சாபமொழி-தன்னால் வளரும் தவத்தாலும்
கோபத்தாலும் பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன்
தீபத்தால் மெய் வகுத்தனையான் திகழ் பல் முனிவர் புடை சூழ
ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய்

மேல்
$17.2

#2
அரு மா தவ பேறு ஆனது எமக்கு அம்மா என்ன செம்மாந்து
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம்
பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு
அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ

மேல்
*’உண்ணும் காலம் இது’ என முனிவன் கூற, நீராடி வருமாறு
*அனுப்பி, தம்பியரையும் திரௌபதியையும் உசாவுதல்
$17.3

#3
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி
தொட்ட கழல் கால் உதிட்டிரன் கைதொழுது துதிப்ப துருவாசன்
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த
பட்ட உணவு இங்கு அமுது செய பருவம் இது என்று உரைசெய்தான்

மேல்
$17.4

#4
மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து
போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன்
வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும்
வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால்

மேல்
*’முனிவன் சாபம் மொழியும் முன் பகை முடித்து
*இறப்போம்’ என வீமன் உரைத்தல்
$17.5

#5
மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால் பிறிது வேறு இல்லை
ஆஆ இதற்கு இன்று என் செய்வேம் ஆமாறு ஆக நாம் எழுந்து
கோ ஆனவனும் பல படையும் குன்ற சென்று பொருது இமைப்பில்
சாவா நிற்பது உறுதி இனி என்றான் வன் தாள் சமீரணியே

மேல்
*நகுல சகாதேவர்கள், ‘கண்ணனைச் சிந்தித்து அழைத்தால்,
*கவலை நீங்கும்’ என, தருமனும் இசைதல்
$17.6

#6
சுருதி கடவுள் அனையானை சுனை நீர் படிந்து வர சொல்லி
கருதி பிற நாம் புரியும் அது கடனோ என்றான் கழல் விசயன்
மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான்
ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா உரவோனே

மேல்
$17.7

#7
யாதே ஆக இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு இசை அளிகள்
தேதே என்னும் பசும் துளப திருமால்-தன்னை சிந்தியும் இப்
போதே வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான்
சாதேவனும் அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு இசைந்தான் தருமனுமே

மேல்
*’துருவாசன் வரின் என் செய்வது?’ எனத் திரௌபதி பயந்து நடுங்குதல்
$17.8

#8
என்னே என்னே ஆதவன் வான் இடையும் கடந்தான் முனிவன் வரும்
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம் பல பேர் முனிவரொடும்
கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற
மின் நேர் இடையாள் நடுநடுங்கி விளைவது என்னோ என பயந்தாள்

மேல்
*தருமன் கண்ணனை நினைத்தலும், அவன் வந்து, அவர்களைத் தேற்றி,
*திரௌபதியை, ‘அட்சயபாத்திரத்தில் *அன்னம் உளதோ?’ என்ன,
*அவள் ஒரு பருக்கையைக் கண்டு எடுத்து வந்து கொடுத்தல்
$17.9

#9
தப்பு ஓதாமல் தம்பியர்க்கும் தரும_கொடிக்கும் இதமாக
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன்
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற
ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே

மேல்
$17.10

#10
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல்
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ
முருக்கின் இதழை கருக்குவிக்கும் முறுவல் செ வாய் திரௌபதியும்
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை

மேல்
*கண்ணன் அந்தப் பருக்கையை உண்ண, நீராடிய முனிவரர்
*உண்டவர்போல் களி கூர, துருவாசன் தருமனிடம் மீண்டு வருதல்
$17.11

#11
அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி அருள் செய்தோன்
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான்
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன்
தந்த அமுது உண்டவர் போல தாபம் தணிந்து தண்ணென்றார்

மேல்
$17.12

#12
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும்
அதரம் குளிர்ந்து கண் குளிர்ந்து ஆங்கு அரு மா முனிவன் அதிசயித்து
மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால்
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால்

மேல்
*முனிவன் தருமனைப் பாராட்டி, தான் வந்த காரணத்தை உரைத்தல்
$17.13

#13
உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம்
கண்டோம் உன்னால் எ உலகும் காணா முகுந்தன் கழல் இணைகள்
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று
கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார் குவலயத்தில்

மேல்
$17.14

#14
நென்னல் புயங்க கேதனன்-தன் நிலயம்-தன்னில் தீம் பாலும்
கன்னல் கட்டி முதல் பல தீம் கனி நெய்யுடனே இனிது அருந்தி
இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப
முன்னர் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான் முடி வேந்தன்

மேல்
$17.15

#15
எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இகலி வனம் புகுந்தோர்
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று
உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள்
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே

மேல்
*முனிவன் விருப்பப்படி, தருமன் வரம் வேண்டுதல்
$17.16

#16
பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பி புரப்பான் பாண்டு எனும்
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன
வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள்
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி என்றான் வளையா செங்கோலான்

மேல்
*முனிவன் தான் உறையும் காடு செல்ல, தருமன் கவலை நீங்கி, மகிழ்ந்திருத்தல்
$17.17

#17
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான்
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர் துவரை நகர் புக்கான்
பின்னோர் வணங்க பேர் அழலில் பிறந்தாள் மகிழ பேரருட்கு
தன்னோடு ஒருவர் நிகர் இல்லான் இருந்தான் அந்த தனி வனத்தே

மேல்

18. பழம் பொருந்து சருக்கம்

*அமித்திர முனிவனுக்காக அமைந்த நெல்லிக்கனியை
*விரும்பி, திரௌபதி விசயனை வேண்டுதல்
$18.1

#1
அ நெடு வனத்தில் சில் நாள் அகன்ற பின் அமித்திரன் பேர்
என்னும் மா முனிவற்கு என்றே யாவரும் அருகு செல்லா
நல் நலம் மிகுத்த நெல்லி நறும் கனி ஒன்று கண்டாள்
கன்னலும் புளிக்கும் இன் சொல் கயிரவம் கருகும் வாயாள்

மேல்
$18.2

#2
இ கனி எனக்கு நீ நல்கு என்று வில் எடுத்துக்கொண்ட
மை கனி களவு மானும் வடிவுடை விசயனோடு
மெய் கனிவு உடைமை தோன்ற விளம்பினாள் வீசு தென்றல்
மு கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை

மேல்
*விசயன் கனியை வீழ்த்த, அது கண்டோர், ‘முனிவன்
*காணில், இவன் என்படும்!’ என்றல்
$18.3

#3
சோமகர்க்கு அரசன் பாவை சொல்லு முன் வில்லு வாங்கி
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை
ஏ முறை தொடுத்து வீழ்த்தி ஈதலும் ஆங்கண் கண்டோர்
ஏமுற காணில் இப்போது என்படும் இறுத்தோன் என்றார்

மேல்
*தருமன் முன் சென்று விசயன் தன் செயலைக்
*கூற, அவன் நொந்து கூறுதல்
$18.4

#4
கண்ட அ முனிவர் சொல்ல கடவுளர் கோமான் மைந்தன்
கொண்ட அ கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான்
திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான்

மேல்
$18.5

#5
காடு உறை வாழ்க்கை எய்தி காய் கனி மூலம் தின்று
நீடுறு காலம் போக்கி நீங்கலாது இருக்கும் நம்மை
நாள்-தொறும் இடையூறு அன்றி நண்ணுவது இல்லையாயின்
ஏடுறு தாராய் செய்வது என்-கொல் என்று இயம்பினானே

மேல்
*முனிவன் சினவாமைக்கு வீமன் உபாயம் உரைக்க,
*விசயன், ‘என்னை யன்றி யாரையும் முனிவன் சபியான்
*ஆதலின், நீவிர் அஞ்ச வேண்டா’ எனல்
$18.6

#6
அ உரை வீமன் கேட்டு ஆங்கு அமித்திரன் வந்த போதே
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம்
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி
செ உரை கூறின் நம்மை சீறுமோ சீறல் செய்யான்

மேல்
$18.7

#7
பொறுத்திடும் மேல் இடா ஐம்புலத்தினனாதலாலே
மறுத்திடான் ஐய நின்-தன் மாசு இலா வாய்மை என்ன
நிறுத்திடும் துலையோடு ஒப்பான் நினைவினுக்கு இசைய தெவ்வை
செறுத்திடு விசயன் மீள செப்பினன் செப்பம் ஆக

மேல்
$18.8

#8
செய் தவன் இனிது மாந்த தேவர் நாள் ஒன்றுக்கொன்றாம்
கைதவம் இல்லா நெல்லி கனியினை கருதுறாமல்
எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம்
மெய் தவறாத சொல்லாய் வெருவுதல் என்-கொல் என்றான்

மேல்
*’உனக்கு இடர் வர, யாம் உன்னை நீங்கிப் போய்ப்
*பிழைப்போமோ?’ எனத் தருமன் உரைத்தல்
$18.9

#9
வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி
ஏந்து_இழை சொல்ல ஓராது இனிய இ கனி இன்று ஈர்ந்தாய்
மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ
பேர்ந்து போய் பிழைப்போம் என்றான் பிதாவினும் கருணை மிக்கான்

மேல்
*நகுல சகாதேவர் தத்தம் கருத்தை உரைத்தல்
$18.10

#10
அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும்
வெம் முனிவு அகற்றி நாமும் மேம்பட வேண்டின் இன்னம்
தெவ் முனி திகிரியானை சிந்தனை செய்தி என்றான்

மேல்
$18.11

#11
விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி
கிளைபடு நெல்லி வாச கேழ் உறு கனி முன் வைத்தால்
உளைவுற முனியான் நம்மை உறுதி மற்று இதுவே என்னா
இளையவன்-தானும் தம்முன் நினைவினுக்கு ஏற்ப சொன்னான்

மேல்
*திரௌபதி துன்பத்திற்குத் தான் காரணமானது குறித்து வருந்துதல்
$18.12

#12
பெண் மொழி கேளார் என்றும் பெரியவர் என கொண்டு இந்த
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம்
எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று
கண் மலர் அருவி சோர கனல்_பிறந்தாளும் சொன்னாள்

மேல்
*நகுலன் சொன்னபடி தருமன் கண்ணனைச் சிந்திக்க,
*அவன் வந்து உபாயம் உரைத்தல்
$18.13

#13
தம்பியர்-தாமும் வேள்வி தையலும் உரைத்த மாற்றம்
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர்
வெம் பரி நகுலன் சொல்லே விதி என கருதி அப்போது
எம்பெருமானை உன்ன இவன் எதிர் அவனும் வந்தான்

மேல்
$18.14

#14
கண்டு இரு கண்ணும் இதயமும் களிப்ப கட்செவி பேர் அணை மறந்து
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும்

மேல்
$18.15

#15
திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும்
உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட கோட்டில் மீண்டு ஒன்றும்
வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன்
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே

மேல்
*கண்ணன் உரைத்தபடி, தருமன் முதலியோர் தத்தமது உள்ளக் கருத்தை உரைத்தல்
$18.16

#16
வெல்லுக அறமும் மெய்ம்மையும் பொறையும் மேக மேனியனும் வெல்லாமல்
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று
அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம்
கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன்

மேல்
$18.17

#17
பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும்
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும்
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான்
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன்

மேல்
$18.18

#18
ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம்
மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும்
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால்
ஈனமே உயிருக்கு இயற்கையதலினால் என்றனன் வீமனுக்கு இளையோன்

மேல்
$18.19

#19
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர்
நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன்
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான்

மேல்
$18.20

#20
ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும்
தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலன் உறு தாரம்
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே

மேல்
$18.21

#21
ஐம்புலன்களும் போல் ஐவரும் பதிகள் ஆகவும் இன்னம் வேறு ஒருவன்
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம்
அம் புவி-தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால்
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள்

மேல்
*அறுவரும் உண்மை உரைக்கவே, நெல்லிக்கனி பண்டு போலப் பொருந்திற்று
$18.22

#22
அறுவரும் இவ்வாறு உண்மையே உரைத்தார் ஆதலால் நிரைநிரைப்படியே
மறு அணி துளப_மார்பனும் கேட்டான் மா முனிக்கு ஓதனம் ஆன
நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு அணைந்ததால் என்றும்
பெறு முறை பெறுமே உள்ளவாறு உரைத்தால் பெரியவர் பேசும் வாசகமே

மேல்
*கண்ணன் துவாரகை செல்ல, பாண்டவர் அவ்வனத்தில் வாழ்ந்திருத்தல்
$18.23

#23
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன்
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி
இளைத்தவர் இன்னல் ஒழித்து மீண்டு அகன்றான் இவரும் மீண்டு இறைஞ்சி ஆங்கு இருந்தார்

மேல்

19. நாடு கரந்துறை சருக்கம்

*’நாடு கரந்து உறைதற்கு உரிய இடம் எது?’ எனத்
*துணைவரைத் தருமன் வினாவ, விசயன், ‘விராடன்
*நகரமே அதற்கு ஏற்றது’ எனல்
$19.1

#1
அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு
துருபதன் அளித்த பாவையும் தாமும் சுருதி மா முனி கணம் பலவும்
பரிவுடன் மலரும் பலங்களும் கிழங்கும் பாசடைகளும் இனிது அருந்தி
ஒரு பகல் போல கழித்தனர் அறிவும் ஒடுங்கிய புலன்களும் உடையோர்

மேல்
$19.2

#2
தொல் அற கடவுள் அருளுடன் அளித்த தோன்றல் தன் துணைவரை நோக்கி
கல் அமர் கிரியும் கானமும் இடமா கழித்தனம் ஒழிந்தன காலம்
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ
சொல்லு-மின் என்றான் என்றலும் தொழுது சுரபதி மகன் இவை சொல்வான்

மேல்
$19.3

#3
நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன்
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி
வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா

மேல்
*தருமன் பாங்கில் உறைந்த அரசர்களை அவரவர் பதிகளுக்கு அனுப்பி,
*முனிவரை வணங்கி, துணைவர்களுடன் விராடன் நாட்டை அடைதல்
$19.4

#4
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து
தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப
தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான் சிந்தையால் துணிந்து
பாங்கு உறை அரசர் யாரையும் தம்தம் பதிகளே செல்க என பகர்ந்தான்

மேல்
$19.5

#5
முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உற தனித்தனி வணங்கி
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப
இனியன உரைகள் பயிற்றி யாவரையும் ஏகுவித்து இற்றை நாள் இரவில்
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா

மேல்
$19.6

#6
கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும்
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும்
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில்
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன் பாண்டவர் தலைவன்

மேல்
$19.7

#7
தராதலம் முழுதும் உடைய கோமகனும் தம்பியர் நால்வரும் திருவும்
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப
கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த
விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா

மேல்
*மயான பூமியில் காளி கோயிலின் முன்னே உள்ள வன்னி மரத்தில்,
*பாண்டவர் தம் படைக்கலங்களை மறைத்து வைத்தல்
$19.8

#8
யாமள மறையால் யாவரும் பணிவாள் எழு வகை தாயரில் ஒருத்தி
சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள்
கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி
நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு பாதவம் நண்ணா

மேல்
$19.9

#9
தத்தம படையும் கவசமும் அனைத்தும் தனித்தனி ஐவரும் தரித்த
மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால்
வைத்தனர் ஆகி யாவரும் உணராவகை அரு மறைகளும் பயிற்றி
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும்

மேல்
*தருமன் கங்கன் என்னும் பெயருடைத் துறவியாய் விராடனை அடுக்க,
*மன்னன் அவனை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதல்
$19.10

#10
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க ஓர் தாபத வடிவும்
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான்

மேல்
$19.11

#11
யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ
பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய் பயின்றனன் அவன் பெரு வனத்தில்
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி
வீர வார் கழலாய் வந்தனன் என்றான் வேள்வியால் கேள்வியால் மிக்கோன்

மேல்
$19.12

#12
மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு அந்த மனுகுல மன்னனும் மகிழ்ந்து
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த
நன்மையின் விளைவே வேண்டு நாள் ஈண்டு நண்ணுதிர் என நனி நவின்றான்

மேல்
*வீமன் பலாயனன் என்னும் பெயருடன் விராடனது
*தலைமை மடையனாய் வந்து பொருந்துதல்
$19.13

#13
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும்
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய
உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான்

மேல்
$19.14

#14
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி
ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன்
வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர்
இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான்

மேல்
$19.15

#15
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற வழங்கினன் மாதோ

மேல்
*விசயன் பிருகந்நளை என்ற பேடியாய் விராடன் மகள் உத்தரைக்குப் பாங்கி ஆதல்
$19.16

#16
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள்
வாடிய மருங்குல் பணைத்த பூண் கொங்கை வாள் தடம் கண்கள் வார் குழை மேல்
ஓடிய வதனத்து உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர் யாண்டு அமைந்த
பேடியின் வடிவம் தரித்தனன் ஆண்மைக்கு இமையவர் எவரினும் பெரியோன்

மேல்
$19.17

#17
வாயுவின் மதலை சென்று கண்டதன் பின் மற்றை நாள் ஒற்றை வெண் கவிகை
சே ஒளி மகுட சென்னியான் இருந்த பேர் அவை சிறப்புற சென்று
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து
ஏய வெம் சிலை கை அருச்சுனன் கோயில் இருப்பது ஓர் பேடி நான் என்றான்

மேல்
$19.18

#18
நாதமும் இயலும் மேதகு நட நூல் நவில்தரும் அரங்கினுக்கு உரியேன்
பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன் பெயர் பிருகந்நளை என்ப
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன்
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான்

மேல்
$19.19

#19
வித்தகன் என எ கலைகளும் பயின்ற விராடனும் பேடி-தன் மொழி கேட்டு
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான்

மேல்
*சில நாளின் பின் நகுலன் தாமக்கிரந்தி என்னும் பெயருடன்
*விராடனை அடுத்து, அவனது குதிரைகளுக்கு அதிபதி ஆதல்
$19.20

#20
பின்னரும் சில் நாள் அகன்ற பின் நகுலன் பேர் அழகினுக்கு வேள் அனையான்
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய்
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான்

மேல்
$19.21

#21
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார்

மேல்
$19.22

#22
மற்று அவன்-தனது வாசி மந்துரைக்கு தலைவராய் வாழும் மாக்களில் யான்
உற்றவன் ஒருவன் வாம் பரி வடிவும் உரை தகு சுழிகளும் ஒளியும்
பற்றிய நிறனும் கந்தமும் குரலும் பல் வகை கதிகளும் பிறந்த
சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன்

மேல்
$19.23

#23
மண்டலம் வீதி கோணமே முதலாம் வாசிகள் ஊர் தொழில் வல்லேன்
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன்
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின்
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன்

மேல்
$19.24

#24
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன்
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி
அ நகர் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி எனும் பதம் கொடுத்தான்

மேல்
*சகாதேவன் தந்திரிபாலன் என்னும் பெயரோடு இடையனாய்
*வந்து, விராடன் ஆநிரை காப்போர்க்கு அதிபதி ஆதல்
$19.25

#25
கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை நகுலற்கு
இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து தோளில் ஓர் தொடி தடி தழுவி
விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான்

மேல்
$19.26

#26
ஆர்-கொல் நீ என்ன அறன் மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பதியை
சீருற வேறோர் விரகினால் வணங்கி செப்பினன் அன்ன சாதேவன்
பார் கொள நினைந்து சுயோதனன் விடுப்ப படர் வனம் புகுந்த பாண்டவரில்
தார் கொள் வேல் இளையோன்-தனது கோபாலன் தந்திரிபாலன் யான் என்றான்

மேல்
$19.27

#27
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து
பாங்குற தக்க வழக்கமும் வழங்கி பல் வகை நிரைகளும் நீயே
ஈங்கும் அப்படியே புரத்தி என்று உரைத்தான் இவனும் அ அரசன் ஏவலினால்
தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே

மேல்
*திரௌபதி விரதசாரிணி என்னும் பெயருடன் விராடன்
*தேவியை அடுத்து, அவளுக்கு வண்ண மகள் ஆதல்
$19.28

#28
ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும்
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர்
கோமகளை நாடி அவள் கோயிலிடை புக்காள்

மேல்
$19.29

#29
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள்
நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள்
பதும விழியாய் எனலும் வாயிலவர் பால் போல்
மதுர மொழியாள் அழை-மின் வாள்_நுதலை என்றாள்

மேல்
$19.30

#30
வந்தவள் இருந்தவள் மருங்கு அணையும் வேலை
அ தண் உபசாரமுடன் அருகுற இருத்தி
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள்

மேல்
$19.31

#31
தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால்
கான் விரதமாக உறை காவலர்கள் கோயில்
மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன்
யான் விரதசாரிணி எனும் பெயரினாளே

மேல்
$19.32

#32
பூசுவன சுற்றுவன பூண்பன முடிப்ப
தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன்
வாசவனொடு ஒத்த மனுகுல அரசன் மனைவி
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம்

மேல்
$19.33

#33
எந்தை மனையில் பயில் இளம் பருவ நாளில்
கந்தருவர் காவல் புரி கற்புடையள் ஆனேன்
இந்து நுதலாய் மனிதர் யார் முகமும் நோக்கேன்
வந்தனன் நின் மாளிகையின் வைகும்வகை என்றாள்

மேல்
$19.34

#34
வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு
துண்ணென வெரீஇயினள் சுதேட்டிணை விரும்பி
விண்ணவர்கள் பாவையரின் மேவுதி எனக்கு
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும்

மேல்
$19.35

#35
அன்னை எனுமாறு நெறியான முறை கூறி
என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும்
மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு
எ நலமும் நாள்-தொறும் இயற்றினள் இருந்தாள்

மேல்
*பாண்டவர் மறைந்து உறைந்த நாளில், விராடனது நாடு
*எல்லா வகையாலும் சிறந்து ஓங்குதல்
$19.36

#36
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர்
ஐவரும் மறைந்தனர்களாய் உறையும் நாளில்
மெய்வரு வழா மொழி விராடபதி திரு நாடு
உய்வு அரு பெரும் திருவொடு ஓங்கியதை அன்றே

மேல்
$19.37

#37
குருக்கள் அவன் ஊரினிடை குருநிலனொடு ஒப்புற்று
இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி
தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி
செருக்கும் உடன் விஞ்சியது செப்ப அரிது அம்மா

மேல்

20. மற்போர்ச் சருக்கம்

*வாசவன் என்ற மற்போர் வீரன் பல மல்லர் சூழ விராடன்
*அவை சார்ந்து, தன் பெருமை கூறுதல்
$20.1

#1
அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில்
வில்லினுக்கு இராமன் என்ன வேலினுக்கு இளையோன் என்ன
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர்
மல்லினுக்கு ஒருவன் யானே வாசவன் என்று வந்தான்

மேல்
$20.2

#2
அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன் அவனி முற்றும்
கொண்ட மா மேரு ஒத்த குங்கும கடக தோளான்
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன் தந்தி எட்டின்
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான்

மேல்
$20.3

#3
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்ன சூழ
பாய் இரும் புரவி திண் தேர் மிசை வரும் பரிதி போல
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன
சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான்

மேல்
*விராடன் வாசவனுக்கு உரிய சிறப்புச் செய்து,
*தனது மல்லர்களை நோக்க, அவர்கள் தனித்தனி
*அவனுடன் மற்போர் செய்தல்
$20.4

#4
மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு
என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான்
கொல் நவில் வேலினானும் கொடுப்பன கொடுத்து முன்னம்
தன்னுழை வைகும் மல்லர்-தங்களை நோக்கினானே

மேல்
$20.5

#5
அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர் நீடு அசனி ஒப்பார்
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண
சந்த மல் சமரம் செய்தார் தனித்தனி ஒருவராக

மேல்
*எல்லோரையும் வென்ற வாசவனுக்கு விராடன்
*எல்லாச் சிறப்புக்களும் செய்தல்
$20.6

#6
தத்தியும் தோளும் தோளும் தாக்கியும் சென்னி கொண்டு
மொத்தியும் பற்பல் சாரி முடுகியும் வயிர கையால்
குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற
ஒத்தியும் பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும்

மேல்
$20.7

#7
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர்
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான்

மேல்
*மறுநாள் தருமன் விராடனிடம், ‘வாசவனை வெல்லுதற்குத்
*தக்கான் நின் மடையர் தலைவன் பலாயனன்’ என்ன, அரசன்
*அவனை அழைத்து வரச் செய்தல்
$20.8

#8
அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன்
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன்
இன்று நின் மடையர்-தம்மில் பலாயனன் என்போன்-தன்னை
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான்

மேல்
*வீமன் வாசவனுடன் மற்போர் பொருது, வெற்றி பெறுதல்
$20.9

#9
பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையை சோதி நேமி
விம்பமாய் வளைந்தது என்ன விளங்கு பொன் கச்சை வீக்கி
தம்பம் ஆம் என்ன தக்க தண்டொடு தரணி வீழா
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான்

மேல்
$20.10

#10
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து
துதைவுற பொருவதே போல் தோள் புடைத்து உருமின் ஆர்த்து
பதயுகத்தாலும் தம்தம் பாணிகளாலும் சேர்ந்தார்

மேல்
$20.11

#11
உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி
புதைத்தனர் விரல்கள் மெய்யில் புருவமும் மூக்கும் வாயும்
சிதைத்தனர் புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க
பதைத்தனர் ஓடி ஓடி பற்றினர் மீள மீள

மேல்
$20.12

#12
கற்றன காயம் எல்லாம் கண்டு கண் களிக்க காட்டி
உற்றனர் நின்ற போதில் ஊதையின் புதல்வன் ஊரு
மற்றவன் மருங்கு பற்ற வன் கரம் மிடறு பற்ற
செற்றனன் இடிம்பன்-தன்னை செற்ற வெம் கொற்ற தோளான்

மேல்
*வென்ற பலாயனன் என்னும் வீமனுக்கு விராடன் பல
*வரிசைகள் அளித்துப் பாராட்டுதல்
$20.13

#13
தேர் மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும்
பார் மிசை கிடக்க நின்று பணை புயம் கொட்டி ஆர்த்தான்
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா
போர்முகங்களுக்கும் நின்னை போல்பவர் இல்லை என்றான்

மேல்
$20.14

#14
மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு
தன் அருகு அணுக வைத்து தலத்து எதிர் இல்லை இந்த
இன் அமுது அடுவோற்கு என்றான் இயல் திறல் விராடன்-தானே

மேல்

21. கீசகன் வதைச் சருக்கம்

*கீசகன் விராடன் தேவியான தன் தமக்கை
*சுதேட்டிணையைக் காண வருதல்
$21.1

#1
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல்
சொன்ன சாயல் சுதேட்டிணை-தன் திரு துணைவர் நூற்றுஒருநால்வரில் தோற்றமும்
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய
கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான்

மேல்
*சுதேட்டிணையை வணங்கி மீள்கையில், கீசகன்
*விரதசாரிணியைக் கண்டு, காமுகனாகி
*அவளிடம் பலபல கூறுதல்
$21.2

#2
தம்பி அ பெரும் தையலை நூபுர தாளின் வீழ்ந்து தகவுடன் மீடலும்
அம்பரத்தவர் கற்பக கா நிகர் அந்த அந்தப்புரத்து அகன் காவினில்
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம்
கொம்பொடு ஒத்து இடை சோர பணைத்த பொன் கொங்கையாள் இவன் முன்னர் குறுகினாள்

மேல்
$21.3

#3
இயற்கை ஆன கவினுடை பாவையை இறைவன் தேவிக்கு இளையவன் கண்டனன்
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான்
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே

மேல்
$21.4

#4
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான்
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால்
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன்
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான்

மேல்
*அவள் கீசகனைப் பழித்தும் பயமுறுத்தியும் அறிவுரை கூறுதல்
$21.5

#5
கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து
ஏறுகின்ற பழிகளும் பாவமும் இம்மை-தானும் மறுமையும் பார்த்திலை
மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ

மேல்
$21.6

#6
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர்
தாரம் ஆனவர்-தம் முகம் பார்ப்பரோ தக்கவர்க்கு தகவு இவையே-கொலாம்
சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள்

மேல்
*கீசகன் அவள் காலில் விழுந்து வேண்ட, அவள்
*சுதேட்டிணையிடம் சேர்ந்து நிகழ்ந்தன கூறுதல்
$21.7

#7
பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி
மீது நெற்றி பட தொழுதான் வடி வேல்கணாளும் வெகுண்டு விரைவினில்
தூதுளங்கனி வாய் முத்த வாள் நகை சுதேட்டிணை பெயராளுழை துன்னினாள்

மேல்
$21.8

#8
நடுங்கும் மெய்யினள் பேதுறும் நெஞ்சினள் நாணும் நீர்மையள் நாவினுள் நீர் இலாது
ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள்
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள்
தொடும் கழல் கழலான் நின் துணைவன் என் சுட்டி ஆயிரம் சொல்லல சொல்லினான்

மேல்
$21.9

#9
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார்
சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள்

மேல்
*சுதேட்டிணை திரௌபதியைத் தேற்றி, தன் தம்பியைத்
*தன் மனைக்கு வாராவகை கடிந்து கூறுதல்
$21.10

#10
கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம் கேட்டு இடியேறு உறும்
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா
வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து தன் வீடு அணுகாவகை
ஏகுக என்றனள் என்றலும் சோகமோடு ஏகினான் அறம் பாவம் என்று எண்ணலான்

மேல்
*கீசகனது விரகதாபமும், அது குறித்துச் சுதேட்டிணைக்குச் சேடியர் கூறுதலும்
$21.11

#11
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர்
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும்
தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து
அன்று அவன் கரும் கங்குலில் பட்ட பாடு அவனை அல்லதை யார் பாடுவார்களே

மேல்
$21.12

#12
பாவி-தன் மனை சேடியர் ஆனவர் பலரும் வந்து படியுடை மன்னவன்
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில்
காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும்
ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார்

மேல்
*கீசகன் நிலைக்கு வருந்தி, மலர்மாலையை அவனுக்கு அளித்து மீளுமாறு
*விரதசாரிணியைச் சுதேட்டிணை வேண்ட, அவள் அங்ஙனமேகொண்டு செல்லுதல்
$21.13

#13
பாசகாரிகள் ஆம் ஐம்புலன்களும் பரிவு கூர பரிந்து உயர்ந்தோர் புகல்
வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை மதன வேதத்தின் மார்க்கமும் பார்த்திலை
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள்

மேல்
$21.14

#14
ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில் நின்ற அருந்ததியே நிகர்
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில்
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை
நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால்

மேல்
$21.15

#15
இளையன் ஆதலின் என் இளையோன் மனத்து எண்ணம் இன்றி இகல் மதன் அம்பினால்
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால்
விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய்
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால்

மேல்
$21.16

#16
எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன்
நண்ணும் இல்லிடை சென்று இந்த நாள்மலர் நறை கொள் மாலையை நல்கினை மீளுவாய்
கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும்
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள்

மேல்
$21.17

#17
மொழி அலாத மொழியை சுதேட்டிணை மொழிந்தபோது முதுக்குறைவு உள்ள அ
பழி இலா மொழி பாவை வெம் பாதகம் பகர்தி என்னை வெறாது ஒழி பாவை நீ
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன்
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள்

மேல்
$21.18

#18
ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே
தீண்டல் அன்றி ஒருவரும் என்னை மெய் தீண்டுவார் இலை என்றுஎன்று செப்பவும்
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால்
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே

மேல்
*உதய காலத்தில் விரதசாரிணி கீசகன் மனைபுகுதலும், அவன் தகாத மொழி சொல்ல,
*அவள் சூரியனை வணங்கித் தன் துன்பம் போக்க வேண்டுதலும்
$21.19

#19
மாது அவள் கீசகன் மனையில் ஏக அல்
போது அகலவும் அவன் புலம்பல் போகவும்
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர்
ஆதபன் உதய வெற்பு அணுகினான் அரோ

மேல்
$21.20

#20
தருக்கிய காமுகன் தகாது சொல்லவே
உரு கிளர் சாயலோடு உளம் அழிந்து போய்
முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால்
அருக்கனை இறைஞ்சினாள் அழிவு இல் கற்பினாள்

மேல்
$21.21

#21
துரங்கம் ஓர் ஏழுடன் சோதி கூர் மணி
கரங்கள் ஓர் ஆயிரம் கவின தோன்றினாய்
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று
இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய்

மேல்
$21.22

#22
என்று கொண்டு என்றினை பணிந்து மன்றலால்
கன்றிய கீசக கலகன் முன்பு போய்
மன்றல் அம் தொடையலும் வழங்கி மெய் வெரீஇ
நின்றனளால் நிலை நின்ற கற்பினாள்

மேல்
*கீசகன் காம நோய் வெதுப்ப, அமளியில்
*துன்புற்றிருந்த நிலை
$21.23

#23
காமரு குளிரி பைம் கதலி மெல் அடை
தாமரை வளையம் வண் தாது அறா மலர்
ஆம் முறை அனைத்தும் மெல் அமளி மேல் விரித்து
ஈம வல் எரியின் மேல் என்ன வைகினான்

மேல்
$21.24

#24
சாந்தொடு தண் பனிநீரும் தாமமும்
ஏந்திய கரத்தினர் ஏழைமார் பலர்
காந்திய கனல் மிசை காட்டும் நெய் என
வேந்தனது உடலகம் வெதும்ப வீசினார்

மேல்
*விரதசாரிணியைக் கண்டு கீசகன், ‘வருக!’ என
*அழைத்து, அவளைப் பற்றுதற்குத் தொடர, அவள் ஓடி
*வந்து அரசவையில் வீழ்தல்
$21.25

#25
தாக்கிய காம நோய் தழைக்க அன்புற
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான்
பாக்கியம் நெஞ்சுற பலித்தது என்னவே
நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான்

மேல்
$21.26

#26
வந்தனள் என்னுடை மா தவ பயன்
வந்தனள் என்னுடை வழிபடும் தெய்வம்
வந்தனள் என்னுடை ஆவி வாழ்வுற
வந்தனள் என்னுடை வண்ண மங்கையே

மேல்
$21.27

#27
வருக நீ அருகுற மதுர வாசகம்
தருக நீ இரு செவி தழைக்க உள்ளம் நின்று
உருக நீ தழுவுக உடலம் தேம் உற
பருக நீ வழங்குக பவள வாய் எனா

மேல்
$21.28

#28
கிடந்தவன் எழுந்து ஒரு கேடு வந்துறா
மடந்தையை தழுவுவான் வந்து சார்தலும்
விடம் திகழ் விழியினாள் ஓட வேட்கையால்
தொடர்ந்தனன் அறிவு இலா சோரன்-தானுமே

மேல்
$21.29

#29
ஓடிய மட_கொடி உலகு காவலன்
சூடிய மணி முடி துலங்கு கோயிலின்
வாடிய கொடி என வந்து வீழ்ந்தனள்
நீடிய வேத்தவை நிருபர் காணவே

மேல்
*அங்கும் அவன் வந்து அவள் கையைத் தீண்ட
*நினைக்கவே, சூரியன் ஏவலால் ஒரு கிங்கரன்
*அவனைப் புறத்தே எடுத்து வீசுதல்
$21.30

#30
தொழும் தகை மனுகுல தோன்றல் கண் எதிர்
விழுந்து அழும் தெரிவையை வேட்கை நோயினால்
அழுந்திய காமுகன் அச்சம் இன்றியே
செழும் துணை கைத்தலம் தீண்ட உன்னினான்

மேல்
$21.31

#31
உன்னும் அ அளவையின் உருளை ஒன்றுடை
பொன் நெடும் தேரவன் புகல மற்றொரு
வல் நெடும் கிங்கரன் சூறை மாருதம்
என்ன வந்து அடுத்து அயல் எடுத்து வீசினான்

மேல்
*விராடன் கீசகன் செயலைக் கண்டியாது வாளா இருத்தல்
$21.32

#32
கண்டனன் இருந்த மண் காவல் வேந்தனும்
எண் தகு நெறி முறை இடறு கீசகன்
திண் திறல் வலிமையும் செயலும் சிந்தையில்
கொண்டு ஒரு வாய்மையும் கூற அஞ்சினான்

மேல்
*பலாயனன் ஒரு மராமரத்தைப் பிடுங்குதற்கு வெகுண்டு
*நோக்க, கங்கன் குறிப்பினால் அதனைத் தடுத்தல்
$21.33

#33
அடு தொழில் பலாயனன் அழுத மின்னையும்
கடுமையில் பின்தொடர் காளை-தன்னையும்
படர் உற கண்டு தன் பாங்கர் நின்றது ஓர்
விடவியை பிடுங்குவான் வெகுண்டு நோக்கினான்

மேல்
$21.34

#34
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய
முனித்தகை உணர்ந்து அவன் முகத்தை நோக்கி இ
தனி பெரு மராமரம் தழல் கொளுந்திடாது
உனக்கு அடும் இந்தனம் அன்று என்று ஓதினான்

மேல்
*விரதசாரிணி விராடனிடம் முறையிடுதல்
$21.35

#35
தீண்டுதல் தகாது என செம்மை ஒன்று இலான்
வேண்டிய செய்வது வேத்து நீதியோ
ஆண்தகை இதற்கு நீ அல்ல ஆம் எனா
ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்-கொலோ

மேல்
$21.36

#36
அன்புடை தேவி-தன் அருகு தோழியாய்
நின் பெரும் கோயிலில் நீடு வைகினேன்
என் பெரு வினையினால் இன்று உன் மைத்துனன்
தன் புய வலியினால் தழுவ உன்னினான்

மேல்
$21.37

#37
பெரும் தகை அன்று இது பேசல் அன்றி நீ
இருந்தனை உனக்கு அரசு எங்ஙன் செல்வது
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில்
அரும் திறல் அரச நின் ஆணை பொன்றுமே

மேல்
*புழுதி படிந்த கோலத்துடன் கண்ணீர் பாய,
*சுதேட்டிணையை அடுத்து, விரதசாரிணி வருந்துதல்
$21.38

#38
என இவள் புலம்பி மெய் ஏய்ந்த பூழியும்
கன தனம் நனைத்திடும் கண்ணின் நீருமாய்
மனம் மிக மறுகிட மன்னன் தேவி-பால்
இனைவுடன் எய்தி வீழ்ந்து ஏங்கி விம்மினாள்

மேல்
*கங்கன் விராடனை இடித்துரைத்து, அறிவுரை பகர்தல்
$21.39

#39
பூதலம் ஆண்மையால் புரக்கும் மன்னவர்
தீ தொழில் புரிஞரை தெண்டியாரெனின்
நீதியும் செல்வமும் நிலை பெறும்-கொலோ
ஏதிலர் தமர் என இரண்டு பார்ப்பரோ

மேல்
$21.40

#40
யாரும் இல் ஒருத்தி நின் இல்லில் வைகினால்
ஆர்வம் உற்று அவள்-வயின் அன்பு கூர்வது
வீரமோ தருமமோ விருப்பமோ இவை
பூரியர் அலாதவர் புரிதல் போதுமோ

மேல்
$21.41

#41
கீசகனாயினும் கேடு செய்தனன்
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு
ஏசு இது நினக்கும் என்று இருந்த வேந்தொடும்
வாசகம் பல சொனான் மறை வலானுமே

மேல்
*விராடன் கருத்து அழிந்து தன் மனை புக, பலாயனன்
*மடைப்பள்ளியை அடைதல்
$21.42

#42
முன்னுற முனிவரன் மொழிந்த வாய்மையும்
இன்னலோடு அழுது அவள் இசைத்த வாய்மையும்
கன்னம் ஊடுற சுட கருத்து அழிந்து போய்
மன்னனும் தன் திரு மனையில் எய்தினான்

மேல்
$21.43

#43
கண் நெருப்பு எழ இரு கை நெருப்பு எழ
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான்
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே

மேல்
*சூரியன் மறைதலும், பாண்டவர் முதலியோரின்
*மனக்கலக்கமும்
$21.44

#44
பன்னிருவரினும் நாள்-தொறும் கனக பருப்பதம் வலம் வரும் தேரோன்
மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின்
சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான்

மேல்
$21.45

#45
குந்தி-தன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட இதயமும் கொதித்தார்
வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான்
செம் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும் தெருமரல் உழந்தாள்
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார்

மேல்
*விரதசாரிணி பலாயனனை அடுத்துப் பகை முடிக்க வேண்ட,
*அவன், ‘இன்று இரவே அவனை முடிப்பேன்!’ எனல்
$21.46

#46
அனைவரும் துயின்று கங்குலும் பானாள் ஆன பின் அழுத கண்ணீரோடு
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல்
கனைவரு கழலாய் புரிவது யாது என்றாள் காளையும் கனன்று இவை சொல்வான்

மேல்
$21.47

#47
பொறை எனப்படுவது ஆடவர்-தமக்கு பூண் என புகலினும் பொருந்தார்
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண்
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும்
நிறையுடை பெரும் பூண் அமளி-வாய் நாணம் நிகழ்வுறா நிகழ்ச்சியே அன்றோ

மேல்
$21.48

#48
அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான்
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே
துரிசு அற பொருது கீசகன் உடலம் துணிப்பன் யான் துணைவரோடு என்றான்

மேல்
*விரதசாரிணி தருமன் தடுத்ததற்குக் காரணம் கூறி, இரண்டொரு நாள்
*கழிந்தபின் கீசகனை இரவில் கொல்லலாம் எனல்
$21.49

#49
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள்
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய்
அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த சீர் அழிவுறும் என்னும்
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான்

மேல்
$21.50

#50
பாயும் வெம் சிறகர் கலுழன் முன் பட்ட பாந்தள் போல் கீசகன் பதைப்ப
காயுமது இந்த கங்குலில் கடன் அன்று ஒரு பகல் இரு பகல் கழிந்தால்
நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர் என்னும்
தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள்

மேல்
$21.51

#51
ஐ என இவனும் தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புடைய
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர
நெய் உறு கனலின் பொங்கி அ கங்குல் நீந்தினான் வேந்தனுக்கு இளையோன்

மேல்
*மற்றைநாள் விரதசாரிணியைக் கீசகன் கண்டு, அவளது கருத்தை உசாவுதல்
$21.52

#52
அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய அறிவுடை கொடியும்
மற்றை நாள் அந்த சுதேட்டிணை கோயில் மன்னவன் மைத்துனன் வரலும்
கற்றை வார் குழலில் பூழியும் கண்ணீர் கலந்த வான் கொங்கையும் சுமந்து ஆங்கு
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான்

மேல்
$21.53

#53
கலைமதி கண்ட காந்தக்கல் என உருகி சிந்தை
தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன்
நிலை பெறு கற்பினாளை நேர் உற நோக்கி பின்னும்
உலைவு உறு காதல் மிஞ்ச உரன் அழிந்து உரைக்கலுற்றான்

மேல்
$21.54

#54
மன்னவன் வாழ்வும் இந்த வள நகர் வாழ்வும் எல்லாம்
என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய்
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய்
என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே

மேல்
*விரதசாரிணி தான் ஒருப்பட்டமை கூறி,
*சந்தித்தற்கு உரிய குறியிடமும் தெரிவித்தல்
$21.55

#55
கருத்து இனி முடியும் என்று கடும் கனல் முகத்தில் தோன்றும்
திரு தகு பாவை அந்த தீயவன்-தன்னை நோக்கி
வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும்
சரித்திரத்தாலும் கொண்ட தவ விரதத்தினாலும்

மேல்
$21.56

#56
கந்தருவரும் மற்று என்னை காப்பது மறந்தார் போலும்
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார்
புந்தியில் ஒன்றும் கொள்ளேல் ஆர் இருள் பொழுதில் இன்று
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள்

மேல்
$21.57

#57
அ கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு அமுதம் ஆகி
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம்
மிக்கது ஓர் வேட்கை கூர விடுத்தலின் வேந்தன் கோயில்
கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள்

மேல்
$21.58

#58
குருட்டு இயல் மதியினானை கோது இலா அறிவில் மிக்காள்
மருட்டினள் ஆகி அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார்
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின்
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே

மேல்
*பின் வீமனை அவள் அடுத்து, கீசகனுக்குத் தான்
*கூறியவற்றைத் தெரிவித்தல்
$21.59

#59
குறி அவன்-தனக்கு நேர்ந்த கொடிய வெம் கொலை வேல்கண்ணாள்
தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி
செறிவொடு அ காளையோடு செப்பிய யாவும் செப்பி
பிறிது ஒரு கருத்தும் இன்றி பெரும் பகல் போக்கினாளே

மேல்
*கீசகன் குறியிடம் செல்ல, வீமனும் பெண்
*கோலம்கொண்டு திரௌபதியுடன் அங்கு அவன்
*வருகையை நோக்கி இருத்தல்
$21.60

#60
எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த
எல்லை இல் காதலோனும் இடை இருளிடையே அந்த
எல்லையை நோக்கி சென்றான் யமன் திசை என்ன மன்னோ

மேல்
$21.61

#61
வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால்
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான்
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல்
நடுவுறு அ பொழுதில் செவ்வி நவ்வியர் கோலம் கொண்டான்

மேல்
$21.62

#62
அங்கியில் தோன்றும் நாளாயனியுடன் அள்ளிக்கொள்ள
பொங்கிய இருளில் முன்னம் புகன்ற அ பொங்கரூடு
தங்கிய தவள மாடம்-தன்னிடை புகுந்து சான்ற
இங்கிதத்துடனே நோக்கி இருந்தனன் இமைப்பு இலாதான்

மேல்
*திரௌபதியை அப்பால் மறைத்து வைத்து, வீமன்
*மண்டபத்தில் இருக்க, கீசகனும் அடுத்து, காதல்
*மொழி பல புகல்தல்
$21.63

#63
அணங்கு அன சாயலாளை அப்புறம் கரந்து வைத்து
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை
பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் நெஞ்சு
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான்

மேல்
$21.64

#64
சாந்தினால் மெழுகிய தவள மாளிகை
ஏய்ந்த பொன் தூணிடை இலங்கும் மின் என
சேர்ந்து உறை பெண் உரு கண்டு சிந்தையில்
கூர்ந்த பேர் ஆர்வமோடு இறைஞ்சி கூறுவான்

மேல்
$21.65

#65
என் பெரும் தவ பயன் என்று அறிந்திலேன்
மின் புரை மருங்குலாய் வேட்கை விஞ்சலால்
புன் பிழை செய்தனன் பொறுத்தி நீ என
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து மேல்

மேல்
$21.66

#66
பைம் குலை குரும்பையை பழித்த கொங்கையாய்
மங்குலை புழுகு அளை வைத்த கூந்தலாய்
கங்குலில் கால் வழி காட்ட வந்தது இன்று
இங்கு உலப்புறும் எனது ஆவி ஈயவோ

மேல்
$21.67

#67
கிஞ்சுகம் மலர்ந்து நின் கிள்ளை வாய்மையால்
அஞ்சல் என்று ஓர் உரை அளித்தல் காண்கிலேன்
நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ

மேல்
$21.68

#68
வழிபடு தெய்வமும் மற்றும் முற்றும் நீ
இழிபடு பிறர் முகம் என்றும் நோக்கலேன்
கழிபடர் உற்றது என் காம நோய் எனா
மொழி பல கூறினான் முகம் புகுந்துளான்

மேல்
*வீமன் நகைத்து, கீசகனை இரு கையால் பற்றி வீழ்த்தி,
*அவனுடன் பொருதல்
$21.69

#69
கீசகன் இ முறை கிளந்த பற்பல
வாசகம் கேட்டலும் மலம் கொள் நெஞ்சுடை
பூசகர் பூசை கொள்ளாத புன் பவ
நாசக கடவுள் போல் நகைத்து நோக்கியே

மேல்
$21.70

#70
பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன்
கண்ணுடை பொறி எழும் கனலின் வந்திட
மண்ணுடை காவலன் மைத்துனன்-தனை
எண்ணுடை கைகளால் இரு கை பற்றினான்

மேல்
$21.71

#71
பற்றினான் பற்றிய பாணியால் எழ
சுற்றினான் கறங்கு என தூணம் ஒன்றினோடு
எற்றினான் சென்னியை எடுத்த தன் வினை
முற்றினான் நெடும் பெரு மூச்சன் ஆகியே

மேல்
$21.72

#72
வீமனை பிடித்த கை விலக்கி மற்று அவன்
மா முகத்து இரு கையும் மாறி மோதினான்
தீ முகத்தவனை அ செம்மல் மீளவும்
சாமுகத்தவன் என தள்ளி வீழ்த்தினான்

மேல்
$21.73

#73
ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்து என
மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும்
ஈரிடத்தினும் விலா எலும்பு நெக்கன
கூர் உகிர் தலைகளால் குருதி கக்கவே

மேல்
$21.74

#74
கேளொடு கெடுதரு கீசகன் கழல்
தாளொடு தாள் உற தாக்கி மல் கெழு
தோளொடு தோள் உற தோய்ந்து கன்னல் வில்
வேளொடு வரு நலம் விஞ்ச மேவினான்

மேல்
$21.75

#75
தாழ் வரை தட கையால் தையலாள் எதிர்
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும்
சூழ்வர சூறையில் சுற்றி பார் மிசை
வீழ்வர புடைத்தனன் மிடலில் விஞ்சினான்

மேல்
$21.76

#76
விழுந்தவன் மீளவும் வெய்துயிர்த்தனன்
எழுந்து தன் பகைவனது இருண்ட குஞ்சியை
அழுந்த வல் விரல்களால் சுற்றி ஆய் மர
கழுந்து என புடைத்தனன் கைகள் சேப்பவே

மேல்
$21.77

#77
புடைத்தனன் இவன் அவன் புடைத்த கைகளை
விடைத்தனன் அகற்றி மெய் மேவு பூதியும்
துடைத்தனன் ஆகி அ தோன்றல் வாயினை
உடைத்தனன் ஒரு கையால் ஒரு கை பற்றியே

மேல்
$21.78

#78
வீரமும் வலிமையும் விரகும் ஒத்தவர்
தீரமும் தெளிவும் நாம் செப்பற்பாலவோ
நேரமும் சென்றது நிசை எனா மிகு
சூரமும் செற்றமும் உடைய தோன்றலே

மேல்
*கீசகன் உடலைச் சுருக்கி, அவன்
*ஆவியை வீமன் போக்குதல்
$21.79

#79
மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட
தன் இரு செம் கையால் தாக்கி வான் தசை
துன்னிய மலை என சுருக்கினான் அரோ

மேல்
$21.80

#80
மாற்றினான் அவன் பெரு மையல் ஆவியை
கூற்றினார் கைக்கொள கொடுத்து தன் சினம்
ஆற்றினான் அ திறல் ஆர்-கொல் வல்லவர்
காற்றினால் வரு திறல் காளை அல்லதே

மேல்
$21.81

#81
பண்ணிய வினைகளின் பயன் அலாது தாம்
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார்
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன்
புண்ணியம் ஆனதால் புகல்வது என்-கொலாம்

மேல்
*வீமன் திரௌபதியை அழைத்து, கீசகன் உடலை அவள்
*பாதத்தில் வைத்து, அவள் நன்கு காண, மராமரத்தால்
*நெருப்பு எழச் செய்தல்
$21.82

#82
செம் கை கால் உடலொடு சென்னி துன்றிட
அங்கையால் அடக்கி நின்று அநேகம் ஆயிரம்
வெம் கை யானையின் மிடல் வீமன் வெற்பு அன
கொங்கையாள் தன்னையும் கூவினான் அரோ

மேல்
$21.83

#83
பூம் கொடி அனையவள் புறவடி புறத்து
ஓங்கிய கீசகன் உடல் பிழம்பினை
நீங்கிய வாய்மைகள் நிகழ்ந்தது என்னவே
பாங்கினில் வைத்து அடல் பவனன் மைந்தனே

மேல்
$21.84

#84
விடும் குழை மராமரம் ஒன்று வேருடன்
பிடுங்கினன் கைகளால் பிசைந்து தீ எழ
சுடும்-கொல் என்று அஞ்சிலன் சுவாலை செய்தனன்
நெடும் கணாள் கண்டு தன் துயரம் நீங்கவே

மேல்
*கீசகன் தம்பிமார் துயிலுணர்ந்து, தீபங்களுடன்
*சோலையை நேடுதல்
$21.85

#85
தோட்டு மென் மலர் சோலையின் ஓதையும்
மோட்டு வன் கர முட்டியின் ஓதையும்
மாட்டு வண் சுதை மண்டபத்து ஓதையும்
கேட்டு உணர்ந்தனர் கீசகன் தம்பிமார்

மேல்
$21.86

#86
தொய்யில் ஆதி சுதேட்டிணைக்கு ஒப்பனை
கையில் ஆர் அழகு ஏற கவின் செயும்
தையலாள் பொருட்டாக தனக்கு உறும்
மையலால் மிக வாடி வருந்தினான்

மேல்
$21.87

#87
வண்டு அறாத மலர் குழல் வல்லியை
கண்ட காவில் இ கங்குல் பொழுதிடை
சண்ட வேக களிறு அன்ன தன்மையான்
கொண்ட மாலின் குறுகினன் போலுமால்

மேல்
$21.88

#88
தூவி வாசம் துளி மது சோலையில்
ஏவலால் இயற்றும் எழில் பாவை மெய்
காவல் ஆகிய கந்தருவ பெயர்
தேவரால் வெம் செரு உளது ஆனதோ

மேல்
$21.89

#89
அழிந்த கீசகன் அன்றி மற்று உண்டு என
மொழிந்த தம்பியர் நூற்றொருமூவரும்
கழிந்த தீ உமிழ் கண்ணினராய் உயிர்
ஒழிந்துபோதும் என்று உன்னினர் ஓடினார்

மேல்
$21.90

#90
நகரி எங்கும் வெருவர நள்ளிருள்
நுகருமாறு பல் நூறு ஒளி தீபமோடு
அகரு நாறு தண் காவில் அரும் பகல்
நிகரும் என்ன நெருங்கினர் நேடினார்

மேல்
*கீசகன் உடலைக் கண்ட தம்பிமார், அவன்
*மரணத்திற்குக் காரணமான வண்ண மகளையும்
*அவனோடு வைத்து எரிக்க எண்ணுதல்
$21.91

#91
சுதை நிலா ஒளி சூழ் மண்டபத்திடை
சிதையும் மெய்யொடும் செம்பொன் சிலம்பு என
கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால்
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே

மேல்
$21.92

#92
எண் இலா மனத்து எம்முனை எண்ணுடை
விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம்
வண்ண மா மகள்-தன்னையும் வன்னியால்
அண்ணலோடும் அடுதும் என்றார்களே

மேல்
*உபகீசகர் திரௌபதியைப் பற்ற, அவள் அரற்றுதல்
$21.93

#93
சொல்லும் ஆடவர் சொல்லினராயினும்
கொல்லுமோ கனல் தான் பெற்ற கோதையை
மல்லல் மாலையினார் வந்து பற்றலும்
அல்லல் கூர அரற்றினளால் அவள்

மேல்
$21.94

#94
வெருவரும் கரும் கங்குலில் வெம் கொலை
நிருபர் என்னை நெருப்பிடை வீழ்த்துவான்
கருதினார்கள் மெய் காக்கும் கடவுள்காள்
வருதிர் என்று கண் வார் புனல் சோரவே

மேல்
*வீமன் விரைந்து வந்து, மரங்களைப் பிடுங்கிப் புடைத்து,
*உபகீசகர்கள் ஓட ஓடக் கொன்று அழித்தல்
$21.95

#95
மடை பெரும் பள்ளி எய்திய மாருதி
கிடைப்பது அன்று இ கிளர் பெரும் போர் எனா
தொடை பெரும் பவனத்து அனல் சோர்தர
புடைப்ப ஓடினன் போர் மத மா அனான்

மேல்
$21.96

#96
அக பொழில் கண்ட அ மரம் யாவையும்
மிக பிடுங்கினன் வேரொடும் கோட்டொடும்
உக புடைத்தனன் ஓட தொடங்கினார்
தக செயா மதி கீசகன் தம்பிமார்

மேல்
$21.97

#97
போனபோன திசை-தொறும் போய் தொடர்ந்து
ஆன வானவன் ஒக்க அ கோட்டினால்
மானமும் அவர் ஆவியும் வாங்கினான்
ஏனையோர்களும் தம்முனொடு எய்தினார்

மேல்
*உபகீசகர்களின் மரணத்தால் அரசன் மாளிகையோர்
*வருந்த, வீமனும் திரௌபதியும் தத்தம்
*இடத்தைச் சேர்தல்
$21.98

#98
துவன்று கற்புடை தோகையை விட்டு முன்
நுவன்ற கீசகர் நூற்றொருமூவரும்
அவன்-தன் வாகுவினால் அழிவுண்ட பின்
கவன்றதால் அ கடி நகர் எங்குமே

மேல்
$21.99

#99
கற்கும் யாழுடை கந்தருவர்க்கு எதிர்
நிற்பரோ உடன் நேர் பொர மானவர்
கிற்கும் மைந்துடை கீசகர் யாவரும்
தற்கினால் மடிந்தார் தகவு ஒன்று இலார்

மேல்
$21.100

#100
என்று மா நகர் யாவும் நடுங்கிட
துன்று கங்குலில் சோரர்-தம் ஆர் உயிர்
பொன்றுவித்த பொருநனும் பூவையும்
சென்று தத்தம சேர்விடம் நண்ணினார்

மேல்
*சூரியன் உதிக்கவே, கீசகர் மரணம் எங்கும் பரவுதல்
$21.101

#101
கரிய கங்குல் கனை இருள் போர்வையோடு
இரிய வந்த இருள்வலி-தன்னினும்
புரியின் அன்று புரிந்த அ போரும் வன்
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே

மேல்
*தன் மைத்துனன்மார் மரணத்தால் விராடன் மெலிவுறுதல்
$21.102

#102
புலியினும் பெரும் போரில் தனித்தனி
வலியர் ஆகிய மைத்துனர் யாரையும்
பலியிடும் கந்தருவரை பார்க்கவே
மெலிவு உழந்தனன் வில் கை விராடனே

மேல்
*’கரந்து உறையும் காலம் கழிந்ததுஆதலின், விரைவில்
*வெளிப்படுவோம்!’ என்ற எண்ணத்தோடு
*பாண்டவர் இருத்தல்
$21.103

#103
காண்தகும் தம வேடம் கரந்து உறை
ஆண்டு சென்றது இனி சில நாள் என
மீண்டு தோன்றுதும் என்று விரதராம்
பாண்டு மைந்தரும் பான்மையின் நண்ணினார்

மேல்

22. நிரை மீட்சிச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$22.1

#1
தொழுவார்-தம் வினை தீர முன் கோலமாய் வேலை சூழ் பார் எயிற்று
உழுவானை நல் நாமம் ஒன்றாயினும் கற்று ஒர் உரு ஓதினார்
வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன்
புழு ஆக ஒன்றில் பிறந்தாலும் நரகில் புகார் காணுமே

மேல்
*துரியோதனன் பாண்டவரை நாட ஒற்றர்களை ஏவ, அவர்கள்
*எங்கும் தேடிக் காணாமையைத் தெரிவித்தல்
$22.2

#2
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும்
சூது ஆடி அழிவுற்று அடைந்தோர்கள் சரிதங்கள் சொன்னோம் இனி
பாதாரவிந்தத்து மருவார் விழ கொண்டு பார் ஆளும் வெம்
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம்

மேல்
$22.3

#3
ஈர்_ஆறும் ஒன்றும் சுரர்க்கு உள்ள நாள் சென்ற இனி நம்முடன்
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று
ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான் அ ஒற்றாள்களும்
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி விரைவின்கண் வந்தார்களே

மேல்
$22.4

#4
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ்
நாடு என்று நகர் என்று நாடாத திசை இல்லை நாள்-தோறும் யாம்
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய்
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே

மேல்
*வீடுமன் பாண்டவர் வசிக்கும் நாட்டின் நிலை எடுத்துரைத்தல்
$22.5

#5
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார்
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான்

மேல்
*ஒற்றாள்களில் ஒருவன் விராடனது நாட்டின் வாழ்வும், கீசகன் ஒரு
*வண்ண மகள் காரணத்தால் மாண்ட செய்தியும் கூறுதல்
$22.6

#6
ஒற்றாளில் ஒருவன் பணிந்து என்றும் எ வாழ்வும் உண்டாகியே
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால்
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான்

மேல்
*கன்னன் உரைத்த உபாயப்படி, துரியோதனன் ஏவலால்,
*திரிகர்த்தன் விராடனது ஆநிரைகளைக் கவர்தல்
$22.7

#7
வண் தார் விராடன்-தன் வள நாடு தண்டால் மலைந்தே தொறு
கொண்டால் அவன் சூழலில் சூழும் வினயம் குறிப்போர் இருப்பு
உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே

மேல்
$22.8

#8
தக்கோர் தகும் சொற்கள் கேளாத துரியோதனன் சொல்லினால்
மிக்கோர் மிலைச்சும் செழும் தாம விறல் வெட்சி மிலை தோளினான்
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன்
அக்ரோணி படையோடு போய் ஆன் அடித்தான் அவன் சார்பிலே

மேல்
*நிரை காவலர் பகைவர் நிரை கொண்டமையை விராடனுக்கு உணர்த்த,
*அவன் சேனைகளுடன் திரிகர்த்தனை நெருங்கித் தடுத்தல்
$22.9

#9
கரை காண அரிதான கடல் ஒத்த வெம் சேனை கை சூழவும்
தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும்
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல்
நிரை காவல் நின்றோர் பணிந்து ஓதினார் தெவ்வர் நிரை கொண்டதே

மேல்
$22.10

#10
செரு மிக்க படையோடு சதியாக மதியாது திரிகத்தர் கோன்
நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான்

மேல்
$22.11

#11
ஒண் தூளி வானம் புதைக்க பல் இயசாலம் ஒலிபட்டிட
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான்
ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே

மேல்
*விசயனை ஒழிந்தோர் நால்வரும் போர் நலம் காண உடன்
*செல்ல, போரில் திரிகர்த்தன் சேனை பின்னிடுதல்
$22.12

#12
உள் பேடியாய் வைகும் வில் காளை அல்லாத ஒரு நால்வரும்
நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார் போர் நலம் காணவே
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும்
பெட்பு ஏறி அமர் செய்ய முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே

மேல்
*திரிகர்த்தன் போரில் அம்பு எய்து, விராடன் சேனை
*பின்னிடுமாறு செய்து, அவனைத் தன் தேரில் பிணித்தல்
$22.13

#13
மெய் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல் வென்னிட்ட பின்
கை கொண்ட நிரையை கடத்தி பொலம் பொன் கழல் காலினான்
செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தை திருத்தாமன் மேல்
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான்

மேல்
$22.14

#14
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம்
தாம சரம் கொண்டு தேர் பாகு கொடி வாசி தனுவும் துணித்து
ஆம் அச்சம் உற மற்று அவன் கோல மார்பத்தும் அம்பு ஏவினான்

மேல்
$22.15

#15
தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும்
துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால்
முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே

மேல்
*கங்கனது தூண்டுதலால் பலாயனன் பொருது, விராடனை மீட்டு,
*திரிகர்த்தனையும் அவ் விராடனது தேரில் கட்ட, பகைவர்
*சேனை அழிந்து ஓடுதல்
$22.16

#16
திண் திறல் சிலை விராடனை தேரொடும் பிணித்து
கொண்டு போதலும் குருகுல கோமக முனிவன்
கண்டு தன் திரு தம்பியை கடைக்கணித்தருள
மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான்

மேல்
$22.17

#17
உகத்தின் ஈறு-தோறு ஓதையோடு ஊதையாம் தாதை
நகத்தினால் உயர் நகங்களை நறுக்குமா போல
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால்
தகர்த்து வில்லொடும் அகப்படுத்தினன் அவன்-தனையும்

மேல்
$22.18

#18
வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை ஒரு பொன்
தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன்
சோரி பாய் தடம் தோள்களை வடத்தினால் துவக்கி
மூரி ஏறு என மீண்டனன் முறிந்தது அ சேனை

மேல்
*விராடன் பலாயனனுக்கு நன்றி கூறுதல்
$22.19

#19
பொரு முகத்தினில் பகைவனை புயம் உற பிணித்து
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை விராடன்
செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு
ஒருமுகத்தினும் இல்லை கைம்மாறு என உரைத்தான்

மேல்
*தாமக்கிரந்தி பகைவர் குதிரைகளைக் கவர,
*தந்திரிபாலன் ஆநிரைகளை மீட்டல்
$22.20

#20
சேவலான் என தயித்தியன் அனைய அ திகத்தர்
காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு
மா வலான் வய மா பதினாயிரம் வௌவ
கோ வலான் அவன் கொண்ட கோ மீளவும் கொண்டான்

மேல்
*சூரியன் மறைந்த காட்சி
$22.21

#21
துன்னலன்-தனை தோள் உற துவக்கி முன் தந்த
பன்னு நூல் மடை பலாயனன் கண்டு பாவித்தாங்கு
அன்ன காலையில் அருக்கனை தேரொடும் அணைத்து
மன்னு தன் திசை வன் சிறை படுத்தினன் வருணன்

மேல்
*கங்கன் சொற்படி, திரிகர்த்தனைத் தளை நீக்கி, அவனைத்
*தேரில் செல்ல விடுத்து, வேறு பகைப் படைகளின்
*வரவு கருதி, விராடன் அங்கு இருத்தல்
$22.22

#22
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள்
துங்க மா முனி சொற்படி தோள் வடம் நெகிழ்த்து
சிங்கம் அன்ன அ திகத்தனை செல்க என விடுத்தான்
அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே

மேல்
$22.23

#23
போர் அணி படையொடும் அவன் போன பின் தனது
தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன்
பேர் அணிப்பட வகுத்து மற்று யாரினும் பெரியோன்
ஈர் அணி படை வரும் என கங்குல் அங்கு இருந்தான்

மேல்
*திரிகர்த்தன் படைகள் சிதறி ஓடியமையைத் துரியோதனன்
*கேட்டு, வட திசையில் பெருஞ் சேனையுடன் வந்து
*ஆநிரை கவர்தல்
$22.24

#24
கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க
தொட்ட பைம் கடல் சூரியன் தோன்றும் முன் தோன்றி
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான்

மேல்
$22.25

#25
வளைய நாடு எலாம் மன்னவன் வரூதினி பரப்பி
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெம் கனல் கொளுத்தி
அளையும் மா மணி ஆநிரை கவர்தலும் ஆயர்
உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார்

மேல்
*ஆயர் விராடன் மகன் உத்தரனிடம் ஓடி வந்து, செய்தி தெரிவித்தல்
$22.26

#26
குடம் நிறைப்பன குவி முலை கோ நிரை மீட்பான்
திடனுடை புய மன்னவன் தென் திசை சென்றான்
வட திசை புலம் முழுவதும் மாசுண கொடியோன்
அடல் வய படை ஆழியின் பரந்ததை அன்றே

மேல்
$22.27

#27
நாட்டில் உள்ளன பலன்களும் கவர்ந்தனர் நறும் தண்
காட்டில் உள்ளன சுரபியின் கணங்களும் கவர்ந்தார்
கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சு போல் இனி நீ
வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய்

மேல்
*’நகர் காமின்!’ என்று மகளிரைச் சுதேட்டிணை சொல்ல,
*உத்தரன் தாயை வணங்கி, ‘சாரதி இருப்பின் யான்
*சென்று பகைவரை வெல்வேன்’ எனல்
$22.28

#28
என்ற போதில் அ புதல்வனை பரிவுடன் ஈன்றாள்
நின்ற மங்கையர்-தங்களை நிரைநிரை நோக்கி
சென்ற காவலன் வரும் துணை செம் கையில் படை கொண்டு
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள்

மேல்
$22.29

#29
உரைத்த அன்னையை கதுமென உத்தரன் வணங்கி
நரைத்த ஓதி நின் திருமொழி நன்று என நகையா
அரைத்த ஆரமும் ஆரமும் மாலையும் அணிந்து என்
வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ

மேல்
$22.30

#30
கனை கடற்படையுடன் நிரை கணம் கவர்ந்தவரை
முனைபட பொருது இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன்
வினைமுகத்தினை அறிந்து தேர் விசையுடன் விட என்
நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன் என்றான்

மேல்
*வண்ண மகள், ‘பேடி தேர் விடுவாள்’ என்ன, சுதேட்டிணை
*ஏவலால் பேடி தேர் விட, உத்தரன் போருக்குச் செல்லுதல்
$22.31

#31
உத்தரன் புகல் உறுதி கேட்டு ஒப்பனைக்கு உரியாள்
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை குறுகி
வித்தரம் பெறு தேர் விடும் விசயனுக்கு இவள் என்று
அ தரம் பெறு பேடியை காட்டினள் அன்றே

மேல்
$22.32

#32
நாடி வாசியின் நல்லன நான்கு அவை பூட்டி
தேடி ஆயுதம் சிலை முதல் தெரிந்தவை கொண்டு
கோடி கோடி பைம் கோதையர் குழீஇயினர் வாழ்த்த
பேடி தேர் விட சென்றனன் சுதேட்டிணை பிள்ளை

மேல்
$22.33

#33
விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து ஆங்கு
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல்
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான்

மேல்
$22.34

#34
விண் கொளா மதி மேன்மை கொள் மீன் இனம் என்ன
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை
எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன்
கண் கொளாவகை புகுந்து தன் கண்ணுற கண்டான்

மேல்
*சேனையைக் கண்டு உத்தரன் நடுங்கிச் சோர, பேடியாம்
*பிருகந்நளை அவனுக்குத் தேறுதல் கூறுதல்
$22.35

#35
கை நடுங்கவும் கால் நடுங்கவும் கருத்து அழிந்து
மெய் நடுங்கவும் நா புலர்ந்து உயிர்ப்பு மேல் விஞ்சி
சொல் நடுங்கவும் சுடர் முடி நடுங்கவும் சோர்ந்தான்
மை நெடும் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன்

மேல்
$22.36

#36
அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆர் உயிர் அடுதல்
துஞ்சல் என்று இவை இரண்டு அலால் துணிவு வேறு உண்டோ
வெம் சமம்-தனில் வந்து புண்படாது இனி மீண்டால்
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய்

மேல்
$22.37

#37
நிலையும் முட்டியும் நிலை பெற நின்று நேர்பட திண்
சிலை வளைத்து வெம் சிலீமுகம் சிற்சில தொடுத்து
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு மலைந்தால்
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார்

மேல்
*உத்தரன் தேறாது, ‘மீள வேண்டும்!’ என்ன, அவள்,
*’யான் பொருது பகை வெல்வேன்’ எனல்
$22.38

#38
தூண்டு மா இவை சொரி மத களிறு இவை துரங்கம்
பூண்ட தேர் இவை பதாதி மற்று இவை என புகல
ஈண்டு நின்றவை யாவையும் யா என தெரியா
மீண்டு போவதே உறுதி என்றனன் இகல் வீரன்

மேல்
$22.39

#39
வெயர்த்த மேனியை நறும் பனி நீரினால் விளக்கி
அயர்த்து நீ முதுகிடாது ஒழி இமைப்பொழுது ஐயா
உயர்த்த பல் கொடி பகைஞரை தனித்தனி ஓட்டி
பெயர்த்து நல்குவேன் நிரையும் என்று உரைத்தனள் பேடி

மேல்
*உத்தரன் தேரில்நின்று குதித்து ஓட, அவனைப் பிடித்து
*வந்து தேரில் கட்டி, முன் ஒளித்த வில் அம்புகளையும்
*கொண்டு, விசயன் விரைவில் களம் புகுதல்
$22.40

#40
கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா
அடி தலம் பிடர் அடித்திட ஓடலும் அவனை
தொடி தடம் புயம் இரண்டையும் தொடர்ந்து போய் துவக்கி
பிடித்து வந்து ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான்

மேல்
$22.41

#41
பிணித்த தேரினை பெற்றமும் பிற்பட கடாவி
திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும்
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும்
கணித்த எல்லையில் கொண்டு மீண்டு அமர் களம் கலந்தான்

மேல்
*மரத்திலிருந்து கொண்டு வந்த படைகள் விசயனுடையவை
*என்பது தெரிந்து, உத்தரன் அவனைப் பற்றி உசாவுதல்
$22.42

#42
எரி புற தரு தரு படை யா என வினவ
கிரி புற பெரும் கான் உறை கிரீடிய என்ன
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று
அரி புற தடங்கண்ணியை கேட்டனன் அவனும்

மேல்
*’விசயன் விரைவில் இங்குத் தோன்றுவான்’ என்று கூறி,
*உத்தரனது கட்டை அவிழ்த்து, அவனைத் தேர் செலுத்தத் தூண்டுதல்
$22.43

#43
கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும்
புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர்
அரிடம் ஆன தன் விதியினால் பேடியும் ஆனான்

மேல்
$22.44

#44
யாண்டு சென்றிலது இன்னமும் ஈர் இரு கடிகை
வேண்டுமால் இனி ஈண்டை அ விசயனும் தோன்றும்
மீண்டு போகலை விடு விடு விரை பரி தடம் தேர்
தூண்டு நீ என தோளில் அ துவக்கையும் விடுத்தான்

மேல்
*உத்தரன் தேரில் வரும் பேடியைத் துரோணன் முதலியோர் ஐயுறுதல்
$22.45

#45
அறிந்து தாள் விழுந்து எழுந்து பின் ஆங்கு அவன் அருளால்
செறிந்த மால் பெரும் சிறப்பை அ சிறுவனும் பெற்று
பிறிந்த பற்பல பேர் அணி நால் வகை படையும்
முறிந்து போக அ தேர் விடு தொழிலினில் மூண்டான்

மேல்
$22.46

#46
ஓடினானும் இ தேர் விரைந்து ஊர்பவன் என்றும்
பேடி நாம் முதல் ஐயுறும் பெருந்தகை என்றும்
நாடினார் பலர் நந்தியாவர்த்த நாள்மாலை
சூடினான் நெடும் சேனையில் துரோணனே முதலோர்

மேல்
*’நீ அஞ்சாது தேர் விடு; நான் அம்பு பல எய்வேன்’ என்று
*உத்தரனுக்குக் கூறி, விசயன் அம்பு எய்து
*பலரையும் அழித்தல்
$22.47

#47
பேடி அன்று தன் பெண்மையை ஆண்மையாய் பிறர் கொண்
டாட அந்த வெம் சாபமும் தொடி கையில் ஆக்கி
கோடி அம்புகள் ஓர் ஒரு தொடையினில் கோத்து
வீடுவிப்பன் நீ அஞ்சிடா விடுக தேர் என்றான்

மேல்
$22.48

#48
என்றபோது அவன் தேரினை இமைப்பினில் செலுத்த
சென்று போர் முனை சிலை விடு சிலீமுகங்களினால்
கொன்ற போர் மன்னர் ஈறு இலர் குருகுலத்தவராய்
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து உளம் நெளித்தார்

மேல்
*விதுரன், ‘நம் நிலத்தில் இவர் வரும்படி போர் செய
*வேண்டும்’ என, வீடுமன் முதலியோரும் அதுவே தக்கது எனல்
$22.49

#49
அன்று போல் அலன் அருச்சுனன் அம்பிகாபதி-பால்
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று
அன்று போரினில் அவுணரை அமரருக்கு ஆக
வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான்

மேல்
$22.50

#50
தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது என்று
இ நிலத்தினில் பழமொழி அறிதி நீ இறைவ
எ நிலத்தினும் உனக்கு எளிதாயினும் இவர் நம்
நல் நிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்றால்

மேல்
$22.51

#51
என்று கூறினன் விதுரனும் ஏனை அங்கு அருகு
நின்ற வீடுமன் துரோணனும் நினைவு இது என்றார்
அன்று நாக வெம் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான்
குன்றம் ஆயினும் நீறு எழும் அருகுற குறுகின்

மேல்
*துரியோதனன் நெஞ்சம் கொதித்து நிற்க, கன்னன்
*ஏனையோரை இகழ்ந்து கூறுதல்
$22.52

#52
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று
வீர வெம் சிலை வளைத்த கை வீரனும் பேடி
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்-கொல் என்று இசைத்தான்
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன்

மேல்
*கோவலரை நிரை கொண்டு போகச் சொல்லி, தம்பியரோடு
*தானும் பேடியை எதிர்க்கத் துரியோதனன் மீளுதல்
$22.53

#53
கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக
தண்டு நிற்க என தம்பியர் அனைவரும் தானும்
திண் திறல் பெரும் பேடியை தேர் மிசை கண்டு
மிண்டுவீர் என கூறியே சுயோதனன் மீண்டான்

மேல்
*விசயன் அரசர்களைத் தடுத்து, ஆநிரைகளை மீட்டல்
$22.54

#54
மான மா முடி மன்னரை விலக்கி வல் விரைந்து
கோ நிரை குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து
போன பேடி வெம் பூசலும் பொழுதுற பொருது
தூ நிறத்து இளம் கன்றுடை தொறுக்களும் மீட்டான்

மேல்
*துரியோதனன் பக்கத்து இடையர் அடங்க, விராடன்
*பக்கத்து இடையர் மகிழ்ச்சியினால் ஆர்த்தல்
$22.55

#55
முந்த ஆன் தொறு மீட்டலும் முன் கவர் பொதுவர்
வெந்த நெய் என ஆரவம் அடங்கினர் மிகவும்
அந்த நெய்யினில் பால் துளி உகுத்து என ஆர்த்தார்
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர்

மேல்
$22.56

#56
பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின பருவ
சூல் எடுத்த நல் வயிற்றின மழ விடை தொடர்வ
கோல் எடுத்து இளம் கோவலர் கூவினர் துரப்ப
வால் எடுத்தன துள்ளி மீண்டு ஓடின வனமே

மேல்
*நாலு நாழிகையில் சாபம் நீங்க, விசயன் தன் முன்னை உருப்
*பெற்று, தனது தேரினையும் கொடியினையும் பெறுதல்
$22.57

#57
கடிகை நால் அவண் சென்ற பின் கடை சிவந்து அகன்ற
நெடிய கண்ணி அன்று இட்ட வெம் சாபமும் நீங்க
கொடியின் மீது எழும் அனுமனை குறிக்க அ கொடியும்
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான்

மேல்
$22.58

#58
உரிய தேரினை மீதுகொண்டு உத்தரன் செலுத்த
கரிய மேனியன் செய்ய தாமரை தடம் கண்ணன்
புரிய வாங்கிய சிலையினன் நின்றனன் பொலம் பொன்
கிரியின் மீது எழும் மரகத கிரி என கிளர்ந்தே

மேல்
*வேற்று உரு ஒழித்து நின்று, விசயன் நாண் ஒலி
*செய்யப் பகைவர் நடுங்குதல்
$22.59

#59
படும் குறும் பனி புதைத்தலின் பரிதி தன் உருவம்
ஒடுங்குமாறு என ஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து
நெடும் கொடும் கணை நிருபன் வெம் சேனையின் வேந்தர்
நடுங்குமாறு முன் தோன்றினன் நரன் எனும் நாமன்

மேல்
$22.60

#60
செரு செய்வான் வரு சேனை வெண் திரையையும் கடப்பான்
பரு சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல
உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன்

மேல்
$22.61

#61
மரு மிகும் தொடை தடம் புய மகபதி மதலை
பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால்
செருமி எங்கணும் கரி பரி தேர் மிசை நின்றோர்
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார்

மேல்
*பல வகை ஒலிகளைக் கேட்ட உத்தரன் தேர் விடு
*தொழில் மறந்து மயங்கி வீழ, விசயன் அவனைத்
*தேற்றித் தேர் விடச் செய்தல்
$22.62

#62
குறித்த சங்கு ஒலி சிங்க நாதத்து ஒலி குனி வில்
செறித்த நாண் ஒலி செவிப்பட சிந்தனை கலங்கி
பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று
மறித்தும் வீழ்ந்தனன் மா விடு தொழிலையும் மறந்தே

மேல்
$22.63

#63
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல்
வீழ்ந்த பாகனை மீளவும் விரகுற தேற்றி
சூழ்ந்த தன் பெரும் துணைவனை சூதினால் துரந்து
வாழ்ந்த மன்னன் மேல் ஏவினான் வரி சிலை வல்லான்

மேல்
$22.64

#64
மச்ச நாடன் மா மதலை அ மன்னவன் மொழியால்
அச்சம் அற்று இருந்து உளவுகோல் அருணனின் கொள்ள
உச்ச வானிடை பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட
பச்சை வாசியின் ஓடின சுவேத வெம் பரி மா

மேல்
*துரியோதனனை நெருங்கி, விசயன் பொருதல்
$22.65

#65
உரவினால் வட மேருவை கொடு முடி ஒடித்து
விரவி என் பெரும் தாதை நின் தாதையை வென்றான்
பரிவின் நின்னை யான் வெல்வன் என்று அவனிபன் பதாகை
அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான்

மேல்
$22.66

#66
வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய்
தொட்ட வாளியான் அடி முதல் முடியுற துணிப்புண்டு
இட்ட மா மணி கவசமும் பிளந்து எதிர்ந்துள்ளார்
பட்டொழிந்தனர் ஒழிந்தவர் யாவர் புண்படாதார்

மேல்
$22.67

#67
வேகம் வற்றிய நதி அன வித நடை புரவி
பாகு அவற்றினை தலை அற மலைந்து பாழ்படுத்தி
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச
நா கவற்றிய புன்மொழி நிருபனை நகைத்தான்

மேல்
*தப்பியோடத் தேர் ஒன்றில் பாய்ந்த துரியோதனனை,
*விசயன் இகழ்ந்து மொழிதல்
$22.68

#68
பாகும் வாசியும் அமைந்தது ஓர் தேர் மிசை பாய்ந்து
மாகு சூழவும் தப்பிய வரி நிற மா போல்
ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து
கோகு தட்டிடு தனஞ்சயன் இவையிவை கூறும்

மேல்
*அருச்சுனன் துரியோதனனை இகழ்தல்
$22.69

#69
கார்முகம் கைத்தலத்து இருப்ப கைம்மிகு
போர்முகம் தன்னில் நீ புறம்தந்து ஏகினால்
ஊர்முக களிற்றின் மேல் உலாவும் வீதியின்
வார் முக கன தன மாதர் என் சொலார்

மேல்
$22.70

#70
இருபுறம் சாமரம் இரட்ட திங்கள் போல்
ஒரு குடை நிழற்ற இ உலகம் நின்னதா
மருவலர் கைதொழ வாழுகின்ற நீ
பொரு முனை காண்டலும் போதல் போதுமோ

மேல்
$22.71

#71
உன் பெரும் துணைவரோடு உன்னை ஓர் கணத்து
என் பெரும் கணைகளுக்கு இரைகள் ஆக்குவேன்
வன் பெரும் கொடி மிசை மடங்கல் ஏற்றினான்
தன் பெரும் வஞ்சினம் தப்புமே-கொலாம்

மேல்
$22.72

#72
எங்களை கானில் விட்டு இரவி ஏக வெண்
திங்களை போல் நெடும் திகிரி ஓச்சினீர்
சங்கு அளை பயில் வள நாடன் தண்டினால்
உங்களை களப்பலி ஊட்டும் நாளையே

மேல்
$22.73

#73
இரவலர் இளையவர் ஏத்தும் நாவலர்
விரவிய தூதுவர் விருத்தர் வேதியர்
அரிவையர் வெம் சமர் அஞ்சுவோர் பெரும்
குரவர் என்று இவர்களை கோறல் பாவமே

மேல்
*அப்போது, துரோணன் முதலியோரும் அருச்சுனனை வந்து வளைத்தல்
$22.74

#74
பற்பல உரை இவன் பகரும் ஏல்வையில்
சொல் பயில் நான்மறை துவசன் வீடுமன்
கற்பகம் நிகர் கொடை கன்னன் ஆதியோர்
மல் புய நிருபனை வந்து கூடினார்

மேல்
*கன்னன் போருக்கு அழைக்க, அவனுடன் விசயன் பொருதல்
$22.75

#75
மின்னுடன் மின்மினி வெகுளுமாறு போல்
தன்னுடன் நிகர் இலா தட கை வண்மையான்
மன்னுடன் இகல்வது வார்த்தை அன்று இனி
என்னுடன் மலைதி நீ என்று கூறினான்

மேல்
$22.76

#76
கர கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு
உர கொடுவரியின் மேல் ஓடும் யாளி போல்
நிரக்கும் அ நிருபனும் நிற்க வந்து போர்
இரக்கும் அ கன்னன் மேல் இரதம் ஏவினான்

மேல்
$22.77

#77
இரதமும் இரதமும் எதிர்ந்தபோது இரு
குர துரகதங்களும் குமுறி ஆர்த்தன
உரைதரு பாகரும் உடன்று கூவினார்
விரை தனு வளைத்தனர் வீரர்-தாமுமே

மேல்
$22.78

#78
இருவரும் எதிரெதிர் ஏவும் வாளியால்
வெருவரும் இருள் உற விசும்பு தூர்த்தனர்
பொரு அரும் அமர் நெடும் போது தாக்கியும்
ஒருவரும் இளைத்திலர் ஒத்த ஆண்மையார்

மேல்
*கன்னன் மூன்று முறை விசயனுக்குத் தோற்றோடுதலும்,
*அசுவத்தாமன் அவனை இகழ்ந்து பேசுதலும்
$22.79

#79
மற்று ஒரு தொடையினில் சுவேதவாகனன்
முற்று ஒரு கணத்திடை மூன்று கோல் விட
இற்று ஒரு கணத்திடை இவுளி பாகு தேர்
அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன்

மேல்
$22.80

#80
ஒருவியிட்டு ஓடி மற்று ஓர் ஒர் தேர் மிசை
மருவியிட்டு எதிருற வந்து மோதியும்
உருவியிட்டன கணை ஒன்று போல் பல
வெருவியிட்டனன் அவன் மீள மீளவே

மேல்
$22.81

#81
இ முறை வந்துவந்து எதிர்ந்து வெம் சமர்
மும்முறை முறிதலும் முனிவன் மா மகன்
அ முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை
தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான்

மேல்
$22.82

#82
தேரும் ஒன்று ஒருவனே தேரில் ஆளும் இங்கு
யாரும் அஞ்சுதிர் என இகழ்ந்து உரைத்த நீ
போர் உடைந்து ஓடுதல் போதுமோ நறும்
தாருடன் பொலிதரு தாம மார்பனே

மேல்
$22.83

#83
சொல்லலாம் இருந்துழி சொன்ன சொற்படி
வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ
மல்லல் ஆளியை பல வளைந்து கொள்ளினும்
கொல்லலாய் இருக்குமோ குஞ்சரங்களால்

மேல்
*துரோண வீடுமர்களின்மேல் அருச்சுனன் அம்பு செலுத்துதல்
$22.84

#84
கொழுதும் அம்பினும் மிக கொடிய கூற்று இவை
பழுது அறு நாவினான் பகரும் வேலையில்
முழுது உணர் முனியையும் முந்தை-தன்னையும்
தொழுது பற்குனன் சில தொடைகள் ஏவினான்

மேல்
*துரோணன் தன்னை நோக்கித் தேரைச் செலுத்த, விசயன்
*அவனைத் தொழுது, சில கூறுதல்
$22.85

#85
தாள் இணை இறைஞ்சிய தனஞ்சயன் தொடும்
வாளி கண்டு உளம் மிக மகிழ்ச்சி கூரவும்
மீளிமை உடைய அ வீரன் மீது எழும்
தூளி செய் தேரினை துரோணன் உந்தினான்

மேல்
$22.86

#86
உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி
சிந்தையில் அன்பு கூர சேவடி பணிந்து போற்றி
அந்தணர் அரசே உன்-தன் அருளினால் அடவி நீங்கி
வந்தனம் என்று சிற்சில் வாசகம் இயம்புவானே

மேல்
*’உன்னோடு போர் புரிதல் தகாது’ என்ற விசயனை நோக்கி,
*துரோணன்,’நான் செஞ்சோற்றுக் கடன் கழிக்கப் பொருதல் வேண்டும்’ எனல்
$22.87

#87
யாதும் ஒன்று அறியா என்னை இவன் அலாது இலை என்று இந்த
மேதினி மதிக்குமாறு வில் முதல் படைகள் யாவும்
தீது அற தந்த உண்மை தெய்வம் நீ என்றால் பஞ்ச
பாதகம்-தன்னில் ஒன்று உன் பதயுகம் பிழைப்பது ஐயா

மேல்
$22.88

#88
மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை
மின்னொடும் உருமேறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால்
நின்னொடும் கிருபனோடும் நின் மகனோடும் முந்தை
தன்னொடும் புரியேன் வெம் போர் தக்கதோ சரதம் பாவம்

மேல்
$22.89

#89
அ முனி-தன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல வல் வில்
கை முனிவனும் செஞ்சோற்று கடன் கழித்திடுதல் வேண்டும்
தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற
வெம் முனை காணுமாறு உன் வில் வளைத்திடுக என்றான்

மேல்
*துரோணன் விசயனுடன் பொருது தோற்றோடுதல்
$22.90

#90
குருவும் அ குருவை தப்பா குருகுல கோவும் தங்கள்
அரு வரை தோளில் நாணி அறைதர பிறைவில் வாங்கி
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன
ஒருவருக்கொருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார்

மேல்
$22.91

#91
அதிரதர்-தம்மை எண்ணில் அணி விரல் முடக்க ஒட்டா
முதிர் சிலை முனியும் வீர முனிவு இலா முகனும் விட்ட
கதிர் முனை பவன வேக கடும் கொடும் பகழி யாவும்
எதிரெதிர் கோத்த அல்லால் பட்டில இருவர் மேலும்

மேல்
$22.92

#92
வண்டு-தான் முரலும் கஞ்ச மாலையான் பயிற்றுவித்து
பண்டு தான் கண்ட கூற்றின் பதின்மடங்கு உயர்ந்த பண்பால்
மிண்டு தானவரை வென்ற விறலுடை விசயன் வின்மை
கண்டு தான் அவன்-தனோடு கற்பதற்கு உன்னினானே

மேல்
$22.93

#93
ஏறு தேர் முரிய வேதம் எழுதிய துவசம் வீழ
தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய பின்னர்
ஆறு கோல் தொடுப்ப வெள்கி ஆரியன் முதுகிட்டானே

மேல்
*அடுத்து, அசுவத்தாமன் பொருது தோற்றல்
$22.94

#94
தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு வெம்பி
இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன் இவுளித்தாமா
முந்துற இருவர் வில்லும் முரண் பட குனித்த போரின்
அந்தணன் கணையால் மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே

மேல்
$22.95

#95
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி
இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன் என்று எண்ணி
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடும்
நொந்து இனி என் செய்வோம் என்று ஊர் புக நோக்கினானே

மேல்
*கிருபன் முதலியோர் தோற்றோட, சூரியனும் உச்சிப் பொழுதை அடைதல்
$22.96

#96
கிருபனும் அவனை கண்டு கெட்டனன் கேடு இலாத
நிருபர்கள் பலரும் மோதி நேர் பொருது ஆவி மாய்ந்தார்
பொரு படை சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார்
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான்

மேல்
*வீடுமன் விதுரன் முதலிய பலரும் நான்கு திசையிலும் வளைய,
*விசயன் நாற்புறமும் அம்பு செலுத்தித் தாக்குதல்
$22.97

#97
வென்னிடும் அளவில் நின்ற வீடுமன் விதுரன் வண்டு
தென்னிடும் அலங்கல் மாலை சுயோதனன் சிந்துராயன்
துன்னிடு நிருபர் சூழ சூழ் திசை நான்கும் வந்து
முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார்

மேல்
$22.98

#98
இவர் பெரும் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக
தவர் உடன் குனித்து அநேக சாயகம் தொடுத்த காலை
கவுரி பங்காளன்-தன்னை கண்ணுற கண்ட காளை
பவுரி வந்து ஒன்றும் தன் மேல் படாமல் வெம் பகழி கோத்தான்

மேல்
$22.99

#99
குட திசை மகவான் வாளி குண திசை வருணன் வாளி
வட திசை மறலி வாளி தென் திசை மதியின் வாளி
அடல் உற இமைப்பின் ஏவி அவரவர் மார்பும் தோளும்
படர் உற படைகள் நீறு படப்பட பரப்பினானே

மேல்
*விசயன் மோகனக் கணையால் துரியோதனன் படையோரை
*மயங்கி விழச் செய்து, அவர்தம் ஆடைகளைப் பறித்தல்
$22.100

#100
கோ கன நாக வேக கொடியவன் சேனை யாவும்
மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான்
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை
வாகன குரிசில் வின்மை வல்லபம் இருந்தவாறே

மேல்
$22.101

#101
இ தரை இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும்
உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான்
அத்தரை மவுலி திங்கள் அமுது உக புடைத்த வில்லான்

மேல்
*மயங்கியோர் உணர்வு தோன்றியதும், தத்தம் ஊர்தியில்
*ஏறி, ஊருக்கு மீளுதல்
$22.102

#102
விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல
அழுந்திய பகழியோடும் அரிபடு கவசத்தோடும்
எழுந்து தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி
தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை துதித்து மீண்டார்

மேல்
*விசயன் துரியோதனனை மகுட பங்கம் செய்தல்
$22.103

#103
கொடி மதில் பாகை வேந்தன் கொங்கர் கோன் புரவி காலால்
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல
அடலுடை விசயன் ஒற்றை அம்பினால் மீண்டும் சென்று
பட அரவு உயர்த்த கோவை பண்ணினான் மகுட பங்கம்

மேல்
*’உரிய காலத்திற்கு முன் வெளிப்பட்ட இவரை
*மீண்டும் காடு புகச் சொல்’ என்று துரியோதனன்
*வீடுமனுக்குக் கூற, அவன், ‘நேற்றே குறித்த காலம்
*முடிந்தது’ எனல்
$22.104

#104
வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று
சொல்லிய காலம் செல்லா முன் இவர் தோற்றம் செய்தார்
புல்லிய கானின் இன்னம் போக நீ புகறி என்று
வெல் படை வேந்தன் சொல்ல வீடுமன் மீண்டும் சொல்வான்

மேல்
$22.105

#105
செந்நெலே கன்னல் காட்ட சேர்ந்து அயல் செறுவில் நின்ற
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட கேண்மோ
இன்னலே உழந்தோர் காலம் இந்துவின் இயக்கம்-தன்னால்
நென்னலே சென்றது என்றான் நெஞ்சினில் அழுக்கு இலாதான்

மேல்
*துரியோதனனும் தன் நகர்க்கு மீளுதல்
$22.106

#106
அரவினை உயர்த்த கோமான் அ உரை கேட்ட போழ்தே
பரவையின் இரவி கண்ட பனி மதி போல மாழ்கி
வரவர அறிதும் என்று மா பெரும் சேனையோடும்
இரவிடை யாரும் துஞ்ச எயில் வளை நகரி புக்கான்

மேல்
*விசயன் மீண்டு வந்து வன்னிமரப் பொந்தில் முன்போல்
*ஆயுதங்களை வைத்து, பேடி வடிவம் கொண்டு,
*உத்தரனுடன் நகர்க்கு மீளுதல்
$22.107

#107
வேந்தனை முதுகு கண்ட வெம் திறல் வீரன் மீண்டு
போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி
ஆம் தகவு எண்ணி பேடி ஆயினான் என்ப மாதோ

மேல்
$22.108

#108
இ வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர் மீண்டும் ஏக
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர்
அ எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன் அரசர் ஏறே

மேல்
*விசயன் தனது வரலாறு கூறி, உத்தரன் வெற்றியோடு மீண்டு
*வருதலைத் தெரிவிக்க விராடனுக்குத் தூதரை அனுப்புதல்
$22.109

#109
ஆறிய பசும் தண் காவின் அசைவு ஒரீஇ இருந்த வீரன்
ஏறிய கானில் பல் யாண்டு இருந்த பின் ஏனை ஆண்டு
மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று
ஊறிய அமுத சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே

மேல்
$22.110

#110
பேடி தேர் செலுத்த சென்ற பிள்ளையும் பெரும் போர் வென்று
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று
ஓடி நீர் சொல்-மின் என்று தூதரை ஓடவிட்டான்
நீடு நீர் பரக்கும் கங்கை நாடுடை நிருபர் கோமான்

மேல்
*தன் நகர்க்கு மீண்ட விராடன், உத்தரன் போர்க்குச்
*சென்ற செய்தி கேட்டு, மயங்கி வீழ்தல்
$22.111

#111
இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப முற்பகல் ஏகி ஆங்கண்
கங்குலில் சேனையோடும் கண்படை இன்றி வைகி
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற
வெம் கழல் விராடன்-தானும் மீண்டு தன் நகரி புக்கான்

மேல்
$22.112

#112
தடம் பதி அடைந்த காலை தன் மனை இருந்த பேடி
திடம் படு தடம் தேர் ஊர திருமகன் சென்ற செய்கை
விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப கேட்டு ஆங்கு
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான்

மேல்
*கங்கன் தேற்ற, மன்னன் தேறி இருந்த காலையில்,
*உத்தரன் வெற்றிச் செய்தியைத் தூதுவர் வந்து அறிவித்தல்
$22.113

#113
சந்தன அளறும் வாச தண் பனிநீரும் வீசி
வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி
மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள்
அந்த மெய் பேடி ஆகில் என்றனன் அந்தணாளன்

மேல்
$22.114

#114
அறன் மகன் வாய்மை தேறி அரசன் ஆங்கு இருந்த எல்லை
மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும்
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும்
தொறு நிரை மீட்டவாறும் தூதர் போய் தொழுது சொன்னார்

மேல்
*விராடன் மகிழ்ந்து, உத்தரனை எதிர்கொள்ளுமாறு சேனாதிபரை ஏவுதல்
$22.115

#115
சீதள அமுத வாரி செவிகளில் செறிந்தது என்ன
தூதர் வந்து உரைத்த சொல்லால் சோகமும் துனியும் மாறி
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை
ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான்

மேல்
$22.116

#116
சோரர்-தம் கருவை தங்கள் கரு என தோளில் ஏந்தி
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ
போரினை என்னா மேனி புளகு எழ பூரித்தானே

மேல்
$22.117

#117
பூழிகள் அடக்கி செம்பொன் பூரண கும்பம் வைத்து
வாழையும் கமுகும் நாட்டி மணி ஒளி தீபம் ஏற்றி
சூழ வன் பதாகை கட்டி தோரணம் பலவும் நாட்டி
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே

மேல்
*’மகன் வரும் அளவும் சூதாடுவோம்’ என்று கங்கனுடன்
*விராடன் ஆடும்போது, அவன் தன் மகன் வெற்றி பேச,
*கங்கன், ‘அது பேடியின் வெற்றியே’ எனல்
$22.118

#118
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு
அகம் மிக மகிழ்ந்து வேந்தன் அந்தணன்-தன்னோடு ஆட
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார்
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான்

மேல்
$22.119

#119
என்று அவன் மொழிந்த போதில் எண் இல் வெம் சேனையோடு
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக
வென்றவன் பேடியே தன் மெய் நடுங்காமல் போரில்
நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே

மேல்
$22.120

#120
பிருகந்நளை என்று ஓதும் பேடியை பேடி என்று
கருதல் நீ அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர்
அரிகளை அரிதின் வென்றான் என்றனன் அந்தணாளன்

மேல்
$22.121

#121
கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை-தன்னை
ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன் என்ன நீ அ
பேடியை விறல் கொண்டாடி பேசுதி பிரம மூர்த்தீ

மேல்
$22.122

#122
புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும் கேட்டு ஆங்கு
இன்னவை நன்று நன்று என்று இதம்பட மொழிவது அல்லால்
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர் மன்னர்
சொன்னவை மறுத்து மாறு சொல்வரோ சுருதி வல்லாய்

மேல்
$22.123

#123
என்னவும் இடம் கொடாமல் எதிருற இருடி மீண்டும்
கன்னன் வில் துரோணன் மைந்தன் காங்கேயன் முதலினோரை
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால்
பின்னை நீ தெளிதி என்றான் பீடுடை பேடி-தன்னை

மேல்
*விராடன் சினம் மூண்டு, கங்கனது நெற்றியில் இரத்தம்
*பொசியுமாறு கவற்றால் எறிதல்
$22.124

#124
கொடு வில் ஆண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும் சற்றும்
நடுவு இலாதவரின் பல் கால் என்-கொல் நீ நவில்வது என்னா
கடு இல் ஆடு அரவின் பொங்கி கவற்றினால் எறிந்து நக்கான்
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ

மேல்
*நெற்றியில் பொசியும் இரத்தத்தை விரதசாரிணி கண்டு,
*தன் ஆடையால் மாற்றுதல்
$22.125

#125
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன்
நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால்
பற்றிய திலகம் போல படுதலும் பாங்கர் நின்ற
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள்

மேல்
$22.126

#126
பல்கிய கிளையும் தேசும் பார்த்திவன் வாழ்வும் தாங்கள்
அல்கிய நகரும் இன்றே அழியும் என்று அஞ்சியே-கொல்
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க
மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே

மேல்
*விராடன் தன் செயலுக்கு இரங்கி வருந்தல்
$22.127

#127
கண்ணில் நீர் மல்க வண்ண காரிகை கலையால் அந்த
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை ஐயுற்று
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று
அண்ணலும் தன்னை நொந்து ஆங்கு அரும் சினம் பாவம் என்றான்

மேல்
*அந்திப் பொழுதில், மன்னர் சூழ, உத்தரன் நகரை
*அடைந்து, உலாவருதல்
$22.128

#128
ஆயிடை அத்த குன்றுக்கு ஆதபன் அணியன் ஆக
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான்

மேல்
$22.129

#129
பரந்து வெம் படைகள் மின்ன பல்லியம் பணிலம் ஆர்ப்ப
சுரந்து மும்மதமும் பாயும் துதிக்கை வாரணங்கள் சூழ
புரந்தரன் நகரில் காள புயல் வருமாறு போல
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான்

மேல்
*விராடன் மகனை எதிர் கொண்டு தழுவுதல்
$22.130

#130
வென்று மீள் குமரன்-தன்னை வீதிகள்-தோறும் மாதர்
அன்று எதிர்கொண்டு நல் நீராசனம் எடுத்து வாழ்த்த
குன்று எறிந்தவனை கண்ட குன்ற வில்லியை போல் முந்த
சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே

மேல்
*மனை புகுந்த உத்தரன் கங்கனை வணங்கி, நெற்றி வடுவைக்
*கண்டு, தந்தையால் நிகழ்ந்தமை அறிந்து, பொறுக்குமாறு
*இருவரும் வணங்குதல்
$22.131

#131
தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து வேந்தர்
குழுவிடை கொண்டு போக கோயிலில் புகுந்த பின்னர்
பழுது அறு வாய்மை வேத பண்டிதன் பாதம் போற்றி
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான்

மேல்
$22.132

#132
திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்-கொல் என்ன
நிகழ்ந்தமை தந்தை கூற நெஞ்சினால் தந்தை-தன்னை
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று இவனை போல
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்-கொலோ அமைவின் மிக்கோர்

மேல்
$22.133

#133
செறுப்பது பெருமை அன்று சிறியவர் செய்த தீமை
பொறுப்பதே பெருமை என்று பூசுரன் பாதம் போற்றி
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்த பின் தானும் வீழ்ந்து
மறுப்பது புரியா ஞானி மன துனி அகற்றினானே

மேல்
*விராடனும் உத்தரனும் சுதேட்டிணை கோயில் புக, அவள்
*மகனைக் கண்டு பெரு மகிழ்வு எய்துதல்
$22.134

#134
ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும் அவனை பெற்ற
தோன்றலும் பின்னர் சென்று சுதேட்டிணை கோயில் எய்த
ஈன்ற அப்பொழுதின் ஓகை எண்மடங்கு ஆக விஞ்ச
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள்

மேல்
*பேடி தான் கவர்ந்த சுகளை உத்தரையின் பாவைக்கு
*அளித்து, சுதேட்டிணையின் பின் நிற்றல்
$22.135

#135
ஓடி உத்தரன் தேர் ஊர ஒரு முனையாக தன்னை
நாடி உத்தரிக்க மாட்டா நராபதிபர் பதாகை தூசும்
கோடி உத்தரியப்பட்டும் குழமகன்-தனக்கு நல்கி
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள்

மேல்
*தந்தையுடன் உத்தரன் தனித்து இருந்து, போர் நிகழ்ச்சிகளைக் கூறுதல்
$22.136

#136
தந்தையும் தானும் ஆங்கு தனித்து இருந்து அடையலாரை
முந்திய அமரில் சென்று முனைந்து போர் விளைத்தவாறும்
வந்தவர் சாய்ந்தவாறும் மணி நிரை மீட்டவாறும்
சுந்தர கிரிகள் போலும் தோளினான் தோன்ற சொல்வான்

மேல்
*மாற்று வடிவு கொண்ட கங்கன் முதலியோர், பாண்டவரும் திரௌபதியும் எனல்
$22.137

#137
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர்

மேல்
$22.138

#138
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும்
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும்
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை
இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே

மேல்
$22.139

#139
ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார்
நாளையே வெளிப்படுவர் நெருநலே தம் நாள் உள்ள கழிந்தனவால் நயந்து கேண்மோ
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும்
காளையே அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு வரன் என்று கருதுவாயே

மேல்
*பாண்டவர் தம் முன்னை உருக்கொள்ள, பகலவனும் உதயம் செய்தல்
$22.140

#140
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான்
பகல் அமரில் ஏறிய மெய் பராகம் மாற பகலோனும் புனல் படிவான் பரவை சேர்ந்தான்
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான்

மேல்

23. வெளிப்பாட்டுச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$23.1

#1
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில்
தக்க பல யோனிகள் சராசரம் அனைத்தும்
மிக்க விதியால் விதிசெய் விதியினை விதிக்கும்
செ கமல நாபி முகில் சேவடி துதிப்பாம்

மேல்
*தருமன் திரௌபதியோடும், துணைவர்களோடும் வீற்றிருத்தல்
$23.2

#2
அருக்கன் அடி கைதொழுது அனந்தரம் அருக்கன்
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப
திரு கிளர் நலம் பெறு செழும் தெரிவையோடும்
குரு குலம் விளங்க வரு கோமகன் இருந்தான்

மேல்
$23.3

#3
காற்றின் மகனும் கடவுள் ஆதி திரு மகனும்
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும்
ஏற்ற முறையால் அடி இறைஞ்சி இசையோடும்
தோற்றம் உறுமாறு அருகு சூழ்தர இருந்தார்

மேல்
*தருமனது நெற்றி வடுவின் காரணத்தைத் திரௌபதி கூற
*உணர்ந்து, விசயன் விராடனை அழிக்க வில்
*எடுக்க, வீமன் விழி சிவத்தல்
$23.4

#4
தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன்
என்னை திருநெற்றியில் இருந்த வடு என்றான்
மின்னையும் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள்
பின்னை அவனுக்கு நிகழ் பெற்றி உரைசெய்தாள்

மேல்
$23.5

#5
உரைத்த பொழுது இப்பொழுது இ ஊர் எரி கொளுத்தி
தரை தலைவனை தலை தடிந்திடுவல் என்னா
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான்
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான்

மேல்
*தம்பியரின் சினத்தைத் தருமன் அடக்குதல்
$23.6

#6
ஒன்று உதவி செய்யினும் அ உதவி மறவாமல்
பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர்
நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும்
கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே

மேல்
$23.7

#7
அனலும் முது கானகம் அகன்று நெடு நாள் நம்
நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம்
சினம் மிகுதலின் தவறு செய்தனன் என போய்
முனிதல் பழுதாகும் என முன்னவன் மொழிந்தான்

மேல்
*விராடன் மைந்தனோடு சென்று, திறைப் பொருள்களை வைத்து,
*பாண்டவரை வணங்க, தருமன் அவனைத் தழுவிப் பாராட்டுதல்
$23.8

#8
குந்தி-வயின் வந்து தம குருகுலம் விளக்கும்
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க
சிந்தனையொடும் திறைகொள் செல்வ நிதியோடும்
மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான்

மேல்
$23.9

#9
விராடனை நறும் குவளை மாலை வியல் மார்பில்
தராபதி எழுந்து எதிர் தழீஇயினன் இருத்தி
பராவரு பெரும் புகழ் படைத்தவர் உனை போல்
அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான்

மேல்
*’நான் செய்த குறையைப் பொறுக்கவேண்டும்!’ என
*விராடன் தருமனை வேண்டுதல்
$23.10

#10
அறை முரசு உயர்த்தவனை அவனும் நனி ஐயா
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ
இறை அமுத நற்குணம் இலாதவரிடத்தில்
குறை திரு உளத்தினிடை கொண்டருளல் என்றான்

மேல்
*தருமன் முகமன் கூறி, ‘போரில் எனக்குப்
*படைத்துணையாக வேண்டும்’ எனல்
$23.11

#11
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம்
செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ

மேல்
$23.12

#12
நின் புதல்வரும் திறல் வரூதினியும் நீயும்
என் புயம் என சமரில் என் அருகு நின்றால்
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும்
தென்புலம் அடைந்திட மலைப்பல் இது திண்ணம்

மேல்
*தருமன் உரையால் விராடன் மனத்துன்பம் நீங்க, உத்தரன்,
*’எங்கள் படையும் நினதே; உத்தரையும் விசயனுக்கு உரியளே’ எனல்
$23.13

#13
என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா
மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன்
தனயனும் நமக்கு உறுதி தக்கது என எண்ணா
இனிமையொடு அறத்தின் மகனுக்கு இவை இசைப்பான்

மேல்
$23.14

#14
எ தரையும் நீழல் செய் தனி கவிகை எந்தாய்
இ தரையும் நின்னது நின் ஏவலினர் யாமும்
பத்து அரையொடு ஈர் அரை கொள் பல் படையும் நினவே
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள் என்றான்

மேல்
*விசயன், ‘எனது மகன் அபிமனுக்கே உத்தரை
*உரியளாதல் வேண்டும்’ எனல்
$23.15

#15
வில் விசயன் உத்தரன் விளம்புதலும் வீரம்
கல்வி செய் கலை திறன் வனப்பு உடைய காளாய்
இல் விசய மெய் குணனில் மிக்க இளையாள் என்
தொல் விசயம் உற்ற சுதனுக்கு உரியள் என்றான்

மேல்
*பாண்டவர் தாம் வெளிப்பட்டமையைத் தமராய மன்னர்க்குத்
*தூதர் மூலம் சொல்லி அனுப்புதல்
$23.16

#16
விசயன் தொகுத்து நயமாக விராடன் நெஞ்சுக்கு
இசையும்படி சொற்று அவரோடும் இருந்த பின்னர்
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு எல்லா
திசையும் தமது செயல் தூதரின் செப்பி விட்டார்

மேல்
*செய்தி தெரிந்து, அபிமன் முதலியவரோடு கண்ணன்
*பாண்டவரை அடைந்து, அளவளாவி இருத்தல்
$23.17

#17
வெளிநின்ற மாற்றம் வெளியான பின் வெண் தயிர் தண்
துளி நின்ற மேனி துளவோன் தன் துணைவரோடும்
அளிநின்ற மாலை புனை தங்கை அபிமனோடும்
தெளிநின்ற வேல் கை சிவேதன்னொடும் வந்து சேர்ந்தான்

மேல்
$23.18

#18
கண்டான் மகிழ்ந்தான் அறன் மைந்தனை கை தழீஇயும்
கொண்டான் அவன்-தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார்
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும்
உண்டான் உரைத்தான் உரைத்தக்க உரைகள் எல்லாம்

மேல்
*கண்ணன் தன்னுடன் வந்த சிவேதனைக் குறித்து
*விராடனுக்குக் கூறி, அவன் கவலையைத் தீர்த்தல்
$23.19

#19
சிவன்-தன்னை நோக்கி சிவேதன் தவம் செய்தவாறும்
அவன்-தன் அருளால் பல ஆயுதம் பெற்றவாறும்
இவன்-தன் பகை செற்றதும் யாவும் இயம்பி உள்ளம்
கவன்று அன்பு உறா மன் விராடன்-தன் கவற்சி தீர்த்தான்

மேல்
$23.20

#20
தெவ் மைந்தர் என்னும் களபங்களை சிங்க சாப
வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில்
அ மைந்தனும் வீழ்ந்து உடன் வைகினன் ஆர்வம் மிக்கே

மேல்
*பாஞ்சாலர் முதலிய பல மன்னர்கள் தம் தானைகளோடு
*வந்து பாண்டவரைக் கண்டு, அவர் உற்ற
*துன்பத்திற்கு இரங்கிக் கூறுதல்
$23.21

#21
பாஞ்சாலர் போச குல மன்னவர் பாண்டி வேந்தர்
வாஞ்சா மனத்தின் வய மத்திரர் மாகதேயர்
பூம் சாப வெற்றி கொடி கேரளர் பொன்னி நாடர்
தாம் சால்புடன் அ பதி வந்தனர் தானையோடும்

மேல்
$23.22

#22
வந்து ஓகையோடும் இரு பாதம் வணங்கி வைகும்
கந்தோடு அடர் கை கடும் கோப களிற்று வேந்தர்
அந்தோ நெடு நாள் அகன் கானில் அடைந்திர் என்று
நொந்தோரை ஆற்றி நுவல்வான் அ நுதி கொள் வேலான்

மேல்
*’விராடன் நகரிற்கு வந்த அன்றே என் துன்பம் நீங்கியது’
*எனத் தருமன் மொழிந்து, துரியோதனனால் நேர்ந்த
*அழிவைப் பற்றியும் உரைத்தல்
$23.23

#23
தேனில் குளித்த சிறை அம்புய சேர்க்கை அன்னம்
வானில் பறந்து புலர்த்தும் புனல் மச்ச நாடன்
வேனில் சிலை வேள் விராடன் புரம் மேய அன்றே
கானில் திரிந்த பரிதாபம் கழிந்தது என்றான்

மேல்
$23.24

#24
பண்ணுக்கு உருகி பறையால் அகப்பட்ட மான் போல்
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச
எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர்
கண்ணுக்கு இமை போல் இருந்தீர் களைகண்கள் ஆக

மேல்
*சல்லியன் துரியோதனன் வஞ்சமாகத் தன்னைத்
*துணைவனாக்கியது உரைத்து, மீளுதல்
$23.25

#25
அரசர்க்கு அடைவே அவையின்-கண் அவை அனைத்தும்
முரச கொடியோன் நயமாக மொழிந்தபோது
விரை துற்று தார் சல்லியன் முன்பு விளைந்த எல்லாம்
பரசுற்று அகன்றான் பிழை கொன்ற பகடு போல்வான்

மேல்
$23.26

#26
கரட கட வெம் களி யானை கவன மான் தேர்
துரக பதாதி படை-தம்மொடும் சூழ்ச்சியாக
விரகின் புகுந்து நெறியின்-கண் விருந்து செய்த
உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான்

மேல்
$23.27

#27
நஞ்சோடு சாலும் அமரின்-கண் நமர்கள் என்றும்
நெஞ்சோடு இயைந்த துணை என்றும் நினைத்தல் செய்யார்
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை
வெம் சோரி வேலான் நிலை இட்டனன் மீண்டும் ஈண்டும்

மேல்
*விராடன் உத்தரையை அபிமனுக்குத் திருமணம் செய்வித்தல்
$23.28

#28
ஓமம் செய் தீயில் பொரி சிந்தலின் உற்ற வாச
தூமம் புடை சூழ் புவி வேந்தர் தொடையல் சூழ
காமன் திரு மைத்துனற்கு அன்பொடு அ கன்னி-தன்னை
மா மன்றல் அங்கே புரிவித்தனன் மச்சர் கோமான்

மேல்
*பாண்டவர்கள் காளிக்குப் பலி கொடுத்து, வன்னி மரத்து
*வைத்த படைகளை மீட்டும் கொள்ளுதல்
$23.29

#29
முன்னி சமருக்கு ஒருப்பட்ட முடி மகீபர்
கன்னிக்கு வேண்டும் கடன் ஆன பலிகள் நல்கி
வன்னி பொதும்பர்-வயின் வைத்த வயங்கு சோதி
மின்னின் திகழ் வெம் படை யாவையும் மீண்டு கொண்டார்

மேல்
*திருமணம் முடிந்தபின் பாண்டவரும், கண்ணன் முதலிய
*பிற அரசர்களும் உபப்பிலாவிய நகர் சென்று, போர் பற்றி ஆராய்தல்
$23.30

#30
சேயோன் விழவு விழைவோடு சிறந்த பின்னர்
மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும்
போய் ஓதை வீதி உபலாவி புகுந்து தங்கள்
ஆயோதனத்துக்கு உறு நீர்மைகள் ஆயல் உற்றார்

மேல்

24. உலூகன் தூதுச் சருக்கம்

*கடவுள் வாழ்த்து
$24.1

#1
மீனம் ஆகியும் கமடம்-அது ஆகியும் மேருவை எடுக்கும் தாள்
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும்
கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் அரக்கரை கொலை செய்த
வான_நாயகன் ஆகியும் நின்ற மால் மலர் அடி மறவேனே

மேல்
*கண்ணன், ‘தூது அனுப்பித் துரியோதனன்
*கருத்தைத் தெரிய வேண்டும்’ எனல்
$24.2

#2
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி
வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால்
சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம் சுயோதனன் நினைவு என்று
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான்

மேல்
*பலராமன், ‘துரியோதனன் ஆளும் நாட்டை மீட்டல் கொடிது’
*என்ன, சாத்தகி அவனைப் பழிக்க, கண்ணன்
*இருவரையும் சமாதானம் செய்தல்
$24.3

#3
உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண
பரியவன் பெரும் சூதினால் வென்று பல் ஆண்டு அடிப்பட ஆண்டான்
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று
கரியவன் புகல் கட்டுரை கேட்ட பின் காமபாலனும் சொன்னான்

மேல்
$24.4

#4
இளைய சாத்தகி தமையனை மிக கரிது இதயம் ஆயினும் நாவில்
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன
உளைய வார்த்தைகள் உரைத்தனன் உரைத்தலும் உற்றவர் இடுக்கண்கள்
களையும் மா புயல் இருவரும் ஒழி-மின் நும் கட்டுரை இனி என்றான்

மேல்
*உலூகனைத் திருதராட்டிரனிடம் பாண்டவர் கருத்து உரைக்கத்
*தூது செல்லப் பணித்து, கண்ணன் துவாரகைக்கு மீளுதல்
$24.5

#5
பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடை பரி திண் தேர்
கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால்
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி
ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர் புகுந்தனன் அன்றே

மேல்
*ஏனை அரசர்களும் தம்தம் நகர் அடைய,
*தருமன் உலூகனைத் தூதனுப்புதல்
$24.6

#6
இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன் இனிது ஆக
அந்த அந்தனோடு உரைத்த பின் அவன் நினது அவனி தந்திலன் ஆகின்
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ

மேல்
$24.7

#7
அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி
முரச கேதனன் நீ எழுந்தருள்க என முனிவனை தொழுது ஏத்தி
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை
பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான்

மேல்
*உலூகன் திருதராட்டிரனது அவையில் புக, துரியோதனன்
*ஆசனம் அளித்து வரவேற்றல்
$24.8

#8
போன நான்மறை புரோகிதன் அத்தினாபுரி புகுந்து எரி பைம் பொன்
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே

மேல்
*உலூகன் தான் தூது வந்த வரலாற்றை எடுத்துரைத்தல்
$24.9

#9
விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன் தொழுது ஏத்தி
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும் அவன் தந்த
மைந்தர் யாவரும் கன்னனும் சகுனியும் மனம் கனன்றிட சொல்வான்

மேல்
$24.10

#10
ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று ஒருவரும் அறிவுறாவகை மற்று ஓர்
ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும் வெளிப்பட்டார்
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ

மேல்
$24.11

#11
முன்னமும் பொரு சூது போர் மோது போர் முனிவுடன் கருதாமல்
இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும் இலஞ்சியில் பொலம் செம் கால்
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர்
பின்னமும் பிறவாது இனி பண்டு போல் பீடுறும் பெரு வாழ்வும்

மேல்
$24.12

#12
அன்றியே அவருடன் மலைகுவம் என அழிவினை கருதாமல்
வென்றியே நினைந்து எதிர்த்திரேல் உங்களால் வெல்லுதல் அரிது அம்மா
கன்றியே அடல் வீமனும் விசயனும் களம் புகில் அனைவீரும்
பொன்றியே விடுகின்றினிர் முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே

மேல்
*’பூசலில் ஆண்மை காணலாம்’ என்று துரியோதனன்
*மறுமொழி சொல்ல, விதுரன், துரோணன், முதலியோர்
*அவனுக்கு அறிவுரை கூறுதல்
$24.13

#13
என்று பூசுரன் இயம்பலும் குங்குமம் எழில் உறும் இணை மேரு
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன்
இன்று பூசை போல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது அன்று இருவர்க்கும்
துன்று பூசலில் காணலாம் ஆண்மையும் தோள் வலிமையும் என்றான்

மேல்
$24.14

#14
கல்வி தூய நெஞ்சு இலாத அ சுயோதனன் கழறிய மொழி கேட்டு
வில் விதூரன் இ வேதியன் மொழிப்படி மேதினி வழங்காமல்
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கின்
செல்வி தூரியள் ஆய்விடும் சுற்றமும் சேனையும் கெடும் என்றான்

மேல்
$24.15

#15
திரத்து வாய்மை நீ தவறி மற்று அவருடன் சேனையும் திறலும் கொண்டு
உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின்
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று
பரத்துவாசனும் பகர்ந்தனன் கிருபனும் பகர்ந்ததே பகர்ந்திட்டான்

மேல்
*வீடுமன் திருதராட்டிரனுக்கு உறுதி கூறுதல்
$24.16

#16
காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய் காலமோ கழிந்தன்று
நாடு மன்னவ கொடாமல் வெம் சமர் பொர நாடினையெனின் நாளை
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று
வீடுமன் திரு தனயனோடு உறுதிகள் வெகுண்டு உரைத்தனன் அன்றே

மேல்
*கன்னன் வீடுமனை வெகுண்டு கூறுதல்
$24.17

#17
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன்
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால்
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று
கன்னனும் திறல் காங்கெயன்-தன்னொடு கண் சிவந்து உரைசெய்தான்

மேல்
*வீடுமன் வெகுண்டு, குறிப்பு மொழிகளால் கன்னனை இகழ்ந்து கூறுதல்
$24.18

#18
தூம வெம் கனல் தோன்றிய தோகை அம் தொடையல் சூட்டிய நாளில்
நாம வெம் சிலை நாண் எடுத்தனை அடர் நரனொடும் போர் செய்தாய்
தாம வெண்குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல்
வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய்

மேல்
$24.19

#19
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை நெடும் போது
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ

மேல்
*துரியோதனன் கன்னனுக்காகப் பரிந்து, உலூகனையும்
*அவமதித்து, ‘பார் எமதே!’ என, முனிவன் மீண்டு
*வந்து, அதனைப் பாண்டவர்க்குச் சொல்லுதல்
$24.20

#20
கங்கை மா மகன் இவையிவை புகலவும் கன்னனை கசிந்து உள் கொண்டு
அங்கை கொட்டி நக்கு இருந்த அந்தணனையும் அவமதித்து எமதே பார்
தங்கள் கானகம் தமது என புகன்றனன் சர்ப்பகேதனன் அந்த
பங்கயாசன முனிவனும் மீண்டு போய் பாண்டவர்க்கு அவை சொன்னான்

மேல்
*உலூகன் கண்ணனிடமும் சென்று செய்தி தெரிவிக்க, அவன்
*விசயனைத் தன்னிடம் வரும்படி செய்தி சொல்லி அனுப்புதல்
$24.21

#21
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி
ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள
ஓங்கு மா தவ உலூகனை போக்கினான் அவனும் வந்து உரைசெய்தான்

மேல்

25. வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கம்

*கன்னனும் வீடுமனும் கொண்ட வெகுளி மாற்றி,
*மந்திரிமாருடன் தனித்து இருந்து, துரியோதனன் எண்ணுதல்
$25.1

#1
புரோகிதன் தூது வந்து போன பின் புயங்க கேது
விரோசனன் சுதனை கங்கா_சுதனொடும் வெகுளி மாற்றி
துரோணனை முதலா மிக்க தொல் மதி அமைச்சரோடும்
சரோருக சதனம் என்ன தனித்து இருந்து எண்ணினானே

மேல்
*மன்னர் பலர்க்கும் தூது போக்கி, கண்ணனைத்
*துணை சேர்க்கக் கருதி, துரியோதனன் துவாரகைக்குச்
*செல்லுதல்
$25.2

#2
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர்
ஆயவர் தம்மை கூட்ட அடைவினின் தூது போக்கி
காயமும் உயிரும் ஆகி பொருள்-தொறும் கலந்து நின்ற
மாயவன்-தன்னை கூட்ட வளர் மதில் துவரை சேர்ந்தான்

மேல்
*துவாரகையில் உள்ள மதில் முதலியவற்றின் சிறப்பு
$25.3

#3
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம்
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி
சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும்

மேல்
$25.4

#4
கார்க்கடல் வண்ணன் தன்-பால் கண்துயில் ஒழிந்து போந்து
மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை
பாற்கடல் வளைத்தது ஒக்கும் பல் மலர் அகழி அம்மா

மேல்
$25.5

#5
ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர்-தங்கட்கு அல்லால் படை துணை ஆகமாட்டான்
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும்
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற

மேல்
$25.6

#6
அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன் என்று எண்ணி
தரணியின் மீது வந்து தன்னுடை சோதி வைகும்
பரம மா ஞான போக பதி குடி இருந்தது அன்ன
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான்

மேல்
*துரியோதனன் நகரில் புகுந்தமை அறிந்த கண்ணன்,
*’துரியோதனன் வரின், எனக்குத் தெரிவியாமலே வரவிடுங்கள்’
*என்று காவலர்க்குக் கூறி, யோகத் துயில் கொள்ளுதல்
$25.7

#7
வந்தமை அறிந்து கொற்ற வாயிலோர்-தம்மை நோக்கி
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று
சந்திரன் ஒடுங்கி நிற்ப தபனனே சரிக்குமாறு
பந்தனை இலாதான் யோக துயில் வர பள்ளிகொண்டான்

மேல்
*துரியோதனன் கண்ணனது திருமுடிப் பக்கத்துள்ள தவிசில்
*அவன் துயிலுணருமளவும் வீற்றிருத்தல்
$25.8

#8
பொற்புடை புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட
சிற்ப வண் தவிசின் ஏறி திருமுடி பக்கம் சேர்ந்தான்

மேல்
*விசயன் அங்கு வந்து, கண்ணன் திருவடிப் பக்கம் நிற்க,
*கண்ணனும் துயிலுணர்ந்து, அவனை நோக்கி அருள்செய்தல்
$25.9

#9
வந்திலன் விசயன் என்று வான் துயில் புரிந்த அண்ணல்
சிந்தனை செய்யும் வேலை சிந்தையின் கடிய தேரோன்
பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப
முந்துற விழித்து நோக்கி முகம் மலர்ந்து அருள்செய்தானே

மேல்
*நின்ற விசயன் துரியோதனன் இருத்தலைக் கூற, கண்ணன்
*எழுந்து, அவனைத் தழுவி முகமன் கூறுதல்
$25.10

#10
நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமி
பொன் திகழ் படையோன் அந்த பொய் துயில் பாயல் நீங்கி
மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என்
என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான்

மேல்
*இருவரும் வந்த காரியத்தைக் கண்ணன் வினவ, இருவரும்,
*’எமக்குப் போர்த் துணையாக வேண்டும்’ என வேண்டுதல்
$25.11

#11
இருவிரும் வந்தவாறு என் இயம்புதிர் என்று வாச
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும்
பொருவிலோய் என்று கொண்டு அ இருவரும் புகன்ற காலை

மேல்
*கண்ணன் பாண்டவர்க்குத் தான் துணையாதலை அறிவித்தல்
$25.12

#12
உற்று அமர் உதவி செய்வான் உதிட்டிரன்-தனக்கு முன்னே
சொற்றனம் ஆங்கண் இங்கும் துயில் உணர் பொழுதத்து இன்று
வில் திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான் என்று
பற்று அற துணிந்து சொன்னான் பாண்டவர் சகாயன் ஆனான்

மேல்
*’போரில் ஆயுதம் எடாது ஒழி’ என்னும் துரியோதனன்
*வேண்டுதலுக்குக் கண்ணன் ஒருப்பட்டு, விசயனிடம், ‘ஆயுதம்
*இன்றிச் செய்யும் உதவியைக் கூறு’ எனல்
$25.13

#13
முடை கமழ் முல்லை மாலை முடியவன்-தன்னை போரில்
படை எடாது ஒழிதி என்று பன்னக துவசன் வேண்ட
நெடிய மா முகிலும் நேர்ந்து நினக்கு இனி விசய போரில்
அடு படை இன்றி செய்யும் ஆண்மை என் அறைதி என்றான்

மேல்
*விசயன், ‘நீ என் தேர் விடின், எத்தகைய பகைவரையும் வெல்வேன்!’ எனல்
$25.14

#14
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில்
பொரு பரி தூண்டின் இந்த பூதலத்து அரசர் ஒன்றோ
வெருவரும் இயக்கர் விண்ணோர் விஞ்சையர் எனினும் என் கை
வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான்

மேல்
*கண்ணன் துரியோதனனுக்கு, ‘ஆயுதம் எடேன்’ என்று கூறி,
*தன்னைச் சேர்ந்தாரை யெல்லாம் படைத்துணையாகக்
*கொண்டு செல்க எனல்
$25.15

#15
அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும் அமலன் வஞ்ச
பட அரவு உயர்த்த வென்றி பார்த்திவன்-தன்னை நோக்கி
நடையுடை புரவி திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி
மிடை படை ஏவி நும்மோடு அமர் செயேன் வேந்த என்றான்

மேல்
$25.16

#16
எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள்
தம்மையும் எம்முன் ஆன தாலகேதுவையும் சேர
செம்மையோடு உதவியாக கொண்டு நீ செல்க என்று
மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற பின்னும் சொன்னான்

மேல்
$25.17

#17
கிருதவன்மா அக்ரோணி கிளர் படையோடு நின்-பால்
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி
மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி
கருதலான் வினயம் ஒன்றும் கண்ணன் முன்னோனை கண்டான்

மேல்
*துரியோதனன் பலராமனிடம் சென்று, செய்தி தெரிவித்து,
*அத்தினாபுரி புக, கண்ணனும் விசயனும் உபப்
*பிலாவியத்தை அடைதல்
$25.18

#18
கண்ணன் அங்கு அருளி செய்த கட்டுரைப்படியே சங்க
வண்ணனுக்கு இளவல் சொன்ன மாற்றமும் அரசன் சாற்றி
எண்ண அரும் தொகை கொள் சேனை யாதவ குமரரோடே
அண்ணலே வருக என்று ஓதி அத்தினாபுரி புக்கானே

மேல்
$25.19

#19
கூறிய வேக நாக கொடியவன் அகன்ற பின்னர்
தேறிய விசையினோடும் செழும் புனல் துவரை நீங்கி
ஆறு இரு நாமத்தோனும் ஐ_இரு நாமத்தோனும்
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார்

மேல்

26. சஞ்சயன் தூதுச் சருக்கம்

*துரியோதனன் கண்ணனிடம் சென்று வந்த செய்தி
*கேட்டபின், திருதராட்டிரன் சஞ்சயனை அழைப்பித்து,
*பாண்டவரிடம் தூது அனுப்புதல்
$26.1

#1
நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி நண்பு அற
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்த பின்
வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன்
சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான்

மேல்
$26.2

#2
குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும் நல் குரு ஆதலால்
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின் சொல் மறுத்திடார்
பெருகு உலை கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய்

மேல்
$26.3

#3
அறத்தின் மைந்தனும் இளைஞரும் புவி ஆசை அற்று அகல் அடவியின்
புறத்து இருந்து தவம் செயும்படி பரிவு உரைத்தருள் போய் என
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான்
மறுத்திலன் பெரு முனியும் மற்று அவர் பாடிவீடு உற மன்னினான்

மேல்
*சஞ்சயனை எதிர்கொண்டு பாண்டவர் உபசரிக்க, முனிவன்
*தவிசில் இருந்து, அவர்களுக்கு அறம் எடுத்துரைத்தல்
$26.4

#4
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள்
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின்
மன்றல் அம் துளவோனும் நல் அறன் மைந்தனும் திறல் அனுசரும்
துன்று பொன் தவிசினில் இருத்த இருந்து சில் உரை சொல்லுவான்

மேல்
*உலூகனைத் திருதராட்டிரனிடம் பாண்டவர் கருத்து
*உரைக்கத் தூது செல்லப் பணித்து, கண்ணன்
*துவாரகைக்கு மீளுதல்
$26.5

#5
புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர்
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால்
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால்

மேல்
$26.6

#6
உற்ற யோனிகள்-தம்மில் உற்பவியாமல் மானுட உற்பவம்
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின்
பற்றுமாறு அரிது இங்கு உனக்கு இவை பண்பினோடு பலித்தவே

மேல்
$26.7

#7
திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும்
அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு
உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும்
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே

மேல்
$26.8

#8
பராசரன் குலம் ஆகினும் பெறு பயன் இறுக்கிலர் பாரிலே
துராசர் அன்பு இலர் என் சொல் இன்று சுயோதனாதியர் கை கொளார்
சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர் தன்மையாய்
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய்

மேல்
$26.9

#9
பாரில் ஆசையும் நின் இராச பதத்தில் ஆசையும் மன்னு வெம்
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும்
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என
தூரில் ஆசை அற துறந்தருள் சுருதி மா முனி சொல்லவே

மேல்
*தருமன் முனிவனது கருத்தை மறுத்து உரைத்தல்
$26.10

#10
செம்மை அல்லது விரகு இலாது தெரிந்த மேதகு சிந்தையான்
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும்
வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம் மிகவுமே

மேல்
$26.11

#11
நின் அறத்தினின் நீர்மை-தன்னை விளங்குமாறு நிகழ்த்தினும்
மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ
என் அறத்தினின்-நின்று தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால்
பின் அறத்தினில் நினைவு கூரும் என கனன்று இவை பேசினான்

மேல்
*வீமன், ‘போரே எமக்கு உரிய தவம்!’ எனச் சினந்து மொழிதல்
$26.12

#12
முனியும் அ பெரு முரசு உயர்த்தவனும் புகன்றன முன்னி நாம்
இனி உரைப்பது கடன் என துணை விழி சிவப்பு எழ எழிலியின்
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான்
கனி என தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே

மேல்
$26.13

#13
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார்
தமக்கும் ஒக்கும் ஒர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ
அமர்க்கு நென்னல் உலூக நாமனொடு அறுதியிட்டனன் அரவு இனம்
சுமக்கும் மேதினி ஆளுவோர் வினை வேறுபட்டது சொல்வரே

மேல்
$26.14

#14
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே
பிடர்-கணே மதியான கண் இலி பெற்றி அல்லன பேசினான்
கடல் பெரும் படை கூடி நாளை அணிந்த வெய்ய களத்தில் நான்
அடல் கடும் கதையால் அடித்திடும் அதிசயம்-தனை ஐய கேள்

மேல்
$26.15

#15
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும்
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ
கவந்த கானகம் மேவி ஊடு உறு தீய வெவ் வினை களைவதே
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே

மேல்
$26.16

#16
போரது ஆகிய பூமிசாலையில் வேலை சூழ்தரு பூமியின்
பாரமான சுயோதனாதியர் என்னும் நூறு பசு படுத்து
ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும்
வீர மா முனி-தன்னை வெம் கள வேள்வியும் புரிவிப்பனே

மேல்
*கண்ணன், ‘நமது உரைகளால் பயன் ஒன்றும் இல்லை’ எனல்
$26.17

#17
நேமியான் இவை சொன்ன வீரனை நிற்க என்று நிறுத்தி உள்
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன் இவர்கள் இ
பூமி ஆளுதல் அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல் புரி தவம்
யாம் யாதும் உரைத்தும் என் பயன் நீ எழுந்தருள் என்னவே

மேல்
*சஞ்சயன் மீண்டு வந்து, திருதராட்டிரனுக்கு
*நிகழ்ந்தவற்றைத் தெரிவித்தல்
$26.18

#18
இருந்த பேர் அவை விட்டு மற்று அவர் இதயம் இப்படி என நினைந்து
அரும் தவ கடல் மீள அத்தினபுரி அடைந்து அவனிபனுடன்
பரிந்து அறன் தரு காளை சொற்றதும் வீமன் நின்று பகர்ந்ததும்
குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான்

மேல்