ஊ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கமுடன் 1
ஊக்கமும் 2
ஊக்கமோடு 2
ஊசல் 2
ஊசி 2
ஊசியும் 1
ஊட்டி 4
ஊட்டிய 1
ஊட்டினல்லால் 1
ஊட்டினாளோ 1
ஊட்டினான் 1
ஊட்டுக 2
ஊட்டுதல் 1
ஊட்டும் 3
ஊடல் 1
ஊடி 1
ஊடு 6
ஊடுருவ 2
ஊடுவர் 1
ஊடுற 3
ஊண் 1
ஊத 4
ஊதி 2
ஊதியம் 1
ஊது 1
ஊதுகின்ற 1
ஊதும் 1
ஊதை 4
ஊதையாம் 1
ஊதையால் 1
ஊதையின் 2
ஊமர் 1
ஊமன் 1
ஊமன்-தனை 1
ஊர் 48
ஊர்-தன்னில் 1
ஊர்கின்ற 1
ஊர்தரு 1
ஊர்தரும் 2
ஊர்தல் 2
ஊர்தலால் 1
ஊர்தற்கு 1
ஊர்தி 7
ஊர்ந்த 10
ஊர்ந்தது 2
ஊர்ந்தன 1
ஊர்ந்தனனால் 1
ஊர்ந்தாய் 1
ஊர்ந்தாள் 1
ஊர்ந்தான் 1
ஊர்ந்து 8
ஊர்பவன் 1
ஊர்முக 1
ஊர்வது 3
ஊர்வான் 1
ஊர 9
ஊரவே 4
ஊரஊர 1
ஊரில் 8
ஊரில்-நின்று 1
ஊரினிடை 1
ஊரு 3
ஊருகின்ற 2
ஊரும் 20
ஊருமவர் 1
ஊருவின் 6
ஊருவேனோ 1
ஊருவை 2
ஊரே 1
ஊழி 13
ஊழி-வாய் 2
ஊழிகாலம் 1
ஊழிமுக 1
ஊழியில் 1
ஊழியின் 2
ஊழியும் 2
ஊழின் 1
ஊழினும் 1
ஊற்றங்கோல் 1
ஊற்று 2
ஊற 3
ஊறல் 4
ஊறா 1
ஊறாத 1
ஊறி 2
ஊறிய 3
ஊறியதால் 1
ஊறிஊறி 1
ஊறு 5
ஊறுபட்டு 1
ஊறுபட 1
ஊன் 8
ஊன்றாமல் 1
ஊன்றி 7
ஊன்றிய 2
ஊன்றினான் 2
ஊன்றுதலும் 1
ஊனம் 2
ஊனமே 1
ஊனிடை 1
ஊனொடு 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஊக்கமுடன் (1)

உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/3

மேல்


ஊக்கமும் (2)

உறுதியும் ஒன்னலர் ஊக்கமும் ஏகும் – வில்லி:14 65/1
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும் – வில்லி:39 17/3

மேல்


ஊக்கமோடு (2)

நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு அணி திகழ் நெடும் புயம் பூரித்து – வில்லி:9 9/1
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார் – வில்லி:46 206/1

மேல்


ஊசல் (2)

கழங்கு கந்துகம் அம்மனை ஆடலும் கனக மென் கொடி ஊசல்
வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி – வில்லி:2 26/1,2
பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும் – வில்லி:45 78/1

மேல்


ஊசி (2)

உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர – வில்லி:7 35/3
நெறி இரு புறத்தும் ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க – வில்லி:12 30/1

மேல்


ஊசியும் (1)

ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி – வில்லி:42 6/2

மேல்


ஊட்டி (4)

எண்ணெய் ஊட்டி இருள் குழம்பால் எழில் – வில்லி:13 33/3
அரக்கர்_நாயகன் ஊர் அழல் ஊட்டி இ அகிலம் – வில்லி:14 30/3
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் – வில்லி:41 239/3
அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/2

மேல்


ஊட்டிய (1)

அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன் – வில்லி:36 38/1

மேல்


ஊட்டினல்லால் (1)

ஒன்றிய பகல் இராவில் களப்பலி ஊட்டினல்லால்
வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறு இடாதான் – வில்லி:28 27/3,4

மேல்


ஊட்டினாளோ (1)

இளைத்தது என்று இந்திராணி இன் அமுது ஊட்டினாளோ – வில்லி:41 167/4

மேல்


ஊட்டினான் (1)

ஏசு அறும் அமுது எலாம் இனிதின் ஊட்டினான் – வில்லி:3 14/4

மேல்


ஊட்டுக (2)

உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான் – வில்லி:28 28/3
மாயவன் என்னை வல்லே வன் பலி ஊட்டுக என்றான் – வில்லி:28 30/4

மேல்


ஊட்டுதல் (1)

அரு நெறி கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல்
இருபிறப்பாளருக்கு என்றும் தன்மையே – வில்லி:4 34/3,4

மேல்


ஊட்டும் (3)

அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும்
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க – வில்லி:14 22/3,4
உங்களை களப்பலி ஊட்டும் நாளையே – வில்லி:22 72/4
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும்
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் – வில்லி:42 70/3,4

மேல்


ஊடல் (1)

குருகு எலாம் வளர் பழனம் அ புள் எலாம் கூடல் இன்புற ஊடல்
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் – வில்லி:11 54/2,3

மேல்


ஊடி (1)

முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப – வில்லி:27 162/2

மேல்


ஊடு (6)

உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட – வில்லி:8 14/3
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் – வில்லி:11 53/1
கருத்து நான் வீடேன் என்றான் கடும் கனல் ஊடு நின்றான் – வில்லி:12 71/4
கவந்த கானகம் மேவி ஊடு உறு தீய வெவ் வினை களைவதே – வில்லி:26 15/3
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் – வில்லி:30 26/2
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான் – வில்லி:31 7/2

மேல்


ஊடுருவ (2)

ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் – வில்லி:7 45/2
ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல் – வில்லி:45 13/1

மேல்


ஊடுவர் (1)

ஊடுவர் சிலர் சிலர் ஓகை வீரரே – வில்லி:11 121/4

மேல்


ஊடுற (3)

உரு கிளர் மேனியை ஊடுற நோக்கா – வில்லி:14 56/2
கன்னம் ஊடுற சுட கருத்து அழிந்து போய் – வில்லி:21 42/3
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும் – வில்லி:45 64/2

மேல்


ஊண் (1)

அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன் – வில்லி:45 174/2

மேல்


ஊத (4)

மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப – வில்லி:10 129/2
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா – வில்லி:22 5/1
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே – வில்லி:22 11/4
சங்கம் ஊத தார் முரசு ஆர்ப்ப முழவு ஆர்ப்ப – வில்லி:32 34/1

மேல்


ஊதி (2)

தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில் – வில்லி:27 8/2
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் – வில்லி:46 80/3

மேல்


ஊதியம் (1)

ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார் – வில்லி:46 114/4

மேல்


ஊது (1)

மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன் – வில்லி:27 8/3

மேல்


ஊதுகின்ற (1)

நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே – வில்லி:38 29/4

மேல்


ஊதும் (1)

மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால் – வில்லி:46 146/3

மேல்


ஊதை (4)

ஊதை இல் பூதம் ஒத்து உள்ளம் வெம்பிய – வில்லி:3 21/1
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான் – வில்லி:16 61/3
ஊதை முன் சருகு போல் ஓடல் அல்லதை – வில்லி:45 123/3
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என – வில்லி:46 178/1

மேல்


ஊதையாம் (1)

உகத்தின் ஈறு-தோறு ஓதையோடு ஊதையாம் தாதை – வில்லி:22 17/1

மேல்


ஊதையால் (1)

விரவு நுண் துளி மீது எறி ஊதையால் – வில்லி:1 125/4

மேல்


ஊதையின் (2)

ஊதையின் மரன் அசைவுற பொறா வடம் – வில்லி:11 120/1
உற்றனர் நின்ற போதில் ஊதையின் புதல்வன் ஊரு – வில்லி:20 12/2

மேல்


ஊமர் (1)

சொல்லாது ஊமர் கணம் போல தொல் போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப – வில்லி:11 236/2

மேல்


ஊமன் (1)

விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை ஊமன்
கண் இலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும் – வில்லி:1 4/3,4

மேல்


ஊமன்-தனை (1)

ஊமன்-தனை போல் அவன் நிற்க உடனே இளையோர் ஒன்பதின்மர் – வில்லி:45 140/2

மேல்


ஊர் (48)

ஓடி மீள மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன் உவந்து பல் – வில்லி:1 149/1
கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது புக்கனன் அகத்து உணர்வு மிக்க கலையோன் – வில்லி:3 53/4
உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான் – வில்லி:3 82/4
முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் – வில்லி:3 130/4
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/2
அந்தகனும் மிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன் இந்த ஊர்
வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள் – வில்லி:4 39/1,2
அறத்து இருந்திலன் எனா அஞ்சி அந்த ஊர்
புறத்து இருந்தது என புனிதன் பாசறை – வில்லி:11 110/2,3
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான தேவர் ஊர்
அந்த மண்டபத்தும் இல்லை அதனை அன்றி மண்ணின் மேல் – வில்லி:11 157/2,3
ஊர் கொடுத்தும் அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே – வில்லி:11 177/4
என்னே குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இ ஊர் இனி என்பார் – வில்லி:11 223/1
மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு ஊர் கோளும் வெயிலை சூழ்ந்து – வில்லி:11 258/1
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 259/1
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 269/1
அரும் பகை வலிமையால் அவுணர் ஊர் சுடும் – வில்லி:12 48/1
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் – வில்லி:12 61/4
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
ஊர் கொண்டது உரிமையோடும் அவர் உயிர் மீண்டும் என்றால் – வில்லி:13 146/3
அரக்கர்_நாயகன் ஊர் அழல் ஊட்டி இ அகிலம் – வில்லி:14 30/3
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும் – வில்லி:14 35/4
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி – வில்லி:14 46/3
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர்
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா – வில்லி:14 131/1,2
மண்டலம் வீதி கோணமே முதலாம் வாசிகள் ஊர் தொழில் வல்லேன் – வில்லி:19 23/1
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் – வில்லி:22 24/4
உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார் – வில்லி:22 25/4
நொந்து இனி என் செய்வோம் என்று ஊர் புக நோக்கினானே – வில்லி:22 95/4
உரைத்த பொழுது இப்பொழுது இ ஊர் எரி கொளுத்தி – வில்லி:23 5/1
ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர் புகுந்தனன் அன்றே – வில்லி:24 5/4
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும் – வில்லி:27 9/1
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால் – வில்லி:27 43/2
கண்டு இருந்தீர் எல்லீரும் கருதலர்-பால் ஊர் வேண்டி – வில்லி:27 44/3
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர்
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் – வில்லி:27 102/3,4
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் – வில்லி:27 113/4
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட மறுத்ததற்கு – வில்லி:27 221/2
தூயோய் ஊர் கோள் பரிதி-தனை சூழ்ந்தது அகல் வான் மீது என்றே – வில்லி:27 223/4
தோன்று அரி துவசனும் சோகம் இல் பாகன் ஊர்
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர் – வில்லி:34 13/1,2
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த – வில்லி:40 73/3
கல் சக்ரம் ஆக நடு ஊர் செம் கதிரொடு ஒத்தான் – வில்லி:41 79/4
பாண்டவ சகாயன் ஊர் பறவையின் குலத்து – வில்லி:41 202/1
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4
ஒரு தனுவும் கொண்டு ஊர் பரிமாவும் – வில்லி:42 101/3
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத – வில்லி:42 208/3
அயிர்த்தனம் என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப நீட – வில்லி:45 39/3
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான் என்று – வில்லி:45 162/2
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி – வில்லி:45 185/3
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் – வில்லி:46 47/4
ஊர் புரந்தவன் ஓத முராரியும் ஓதினன் பரிவோடு அவனோடு இவை – வில்லி:46 180/4
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று – வில்லி:46 241/2

மேல்


ஊர்-தன்னில் (1)

தன்னையர்-தம்மை யாகசேனன் ஊர்-தன்னில் வைத்து – வில்லி:12 17/2

மேல்


ஊர்கின்ற (1)

ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் – வில்லி:33 6/1

மேல்


ஊர்தரு (1)

வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயன – வில்லி:12 158/3

மேல்


ஊர்தரும் (2)

மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரும் மொய்ம்பின் இந்த – வில்லி:13 108/3
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால் – வில்லி:31 27/2

மேல்


ஊர்தல் (2)

சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல்
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/1,2
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று – வில்லி:45 230/1

மேல்


ஊர்தலால் (1)

மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே – வில்லி:4 3/4

மேல்


ஊர்தற்கு (1)

சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை – வில்லி:27 1/2

மேல்


ஊர்தி (7)

முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி
அந்த புரத்தில் ஆராமம் அந்தப்புரத்துக்கு ஆராமம் – வில்லி:5 41/3,4
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட – வில்லி:9 11/3
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி
ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன் போலும் என்று அஞ்சி – வில்லி:9 28/1,2
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும் – வில்லி:9 47/2
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று – வில்லி:27 20/1
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு – வில்லி:40 90/1
சாயலால் சிறந்த தோகை சாமள தடம் புள் ஊர்தி
சேய் அலால் தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார் – வில்லி:45 49/1,2

மேல்


ஊர்ந்த (10)

ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி – வில்லி:11 83/2
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர் – வில்லி:21 19/3
உச்ச வானிடை பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட – வில்லி:22 64/3
பகதத்தனும் பட்டு அவன் ஊர்ந்த பகடும் பட்டு புடை சூழ – வில்லி:40 67/1
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின் – வில்லி:40 76/3
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும் – வில்லி:42 174/3
வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான் – வில்லி:44 15/3
ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை – வில்லி:45 178/3
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன் – வில்லி:46 46/2
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே – வில்லி:46 83/4

மேல்


ஊர்ந்தது (2)

உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/2
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர் – வில்லி:13 27/4

மேல்


ஊர்ந்தன (1)

வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன
நின்ற வாசியும் வாசியும் நேர்ந்தன – வில்லி:29 20/2,3

மேல்


ஊர்ந்தனனால் (1)

உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/4

மேல்


ஊர்ந்தாய் (1)

உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/4

மேல்


ஊர்ந்தாள் (1)

மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள்
அந்த மெய் பேடி ஆகில் என்றனன் அந்தணாளன் – வில்லி:22 113/3,4

மேல்


ஊர்ந்தான் (1)

வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4

மேல்


ஊர்ந்து (8)

துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/4
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் – வில்லி:22 120/3
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர் – வில்லி:27 234/1
என்றலும் அவனும் ஆங்கு ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து
சென்றனன் அவனும் கேட்டு சிலையில் வெம் கதிரை திங்கள் – வில்லி:28 27/1,2
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து
சென்றனையே இமை பொழுதில் திகிரியையும் உடைத்தனையே தெவ்வர் ஓட – வில்லி:41 140/1,2
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார் – வில்லி:44 12/3,4
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் – வில்லி:46 14/3
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே – வில்லி:46 33/3,4

மேல்


ஊர்பவன் (1)

ஓடினானும் இ தேர் விரைந்து ஊர்பவன் என்றும் – வில்லி:22 46/1

மேல்


ஊர்முக (1)

ஊர்முக களிற்றின் மேல் உலாவும் வீதியின் – வில்லி:22 69/3

மேல்


ஊர்வது (3)

நடையுடை புரவி திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி – வில்லி:25 15/3
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி – வில்லி:45 40/3
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் – வில்லி:45 54/3

மேல்


ஊர்வான் (1)

உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான்
அவரோடு இனி அமர் வெல்லுதல் ஆராயினும் அரிதால் – வில்லி:42 63/3,4

மேல்


ஊர (9)

மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த – வில்லி:7 82/3
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2
திடம் படு தடம் தேர் ஊர திருமகன் சென்ற செய்கை – வில்லி:22 112/2
ஓடி உத்தரன் தேர் ஊர ஒரு முனையாக தன்னை – வில்லி:22 135/1
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை நெடும் போது – வில்லி:24 19/1,2
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா – வில்லி:38 36/3
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர
வெவ் வாய் வாளி வில் விசயன் மெய்ம்மை தருமன் அணி நின்ற – வில்லி:39 39/1,2
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து ஓடலுற்றனன் பின்னும் – வில்லி:42 139/2
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/3

மேல்


ஊரவே (4)

ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே – வில்லி:22 11/3,4
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் – வில்லி:22 129/4
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே – வில்லி:33 5/4
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே
செயந்தன் மா பெரும் துணைவன் வன் பெரும் சேனை-தன்னொடும் சென்று பற்றினான் – வில்லி:35 5/1,2

மேல்


ஊரஊர (1)

உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர
விழி துயிலா விசயனும் அ விபுதருடன் துயிலுணர்ந்து விதியும் செய்தான் – வில்லி:7 35/3,4

மேல்


ஊரில் (8)

கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில்
பண் மிசை வீணையின் கிழவன் பாண்டு மொழிந்தனன் எனவும் பகர்வுற்றானே – வில்லி:10 13/3,4
அவசத்துடன் அந்தகன் ஊரில் அசுரர் எல்லாம் – வில்லி:13 98/4
நல் நாகர் ஊரில் தடம் தேரை நடாத்துக என்ன – வில்லி:13 104/3
கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே – வில்லி:13 123/4
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில்
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/1,2
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/3
உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார் – வில்லி:41 243/4
காலன் ஊரில் ஏகினார் கிரீடி ஏவு கணைகளால் – வில்லி:43 4/4

மேல்


ஊரில்-நின்று (1)

ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற – வில்லி:42 75/4

மேல்


ஊரினிடை (1)

குருக்கள் அவன் ஊரினிடை குருநிலனொடு ஒப்புற்று – வில்லி:19 37/1

மேல்


ஊரு (3)

தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/2
உற்றனர் நின்ற போதில் ஊதையின் புதல்வன் ஊரு
மற்றவன் மருங்கு பற்ற வன் கரம் மிடறு பற்ற – வில்லி:20 12/2,3
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு – வில்லி:46 171/1

மேல்


ஊருகின்ற (2)

யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால் – வில்லி:38 32/3
ஊருகின்ற வயங்கு இரதம்-தனை ஓர்இரண்டு கரங்கொடு வன்புடன் – வில்லி:42 123/3

மேல்


ஊரும் (20)

ஊரும் ஆதரவினோடு அழைத்து அவனை உவகையோடு மிக உறவு உறா – வில்லி:10 62/4
ஒரு பெரு மாதலி ஊரும் தேரின் மேல் – வில்லி:12 134/1
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ – வில்லி:13 84/2
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல் – வில்லி:13 100/3
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி – வில்லி:13 154/3
ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/3
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில் – வில்லி:27 9/2
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான் – வில்லி:29 54/4
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் – வில்லி:30 30/4
துவசம் பிளந்து தேர் ஊரும் துரகம் பிளந்து சுடர் மணி பொன் – வில்லி:31 7/1
கருதும் புரவி தேர் ஊரும் கழல் காவலன் மேல் காந்தாரர் – வில்லி:40 68/4
அற்புத படைகள் வல்லாய் அபிமனே அமரர் ஊரும்
கற்பக காவும் வானில் கங்கையும் காட்டினாரோ – வில்லி:41 166/3,4
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி – வில்லி:45 21/1
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/3
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/4
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1
ஊரும் ஊரும் இரதத்தினர் எனை பலரும் ஓத வாரி என மத்திரனொடு ஒத்தனரே – வில்லி:46 65/4
ஊரும் ஊரும் இரதத்தினர் எனை பலரும் ஓத வாரி என மத்திரனொடு ஒத்தனரே – வில்லி:46 65/4
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள – வில்லி:46 71/2
ஒரு மதி வெண்குடை இரு கவரி குலம் ஊரும் சீர் – வில்லி:46 100/1

மேல்


ஊருமவர் (1)

தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி – வில்லி:45 21/2

மேல்


ஊருவின் (6)

மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில் – வில்லி:1 19/1
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் – வில்லி:12 149/4
ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் – வில்லி:46 183/3
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின்
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின் – வில்லி:46 184/2,3
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே – வில்லி:46 191/4

மேல்


ஊருவேனோ (1)

ஒலியுடை புரவி திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ
எலியுடை பூசல் பூஞைக்கு எதிர்ப்படின் என் படாதோ – வில்லி:45 41/3,4

மேல்


ஊருவை (2)

ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே – வில்லி:46 182/4
உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே அவன் உடற்றலும் – வில்லி:46 186/2

மேல்


ஊரே (1)

கோமன்றில் அருந்ததியை கொண்டு இனி நீர் நில்லாமல் குறுக ஊரே
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி – வில்லி:11 262/1,2

மேல்


ஊழி (13)

ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி – வில்லி:8 18/2
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/2
இருவர்-தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால் – வில்லி:10 134/2
ஊழி நாளும் தவம் முயன்று ஓங்குவார் – வில்லி:13 35/3
புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி – வில்லி:13 75/2
இந்த ஓதை எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும் – வில்லி:13 114/1
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற – வில்லி:14 88/3
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி – வில்லி:29 69/3
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/3
மேல் வந்த வேந்தன் மகனும் பல வேந்தும் ஊழி
கால் வந்து வேலை கடல்-தன்னை கலக்குமா போல் – வில்லி:41 82/1,2
மாற்று அரிய மறையொடு நாராயணன்-தன் வாளி தொடுத்தலும் அந்த வாளி ஊழி
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/1,2
கரியோடும் ஊழி கனல் என்ன கனன்று வந்தான் – வில்லி:45 72/4
இனி ஊழி வாழ்திர் என இளைஞர் ஒரு நால்வருடன் அறத்தின் மைந்தன்-தனை – வில்லி:46 250/1

மேல்


ஊழி-வாய் (2)

ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன – வில்லி:9 10/2
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல் – வில்லி:29 41/2

மேல்


ஊழிகாலம் (1)

நரகின் ஊழிகாலம் வாழ்தி நாகர் வாழ்வின் உள்ளதும் – வில்லி:11 159/2

மேல்


ஊழிமுக (1)

ஊழிமுக கனல் போல் எழும் அ பொழுது ஓடி அருச்சுனனும் – வில்லி:31 15/2

மேல்


ஊழியில் (1)

ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற – வில்லி:9 20/4

மேல்


ஊழியின் (2)

ஊழியின் நாதன்-தானும் உருப்பினும் உலப்பு இலாதோர் – வில்லி:13 14/2
அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை சாய்தர ஊழியின்
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் – வில்லி:45 63/1,2

மேல்


ஊழியும் (2)

ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே – வில்லி:38 29/1
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று சினம் கொடே – வில்லி:42 125/4

மேல்


ஊழின் (1)

ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியளாதலினால் – வில்லி:7 66/2

மேல்


ஊழினும் (1)

ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் – வில்லி:46 183/3

மேல்


ஊற்றங்கோல் (1)

செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ முனியும் முன்னே – வில்லி:12 22/1

மேல்


ஊற்று (2)

ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் – வில்லி:45 116/3
ஊற்று இருந்த விழியினளாய் உனை பயந்தாள் மனம் மறுக உயிராய் நின்று – வில்லி:45 265/1

மேல்


ஊற (3)

நச்சு அம்பும் அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும் – வில்லி:7 25/2
நாட்டமும் நல் நீர் மல்க நா அமிழ்து ஊற பின்னும் – வில்லி:11 202/3
ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே – வில்லி:11 246/4

மேல்


ஊறல் (4)

கல்லா மழலை கனி ஊறல் கலந்து கொஞ்சும் – வில்லி:2 58/1
சேராமல் முகராகம் வழங்காமல் இகழாமல் செ வாய் ஊறல்
நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல் – வில்லி:8 6/2,3
புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி – வில்லி:8 15/2
அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/2

மேல்


ஊறா (1)

ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி – வில்லி:32 41/3

மேல்


ஊறாத (1)

ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே – வில்லி:11 246/4

மேல்


ஊறி (2)

என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின ஓடைகளே – வில்லி:44 50/2
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ – வில்லி:45 219/1

மேல்


ஊறிய (3)

ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை முகிலின்-வாய் ஒலியே – வில்லி:9 31/4
ஊறிய அமுத சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே – வில்லி:22 109/4
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார் – வில்லி:25 19/4

மேல்


ஊறியதால் (1)

உலகினை மேல்கொளுமவனது என களி ஊறியதால் அங்குலம் ஒத்து – வில்லி:44 8/3

மேல்


ஊறிஊறி (1)

ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி
பாழி-தொறும் இறைக்கின்ற பைம் புனலும் அல்லது வெம் பருவம்-தன்னால் – வில்லி:8 18/2,3

மேல்


ஊறு (5)

ஊறு பட்டபோது எழுந்தருள்க என பணிந்து உரைத்தான் – வில்லி:3 123/4
ஊறு இலாமை கண்டு உடற்றினர் இல் என உணர்ந்து – வில்லி:16 49/1
திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்-கொல் என்ன – வில்லி:22 132/1
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் – வில்லி:46 67/3
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் – வில்லி:46 185/3

மேல்


ஊறுபட்டு (1)

ஊறுபட்டு வெருவும்படி எறிந்து அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை என்று கொடு – வில்லி:42 90/2

மேல்


ஊறுபட (1)

ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க – வில்லி:37 26/3

மேல்


ஊன் (8)

ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி வண்டு சூழ் – வில்லி:3 70/2
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் – வில்லி:4 3/3
உரை கலங்க உளம் கலங்க துளங்கி மெய்யில் ஊன் கலங்க விலங்கொடு புள் இனங்கள் யாவும் – வில்லி:14 20/3
ஊன் இடவோ இஃது உரைத்திடுக என்றான் – வில்லி:14 74/4
ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன் – வில்லி:14 133/3
ஊன் விடும்படி துளைத்து உருவு பல் பகழியால் – வில்லி:34 17/3
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன் – வில்லி:45 249/3
ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ – வில்லி:45 266/1

மேல்


ஊன்றாமல் (1)

மீண்டும் எதிர் ஊன்றாமல் வெய்யோன் மகன் நின்றான் – வில்லி:45 163/4

மேல்


ஊன்றி (7)

சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1
உகு நிண சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான் போல் – வில்லி:39 10/1
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி
சாந்தும் புழுகும் கமழ் வாகு சகுனி தனயர் தலைப்போரில் – வில்லி:40 69/2,3
அறிந்து எதிர் ஊன்றி வென்றி ஆண் தகை கன்னன் மீள – வில்லி:44 18/3
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் – வில்லி:45 108/1
கன தனுத்தனை ஊன்றி நின்று இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான் – வில்லி:46 29/2

மேல்


ஊன்றிய (2)

உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/4

மேல்


ஊன்றினான் (2)

ஊன்றினான் மைந்தரும் இளைஞரும் உயிரையே – வில்லி:34 13/3
கன்னன் எதிர் ஊன்றினான் காயும் கனல் போல்வான் – வில்லி:45 166/4

மேல்


ஊன்றுதலும் (1)

எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2

மேல்


ஊனம் (2)

தீர்த்தோனே ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு என் செய்வது என்றான் – வில்லி:27 10/4
ஊனம் எய்தாது அ இறை போனான் உயிரோடும் – வில்லி:32 37/3

மேல்


ஊனமே (1)

ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம் – வில்லி:18 18/1

மேல்


ஊனிடை (1)

ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம் – வில்லி:18 18/1

மேல்


ஊனொடு (1)

ஊனொடு இரத்தம் உகுக்கும் சோலையூடே – வில்லி:14 113/2

மேல்