வீ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீக்கி 1
வீங்கி 1
வீங்கிய 1
வீங்கு 9
வீச 5
வீசி 1
வீசிய 1
வீசீரே 1
வீசு 2
வீசு-மினே 1
வீசும் 15
வீசுமே 1
வீட்டாவிடினும் 2
வீட்டிற்றும் 1
வீட்டின்-கண் 1
வீட்டீர் 1
வீட்டு 2
வீட்டை 3
வீட 3
வீடது 1
வீடனாக 1
வீடாடி 1
வீடாமே 1
வீடின 1
வீடு 46
வீடு-மின் 1
வீடுசெய்யும் 1
வீடுபெற்று 1
வீடுபேற்று 2
வீடுபேறு 1
வீடும் 7
வீடே 3
வீடை 1
வீடோ 1
வீணை 2
வீதி 19
வீதி-தொறும் 2
வீதிகள்-தோறும் 1
வீதியில் 1
வீதியின்வாய் 1
வீதியூடே 2
வீதிவாய் 1
வீம் 1
வீய 16
வீயவே 1
வீயா 1
வீயாத 1
வீயாம் 1
வீயினும் 1
வீயுமாறு 1
வீயுமே 1
வீர் 1
வீர 2
வீரம் 1
வீரமே 1
வீரமே-கொலோ 2
வீரர் 2
வீரரில் 1
வீரன்-தன்னை 2
வீரனார் 1
வீரனே 2
வீரனை 1
வீவ 1
வீவன் 1
வீவு 7
வீழ் 6
வீழ்க்கும் 1
வீழ்கின்றேன் 1
வீழ்ச்சி 1
வீழ்த்தது 1
வீழ்த்தவனே 1
வீழ்த்திகண்டாய் 1
வீழ்த்து 3
வீழ்ந்த 1
வீழ்ந்தது 1
வீழ்ந்தன 1
வீழ்ந்தாரை 1
வீழ்ந்திட 1
வீழ்ந்து 6
வீழ்விப்பான் 1
வீழ்விலும் 1
வீழ்வு 3
வீழ்வேனை 1
வீழ 37
வீழா 1
வீழாமே 1
வீழும் 1
வீற்றிருக்கும் 1
வீற்றிருத்தல் 3
வீற்றிருந்த 15
வீற்றிருந்த-போதிலும் 1
வீற்றிருந்தாய் 4
வீற்றிருந்தான் 3
வீற்றிருந்தானை 1
வீற்றிருந்து 10
வீற்றிருந்தும் 1
வீற்றிருப்பார் 1
வீற்றிருப்பாரே 1
வீற்று 3

வீக்கி (1)

வார் ஆர வீக்கி மணிமேகலை திருத்தி – நாலாயி:2677/2

மேல்


வீங்கி (1)

காரிகையார்க்கும் உனக்கும் இழுக்குற்று என் காதுகள் வீங்கி எறியில் – நாலாயி:148/1

மேல்


வீங்கிய (1)

மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு – நாலாயி:1116/3

மேல்


வீங்கு (9)

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே – நாலாயி:702/1
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் – நாலாயி:1574/3
வீங்கு ஓத_வண்ணர் விரல் – நாலாயி:2104/4
விண் ஒடுங்க கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான் – நாலாயி:2321/3
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி – நாலாயி:2360/3
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இ பாய் இருள் போல் – நாலாயி:2526/1
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் – நாலாயி:3382/1
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய் – நாலாயி:3488/1
மெல் இலை செல்வ வண் கொடி புல்க வீங்கு இளம் தாள் கமுகின் – நாலாயி:3765/1

மேல்


வீச (5)

அந்தரம் முழவ தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/2,3
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி – நாலாயி:1619/3
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் – நாலாயி:2711/4,5
பன்னு திரை கவரி வீச நில_மங்கை – நாலாயி:2712/2
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் – நாலாயி:2752/2

மேல்


வீசி (1)

வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு – நாலாயி:831/3

மேல்


வீசிய (1)

வெம் சின களிற்றை விளங்காய் விழ கன்று வீசிய ஈசனை பேய்_மகள் – நாலாயி:1645/1

மேல்


வீசீரே (1)

வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே – நாலாயி:627/4

மேல்


வீசு (2)

செந்நெல் ஆர் கவரி குலை வீசு தண் திருவயிந்திரபுரமே – நாலாயி:1154/4
காயோடு நீடு கனி உண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும் காலம் ஐந்து – நாலாயி:1159/1

மேல்


வீசு-மினே (1)

வேர் ஆயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசு-மினே – நாலாயி:2530/4

மேல்


வீசும் (15)

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:961/3,4
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1142/4
மங்கையர்-தம்_தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன – நாலாயி:1237/3
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் – நாலாயி:1650/2
கவரி வீசும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1726/4
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் – நாலாயி:1952/4
யாமங்கள்-தோறு எரி வீசும் என் இளம் கொங்கைகள் – நாலாயி:1968/3
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய் – நாலாயி:2504/3
வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது – நாலாயி:2531/1
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே – நாலாயி:2757/5
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3334/3
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர் திருக்குடந்தை – நாலாயி:3418/3
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை – நாலாயி:3426/3
கோல செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப்பேரெயிற்கே – நாலாயி:3588/4

மேல்


வீசுமே (1)

வினையேன் மேல் வேலையும் வெம் தழலே வீசுமே – நாலாயி:1784/4

மேல்


வீட்டாவிடினும் (2)

வெம் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன் – நாலாயி:693/3
மெய் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என் – நாலாயி:694/3

மேல்


வீட்டிற்றும் (1)

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த – நாலாயி:2555/1

மேல்


வீட்டின்-கண் (1)

வீட்டின்-கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர் – நாலாயி:2819/3

மேல்


வீட்டீர் (1)

வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே – நாலாயி:1334/2

மேல்


வீட்டு (2)

கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே – நாலாயி:3035/2
எம் மா வீட்டு திறமும் செப்பம் நின் – நாலாயி:3099/1

மேல்


வீட்டை (3)

வீட்டை பண்ணி விளையாடும் விமலன்-தன்னை கண்டீரே – நாலாயி:645/2
எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த – நாலாயி:2632/1,2
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய – நாலாயி:2873/3

மேல்


வீட (3)

வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து – நாலாயி:787/3
தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும் – நாலாயி:1081/1
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனை புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் – நாலாயி:1084/1

மேல்


வீடது (1)

வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த-போதிலும் – நாலாயி:859/3

மேல்


வீடனாக (1)

வீடனாக மெய் செயாத வண்ணம் என்-கொல் கண்ணனே – நாலாயி:837/4

மேல்


வீடாடி (1)

வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ – நாலாயி:2940/3

மேல்


வீடாமே (1)

அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே – நாலாயி:3753/4

மேல்


வீடின (1)

வீடின வாசல் கதவு – நாலாயி:2461/4

மேல்


வீடு (46)

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும் – நாலாயி:481/1,2
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே – நாலாயி:797/4
சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல் – நாலாயி:818/1
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் – நாலாயி:818/2
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – நாலாயி:834/4
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே – நாலாயி:871/4
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற – நாலாயி:2038/1
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு – நாலாயி:2393/4
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி – நாலாயி:2394/1
கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும் – நாலாயி:2394/2
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி – நாலாயி:2421/1
மூன்றினொடு நல் வீடு பெறினும் – நாலாயி:2579/8
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் – நாலாயி:2716/1
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் – நாலாயி:2719/2
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் – நாலாயி:2830/3
சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும் – நாலாயி:2873/1
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன் – நாலாயி:2885/3
வீடு செய்து உம் உயிர் – நாலாயி:2910/2
வீடு உடையானிடை – நாலாயி:2910/3
வீடு செய்ம்-மினே – நாலாயி:2910/4
உற்றது வீடு உயிர் – நாலாயி:2914/2
ஒளிவரும் முழு நலம் முதல் இல கேடு இல வீடு ஆம் – நாலாயி:2922/2
உடல் ஆழி பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய் – நாலாயி:2941/1
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான் – நாலாயி:2952/2
திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய் – நாலாயி:3020/1
இணைவன் ஆம் எ பொருட்கும் வீடு முதல் ஆம் – நாலாயி:3088/3
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம் – நாலாயி:3089/2
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா – நாலாயி:3097/1
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் – நாலாயி:3103/1
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே – நாலாயி:3109/4
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே – நாலாயி:3149/4
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே – நாலாயி:3164/4
வைகலும் மாத்திரை போதும் ஓர் வீடு இன்றி – நாலாயி:3201/2
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை – நாலாயி:3240/3
மறுகல் இல் ஈசனை பற்றி விடாவிடில் வீடு அஃதே – நாலாயி:3240/4
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் – நாலாயி:3331/2
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே – நாலாயி:3335/2
நாள்-தொறும் வீடு இன்றியே தொழ கூடும்-கொல் நல் நுதலீர் – நாலாயி:3436/1
இன்று இ ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய கருமாணிக்க சுடர் – நாலாயி:3471/3
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே – நாலாயி:3753/4
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே – நாலாயி:3753/4
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறி – நாலாயி:3754/1
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறாது – நாலாயி:3754/3
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:4000/2

மேல்


வீடு-மின் (1)

வீடு-மின் முற்றவும் – நாலாயி:2910/1

மேல்


வீடுசெய்யும் (1)

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே – நாலாயி:2572/3,4

மேல்


வீடுபெற்று (1)

அ நாளே அடியோங்கள் அடி குடில் வீடுபெற்று உய்ந்தது காண் – நாலாயி:10/2

மேல்


வீடுபேற்று (2)

அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறி – நாலாயி:3754/1
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறாது – நாலாயி:3754/3

மேல்


வீடுபேறு (1)

நுகர்ச்சி உறுமோ மூ_உலகின் வீடுபேறு தன் கேழ் இல் – நாலாயி:3775/1

மேல்


வீடும் (7)

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும் – நாலாயி:1296/1
முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது – நாலாயி:1989/1
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நல் – நாலாயி:2830/1
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய் – நாலாயி:3061/3
நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே – நாலாயி:3217/4
வீடும் பெறுத்தி தன் மூ_உலகுக்கும் தரும் ஒரு நாயகமே – நாலாயி:3230/4
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் – நாலாயி:3449/2

மேல்


வீடே (3)

நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே – நாலாயி:2909/4
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே – நாலாயி:3098/4
வீடே பெறலாமே – நாலாயி:3939/4

மேல்


வீடை (1)

வீடை பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் – நாலாயி:3756/3

மேல்


வீடோ (1)

சேண் பால வீடோ உயிரோ மற்று எ பொருட்கும் – நாலாயி:3095/3

மேல்


வீணை (2)

நன் நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து – நாலாயி:279/3
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு – நாலாயி:2066/3

மேல்


வீதி (19)

அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/3
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய் – நாலாயி:518/1
மங்கல வீதி வலம் செய்து மா மண நீர் – நாலாயி:565/2
வீதி ஆர வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:641/4
காவி மலர் நெடும் கண்ணார் கைதொழ வீதி வருவான் – நாலாயி:1174/3
தேர் ஆரும் நெடு வீதி திருவாலி நகர் ஆளும் – நாலாயி:1203/3
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு – நாலாயி:1282/3
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி ஓவா நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1508/3,4
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1588/4
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1592/4
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1593/4
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து – நாலாயி:1594/3
ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே – நாலாயி:1594/4
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1595/4
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும் – நாலாயி:1623/3
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும் – நாலாயி:1626/3
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் – நாலாயி:1991/3
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணை மேல் – நாலாயி:2737/2
அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று – நாலாயி:2937/2

மேல்


வீதி-தொறும் (2)

செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து – நாலாயி:1236/3
முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதி-தொறும்
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற – நாலாயி:1605/2,3

மேல்


வீதிகள்-தோறும் (1)

வேத முதல்வனை பாடி வீதிகள்-தோறும் துள்ளாதார் – நாலாயி:3169/3

மேல்


வீதியில் (1)

வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் – நாலாயி:1485/3

மேல்


வீதியின்வாய் (1)

உயர் கொள் மாதவி போதொடு உலாவிய மாருதம் வீதியின்வாய்
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1369/3,4

மேல்


வீதியூடே (2)

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே
கண்ணன் காலி பின்னே எழுந்தருள கண்டு இள ஆய் கன்னிமார் காமுற்ற – நாலாயி:263/1,2
மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே
பொன் ஒத்த ஆடை குக்கூடலிட்டு போகின்ற-போது நான் கண்டு நின்றேன் – நாலாயி:702/1,2

மேல்


வீதிவாய் (1)

வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலை சொல்லை – நாலாயி:523/2

மேல்


வீம் (1)

வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை – நாலாயி:2902/3

மேல்


வீய (16)

வீய பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர் – நாலாயி:331/4
பற்றலர் வீய கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை – நாலாயி:1068/3
மேவா அரக்கர் தென்_இலங்கை_வேந்தன் வீய சரம் துரந்து – நாலாயி:1350/1
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி – நாலாயி:1355/1
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி – நாலாயி:1514/1
அடையா அரக்கர் வீய பொருது மேவி வெம் கூற்றம் – நாலாயி:1542/3
இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய் – நாலாயி:2405/2
மாயோம் தீய அலவலை பெரு மா வஞ்ச பேய் வீய
தூய குழவியாய் விட பால் அமுதா அமுதுசெய்திட்ட – நாலாயி:2951/1,2
குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை – நாலாயி:3041/1
அலமந்து வீய அசுரரை செற்றான் – நாலாயி:3091/3
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என் – நாலாயி:3096/3
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அற பாய்ந்து – நாலாயி:3132/3
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று – நாலாயி:3171/1
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த – நாலாயி:3197/1
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே – நாலாயி:3542/2

மேல்


வீயவே (1)

வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே – நாலாயி:3276/4

மேல்


வீயா (1)

பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3253/3

மேல்


வீயாத (1)

வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் – நாலாயி:648/2

மேல்


வீயாம் (1)

பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே – நாலாயி:3253/4

மேல்


வீயினும் (1)

துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே – நாலாயி:2897/3

மேல்


வீயுமாறு (1)

வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து – நாலாயி:3151/2

மேல்


வீயுமே (1)

மேவி சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே – நாலாயி:1547/4

மேல்


வீர் (1)

வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் – நாலாயி:390/2

மேல்


வீர (2)

வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின் – நாலாயி:782/3
பள்ளி மாய பன்றி ஆய வென்றி வீர குன்றினால் – நாலாயி:853/3

மேல்


வீரம் (1)

செருக்குற்றான் வீரம் சிதைய தலையை – நாலாயி:309/3

மேல்


வீரமே (1)

தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4

மேல்


வீரமே-கொலோ (2)

வென்ற வில்லியார் வீரமே-கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் – நாலாயி:1952/3,4
வென்ற வில்லியார் வீரமே-கொலோ
முன்றில் பெண்ணை மேல் முளரி கூட்டகத்து – நாலாயி:1957/2,3

மேல்


வீரர் (2)

திண் திறல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர் – நாலாயி:801/2
வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும் – நாலாயி:1119/1

மேல்


வீரரில் (1)

வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும் – நாலாயி:1119/1

மேல்


வீரன்-தன்னை (2)

வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய கொண்ட வீரன்-தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:741/2,3
வெவ் வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன்-தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:743/2,3

மேல்


வீரனார் (1)

நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன் – நாலாயி:867/2,3

மேல்


வீரனே (2)

கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார் – நாலாயி:807/2,3
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே – நாலாயி:810/4

மேல்


வீரனை (1)

மின் இலங்கு ஆழி படை தட கை வீரனை
மன்னு இ அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க – நாலாயி:2767/2,3

மேல்


வீவ (1)

மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே – நாலாயி:3914/4

மேல்


வீவன் (1)

வீவன் நின் பசுநிரை மேய்க்க போக்கு வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் – நாலாயி:3915/1

மேல்


வீவு (7)

வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து – நாலாயி:1958/3
வீற்றிருந்து ஏழ்_உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர் – நாலாயி:3275/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் – நாலாயி:3277/1
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/2
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன் – நாலாயி:3277/3
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே – நாலாயி:3277/4
தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்ப கதி செய்யும் – நாலாயி:3615/1

மேல்


வீழ் (6)

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேல் கணார் கலவியே கருதி – நாலாயி:951/1
கொக்கின் பழம் வீழ் கூடலூரே – நாலாயி:1363/4
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும் – நாலாயி:2559/3
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் – நாலாயி:2717/2
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும் – நாலாயி:2755/2
வீழ் துணையா போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே – நாலாயி:3788/4

மேல்


வீழ்க்கும் (1)

குலம் முதல் அடும் தீவினை கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை – நாலாயி:3569/1

மேல்


வீழ்கின்றேன் (1)

அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன்
பணம் ஆடு அரவணை பற்பல காலமும் பள்ளிகொள் – நாலாயி:602/2,3

மேல்


வீழ்ச்சி (1)

செங்கண்மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் – நாலாயி:583/2

மேல்


வீழ்த்தது (1)

இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை – நாலாயி:2409/2

மேல்


வீழ்த்தவனே (1)

விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் – நாலாயி:2281/3

மேல்


வீழ்த்திகண்டாய் (1)

அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும் – நாலாயி:3414/2,3

மேல்


வீழ்த்து (3)

நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் – நாலாயி:465/3
முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு – நாலாயி:1301/1
ஓவாது இராப்பகல் உன்-பாலே வீழ்த்து ஒழிந்தாய் – நாலாயி:3018/2

மேல்


வீழ்ந்த (1)

கூற்றத்தின்வாய் வீழ்ந்த கும்பகருணனும் – நாலாயி:483/5

மேல்


வீழ்ந்தது (1)

ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று – நாலாயி:2684/6

மேல்


வீழ்ந்தன (1)

ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி – நாலாயி:1343/3

மேல்


வீழ்ந்தாரை (1)

விளிந்தீந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே – நாலாயி:1475/2

மேல்


வீழ்ந்திட (1)

இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின் – நாலாயி:2826/3

மேல்


வீழ்ந்து (6)

கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்கதே – நாலாயி:386/2
கொங்கை சிறு வரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி – நாலாயி:449/1
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் – நாலாயி:883/3
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் – நாலாயி:1330/3
மீனை தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து – நாலாயி:1490/3
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் – நாலாயி:3408/1

மேல்


வீழ்விப்பான் (1)

நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் – நாலாயி:2596/1

மேல்


வீழ்விலும் (1)

வெருவிலும் வீழ்விலும் ஓவாள் கண்ணன் கழல்கள் விரும்புமே – நாலாயி:3271/4

மேல்


வீழ்வு (3)

மேலும் எழா மயிர் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா – நாலாயி:457/2
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர் – நாலாயி:769/2
விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும் – நாலாயி:834/2

மேல்


வீழ்வேனை (1)

நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்தருளாரே – நாலாயி:584/3,4

மேல்


வீழ (37)

இடம் கொண்ட செ வாய் ஊறிஊறி இற்று இற்று வீழ நின்று – நாலாயி:92/2
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ
தன் நிகர் ஒன்று இல்லா சிலை கால் வளைத்து இட்ட – நாலாயி:179/2,3
விரும்பா கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே – நாலாயி:228/2
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே – நாலாயி:437/4
தென்றி திசைதிசை வீழ செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:461/4
பனி தலை வீழ நின் வாசல் கடை பற்றி – நாலாயி:485/4
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் – நாலாயி:540/3
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் – நாலாயி:547/2
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெம் சரம் துரந்து – நாலாயி:784/1
புரண்டு வீழ வாளை பாய் குறும் கொடி நெடும் தகாய் – நாலாயி:813/2
மரம் பொத சரம் துரந்து வாலி வீழ முன் ஒர் நாள் – நாலாயி:824/1
நாசம் உற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கு அலால் – நாலாயி:858/3
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் – நாலாயி:1020/1
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை – நாலாயி:1068/1,2
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகனாய் ஆலிலையில் பள்ளி இன்பம் – நாலாயி:1092/1
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட – நாலாயி:1120/3
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய – நாலாயி:1174/2
நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன – நாலாயி:1185/3
கும்பம் மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ
கொம்பு-அதனை பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1256/1,2
மடல் எடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர் பொன்னி – நாலாயி:1280/3
பல் அரசு அவிந்து வீழ பாரத போர் முடித்தாய் – நாலாயி:1303/2
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் – நாலாயி:1304/2
கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும் – நாலாயி:1350/3
புகு வாய் நின்ற போதகம் வீழ பொருதான் ஊர் – நாலாயி:1493/2
தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை வெம் சமத்து பொன்றி வீழ
போர் ஆளும் சிலை அதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் – நாலாயி:1581/1,2
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் – நாலாயி:1624/2
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ – நாலாயி:1938/2
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே – நாலாயி:1990/4
மீன் வீழ கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர் – நாலாயி:2121/3
கோன் வீழ கண்டு உகந்தான் குன்று – நாலாயி:2121/4
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் தாள் இரண்டும் – நாலாயி:2224/2
தென் இலங்கை கோன் வீழ சென்று குறள் உரு ஆய் – நாலாயி:2333/3
நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் – நாலாயி:2355/2
மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய் – நாலாயி:2393/1,2
ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால் – நாலாயி:2410/3
தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு – நாலாயி:2429/3
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட – நாலாயி:3919/1,2

மேல்


வீழா (1)

மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து – நாலாயி:2628/2

மேல்


வீழாமே (1)

உருமகத்தே வீழாமே குருமுகமாய் காத்தான் ஊர் – நாலாயி:404/2

மேல்


வீழும் (1)

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் – நாலாயி:284/3

மேல்


வீற்றிருக்கும் (1)

செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1752/4

மேல்


வீற்றிருத்தல் (3)

இங்கு இல்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய – நாலாயி:2614/1
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ – நாலாயி:2940/3
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/4

மேல்


வீற்றிருந்த (15)

விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை – நாலாயி:347/2
அதில் நாயகர் ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் – நாலாயி:415/2
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:750/3
மாற்றாது வீற்றிருந்த மாவலி-பால் வண் கை நீர் – நாலாயி:2131/3
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே – நாலாயி:3407/4
வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் – நாலாயி:3583/3
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே – நாலாயி:3584/3,4
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே – நாலாயி:3585/3,4
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்க கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள் என்னை என் முனிந்தே – நாலாயி:3586/3,4
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே காலம்பெற என்னை காட்டு-மினே – நாலாயி:3587/3,4
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த நான்மறையாளரும் வேள்வி ஓவா – நாலாயி:3588/3
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3589/1,2
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே – நாலாயி:3590/4
கார்_வண்ணன் கார் கடல் ஞாலம் உண்ட கண்ணபிரான் வந்து வீற்றிருந்த
ஏர் வள ஒண் கழனி பழன தென் திருப்பேரெயில் மாநகரே – நாலாயி:3591/3,4
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
மகர நெடும் குழை காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற – நாலாயி:3592/2,3

மேல்


வீற்றிருந்த-போதிலும் (1)

வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த-போதிலும்
கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே – நாலாயி:859/3,4

மேல்


வீற்றிருந்தாய் (4)

குடியேறி வீற்றிருந்தாய் கோல பெரும் சங்கே – நாலாயி:569/4
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் – நாலாயி:3071/4
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3410/4
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே – நாலாயி:3679/4

மேல்


வீற்றிருந்தான் (3)

மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை – நாலாயி:3734/2
கருத்தை உற வீற்றிருந்தான் கண்டு கொண்டே – நாலாயி:3737/4
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் – நாலாயி:3739/2

மேல்


வீற்றிருந்தானை (1)

அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தை கண்டார் உளர் – நாலாயி:330/4

மேல்


வீற்றிருந்து (10)

கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் – நாலாயி:683/2
விண்கள் அகத்து இமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே – நாலாயி:1537/4
வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான் – நாலாயி:2471/1
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும் – நாலாயி:2490/2
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே – நாலாயி:3098/4
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே – நாலாயி:3263/4
வீற்றிருந்து ஏழ்_உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர் – நாலாயி:3275/1
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் – நாலாயி:3447/2
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே – நாலாயி:3560/4
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் – நாலாயி:3660/2

மேல்


வீற்றிருந்தும் (1)

கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும் – நாலாயி:3284/2

மேல்


வீற்றிருப்பார் (1)

விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு – நாலாயி:2470/4

மேல்


வீற்றிருப்பாரே (1)

தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே – நாலாயி:3274/4

மேல்


வீற்று (3)

தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்கும் இடம் காணாது இளைத்து – நாலாயி:2606/3,4
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே – நாலாயி:3799/4
வீற்று இடம்கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் – நாலாயி:3800/1

மேல்