ஐ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 9
ஐக்கள் 2
ஐங்கணை 4
ஐங்கருவி 1
ஐது 1
ஐந்தலை 1
ஐந்தலைய 1
ஐந்தாய் 2
ஐந்திலும் 1
ஐந்தினையும் 2
ஐந்தினொடு 1
ஐந்தினோடு 2
ஐந்து 25
ஐந்துக்கும் 1
ஐந்தும் 51
ஐந்துமாய் 3
ஐந்தும்ஐந்தும் 1
ஐந்தை 1
ஐந்தொடு 3
ஐநான்கும் 1
ஐம் 5
ஐம்படையின் 1
ஐம்படையும் 2
ஐம்பால் 2
ஐம்புலன் 7
ஐம்புலன்கள் 5
ஐம்புலன்களாம் 1
ஐம்புலனாய் 1
ஐம்புலனும் 5
ஐம்பூதம் 2
ஐம்மார் 1
ஐய 8
ஐயப்படா 1
ஐயப்படாதே 1
ஐயப்பாடு 1
ஐயம் 3
ஐயமும் 1
ஐயர் 2
ஐயன் 5
ஐயனார் 1
ஐயனே 2
ஐயனை 2
ஐயா 4
ஐயார் 1
ஐயிரண்டும் 3
ஐயில் 1
ஐயுற 1
ஐயுறவு 1
ஐயொன்றும் 1
ஐயோ 3
ஐராவத 1
ஐவகை 1
ஐவர் 17
ஐவர்-பாலதாம் 1
ஐவர்க்காய் 8
ஐவர்க்கு 3
ஐவர்கட்காய் 2
ஐவர்கட்கு 2
ஐவரால் 2
ஐவரை 6
ஐவரையே 1
ஐவரொடு 1
ஐவாய் 1

ஐ (9)

ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே – நாலாயி:1207/4
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர் – நாலாயி:1221/3
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறு அங்கம் – நாலாயி:1259/3
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே – நாலாயி:1584/4
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே – நாலாயி:1635/4
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில் – நாலாயி:2672/14
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் – நாலாயி:2672/20
ஐ வாய் அரவு_அணை மேல் ஆழி பெருமானார் – நாலாயி:3014/3
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல் – நாலாயி:3101/3

மேல்


ஐக்கள் (2)

ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்-மின் என்று – நாலாயி:974/2
கலங்க ஐக்கள் போத உந்தி கண்ட பிதற்றா முன் – நாலாயி:976/2

மேல்


ஐங்கணை (4)

ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன் – நாலாயி:1794/3
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய – நாலாயி:1948/3
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து – நாலாயி:1958/3
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார்-தம் – நாலாயி:3778/3

மேல்


ஐங்கருவி (1)

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பம் – நாலாயி:3328/1,2

மேல்


ஐது (1)

அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1

மேல்


ஐந்தலை (1)

ஐந்தலை வாய் நாகத்து_அணை – நாலாயி:2416/4

மேல்


ஐந்தலைய (1)

செந்நாள் தோற்றி திரு மதுரையில் சிலை குனித்து ஐந்தலைய
பை நாக தலை பாய்ந்தவனே உன்னை பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:10/3,4

மேல்


ஐந்தாய் (2)

பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி – நாலாயி:2052/3
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி – நாலாயி:2055/1,2

மேல்


ஐந்திலும் (1)

நீள் முடி ஐந்திலும் நின்று நடம்செய்து – நாலாயி:313/2

மேல்


ஐந்தினையும் (2)

செப்பாடு உடைய திருமால் அவன்-தன் செந்தாமரை கைவிரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்து கவித்த மலை – நாலாயி:269/1,2
வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய – நாலாயி:2128/1,2

மேல்


ஐந்தினொடு (1)

கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம்_கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் – நாலாயி:1247/3

மேல்


ஐந்தினோடு (2)

ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:317/4
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில் – நாலாயி:3912/3

மேல்


ஐந்து (25)

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் – நாலாயி:365/1
பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் – நாலாயி:365/1
ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – நாலாயி:754/2
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து – நாலாயி:757/3
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைம் தலை நிலத்து உக – நாலாயி:807/1
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை – நாலாயி:846/1
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் – நாலாயி:1096/3
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் – நாலாயி:1139/3
காயோடு நீடு கனி உண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும் காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1159/1,2
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு – நாலாயி:1244/3
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார் – நாலாயி:1436/1
படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் – நாலாயி:1514/3
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும் – நாலாயி:1748/3
ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு – நாலாயி:1795/2
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் – நாலாயி:1813/3
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம் – நாலாயி:2085/1,2
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2131/1
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய – நாலாயி:2357/1,2
ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து – நாலாயி:2360/1
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை – நாலாயி:3068/3
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி – நாலாயி:3255/2
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு – நாலாயி:3562/1
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை – நாலாயி:3565/1
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ் – நாலாயி:3662/3

மேல்


ஐந்துக்கும் (1)

தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி – நாலாயி:3163/2

மேல்


ஐந்தும் (51)

தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:317/4
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை – நாலாயி:376/1
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – நாலாயி:753/1
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – நாலாயி:753/1
ஊறொடு ஓசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே – நாலாயி:753/4
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய் – நாலாயி:754/1
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய் – நாலாயி:754/1
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய் – நாலாயி:754/1
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று – நாலாயி:754/3
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று – நாலாயி:754/3
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று – நாலாயி:754/3
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – நாலாயி:754/4
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – நாலாயி:754/4
மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – நாலாயி:755/1
மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் – நாலாயி:755/1
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் – நாலாயி:841/3
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ – நாலாயி:845/2
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகு உடன் மருவி – நாலாயி:987/3
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகு உடன் மருவி – நாலாயி:987/3
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:1097/4
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:1097/4
வார் அணங்கு முலை மடவார் மங்கை_வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார – நாலாயி:1147/3
வார் அணங்கு முலை மடவார் மங்கை_வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார – நாலாயி:1147/3
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து – நாலாயி:1158/1
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன் – நாலாயி:1197/3
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் – நாலாயி:1287/3
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் – நாலாயி:1287/3
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து – நாலாயி:1406/1
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1447/3
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே – நாலாயி:1447/3,4
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே – நாலாயி:1627/4
இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன – நாலாயி:1788/3
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்த சென்று அரக்கன் – நாலாயி:1801/1
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்த சென்று அரக்கன் – நாலாயி:1801/1
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்று ஆடு-மினே – நாலாயி:1877/4
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1887/3
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே – நாலாயி:1887/3,4
ஐயொன்றும் ஐந்தும் இவை பாடி ஆடு-மினே – நாலாயி:2021/4
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத – நாலாயி:2093/2
அமையா பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் – நாலாயி:2113/2
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி – நாலாயி:2166/3
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2187/1
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் உந்தி – நாலாயி:2207/2
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல – நாலாயி:2751/3
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் – நாலாயி:2966/2
புலன் ஐந்தும் மேயும் பொறி ஐந்தும் நீங்கி – நாலாயி:3091/1
புலன் ஐந்தும் மேயும் பொறி ஐந்தும் நீங்கி – நாலாயி:3091/1
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில் – நாலாயி:3912/3
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் – நாலாயி:3966/3

மேல்


ஐந்துமாய் (3)

பூ நிலாய ஐந்துமாய் புனல்-கண் நின்ற நான்குமாய் – நாலாயி:752/1
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – நாலாயி:753/1,2
மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் – நாலாயி:755/1,2

மேல்


ஐந்தும்ஐந்தும் (1)

பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்ஐந்தும் வல்லார் – நாலாயி:1657/3

மேல்


ஐந்தை (1)

வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள் ஐந்தை இரு சுடரை – நாலாயி:3229/3

மேல்


ஐந்தொடு (3)

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் – நாலாயி:365/1
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைம் தலை நிலத்து உக – நாலாயி:807/1
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3

மேல்


ஐநான்கும் (1)

வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் – நாலாயி:1351/2

மேல்


ஐம் (5)

ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:590/3
சந்தமாய் சமயம் ஆகி சமய ஐம் பூதம் ஆகி – நாலாயி:1306/1
சந்தோகன் பௌழியன் ஐம் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி – நாலாயி:1396/3
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர – நாலாயி:2672/24
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே – நாலாயி:2672/30

மேல்


ஐம்படையின் (1)

நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ – நாலாயி:72/3

மேல்


ஐம்படையும் (2)

அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு – நாலாயி:48/2
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக – நாலாயி:73/3

மேல்


ஐம்பால் (2)

அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே – நாலாயி:1590/4
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை – நாலாயி:2672/34

மேல்


ஐம்புலன் (7)

ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி – நாலாயி:909/2
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை – நாலாயி:955/1
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து – நாலாயி:2049/2
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன்
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி – நாலாயி:2672/15,16
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று – நாலாயி:3239/1
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன் – நாலாயி:3305/1
விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும் ஐம்புலன் இவை – நாலாயி:3566/1

மேல்


ஐம்புலன்கள் (5)

மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும் – நாலாயி:849/1
இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி – நாலாயி:1458/2
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து – நாலாயி:1461/3
கல்லா ஐம்புலன்கள் அவை கண்டவாறு செய்யகில்லேன் – நாலாயி:1463/1
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் – நாலாயி:3229/2

மேல்


ஐம்புலன்களாம் (1)

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன் – நாலாயி:3414/1

மேல்


ஐம்புலனாய் (1)

அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய் – நாலாயி:2205/2

மேல்


ஐம்புலனும் (5)

என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி – நாலாயி:1596/1
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செம் தீ – நாலாயி:2093/1
அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் – நாலாயி:2293/1
அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி – நாலாயி:2995/2
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் – நாலாயி:3966/3

மேல்


ஐம்பூதம் (2)

வந்தித்து அவனை வழிநின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் உந்தி – நாலாயி:2207/1,2
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/3,4

மேல்


ஐம்மார் (1)

வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார்
தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே – நாலாயி:3468/3,4

மேல்


ஐய (8)

ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட – நாலாயி:18/3
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:64/4
ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய் – நாலாயி:286/1
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:427/4
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா – நாலாயி:504/2
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து – நாலாயி:787/3
ஐய மலர்_மகள் நின் ஆகத்தாள் செய்ய – நாலாயி:2109/2
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்குஅங்கு எல்லாம் – நாலாயி:2561/2

மேல்


ஐயப்படா (1)

ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே – நாலாயி:2869/4

மேல்


ஐயப்படாதே (1)

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற – நாலாயி:2369/1,2

மேல்


ஐயப்பாடு (1)

ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:886/4

மேல்


ஐயம் (3)

மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில் – நாலாயி:1265/2
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் – நாலாயி:3356/3
ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே – நாலாயி:3661/1

மேல்


ஐயமும் (1)

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி – நாலாயி:475/7

மேல்


ஐயர் (2)

அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர் – நாலாயி:2499/2
ஆர்ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால் – நாலாயி:2687/1

மேல்


ஐயன் (5)

அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் – நாலாயி:1280/2
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் – நாலாயி:1439/2
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா – நாலாயி:2803/3
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன் – நாலாயி:2892/2
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே – நாலாயி:3886/4

மேல்


ஐயனார் (1)

ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் – நாலாயி:933/3

மேல்


ஐயனே (2)

ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:668/3
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் – நாலாயி:904/3

மேல்


ஐயனை (2)

ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய – நாலாயி:1642/2
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் – நாலாயி:2781/2,3

மேல்


ஐயா (4)

ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:226/4
தலை அறுப்பு உண்டும் சாவேன் சத்தியம் காண்-மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் – நாலாயி:878/3,4
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/2
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4

மேல்


ஐயார் (1)

சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினை-மின் கண்டீர் திரு பொலிந்த – நாலாயி:2221/1,2

மேல்


ஐயிரண்டும் (3)

நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐயிரண்டும்
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே – நாலாயி:1377/3,4
செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக உதிர்த்த உரவோன் ஊர் போலும் – நாலாயி:1590/1,2
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐயிரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர் வான் உலகே – நாலாயி:1607/3,4

மேல்


ஐயில் (1)

ஐயில் ஆய ஆக்கை நோய் அறுத்து வந்து நின் அடைந்து – நாலாயி:848/3

மேல்


ஐயுற (1)

குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை – நாலாயி:436/2

மேல்


ஐயுறவு (1)

ஆழி கொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண் – நாலாயி:62/3

மேல்


ஐயொன்றும் (1)

ஐயொன்றும் ஐந்தும் இவை பாடி ஆடு-மினே – நாலாயி:2021/4

மேல்


ஐயோ (3)

செய்ய வாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததுவே – நாலாயி:933/4
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே – நாலாயி:935/4
ஐயோ கண்ணபிரான் அறையோ இனி போனாலே – நாலாயி:3341/4

மேல்


ஐராவத (1)

அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் – நாலாயி:397/3

மேல்


ஐவகை (1)

மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் – நாலாயி:1846/3

மேல்


ஐவர் (17)

ஏவினார் கலியார் நலிக என்று என் மேல் எங்ஙனே வாழும் ஆறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/1,2
கூறா ஐவர் வந்து குமைக்க குடிவிட்டவரை – நாலாயி:1464/3
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது – நாலாயி:1608/3
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறி போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் – நாலாயி:1610/3
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணா போகமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1614/3,4
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அ காவலை பிழைத்து – நாலாயி:1615/2
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து – நாலாயி:1616/1
அருவி நோய் செய்து நின்று ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் – நாலாயி:1813/2
அன்று பாரதத்து ஐவர் தூதனாய் – நாலாயி:1961/1
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர்-தம்மை – நாலாயி:2635/1
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ – நாலாயி:2858/1
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் – நாலாயி:3547/1
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை – நாலாயி:3567/1
இன் அமுது என தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த – நாலாயி:3568/1
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசைதிசை வலித்து எற்றுகின்றனர் – நாலாயி:3570/3
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாய – நாலாயி:3722/3
மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க – நாலாயி:3967/1

மேல்


ஐவர்-பாலதாம் (1)

மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர்-பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:840/3,4

மேல்


ஐவர்க்காய் (8)

தாராளன் தண் குடந்தை நகர் ஆளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த – நாலாயி:1394/3
உரங்களால் இயன்ற மன்னர் மாள பாரதத்து ஒரு தேர் ஐவர்க்காய் சென்று – நாலாயி:1571/1
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் ஊர் போலும் – நாலாயி:1802/2
கோதை வேல் ஐவர்க்காய் மண் அகலம் கூறு இடுவான் – நாலாயி:1998/1
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று – நாலாயி:2309/1
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாய போர் பண்ணி – நாலாயி:3410/1
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை – நாலாயி:3613/2,3
கூற்று இயல் கஞ்சனை கொன்று ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து – நாலாயி:3625/3

மேல்


ஐவர்க்கு (3)

நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று – நாலாயி:3171/1
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த – நாலாயி:3197/1
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு
திறங்கள் காட்டியிட்டு செய்து போன மாயங்களும் – நாலாயி:3440/1,2

மேல்


ஐவர்கட்காய் (2)

அடியை தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரத போர் – நாலாயி:2841/1
கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடும் தேர் படை நீறு எழ செற்ற பிரான் – நாலாயி:3530/2,3

மேல்


ஐவர்கட்கு (2)

வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த – நாலாயி:1371/1
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் – நாலாயி:3185/3

மேல்


ஐவரால் (2)

உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் – நாலாயி:3561/1
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன் திருவடி – நாலாயி:3563/1

மேல்


ஐவரை (6)

போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர் – நாலாயி:3286/3
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும் – நாலாயி:3400/2
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரை காட்டி உன் அடி – நாலாயி:3564/1
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் – நாலாயி:3565/1,2
குலம் முதல் அடும் தீவினை கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் – நாலாயி:3569/1,2
திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்து அற மன்னி – நாலாயி:3738/2

மேல்


ஐவரையே (1)

மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆக – நாலாயி:2603/3

மேல்


ஐவரொடு (1)

பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/3

மேல்


ஐவாய் (1)

தேம்பல் இளம் திங்கள் சிறைவிடுத்து ஐவாய்
பாம்பின்_அணை பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ – நாலாயி:2028/3,4

மேல்