கீ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீசுகீசு 1
கீண்ட 16
கீண்டதும் 1
கீண்டதுவும் 1
கீண்டவர் 1
கீண்டவன் 2
கீண்டாய் 1
கீண்டாயும் 1
கீண்டான் 5
கீண்டானும் 1
கீண்டானை 3
கீண்டானையே 1
கீண்டிட்ட 1
கீண்டு 14
கீண்டேனும் 1
கீத 2
கீதங்கள் 3
கீதம் 2
கீதமும் 1
கீதமொடு 1
கீதனாய 1
கீதனே 1
கீதையின் 1
கீர்த்தி 22
கீர்த்தித்த 1
கீர்த்திமை 1
கீர்த்தியாய் 3
கீர்த்தியார் 1
கீர்த்தியினாய் 1
கீர்த்தியினால் 1
கீர்த்தியினானே 1
கீர்த்தியும் 2
கீழ் 81
கீழ்_உலகில் 1
கீழ்து 1
கீழ்மகன் 2
கீழ்மை 2
கீழ்மையினால் 1
கீழ்மையே 1
கீழ்வானம் 1
கீழாரோடு 1
கீழால் 1
கீழும் 1
கீழே 4
கீழை 2
கீள 1
கீளா 1
கீளாதே 1
கீற 1
கீறி 6
கீறிய 3
கீறியை 1
கீறு 1

கீசுகீசு (1)

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து – நாலாயி:480/1

மேல்


கீண்ட (16)

பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு – நாலாயி:934/1
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே – நாலாயி:951/3
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவள தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/1,2
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் – நாலாயி:1345/2
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் – நாலாயி:1432/1
மா வாய் கீண்ட மணி_வண்ணனை வர – நாலாயி:1944/3
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் – நாலாயி:2064/3
சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே – நாலாயி:2265/3
வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய் – நாலாயி:2276/2
மா வலனாய் கீண்ட மணி_வண்ணன் மேவி – நாலாயி:2323/2
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள் – நாலாயி:2328/3
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடி கீழ் விட போய் – நாலாயி:2523/3
வெம் மா வாய் கீண்ட
செம் மா கண்ணனே – நாலாயி:2977/3,4
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் – நாலாயி:3069/3
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே – நாலாயி:3410/2
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை – நாலாயி:3412/1

மேல்


கீண்டதும் (1)

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய் – நாலாயி:660/1

மேல்


கீண்டதுவும் (1)

பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் – நாலாயி:1745/2

மேல்


கீண்டவர் (1)

ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3247/2,3

மேல்


கீண்டவன் (2)

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் – நாலாயி:2970/1
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3885/2,3

மேல்


கீண்டாய் (1)

இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/3,4

மேல்


கீண்டாயும் (1)

நரக வாய் கீண்டாயும் நீ – நாலாயி:2328/4

மேல்


கீண்டான் (5)

மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே – நாலாயி:27/3,4
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் ஓடி – நாலாயி:174/2,3
அரி உருவாய் கீண்டான் அருள் தந்தவா நமக்கு – நாலாயி:1781/2
தெரி உகிரால் கீண்டான் சினம் – நாலாயி:2323/4
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று – நாலாயி:3955/2

மேல்


கீண்டானும் (1)

பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்
மருது இடை போய் மண் அளந்த மால் – நாலாயி:2099/3,4

மேல்


கீண்டானை (3)

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை – நாலாயி:486/1
கிடந்தானை கீண்டானை கேழலாய் பூமி – நாலாயி:2106/3
கொண்டானை கூந்தல் வாய் கீண்டானை கொங்கை நஞ்சு – நாலாயி:2274/3

மேல்


கீண்டானையே (1)

எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர் – நாலாயி:2648/3

மேல்


கீண்டிட்ட (1)

புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:165/3,4

மேல்


கீண்டு (14)

வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் – நாலாயி:1182/2
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை – நாலாயி:1228/1
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து – நாலாயி:1502/1,2
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1598/1
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/1,2
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர் – நாலாயி:1664/3
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1831/1
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு – நாலாயி:2135/3
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு – நாலாயி:2335/3
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய் – நாலாயி:2551/3
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு – நாலாயி:2675/5
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை – நாலாயி:2691/2
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த – நாலாயி:3622/3
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த – நாலாயி:3626/1

மேல்


கீண்டேனும் (1)

கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் – நாலாயி:3396/2

மேல்


கீத (2)

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு – நாலாயி:280/3
வேத_வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார் – நாலாயி:760/3

மேல்


கீதங்கள் (3)

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் – நாலாயி:925/2
மறு திருமார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி – நாலாயி:3359/3
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் – நாலாயி:3983/3

மேல்


கீதம் (2)

கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே – நாலாயி:3293/4
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி – நாலாயி:3355/3

மேல்


கீதமும் (1)

குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2

மேல்


கீதமொடு (1)

பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் – நாலாயி:1445/2

மேல்


கீதனாய (1)

சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே – நாலாயி:765/4

மேல்


கீதனே (1)

நச்சு நாகனை கிடந்த நாதன் வேத கீதனே – நாலாயி:868/4

மேல்


கீதையின் (1)

தேரினில் செப்பிய கீதையின் செம்மை பொருள் தெரிய – நாலாயி:2858/2

மேல்


கீர்த்தி (22)

புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து – நாலாயி:818/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
தருக எனா மாவலியை சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/2,3
முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே – நாலாயி:2796/4
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது – நாலாயி:2802/1
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம் – நாலாயி:2816/1
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் – நாலாயி:2827/1
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என் – நாலாயி:2846/3
தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே – நாலாயி:2872/4
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில் – நாலாயி:2877/3
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/3
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்தி பயிர் எழுந்து – நாலாயி:2893/2
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ மன்னவே – நாலாயி:2898/4
செவிகளால் ஆர நின் கீர்த்தி கனி என்னும் – நாலாயி:3203/1
உரைக்க வல்லேன் அல்லேன் உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் – நாலாயி:3261/1
தக்க கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3389/2
சிறந்த கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3391/2
வழு_இல் கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3394/2
கணக்கு_இல் கீர்த்தி வெள்ள கதிர் ஞான மூர்த்தியினாய் – நாலாயி:3469/2
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே – நாலாயி:3475/4
உலகம் உண்ட பெரு வாயா உலப்பு இல் கீர்த்தி அம்மானே – நாலாயி:3550/1
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1

மேல்


கீர்த்தித்த (1)

தன் சொல்லால் தான் தன்னை கீர்த்தித்த மாயன் என் – நாலாயி:3650/3

மேல்


கீர்த்திமை (1)

கிள்ளி களைந்தானை கீர்த்திமை பாடி போய் – நாலாயி:486/2

மேல்


கீர்த்தியாய் (3)

கால நேமி காலனே கணக்கு_இலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே – நாலாயி:782/1,2
வரம்பு_இல் ஊழி ஏத்திலும் வரம்பு_இலாத கீர்த்தியாய்
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் – நாலாயி:847/2,3
செல காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி – நாலாயி:3421/1,2

மேல்


கீர்த்தியார் (1)

காணிலும் உரு பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை – நாலாயி:820/1,2

மேல்


கீர்த்தியினாய் (1)

ஏத்து அரும் கீர்த்தியினாய் உன்னை எங்கு தலைப்பெய்வனே – நாலாயி:3618/4

மேல்


கீர்த்தியினால் (1)

ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறிய – நாலாயி:2867/3

மேல்


கீர்த்தியினானே (1)

எண்ணுவார் இடரை களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள்-தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே – நாலாயி:440/3,4

மேல்


கீர்த்தியும் (2)

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கட பொன் – நாலாயி:2866/1
நண்ணி மூ_உலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே – நாலாயி:3257/3

மேல்


கீழ் (81)

கண் பல செய்த கரும் தழை காவின் கீழ்
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/2,3
அந்தரம் முழவ தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச – நாலாயி:259/2
சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ – நாலாயி:260/1
கீழ்_உலகில் அசுரர்களை கிழங்கிருந்து கிளராமே – நாலாயி:407/1
எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/2,3
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை – நாலாயி:561/2,3
செங்கண்மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் – நாலாயி:583/2
பட்டி மேய்ந்து ஓர் கார் ஏறு பலதேவற்கு ஓர் கீழ் கன்றாய் – நாலாயி:637/1
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:639/4
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே – நாலாயி:646/4
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:648/2,3
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:657/4
வான் ஆளும் மா மதி போல் வெண்குடை கீழ் மன்னவர்-தம் – நாலாயி:683/1
உம்பர் உலகு ஆண்டு ஒரு குடை கீழ் உருப்பசி-தன் – நாலாயி:686/1
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:751/4
இரும் கடல் உலகம் ஆண்டு வெண்குடை கீழ் இமையவர் ஆகுவர் தாமே – நாலாயி:987/4
ஓத நீர் வையம் ஆண்டு வெண்குடை கீழ் உம்பரும் ஆகுவர் தாமே – நாலாயி:1007/4
பைம் கண் ஆனை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ்
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1008/3,4
பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே – நாலாயி:1167/4
விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே – நாலாயி:1227/4
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி – நாலாயி:1267/2
மான வெண்குடை கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே – நாலாயி:1277/4
மாலை சேர் வெண்குடை கீழ் மன்னவராய் பொன் உலகில் வாழ்வர் தாமே – நாலாயி:1397/4
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் – நாலாயி:1501/2
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் – நாலாயி:1504/2
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி – நாலாயி:1615/3
மன்னி மன்னவராய் உலகு ஆண்டு மான வெண்குடை கீழ் மகிழ்வாரே – நாலாயி:1617/4
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2
அளந்து அடி கீழ் கொண்ட அவன் – நாலாயி:2204/4
புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி – நாலாயி:2351/1
ஆல நிழல் கீழ் அறநெறியை நால்வர்க்கு – நாலாயி:2398/1
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடி கீழ் விட போய் – நாலாயி:2523/3
தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் கீழ்
வேர் ஆயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசு-மினே – நாலாயி:2530/3,4
மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே – நாலாயி:2531/4
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடி கீழ்
உற்றும் உறாதும் மிளிர்ந்த கண்ணாய் எம்மை உண்கின்றவே – நாலாயி:2542/3,4
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் – நாலாயி:2608/3
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று – நாலாயி:2642/3
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின் – நாலாயி:2666/2
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடி கீழ்
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால் – நாலாயி:2792/2,3
சீரிய பேறு உடையார் அடி கீழ் என்னை சேர்த்ததற்கே – நாலாயி:2793/4
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணை கீழ்
பூண்ட அன்பாளன் இராமாநுசனை பொருந்தினமே – நாலாயி:2821/3,4
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும் – நாலாயி:2861/1
சோர்வு இன்றி உன்தன் துணை அடி கீழ் தொண்டுபட்டவர்-பால் – நாலாயி:2871/1
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் திருவடி கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள் – நாலாயி:2895/1,2
முன் செய்த முழுவினையால் திருவடி கீழ் குற்றேவல் – நாலாயி:2933/3
வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று – நாலாயி:2940/2
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து – நாலாயி:2952/3
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/3
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ் புக்கு – நாலாயி:3094/1
வாராய் உன் திருப்பாத மலர் கீழ்
பேராதே யான் வந்து அடையும்படி – நாலாயி:3105/1,2
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே – நாலாயி:3135/3,4
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் – நாலாயி:3181/2
தன்மை பெறுத்தி தன் தாள் இணை கீழ் கொள்ளும் அப்பனை – நாலாயி:3193/2
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை – நாலாயி:3195/1
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் – நாலாயி:3216/3
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-தன்னை – நாலாயி:3283/1,2
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் – நாலாயி:3294/1,2
ஆர் வண்ணத்தால் உரைப்பார் அடி கீழ் புகுவார் பொலிந்தே – நாலாயி:3351/4
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே – நாலாயி:3426/1
தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் வையாதும் – நாலாயி:3480/2
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ் பரவை நிலம் எல்லாம் – நாலாயி:3544/1
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே – நாலாயி:3559/4
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் – நாலாயி:3560/1
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை – நாலாயி:3603/1
பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின் கீழ்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்றே – நாலாயி:3614/3,4
என்றே என்னை உன் ஏர் ஆர் கோல திருந்து அடி கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான் – நாலாயி:3700/1,2
வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடி கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவி பணிக்கொள்ளாய் – நாலாயி:3721/1,2
இருத்தும் வியந்து என்னை தன் பொன் அடி கீழ் என்று – நாலாயி:3737/1
தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடி கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் – நாலாயி:3758/1,2
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே – நாலாயி:3758/4
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ்
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே – நாலாயி:3771/2,3
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் – நாலாயி:3772/3
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ்
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் – நாலாயி:3774/1,2
தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் – நாலாயி:3776/3
பவள நன் படர் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3796/3
பொருளாக்கி உன் பொன் அடி கீழ் புக வைப்பாய் – நாலாயி:3865/2

மேல்


கீழ்_உலகில் (1)

கீழ்_உலகில் அசுரர்களை கிழங்கிருந்து கிளராமே – நாலாயி:407/1

மேல்


கீழ்து (1)

கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன் – நாலாயி:3599/3

மேல்


கீழ்மகன் (2)

ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – நாலாயி:1418/1
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் – நாலாயி:3294/1

மேல்


கீழ்மை (2)

கிறி என நினை-மின் கீழ்மை செய்யாதே – நாலாயி:3115/1
கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் – நாலாயி:3607/2

மேல்


கீழ்மையினால் (1)

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் – நாலாயி:3294/1

மேல்


கீழ்மையே (1)

கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே – நாலாயி:3293/4

மேல்


கீழ்வானம் (1)

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு – நாலாயி:481/1

மேல்


கீழாரோடு (1)

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன் – நாலாயி:2145/1,2

மேல்


கீழால் (1)

என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை – நாலாயி:2711/6

மேல்


கீழும் (1)

எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் – நாலாயி:3781/3

மேல்


கீழே (4)

கங்கையில் திருமால் கழல் இணை கீழே குளித்திருந்த கணக்கு ஆமே – நாலாயி:401/4
வாட்டம் இன்றி உன் பொன் அடி கீழே வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் – நாலாயி:437/2
பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் – நாலாயி:495/2,3
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – நாலாயி:2076/2

மேல்


கீழை (2)

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய – நாலாயி:699/1
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்து தயிர் கடைகின்றான் போலும் – நாலாயி:1908/4

மேல்


கீள (1)

வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த – நாலாயி:1522/2

மேல்


கீளா (1)

கீளா மருது இடை போய் கேழலாய் மீளாது – நாலாயி:2335/2

மேல்


கீளாதே (1)

பொன் ஆழி கையால் புடைத்திடுதி கீளாதே
பல் நாளும் நிற்கும் இ பார் – நாலாயி:2625/3,4

மேல்


கீற (1)

படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/2,3

மேல்


கீறி (6)

கச்சொடு பட்டை கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய் – நாலாயி:184/2,3
வந்து எதிர்ந்த தாடகை-தன் உரத்தை கீறி வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி – நாலாயி:742/1
மடலிடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ – நாலாயி:919/3
இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து – நாலாயி:1144/1
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள் – நாலாயி:1165/1
பந்து பறித்து துகில் பற்றி கீறி படிறன் படிறுசெய்யும் – நாலாயி:1912/3

மேல்


கீறிய (3)

அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் – நாலாயி:1264/2
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற – நாலாயி:1644/3
கூறாக கீறிய கோளரியை வேறாக – நாலாயி:2399/2

மேல்


கீறியை (1)

வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட – நாலாயி:1572/3

மேல்


கீறு (1)

கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை – நாலாயி:793/2

மேல்