தை – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

தை (1)

தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் – நாலாயி:504/1

மேல்


தைத்திரியன் (1)

சந்தோகன் பௌழியன் ஐம் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி – நாலாயி:1396/3

மேல்


தைத்திரியா (1)

சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடுமாலே – நாலாயி:1609/3

மேல்


தையல் (4)

தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலை – நாலாயி:1379/3
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும் – நாலாயி:2561/1
தையல் இழந்தது தன்னுடை சாயே – நாலாயி:3512/4
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே – நாலாயி:3923/3,4

மேல்


தையலார் (3)

தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் தையலார் குழல் அணைவான் – நாலாயி:1373/3
தலையில் வணங்கவும் ஆம்-கொலோ தையலார் முன்பே – நாலாயி:3369/4
ஆம் மடம் இன்றி தெருவு-தோறு அயல் தையலார்
நா மடங்கா பழி தூற்றி நாடும் இரைக்கவே – நாலாயி:3372/3,4

மேல்


தையலாள் (1)

தையலாள் மேல் காதல்செய்த தானவன் வாள் அரக்கன் – நாலாயி:1059/1

மேல்


தையலுக்கே (1)

தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – நாலாயி:2560/4

மேல்


தையலை (2)

தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான் – நாலாயி:1860/1
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே – நாலாயி:3576/4

மேல்


தைவந்த (1)

தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே – நாலாயி:3381/4

மேல்