வை – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 4
வைக்க 4
வைக்கவே 1
வைக்கில் 1
வைக்கின்ற 1
வைக்கும் 4
வைக்கும்-கொலோ 1
வைகப்பெற்றேன் 1
வைகல் 14
வைகல்-தோறும் 1
வைகல்வைகல் 1
வைகலும் 7
வைகலுமே 1
வைகலே 1
வைகறை 1
வைகி 5
வைகிய 1
வைகு 3
வைகுந்த 7
வைகுந்தத்து 10
வைகுந்தத்துள் 2
வைகுந்தத்தை 1
வைகுந்தநாதன் 1
வைகுந்தநாதனே 1
வைகுந்தம் 29
வைகுந்தமும் 2
வைகுந்தமே 5
வைகுந்தமோ 1
வைகுந்தர்க்கு 1
வைகுந்தவிண்ணகர் 1
வைகுந்தவிண்ணகரம் 9
வைகுந்தன் 7
வைகுந்தனோடு 1
வைகுந்தா 1
வைகும் 6
வைட்டணவன் 1
வைட்டவர் 1
வைத்த 45
வைத்ததனை 1
வைத்தது 7
வைத்ததே 2
வைத்தமையால் 1
வைத்தருளாய் 1
வைத்தருளிய 2
வைத்தவர் 1
வைத்தவர்க்கு 1
வைத்தவன் 2
வைத்தன 1
வைத்தனளே 1
வைத்தனன் 1
வைத்தனன்-கொல் 1
வைத்தனை 1
வைத்தாய் 6
வைத்தாயால் 2
வைத்தாயே 1
வைத்தார் 3
வைத்தார்க்கு 1
வைத்தாரே 1
வைத்தாள் 1
வைத்தான் 10
வைத்தானால் 1
வைத்தானும் 1
வைத்தி 3
வைத்திடாமையால் 1
வைத்திடேன் 1
வைத்திருந்து 1
வைத்து 78
வைத்துக்கொண்டு 1
வைத்துக்கொண்டேன் 1
வைத்துக்கொள்கிற்றிரே 1
வைத்துப்போய் 1
வைத்தும் 4
வைத்துவைத்துக்கொண்டு 1
வைத்தேன் 16
வைத்தேனே 1
வைத்தோமே 1
வைதிகரே 1
வைதிகன் 1
வைதிகனும் 1
வைதிடாமே 1
வைதிர் 1
வைது 1
வைதேகி 1
வைதேவி 3
வைதேவி-தனை 1
வைதேவீ 3
வைப்பது 1
வைப்பவரே 1
வைப்பன் 3
வைப்பாய் 1
வைப்பார்கட்கே 1
வைப்பாருக்கு 1
வைப்பாரே 1
வைப்பாரை 1
வைப்பில் 1
வைப்பினை 1
வைப்பீர் 1
வைப்பு 3
வைப்புண்டால் 1
வைப்பும் 1
வைப்பே 1
வைம்-மின் 2
வைம்-மினோ 1
வைய 3
வையகத்தார் 2
வையகத்து 2
வையகம் 9
வையத்து 4
வையத்துள்ளோர் 1
வையத்தே 1
வையத்தேவர் 1
வையம் 53
வையம்-தன்னொடும் 1
வையமோ 1
வையாதும் 1
வையார்களே 1
வையும் 1
வையேன் 3

வை (4)

வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
மாயவனையே மனத்து வை – நாலாயி:2181/4
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து – நாலாயி:2374/4
மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் – நாலாயி:3129/1

மேல்


வைக்க (4)

நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால – நாலாயி:2295/2
கன்னி தன்-பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர் – நாலாயி:2749/3
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான் – நாலாயி:2952/2
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர் துழாய் – நாலாயி:3124/2,3

மேல்


வைக்கவே (1)

வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று – நாலாயி:2940/2

மேல்


வைக்கில் (1)

வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ – நாலாயி:2932/4

மேல்


வைக்கின்ற (1)

வல்லி சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடை-மின் அடியீர்காள் – நாலாயி:1804/1,2

மேல்


வைக்கும் (4)

யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – நாலாயி:407/4
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை – நாலாயி:1051/2
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில் – நாலாயி:2813/2
கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3392/1

மேல்


வைக்கும்-கொலோ (1)

பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்கும்-கொலோ – நாலாயி:303/4

மேல்


வைகப்பெற்றேன் (1)

நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே – நாலாயி:3486/4

மேல்


வைகல் (14)

உருவு உடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களை கொண்டு வைகல்
தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:509/1,2
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் – நாலாயி:2107/2
வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல்
குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக – நாலாயி:2448/1,2
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை – நாலாயி:2470/2
காணலும் ஆம்-கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – நாலாயி:2569/4
வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே – நாலாயி:3117/1
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா அமுதே – நாலாயி:3417/4
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் – நாலாயி:3451/1
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே – நாலாயி:3486/4
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும் – நாலாயி:3500/3
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே – நாலாயி:3536/4
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே – நாலாயி:3670/3,4
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் – நாலாயி:3685/2
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே – நாலாயி:3787/4

மேல்


வைகல்-தோறும் (1)

வைகும் வைகல்-தோறும் அமுது ஆய வான் ஏறே – நாலாயி:3064/2

மேல்


வைகல்வைகல் (1)

மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல்வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/3,4

மேல்


வைகலும் (7)

வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி – நாலாயி:2133/2
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த – நாலாயி:2254/2
வைகலும் வெண்ணெய் – நாலாயி:2980/1
வைகலும் மாத்திரை போதும் ஓர் வீடு இன்றி – நாலாயி:3201/2
மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய – நாலாயி:3429/1
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3764/1

மேல்


வைகலுமே (1)

மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே – நாலாயி:3450/4

மேல்


வைகலே (1)

கற்பன் வைகலே – நாலாயி:2979/4

மேல்


வைகறை (1)

மடலிடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ – நாலாயி:919/3

மேல்


வைகி (5)

மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான் – நாலாயி:470/2
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ – நாலாயி:704/2
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர் தடத்து – நாலாயி:1223/3
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1594/1
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர் – நாலாயி:3785/2

மேல்


வைகிய (1)

வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு – நாலாயி:1150/1

மேல்


வைகு (3)

தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் – நாலாயி:1224/1
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் – நாலாயி:1420/1
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை அகலம் அது உடையவர் – நாலாயி:1715/1,2

மேல்


வைகுந்த (7)

வான் இளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தகோன் – நாலாயி:277/1
துன்னிட்டு புகல் அரிய வைகுந்த நீள் வாசல் – நாலாயி:679/2
ஏர் கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே – நாலாயி:1697/4
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்த
செல்வனார் சேவடி மேல் பாட்டு – நாலாயி:2456/3,4
கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும் – நாலாயி:2652/1
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் – நாலாயி:2866/2
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே – நாலாயி:3340/4

மேல்


வைகுந்தத்து (10)

உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே – நாலாயி:43/4
ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:327/4
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே – நாலாயி:390/4
தனம் மருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி – நாலாயி:746/1
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை – நாலாயி:750/1
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:1257/4
வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம் – நாலாயி:2446/3,4
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே – நாலாயி:3450/4
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே – நாலாயி:3736/4
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் – நாலாயி:3987/3

மேல்


வைகுந்தத்துள் (2)

ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே – நாலாயி:1327/4
புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று – நாலாயி:3795/1

மேல்


வைகுந்தத்தை (1)

ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து – நாலாயி:3625/1

மேல்


வைகுந்தநாதன் (1)

வைகுந்தநாதன் என வல்வினை மாய்ந்து அற – நாலாயி:3655/1

மேல்


வைகுந்தநாதனே (1)

வன் கவி பாடும் என் வைகுந்தநாதனே – நாலாயி:3654/4

மேல்


வைகுந்தம் (29)

வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே – நாலாயி:127/4
பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/4
பரவு மனம் நன்கு உடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:274/4
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி – நாலாயி:399/1
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/4
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4
நம்புவார் பதி வைகுந்தம் காண்-மினே – நாலாயி:947/4
பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு – நாலாயி:2342/1,2
காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம்
ஈப்பாயும் எ உயிர்க்கும் நீ – நாலாயி:2400/3,4
வைகுந்தம் காண்பார் விரைந்து – நாலாயி:2460/4
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல் – நாலாயி:2532/3
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள் – நாலாயி:2543/3
தாவிய எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய் – நாலாயி:2545/3
வைகுந்தம் என்று அருளும் வான் – நாலாயி:2637/4
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும் – நாலாயி:2896/1
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே – நாலாயி:3019/4
விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும் – நாலாயி:3264/2
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி – நாலாயி:3274/3
தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே – நாலாயி:3307/4
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:3318/4
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் – நாலாயி:3373/4
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ – நாலாயி:3384/4
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே – நாலாயி:3730/3,4
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் – நாலாயி:3809/3
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே – நாலாயி:3813/4
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் – நாலாயி:3884/2
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே – நாலாயி:3986/4
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் – நாலாயி:3987/1
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே – நாலாயி:3987/4

மேல்


வைகுந்தமும் (2)

வட தடமும் வைகுந்தமும் மதில் துவராபதியும் – நாலாயி:472/3
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய – நாலாயி:3689/3

மேல்


வைகுந்தமே (5)

இன்னிசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:626/4
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே – நாலாயி:1777/4
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே – நாலாயி:3063/4
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே – நாலாயி:3964/2

மேல்


வைகுந்தமோ (1)

நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே – நாலாயி:2552/4

மேல்


வைகுந்தர்க்கு (1)

வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே – நாலாயி:3981/4

மேல்


வைகுந்தவிண்ணகர் (1)

வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/2

மேல்


வைகுந்தவிண்ணகரம் (9)

வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1228/4
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1234/4
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1235/4
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1236/4

மேல்


வைகுந்தன் (7)

மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:482/7
துன்ப கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் – நாலாயி:548/2
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே – நாலாயி:2946/4
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி – நாலாயி:3356/2
வைகுந்தன் ஆக புகழ வண் தீம் கவி – நாலாயி:3655/3
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று – நாலாயி:3987/2

மேல்


வைகுந்தனோடு (1)

முன்னம் செல்வீர்கள் மறவேல்-மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவரிடை நீர் – நாலாயி:2507/2,3

மேல்


வைகுந்தா (1)

வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி – நாலாயி:3064/1

மேல்


வைகும் (6)

மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4
மந்தி மாம்பணை மேல் வைகும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1266/4
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும்
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/3,4
பூம் கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும் – நாலாயி:2234/3
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு – நாலாயி:2637/3
வைகும் வைகல்-தோறும் அமுது ஆய வான் ஏறே – நாலாயி:3064/2

மேல்


வைட்டணவன் (1)

வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே – நாலாயி:435/4

மேல்


வைட்டவர் (1)

அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3395/4

மேல்


வைத்த (45)

சொப்பட தோன்றி தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய – நாலாயி:123/2,3
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் – நாலாயி:129/1
வஞ்சக பேய்_மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே – நாலாயி:155/2
கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் – நாலாயி:158/1
திண்ண கலத்தில் திரை உறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் – நாலாயி:164/1,2
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி உடைத்திட்டு போந்து நின்றான் – நாலாயி:204/2
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:224/3,4
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை – நாலாயி:354/2
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:402/4
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்கு ஆள் ஆவரே – நாலாயி:413/3,4
வைத்த இலச்சினை மாற்றி தூதுவர் ஓடி ஒளித்தார் – நாலாயி:444/2
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்-மினே – நாலாயி:602/4
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து – நாலாயி:787/3
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை – நாலாயி:793/2
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – நாலாயி:834/4
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – நாலாயி:835/2
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம் – நாலாயி:836/2
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை_வண்ணனே – நாலாயி:850/4
இறப்ப வைத்த ஞான நீசரை கரைக்கொடு ஏற்றுமா – நாலாயி:851/2
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான் – நாலாயி:868/2
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான் – நாலாயி:868/2
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:887/4
தருக எனா மாவலியை சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி – நாலாயி:1178/2
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் – நாலாயி:1224/2
விளங்கனியை இளம் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் – நாலாயி:1234/1
மை ஆர் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் – நாலாயி:1352/1
வம்பு அவிழும் மலர் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்-மின் – நாலாயி:1625/2
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் – நாலாயி:1691/2
பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி – நாலாயி:1791/3
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/2
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காண் ஏடீ – நாலாயி:1994/2
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இ – நாலாயி:1994/3
வெறி ஆர் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறி ஆர் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட – நாலாயி:2019/1,2
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே – நாலாயி:2055/3,4
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் – நாலாயி:2425/1
கண்டத்தான் எண்_கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டை தானத்தின் பதி – நாலாயி:2454/3,4
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ அம்மா காட்டும் நெறி – நாலாயி:2589/3,4
வீட்டின்-கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர் – நாலாயி:2819/3
மரணம் அடைவித்த மாயவன்-தன்னை வணங்க வைத்த
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு – நாலாயி:2857/2,3
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே – நாலாயி:3146/4
வைத்த நாள் வரை எல்லை குறுகி சென்று – நாலாயி:3152/1
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன் – நாலாயி:3414/1
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி – நாலாயி:3527/1
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே – நாலாயி:3567/4
இன் அமுது என தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன் – நாலாயி:3568/1,2

மேல்


வைத்ததனை (1)

நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம் – நாலாயி:2685/8,9

மேல்


வைத்தது (7)

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து – நாலாயி:373/1
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர் – நாலாயி:852/2
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் – நாலாயி:931/2
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும் – நாலாயி:2199/2
வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே – நாலாயி:2499/4
வாரா தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு – நாலாயி:2686/3
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே – நாலாயி:3335/2

மேல்


வைத்ததே (2)

என் திறத்தில் என்-கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே – நாலாயி:835/4
வம்பு உலாம் கடி காவில் சிறையா வைத்ததே குற்றம் ஆயிற்று காணீர் – நாலாயி:1862/2

மேல்


வைத்தமையால் (1)

ஊன் நேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என்தனக்காய் அடியேன் மனம் புகுந்த – நாலாயி:1566/1,2

மேல்


வைத்தருளாய் (1)

நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் – நாலாயி:2569/2

மேல்


வைத்தருளிய (2)

குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2

மேல்


வைத்தவர் (1)

தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல் – நாலாயி:3248/2

மேல்


வைத்தவர்க்கு (1)

வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும் – நாலாயி:824/3

மேல்


வைத்தவன் (2)

கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை – நாலாயி:793/2
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு – நாலாயி:1023/3

மேல்


வைத்தன (1)

மத்து அளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு – நாலாயி:68/1

மேல்


வைத்தனளே (1)

மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே – நாலாயி:3526/4

மேல்


வைத்தனன் (1)

வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே – நாலாயி:2862/4

மேல்


வைத்தனன்-கொல் (1)

பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு – நாலாயி:835/1

மேல்


வைத்தனை (1)

இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4

மேல்


வைத்தாய் (6)

முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் – நாலாயி:910/3
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகி களிக்கின்றேன் – நாலாயி:1550/1,2
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கும் நின்னோரை இல்லாய் நின்-கண் வேட்கை எழுவிப்பனே – நாலாயி:2573/3,4
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே – நாலாயி:3035/4
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே – நாலாயி:3124/4
புண்ணை மறைய வரிந்து என்னை போர வைத்தாய் புறமே – நாலாயி:3345/4

மேல்


வைத்தாயால் (2)

மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் – நாலாயி:1191/2,3
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமை குறளாய் நிலம் மாவலி மூவடி என்று – நாலாயி:3033/2,3

மேல்


வைத்தாயே (1)

ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே – நாலாயி:1940/4

மேல்


வைத்தார் (3)

பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:450/4
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் – நாலாயி:1977/1
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல் – நாலாயி:2522/2

மேல்


வைத்தார்க்கு (1)

மாதரை தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம் – நாலாயி:3852/3

மேல்


வைத்தாரே (1)

பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி – நாலாயி:2471/2

மேல்


வைத்தாள் (1)

தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து – நாலாயி:2355/4

மேல்


வைத்தான் (10)

வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் – நாலாயி:931/2
கந்து ஆர் களிற்று கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் – நாலாயி:1515/2,3
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் – நாலாயி:2140/3
தன் வில் அங்கை வைத்தான் சரண் – நாலாயி:2140/4
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு – நாலாயி:2370/4
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான்
எ வினையும் மாயுமால் கண்டு – நாலாயி:2458/3,4
சென்னி தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே – நாலாயி:2794/4
தூய சுடர் சோதி தனது என் உள் வைத்தான்
தேசம் திகழும் தன் திருவருள் செய்தே – நாலாயி:3740/3,4
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே – நாலாயி:3929/4
இன்று என்னை பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னை புறம்போக புணர்த்தது என் செய்வான் – நாலாயி:3976/1,2

மேல்


வைத்தானால் (1)

தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி இடந்தானால் இன்று முற்றும் – நாலாயி:221/4

மேல்


வைத்தானும் (1)

சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும் – நாலாயி:2424/3

மேல்


வைத்தி (3)

உலகு-தன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு – நாலாயி:763/1
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே – நாலாயி:3642/4
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே – நாலாயி:3644/4

மேல்


வைத்திடாமையால் (1)

வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன் – நாலாயி:867/3

மேல்


வைத்திடேன் (1)

நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே – நாலாயி:858/4

மேல்


வைத்திருந்து (1)

மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ – நாலாயி:2627/3

மேல்


வைத்து (78)

மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து
பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த – நாலாயி:31/2,3
பொன்னின் முடியினை பூ அணை மேல் வைத்து
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:170/3,4
பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப – நாலாயி:206/1
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் – நாலாயி:210/2
சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும் – நாலாயி:228/3
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய் – நாலாயி:248/3
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1
வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் – நாலாயி:492/4
பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும் – நாலாயி:556/3
பாசிலை நாணல் படுத்து பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி – நாலாயி:562/2,3
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:564/3,4
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே – நாலாயி:586/4
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்து கொண்டு வாழ்வார்கள் – நாலாயி:646/3
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து – நாலாயி:700/2
பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் – நாலாயி:701/2
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய் – நாலாயி:776/2
உரத்திலும் ஒருத்தி-தன்னை வைத்து உகந்து அது அன்றியும் – நாலாயி:780/2
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் – நாலாயி:806/3
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என – நாலாயி:850/2
விள்வு இலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்குமா தெழிக்கு நீர் – நாலாயி:853/1,2
காவலில் புலனை வைத்து கலி-தன்னை கடக்க பாய்ந்து – நாலாயி:872/1
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி – நாலாயி:890/1
திரு மறு மார்வ நின்னை சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம் – நாலாயி:911/1,2
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற – நாலாயி:1001/2
ஊன் இடை சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் – நாலாயி:1006/1
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய் மாலை தான் கற்று வல்லார்கள் – நாலாயி:1007/2,3
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து – நாலாயி:1186/1
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் – நாலாயி:1345/2
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை – நாலாயி:1406/1,2
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் – நாலாயி:1472/1,2
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1533/4
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் – நாலாயி:1576/3
பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் – நாலாயி:1640/2
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய் – நாலாயி:1742/3
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான் – நாலாயி:1802/3
நஞ்சு தோய் கொங்கை மேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட – நாலாயி:1812/3
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/2
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே – நாலாயி:1887/4
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ் – நாலாயி:1972/2
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் – நாலாயி:1977/1
உய்த்தார் ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும் – நாலாயி:1977/2
முனி தலைவன் முழங்கு ஒளி சேர் திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட – நாலாயி:2005/3
அறம் கிளந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட – நாலாயி:2009/3
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட – நாலாயி:2010/3
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து
கரும்பின் இன் சாறு போல பருகினேற்கு இனியவாறே – நாலாயி:2036/3,4
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து
துளக்கம்_இல் சிந்தைசெய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே – நாலாயி:2049/2,3
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த – நாலாயி:2084/1
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து – நாலாயி:2089/1
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து – நாலாயி:2235/3
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து – நாலாயி:2240/1,2
மலை முகடு மேல் வைத்து வாசுகியை சுற்றி – நாலாயி:2327/1
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு – நாலாயி:2341/4
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே – நாலாயி:2375/2
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி – நாலாயி:2430/1
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் – நாலாயி:2473/1,2
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் – நாலாயி:2729/1
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை – நாலாயி:2767/5
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர் – நாலாயி:2799/3
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே – நாலாயி:2813/3,4
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்து
தான் அதில் மன்னும் இராமாநுசன் இ தலத்து உதித்தே – நாலாயி:2839/3,4
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து – நாலாயி:2927/3
ஒக்கலை வைத்து முலை பால் உண் என்று தந்திட வாங்கி – நாலாயி:2991/1
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே – நாலாயி:3004/4
வேறு இன்றி விண் தொழ தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட – நாலாயி:3022/2,3
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த – நாலாயி:3169/2
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி – நாலாயி:3174/3
நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3303/2,3
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை – நாலாயி:3326/2
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ – நாலாயி:3463/3
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம் – நாலாயி:3494/2
ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்துநொந்து – நாலாயி:3524/1
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே – நாலாயி:3527/4
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ் பரவை நிலம் எல்லாம் – நாலாயி:3544/1
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் – நாலாயி:3876/3,4
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழிஊழி தலையளிக்கும் – நாலாயி:3962/2

மேல்


வைத்துக்கொண்டு (1)

வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர் குழலாள் சீதையுமே – நாலாயி:326/4

மேல்


வைத்துக்கொண்டேன் (1)

பேணி கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன் பிறிது இன்றி – நாலாயி:447/2

மேல்


வைத்துக்கொள்கிற்றிரே (1)

மாற்றோலை பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே – நாலாயி:598/4

மேல்


வைத்துப்போய் (1)

மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்துப்போய் வானோர் வாழ – நாலாயி:412/1

மேல்


வைத்தும் (4)

தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1159/2
தெய்வ திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1164/2
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த – நாலாயி:2095/3
தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் வையாதும் – நாலாயி:3480/2

மேல்


வைத்துவைத்துக்கொண்டு (1)

வைத்துவைத்துக்கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும் – நாலாயி:294/2

மேல்


வைத்தேன் (16)

ஆய் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – நாலாயி:139/4
வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகர குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன் – நாலாயி:141/1,2
நாவற்பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை – நாலாயி:150/3
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி_வண்ணா மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:154/3,4
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் – நாலாயி:155/4
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பீ – நாலாயி:156/2
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் – நாலாயி:246/3,4
கண்ணாலம் செய்ய கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு – நாலாயி:252/3,4
வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால் – நாலாயி:454/1
உன்னை கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் – நாலாயி:467/3
துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே – நாலாயி:507/4
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் – நாலாயி:592/2,3
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1564/3,4
மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே – நாலாயி:2654/3
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே – நாலாயி:3745/4
வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே – நாலாயி:3746/1

மேல்


வைத்தேனே (1)

மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே – நாலாயி:2020/4

மேல்


வைத்தோமே (1)

தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – நாலாயி:1976/4

மேல்


வைதிகரே (1)

மை படி மேனியும் செந்தாமரை கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார் – நாலாயி:2571/1,2

மேல்


வைதிகன் (1)

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடை சோதியில் வைதிகன் பிள்ளைகளை – நாலாயி:3224/3

மேல்


வைதிகனும் (1)

படர் புகழ் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவி – நாலாயி:3224/2

மேல்


வைதிடாமே (1)

தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/2,3

மேல்


வைதிர் (1)

சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர் சோதி மணி நிறமாய் – நாலாயி:3636/2

மேல்


வைது (1)

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறு_இல் போர் – நாலாயி:862/1

மேல்


வைதேகி (1)

தனம் மருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி – நாலாயி:746/1

மேல்


வைதேவி (3)

மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா – நாலாயி:1992/1
வார் ஆர் வன முலையால் வைதேவி காரணமா – நாலாயி:2690/2
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் – நாலாயி:2741/2

மேல்


வைதேவி-தனை (1)

வார் ஆரும் முலை மடவாள் வைதேவி-தனை கண்டு – நாலாயி:327/1

மேல்


வைதேவீ (3)

வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் – நாலாயி:321/1
மாம் அமரும் மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம் – நாலாயி:322/1
மை தகு மா மலர் குழலாய் வைதேவீ விண்ணப்பம் – நாலாயி:325/1

மேல்


வைப்பது (1)

மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – நாலாயி:2197/2

மேல்


வைப்பவரே (1)

மறையினை காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – நாலாயி:2799/4

மேல்


வைப்பன் (3)

சித்தம் மிக உன்-பாலே வைப்பன் அடியேனே – நாலாயி:694/4
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று – நாலாயி:2427/1
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் – நாலாயி:3004/2

மேல்


வைப்பாய் (1)

பொருளாக்கி உன் பொன் அடி கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் – நாலாயி:3865/2,3

மேல்


வைப்பார்கட்கே (1)

வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே – நாலாயி:3151/4

மேல்


வைப்பாருக்கு (1)

உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகும் ஆறே – நாலாயி:1586/4

மேல்


வைப்பாரே (1)

மறவியை இன்றி மனத்து வைப்பாரே – நாலாயி:2965/4

மேல்


வைப்பாரை (1)

வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே – நாலாயி:2939/4

மேல்


வைப்பில் (1)

தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும் – நாலாயி:3105/3

மேல்


வைப்பினை (1)

ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1641/3,4

மேல்


வைப்பீர் (1)

செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/2,3

மேல்


வைப்பு (3)

வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு – நாலாயி:2426/4
வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே – நாலாயி:2813/1
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினை – நாலாயி:2966/1

மேல்


வைப்புண்டால் (1)

வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ – நாலாயி:2932/4

மேல்


வைப்பும் (1)

வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே – நாலாயி:974/4

மேல்


வைப்பே (1)

தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என்தன் சேம வைப்பே – நாலாயி:2812/4

மேல்


வைம்-மின் (2)

வைம்-மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை – நாலாயி:3179/1
உளம் கொள் ஞானத்து வைம்-மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே – நாலாயி:3338/4

மேல்


வைம்-மினோ (1)

இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ – நாலாயி:3178/4

மேல்


வைய (3)

வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய் – நாலாயி:427/3
மன்னு மா மலர் கிழத்தி வைய மங்கை மைந்தனாய் – நாலாயி:806/1
முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே – நாலாயி:3441/4

மேல்


வையகத்தார் (2)

வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே – நாலாயி:585/4
ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏச போய் ஆய்ப்பாடி – நாலாயி:1994/1

மேல்


வையகத்து (2)

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்-கொலோ – நாலாயி:817/1,2
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து
பல்லார் அருளும் பழுது – நாலாயி:2096/3,4

மேல்


வையகம் (9)

வாயுள் வையகம் கண்ட மட நல்லார் – நாலாயி:19/1
மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே – நாலாயி:795/4
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதி குடை மன்னவராய் அடி கூடுவரே – நாலாயி:1087/4
மான வெண்குடை கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே – நாலாயி:1277/4
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட – நாலாயி:1569/2
முழுது இ வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த – நாலாயி:1695/1
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே – நாலாயி:1998/4
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு – நாலாயி:2100/1
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும் – நாலாயி:2570/2

மேல்


வையத்து (4)

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு – நாலாயி:475/1
வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல – நாலாயி:1173/3
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே – நாலாயி:1667/4
மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார் – நாலாயி:1881/1

மேல்


வையத்துள்ளோர் (1)

ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே – நாலாயி:2869/4

மேல்


வையத்தே (1)

மக்களை பெற்று மகிழ்வர் இ வையத்தே – நாலாயி:181/4

மேல்


வையத்தேவர் (1)

செய்த வேள்வியர் வையத்தேவர் அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3411/3

மேல்


வையம் (53)

வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே – நாலாயி:18/4
மாணி குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ – நாலாயி:44/4
வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகர குழை கொண்டு வைத்தேன் – நாலாயி:141/1
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர்-பாலதாம் – நாலாயி:840/3
வரம்பு_இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே – நாலாயி:847/1
ஓத நீர் வையம் ஆண்டு வெண்குடை கீழ் உம்பரும் ஆகுவர் தாமே – நாலாயி:1007/4
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி வான் உலகு ஆள்வரே – நாலாயி:1027/4
தடம் பருகு கரு முகிலை தஞ்சை கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் – நாலாயி:1090/3
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் – நாலாயி:1109/3
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு – நாலாயி:1150/1
கோ மங்க வங்க கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய – நாலாயி:1162/1
பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த – நாலாயி:1330/1
வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் மணி நீள் முடி – நாலாயி:1379/1
பண்டு இ வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் – நாலாயி:1380/1
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/2
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/3
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால் – நாலாயி:1539/3
துனியை தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்ற தொல் நெறியை வையம் தொழப்படும் – நாலாயி:1575/2
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை – நாலாயி:1722/2
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி – நாலாயி:1724/1
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடு-மினே – நாலாயி:1737/4
மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் – நாலாயி:1745/1
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம் – நாலாயி:1760/1
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1904/1
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது – நாலாயி:1967/3
பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே – நாலாயி:1985/4
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் – நாலாயி:1986/2
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இ வையம் மகிழ – நாலாயி:1989/3
மாய மான் மாய செற்று மருது இற நடந்து வையம்
தாய் அ மா பரவை பொங்க தட வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2047/1,2
வையம் தகளியா வார் கடலே நெய் ஆக – நாலாயி:2082/1
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய் – நாலாயி:2504/2
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை – நாலாயி:2551/2
விரிவ சொல்லீர் இதுவோ வையம் முற்றும் விளரியதே – நாலாயி:2559/4
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இ திருவினையே – நாலாயி:2564/3,4
சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை வையம் முற்றும் – நாலாயி:2568/1
ஈன சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும் – நாலாயி:2576/1
ஆரால் இ வையம் அடி அளப்புண்டது தான் – நாலாயி:2684/5
வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே – நாலாயி:2892/4
உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் – நாலாயி:2982/2,3
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3176/2
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும் – நாலாயி:3196/1
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே – நாலாயி:3263/4
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று – நாலாயி:3298/2
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/2
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று – நாலாயி:3383/3
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3489/3
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு – நாலாயி:3506/1
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு – நாலாயி:3509/2
மண் புரை வையம் இடந்த வராகற்கு – நாலாயி:3510/2
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே – நாலாயி:3547/3
ஊழி-தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் – நாலாயி:3593/1
வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடி கீழ் – நாலாயி:3721/1

மேல்


வையம்-தன்னொடும் (1)

வையம்-தன்னொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:668/2

மேல்


வையமோ (1)

நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே – நாலாயி:2552/4

மேல்


வையாதும் (1)

தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்கு திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3480/2,3

மேல்


வையார்களே (1)

பஞ்சிய மெல் அடி பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என் கைவலத்து ஆதும் இல்லை – நாலாயி:1917/2,3

மேல்


வையும் (1)

கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும்
சேண்-பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி – நாலாயி:3607/2,3

மேல்


வையேன் (3)

மறந்தாரை மானிடமா வையேன் அறம் தாங்கும் – நாலாயி:2225/2
வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான் – நாலாயி:2447/3
வையேன் ஆட்செய்யேன் வலம் – நாலாயி:2447/4

மேல்