கெ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெட்டான் 2
கெட்டு 1
கெட்டேன் 1
கெட 28
கெடல் 3
கெடவே 1
கெடுக்கும் 7
கெடுத்த 3
கெடுத்தருளி 1
கெடுத்தாய் 2
கெடுத்தான் 1
கெடுத்து 7
கெடுத்தேன் 1
கெடுப்பாயோ 1
கெடுப்பான் 2
கெடுப்பு 2
கெடும் 8
கெடும்-தோறும் 1
கெடுமாகில் 1
கெடுமாம் 1
கெடுமாறு 1
கெடுமே 2
கெடுவதன் 1
கெடுவேன் 1
கெடுவேனே 1
கெண்டை 13
கெண்டையும் 1
கெந்தருவர் 1
கெருடர்கள் 2
கெருடவா 1
கெழு 19
கெழும் 2
கெழுமி 3
கெழுமிய 1
கெழுமீரோ 1

கெட்டான் (2)

சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/2
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே – நாலாயி:1860/2

மேல்


கெட்டு (1)

குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய் – நாலாயி:1039/2

மேல்


கெட்டேன் (1)

கேளார் ஆயர் குலத்தவர் இ பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன் – நாலாயி:230/3

மேல்


கெட (28)

கொத்து தலைவன் குடி கெட தோன்றிய – நாலாயி:110/3
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் – நாலாயி:220/3
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து – நாலாயி:809/1
உரம் கெட புடைத்து ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா – நாலாயி:809/2
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர் – நாலாயி:864/2,3
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று – நாலாயி:958/1
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற – நாலாயி:980/2
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர – நாலாயி:1082/2
கறை உடை வாள் மற மன்னர் கெட கடல் போல முழங்கும் குரல் கடுவாய் – நாலாயி:1136/3
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒரு நாள் – நாலாயி:1410/3
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே – நாலாயி:1415/3
பண்டை நம் வினை கெட என்று அடி மேல் – நாலாயி:1448/2
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெட தோன்றிய – நாலாயி:1645/2
முழுது இ வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த – நாலாயி:1695/1
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி – நாலாயி:1806/1
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி – நாலாயி:1887/1
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால் – நாலாயி:2510/2
இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் – நாலாயி:2799/1
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி – நாலாயி:3039/3
உணங்கல் கெட கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் – நாலாயி:3292/3
உரு கெட வாளி பொழிந்த ஒருவனே – நாலாயி:3727/4
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன் – நாலாயி:3732/1
கவள மா களிற்றின் இடர் கெட தடத்து காய் சின பறவை ஊர்ந்தானே – நாலாயி:3796/4
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் – நாலாயி:3801/1
மாலை நண்ணி தொழுது எழு-மினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர் – நாலாயி:3880/1,2
இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி – நாலாயி:3894/1
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே – நாலாயி:3894/4
மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க – நாலாயி:3967/1

மேல்


கெடல் (3)

அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம் – நாலாயி:2923/2
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3109/3
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே – நாலாயி:3109/4

மேல்


கெடவே (1)

நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே – நாலாயி:3893/4

மேல்


கெடுக்கும் (7)

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி – நாலாயி:497/6
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும் – நாலாயி:2423/2
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை – நாலாயி:2883/2
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கண் குன்றம் – நாலாயி:3077/3
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும்
நச்சும் மா மருந்தம் என்கோ நலம் கடல் அமுதம் என்கோ – நாலாயி:3158/1,2
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் – நாலாயி:3569/2
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய் குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் அ – நாலாயி:3571/1

மேல்


கெடுத்த (3)

அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:918/4
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் – நாலாயி:1369/1
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1528/4

மேல்


கெடுத்தருளி (1)

தூம்பு உடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும் – நாலாயி:1288/1

மேல்


கெடுத்தாய் (2)

மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரை கெடுத்தாய்
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:460/3,4
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே – நாலாயி:3082/4

மேல்


கெடுத்தான் (1)

புகழ் நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே – நாலாயி:3954/3,4

மேல்


கெடுத்து (7)

சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து – நாலாயி:1415/2
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு – நாலாயி:2470/3,4
உள்ளி கெடுத்து இறை – நாலாயி:2917/3
இன்றி போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான் – நாலாயி:3810/1,2
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3887/2
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3930/2
ஊழி-தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் – நாலாயி:3965/2

மேல்


கெடுத்தேன் (1)

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் – நாலாயி:3970/1

மேல்


கெடுப்பாயோ (1)

கிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே – நாலாயி:3546/3,4

மேல்


கெடுப்பான் (2)

பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1049/2
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் – நாலாயி:1525/1

மேல்


கெடுப்பு (2)

புகழுமாறு அறியேன் பொருந்து மூ_உலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – நாலாயி:3711/4
படைப்பொடு கெடுப்பு காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே – நாலாயி:3712/1

மேல்


கெடும் (8)

கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன் – நாலாயி:859/1
பெண்டிரால் கெடும் இ குடி தன்னை பேசுகின்றது என் தாசரதீ உன் – நாலாயி:1860/3
சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து – நாலாயி:3320/1
கலியும் கெடும் கண்டுகொள்-மின் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3352/3
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளி தொழு-மின் தொண்டீர் – நாலாயி:3665/1
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே – நாலாயி:3897/4
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழு-மின் – நாலாயி:3898/1
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

மேல்


கெடும்-தோறும் (1)

உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன் திருவுள்ளம் இடர் கெடும்-தோறும் நாங்கள் – நாலாயி:3921/1

மேல்


கெடுமாகில் (1)

தென்றி கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் – நாலாயி:153/2

மேல்


கெடுமாம் (1)

என்றால் கெடுமாம் இடர் – நாலாயி:2158/4

மேல்


கெடுமாறு (1)

எல்லா இடரும் கெடுமாறு அருளாயே – நாலாயி:1313/4

மேல்


கெடுமே (2)

உலகம் மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே – நாலாயி:3664/4
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – நாலாயி:3901/4

மேல்


கெடுவதன் (1)

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் – நாலாயி:3110/1

மேல்


கெடுவேன் (1)

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4

மேல்


கெடுவேனே (1)

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4

மேல்


கெண்டை (13)

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய – நாலாயி:699/1
அண்டை கொண்டு கெண்டை மேயும் அ தண் நீர் அரங்கமே – நாலாயி:800/4
கெண்டை ஒண் கண் மிளிர கிளி போல் மிழற்றி நடந்து – நாலாயி:1209/3
வண்டல் அலையுள் கெண்டை மிளிர – நாலாயி:1362/3
அருகு கைதை மலர கெண்டை
குருகு என்று அஞ்சும் கூடலூரே – நாலாயி:1366/3,4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம் – நாலாயி:1960/1
பெரியன கெண்டை குலம் இவையோ வந்து பேர்கின்றவே – நாலாயி:2488/4
புல குண்டல புண்டரீகத்த போர் கெண்டை வல்லி ஒன்றால் – நாலாயி:2534/1
உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவ – நாலாயி:2552/1
முன் ஆய தொண்டையாய் கெண்டை குலம் இரண்டாய் – நாலாயி:2756/3
கேய தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண் கண் – நாலாயி:3485/1
வாள் கெண்டை ஒண் கண் மட பின்னை-தன்_கேள்வன் – நாலாயி:3926/3

மேல்


கெண்டையும் (1)

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் – நாலாயி:1293/1

மேல்


கெந்தருவர் (1)

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் – நாலாயி:925/2

மேல்


கெருடர்கள் (2)

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் – நாலாயி:925/2
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே – நாலாயி:3983/3,4

மேல்


கெருடவா (1)

கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவா கனனும் நிற்க – நாலாயி:881/3

மேல்


கெழு (19)

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் – நாலாயி:1115/1
புலம் கெழு பொரு நீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும் – நாலாயி:1115/2
குலம் கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழை கண்ணி – நாலாயி:1115/3
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய் – நாலாயி:1438/1
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு – நாலாயி:1452/3
கார் கெழு கடல்களும் மலைகளுமாய் – நாலாயி:1453/1
சீர் கெழு நான்மறை ஆனவனே – நாலாயி:1453/4
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர் – நாலாயி:1717/2
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து – நாலாயி:1764/3
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1764/4
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ – நாலாயி:1940/2
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு – நாலாயி:1940/3
கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா – நாலாயி:1991/1
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ் – நாலாயி:1991/2
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் – நாலாயி:1991/3
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே – நாலாயி:1991/4
பூ கெழு வண்ணனாரை போதர கனவில் கண்டு – நாலாயி:2035/2
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு – நாலாயி:2224/4

மேல்


கெழும் (2)

சீர் கெழும் இ உலகு ஏழும் எல்லாம் – நாலாயி:1452/2
ஏர் கெழும் உலகமும் ஆகி முதலார்களும் – நாலாயி:1453/2

மேல்


கெழுமி (3)

இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்ப தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த – நாலாயி:651/1
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் – நாலாயி:925/1,2
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலை திருநறையூர் – நாலாயி:1530/2

மேல்


கெழுமிய (1)

கெழுமிய கதிர் சோதியை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3182/2

மேல்


கெழுமீரோ (1)

நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே – நாலாயி:3847/4

மேல்