சூ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூட்ட 12
சூட்டலாகும் 1
சூட்டாய 1
சூட்டிய 1
சூட்டிரே 1
சூட்டினென் 1
சூட்டு 3
சூட்டு-மின் 1
சூட்டு-மினே 1
சூட்டும் 1
சூட்டுவன் 1
சூட 1
சூடகமே 1
சூடி 15
சூடிய 2
சூடியும் 1
சூடிலும் 1
சூடு 3
சூடுதற்கு 1
சூடும் 11
சூடுவதே 1
சூடுவார் 3
சூடுவேற்கு 1
சூடுவோம் 1
சூடோமே 1
சூதகம் 2
சூதம் 1
சூதனாய் 1
சூதில் 1
சூதினை 1
சூது 5
சூதும் 1
சூதே 1
சூர் 1
சூர்ப்பணகா 1
சூர்ப்பணகாவை 1
சூர்மையில் 1
சூரர் 1
சூல் 2
சூலத்தால் 1
சூலம் 3
சூலிகை 1
சூழ் 297
சூழ்கண்டாய் 2
சூழ்கின்ற 2
சூழ்கின்றவே 1
சூழ்கின்றிலர் 1
சூழ்ச்சி 1
சூழ்ச்சியும் 1
சூழ்ச்சியே 1
சூழ்ச்சியை 1
சூழ்த்த 1
சூழ்த்து 1
சூழ்தரு 4
சூழ்ந்த 38
சூழ்ந்ததால் 1
சூழ்ந்தாயே 1
சூழ்ந்திருந்து 1
சூழ்ந்து 54
சூழ்ந்தும் 1
சூழ்வதும் 1
சூழ்வரோ 1
சூழ்வினையின் 1
சூழ 15
சூழல் 9
சூழல்கள் 2
சூழலில் 1
சூழலை 1
சூழவும் 1
சூழவே 2
சூழறும் 1
சூழி 1
சூழில் 1
சூழும் 5
சூழுமா 1
சூளாமணி 1
சூறை 1
சூனியவாதரும் 1

சூட்ட (12)

தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய் – நாலாயி:182/4
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:183/4
பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய் – நாலாயி:184/4
உருவம் அழகிய நம்பீ உகந்து இவை சூட்ட நீ வாராய் – நாலாயி:185/4
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் – நாலாயி:186/4
பொருது வருகின்ற பொன்னே புன்னைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:187/4
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் இருவாட்சிப்பூ சூட்ட வாராய் – நாலாயி:189/4
கண்டு நான் உன்னை உகக்க கருமுகைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:190/4
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று – நாலாயி:191/2
அந்தரி சூட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:558/4
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை – நாலாயி:623/3

மேல்


சூட்டலாகும் (1)

சூட்டலாகும் அம் தாமமே – நாலாயி:3052/4

மேல்


சூட்டாய (1)

சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை – நாலாயி:2650/1

மேல்


சூட்டிய (1)

தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே – நாலாயி:2479/4

மேல்


சூட்டிரே (1)

நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே – நாலாயி:628/4

மேல்


சூட்டினென் (1)

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல் மாலை – நாலாயி:2082/3

மேல்


சூட்டு (3)

சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:625/4
சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நல் நீர் – நாலாயி:2498/1
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு – நாலாயி:2649/4

மேல்


சூட்டு-மின் (1)

தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/4

மேல்


சூட்டு-மினே (1)

சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே – நாலாயி:2497/4

மேல்


சூட்டும் (1)

நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே – நாலாயி:3281/4

மேல்


சூட்டுவன் (1)

தூய மா மாலைகொண்டு சூட்டுவன் தொண்டனேனே – நாலாயி:2047/4

மேல்


சூட (1)

தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூட நின்ற – நாலாயி:1064/3

மேல்


சூடகமே (1)

சூடகமே தோள் வளையே தோடே செவி பூவே – நாலாயி:500/4

மேல்


சூடி (15)

தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம் – நாலாயி:9/2
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு – நாலாயி:246/2
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் – நாலாயி:290/2
மங்கல நல் வன மாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து – நாலாயி:706/1,2
உயர் மணி மகுடம் சூடி நின்றானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1271/4
சூடி போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்-மின் – நாலாயி:1876/3
சூடோமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் – நாலாயி:1979/3
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து – நாலாயி:2008/3
கை நின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கை நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை – நாலாயி:2021/2,3
தார் தன்னை சூடி தரித்து – நாலாயி:2443/4
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு – நாலாயி:2578/2
சின்ன நறும் தாது சூடி ஓர் மந்தாரம் – நாலாயி:2727/4
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால் – நாலாயி:2806/3
நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி
கற்றை துழாய் முடி கோல கண்ணபிரானை தொழுவார் – நாலாயி:2996/1,2
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் – நாலாயி:3582/1

மேல்


சூடிய (2)

வல்லார் அடி கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த – நாலாயி:2577/2
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே – நாலாயி:3530/4

மேல்


சூடியும் (1)

சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை – நாலாயி:1577/3

மேல்


சூடிலும் (1)

பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு – நாலாயி:2169/2,3

மேல்


சூடு (3)

முனி வஞ்ச பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய் – நாலாயி:2481/3
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய் – நாலாயி:2551/3
சூடு மலர் குழலீர் துயராட்டியேன் மெலிய – நாலாயி:3431/1

மேல்


சூடுதற்கு (1)

சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர் – நாலாயி:2579/2

மேல்


சூடும் (11)

தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம் – நாலாயி:9/2
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட – நாலாயி:663/2
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் – நாலாயி:1446/2
சூடோமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் – நாலாயி:1979/3
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற – நாலாயி:2350/2
தலைப்பெய்து யான் உன் திருவடி சூடும் தகைமையினால் – நாலாயி:2567/1
மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார் – நாலாயி:2571/2
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே – நாலாயி:2800/4
சூடும் தண் துழாய் – நாலாயி:2976/2
நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன் – நாலாயி:3945/1,2

மேல்


சூடுவதே (1)

நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே – நாலாயி:3430/4

மேல்


சூடுவார் (3)

மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் – நாலாயி:3462/1
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ – நாலாயி:3463/3
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3

மேல்


சூடுவேற்கு (1)

பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு
என் ஆகில் என்னே எனக்கு – நாலாயி:2169/3,4

மேல்


சூடுவோம் (1)

தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
ஆம் மடம் இன்றி தெருவு-தோறு அயல் தையலார் – நாலாயி:3372/2,3

மேல்


சூடோமே (1)

சூடோமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் – நாலாயி:1979/3

மேல்


சூதகம் (2)

செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் – நாலாயி:1258/3
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் – நாலாயி:1375/3

மேல்


சூதம் (1)

குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும் குளிர் தரு சூதம் மாதவியும் – நாலாயி:1753/3

மேல்


சூதனாய் (1)

சூதனாய் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம் – நாலாயி:887/1

மேல்


சூதில் (1)

பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய் – நாலாயி:118/2

மேல்


சூதினை (1)

சூதினை பெருக்கி களவினை துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து – நாலாயி:1000/1

மேல்


சூது (5)

சொல்லானை சொல்லுவதே சூது – நாலாயி:2445/4
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை – நாலாயி:2446/1
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே – நாலாயி:2603/1
சூது என்று களவும் சூதும் செய்யாதே – நாலாயி:3119/1
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரை காட்டி உன் அடி – நாலாயி:3564/1

மேல்


சூதும் (1)

சூது என்று களவும் சூதும் செய்யாதே – நாலாயி:3119/1

மேல்


சூதே (1)

தொழ கருதுவதே துணிவது சூதே – நாலாயி:3118/4

மேல்


சூர் (1)

நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் – நாலாயி:2084/2

மேல்


சூர்ப்பணகா (1)

துன்னு சுடு சினத்து சூர்ப்பணகா சோர்வு எய்தி – நாலாயி:2788/1

மேல்


சூர்ப்பணகாவை (1)

சூர்ப்பணகாவை செவியொடு மூக்கு அவள் – நாலாயி:314/3

மேல்


சூர்மையில் (1)

சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலை துரந்து – நாலாயி:1821/1

மேல்


சூரர் (1)

நெருங்க நீ கடைந்த-போது நின்ற சூரர் என் செய்தார் – நாலாயி:772/3

மேல்


சூல் (2)

சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் – நாலாயி:1179/3
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் – நாலாயி:2647/1

மேல்


சூலத்தால் (1)

தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார் – நாலாயி:375/3

மேல்


சூலம் (3)

குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள் – நாலாயி:821/1
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/3
நீடு மாட தனி சூலம் போழ கொண்டல் துளி தூவ – நாலாயி:1593/3

மேல்


சூலிகை (1)

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் – நாலாயி:1670/1

மேல்


சூழ் (297)

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் – நாலாயி:13/1
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர் – நாலாயி:22/1
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே – நாலாயி:71/3
மின்னு கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரிவேடமுமாய் – நாலாயி:88/1
தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – நாலாயி:205/2
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன் – நாலாயி:212/1
சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும் – நாலாயி:228/3
திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே – நாலாயி:283/1
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
மன்னு நரகன்-தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து – நாலாயி:351/1
பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:351/4
திண்ணை சூழ் திருக்கோட்டியூர் திருமாலவன் திருநாமங்கள் – நாலாயி:362/2
செம்பொன் ஆர் மதில் சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் – நாலாயி:368/2
சீத நீர் புடை சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் – நாலாயி:370/1
திரை பொரு கடல் சூழ் திண் மதில் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய் – நாலாயி:398/1
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:400/4
குருவு அரும்ப கோங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே – நாலாயி:406/3,4
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:457/4
மாட மாளிகை சூழ் மதுரை பதி – நாலாயி:538/1
மேவலன் விரை சூழ் துவராபதி – நாலாயி:541/2
துங்க மலர் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:591/1
திண்ணார் மதில் சூழ் திருவரங்க செல்வனார் – நாலாயி:613/3
கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப – நாலாயி:654/2
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம் – நாலாயி:662/2
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே – நாலாயி:688/2
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ – நாலாயி:689/3
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என் – நாலாயி:690/1
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:719/3
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் காகுத்தன் – நாலாயி:729/1
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி – நாலாயி:741/1
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ்
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய் – நாலாயி:772/1,2
வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ – நாலாயி:790/2,3
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ – நாலாயி:790/3
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே – நாலாயி:806/4
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள் – நாலாயி:870/1
புன துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா – நாலாயி:901/3
தெளிவிலா கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் – நாலாயி:908/1
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே – நாலாயி:909/4
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி – நாலாயி:919/1
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா – நாலாயி:926/2
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து – நாலாயி:930/1
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் – நாலாயி:932/2
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி – நாலாயி:946/3
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் – நாலாயி:949/3
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்-மின் சூழ் புனல் குடந்தையே தொழு-மின் – நாலாயி:954/3
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே – நாலாயி:971/4
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மா தேரும் காலாளும் – நாலாயி:989/1
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற – நாலாயி:991/2,3
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1021/4
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1024/4
வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எலாம் – நாலாயி:1026/3
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா – நாலாயி:1028/3
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1029/3
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1032/3
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா – நாலாயி:1034/3
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா – நாலாயி:1035/3
திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன் – நாலாயி:1037/3
கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன் – நாலாயி:1038/1
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூட நின்ற – நாலாயி:1064/3
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ்
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர் – நாலாயி:1078/2,3
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1090/4
காத்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1091/4
காய்ந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1092/4
கடந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1093/4
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1094/4
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி – நாலாயி:1095/2
கண்ணானை கண் ஆர கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1095/4
கண்டானை தொண்டனேன் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1096/4
வளம் கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே என்று வாய் வெருவும் – நாலாயி:1114/2
உலகு உடை மன்னவன் தென்னவனை கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ – நாலாயி:1134/3
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே – நாலாயி:1137/4
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் – நாலாயி:1160/2
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1182/4
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1186/4
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் – நாலாயி:1187/2
சங்க முக தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே – நாலாயி:1187/4
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை – நாலாயி:1197/1
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் – நாலாயி:1200/3
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் – நாலாயி:1204/3
குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தை குடம் ஆடி – நாலாயி:1205/1
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1210/4
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1214/4
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1216/4
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் – நாலாயி:1221/2
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண்ணெற்கு என சென்று முன்றில் – நாலாயி:1224/3
கண்டார் வணங்க களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய் – நாலாயி:1227/3
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து – நாலாயி:1236/3
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ்
மங்கையர்-தம்_தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன – நாலாயி:1237/2,3
தேன் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1250/4
சுந்தர நல் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1251/4
சீர் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1255/4
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1256/4
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர வண்புருடோத்தமமே – நாலாயி:1258/3,4
தே மலர் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1272/3
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1308/3
தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1311/3
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் – நாலாயி:1312/3
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1314/3
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1315/3
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற – நாலாயி:1322/1
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து – நாலாயி:1323/1,2
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை – நாலாயி:1337/1
சேற்றிடை கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1343/4
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1369/4
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1370/4
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய – நாலாயி:1377/1
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1378/4
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1379/4
திளைக்கும் செல்வ புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1381/4
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1383/4
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த – நாலாயி:1397/1
மாட மாளிகை சூழ் திருமங்கை_மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும் – நாலாயி:1427/1
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1440/3,4
மந்த முழவு ஓசை மழையாக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ்
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1444/3,4
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1467/2
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே – நாலாயி:1470/4
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனை – நாலாயி:1472/3
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1481/3,4
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற – நாலாயி:1487/2
கன்னி மதிள் சூழ் வயல் மங்கை கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:1517/2
நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே – நாலாயி:1519/4
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை – நாலாயி:1521/2
கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கை கார் அரக்கன் – நாலாயி:1522/1
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை – நாலாயி:1537/1
கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள் – நாலாயி:1541/1
பொங்கு புணரி கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா – நாலாயி:1546/1
வாவி தடம் சூழ் மணி முத்து ஆற்று நறையூர் நெடுமாலை – நாலாயி:1547/1
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி – நாலாயி:1548/3
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் – நாலாயி:1557/1
நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1561/4
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1567/1
சொல் நீர சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில் – நாலாயி:1567/3
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/3
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று – நாலாயி:1571/3
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் – நாலாயி:1576/3
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1585/3
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1589/4
செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் – நாலாயி:1590/1
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1591/4
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1596/4
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே – நாலாயி:1627/4
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1650/4
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானை கலியன் சொன்ன – நாலாயி:1657/2
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1668/2
கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின் – நாலாயி:1671/1
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1671/2
தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1677/1
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன் – நாலாயி:1702/3
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று – நாலாயி:1730/3
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தை கிடந்து உகந்த – நாலாயி:1732/3
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே – நாலாயி:1733/4
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை – நாலாயி:1735/3
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல் திசையுள் – நாலாயி:1736/2
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1749/4
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தை கிடந்த – நாலாயி:1759/1
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தை கிடந்த – நாலாயி:1759/1
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின் – நாலாயி:1770/2
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின் – நாலாயி:1772/2
செழும் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1783/3
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1786/3
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை – நாலாயி:1787/1
துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் – நாலாயி:1788/2
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1794/4
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன் – நாலாயி:1817/2
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1821/4
தொண்டரை பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1827/2
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் – நாலாயி:1829/1
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் – நாலாயி:1829/3
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/3
வாச மலர் பொழில் சூழ் வடமாமதுரை பிறந்தான் – நாலாயி:1833/2
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1835/3
மாட கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன – நாலாயி:1837/3
தேங்கு தண் புனல் சூழ் திருக்கோட்டியூரானே – நாலாயி:1845/4
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே – நாலாயி:1848/4
மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர் கலிகன்றி – நாலாயி:1921/2,3
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ்
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு இது காணீர் – நாலாயி:1972/2,3
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி – நாலாயி:1975/2
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு-பால் ஒடுங்க வளர் சேர் – நாலாயி:1984/3
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ்
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் – நாலாயி:1991/2,3
ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏச போய் ஆய்ப்பாடி – நாலாயி:1994/1
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா – நாலாயி:2029/1
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை – நாலாயி:2045/3
கற்பு உடைய மட கன்னி காவல் பூண்ட கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி – நாலாயி:2058/3
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் – நாலாயி:2066/1
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும் – நாலாயி:2067/1
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும் – நாலாயி:2067/3
தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றி – நாலாயி:2099/2
சூழ் அரவ பொங்கு அணையான் தோள் – நாலாயி:2143/4
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு – நாலாயி:2150/4
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு – நாலாயி:2168/4
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் – நாலாயி:2190/3
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி – நாலாயி:2194/1
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை – நாலாயி:2229/3,4
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் முலை சூழ்ந்த – நாலாயி:2230/2
அளந்தானை கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் – நாலாயி:2272/3
சுடர் ஆழி ஒன்று உடையான் சூழ் கழலே நாளும் – நாலாயி:2305/3
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை – நாலாயி:2322/2
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும் – நாலாயி:2344/2
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2379/1
அமம் சூழ்ந்து அற விளங்கி தோன்றும் நமன் சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் – நாலாயி:2379/2,3
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே – நாலாயி:2479/4
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா – நாலாயி:2513/1
தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே – நாலாயி:2514/4
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே – நாலாயி:2517/3
வரும் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு – நாலாயி:2522/3
தோய் தழை பந்தர் தண்டு உற நாற்றி பொரு கடல் சூழ்
தாவிய எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய் – நாலாயி:2545/2,3
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின் – நாலாயி:2564/2
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை – நாலாயி:2707/4
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப – நாலாயி:2727/2
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் – நாலாயி:2752/2
என் உறு நோய் யான் உரைப்ப கேள்-மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் – நாலாயி:2753/1,2
கன்னி மதிள் சூழ் கணமங்கை கற்பகத்தை – நாலாயி:2773/3
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ்
வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே – நாலாயி:2892/3,4
வள வயல் சூழ் வண் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த – நாலாயி:2942/2
நீள் கடல் சூழ் இலங்கை_கோன் – நாலாயி:2960/1
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3110/3
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3112/3
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3114/3
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3175/3
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளி பட்டு இவை படைத்தான் பின்னும் – நாலாயி:3176/3
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே – நாலாயி:3210/3
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் – நாலாயி:3227/1
கொய் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் குற்றேவல் – நாலாயி:3241/2
சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே – நாலாயி:3243/4
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர் – நாலாயி:3285/2
தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3304/3
சிறந்த பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3384/2
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3390/2
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் – நாலாயி:3417/2
கன் ஆர் மதிள் சூழ் குடந்தை கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் – நாலாயி:3420/3
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் – நாலாயி:3429/3
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் – நாலாயி:3436/3
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலை திருவண்வண்டூர் – நாலாயி:3457/2
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் – நாலாயி:3458/2
தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே – நாலாயி:3474/4
நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய் – நாலாயி:3475/2
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3475/3
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3476/3
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3477/3
மின்ன பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் – நாலாயி:3481/3
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3527/2
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3538/2
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே – நாலாயி:3550/2
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே – நாலாயி:3574/4
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3577/2
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் – நாலாயி:3578/3
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4
துகில் வண்ண தூ நீர் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3582/2
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3584/3
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3589/1
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3660/3
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3663/2
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3666/1
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3667/3
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா – நாலாயி:3672/4
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்-கண் வளர்கின்ற மாலே – நாலாயி:3687/4
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல – நாலாயி:3691/3
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும் – நாலாயி:3700/3
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல் – நாலாயி:3704/2
செம் கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3705/3
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3707/3
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுது உண்ட மா நீர் கொண்டல் வண்ணனே – நாலாயி:3719/3,4
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் – நாலாயி:3760/2
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே – நாலாயி:3760/4
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே – நாலாயி:3767/4
கொடி கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3793/4
கன கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3854/3
வெறி தண் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3858/3
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3859/3
நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3861/3
வண்டு ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3863/3
கொந்து ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3867/3
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3880/3
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை – நாலாயி:3881/2
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3881/3
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3882/3
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3883/3
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர – நாலாயி:3884/3
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3885/3
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம் – நாலாயி:3887/3
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3889/3
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர் – நாலாயி:3896/3
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டு திலதம் அன்ன – நாலாயி:3952/2
கொடி கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3970/3
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3971/3
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் – நாலாயி:3974/3
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3975/3
குன்று என்ன திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3976/3
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு – நாலாயி:3977/3
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல் – நாலாயி:3978/1
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே – நாலாயி:3978/4
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின – நாலாயி:3979/1
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி – நாலாயி:4000/1

மேல்


சூழ்கண்டாய் (2)

தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய் – நாலாயி:3422/4
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் – நாலாயி:3423/1

மேல்


சூழ்கின்ற (2)

சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கரும் திணிம்பை – நாலாயி:2549/1
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால் – நாலாயி:2806/3

மேல்


சூழ்கின்றவே (1)

தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே – நாலாயி:2548/4

மேல்


சூழ்கின்றிலர் (1)

துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே – நாலாயி:2558/3,4

மேல்


சூழ்ச்சி (1)

சூழ்ச்சி ஞான சுடர் ஒளி ஆகி என்றும் – நாலாயி:3135/1

மேல்


சூழ்ச்சியும் (1)

கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு – நாலாயி:2418/3,4

மேல்


சூழ்ச்சியே (1)

சொல்லாய் யான் உன்னை சார்வது ஓர் சூழ்ச்சியே – நாலாயி:3134/4

மேல்


சூழ்ச்சியை (1)

தோழிமார் பலர் கொண்டுபோய் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் – நாலாயி:289/2

மேல்


சூழ்த்த (1)

தாழ்த்தி வணங்கு-மின்கள் தண் மலரால் சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால்-தன்னை – நாலாயி:2392/2,3

மேல்


சூழ்த்து (1)

சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே – நாலாயி:3127/4

மேல்


சூழ்தரு (4)

கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம் பொழில் காவிரி தென் அரங்கம் – நாலாயி:245/1
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1262/4
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1265/4
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1482/3,4

மேல்


சூழ்ந்த (38)

பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை – நாலாயி:533/2
பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும் – நாலாயி:609/1
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:654/3
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:888/3
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:991/4
தந்தான் சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:995/4
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை – நாலாயி:997/1
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை – நாலாயி:1127/2
தீம் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1141/4
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/4
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை – நாலாயி:1305/3
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை – நாலாயி:1417/2
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் – நாலாயி:1430/3
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர் – நாலாயி:1431/3
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை – நாலாயி:1434/3
செம்பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் – நாலாயி:1435/3
தார் ஆர் மலர் கமல தடம் சூழ்ந்த தண் புறவில் – நாலாயி:1477/1
நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே – நாலாயி:1496/4
நாம திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல் – நாலாயி:1497/2
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1513/4
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை – நாலாயி:1617/1
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி – நாலாயி:1702/2
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம் – நாலாயி:1760/1
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1770/4
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1773/4
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல் – நாலாயி:1777/2
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:2044/3
ஓர் ஆழி சூழ்ந்த உலகு – நாலாயி:2141/4
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய – நாலாயி:2159/2
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை – நாலாயி:2161/2
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் முலை சூழ்ந்த
நஞ்சு உரத்து பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று – நாலாயி:2230/2,3
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் – நாலாயி:2331/1
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை – நாலாயி:2706/7
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3080/2
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் – நாலாயி:3391/3
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த நீண்ட முகில்_வண்ணன் கண்ணன் கொண்ட – நாலாயி:3684/3
தெண் திரை பொருநல் தண் பணை சூழ்ந்த திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3792/4

மேல்


சூழ்ந்ததால் (1)

விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4

மேல்


சூழ்ந்தாயே (1)

சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே – நாலாயி:3999/4

மேல்


சூழ்ந்திருந்து (1)

பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே – நாலாயி:12/4

மேல்


சூழ்ந்து (54)

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் – நாலாயி:56/1
துன்னிய பேர் இருள் சூழ்ந்து உலகை மூட – நாலாயி:106/1
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப – நாலாயி:282/3
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் – நாலாயி:355/3
துக்க சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அற பறித்து – நாலாயி:453/1
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:625/4
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடி வாய் சரம் துரந்தான் – நாலாயி:989/2
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:989/4
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:990/4
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:992/4
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1128/2
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1131/2
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1134/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1135/2
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1136/2
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1164/4
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு – நாலாயி:1167/1
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் – நாலாயி:1179/3
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் – நாலாயி:1227/1
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1380/4
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1382/4
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1386/4
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை – நாலாயி:1417/1,2
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய நறையூரே – நாலாயி:1489/4
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1516/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
துன்னு மாதவியும் சுரபுனை பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய் – நாலாயி:1756/3
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே – நாலாயி:1768/4
வேய் இரும் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற – நாலாயி:2034/3
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து – நாலாயி:2213/4
சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து – நாலாயி:2330/4
அமம் சூழ்ந்து அற விளங்கி தோன்றும் நமன் சூழ் – நாலாயி:2379/2
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து – நாலாயி:2600/4
சூழ்ந்து அடியார் வேண்டின-கால் தோன்றாது விட்டாலும் – நாலாயி:2601/1
வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய் திறவார் சூழ்ந்து எங்கும் – நாலாயி:2601/2
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3331/3
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள் – நாலாயி:3333/3
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3338/3
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே – நாலாயி:3590/4
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணை குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3762/1,2
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து – நாலாயி:3765/2
பேசு-மின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் – நாலாயி:3905/1,2
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே – நாலாயி:3914/2
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ஓ – நாலாயி:3998/4
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ – நாலாயி:3999/1
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர் சோதீ ஓ – நாலாயி:3999/2
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ – நாலாயி:3999/3
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே – நாலாயி:3999/4

மேல்


சூழ்ந்தும் (1)

சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர் சோதி மணி நிறமாய் – நாலாயி:3636/2

மேல்


சூழ்வதும் (1)

தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலை கண்ணார கண்டு – நாலாயி:2574/3

மேல்


சூழ்வரோ (1)

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ
ஆழ பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை – நாலாயி:3609/1,2

மேல்


சூழ்வினையின் (1)

சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை – நாலாயி:2670/3

மேல்


சூழ (15)

கழல் மன்னர் சூழ கதிர் போல் விளங்கி – நாலாயி:101/1
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய் – நாலாயி:190/1
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானை கண்டார் உளர் – நாலாயி:333/4
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து – நாலாயி:556/1
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தன் சூழ
வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் – நாலாயி:678/1,2
வான் உலாவிய மதி தவழ் மால் வரை மா மதிள் புடை சூழ
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே – நாலாயி:1153/3,4
பெரு விறல் வானவர் சூழ ஏழ்_உலகும் தொழுது ஏத்த – நாலாயி:1176/2
தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே – நாலாயி:1496/3,4
மஞ்சு தோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் – நாலாயி:1812/1
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – நாலாயி:2075/2,3
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ – நாலாயி:2371/3
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே – நாலாயி:3542/3,4
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே – நாலாயி:3557/3
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே – நாலாயி:3582/4
ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே – நாலாயி:3698/4

மேல்


சூழல் (9)

சொல்லில் அரசி படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளைதானே – நாலாயி:211/1
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே – நாலாயி:763/4
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம் – நாலாயி:1279/3
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே – நாலாயி:2493/4
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன் – நாலாயி:2525/3
சுவையன் திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே – நாலாயி:2987/4
சூழல் பலபல வல்லான் தொல்லை அம் காலத்து உலகை – நாலாயி:2988/1
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3
சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே – நாலாயி:3686/4

மேல்


சூழல்கள் (2)

தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே – நாலாயி:3608/4
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ – நாலாயி:3609/1

மேல்


சூழலில் (1)

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட – நாலாயி:331/1

மேல்


சூழலை (1)

வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலை சூழவே நின்று – நாலாயி:3465/3

மேல்


சூழவும் (1)

சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – நாலாயி:3627/3

மேல்


சூழவே (2)

வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலை சூழவே நின்று – நாலாயி:3465/3
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ – நாலாயி:3827/2,3

மேல்


சூழறும் (1)

ஓத மா கடல்_வண்ணா உன் மணவாட்டிமாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:520/3,4

மேல்


சூழி (1)

சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து – நாலாயி:1415/2

மேல்


சூழில் (1)

துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில் – நாலாயி:2820/2

மேல்


சூழும் (5)

திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:356/4
கை நின்ற ஆழியான் சூழும் கழல் சூடி – நாலாயி:2021/2
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும்
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள் – நாலாயி:2340/2,3
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு – நாலாயி:2344/2,3
சூழும் எழுந்து உதிர புனலா மலை – நாலாயி:3599/2

மேல்


சூழுமா (1)

சூழுமா நினை மா மணி_வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1864/4

மேல்


சூளாமணி (1)

துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப – நாலாயி:2755/4

மேல்


சூறை (1)

நின்ற செம் தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய – நாலாயி:1012/3

மேல்


சூனியவாதரும் (1)

சொல் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும் – நாலாயி:2889/2

மேல்