நாலாயிரத் திவ்விய பிரபந்தம் – முதலாம் ஆயிரம்

1.பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு (1 – 12 = 12)
   பெரியாழ்வார் – திருமொழி (13 – 473 = 461)
2.ஆண்டாள் – திருப்பாவை (474-503 = 30)
    ஆண்டாள் – நாச்சியார் திருமொழி (504-646 = 143)
3.குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி (647 – 751 = 105)
4.திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம் (752 – 871 = 120)
5.தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை (872 – 916 = 45)
தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருப்பள்ளியெழுச்சி (917 – 926 = 10)
6.திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் (927 – 936 = 10)
7.மதுரகவி ஆழ்வார் – கண்ணிநுண்சிறுத்தாம்பு (937 – 947 = 11)

1.பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு

#1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன்
சேவடி செவ்வி திருக்காப்பு

#2
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

#3
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்-மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே

#4
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லை கூடு-மினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று
பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே

#5
அண்ட குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை
இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டை குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்-மினே

#6
எந்தை தந்தை தந்தை-தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோண திருவிழவில்
அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே

#7
தீயில் பொலிகின்ற செம் சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாய பொரு படை_வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி
பாய சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதுமே

#8
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பை உடை நாக பகை கொடியானுக்கு பல்லாண்டு கூறுவனே

#9
உடுத்து களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம்
விடுத்த திசை கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்
படுத்த பை நாக_அணை பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே

#10
எ நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அ நாளே அடியோங்கள் அடி குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றி திரு மதுரையில் சிலை குனித்து ஐந்தலைய
பை நாக தலை பாய்ந்தவனே உன்னை பல்லாண்டு கூறுதுமே

#11
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனை போல திருமாலே நானும் உனக்கு பழவடியேன்
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே

#12
பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே

பெரியாழ்வார் – திருமொழி)


#13
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே

#14
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல் பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே

#15
பேணி சீர் உடை பிள்ளை பிறந்தினில்
காண தாம் புகுவார் புக்கு போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே

#16
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே

#17
கொண்ட தாள் உறி கோல கொடு மழு
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டி புகுந்து நெய்யாடினார்

#18
கையும் காலும் நிமிர்த்து கடார நீர்
பைய ஆட்டி பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே

#19
வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
பாய சீர் உடை பண்பு உடை பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே

#20
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எ திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே

#21
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்

#22
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே

#23
சீத கடல் உள் அமுது அன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாத கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே

#24
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்
தத்தி பதித்து தலைப்பெய்தால் போல் எங்கும்
பத்து விரலும் மணி_வண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவர் காணீரே ஒள் நுதலீர் வந்து காணீரே

#25
பணை தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இ பிள்ளை
இணை காலில் வெள்ளி தளை நின்று இலங்கும்
கணை கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே

#26
உழந்தாள் நறு நெய் ஓரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே

#27
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இ பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே

#28
மத்த களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி-தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே

#29
இரும் கை மத களிறு ஈர்க்கின்றவனை
பருங்கி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே

#30
வந்த மதலை குழாத்தை வலிசெய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே

#31
அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து
பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே

#32
பெரு மா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை
குருமா மணி பூண் குலாவி திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே

#33
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடி போய்
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே

#34
மை தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்து சிறு பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே

#35
வண்டு அமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்க்கின்ற கோவல குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே

#36
எம் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு
அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இ
செம் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே

#37
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இ நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே

#38
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர்-தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே

#39
பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி_வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே

#40
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில் கொள் மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே

#41
முற்றிலும் தூதையும் முன்கை மேல் பூவையும்
சிற்றில் இழைத்து திரிதருவோர்களை
பற்றி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன்
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே

#42
அழகிய பைம்பொன்னின் கோல் அம் கை கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
மழ கன்று இனங்கள் மறித்து திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே

#43
சுருப்பு ஆர் குழலி யசோதை முன் சொன்ன
திருப்பாத கேசத்தை தென் புதுவை_பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே

#44
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ண சிறு தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான்
மாணி குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ

#45
உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ
இடை விரவி கோத்த எழில் தெழ்கினோடு
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ

#46
என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு
இந்திரன்-தானும் எழில் உடை கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ

#47
சங்கின் வலம்புரியும் சேவடி கிண்கிணியும்
அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும்
அம் கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செம் கண் கரு முகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ

#48
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழு இல் கொடையான் வயிச்சிரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி_வண்ணனே தாலேலோ

#49
ஓத கடலின் ஒளி முத்தின் ஆரமும்
சாதி பவளமும் சந்த சரி வளையும்
மா தக்க என்று வருணன் விடுதந்தான்
சோதி சுடர் முடியாய் தாலேலோ சுந்தர தோளனே தாலேலோ

#50
கான் ஆர் நறும் துழாய் கைசெய்த கண்ணியும்
வான் ஆர் செழும் சோலை கற்பகத்தின் வாசிகையும்
தேன் ஆர் மலர் மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தை கிடந்தானே தாலேலோ

#51
கச்சொடு பொன் சுரிகை காம்பு கனக வளை
உச்சி மணிச்சுட்டி ஒண் தாள் நிரை பொன் பூ
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ

#52
மெய் திமிரும் நான பொடியோடு மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ

#53
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன_வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை_பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்-தானே

#54
தன் முகத்து சுட்டி தூங்க தூங்க தவழ்ந்து போய்
பொன் முக கிண்கிணி ஆர்ப்ப புழுதி அளைகின்றான்
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ
நின் முகம் கண் உள ஆகில் நீ இங்கே நோக்கி போ

#55
என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்
தன் சிறு கைகளால் காட்டி காட்டி அழைக்கின்றான்
அஞ்சன_வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா

#56
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேங்கட_வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா

#57
சக்கர கையன் தடம் கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டி காட்டும் காண்
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்

#58
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னை கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவ கூவ நீ போதியேல்
புழை இல ஆகாதே நின் செவி புகர் மா மதீ

#59
தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தட கையன்
கண் துயில்கொள்ள கருதி கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலை பால் அறா கண்டாய் உறங்காவிடில்
விண்-தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா

#60
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழ பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா

#61
சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடை சென்று கேள்
சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறை_மதீ நெடுமால் விரைந்து உன்னை கூவுகின்றான்

#62
தாழியில் வெண்ணெய் தடம் கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னை கூவுகின்றான்
ஆழி கொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்
வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா

#63
மை தடம் கண்ணி யசோதை-தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே

#64
உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல்
பைய உயோகு துயில்கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே

#65
கோளரியின் உருவம்கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்
மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர
காள நன் மேகம்-அவை கல்லொடு கால் பொழிய கருதி வரை குடையா காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே

#66
நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே நாவியுள் நல் கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை ஆனவனே தரணி தல முழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலை-தனுள் வென்று வருபவனே
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே

#67
வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலை பேயின் நஞ்சம்-அது உண்டவனே
கானக வல் விளவின் காய் உதிர கருதி கன்று-அது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே
தேனுகனும் முரனும் திண் திறல் வெம் நரகன் என்பவர் தாம் மடிய செரு அதிர செல்லும்
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே

#68
மத்து அளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெம் திறலோய்
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்து அணி ஆர் மொய் குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே

#69
காய மலர் நிறவா கரு முகில் போல் உருவா கானக மா மடுவில் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய்
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே

#70
துப்பு உடை ஆயர்கள்-தம் சொல் வழுவாது ஒருகால் தூய கரும் குழல் நல் தோகை மயில் அனைய
நப்பினை-தன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளை தன மிகு சோதி புக தனி ஒரு தேர் கடவி தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே

#71
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்துவரும்
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே

#72
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே

#73
செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே

#74
அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே

#75
மாணிக்க கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
ஆணிப்பொன்னால் செய்த ஆய் பொன் உடை மணி
பேணி பவள வாய் முத்து இலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி

#76
பொன் அரைநாணொடு மாணிக்க கிண்கிணி
தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட
என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம்
மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி

#77
பல் மணி முத்து இன் பவளம் பதித்து அன்ன
என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல்
நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி

#78
தூ நிலா முற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று
நீ நிலா நின் புகழாநின்ற ஆயர்-தம்
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி குடந்தை கிடந்தானே சப்பாணி

#79
புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டி தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டி கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி

#80
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆள
பாரித்த மன்னர் பட பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பானி

#81
பரந்திட்டு நின்ற படு கடல்-தன்னை
இரந்திட்ட கை மேல் எறி திரை மோத
கரந்திட்டு நின்ற கடலை கலங்க
சரம் தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க வில் கையனே சப்பாணி

#82
குரக்கு இனத்தாலே குரை கடல்-தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி அம் கையனே சப்பாணி

#83
அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி

#84
அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல்-தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன் கயிறு ஆக
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி

#85
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே

#86
தொடர் சங்கிலி கை சலார்பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும்மத புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல்
உடன் கூடி கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ

#87
செக்கரிடை நுனி கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல
நக்க செம் துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமை தாலி பூண்ட அனந்தசயனன்
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ

#88
மின்னு கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரிவேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதக சிற்றாடையொடும்
மின்னில் பொலிந்த ஓர் கார் முகில் போல கழுத்தினில் காறையொடும்
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர் நடை நடவானோ

#89
கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி கணகண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன்
தன்னை பெற்றேற்கு தன் வாய் அமுதம் தந்து என்னை தளிர்ப்பிக்கின்றான்
தன் ஏற்று மாற்றலர் தலைகள் மீதே தளர் நடை நடவானோ

#90
முன் நல் ஓர் வெள்ளி பெரு மலை குட்டன் மொடுமொடு விரைந்து ஓட
பின்னை தொடர்ந்து ஓர் கரு மலை குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி உலகம் பரவி ஓவா புகழ் பலதேவன் என்னும்
தன் நம்பி ஓட பின் கூட செல்வான் தளர் நடை நடவானோ

#91
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினால் போல் இலச்சினைபட நடந்து
பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்துபெய்து
கரு கார் கடல்_வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ

#92
படர் பங்கைய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செ வாய் ஊறிஊறி இற்று இற்று வீழ நின்று
கடும் சே கழுத்தின் மணி குரல் போல் உடை மணி கணகணென
தடம் தாளினை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ

#93
பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின்
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ

#94
வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறு கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ

#95
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியது ஓர் தீர்த்த பலம்
தரு நீர் சிறு சண்ணம் துள்ளம் சோர தளர் நடை நடவானோ

#96
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன_வண்ணன்-தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளர தளர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி_வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவார்களே

#97
பொன் இயல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி
தன் இயல் ஓசை சலன்சலன் என்றிட
மின் இயல் மேகம் விரைந்து எதிர்வந்தால் போல்
என் இடைக்கு ஓட்டரா அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ

#98
செங்கமல பூவில் தேன் உண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளாலே வந்து அச்சோஅச்சோ ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ

#99
பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ

#100
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்ன
தேறி அவளும் திருவுடம்பில் பூச
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய் அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ

#101
கழல் மன்னர் சூழ கதிர் போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலை பெரிது உடை துச்சோதனனை
அழல விழித்தானே அச்சோஅச்சோ ஆழி அங்கையனே அச்சோஅச்சோ

#102
போர் ஒக்க பண்ணி இ பூமி பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
கார் ஒக்கும் மேனி கரும் பெரும் கண்ணனே
ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோஅச்சோ

#103
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கர கையனே அச்சோஅச்சோ சங்கம் இடத்தானே அச்சோஅச்சோ

#104
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோஅச்சோ வேங்கட_வாணனே அச்சோஅச்சோ

#105
கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணா ஓ என்று
இண்டை சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோஅச்சோ மார்வில் மறுவனே அச்சோஅச்சோ

#106
துன்னிய பேர் இருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின் இ உலகினில் பேர் இருள் நீங்க அன்று
அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ

#107
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சு அணி மாட புதுவை_கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே

#108
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச்சொட்டு என்ன துளிக்கத்துளிக்க என்
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான்

#109
கிண்கிணி கட்டி கிறி கட்டி கையினில்
கங்கணம் இட்டு கழுத்தில் தொடர் கட்டி
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான்

#110
கத்த கதித்து கிடந்த பெரும் செல்வம்
ஒத்து பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்து தலைவன் குடி கெட தோன்றிய
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்

#111
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணி திண் தேர்
ஊர்ந்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர் கோன் என்னை புறம்புல்குவான்

#112
வெண்கல பத்திரம் கட்டி விளையாடி
கண் பல செய்த கரும் தழை காவின் கீழ்
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான்

#113
சத்திரம் ஏந்தி தனி ஒரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காண காணி முற்றும் கொண்ட
பத்திரகாரன் புறம்புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான்

#114
பொத்த உரலை கவிழ்த்து அதன் மேல் ஏறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்த திருவயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆழியான் என்னை புறம்புல்குவான்

#115
மூத்தவை காண முது மணல் குன்று ஏறி
கூத்து உவந்து ஆடி குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான்

#116
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலா திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர்_கோன் என்னை புறம்புல்குவான்

#117
ஆய்ச்சி அன்று ஆழி பிரான் புறம்புல்கிய
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நல் மக்களை பெற்று மகிழ்வரே

#118
மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

#119
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன்
சிலை வளைய திண் தேர் மேல் முன் நின்ற செம் கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

#120
காயும் நீர் புக்கு கடம்பு ஏறி காளியன்
தீய பணத்தில் சிலம்பு ஆர்க்க பாய்ந்து ஆடி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

#121
இருட்டில் பிறந்து போய் ஏழை வல் ஆயர்
மருட்டை தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாள
புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டு கொண்ட
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

#122
சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

#123
செப்பு இள மென் முலை தேவகி நங்கைக்கு
சொப்பட தோன்றி தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

#124
தத்துக்கொண்டாள்-கொலோ தானே பெற்றாள்-கொலோ
சித்தம் அணையாள் அசோதை இளம் சிங்கம்
கொத்து ஆர் கரும் குழல் கோபால கோளரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

#125
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலய
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

#126
பதக முதலை வாய் பட்ட களிறு
கதறி கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவ புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

#127
வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே

#128
அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே

#129
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறுஞ்சி முலை உணாயே

#130
தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையர் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே

#131
கஞ்சன்-தன்னால் புணர்க்கப்பட்ட கள்ள சகடு கலக்கு அழிய
பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை உணாயே

#132
தீய புந்தி கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம்-தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றி சொன்னேன் போகவேண்டா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே

#133
மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார்
என்ன நோன்பு நோற்றாள்-கொலோ இவனை பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே

#134
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டு உலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே

#135
இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன்
திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு
இரு முலையும் முறைமுறையாய் ஏங்கிஏங்கி இருந்து உணாயே

#136
அம் கமல போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வியர்ப்ப தீமை செய்து இ முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே

#137
ஓடஓட கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடிஆடி அசைந்துஅசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
ஓடிஓடி போய்விடாதே உத்தமா நீ முலை உணாயே

#138
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீர் அணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர்
பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார்
சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே

#139
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லை கடல்_வண்ணா உன்னை தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த
ஆய் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்

#140
வண்ண பவளம் மருங்கினில் சாத்தி மலர் பாத கிண்கிணி ஆர்ப்ப
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனக கடிப்பும் இவையாம்

#141
வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகர குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இ ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய்

#142
வணம் நன்று உடைய வயிர கடிப்பு இட்டு வார் காது தாழ பெருக்கி
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து
சுணம் நன்று அணி முலை உண்ண தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்

#143
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட ஒட்டில்
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய்

#144
விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப்போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்_வண்ணா காவலனே முலை உணாயே

#145
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்து பசுநிரை மேய்த்தாய்
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே
தலை நிலா-போதே உன் காதை பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே

#146
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டு சொல்லுகேன் மெய்யே

#147
மெய் என்று சொல்லுவார் சொல்லை கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையை பிடித்து கரை உரலோடு என்னை காணவே கட்டிற்றிலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடுகிடாய் இ நின்ற காரிகையார் சிரியாமே

#148
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்குற்று என் காதுகள் வீங்கி எறியில்
தாரியாதாகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காதுபெருக்கி திரியவும் காண்டி
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே

#149
கண்ணை குளிர கலந்து எங்கும் நோக்கி கடி கமழ் பூம் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ண கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்

#150
வா என்று சொல்லி என் கையை பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவ திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற்பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்

#151
வார் காது தாழ பெருக்கி அமைத்து மகர குழை இட வேண்டி
சீரால் அசோதை திருமாலை சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே

#152
வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இ இரா உன்னை தேய்த்து கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய்

#153
கன்றுகள் ஓட செவியில் கட்டெறும்பு பிடித்து இட்டால்
தென்றி கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்

#154
பேய்ச்சி முலை உண்ண கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி_வண்ணா மஞ்சனமாட நீ வாராய்

#155
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சக பேய்_மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்

#156
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பீ
செப்பு இள மென் முலையார்கள் சிறுபுறம் பேசி சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய்

#157
எண்ணெய் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி
கண்ணை புரட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே
உண்ண கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனமாட நீ வாராய்

#158
கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாக பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சனமாட நீ வாராய்

#159
கன்றினை வால் ஓலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பை பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்

#160
பூணி தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய்

#161
கார் மலி மேனி நிறத்து கண்ணபிரானை உகந்து
வார் மலி கொங்கை யசோதை மஞ்சனமாட்டிய ஆற்றை
பார் மலி தொல் புதுவை_கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே

#162
பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய்

#163
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாய சகடும் மருதும் இறுத்தவன்
காயாமலர்_வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூய்தாக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூ மணி_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்

#164
திண்ண கலத்தில் திரை உறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்-தம்
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் கார் முகில்_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்

#165
பள்ளத்தில் மேயும் பறவை உரு கொண்டு
கள்ள அசுரன் வருவானை தான் கண்டு
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்

#166
கற்று இனம் மேய்த்து கனிக்கு ஒரு கன்றினை
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடி திரியாதே
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்-தன் குழல்வாராய் அக்காக்காய்

#167
கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை
அழிப்பான் நினைந்திட்டு அ ஆழி-அதனால்
விழிக்கும் அளவிலே வேரறுத்தானை
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய்

#168
பிண்ட திரளையும் பேய்க்கு இட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடி திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்-தன் குழல்வாராய் அக்காக்காய்

#169
உந்தி எழுந்த உருவ மலர்-தன்னில்
சந்த சதுமுகன்-தன்னை படைத்தவன்
கொந்த குழலை குறந்து புளி அட்டி
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய்

#170
மன்னன்-தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த
முன் இ உலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினை பூ அணை மேல் வைத்து
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்

#171
கண்டார் பழியாமே அக்காக்காய் கார்_வண்ணன்
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதிள் வில்லிபுத்தூர் கோன் பட்டன் சொல்
கொண்டாடி பாட குறுகா வினை-தாமே

#172
வேலி கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலி கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு
பீலி தழையை பிணைத்து பிறகிட்டு
காலி பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டுவா

#173
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன்
சங்கம் பிடிக்கும் தட கைக்கு தக்க நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டுவா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டுவா

#174
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் ஓடி
சிறு கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டுவா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா

#175
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவன்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்கு பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டுவா

#176
சீர் ஒன்று தூதாய் துரியோதனன் பக்கல்
ஊர் ஒன்று வேண்டி பெறாத உரோடத்தால்
பார் ஒன்றி பாரதம் கைசெய்து பார்த்தற்கு
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டுவா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா

#177
ஆலத்து இலையான் அரவின்_அணை மேலான்
நீல கடலுள் நெடும் காலம் கண்வளர்ந்தான்
பால பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த
கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா

#178
பொன் திகழ் சித்திரகூட பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அ
கற்றை குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா

#179
மின் இடை சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ
தன் நிகர் ஒன்று இல்லா சிலை கால் வளைத்து இட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டுவா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டுவா

#180
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து
மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டுவா வேங்கட_வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா

#181
அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டுவா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களை பெற்று மகிழ்வர் இ வையத்தே

#182
ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய்

#183
கரு உடை மேகங்கள் கண்டால் உன்னை கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய்

#184
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்-தம் இடம் புக்கு
கச்சொடு பட்டை கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய்

#185
தெருவின்-கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமைசெய்யாதே
மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பீ உகந்து இவை சூட்ட நீ வாராய்

#186
புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனை தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய்

#187
எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்-கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப்பூ சூட்ட வாராய்

#188
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய்

#189
சீமாலிகன்-அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் இருவாட்சிப்பூ சூட்ட வாராய்

#190
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில்கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கருமுகைப்பூ சூட்ட வாராய்

#191
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே

#192
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய்

#193
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னை கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்தி போது மதில் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என்தன் சொல்லு நான் உன்னை காப்பிட வாராய்

#194
செப்பு ஓது மென் முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்ப போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
மு போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்

#195
கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்றுஎன்று
எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலை-அது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய்

#196
பல்லாயிரவர் இ ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞான சுடரே உன் மேனி
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்தி சொப்பட காப்பிட வாராய்

#197
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம் மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ் மணி மாட மதில் திருவெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய்

#198
கள்ள சகடும் மருதும் கலக்கு அழிய உதைசெய்த
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலையுண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய்

#199
இன்பம்-அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே
செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்ப கபாலி காண் அங்கு கடிது ஓடி காப்பிட வாராய்

#200
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லும் கொள்ளாய் சில நாள்
திருக்காப்பு நான் உன்னை சாத்த தேசு உடை வெள்ளறை நின்றாய்
உரு காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்

#201
போது அமர் செல்வ கொழுந்து புணர் திருவெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்-தன்னை காப்பிட்ட மாற்றம்
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாத பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே

#202
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி-தன்னை காக்ககில்லோம் உன் மகனை காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணல் கண்ணான் ஓர் மகனை பெற்ற அசோதை நங்காய் உன் மகனை கூவாய்

#203
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார்
பரிபவம் பேச தரிக்ககில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே

#204
திரு உடை பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி உடைத்திட்டு போந்து நின்றான்
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய்
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே

#205
கொண்டல்_வண்ணா இங்கே போதராயே கோயிற்பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி-தானும்
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ள கண்ணபிரான் கற்ற கல்வி தானே

#206
பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்
ஆலை கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனை கூவாய்

#207
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்
கோதுகலம் உடை குட்டனே ஓ குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா
வேத பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே

#208
செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே

#209
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசமிலாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே

#210
கன்னல் இலட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே

#211
சொல்லில் அரசி படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளைதானே
இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அ வளை கொடுத்து
நல்லன நாவற்பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே

#212
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி
எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே

#213
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளை திறம் பேசானால் இன்று முற்றும்

#214
குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சி தொழுது ஏத்த
வண்டு அமர் பூம் குழலார் துகில் கைக்கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்

#215
தடம் படு தாமரை பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைம் தலை மேல் எழ பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்

#216
தேனுகன் ஆவி செகுத்து பனம் கனி
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால்
வானவர்_கோன் விட வந்த மழை தடுத்து
ஆன் நிரை காத்தானால் இன்று முற்றும் அவை உய்ய கொண்டானால் இன்று முற்றும்

#217
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு
பேர்த்து அவர் கண்டு பிடிக்க பிடியுண்டு
வேய் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்

#218
தள்ளி தளிர் நடையிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ள சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்

#219
மாவலி வேள்வியில் மாண் உருவாய் சென்று
மூ அடி தா என்று இரந்த இ மண்ணினை
ஓர் அடியிட்டு இரண்டாம் அடி-தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும்

#220
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும்

#221
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத்து உருவாய் இடந்த இ மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி இடந்தானால் இன்று முற்றும்

#222
அம் கமல_கண்ணன்-தன்னை அசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லை புதுவை_கோன் பட்டன் சொல்
இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே

#223
தன் நேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#224
பொன் போல் மஞ்சனமாட்டி அமுது ஊட்டி போனேன் வருமளவு இப்பால்
வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#225
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குட தயிர் சாய்த்து பருகி
பொய் மாய மருது ஆன அசுரரை பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#226
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய்
கொய் ஆர் பூம் துகில் பற்றி தனி நின்று குற்றம் பலபல செய்தாய்
பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்துக்கு உள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#227
மு போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த கலத்தொடு சாய்த்து பருகி
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#228
கரும்பு ஆர் நீள் வயல் காய் கதிர் செந்நெலை கற்று ஆநிரை மண்டி தின்ன
விரும்பா கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே
சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#229
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அ ஆயர்-தம் பாடி
சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#230
வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இ பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#231
தாய்மார் மோர் விற்க போவர் தமப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவர்
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழற திரியும்
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#232
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலை தடம் கொண்டு புக்கு
முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

#233
கார் ஆர் மேனி நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை_மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே

#234
அஞ்சன_வண்ணனை ஆயர் குல கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள்-தோறும் திரியாமே
கஞ்சனை காய்ந்த கழல் அடி நோவ கன்றின் பின்
என் செய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே

#235
பற்று மஞ்சள் பூசி பாவைமாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்று தூளி உடை வேடர் கானிடை கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே

#236
நன் மணி மேகலை நங்கைமாரொடு நாள்-தொறும்
பொன் மணி மேனி புழுதி ஆடி திரியாமே
கல் மணி நின்று அதிர் கான் அதரிடை கன்றின் பின்
என் மணி_வண்ணனை போக்கினேன் எல்லே பாவமே

#237
வண்ண கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கான் அதரிடை கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே

#238
அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வை கனி வாய் கொடுத்து கூழைமை செய்யாமே
எவ்வும் சிலை உடை வேடர் கானிடை கன்றின் பின்
தெய்வ தலைவனை போக்கினேன் எல்லே பாவமே

#239
மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கி போய்
படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கான் அதரிடை கன்றின் பின்
இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே

#240
வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடி தோழரோடு திரியாமே
கள்ளி உணங்கு வெம் கான் அதரிடை கன்றின் பின்
புள்ளின் தலைவனை போக்கினேன் எல்லே பாவமே

#241
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அ பாங்கினால்
என் இளம் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான்
பொன் அடி நோவ புலரியே கானில் கன்றின் பின்
என் இளம் சிங்கத்தை போக்கினேன் எல்லே பாவமே

#242
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடை
கடிய வெம் கானிடை காலடி நோவ கன்றின் பின்
கொடியேன் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே

#243
என்றும் எனக்கு இனியானை என் மணி_வண்ணனை
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
பொன் திகழ் மாட புதுவையர்_கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே

#244
சீலை குதம்பை ஒரு காது ஒரு காது செம் நிற மேல் தோன்றிப்பூ
கோல பணை கச்சும் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலமும்
காலி பின்னே வருகின்ற கடல்_வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்து புத்திரனை பெற்றார் நங்கைமீர் நானோ மற்று ஆரும் இல்லை

#245
கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம் பொழில் காவிரி தென் அரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா

#246
காடுகள் ஊடுபோய் கன்றுகள் மேய்த்து மறியோடி கார் கோடல்பூ
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான்

#247
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும் போர் ஏறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் கானிடை கன்றின் பின் போன சிறுக்குட்ட செங்கமல
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்

#248
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை வாய்வைத்த போர் ஏறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும்

#249
அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்திருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதும் ஓர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்

#250
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல்_வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரன்-தன்னை
சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே

#251
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன்தன்னை கொண்டு ஒருபோதும் எனக்கு அரிது
வாட்டம் இலா புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று-தொட்டும்

#252
திண் ஆர் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன்
பண் நேர் மொழியாரை கூவி முளை அட்டி பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்ய கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு

#253
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல்_வண்ணன் கழல் இணை காண்பார்களே

#254
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலி
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழை-கொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே

#255
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி பணை கச்சு உந்தி பல தழை நடுவே
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே

#256
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட
ஒரு கையால் ஒருவன்-தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே

#257
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய் குழல் ஊதிஊதி
கன்றுகள் மேய்த்து தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே

#258
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின்
மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே

#259
சிந்துரம் இலங்க தன் திருநெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும்
அந்தரம் முழவ தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்துவைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ

#260
சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ
நீல நல் நறும் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
கோல செந்தாமரை கண் மிளிர குழல் ஊதி இசை பாடி குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே

#261
சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால்
அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை-தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே

#262
வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு தீம் குழல் வாய்மடுத்து ஊதிஊதி
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே

#263
விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே
கண்ணன் காலி பின்னே எழுந்தருள கண்டு இள ஆய் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே

#264
அட்டு குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க
பொட்ட துற்றி மாரி பகை புணர்த்த பொரு மா கடல்_வண்ணன் பொறுத்த மலை
வட்ட தடம் கண் மட மான் கன்றினை வலைவாய் பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டை தலை பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#265
வழு ஒன்றும் இலா செய்கை வானவர்_கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்று பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவியிடை கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#266
அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி
எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை
தம்மை சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்-மின் என்று
கொம்மை புய குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#267
கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல்
அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப்பட நீர் முகந்து ஏறி எங்கும்
குடவாய் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#268
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கு-மின் என்பவன் போல்
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கான களி யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#269
செப்பாடு உடைய திருமால் அவன்-தன் செந்தாமரை கைவிரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்து கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#270
படங்கள் பலவும் உடை பாம்பு அரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல்
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான்
அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை
குடம் கை கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#271
சல மா முகில் பல் கண போர்க்களத்து சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#272
வன் பேய் முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான்
முன்பே வழி காட்ட முசு கணங்கள் முதுகில் பெய்து தம்முடை குட்டன்களை
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#273
கொடி ஏறு செந்தாமரை கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில
வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணி_வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடி ஏறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போல எங்கும்
குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே

#274
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடை மேல்
திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் நன்கு உடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே

#275
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்காள் இது ஓர் அற்புதம் கேளீர்
தூ வலம்புரி உடைய திருமால் தூய வாயில் குழல் ஓசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலை ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே

#276
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது
மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே

#277
வான் இளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்த
கோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது
வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப
தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே

#278
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்ப பூடுகள் அடங்க உழக்கி
கானகம் படி உலாவிஉலாவி கரும் சிறுக்கன் குழல் ஊதின-போது
மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே

#279
முன் நரசிங்கம்-அது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ_உலகில்
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க
நன் நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே

#280
செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இ நாள் குழல் ஊத கேட்டவர்கள் இடருற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே

#281
புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே

#282
சிறு விரல்கள் தடவி பரிமாற செம் கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே

#283
திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல் ஓசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே

#284
கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அரும் கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின-போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே

#285
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்து கொழித்து இழிந்த அமுத புனல்-தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே

#286
ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்
கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே

#287
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில
சாய்வு இலாத குறும் தலை சில பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே

#288
பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள்
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை
சங்கை ஆகி என் உள்ளம் நாள்-தொறும் தட்டுளுப்பாகின்றதே

#289
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண்மகளை எள்கி
தோழிமார் பலர் கொண்டுபோய் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே

#290
நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள்
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை
பாடி காவல் இடு-மின் என்றுஎன்று பார் தடுமாறினதே

#291
பட்டம் கட்டி பொன் தோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும்
இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்
பொட்ட போய் புறப்பட்டு நின்று இவள் பூவை பூவண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே

#292
பேசவும் தரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள்
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாச வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே

#293
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வை செ வாய் திருத்தும்
தேறித்தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே

#294
கைத்தலத்து உள்ள மாடு அழிய கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய் தலை எழு நாற்று போல் அவன் செய்வன செய்துகொள்ள
மை தட முகில்_வண்ணன் பக்கல் வளரவிடு-மின்களே

#295
பெரு பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள்
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப்படுத்து இடு-மின் இவளை உலகளந்தான்-இடைக்கே

#296
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாய் உரை செய்ததனை
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே

#297
நல்லது ஓர் தாமரை பொய்கை நாள்மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்-கொலோ

#298
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறை கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே கன்னி இருந்தாளை கொண்டு
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சு-கொல் ஆயிடும்-கொலோ

#299
குமரி மணம் செய்துகொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி
அமரர் பதி உடை தேவி அரசாணியை வழிபட்டு
துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும்-கொலோ

#300
ஒரு மகள்-தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டு புறம் செய்யும்-கொலோ

#301
தம் மாமன் நந்தகோபாலன் தழீஇ கொண்டு என் மகள்-தன்னை
செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செ வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும் பணை தோள்களும் கண்டிட்டு
இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ

#302
வேடர் மற குலம் போலே வேண்டிற்று செய்து என் மகளை
கூடிய கூட்டமே ஆக கொண்டு குடி வாழும்-கொலோ
நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து
சாடு இற பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றும்-கொலோ

#303
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை
பண்ட பழிப்புக்கள் சொல்லி பரிசு அற ஆண்டிடும்-கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவல பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்கும்-கொலோ

#304
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க இளைத்துஇளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கி கை தழும்பு ஏறிடும்-கொலோ

#305
வெள் நிற தோய் தயிர்-தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து கடையவும்தான் வல்லள்-கொலோ
ஒள் நிற தாமரை செம் கண் உலகளந்தான் என் மகளை
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ

#306
மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம்
தாய் அவள் சொல்லிய சொல்லை தண் புதுவை_பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளரே

#307
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன் நாத புள்ளால் வலிய பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற

#308
என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி
முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான்
தன் வில்லின் வன்மையை பாடி பற தாசரதி தன்மையை பாடி பற

#309
உருப்பிணி நங்கையை தேர் ஏற்றிக்கொண்டு
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர்வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையை
சிரைத்திட்டான் வன்மையை பாடி பற தேவகி சிங்கத்தை பாடி பற

#310
மாற்றுத்தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்று தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற

#311
பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற

#312
முடி ஒன்றி மூ_உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற

#313
காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டு அவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற

#314
தார்க்கு இளம் தம்பிக்கு அரசு இந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கு இடை
சூர்ப்பணகாவை செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற

#315
மாய சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினை பாடி பற ஆநிரை மேய்த்தானை பாடி பற

#316
கார் ஆர் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈத்த
ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற

#317
நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே

#318
நெறிந்த கரும் குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடி சனகன் சிலை இறுத்து நினை கொணர்ந்தது
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க
செறிந்த சிலை கொடு தவத்தை சிதைத்ததும் ஓர் அடையாளம்

#319
அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர் கண் மட மானே
எல்லி அம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்

#320
கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய
குல குமரா காடு உறைய போ என்று விடைகொடுப்ப
இலக்குமணன்-தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம்

#321
வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை-தன்னில்
சீர் அணிந்து தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்

#322
மாம் அமரும் மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த காலத்து
தேன் அமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து இருப்ப
பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம்

#323
சித்திரகூடத்து இருப்ப சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்

#324
மின் ஒத்த நுண் இடையாய் மெய் அடியேன் விண்ணப்பம்
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்

#325
மை தகு மா மலர் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானர_கோன் உடன் இருந்து நினை தேட
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே

#326
திக்கு நிறை புகழாளன் தீ வேள்வி சென்ற நாள்
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர் குழலாள் சீதையுமே

#327
வார் ஆரும் முலை மடவாள் வைதேவி-தனை கண்டு
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பார் ஆரும் புகழ் புதுவை_பட்டர்பிரான் பாடல் வல்லார்
ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே

#328
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர்

#329
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகி கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் சனகராசன்-தன் வேள்வியில் கண்டார் உளர்

#330
கொலை யானை கொம்பு பறித்து கூடலர் சேனை பொருது அழிய
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கு இனம் தாங்கி சென்று தட வரை கொண்டு அடைப்ப
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தை கண்டார் உளர்

#331
தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாய குழவி-அதனை நாடுறில் வம்-மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மட மகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும்
வீய பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர்

#332
நீர் ஏறு செம் சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலிய பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றி சேனை நடுவு போர்செய்ய சிக்கென கண்டார் உளர்

#333
பொல்லா வடிவு உடை பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் ஏறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானை கண்டார் உளர்

#334
வெள்ளை விளி சங்கு வெம் சுடர் திருச்சக்கரம் ஏந்து கையன்
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன்
வெள்ளை புரவி குரக்கு வெல் கொடி தேர் மிசை முன்பு நின்று
கள்ள படை துணை ஆகி பாரதம் கைசெய்ய கண்டார் உளர்

#335
நாழிகை கூறு இட்டு காத்து நின்ற அரசர்கள்-தம் முகப்பே
நாழிகை போக படை பொருதவன் தேவகி-தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயத்திரதன் தலையை
பாழில் உருள படை பொருதவன் பக்கமே கண்டார் உளர்

#336
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ண கரும் குழல் மாதரோடு மணந்தானை கண்டார் உளர்

#337
கரிய முகில் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை
திருவில் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே

#338
அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ்படுத்து குலவிளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே

#339
வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லாநிற்கும் சீர் தென் திருமாலிருஞ்சோலையே

#340
தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை
அ கான் நெறியை மாற்றும் தண் திருமாலிருஞ்சோலையே

#341
ஆன் ஆயர் கூடி அமைத்த விழவை அமரர்-தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்து செய்தான் மலை
வான் நாட்டில்-நின்று மா மலர் கற்பக தொத்து இழி
தேனாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே

#342
ஒரு வாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்-தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓட கடல்_வண்ணன்
திருவாணை கூற திரியும் தண் திருமாலிருஞ்சோலையே

#343
ஏவிற்று செய்வான் என்று எதிர்ந்துவந்த மல்லரை
சாவ தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத்தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ்சோலையே

#344
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல்
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை
கொல் நவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென்கூடல் கோன்
தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ்சோலையே

#345
குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறு காலை பாடும் தென் திருமாலிருஞ்சோலையே

#346
சிந்த புடைத்து செம் குருதி கொண்டு பூதங்கள்
அந்தி பலிகொடுத்து ஆவத்தனம் செய் அப்பன் மலை
இந்திரகோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான்
சிந்தும் புறவில் தென் திருமாலிருஞ்சோலையே

#347
எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை
பட்டி பிடிகள் பகடு உரிஞ்சி சென்று மாலைவாய்
தெட்டி திளைக்கும் தென் திருமாலிருஞ்சோலையே

#348
மருத பொழில் அணி மாலிருஞ்சோலை மலை-தன்னை
கருதி உறைகின்ற கார் கடல்_வண்ணன் அம்மான்-தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழல் இணை காண்பார்களே

#349
உருப்பிணி நங்கை-தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடி சென்ற
உருப்பனை ஓட்டி கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை
பொருப்பிடை கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ்சோலை அதே

#350
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை
செம் சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ்சோலை அதே

#351
மன்னு நரகன்-தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர்-தம்மை கவர்ந்த கடல்_வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ்சோலை அதே

#352
மாவலி-தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலை கட்டழித்த தனி காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி
பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ்சோலை அதே

#353
பலபல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன்-தன்னை
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ்சோலை அதே

#354
பாண்டவர்-தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ்சோலை அதே

#355
கனம் குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர்-தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ்சோலை அதே

#356
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய் கோட்டம் தவிர்த்து உகந்த
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை அதே

#357
கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடு விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று
ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை அதே

#358
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக
ஆயிரம் பைம் தலைய அனந்தசயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை மாலிருஞ்சோலை அதே

#359
மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி-தன்னை நால்வேத கடல் அமுதை
மேல் இரும் கற்பகத்தை வேதாந்த விழு பொருளின்
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே

#360
நா அகாரியம் சொல் இலாதவர் நாள்-தொறும் விருந்தோம்புவார்
தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அ
பாவகாரிகளை படைத்தவன் எங்ஙனம் படைத்தான்-கொலோ

#361
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய்
செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்
துற்றி ஏழ்_உலகு உண்ட தூ மணி_வண்ணன்-தன்னை தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினை பெருநோய் செய்வான் பிறந்தார்களே

#362
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர் திருமாலவன் திருநாமங்கள்
எண்ண கண்ட விரல்களால் இறைப்போதும் எண்ணகிலாது போய்
உண்ண கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்களே

#363
உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள்
நிரை கணம் பரந்து ஏறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர்
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம்-கொலோ

#364
ஆமையின் முதுகத்திடை குதிகொண்டு தூ மலர் சாடி போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லைத் திணி-மினே

#365
பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய
பாத தூளி படுதலால் இ உலகம் பாக்கியம் செய்ததே

#366
குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று கூடி ஆடி விழாச்செய்து
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்
கரும் தட முகில்_வண்ணனை கடைக்கொண்டு கைதொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எ தவங்கள் செய்தார்-கொலோ

#367
நளிர்ந்த சீலன் நயாசலன் அபிமானதுங்கனை நாள்-தொறும்
தெளிந்த செல்வனை சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ளகிலார்களே

#368
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொன் ஆர் மதில் சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களை கண்ட-கால்
எம்பிரான்-தன் சின்னங்கள் இவர்இவர் என்று ஆசைகள் தீர்வனே

#369
காசின் வாய் கரம் விற்கிலும் கரவாது மாற்று இலி சோறு இட்டு
தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியார்கள் எம்-தம்மை விற்கவும் பெறுவார்களே

#370
சீத நீர் புடை சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றி திரிவாரையும்
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல்
ஏதம் இன்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்கு ஆளரே

#371
ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாச வார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லை-கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே

#372
சீயினால் செறிந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பு இருந்து எங்கும்
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம்
வாயினால் நமோ_நாரணா என்று மத்தகத்திடை கைகளை கூப்பி
போயினால் பின்னை இ திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே

#373
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்னம்
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே

#374
மேல் எழுந்தது ஓர் வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி
காலும் கையும் விதிர்விதிர்த்து ஏறி கண் உறக்கம்-அது ஆவதன் முன்னம்
மூலம் ஆகிய ஒற்றை_எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி
வேலை_வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலும் ஆமே

#375
மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவழி வார கண்டம் அடைப்ப கண் உறக்கம்-அது ஆவதன் முன்னம்
தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார்
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே

#376
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம்
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில்
தங்க விட்டுவைத்து ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே

#377
தென்னவன் தமர் செப்பம் இலாதார் சே அதக்குவார் போல புகுந்து
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம்
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே

#378
கூடிக்கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து
பாடிப்பாடி ஓர் பாடையில் இட்டு நரி படைக்கு ஒரு பாகுடம் போலே
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே

#379
வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழி கண்கள் மிழற்ற
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற
தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண்மாலொடும் சிக்கென சுற்ற
மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே

#380
செத்துப்போவது ஓர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல்
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன்
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே

#381
காசும் கறை உடை கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்த பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

#382
அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால்
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்த-கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

#383
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேரிட்டீர்
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே
நச்சு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

#384
மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால்
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

#385
மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலம் உடை ஊத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால்
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

#386
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்கதே
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

#387
மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிட பேரிட்டு அங்கு
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கரு முகில்_வண்ணன் நாமமே
நண்ணு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

#388
நம்பி பிம்பி என்று நாட்டு மானிட பேரிட்டால்
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப்போம்
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

#389
ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திர பிள்ளையை என் முகில்_வண்ணன் பேரிட்டு
கோத்து குழைத்து குணாலம் ஆடி திரி-மினோ
நா தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

#390
சீர் அணி மால் திருநாமமே இட தேற்றிய
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல்
ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே

#391
தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே

#392
சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ் வாய் சந்திரன் வெம் கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாரணன் பாத துழாயும்
கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே

#393
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே

#394
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட
சுமை உடை பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே

#395
உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே

#396
தலைப்பெய்து குமுறி சலம் பொதி மேகம் சலசல பொழிந்திட கண்டு
மலை பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே

#397
வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி
மல் பொருது எழ பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே

#398
திரை பொரு கடல் சூழ் திண் மதில் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய்
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்வி புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே

#399
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை
தட வரை அதிர தரணி விண்டு இடிய தலைப்பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே

#400
மூன்றெழுத்து-அதனை மூன்றெழுத்து-அதனால் மூன்றெழுத்து ஆக்கி மூன்றெழுத்தை
ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன் இருக்கை
மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே

#401
பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்து உறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று
தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா உடையார்க்கு
கங்கையில் திருமால் கழல் இணை கீழே குளித்திருந்த கணக்கு ஆமே

#402
மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான் ஊர்
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே

#403
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பன் ஊர்
மறை பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே

#404
மருமகன்-தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குருமுகமாய் காத்தான் ஊர்
திருமுகமாய் செங்கமலம் திரு நிறமாய் கருங்குவளை
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே

#405
கூன் தொழுத்தை சிதகு உரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தான் ஊர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே

#406
பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்க பொருது அழித்து இ உலகினை கண்பெறுத்தான் ஊர்
குருவு அரும்ப கோங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே

#407
கீழ்_உலகில் அசுரர்களை கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர்
தாழை மடல் ஊடு உரிஞ்சி தவள வண்ண பொடி அணிந்து
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே

#408
கொழுப்பு உடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறிய
பிழக்கு உடைய அசுரர்களை பிணம்படுத்த பெருமான் ஊர்
தழுப்பு அரிய சந்தனங்கள் தட வரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே

#409
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை_இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர்
எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே

#410
குன்று ஆடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல்
நின்று ஆடு கண மயில் போல் நிறம் உடைய நெடுமால் ஊர்
குன்று ஊடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி
மன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே

#411
பரு வரங்கள் அவை பற்றி படை ஆலித்து எழுந்தானை
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல்
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு
இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே

#412
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்துப்போய் வானோர் வாழ
செரு உடைய திசை கருமம் திருத்தி வந்து உலகு ஆண்ட திருமால் கோயில்
திருவடி-தன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உரு உடைய மலர் நீலம் காற்று ஆட்ட ஓசலிக்கும் ஒளி அரங்கமே

#413
தன் அடியார் திறத்தகத்து தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்கு ஆள் ஆவரே

#414
கருள் உடைய பொழில் மருதும் கத களிறும் பிலம்பனையும் கடிய மாவும்
உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடையவிட்டு ஓசை கேட்டான்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்து ஊடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே

#415
பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை என்னும்
அதில் நாயகர் ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள்மலர் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே

#416
ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
சேமம் உடை நாரதனார் சென்றுசென்று துதித்து இறைஞ்ச கிடந்தான் கோயில்
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே

#417
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி
உத்தரை-தன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே

#418
குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பு அதக்கி அரசு வாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில்
எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய்
சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே

#419
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றி
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலைவணக்கும் தண் அரங்கமே

#420
தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூ உருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசலாடி
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே

#421
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செரு செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழு கையாளன்
இரவு ஆளன் பகல் ஆளன் என்னை ஆளன் ஏழ்_உலக பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே

#422
கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழி படை உடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே

#423
துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே
ஒப்பிலேனாகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே

#424
சாம் இடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கரம் ஏந்தினானே
நா மடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே

#425
எல்லையில் வாசல் குறுக சென்றால் எற்றி நமன் தமர் பற்றும்-போது
நில்லு-மின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம்-போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னை குறிக்கொண்டு என்றும்
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே

#426
ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி மூன்றெழுத்து ஆய முதல்வனே ஓ
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே

#427
பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே

#428
தண்ணென இல்லை நமன் தமர்கள் சால கொடுமைகள் செய்யாநிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்
எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே

#429
செஞ்சொல் மறைப்பொருள் ஆகிநின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா
வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னை பற்றும்-போது
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே

#430
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகே என்று மோதும்-போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
வான் ஏய் வானவர்-தங்கள் ஈசா மதுரை பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே

#431
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே

#432
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே

#433
வாக்கு தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருள கொடியானே

#434
சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய் ஊழி ஏழ்_உலகு உண்டு உமிழ்ந்தானே

#435
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ_நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே

#436
நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
அடிமை என்னும் அ கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்தவன் தளை கோள் விடுத்தானே

#437
தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன் அடி கீழே வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே

#438
கண்ணா நான்முகனை படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ_நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே

#439
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாம்-கொல் என்று ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோர துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னை தத்துறுமாறே

#440
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே
எண்ணுவார் இடரை களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள்-தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே

#441
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கம்-அது ஆனாய்
உம்பர்_கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலை கடைந்தானே
எம்பிரான் என்னை ஆள் உடை தேனே ஏழையேன் இடரை களையாயே

#442
காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன்
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே

#443
நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்ய போ-மின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார்
பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே

#444
சித்திரகுத்தன் எழுத்தால் தென்புல_கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவர் ஓடி ஒளித்தார்
முத்து திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே

#445
வயிற்றில் தொழுவை பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கு ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை
பயிற்றி பணிசெய்ய கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே

#446
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின்
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்ய போ-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே

#447
மாணி குறள் உரு ஆய மாயனை என் மனத்துள்ளே
பேணி கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன் பிறிது இன்றி
மாணிக்க பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்கள் உள்ளீர்
பாணிக்க வேண்டா நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே

#448
உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்-மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே

#449
கொங்கை சிறு வரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை
வங்க கடல்_வண்ணன் அம்மான் வல்வினை ஆயின மாற்றி
பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே

#450
ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே
பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து
போது இல் கமலவன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னி திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே

#451
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளியறை குறிக்கொள்-மின்

#452
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே

#453
துக்க சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அற பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ
மக்கள் அறுவரை கல்லிடைமோத இழந்தவள்-தன் வயிற்றில்
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய்

#454
வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடை திருமாலிருஞ்சோலை எந்தாய்

#455
உனக்கு பணிசெய்திருக்கும் தவம் உடையேன் இனி போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று
இன குறவர் புதியது உண்ணும் எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய்

#456
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீர் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர் பொய் சுற்றம் பேசி சென்று
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய்

#457
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா
மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை வாழ தலைப்பெய்திட்டேன்
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய்

#458
எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி_வண்ணா மறுபிறவி தவிர
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய்

#459
அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய்
சக்கரமும் தட கைகளும் கண்களும் பீதக ஆடையொடும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் திருமாலிருஞ்சோலை எந்தாய்

#460
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே
இத்தனை காலமும் போய் கிறிப்பட்டேன் இனி உன்னை போகல் ஒட்டேன்
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரை கெடுத்தாய்
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய்

#461
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போகவிடுவதுண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திருச்சக்கரம்-அதனால்
தென்றி திசைதிசை வீழ செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய்

#462
சென்று உலகம் குடைந்தாடும் சுனை திருமாலிருஞ்சோலை-தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே

#463
சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே

#464
பறவை ஏறு பரம்புருடா நீ என்னை கைக்கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவ காடு தீ கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே

#465
எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே
நின்னுளேனாய் பெற்ற நன்மை இ உலகினில் ஆர் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
சும்மெனாதே கைவிட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே

#466
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல் ஆடி குறுகப்பெறா
தட வரை தோள் சக்கரபாணீ சார்ங்க வில் சேவகனே

#467
பொன்னை கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போல்
உன்னை கொண்டு என் நாவகம்பால் மாற்று இன்றி உரைத்துக்கொண்டேன்
உன்னை கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே

#468
உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்-பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன்
மன் அடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பீ
என்னிடைவந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே

#469
பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய் என்றுஎன்று உன் வாசகமே
உரு பொலிந்த நாவினேனை உனக்கு உரித்தாக்கினையே

#470
அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே

#471
பனி கடலில் பள்ளி கோளை பழகவிட்டு ஓடிவந்து என்
மன கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ
தனி கடலே தனி சுடரே தனி உலகே என்றுஎன்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே

#472
தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போல்
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பி
வட தடமும் வைகுந்தமும் மதில் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே

#473
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில்_வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே

2.ஆண்டாள் – திருப்பாவை


#474
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போது-மினோ நேர் இழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செம் கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ படிந்து ஏலோர் எம்பாவாய்

#475
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையில் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்

#476
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயல் உகள
பூம் குவளை போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்

#477
ஆழி மழை கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்

#478
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனை துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய்

#479
புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சு உண்டு
கள்ள சகடம் கலக்கு அழிய கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்

#480
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய்

#481
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடி பறை கொண்டு
மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதிதேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்

#482
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
தூமம் கமழ துயில் அணை மேல் கண்வளரும்
மாமான் மகளே மணி கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏம பெரும் துயில் மந்திர பட்டாளோ
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்

#483
நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்ற பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின்வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய்

#484
கற்று கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழிய சென்று செரு செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்-தம் பொன்_கொடியே
புற்றரவு அல்குல் புன மயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்_வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்

#485
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நல் செல்வன் தங்காய்
பனி தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கை_கோமானை செற்ற
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய்

#486
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளி களைந்தானை கீர்த்திமை பாடி போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போது அரி கண்ணினாய்
குள்ள குளிர குடைந்து நீராடாதே
பள்ளி கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய்

#487
உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற்பொடி கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன்
பங்கய கண்ணானை பாடு ஏலோர் எம்பாவாய்

#488
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன்-மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனை பாடு ஏலோர் எம்பாவாய்

#489
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணி கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி_வண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழ பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலை கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய்

#490
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொன் கழல் அடி செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உகந்து ஏலோர் எம்பாவாய்

#491
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி
பந்தர் மேல் பல்-கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரை கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்

#492
குத்துவிளக்கு எரிய கோட்டு கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்து அலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மை தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்

#493
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலை செ வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்

#494
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல்-கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்

#495
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணிவாய் செய்த தாமரை பூ போலே
செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தால் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்

#496
மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
போதருமா போலே நீ பூவை பூ_வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்

#497
அன்று இ உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்ற சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றுஎன்று உன் சேவகமே ஏத்தி பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்

#498
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகி தான் தீங்கு நினைந்த
கருத்தை பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திரு தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்

#499
மாலே மணி_வண்ணா மார்கழி நீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய்

#500
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை
பாடி பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவி பூவே
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்

#501
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலத்து உன்தன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்

#502
சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்

#503
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி
அங்கு பறைகொண்ட ஆற்றை அணி புதுவை
பைம் கமல தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்க தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இ பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செம் கண் திருமுகத்து செல்வ திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி


#504
தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவும் ஆம்-கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே

#505
வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லா சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா
கள் அவிழ் பூம் கணை தொடுத்துக்கொண்டு கடல்_வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே

#506
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போதும் உன் அடி வணங்கி
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி
வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே

#507
சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நல் கொடிக்களும் துரங்கங்களும்
கவரி பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டி தந்தேன் கண்டாய் காமதேவா
அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே

#508
வானிடை வாழும் அ வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

#509
உருவு உடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களை கொண்டு வைகல்
தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கரு உடை முகில்_வண்ணன் காயா_வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ண
திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய்

#510
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து
வாய் உடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம்
சாய் உடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலை புகழ் தரக்கிற்றியே

#511
மாசு உடை உடம்பொடு தலை உலறி வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு
தேசு உடை திறல் உடை காமதேவா நோற்கின்ற நோன்பினை குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையை தலை உடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய்

#512
தொழுது முப்போதும் உன் அடி வணங்கி தூ மலர் தூய் தொழுது ஏத்துகின்றேன்
பழுது இன்றி பாற்கடல்_வண்ணனுக்கே பணி செய்து வாழ பெறாவிடில் நான்
அழுதுஅழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டம் இன்றி துரந்தால் ஒக்குமே

#513
கருப்பு வில் மலர் கணை காமவேளை கழல் இணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே

#514
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகன் ஆக பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

#515
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இ சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம்-தன்னை தணிகிடாய்
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே

#516
குண்டு நீர் உறை கோளரீ மத யானை கோள் விடுத்தாய் உன்னை
கண்டு மால் உறுவோங்களை கடைக்கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளை கைகளால் சிரமப்பட்டோம்
தெண் திரை கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

#517
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம்தான்-கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரை கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

#518
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே

#519
முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள்-தொறும்
சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையை பூசல் ஆக்கிய சேவகா எம்மை வாதியேல்

#520
பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஓத மா கடல்_வண்ணா உன் மணவாட்டிமாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

#521
வட்ட வாய் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களை சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்_வண்ணனே

#522
முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டி புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார்

#523
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலை சொல்லை
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன்
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே

#524
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலை பணித்தருளாயே

#525
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல்
குதிகொண்டு அரவில் நடித்தாய் குருந்திடை கூறை பணியாய்

#526
எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூம் குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய் வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டை பணித்தருளாயே

#527
பரக்க விழித்து எங்கும் நோக்கி பலர் குடைந்து ஆடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய்

#528
காலை கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலை பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ
கோல சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறியிராதே
கோலம் கரிய பிரானே குருந்திடை கூறை பணியாய்

#529
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ
விட தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே

#530
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே உடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டை பூம் குருந்து ஏறியிராதே

#531
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூ மலர் கண்கள் வளர தொல்லை இரா துயில்வானே
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே குருந்திடை கூறை பணியாய்

#532
கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்ய போந்தாய் நின்ற இ கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சக பேய்ச்சி-பால் உண்ட மசிமையிலீ கூறை தாராய்

#533
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே

#534
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே

#535
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும்
கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே

#536
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆ_மகன் அணி வாள் நுதல் தேவகி
மா மகன் மிகு சீர் வசுதேவர்-தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே

#537
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பு ஏறி புக பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே

#538
மாட மாளிகை சூழ் மதுரை பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே

#539
அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரை பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே

#540
அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே

#541
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
மேவலன் விரை சூழ் துவராபதி
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே

#542
கொண்ட கோல குறள் உருவாய் சென்று
பண்டு மாவலி-தன் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே

#543
பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே

#544
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலை குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே

#545
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வர கூவாய்

#546
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உரு காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டு காணும்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வர கூவாய்

#547
மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சர மாரி
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போது அலர் காவில் புது மணம் நாற பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வர கூவாய்

#548
என்பு உருகி இன வேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்ப கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே
பொன் புரை மேனி கருள கொடி உடை புண்ணியனை வர கூவாய்

#549
மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகு_அளந்தான் வர கூவாய்

#550
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணி தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என்
தத்துவனை வர கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே

#551
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை புணர்வது ஓர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வர கூவில் நீ சால தருமம் பெறுதி

#552
சார்ங்கம் வளைய வலிக்கும் தட கை சதுரன் பொருத்தம் உடையன்
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே

#553
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வர கூவுதல் பொன் வளை கொண்டு தருதல்
இங்கு உள்ள காவினில் வாழ கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும்

#554
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்

#555
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற என் கடல்_வண்ணனை கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணுறு நான்மறையோர் புதுவை_மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே

#556
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும்
தோரணம் நாட்ட கனா கண்டேன் தோழீ நான்

#557
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத கனா கண்டேன் தோழீ நான்

#558
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திர கோடி உடுத்தி மண மாலை
அந்தரி சூட்ட கனா கண்டேன் தோழீ நான்

#559
நால் திசை தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூ புனை கண்ணி புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்ட கனா கண்டேன் தோழீ நான்

#560
கதிர் ஒளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிர புகுத கனா கண்டேன் தோழீ நான்

#561
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை
கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழீ நான்

#562
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்து பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழீ நான்

#563
இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழீ நான்

#564
வரி சிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்ட கனா கண்டேன் தோழீ நான்

#565
குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மா மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனமாட்ட கனா கண்டேன் தோழீ நான்

#566
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே

#567
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திரு பவள செ வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே

#568
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தல
திடரில் குடியேறி தீய அசுரர்
நடலை பட முழங்கும் தோற்றத்தாய் நல் சங்கே

#569
தட வரையின் மீதே சரற்கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோல பெரும் சங்கே

#570
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே

#571
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே

#572
போய் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறி குடிகொண்டு
சேய் தீர்த்தமாய் நின்ற செங்கண்மால்-தன்னுடைய
வாய் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே

#573
செங்கமல நாள்மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செம் கண் கரு மேனி வாசுதேவனுடைய
அங்கை தலம் ஏறி அன்ன வசம் செய்யும்
சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே

#574
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல்_வண்ணன் கைத்தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே

#575
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்ட-கால்
சிதையாரோ உன்னோடு செல்வ பெரும் சங்கே

#576
பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே

#577
விண் நீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலை குவட்டில் துளி சோர சோர்வேனை
பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே

#578
மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்து
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காம_தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடை கங்குல்
ஏமத்து ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே

#579
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழிய போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே

#580
மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்து
தன் ஆக திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என் ஆகத்து இளம் கொங்கை விரும்பி தாம் நாள்-தோறும்
பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்பு-மினே

#581
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்து
தேன் கொண்ட மலர் சிதற திரண்டு ஏறி பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்று-மினே

#582
சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறி பொழிவீர்காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலிய புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்பு-மினே

#583
சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்து
செங்கண்மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே

#584
கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் வேங்கடத்து
போர் காலத்து எழுந்தருளி பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்தருளாரே

#585
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தை
பதியாக வாழ்வீர்காள் பாம்பு_அணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண்_கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே

#586
நாகத்தின்_அணையானை நல் நுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கட_கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்_கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே

#587
சிந்துர செம் பொடி போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று மதுர கொழும் சாறு கொண்ட
சுந்தர தோளுடையான் சுழலையின்-நின்று உய்தும்-கொலோ

#588
போர் களிறு பொரும் மாலிருஞ்சோலை அம் பூம் புறவில்
தார் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார் கொள் பிடாக்கள் நின்று கழறி சிரிக்க தரியேன்
ஆர்க்கு இடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே

#589
கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு ஒளி காட்டுகின்றீர் எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி
வரி வளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே

#590
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள்
வம்ப களங்கனிகாள் வண்ண பூவை நறு மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே

#591
துங்க மலர் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
செம் கண் கரு முகிலின் திருவுரு போல் மலர் மேல்
தொங்கிய வண்டு இனங்காள் தொகு பூம் சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்று-மினே

#592
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும்-கொலோ

#593
இன்று வந்து இத்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான்
ஒன்று நூறாயிரமா கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே

#594
காலை எழுந்திருந்து கரிய குருவி கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை-கொலோ
சோலைமலை பெருமான் துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலை பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே

#595
கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூம் கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
சார்ங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று-கொலோ

#596
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்து இழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பு ஆர் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே

#597
கார் கோடல் பூக்காள் கார் கடல்_வண்ணன் என் மேல் உம்மை
போர் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான்
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய்
தார்க்கு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ

#598
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெம் சுடர் போல சுடாது எம்மை
மாற்றோலை பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே

#599
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர்-தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றி பாம்பு_அணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டு உள ஆய்த்து நாணிலியேனுக்கே

#600
முல்லை பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே

#601
பாடும் குயில்காள் ஈது என்ன பாடல் நல் வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடு-மின்
ஆடும் கருள கொடி உடையார் வந்து அருள்செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே

#602
கண மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன்
பணம் ஆடு அரவணை பற்பல காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்-மினே

#603
நடம் ஆடி தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடம் ஆட்டம் காண பாவியேன் நான் ஓர் முதல் இலேன்
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை
உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே

#604
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற
அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட
தழுவ நின்று என்னை ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே

#605
கடலே கடலே உன்னை கடைந்து கலக்கு உறுத்து
உடலுள் புகுந்துநின்ற ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகள் எல்லாம் நாக_அணைக்கே சென்று உரைத்தியே

#606
நல்ல என் தோழி நாக_அணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே

#607
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும் ஏந்து இழையீர்
தீ முகத்து நாக_அணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

#608
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமல பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே

#609
பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும்
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்க செல்வனார்
எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே

#610
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சை குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை உடையரேல் இ தெருவே போதாரே

#611
பொல்லா குறள் உருவாய் பொன் கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாக_அணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே

#612
கை பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர்
செய் புரள ஓடும் திருவரங்க செல்வனார்
எ பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே

#613
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து
பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்
திண்ணார் மதில் சூழ் திருவரங்க செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே

#614
பாசி தூர்த்த கிடந்த பார் மகட்கு பண்டு ஒரு நாள்
மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலா பன்றி ஆம்
தேசு உடைய தேவர் திருவரங்க செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

#615
கண்ணாலம் கோடித்து கன்னி-தன்னை கைப்பிடிப்பான்
திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கைப்பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே

#616
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே

#617
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய் பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி
மல் பொருந்தாமல் களம் அடைந்த மதுரை புறத்து என்னை உய்த்திடு-மின்

#618
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகு அளந்த மாயனை காணில் தலைமறியும்
ஆணையால் நீர் என்னை காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடு-மின்

#619
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்க தனிவழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னை பழி காப்பு அரிது மாயவன் வந்து உரு காட்டுகின்றான்
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருள்-கண் என்னை உய்த்திடு-மின்

#620
அங்கை தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்து அன்றி விழியேன் என்று
செம் கச்சு கொண்டு கண் ஆடை ஆர்த்து சிறு மானிடவரை காணில் நாணும்
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனை கரைக்கு என்னை உய்த்திடு-மின்

#621
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே
கார் கடல்_வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவ தீரும்
நீர் கரை நின்ற கடம்பை ஏறி காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடு-மின்

#622
கார் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்-போது ஈது என்று
பார்த்திருந்து நெடு நோக்கு கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடு-மின்

#623
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணலுறாமையும் உள் மெலிவும் ஓத_நீர்_வண்ணன் என்பான் ஒருவன்
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின்

#624
கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான்
பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு-கொலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகள் உய்ய மழை தடுத்து
கொற்ற குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடு-மின்

#625
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்ட கொடாது செறுப்பனாகில் உலகு_அளந்தான் என்று உயர கூவும்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடு-மின்

#626
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதி-தன் அளவும்
தன்னை தமர் உய்த்து பெய்ய வேண்டி தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே

#627
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகி கிடப்பேனை
புண்ணில் புளி பெய்தால் போல புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே

#628
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய்தால் போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்த்து ஆயனாய் குடந்தை கிடந்த குடம் ஆடி
நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே

#629
கஞ்சை காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறை கோலால்
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே

#630
ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே

#631
அழிலும் தொழிலும் உரு காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுசி புகுந்து என்னை சுற்றி சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரை பின்னே நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர் கொண்டு குளிர முகத்து தடவீரே

#632
நடை ஒன்று இல்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக்கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே

#633
வெற்றி கருள கொடியான்-தன் மீமீது ஆடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றம் அற்ற முலை-தன்னை குமரன் கோல பணை தோளோடு
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கி கட்டீரே

#634
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளி குறும்பனை கோவர்த்தனனை கண்ட-கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத கொங்கை-தன்னை கிழங்கோடும்
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே

#635
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என்
செம்மை உடைய திருமார்வில் சேர்த்தானேனும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே

#636
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லை தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும்
சொல்லை துதிக்க வல்லார்கள் துன்ப கடலுள் துவளாரே

#637
பட்டி மேய்ந்து ஓர் கார் ஏறு பலதேவற்கு ஓர் கீழ் கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி இங்கே போத கண்டீரே
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டு கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

#638
அனுங்க என்னை பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாறி குட்டேற்றை கோவர்த்தனனை கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல வன மாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

#639
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலா பொய்கள் உரைப்பானை இங்கே போத கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

#640
கார் தண் கமல கண் என்னும் நெடும் கயிறு படுத்தி என்னை
ஈர்த்து கொண்டு விளையாடும் ஈசன்-தன்னை கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாய புகர் மால் யானை கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

#641
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொள தாரா ஈசன்-தன்னை கண்டீரே
பீதக ஆடை உடை தாழ பெரும் கார் மேக கன்றே போல்
வீதி ஆர வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

#642
தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியை கண்டீரே
உருவு கரிதாய் முகம் சேய்தாய் உதய பருப்பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே

#643
பொருத்தம் உடைய நம்பியை புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தை பிழைத்து நின்ற அ கரு மா முகிலை கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆர பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

#644
வெளிய சங்கு ஒன்று உடையானை பீதக ஆடை உடையானை
அளி நன்கு உடைய திருமாலை ஆழியானை கண்டீரே
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

#645
நாட்டை படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டை பண்ணி விளையாடும் விமலன்-தன்னை கண்டீரே
காட்டை நாடி தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

#646
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்து கொண்டு வாழ்வார்கள்
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே

3.குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி

#647
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொள்ளும்
கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே

#648
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செம் தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று-கொலோ வாழ்த்தும் நாளே

#649
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே

#650
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அ தமிழின் இன்ப
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே

#651
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்ப தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே

#652
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி கண்வளரும் கடல்_வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்று-கொலோ உருகும் நாளே

#653
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று-கொலோ நிற்கும் நாளே

#654
கோல் ஆர்ந்த நெடும் சார்ங்கம் கூனல் சங்கம் கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல்வினையேன் என்று-கொலோ வாழும் நாளே

#655
தூராத மன காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழவு ஓசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
போர் ஆழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று-கொலோ புரளும் நாளே

#656
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே

#657
திடர் விளங்கு கரை பொன்னி நடுவுபாட்டு திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான்-தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல்-தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர்_கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே

#658
தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ்
வாட்டம் இல் வன மாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே

#659
தோடு உலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என் ஆவதே

#660
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய்
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே

#661
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே

#662
பொய் சிலை குரல் ஏற்று எருத்தம் இறுத்த போர் அரவு ஈர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே

#663
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீது இல் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே

#664
கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண் நகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினர் ஆகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ணீர்களால்
வார நிற்பவர் தாள் இணைக்கு ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே

#665
மாலை உற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை உற்ற வரை பெரும் திருமார்வனை மலர் கண்ணனை
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை உற்றது என் நெஞ்சமே

#666
மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே

#667
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம்
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி_கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே

#668
மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ
வையம்-தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என்தன் மாலுக்கே

#669
நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என்தன் மாலுக்கே

#670
மாரனார் வரி வெம் சிலைக்கு ஆட்செய்யும்
பாரினாரொடும் கூடுவது இல்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நரகாந்தகன் பித்தனே

#671
உண்டியே உடையே உகந்து ஓடும் இ
மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்
அண்டவாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன்-தன் உன்மத்தன் காண்-மினே

#672
தீது இல் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதியாரொடும் கூடுவது இல்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அ தாமரை
பேதை மா மணவாளன்-தன் பித்தனே

#673
எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதலன்
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே

#674
எ திறத்திலும் யாரொடும் கூடும் அ
சித்தம்-தன்னை தவிர்த்தனன் செங்கண்மால்
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே

#675
பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே

#676
அங்கை ஆழி அரங்கன் அடி இணை
தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாய்
கொங்கர்_கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே

#677
ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லால்
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே

#678
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தன் சூழ
வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே

#679
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுந்த நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேங்கட_கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் ஆவேனே

#680
ஒண் பவள வேலை உலவு தன் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே

#681
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே

#682
மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொன் குவடு ஆம் அரும் தவத்தேன் ஆவேனே

#683
வான் ஆளும் மா மதி போல் வெண்குடை கீழ் மன்னவர்-தம்
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன்
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல்
கான் ஆறாய் பாயும் கருத்து உடையேன் ஆவேனே

#684
பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை ஆனான்
வெறியார் தண் சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே

#685
செடி ஆய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே

#686
உம்பர் உலகு ஆண்டு ஒரு குடை கீழ் உருப்பசி-தன்
அம் பொன் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே

#687
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான்-தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொல் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே

#688
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே

#689
கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல்
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ
கொண்டாளாயாகிலும் உன் குரை கழலே கூறுவனே

#690
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே

#691
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்-பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

#692
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பு ஏறும் மா பறவை போன்றேனே

#693
செம் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால் அலராவால்
வெம் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன்
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழையமாட்டேனே

#694
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல்
மெய் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என்
சித்தம் மிக உன்-பாலே வைப்பன் அடியேனே

#695
தொக்கு இலங்கி யாறு எல்லாம் பரந்து ஓடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே

#696
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே

#697
வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும்
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே

#698
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன்
மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே

#699
கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே

#700
கரு மலர் கூந்தல் ஒருத்தி-தன்னை கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி-தன்-பால்
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து
புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயைதானே

#701
தாய் முலை பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடையிட்டு சென்று
பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய் மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே

#702
மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே
பொன் ஒத்த ஆடை குக்கூடலிட்டு போகின்ற-போது நான் கண்டு நின்றேன்
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டு கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே

#703
மல் பொரு தோள் உடை வாசுதேவா வல்வினையேன் துயில் கொண்டவாறே
இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே

#704
பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும்
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ
செய்ய உடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ

#705
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே

#706
மங்கல நல் வன மாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே

#707
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்து ஊடி எள்கி உரைத்த உரை-அதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல்_கோமான் குலசேகரன் இன்னிசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே

#708
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புய தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழ போதகம் அன்னவன் தாலோ
ஏல வார் குழல் என் மகன் தாலோ என்றுஎன்று உன்னை என் வாயிடை நிறைய
தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில் கடை ஆயின தாயே

#709
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள் பொலியும் நீர் முகில் குழவியே போல
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே

#710
முந்தை நன்முறை அன்பு உடை மகளிர் முறைமுறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே என்தன் குல பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செம் கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே

#711
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண் கை மார்வும் திண் தோளும்
தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே

#712
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணி வாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையை போலும் வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செம் சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும்
திரு இலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே

#713
தண் அம் தாமரை கண்ணனே கண்ணா தவழ்ந்து தளர்ந்தது ஓர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே

#714
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே
எழில் கொள் நின் திருக்கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே

#715
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அ நோக்கும் அணி கொள் செம் சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே

#716
குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததுவும் குடம் ஆட்டும்
கன்றினால் விளவு எறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர
ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே

#717
வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ கரிந்து உக்க
நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து
தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயை பெற்றாயே

#718
மல்லை மாநகர்க்கு இறையவன்-தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணா தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மால் அடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே

#719
மன்னு புகழ் கௌசலை-தன் மணி வயிறு வாய்த்தவனே
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் கரு மணியே
என்னுடைய இன் அமுதே இராகவனே தாலேலோ

#720
புண்டரிக மலர்-அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே
திண் திறலாள் தாடகை-தன் உரம் உருவ சிலை வளைத்தாய்
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ

#721
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை-தன் குல மதலாய்
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கரு மணியே
எங்கள் குலத்து இன் அமுதே இராகவனே தாலேலோ

#722
தாமரை மேல் அயன்-அவனை படைத்தவனே தயரதன்-தன்
மா மதலாய் மைதிலி-தன் மணவாளா வண்டு இனங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கரு மணியே
ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ

#723
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீர் ஆளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்து அரசே
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ

#724
சுற்றம் எல்லாம் பின்தொடர தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ

#725
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கரு மணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்தி மனே தாலேலோ

#726
மலை-அதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ

#727
தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன்-தன் குல மதலாய்
வளைய ஒரு சிலை-அதனால் மதில் இலங்கை அழித்தவனே
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கரு மணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ

#728
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கரு மணியே
ஏ வரி வெம் சிலை வலவா இராகவனே தாலேலோ

#729
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே

#730
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான்
நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு
என்றாள் எம் இராமாவோ உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே உன்னை நானே

#731
வெவ்வாயேன் வெவ் உரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி
மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே

#732
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை-தன் குல மதலாய் குனி வில் ஏந்தும்
மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல் அணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் வியன் கான மரத்தின் நீழல்
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே

#733
வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன்பொருட்டா விடையோன்-தன் வில்லை செற்றாய்
மா போகு நெடும் கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய் போகாதே நிற்குமாறே

#734
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம் பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே

#735
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத்திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும் கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே

#736
பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்தல்
தூ மறையீர் இது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே

#737
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய் கைகேசி இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே

#738
முன் ஒரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே

#739
தேன் நகு மா மலர் கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள்-தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே

#740
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றா
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் தான் புலம்பிய அ புலம்பல்-தன்னை
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த
சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி-கண் செல்லார் தாமே

#741
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய கொண்ட வீரன்-தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே

#742
வந்து எதிர்ந்த தாடகை-தன் உரத்தை கீறி வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்-மின்
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே

#743
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி
வெவ் வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன்-தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே

#744
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே

#745
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன்-தன் உயிரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
தலை வணக்கி கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவம் உடைத்து தரணிதானே

#746
தனம் மருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே

#747
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே

#748
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்ய திருவயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திரள் வாய் தன் சரிதை கேட்டான் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே

#749
செறி தவ சம்புகன்-தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன்-தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே

#750
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே

#751
தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான்-தன்னை
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே

4.திருமழிசை ஆழ்வார் – திருச்சந்த விருத்தம்

#752
பூ நிலாய ஐந்துமாய் புனல்-கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே

#753
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடு ஓசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே

#754
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய்
ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே

#755
மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம்_இல் விளக்கமாய்
ஏன்று என் ஆவியுள் புகுந்தது என்-கொலோ எம் ஈசனே

#756
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள்-தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய்
அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் அல்லையே

#757
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்-கணே இயன்றதே

#758
ஒன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி வேலை ஞாலம் ஆயினாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே
ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே

#759
ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ
ஆதி ஆன வான வாணர் அந்த காலம் நீ உரைத்தி
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே

#760
தாது உலாவு கொன்றை மாலை துன்னு செம் சடை சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத_வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே

#761
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே

#762
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே

#763
உலகு-தன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு-தன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே

#764
இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடை
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே

#765
தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய்
ஆமை ஆகி ஆழ் கடல் துயின்ற ஆதி தேவ நின்
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும்
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே

#766
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணத்தலை
செம் கண் நாக_அணை கிடந்த செல்வம் மல்கு சீரினாய்
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே

#767
தலை கணம் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய்
நிலை கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும்
கலை கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்-தன் மாட்சியே

#768
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்_இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலம் கடல் கிடந்து மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என்-கொல் ஆதி தேவனே

#769
விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெம் தழல்
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அரா அணை
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்-கொல் வேலை_வண்ணனே

#770
புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்-கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய் பகை கடல் கிடத்தல் காதலித்ததே

#771
கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே

#772
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ்
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த-போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே

#773
பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலன் ஆகி ஞாலம் ஏழ்
உண்டு மண்டி ஆலிலை துயின்ற ஆதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்
புண்டரீக பாவை சேரும் மார்ப பூமிநாதனே

#774
வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊன் நிறத்து உகிர் தலம் அழுத்தினாய் உலாய சீர்
நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே

#775
கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர்
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே

#776
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே

#777
ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடு ஓசை ஊறும் ஆகி ஒன்று அலாத மாயையாய்
பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய்
காணி பேணும் மாணியாய் கரந்து சென்ற கள்வனே

#778
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசம் மேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே

#779
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன் ஊர் புக
படைக்கலம் விடுத்த பல் படை தடக்கை மாயனே

#780
பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணை கிடந்து
உரத்திலும் ஒருத்தி-தன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே

#781
வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலை துயின்ற புண்டரீகனே
தேன் அகஞ்செய் தண் நறும் மலர் துழாய் நன் மாலையாய்
கூன் அகம் புக தெறித்த கொற்ற வில்லி அல்லையே

#782
கால நேமி காலனே கணக்கு_இலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே

#783
குரக்கின படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அங்கு அரங்க வெம் சரம் துரந்த ஆதி நீ
இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே

#784
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெம் சரம் துரந்து
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய்
நல் நிறத்து ஒர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே

#785
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே

#786
அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார்
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே

#787
ஆடகத்த பூண் முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்_மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து
ஆடக கை மாதர் வாய் அமுதம் உண்டது என்-கொலோ

#788
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூம் குருந்தம்
சாய்த்து மா பிளந்த கை தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா

#789
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்_வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப கால நேமி காலனே

#790
வெற்பு எடுத்து வேலை நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ
வெற்பு எடுத்து மாரி காத்த மேக_வண்ணன் அல்லையே

#791
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆன் நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை அரி கண் மாதரார் திறத்து முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே

#792
ஆயன் ஆகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்
மாய மாய மாயை-கொல் அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே

#793
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடை
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை
ஊறு செம் குருதியால் நிறைத்த காரணம்-தனை
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே

#794
வெம் சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா
கஞ்சனை கடிந்து மண் அளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதி தேவன் அல்லையே

#795
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலும் நீர்மை பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம்
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே

#796
மண் உளாய்-கொல் விண் உளாய்-கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர்
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே

#797
தோடு பெற்ற தண் துழாய் அலங்கல் ஆடு சென்னியாய்
கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால்
நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே

#798
காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்வு இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே

#799
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண்
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள்-அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே

#800
கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அ தண் நீர் அரங்கமே

#801
வெண் திரை கரும் கடல் சிவந்து வேவ முன் ஒர் நாள்
திண் திறல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே

#802
சரங்களை துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே

#803
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததை
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே

#804
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெம் சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே

#805
இலை தலை சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலை தலை பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்கும குழம்பினோடு
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே

#806
மன்னு மா மலர் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே

#807
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைம் தலை நிலத்து உக
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே

#808
சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே

#809
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெட புடைத்து ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே

#810
சாலி வேலி தண் வயல் தடம் கிடங்கு பூம் பொழில்
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே

#811
செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று
எழுந்திருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழை கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே

#812
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ இலங்கு மால் வரை சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே

#813
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனை பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறும் கொடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே

#814
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணை கிடந்தது என்ன நீர்மையே

#815
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணை கிடந்தது என் இலாத முன் எலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

#816
நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நல் பெரும் திரை கடலுள் நான் இலாத முன் எலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே

#817
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்-கொலோ
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே

#818
சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து
உண்டு நும் உறு வினை துயருள் நீங்கி உய்ம்-மினோ

#819
மு திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள்
மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எ திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை உய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்-மினோ

#820
காணிலும் உரு பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி-பால்
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே

#821
குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகம் உற
வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள்
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே

#822
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிட
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே

#823
போதில் மங்கை பூதல கிழத்தி தேவி அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே

#824
மரம் பொத சரம் துரந்து வாலி வீழ முன் ஒர் நாள்
உரம் பொத சரம் துரந்த உம்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எ திறத்தும் யார்க்கும் இல்லையே

#825
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே

#826
ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழி-தோறு எலாம்
நின்றுநின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்றுசென்று தேவதேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண்மாலை யாவர் காண வல்லரே

#827
புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நல் சுடர் கொளீஇ
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே

#828
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனை
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே

#829
சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய்
நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே
வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே

#830
பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய்
பத்து நால் திசை-கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதி-பால்
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே

#831
வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசம் ஆகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே

#832
கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியை கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்-மினோ

#833
எ திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அரா_அணை துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே

#834
மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் பொலன் கழல்
விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே

#835
பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான்
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன்
என் திறத்தில் என்-கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே

#836
நச்சு அரா_அணை கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம்
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே

#837
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய்
ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என்-கொல் கண்ணனே

#838
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே

#839
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய்
அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே

#840
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர்-பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே

#841
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நல் கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே

#842
பண் உலாவு மென் மொழி படை தடம் கணாள் பொருட்டு
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன்
எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே

#843
விடை குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேல் கண் மாதரார்
கடி கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்-தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே

#844
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெம் சரம் துரந்த வில் இராமனே

#845
ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே

#846
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ
விட கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும்
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே

#847
வரம்பு_இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பு_இல் ஊழி ஏத்திலும் வரம்பு_இலாத கீர்த்தியாய்
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமா திருந்த நீ வரம்செய் புண்டரீகனே

#848
வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்
கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே
ஐயில் ஆய ஆக்கை நோய் அறுத்து வந்து நின் அடைந்து
உய்வது ஓர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே

#849
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும்
துறந்து நின்-கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழி-கண்-நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே

#850
காட்டி நான் செய் வல்வினை பயன்-தனால் மனம்-தனை
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை_வண்ணனே

#851
பிறப்பினோடு பேர் இடர் சுழி-கண் நின்றும் நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரை கரைக்கொடு ஏற்றுமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தி ஆன பாசனம்
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே

#852
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே

#853
விள்வு இலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்குமா தெழிக்கு நீர்
பள்ளி மாய பன்றி ஆய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஒன்று சொல்லிடே

#854
திரு கலந்து சேரும் மார்ப தேவதேவ தேவனே
இரு கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா
கரு கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர்
உரு கலந்து ஒழிவு இலாது உரைக்குமாறு உரைசெயே

#855
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை
இடந்து கூறு செய்த பல் படை தட கை மாயனே
கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொன் கழல்
தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே

#856
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய்
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கய
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே

#857
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட அன்று
அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறு கலந்த ஊனம் அஃது ஒழிக்க அன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே

#858
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன்
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன்
நாசம் உற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கு அலால்
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே

#859
கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த-போதிலும்
கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே

#860
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீ குணங்கள் தீர்த்த தேவதேவன் என்று
இருக்கு வாய் முனி கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்

#861
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈது எலாம்
நீயும் நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை_வண்ணனே

#862
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறு_இல் போர்
செய்து நின்ன செற்ற தீயில் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே

#863
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஆளது ஆகும் நன்மை என்று நன்கு உணர்ந்து அது அன்றியும்
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே

#864
சலம் கலந்த செம் சடை கறுத்த கண்டன் வெண் தலை
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே

#865
ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீது போய்
வானம் ஆள வல்லையேல் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே

#866
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே

#867
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே

#868
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகனை கிடந்த நாதன் வேத கீதனே

#869
சொல்லினும் தொழில்-கணும் தொடக்கு_அறாத அன்பினும்
அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும்
அல்லி நாள்மலர் கிழத்தி நாத பாத போதினை
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே

#870
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள்
என்னது ஆவி என்னும் வல்வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே

#871
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
உயக்கொள் மேக_வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான்
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே

5.தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை

#872
காவலில் புலனை வைத்து கலி-தன்னை கடக்க பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூ_உலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய் அரங்க மாநகருளானே

#873
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம் கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும்
இ சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அ சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே

#874
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கி போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே

#875
மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்து உடைய பேரால்
கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய
பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே

#876
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு
உண்டு இரா கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே

#877
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே
புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே

#878
புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலை அற கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம்
தலை அறுப்பு உண்டும் சாவேன் சத்தியம் காண்-மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

#879
வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால்
பொறுப்பு அரியனகள் பேசில் போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகருளானே

#880
மற்றும் ஓர் தெய்வம் உண்டே மதி இலா மானிடங்காள்
உற்ற-போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை
கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே

#881
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்-தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவா கனனும் நிற்க
சேட்டை-தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே

#882
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய
செருவிலே அரக்கர்_கோனை செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர் காலத்தை கழிக்கின்றீரே

#883
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே

#884
எறியும் நீர் வெறி கொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர்_கோனை ஏத்த
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே

#885
வண்டு இனம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடு-மின் நீரே

#886
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல
பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புள் கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே

#887
சூதனாய் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து தன்-பால்
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே

#888
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறைஇறை உருகும் வண்ணம்
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினை கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே

#889
இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான்
கனி இருந்து அனைய செ வாய் கண்ணனை கண்ட கண்கள்
பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே

#890
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி
கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே

#891
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பு_அணை பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும்
தூய தாமரை கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே

#892
பணிவினால் மனம்-அது ஒன்றி பவள வாய் அரங்கனார்க்கு
துணிவினால் வாழ மாட்டா தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே

#893
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன்
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்

#894
கங்கையில் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டு
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே

#895
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள்
கள்வனார் கிடந்தவாறும் கமல நன் முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல்செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே

#896
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை-தன்னை
ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பீ கடல்_வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே

#897
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்
தீது இலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே

#898
குரங்குகள் மலையை நூக்க குளித்து தாம் புரண்டிட்டு ஓடி
தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே

#899
உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம் பரம் ஆயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா
எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே

#900
ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
கார் ஒளி_வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆர் உளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே

#901
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கி தீவிளி விளிவன் வாளா
புன துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே

#902
தவத்துளார்-தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செ வாயினார்க்கே துவக்கு அற துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மாநகருளானே

#903
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம்-தன்னுள்
கார் திரள் அனைய மேனி கண்ணனே உன்னை காணு
மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே

#904
மெய் எல்லாம் போக விட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே

#905
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அற சிரித்திட்டேனே

#906
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே

#907
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே
உழை கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே உன்னையன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி அரங்க மாநகருளானே

#908
தெளிவிலா கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமேயன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே

#909
மேம் பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி
காம்பு அற தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

#910
அடிமையில் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரில்
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மாநகருளானே

#911
திரு மறு மார்வ நின்னை சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவுற கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும்
அருவினை பயன்-அது உய்யார் அரங்க மாநகருளானே

#912
வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில்
தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பர் ஆகில்
ஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே

#913
பழுது இலா ஒழுகல் ஆற்று பல சதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில்
தொழு-மின் நீர் கொடு-மின் கொண்-மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போல் மதில் திருவரங்கத்தானே

#914
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்க மாநகருளானே

#915
பெண் உலாம் சடையினானும் பிரமனும் உன்னை காண்பான்
எண் இலா ஊழிஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா உன்னை என்னோ களைகணா கருதுமாறே

#916
வள எழும் தவள மாட மதுரை மாநகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துளவ தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல்
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே

5.தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை


#917
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

#918
கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

#919
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடலிடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

#920
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மா முனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

#921
புலம்பின புட்களும் பூம் பொழில்களின்வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#922
இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

#923
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

#924
வம்பு அவிழ் வானவர் வாயுறை வழங்க மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

#925
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

#926
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே

6.திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான்


#927
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்_கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திரு
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

#928
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை
கவர்ந்த வெம் கணை காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரை
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே

#929
மந்தி பாய் வடவேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே

#930
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெம் கணை உய்த்தவன் ஓத_வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

#931
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னை தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே

#932
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அம் சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய கொண்டதே

#933
கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததுவே

#934
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து
கரிய ஆகி புடை பரந்து மிளிர்ந்து செம் வரி ஓடி நீண்ட அ
பெரிய ஆய கண்கள் என்னை பேதைமை செய்தனவே

#935
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின்_அணையான்
கோல மா மணி ஆரமும் முத்து தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே

#936
கொண்டல்_வண்ணனை கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே

7.மதுரகவி ஆழ்வார் – கண்ணிநுண்சிறுத்தாம்பு


#937
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணி தென் குருகூர் நம்பி என்ற-கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே

#938
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடி திரிவனே

#939
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை
கரிய கோல திருவுரு காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே

#940
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆக கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே

#941
நம்பினேன் பிறர் நல் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே

#942
இன்று-தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாட திருக்குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்-மினே

#943
கண்டுகொண்டு என்னை காரிமாற பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே

#944
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அ அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இ உலகினில் மிக்கதே

#945
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆள்
புக்க காதல் அடிமை பயன் அன்றே

#946
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே

#947
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்-மினே