நே – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேச 1
நேசத்தினால் 1
நேசம் 5
நேசமிலாதார் 1
நேசமேல் 1
நேசன் 1
நேத்திரத்தால் 3
நேமி 19
நேமியன் 1
நேமியாய் 3
நேமியால் 1
நேமியான் 7
நேமியினாய் 1
நேமியீர் 1
நேமியும் 4
நேமியை 1
நேமியோடும் 1
நேய 1
நேயத்தோடு 1
நேர் 35
நேர்_இழை 1
நேர்_இழையும் 1
நேர்த்தவன் 1
நேர்தல் 1
நேர்ந்த 4
நேர்ந்தாள் 1
நேர்ந்து 1
நேர்ந்தேன் 1
நேர்நிற்கில் 1
நேர்ப்பமும் 1
நேர்பட்ட 3
நேர்பட்டதே 1
நேர்பட்டார் 2
நேர்பட்டேன் 1
நேர்பட 2
நேர்படவே 1
நேர்படிலே 1
நேர்படுவான் 1
நேர்மை 2
நேர்மையன் 1
நேரா 2
நேராதன 1
நேரார் 2
நேரான் 1
நேரிய 1
நேரே 5

நேச (1)

நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே – நாலாயி:858/4

மேல்


நேசத்தினால் (1)

நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான் – நாலாயி:3729/2

மேல்


நேசம் (5)

வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன் – நாலாயி:831/1
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே – நாலாயி:857/4
நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் – நாலாயி:1833/1
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி – நாலாயி:3905/3
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே – நாலாயி:3991/3

மேல்


நேசமிலாதார் (1)

நேசமிலாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே – நாலாயி:209/2

மேல்


நேசமேல் (1)

நின்று ஒழிந்தேன் உன்னை கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் – நாலாயி:193/2

மேல்


நேசன் (1)

நிலவும் ஆழி படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்கு – நாலாயி:1325/2

மேல்


நேத்திரத்தால் (3)

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:258/1
நீல நல் நறும் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே – நாலாயி:260/2
அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:261/2

மேல்


நேமி (19)

நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி அம் கையனே சப்பாணி – நாலாயி:82/4
நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/3
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே – நாலாயி:470/4
கால நேமி காலனே கணக்கு_இலாத கீர்த்தியாய் – நாலாயி:782/1
வடம் கலந்த மாலை மார்ப கால நேமி காலனே – நாலாயி:789/4
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை – நாலாயி:810/3
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட அன்று – நாலாயி:857/1
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம் – நாலாயி:1352/2
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின் – நாலாயி:1626/2
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று – நாலாயி:2086/3,4
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் – நாலாயி:2262/3
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே – நாலாயி:2361/3
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய – நாலாயி:2486/1
தொலை பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே – நாலாயி:2567/4
நின்று இ உலகில் கடிவான் நேமி பிரான் தமர் போந்தார் – நாலாயி:3357/2
நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் நேமி அங்கை உளதே – நாலாயி:3391/4
வளை வாய் நேமி படையாய் குடந்தை கிடந்த மா மாயா – நாலாயி:3425/2
சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வ கோமானே – நாலாயி:3551/2
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3575/3

மேல்


நேமியன் (1)

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரண சொல் – நாலாயி:2826/1

மேல்


நேமியாய் (3)

புள்ளை ஊர்தி ஆதலால் அது என்-கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய் பகை கடல் கிடத்தல் காதலித்ததே – நாலாயி:770/3,4
ஊன் பருகு நேமியாய் உள்ளு – நாலாயி:2659/4
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்ப பல-காலும் – நாலாயி:3204/2,3

மேல்


நேமியால் (1)

தேறுமா செய்யா அசுரர்களை நேமியால்
பாறுபாறு ஆக்கினான்-பால் – நாலாயி:2617/3,4

மேல்


நேமியான் (7)

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் – நாலாயி:1020/1,2
தன் ஆற்றான் நேமியான் மால்_வண்ணன் தான் கொடுக்கும் – நாலாயி:2464/3
திரு செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் – நாலாயி:2647/3
சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை – நாலாயி:2650/1
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் – நாலாயி:2671/3
நிகர் இல் முகில்_வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – நாலாயி:3592/4
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே – நாலாயி:3924/3,4

மேல்


நேமியினாய் (1)

மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே – நாலாயி:3562/4

மேல்


நேமியீர் (1)

வட்ட வாய் நுதி நேமியீர் நுமது – நாலாயி:3050/3

மேல்


நேமியும் (4)

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய – நாலாயி:34/3
நில்லு-மின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே – நாலாயி:425/2
கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து – நாலாயி:2109/1
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு – நாலாயி:3691/2

மேல்


நேமியை (1)

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியை கடிந்து – நாலாயி:832/1

மேல்


நேமியோடும் (1)

சங்கினோடும் நேமியோடும் தாமரை கண்களோடும் – நாலாயி:3385/3

மேல்


நேய (1)

நேய நிலை கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:489/8

மேல்


நேயத்தோடு (1)

நேயத்தோடு கழிந்த-போது எனக்கு எ உலகம் நிகரே – நாலாயி:3485/4

மேல்


நேர் (35)

ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திருவோணத்தான் – நாலாயி:15/3
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் – நாலாயி:29/3
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே – நாலாயி:41/4
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் – நாலாயி:56/2
தன் நேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் – நாலாயி:223/1
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே – நாலாயி:223/3
பண் நேர் மொழியாரை கூவி முளை அட்டி பல்லாண்டு கூறுவித்தேன் – நாலாயி:252/2
நீராட போதுவீர் போது-மினோ நேர் இழையீர் – நாலாயி:474/2
நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும் – நாலாயி:669/1
நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக – நாலாயி:731/3
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/4
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம் – நாலாயி:974/3
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து – நாலாயி:1483/1
ஊன் நேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் – நாலாயி:1566/1
பானு நேர் சரத்தால் பனங்கனி போல பரு முடி உதிர வில் வளைத்தோன் – நாலாயி:1754/2
நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை – நாலாயி:1905/1
நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை – நாலாயி:1934/3
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர் மேல் – நாலாயி:2164/3
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை – நாலாயி:2171/3
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த – நாலாயி:2260/3
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் – நாலாயி:2260/4
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேர் இழையீர் – நாலாயி:2517/2
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/4
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை – நாலாயி:2689/1
நேர் நிறை இல்லே – நாலாயி:2912/4
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை – நாலாயி:3000/3
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலை சூழவே நின்று – நாலாயி:3465/3
நேர்_இழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே – நாலாயி:3525/4
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் – நாலாயி:3565/2
நேர் சரிந்தான் கொடி கோழி கொண்டான் பின்னும் – நாலாயி:3601/1
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் – நாலாயி:3601/2
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் – நாலாயி:3601/3
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே – நாலாயி:3601/4
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை – நாலாயி:3903/2

மேல்


நேர்_இழை (1)

நேர்_இழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே – நாலாயி:3525/4

மேல்


நேர்_இழையும் (1)

நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக – நாலாயி:731/3

மேல்


நேர்த்தவன் (1)

நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு – நாலாயி:1180/2

மேல்


நேர்தல் (1)

நேர்தல் ஆயிரத்து – நாலாயி:2986/3

மேல்


நேர்ந்த (4)

நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை – நாலாயி:928/2
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த – நாலாயி:2311/2
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே – நாலாயி:2952/4
நேர்ந்த ஓர் ஆயிரத்து இ பத்து அருவினை நீறு செய்யுமே – நாலாயி:3175/4

மேல்


நேர்ந்தாள் (1)

நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும் – நாலாயி:2680/2

மேல்


நேர்ந்து (1)

யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும் – நாலாயி:2617/2

மேல்


நேர்ந்தேன் (1)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம் – நாலாயி:2261/1

மேல்


நேர்நிற்கில் (1)

நீயும் நானும் இ நேர்நிற்கில் மேல் மற்றோர் – நாலாயி:3003/1

மேல்


நேர்ப்பமும் (1)

மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே – நாலாயி:3676/4

மேல்


நேர்பட்ட (3)

நேர்பட்ட நிறை மூ_உலகுக்கும் நாயகன் தன் அடிமை – நாலாயி:3769/1
நேர்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் – நாலாயி:3769/2
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3769/3

மேல்


நேர்பட்டதே (1)

நின்ற மாய பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – நாலாயி:3768/4

மேல்


நேர்பட்டார் (2)

நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமைசெய்யவே – நாலாயி:3769/4
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமைசெய்யவே – நாலாயி:3769/4

மேல்


நேர்பட்டேன் (1)

நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில் – நாலாயி:2450/3

மேல்


நேர்பட (2)

நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் – நாலாயி:462/2
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில் – நாலாயி:3653/2

மேல்


நேர்படவே (1)

நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி – நாலாயி:231/2

மேல்


நேர்படிலே (1)

நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே – நாலாயி:593/4

மேல்


நேர்படுவான் (1)

நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு – நாலாயி:2361/4

மேல்


நேர்மை (2)

கடி சேர் நாற்றத்துள் ஆலை இன்ப துன்ப கழி நேர்மை
ஒடியா இன்ப பெருமையோன் உணர்வில் உம்பர் ஒருவனே – நாலாயி:3749/3,4
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று – நாலாயி:3752/1

மேல்


நேர்மையன் (1)

சேயன் என்றும் மிக பெரியன் நுண் நேர்மையன் ஆய இ – நாலாயி:1386/1

மேல்


நேரா (2)

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈத்த – நாலாயி:316/3
நேரா வாய் செம் பவளம் கண் பாதம் கை கமலம் – நாலாயி:3057/3

மேல்


நேராதன (1)

நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும் – நாலாயி:2680/2

மேல்


நேரார் (2)

நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார்
கால வேல் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார் – நாலாயி:1397/2,3
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனை-பால் – நாலாயி:2223/2

மேல்


நேரான் (1)

எதிர்வன் அவன் எனக்கு நேரான் அதிரும் – நாலாயி:2465/2

மேல்


நேரிய (1)

உருகி உக்க நேரிய காதல் – நாலாயி:2579/3

மேல்


நேரே (5)

ஆரே அறிவார் அது நிற்க நேரே
கடி கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் – நாலாயி:2137/2,3
காரே மலிந்த கரும் கடலை நேரே
கடைந்தானை காரணனை நீர் அணை மேல் பள்ளி – நாலாயி:2308/2,3
நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச – நாலாயி:2631/2
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின் உன் – நாலாயி:2815/3
நீறு பட இலங்கை செற்ற நேரே – நாலாயி:3600/4

மேல்