சா – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாக்கிய 1
சாக்கியர்கள் 1
சாக்கியரும் 1
சாடி 9
சாடிய 1
சாடியதும் 1
சாடு 9
சாத்த 1
சாத்தற்கு 1
சாத்தி 5
சாத்தியிருப்பார் 1
சாத்து 1
சாதல் 2
சாதலும் 1
சாதி 7
சாதிக்கலாமே 1
சாதிக்கலுற்று 1
சாதிக்கின்றது 1
சாதிகள் 1
சாதித்து 1
சாதிப்பதற்கு 1
சாதிப்பார் 1
சாதிப்பார்க்கு 1
சாதியர் 1
சாதியா 1
சாதியில் 2
சாதியின் 2
சாதியும் 1
சாதியை 1
சாது 3
சாதுவராய் 1
சாதுவாய் 1
சாந்தம் 5
சாந்தமும் 3
சாந்தினில் 1
சாந்து 9
சாந்தும் 3
சாந்தொடு 2
சாபம் 12
சாம் 3
சாம்பவான் 1
சாம 6
சாமத்தின் 1
சாமரை 1
சாமரையும் 1
சாமரையோடு 1
சாமவேதி 1
சாமாறு 1
சாமி 1
சாய் 4
சாய்க்கும் 1
சாய்த்த 2
சாய்த்தவனே 1
சாய்த்தனவும் 1
சாய்த்தாய் 1
சாய்த்தான் 1
சாய்த்து 12
சாய்ப்பதன் 1
சாய்வு 1
சாய 4
சாயல் 3
சாயலொடு 1
சாயால் 1
சாயே 1
சாயை 2
சார்கின்ற 1
சார்கொடான் 1
சார்ங்க 5
சார்ங்கத்தான் 1
சார்ங்கத்து 1
சார்ங்கபாணி 3
சார்ங்கம் 9
சார்ங்கமே 1
சார்ங்கன் 2
சார்த்தியும் 1
சார்ந்த 1
சார்ந்தது 1
சார்ந்தவர்-தம் 1
சார்ந்தவர்க்கு 1
சார்ந்தவர்கட்கு 1
சார்ந்தவரே 1
சார்ந்து 5
சார்ந்தே 1
சார்வது 2
சார்வதே 1
சார்வம் 1
சார்வு 9
சார்வும் 1
சார்வே 3
சார 1
சாரகில்லாவே 1
சாரங்கள் 1
சாரணர் 2
சாரதியாய் 2
சாரமும் 1
சாரல் 17
சாரா 15
சாராதே 1
சாரார் 1
சாராவே 2
சாரிகை 1
சாரேன் 1
சால் 1
சால்பின் 1
சால 12
சாலக 1
சாலவும் 1
சாலி 2
சாலிகள் 1
சாலேகம் 1
சாலைகள் 1
சாவ 3
சாவது 1
சாவம் 1
சாவேன் 1
சாழலே 10
சாளக்கிராமத்து 1
சாளக்கிராமம் 11
சாற்றி 4
சாற்றிடுமே 1
சாற்றினால் 1
சாற்றினோம் 1
சாற்று 1
சாற்று-மினே 2
சாற்றுகின்றார் 1
சாற்றும் 1
சாற்றுவனேல் 1
சாற்றை 3
சாறு 3
சாறுபட 1
சான்ற 1

சாக்கிய (1)

தற்க சமணரும் சாக்கிய பேய்களும் தாழ்சடையோன் – நாலாயி:2889/1

மேல்


சாக்கியர்கள் (1)

வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால் – நாலாயி:879/1

மேல்


சாக்கியரும் (1)

இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் – நாலாயி:3334/1,2

மேல்


சாடி (9)

தாளை நிமிர்த்து சகடத்தை சாடி போய் – நாலாயி:33/2
வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து – நாலாயி:224/2
ஆமையின் முதுகத்திடை குதிகொண்டு தூ மலர் சாடி போய் – நாலாயி:364/1
வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி
மல் பொருது எழ பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:397/1,2
தட வரை அதிர தரணி விண்டு இடிய தலைப்பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:399/3,4
பரும் கை யானையின் கொம்பினை பறித்து அதன் பாகனை சாடி புக்கு – நாலாயி:1261/1
சேனை தொகையை சாடி இலங்கை செற்றான் ஊர் – நாலாயி:1490/2
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த – நாலாயி:2104/2
அடி சகடம் சாடி அரவு ஆட்டி யானை – நாலாயி:2414/1

மேல்


சாடிய (1)

ஓடும் சகடத்தை சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே – நாலாயி:1916/4

மேல்


சாடியதும் (1)

சாவ பால் உண்டதும் ஊர் சகடம் இற சாடியதும்
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3487/2,3

மேல்


சாடு (9)

சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு – நாலாயி:122/1
சாடு இற பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றும்-கொலோ – நாலாயி:302/4
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/3
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்_மகள் – நாலாயி:787/2
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் – நாலாயி:837/1
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் – நாலாயி:837/1
சாடு போய் விழ தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும் – நாலாயி:1262/1
ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர் சேவடியும் – நாலாயி:2181/1
பெய்யும் பூம் குழல் பேய் முலை உண்ட பிள்ளை தேற்றமும் பேர்ந்து ஓர் சாடு இற – நாலாயி:3442/1

மேல்


சாத்த (1)

திருக்காப்பு நான் உன்னை சாத்த தேசு உடை வெள்ளறை நின்றாய் – நாலாயி:200/3

மேல்


சாத்தற்கு (1)

தார் ஆர் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும் – நாலாயி:2680/1

மேல்


சாத்தி (5)

வண்ண பவளம் மருங்கினில் சாத்தி மலர் பாத கிண்கிணி ஆர்ப்ப – நாலாயி:140/1
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி பணை கச்சு உந்தி பல தழை நடுவே – நாலாயி:255/2
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து – நாலாயி:706/2
பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம் – நாலாயி:2085/2
சாத்தி உரைத்தல் தவம் – நாலாயி:2258/4

மேல்


சாத்தியிருப்பார் (1)

சாத்தியிருப்பார் தவம் – நாலாயி:2399/4

மேல்


சாத்து (1)

மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப – நாலாயி:1009/3

மேல்


சாதல் (2)

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து – நாலாயி:817/1
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து – நாலாயி:817/1

மேல்


சாதலும் (1)

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை – நாலாயி:1456/1

மேல்


சாதி (7)

சாதி பவளமும் சந்த சரி வளையும் – நாலாயி:49/2
தலை கணம் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் – நாலாயி:767/1
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும் – நாலாயி:914/2
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1419/1
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே – நாலாயி:3156/4
சாதி மாணிக்கம் என்கோ சவி கொள் பொன் முத்தம் என்கோ – நாலாயி:3157/1
சாதி நல் வயிரம் என்கோ தவிவு இல் சீர் விளக்கம் என்கோ – நாலாயி:3157/2

மேல்


சாதிக்கலாமே (1)

தங்க விட்டுவைத்து ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே – நாலாயி:376/4

மேல்


சாதிக்கலுற்று (1)

எம் பரம் சாதிக்கலுற்று என்னை போர விட்டிட்டாயே – நாலாயி:3993/4

மேல்


சாதிக்கின்றது (1)

ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே – நாலாயி:3589/4

மேல்


சாதிகள் (1)

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை – நாலாயி:3195/1

மேல்


சாதித்து (1)

சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் – நாலாயி:3217/3

மேல்


சாதிப்பதற்கு (1)

சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த – நாலாயி:3169/1,2

மேல்


சாதிப்பார் (1)

தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே – நாலாயி:616/4

மேல்


சாதிப்பார்க்கு (1)

தங்க விட்டுவைத்து ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே – நாலாயி:376/4

மேல்


சாதியர் (1)

நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம்-கொலோ – நாலாயி:363/3,4

மேல்


சாதியா (1)

சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ – நாலாயி:3563/2

மேல்


சாதியில் (2)

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை – நாலாயி:384/1
மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து – நாலாயி:3490/1

மேல்


சாதியின் (2)

மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள் – நாலாயி:382/2
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை – நாலாயி:384/2

மேல்


சாதியும் (1)

கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – நாலாயி:624/1

மேல்


சாதியை (1)

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை – நாலாயி:384/1,2

மேல்


சாது (3)

குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே – நாலாயி:285/4
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே – நாலாயி:3168/4
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு – நாலாயி:3169/1

மேல்


சாதுவராய் (1)

சாதுவராய் போது-மின்கள் என்றான் நமனும் தன் – நாலாயி:2449/3

மேல்


சாதுவாய் (1)

சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை – நாலாயி:3126/2

மேல்


சாந்தம் (5)

நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்ன – நாலாயி:100/1
குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து – நாலாயி:565/1
கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் – நாலாயி:1139/1
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் – நாலாயி:2944/2
பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ – நாலாயி:3870/2

மேல்


சாந்தமும் (3)

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல – நாலாயி:8/3
சாந்தமும் பூணும் சந்தன குழம்பும் தட முலைக்கு அணியிலும் தழல் ஆம் – நாலாயி:1110/1
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து – நாலாயி:3360/3

மேல்


சாந்தினில் (1)

மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

மேல்


சாந்து (9)

சாவ தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை – நாலாயி:343/2
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் – நாலாயி:1109/1
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்ஙனம் சொல்லுகேன் ஓவி நல்லார் – நாலாயி:1124/1,2
ஆர சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1391/2
பூண் முலை மேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் – நாலாயி:1392/1
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து – நாலாயி:1471/1
பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே – நாலாயி:3253/4
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய – நாலாயி:3254/1
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து – நாலாயி:3875/3

மேல்


சாந்தும் (3)

மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் – நாலாயி:155/3,4
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:397/3,4
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1379/4

மேல்


சாந்தொடு (2)

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர – நாலாயி:72/1
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல – நாலாயி:3911/3

மேல்


சாபம் (12)

எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:495/8
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான் – நாலாயி:804/1
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்து உயர்ந்த – நாலாயி:985/3
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில் – நாலாயி:995/3
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1230/2
வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க – நாலாயி:1265/1
ஒருவனை சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான் – நாலாயி:1430/2
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் – நாலாயி:1431/2
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும் – நாலாயி:2050/2
ஏறு ஏறி பட்ட இடு சாபம் பாறு ஏறி – நாலாயி:2244/2
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர் – நாலாயி:2412/1,2
பொலிக பொலிக பொலிக போயிற்று வல் உயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை – நாலாயி:3352/1,2

மேல்


சாம் (3)

சாம் இடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கரம் ஏந்தினானே – நாலாயி:424/1
தண்ணாவாது அடியேனை பணி கண்டாய் சாம் ஆறே – நாலாயி:3319/4
சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து – நாலாயி:3320/1

மேல்


சாம்பவான் (1)

சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்க தொழுதோம் – நாலாயி:1866/2

மேல்


சாம (6)

எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம் – நாலாயி:438/3
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே – நாலாயி:765/4
சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடுமாலே – நாலாயி:1609/3
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன் – நாலாயி:1748/2
சாயல் சாம திருமேனி தண் பாசடையா தாமரை நீள் – நாலாயி:3715/3
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் – நாலாயி:3830/4

மேல்


சாமத்தின் (1)

சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே – நாலாயி:578/2

மேல்


சாமரை (1)

துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரை கற்றை சந்தனம் உந்தி வந்து அசை – நாலாயி:1840/3

மேல்


சாமரையும் (1)

மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1356/3,4

மேல்


சாமரையோடு (1)

அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி – நாலாயி:1220/3

மேல்


சாமவேதி (1)

சந்தோகன் பௌழியன் ஐம் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/3,4

மேல்


சாமாறு (1)

சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் – நாலாயி:189/2

மேல்


சாமி (1)

தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் – நாலாயி:1064/2

மேல்


சாய் (4)

சாய் உடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலை புகழ் தரக்கிற்றியே – நாலாயி:510/4
தம்மால் காட்டு உன் மேனி சாய் – நாலாயி:2597/4
சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் – நாலாயி:3217/3
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன் நிறமாய் தளர்ந்தேன் – நாலாயி:3682/3

மேல்


சாய்க்கும் (1)

பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – நாலாயி:415/4

மேல்


சாய்த்த (2)

மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம் – நாலாயி:1350/2
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர் – நாலாயி:1492/2

மேல்


சாய்த்தவனே (1)

பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த – நாலாயி:2438/2

மேல்


சாய்த்தனவும் (1)

போர் கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்த்தனவும்
கார் கோடு பற்றியான் கை – நாலாயி:2108/3,4

மேல்


சாய்த்தாய் (1)

நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் – நாலாயி:153/3

மேல்


சாய்த்தான் (1)

அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே – நாலாயி:2332/2

மேல்


சாய்த்து (12)

சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான் – நாலாயி:206/3
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குட தயிர் சாய்த்து பருகி – நாலாயி:225/1
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த கலத்தொடு சாய்த்து பருகி – நாலாயி:227/2
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
வரம்புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலைவணக்கும் தண் அரங்கமே – நாலாயி:419/4
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறி குடிகொண்டு – நாலாயி:572/2
சாய்த்து மா பிளந்த கை தலத்த கண்ணன் என்பரால் – நாலாயி:788/2
இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை – நாலாயி:1144/1,2
புள்ளினை வாய் பிளந்து பூம் குருந்தம் சாய்த்து
துள்ளி விளையாடி தூங்கு உறி வெண்ணெயை – நாலாயி:1894/1,2
புணர் மருதின் ஊடு போய் பூம் குருந்தம் சாய்த்து
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ – நாலாயி:2143/1,2
சின மா மத களிற்றின் திண் மருப்பை சாய்த்து
புனம் மேய பூமி அதனை தனமாக – நாலாயி:2324/1,2
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட – நாலாயி:3370/2

மேல்


சாய்ப்பதன் (1)

சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம் – நாலாயி:376/2

மேல்


சாய்வு (1)

சாய்வு இலாத குறும் தலை சில பிள்ளைகளோடு இணங்கி – நாலாயி:287/2

மேல்


சாய (4)

பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1134/4
முனியாது மூரி தாள் கோ-மின் கனி சாய
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு – நாலாயி:2168/2,3
சாய குருந்தம் ஒசித்த தமியற்கு – நாலாயி:3513/1
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர் தனி பாகா வாராய் இதுவோ பொருத்தமே – நாலாயி:3722/3,4

மேல்


சாயல் (3)

பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன் – நாலாயி:246/3
வானக சோலை மரகத சாயல் மா மணி கல் அதர் நுழைந்து – நாலாயி:1824/3
சாயல் சாம திருமேனி தண் பாசடையா தாமரை நீள் – நாலாயி:3715/3

மேல்


சாயலொடு (1)

சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது – நாலாயி:2939/3

மேல்


சாயால் (1)

சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே – நாலாயி:2598/1

மேல்


சாயே (1)

தையல் இழந்தது தன்னுடை சாயே – நாலாயி:3512/4

மேல்


சாயை (2)

தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் – நாலாயி:455/2
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே – நாலாயி:473/4

மேல்


சார்கின்ற (1)

சார்கின்ற நல் நெஞ்சினார் தந்து போன தனி வளமே – நாலாயி:2489/4

மேல்


சார்கொடான் (1)

நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன் – நாலாயி:3003/2

மேல்


சார்ங்க (5)

சரம் தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க வில் கையனே சப்பாணி – நாலாயி:81/4
தட வரை தோள் சக்கரபாணீ சார்ங்க வில் சேவகனே – நாலாயி:466/4
சார்ங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:595/4
தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை – நாலாயி:2104/1
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும் – நாலாயி:2823/2

மேல்


சார்ங்கத்தான் (1)

சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ – நாலாயி:2302/3

மேல்


சார்ங்கத்து (1)

திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே – நாலாயி:3554/4

மேல்


சார்ங்கபாணி (3)

தடம் தாள் இணை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ – நாலாயி:86/4
தடம் தாளினை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ – நாலாயி:92/4
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே – நாலாயி:766/4

மேல்


சார்ங்கம் (9)

பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும் – நாலாயி:12/1
தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தட கையன் – நாலாயி:59/1
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச்சக்கரம் – நாலாயி:329/1
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் – நாலாயி:477/6
சார்ங்கம் வளைய வலிக்கும் தட கை சதுரன் பொருத்தம் உடையன் – நாலாயி:552/1
தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் – நாலாயி:642/1
கோல் ஆர்ந்த நெடும் சார்ங்கம் கூனல் சங்கம் கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள் – நாலாயி:654/1
பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை – நாலாயி:1950/3
வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய – நாலாயி:2317/2

மேல்


சார்ங்கமே (1)

அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே – நாலாயி:451/2

மேல்


சார்ங்கன் (2)

ஓவா தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே – நாலாயி:2662/3
கொண்டல்_வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கு கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே – நாலாயி:3748/3,4

மேல்


சார்த்தியும் (1)

சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த – நாலாயி:2095/3

மேல்


சார்ந்த (1)

சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாய பற்று அறுத்து – நாலாயி:2952/1

மேல்


சார்ந்தது (1)

சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும் – நாலாயி:2861/1

மேல்


சார்ந்தவர்-தம் (1)

தார் இயல் சென்னி இராமாநுசன்-தன்னை சார்ந்தவர்-தம்
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/3,4

மேல்


சார்ந்தவர்க்கு (1)

மாந்தராய் மாதுவாய் மற்று எல்லாமாய் சார்ந்தவர்க்கு
தன் ஆற்றான் நேமியான் மால்_வண்ணன் தான் கொடுக்கும் – நாலாயி:2464/2,3

மேல்


சார்ந்தவர்கட்கு (1)

திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னை சார்ந்தவர்கட்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே – நாலாயி:2884/3,4

மேல்


சார்ந்தவரே (1)

தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னை சார்ந்தவரே – நாலாயி:2860/4

மேல்


சார்ந்து (5)

தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து – நாலாயி:2355/4
சார்ந்து அகடு தேய்ப்ப தடாவிய கோட்டு உச்சிவாய் – நாலாயி:2356/1
தாமே அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார் பூ மேய – நாலாயி:2591/2
நீதியாய் நின் சார்ந்து நின்று – நாலாயி:2618/4
சார்ந்து சுவைத்த செ வாயன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3365/2

மேல்


சார்ந்தே (1)

தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியை சார்ந்தே – நாலாயி:2951/4

மேல்


சார்வது (2)

தளர்வு இலர் ஆகி சார்வது சதிரே – நாலாயி:3110/4
சொல்லாய் யான் உன்னை சார்வது ஓர் சூழ்ச்சியே – நாலாயி:3134/4

மேல்


சார்வதே (1)

சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே – நாலாயி:3576/4

மேல்


சார்வம் (1)

தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் – நாலாயி:2219/2

மேல்


சார்வு (9)

தாள் முதலே நங்கட்கு சார்வு – நாலாயி:2380/4
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய் – நாலாயி:2381/1
தன் சார்வு இலாத தனி பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே – நாலாயி:2575/3
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி – நாலாயி:2593/2
தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர் – நாலாயி:2655/2
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் – நாலாயி:2871/2
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே – நாலாயி:3667/4
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி தெளி விசும்பு ஏறலுற்றால் – நாலாயி:3668/1
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் – நாலாயி:3705/1

மேல்


சார்வும் (1)

துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும் – நாலாயி:3782/1

மேல்


சார்வே (3)

சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே – நாலாயி:3704/4
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே – நாலாயி:3923/4
சார்வே தவநெறிக்கு தாமோதரன் தாள்கள் – நாலாயி:3924/1

மேல்


சார (1)

புற மலை சார போவது கிறியே – நாலாயி:3114/4

மேல்


சாரகில்லாவே (1)

என்றும் வினை ஆயின சாரகில்லாவே – நாலாயி:2031/4

மேல்


சாரங்கள் (1)

அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் – நாலாயி:3137/2

மேல்


சாரணர் (2)

மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்ய பெண் உரு ஆகி – நாலாயி:1070/3

மேல்


சாரதியாய் (2)

தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை – நாலாயி:1145/2
தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை – நாலாயி:3613/3

மேல்


சாரமும் (1)

கற்கும் கல்வி சாரமும் யானே என்னும் கற்கும் கல்வி நாதன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3397/3

மேல்


சாரல் (17)

தேன் அமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து இருப்ப – நாலாயி:322/3
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான்-தன் – நாலாயி:687/1
பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல்
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து – நாலாயி:1149/2,3
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை அம் கொடி ஆட – நாலாயி:1150/2,3
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல்
கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல் – நாலாயி:1156/2,3
கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1156/3,4
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை – நாலாயி:1518/3
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1818/4
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1819/4
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1820/4
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1822/4
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1824/4
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1825/4
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும் – நாலாயி:1827/1
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர்-தம் – நாலாயி:2206/3
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே – நாலாயி:2214/3
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ் – நாலாயி:2229/3

மேல்


சாரா (15)

தான் இவை கற்று வல்லார் மேல் சாரா தீவினை தானே – நாலாயி:1177/4
தாம் மருவி வல்லார் மேல் சாரா தீவினை தாமே – நாலாயி:1407/4
பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழவினைகள் – நாலாயி:1517/3
மன மாசு தீரும் அருவினையும் சாரா
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய – நாலாயி:2124/1,2
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ – நாலாயி:2431/1
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ – நாலாயி:2431/1
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம் – நாலாயி:2431/2
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை – நாலாயி:2442/1
சாரா மனிசரை சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே – நாலாயி:2805/4
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3887/2
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3888/2
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர் – நாலாயி:3890/1
இன்று போய் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை – நாலாயி:3903/1,2
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3930/2
சாரா ஏதங்கள் – நாலாயி:3942/1

மேல்


சாராதே (1)

சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் – நாலாயி:3694/1,2

மேல்


சாரார் (1)

தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய – நாலாயி:2226/2

மேல்


சாராவே (2)

சொல்ல நாளும் துயர் பாடு சாராவே – நாலாயி:3889/4
ஏதம் சாராவே – நாலாயி:3941/4

மேல்


சாரிகை (1)

சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் – நாலாயி:2496/3

மேல்


சாரேன் (1)

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை – நாலாயி:3970/1,2

மேல்


சால் (1)

படிந்து உழு சால் பைம் தினைகள் வித்த தடிந்து எழுந்த – நாலாயி:2370/2

மேல்


சால்பின் (1)

சால்பின் தகைமை-கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – நாலாயி:2550/4

மேல்


சால (12)

சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ – நாலாயி:260/1
தண்ணென இல்லை நமன் தமர்கள் சால கொடுமைகள் செய்யாநிற்பர் – நாலாயி:428/1
சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே – நாலாயி:499/6
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் – நாலாயி:531/3
தங்கிய கையவனை வர கூவில் நீ சால தருமம் பெறுதி – நாலாயி:551/4
சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே – நாலாயி:573/4
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் எண்ணில் – நாலாயி:1062/2
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான் – நாலாயி:1661/2
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர் – நாலாயி:1685/2
தக்கார் பலர் தேவிமார் சால உடையீர் – நாலாயி:1929/3
சால பல நாள் உகம்-தோறு உயிர்கள் காப்பானே – நாலாயி:3541/2
சால பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ – நாலாயி:3541/4

மேல்


சாலக (1)

மழை-கொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி – நாலாயி:254/3

மேல்


சாலவும் (1)

ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே – நாலாயி:530/2

மேல்


சாலி (2)

சாலி வேலி தண் வயல் தடம் கிடங்கு பூம் பொழில் – நாலாயி:810/1
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1253/3

மேல்


சாலிகள் (1)

கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி – நாலாயி:1261/3

மேல்


சாலேகம் (1)

துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப – நாலாயி:2727/2

மேல்


சாலைகள் (1)

துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/3

மேல்


சாவ (3)

சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
சாவ தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை – நாலாயி:343/2
சாவ பால் உண்டதும் ஊர் சகடம் இற சாடியதும் – நாலாயி:3487/2

மேல்


சாவது (1)

சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/4

மேல்


சாவம் (1)

சாவம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான்-தன்னை – நாலாயி:3177/2

மேல்


சாவேன் (1)

தலை அறுப்பு உண்டும் சாவேன் சத்தியம் காண்-மின் ஐயா – நாலாயி:878/3

மேல்


சாழலே (10)

வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே – நாலாயி:1992/4
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே – நாலாயி:1993/4
ஏழ்_உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே – நாலாயி:1994/4
எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே – நாலாயி:1995/4
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1996/4
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1997/4
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே – நாலாயி:1998/4
தார் மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே – நாலாயி:1999/4
விண்டு ஏழ்_உலகுக்கும் மிக்கான் காண் சாழலே – நாலாயி:2000/4
உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே – நாலாயி:2001/4

மேல்


சாளக்கிராமத்து (1)

தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை – நாலாயி:997/1

மேல்


சாளக்கிராமம் (11)

சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான் – நாலாயி:206/3
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி – நாலாயி:399/1
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:988/4
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:989/4
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:990/4
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:991/4
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:992/4
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:993/4
தானாய் தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:994/4
தந்தான் சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:995/4
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:996/4

மேல்


சாற்றி (4)

தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றி சொன்னேன் போகவேண்டா – நாலாயி:132/3
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி
அமரர் பதி உடை தேவி அரசாணியை வழிபட்டு – நாலாயி:299/2,3
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் – நாலாயி:476/2
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி – நாலாயி:1892/4

மேல்


சாற்றிடுமே (1)

தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே – நாலாயி:2887/4

மேல்


சாற்றினால் (1)

தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து – நாலாயி:2183/2

மேல்


சாற்றினோம் (1)

தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்-மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1867/4

மேல்


சாற்று (1)

பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு – நாலாயி:3916/3

மேல்


சாற்று-மினே (2)

தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்று-மினே – நாலாயி:581/4
தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்று-மினே – நாலாயி:591/4

மேல்


சாற்றுகின்றார் (1)

பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:574/3,4

மேல்


சாற்றும் (1)

தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா – நாலாயி:2795/3

மேல்


சாற்றுவனேல் (1)

சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர்-தனக்கு ஓர் – நாலாயி:2879/2

மேல்


சாற்றை (3)

கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய – நாலாயி:1573/3
தேனிடை கரும்பின் சாற்றை திருவினை மருவி வாழார் – நாலாயி:2039/2
கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை – நாலாயி:3170/3

மேல்


சாறு (3)

மந்தரம் நாட்டி அன்று மதுர கொழும் சாறு கொண்ட – நாலாயி:587/3
சாறு கொண்ட மென் கரும்பு இளம் கழை தகை விசும்பு உற மணி நீழல் – நாலாயி:1151/3
கரும்பின் இன் சாறு போல பருகினேற்கு இனியவாறே – நாலாயி:2036/4

மேல்


சாறுபட (1)

சாறுபட அமுதம் கொண்ட நான்றே – நாலாயி:3595/4

மேல்


சான்ற (1)

ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று – நாலாயி:1874/3

மேல்