மொ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொக்குளின் 1
மொட்டு 3
மொடுமொடு 1
மொண்டு 2
மொத்துண்டு 1
மொய் 19
மொய்த்த 4
மொய்த்திடினும் 1
மொய்த்து 6
மொய்த்தே 1
மொய்ப்ப 1
மொய்ம் 1
மொய்ம்பன் 1
மொய்ம்பின் 2
மொய்ம்பு 1
மொய்ய 2
மொழி 25
மொழிக்கே 1
மொழிகள் 1
மொழிந்த 4
மொழிந்தான் 1
மொழிந்திடவே 1
மொழிந்து 6
மொழிந்தும் 1
மொழிபட்டு 1
மொழியாய் 2
மொழியார் 3
மொழியார்கள் 1
மொழியாரை 1
மொழியால் 2
மொழியாள் 6
மொழியாளர் 1
மொழியாளை 2
மொழியானை 1
மொழியுடன் 1
மொழியே 1
மொழியை 1
மொழிவதற்கு 1

மொக்குளின் (1)

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து – நாலாயி:3236/1

மேல்


மொட்டு (3)

மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே போல் – நாலாயி:108/2
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1144/4
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் – நாலாயி:1764/1

மேல்


மொடுமொடு (1)

முன் நல் ஓர் வெள்ளி பெரு மலை குட்டன் மொடுமொடு விரைந்து ஓட – நாலாயி:90/1

மேல்


மொண்டு (2)

நின்ற செம் தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய – நாலாயி:1012/3
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரை கற்றை சந்தனம் உந்தி வந்து அசை – நாலாயி:1840/3

மேல்


மொத்துண்டு (1)

வண்ண கரும் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணி குறும் கயிற்றால் கட்டுண்டான் காண் ஏடீ – நாலாயி:1996/1,2

மேல்


மொய் (19)

மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே – நாலாயி:37/4
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்து அணி ஆர் மொய் குழல்கள் அலைய – நாலாயி:68/3
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் – நாலாயி:910/3
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே – நாலாயி:946/4
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து – நாலாயி:1124/1
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை அம் கொடி ஆட – நாலாயி:1150/3
மூத்திடுகின்றன மற்று அவன் தன் மொய் அகலம் அணையாது வாளா – நாலாயி:1796/3
மூர்த்தியை கைதொழவும் முடியும்-கொல் என் மொய் குழற்கே – நாலாயி:1835/4
முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் – நாலாயி:2070/1
முன் நின்று தான் இரப்பாள் மொய் மலராள் சொல் நின்ற – நாலாயி:2260/2
முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல – நாலாயி:2280/2
முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட – நாலாயி:2306/2
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய – நாலாயி:2537/1
மொய் கழலே ஏத்த முயல் – நாலாயி:2671/4
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே – நாலாயி:2813/4
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே – நாலாயி:3152/4
மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே – நாலாயி:3176/4
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் – நாலாயி:3582/1
முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய் – நாலாயி:3717/1

மேல்


மொய்த்த (4)

மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்து உடைய பேரால் – நாலாயி:875/1
மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்-தொறும் மூத்து அதனால் – நாலாயி:2814/1
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே – நாலாயி:3152/4
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3584/3

மேல்


மொய்த்திடினும் (1)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும் – நாலாயி:2807/1,2

மேல்


மொய்த்து (6)

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று – நாலாயி:666/1
பத்தி உழவன் பழம் புனத்து மொய்த்து எழுந்த – நாலாயி:2404/2
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே – நாலாயி:2865/3
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே – நாலாயி:2865/4
மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால் – நாலாயி:3746/3
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம் போகும்-போது உன்மத்தர் போல் – நாலாயி:3755/2

மேல்


மொய்த்தே (1)

வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே – நாலாயி:3164/4

மேல்


மொய்ப்ப (1)

பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய – நாலாயி:98/2,3

மேல்


மொய்ம் (1)

மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை முதலை சிறைப்பட்டு நின்ற – நாலாயி:3165/1

மேல்


மொய்ம்பன் (1)

முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல் – நாலாயி:2359/2

மேல்


மொய்ம்பின் (2)

வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் – நாலாயி:1985/3
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து – நாலாயி:3624/2

மேல்


மொய்ம்பு (1)

முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரி – நாலாயி:2330/3

மேல்


மொய்ய (2)

மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் – நாலாயி:3276/3
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே – நாலாயி:3392/4

மேல்


மொழி (25)

ஆலை கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனை கூவாய் – நாலாயி:206/4
பண் உலாவு மென் மொழி படை தடம் கணாள் பொருட்டு – நாலாயி:842/1
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் – நாலாயி:1225/3
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1270/3
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாட செங்கண்மாலை – நாலாயி:1507/1
பொய் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கை குல வேந்தன் புலமை ஆர்ந்த – நாலாயி:1507/2
அம் மொழி வாய் கலிகன்றி இன்ப பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி – நாலாயி:1507/3
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே – நாலாயி:1507/4
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் – நாலாயி:1574/1
செ வாய் மொழி பயிலும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1635/3
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன் – நாலாயி:1771/2
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான் – நாலாயி:1802/3
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று – நாலாயி:1811/1
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய் – நாலாயி:2004/1
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும் – நாலாயி:2157/2
கற்ற மொழி ஆகி கலந்து – நாலாயி:2462/4
சில்_மொழி நோயோ கழி பெரும் தெய்வம் இ நோய் இனது என்று – நாலாயி:2497/1
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ – நாலாயி:2497/2
என் மொழி கேள்-மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான் – நாலாயி:2497/3
சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே – நாலாயி:2497/4
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என் – நாலாயி:3069/1
தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார் – நாலாயி:3237/2
தூது உரைத்தல் செப்பு-மின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள் – நாலாயி:3852/1
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி – நாலாயி:3877/2

மேல்


மொழிக்கே (1)

சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/4

மேல்


மொழிகள் (1)

தீது இலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன் – நாலாயி:897/2

மேல்


மொழிந்த (4)

வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலை தாய் மொழிந்த மாற்றம் – நாலாயி:1327/2
நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார் – நாலாயி:1397/2
திண் திறல் தோள் கலியன் செம் சொலால் மொழிந்த மாலை – நாலாயி:1437/3
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே – நாலாயி:2820/3,4

மேல்


மொழிந்தான் (1)

அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே – நாலாயி:325/3,4

மேல்


மொழிந்திடவே (1)

முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே – நாலாயி:2796/4

மேல்


மொழிந்து (6)

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் – நாலாயி:1060/1
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்த ஆறே – நாலாயி:1434/4
பெய்து அனைத்து பேர் மொழிந்து பின் – நாலாயி:2259/4
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண் – நாலாயி:2299/1
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன் செய் கோல – நாலாயி:3877/1
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் – நாலாயி:3949/1,2

மேல்


மொழிந்தும் (1)

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதன செய்தும் – நாலாயி:1004/1

மேல்


மொழிபட்டு (1)

மொழிபட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே – நாலாயி:3774/4

மேல்


மொழியாய் (2)

பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:322/4
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த – நாலாயி:1466/3

மேல்


மொழியார் (3)

மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு – நாலாயி:1282/3
பண் இன் மொழியார் பைய நட-மின் என்னாத முன் – நாலாயி:1478/2
சதுரம் என்று தம்மை தாமே சம்மதித்து இன் மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர் – நாலாயி:3785/1,2

மேல்


மொழியார்கள் (1)

மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3

மேல்


மொழியாரை (1)

பண் நேர் மொழியாரை கூவி முளை அட்டி பல்லாண்டு கூறுவித்தேன் – நாலாயி:252/2

மேல்


மொழியால் (2)

பரு மொழியால் காண பணி – நாலாயி:2245/4
இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த – நாலாயி:2541/1

மேல்


மொழியாள் (6)

கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாச வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:292/3,4
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள்
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/3,4
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1323/4
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1326/4
கிளி_மொழியாள் காரணமா கிளர் அரக்கன் நகர் எரித்த – நாலாயி:3312/2
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழியாள் அலற்றிய சொல் – நாலாயி:3857/2

மேல்


மொழியாளர் (1)

கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1648/4

மேல்


மொழியாளை (2)

அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3496/2
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3497/2

மேல்


மொழியானை (1)

தெருளா மொழியானை சேர்ந்து – நாலாயி:2310/4

மேல்


மொழியுடன் (1)

அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க – நாலாயி:2672/44

மேல்


மொழியே (1)

கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் – நாலாயி:2144/2

மேல்


மொழியை (1)

மொழியை கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம் – நாலாயி:2797/1

மேல்


மொழிவதற்கு (1)

செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி – நாலாயி:1001/3

மேல்