நை – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

நைகின்றதால் (1)

நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே – நாலாயி:3246/4

மேல்


நைகின்றாள் (1)

காணும் ஆசையுள் நைகின்றாள் விறல் – நாலாயி:3043/2

மேல்


நைகின்றேன் (1)

எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என் கண்கட்கு – நாலாயி:3446/3

மேல்


நைந்த (1)

நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை – நாலாயி:3352/2

மேல்


நைந்து (8)

நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே – நாலாயி:280/4
உண்டு இரா கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய் பாடி ஆடி – நாலாயி:876/2,3
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் – நாலாயி:2944/1
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்து-மினே – நாலாயி:3454/4
இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே – நாலாயி:3502/4
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறு – நாலாயி:3521/1
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறு – நாலாயி:3521/1

மேல்


நைந்தே (2)

நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே – நாலாயி:2891/4
இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே – நாலாயி:2943/4

மேல்


நைபவர்க்கு (1)

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள்-தொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் – நாலாயி:2856/1,2

மேல்


நைமிசாரணியத்து (1)

நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து – நாலாயி:1007/2

மேல்


நைமிசாரணியத்துள் (9)

நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:998/4
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:999/4
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1000/4
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1001/4
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1002/4
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1003/4
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1004/4
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1005/4
நான் உடை தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1006/4

மேல்


நைய (1)

புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி – நாலாயி:976/1

மேல்


நையல் (1)

விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே – நாலாயி:2888/4

மேல்


நையாதார் (1)

உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய் – நாலாயி:2735/2

மேல்


நையாதே (1)

நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே
ஊர் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே – நாலாயி:3171/3,4

மேல்


நையும் (6)

நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம் – நாலாயி:2892/1
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் – நாலாயி:3265/3
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3387/1
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3389/1
கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3392/1
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே – நாலாயி:3522/4

மேல்


நையேன் (1)

உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல் – நாலாயி:2876/2

மேல்


நைவளம் (2)

நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1439/4
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் – நாலாயி:2073/1

மேல்


நைவன் (1)

இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே – நாலாயி:2948/4

மேல்


நைவாய (1)

நைவாய எம்மே போல் நாள்மதியே நீ இ நாள் – நாலாயி:3014/1

மேல்


நைவாயே (1)

பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/4

மேல்


நைவிக்கிலேன் (1)

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு – நாலாயி:1768/1

மேல்


நைவிக்கும் (2)

பொன்னை நைவிக்கும் அ பூம் செருந்தி மண நீழல்வாய் – நாலாயி:1768/2
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே – நாலாயி:3441/3,4

மேல்


நைவித்து (2)

உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டு காணும் – நாலாயி:546/2
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் – நாலாயி:1768/3

மேல்


நைவும் (1)

கிளரி கிளரி பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம் – நாலாயி:2560/3

மேல்


நைவேற்கு (2)

தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர் – நாலாயி:1201/1
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த – நாலாயி:1202/2

மேல்


நைவேன் (1)

பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்
ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் – நாலாயி:3535/1,2

மேல்


நைவேனை (2)

நெஞ்சு ஊடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை – நாலாயி:629/2,3
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத – நாலாயி:634/1

மேல்