தோ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோக்கை 1
தோகை 5
தோட்ட 1
தோட்டத்து 1
தோட்டம் 2
தோட்டின் 1
தோட்டு 1
தோடு 7
தோடே 1
தோண்டல் 1
தோணி 1
தோத்திரத்தால் 1
தோத்திரம் 1
தோதவத்தி 1
தோமரங்கள் 1
தோய் 19
தோய்த்த 2
தோய்த்து 1
தோய்தர 1
தோய்ந்த 3
தோய்ந்ததும் 1
தோய்ந்தவாம் 1
தோய்ந்தாய் 1
தோய்ந்தானை 1
தோய்ந்து 3
தோய்வு 1
தோய 3
தோயம் 1
தோயா 1
தோயாவேல் 1
தோயும் 2
தோரண 1
தோரணம் 3
தோல் 3
தோலாத 1
தோலாதான் 1
தோலும் 1
தோழமை 3
தோழரோடு 2
தோழன் 1
தோழன்மார் 1
தோழி 7
தோழிகளோ 1
தோழிமார் 4
தோழிமார்களும் 1
தோழிமாரும் 1
தோழிமீர் 1
தோழிமீர்காள் 7
தோழியர் 1
தோழியர்க்கு 1
தோழியர்காள் 3
தோழியரும் 2
தோழியால் 1
தோழியும் 2
தோழீ 30
தோள் 164
தோள்கள் 8
தோள்களும் 4
தோள்களை 3
தோளற்கு 1
தோளன் 8
தோளன்-தன்னை 1
தோளனே 1
தோளா 4
தோளாத 1
தோளார் 1
தோளால் 3
தோளாளா 1
தோளான் 3
தோளி 10
தோளிக்கா 1
தோளிக்கு 1
தோளியே 1
தோளின் 1
தோளினார் 2
தோளினால் 1
தோளினாள் 1
தோளினானை 1
தோளுடையான் 1
தோளும் 24
தோளை 1
தோளொடு 3
தோளோடு 1
தோற்ற 4
தோற்றங்கள் 1
தோற்றத்தாய் 1
தோற்றத்து 2
தோற்றது 2
தோற்றம் 4
தோற்றமாய் 2
தோற்றமுமாய் 1
தோற்றமே 1
தோற்றமோடு 1
தோற்றாயே 1
தோற்றான் 1
தோற்றி 4
தோற்றிய 3
தோற்றிருந்தேனே 1
தோற்றினாய் 1
தோற்றும் 1
தோற்றுவித்து 1
தோற்றுவிப்பாய்-கொல் 2
தோற்றேன் 1
தோற்றோம் 1
தோன்ற 7
தோன்றல் 11
தோன்றலும் 1
தோன்றலை 2
தோன்றாதால் 1
தோன்றாது 2
தோன்றாய் 1
தோன்றாயே 2
தோன்றானால் 1
தோன்றி 23
தோன்றிப்பூ 2
தோன்றிய 13
தோன்றியும் 1
தோன்றிற்று 5
தோன்றினன் 1
தோன்றினார் 1
தோன்றினாரே 1
தோன்றினேனே 2
தோன்றினையே 1
தோன்று 2
தோன்றுகின்ற 1
தோன்றும் 20
தோன்றுமால் 2

தோக்கை (1)

அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் – நாலாயி:1280/2

மேல்


தோகை (5)

துப்பு உடை ஆயர்கள்-தம் சொல் வழுவாது ஒருகால் தூய கரும் குழல் நல் தோகை மயில் அனைய – நாலாயி:70/1
கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை – நாலாயி:284/1
நடம் ஆடி தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை – நாலாயி:603/1
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து – நாலாயி:1422/2
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ – நாலாயி:3463/3

மேல்


தோட்ட (1)

ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க – நாலாயி:2090/2,3

மேல்


தோட்டத்து (1)

உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் – நாலாயி:487/1

மேல்


தோட்டம் (2)

தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் – நாலாயி:437/1
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே – நாலாயி:1940/4

மேல்


தோட்டின் (1)

என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல் – நாலாயி:77/2

மேல்


தோட்டு (1)

தோட்டு அலர் பைம் தார் சுடர் முடியானை பழமொழியால் பணிந்து உரைத்த – நாலாயி:1941/3

மேல்


தோடு (7)

பட்டம் கட்டி பொன் தோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் – நாலாயி:291/1
தோடு உலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் – நாலாயி:659/1
தோடு பெற்ற தண் துழாய் அலங்கல் ஆடு சென்னியாய் – நாலாயி:797/1
துறை தங்கு கமலத்து துயின்று கைதை தோடு ஆரும் பொதி சோற்று சுண்ணம் நண்ணி – நாலாயி:1186/3
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி – நாலாயி:1577/1
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தை கிடந்த – நாலாயி:1759/1
தோடு ஆர் நறும் துழாய் மார்வனை ஆர்வத்தால் – நாலாயி:2015/3

மேல்


தோடே (1)

சூடகமே தோள் வளையே தோடே செவி பூவே – நாலாயி:500/4

மேல்


தோண்டல் (1)

தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ்சோலை அதே – நாலாயி:354/4

மேல்


தோணி (1)

துன்ப கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் – நாலாயி:548/2

மேல்


தோத்திரத்தால் (1)

துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2

மேல்


தோத்திரம் (1)

தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் – நாலாயி:3985/2

மேல்


தோதவத்தி (1)

தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும் – நாலாயி:402/3

மேல்


தோமரங்கள் (1)

குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள் – நாலாயி:821/1

மேல்


தோய் (19)

விண் தோய் மதிள் வில்லிபுத்தூர் கோன் பட்டன் சொல் – நாலாயி:171/3
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – நாலாயி:214/4
வெள் நிற தோய் தயிர்-தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து – நாலாயி:305/1
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ – நாலாயி:689/3
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா – நாலாயி:1031/3
விண் தோய் சிகர திருவேங்கடம் மேய – நாலாயி:1041/3
விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே – நாலாயி:1227/4
திங்கள் தோய் மாட நாங்கூர் திருமணிக்கூடத்தானை – நாலாயி:1297/1
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1373/4
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து – நாலாயி:1594/3
கரு மா முகில் தோய் நெடு மாட கண்ணபுரத்து எம் அடிகளை – நாலாயி:1707/1
மஞ்சு தோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் – நாலாயி:1812/1
நஞ்சு தோய் கொங்கை மேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட – நாலாயி:1812/3
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம் மீது உயர்ந்து ஏறி வான் உயர் – நாலாயி:1842/3
பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று – நாலாயி:2283/2
மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை – நாலாயி:2424/1
தோய் தழை பந்தர் தண்டு உற நாற்றி பொரு கடல் சூழ் – நாலாயி:2545/2
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகை மேல் – நாலாயி:2726/1,2
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய் – நாலாயி:3100/2

மேல்


தோய்த்த (2)

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு – நாலாயி:661/1
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று – நாலாயி:1915/1

மேல்


தோய்த்து (1)

வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:962/3,4

மேல்


தோய்தர (1)

காரும் வார் பனி நீள் விசும்பிடை சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1024/3,4

மேல்


தோய்ந்த (3)

எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2
கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் – நாலாயி:1284/3
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி – நாலாயி:2105/1

மேல்


தோய்ந்ததும் (1)

தோடு உலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் – நாலாயி:659/1

மேல்


தோய்ந்தவாம் (1)

தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை – நாலாயி:2104/1

மேல்


தோய்ந்தாய் (1)

வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் – நாலாயி:2064/2

மேல்


தோய்ந்தானை (1)

தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3

மேல்


தோய்ந்து (3)

கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகா உது அம் பூம் – நாலாயி:2503/3
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று – நாலாயி:2569/3
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/2

மேல்


தோய்வு (1)

தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி – நாலாயி:3163/2

மேல்


தோய (3)

செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் – நாலாயி:1839/2
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் – நாலாயி:2160/3
ஆரம் கை தோய அடுத்து – நாலாயி:2160/4

மேல்


தோயம் (1)

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட – நாலாயி:331/1

மேல்


தோயா (1)

தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற – நாலாயி:1613/1

மேல்


தோயாவேல் (1)

பொன் மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா எனக்கே பொறை ஆகி – நாலாயி:2760/1,2

மேல்


தோயும் (2)

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று – நாலாயி:2226/3,4
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து – நாலாயி:2295/3,4

மேல்


தோரண (1)

கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணி கதவம் தாள் திறவாய் – நாலாயி:489/2,3

மேல்


தோரணம் (3)

துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும்-கொலோ – நாலாயி:299/4
தோரணம் நாட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:556/4
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே – நாலாயி:3980/4

மேல்


தோல் (3)

மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் – நாலாயி:1518/1
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு – நாலாயி:1813/1
நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த – நாலாயி:2555/1

மேல்


தோலாத (1)

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் – நாலாயி:2380/1

மேல்


தோலாதான் (1)

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம் – நாலாயி:2386/1

மேல்


தோலும் (1)

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழ பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன் – நாலாயி:1284/1

மேல்


தோழமை (3)

சீமாலிகன்-அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் – நாலாயி:189/1
சீர் அணிந்து தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் – நாலாயி:321/4
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகு_அளந்தான் வர கூவாய் – நாலாயி:549/4

மேல்


தோழரோடு (2)

துள்ளி விளையாடி தோழரோடு திரியாமே – நாலாயி:240/2
கன்றுகள் மேய்த்து தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு – நாலாயி:257/2

மேல்


தோழன் (1)

தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட – நாலாயி:1418/3

மேல்


தோழன்மார் (1)

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட – நாலாயி:256/1

மேல்


தோழி (7)

நல்ல என் தோழி நாக_அணை மிசை நம்பரர் – நாலாயி:606/1
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும் – நாலாயி:1111/3
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1418/2
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில் – நாலாயி:1692/3
தோழி நான் என் செய்கேன் – நாலாயி:1947/2
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால் – நாலாயி:1970/3
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து – நாலாயி:2533/2

மேல்


தோழிகளோ (1)

தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே – நாலாயி:2548/4

மேல்


தோழிமார் (4)

தோழிமார் பலர் கொண்டுபோய் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் – நாலாயி:289/2
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் – நாலாயி:484/5
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை – நாலாயி:1912/1
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை – நாலாயி:3469/3

மேல்


தோழிமார்களும் (1)

முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் – நாலாயி:3393/1

மேல்


தோழிமாரும் (1)

யாமுடை துணை என்னும் தோழிமாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ – நாலாயி:3873/3

மேல்


தோழிமீர் (1)

அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன் – நாலாயி:3368/1,2

மேல்


தோழிமீர்காள் (7)

என்று-கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3430/1
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3432/1
நல் நல தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்வி புகை – நாலாயி:3433/1
தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள்
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் – நாலாயி:3438/1,2
நான கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் – நாலாயி:3584/1
சேர்வன் சென்று என்னுடை தோழிமீர்காள் அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா – நாலாயி:3591/1
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3592/1,2

மேல்


தோழியர் (1)

வேண்டி சென்று ஒன்று பெறுகிற்பாரில் என்னுடை தோழியர் நுங்கட்கேலும் – நாலாயி:3683/1

மேல்


தோழியர்க்கு (1)

துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் – நாலாயி:1109/1

மேல்


தோழியர்காள் (3)

தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே – நாலாயி:3627/4
தோழியர்காள் நம் உடையமேதான் சொல்லுவதோ இங்கு அரியதுதான் – நாலாயி:3686/2
ஏல மலர் குழல் அன்னைமீர்காள் என்னுடை தோழியர்காள் என் செய்கேன் – நாலாயி:3688/3

மேல்


தோழியரும் (2)

தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற – நாலாயி:3013/2
ஆர் என்னை ஆராய்வார் அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால் – நாலாயி:3378/1,2

மேல்


தோழியால் (1)

இன் உயிர் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய் – நாலாயி:2748/1

மேல்


தோழியும் (2)

தோழியும் நானும் தொழுதோம் துகிலை பணித்தருளாயே – நாலாயி:524/4
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது – நாலாயி:1967/3

மேல்


தோழீ (30)

பந்து கொண்டான் என்று வளைத்துவைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ – நாலாயி:259/4
தோரணம் நாட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:556/4
காளை புகுத கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:557/4
அந்தரி சூட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:558/4
காப்பு நாண் கட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:559/4
அதிர புகுத கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:560/4
கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:561/4
தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:562/4
அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:563/4
பொரி முகந்து அட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:564/4
மஞ்சனமாட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:565/4
ஆர்க்கு இடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே – நாலாயி:588/4
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார் – நாலாயி:1758/2,3
தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1760/2
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2063/3
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2070/2
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே – நாலாயி:2072/4
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை தோழீ என்தன் – நாலாயி:2079/2
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே – நாலாயி:3363/4
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை – நாலாயி:3364/1
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே – நாலாயி:3365/4
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே – நாலாயி:3366/4
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே – நாலாயி:3367/4
கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு – நாலாயி:3369/3
யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே – நாலாயி:3370/4
ஆணை என் தோழீ உலகு-தோறு அலர் தூற்றி ஆம் – நாலாயி:3371/3
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே – நாலாயி:3585/4
ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நாலாயி:3589/3
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலா கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழிய பெரிதால் – நாலாயி:3590/2,3

மேல்


தோள் (164)

மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன் – நாலாயி:1/3
பணை தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை – நாலாயி:25/1
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக – நாலாயி:73/3
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் – நாலாயி:119/1
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து – நாலாயி:180/1
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்து கவித்த மலை – நாலாயி:269/2
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் – நாலாயி:328/3
சாவ தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை – நாலாயி:343/2
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை – நாலாயி:355/2
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக – நாலாயி:358/1
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
தட வரை தோள் சக்கரபாணீ சார்ங்க வில் சேவகனே – நாலாயி:466/4
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில் – நாலாயி:477/4
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் – நாலாயி:491/1
சூடகமே தோள் வளையே தோடே செவி பூவே – நாலாயி:500/4
இங்கு இ பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செம் கண் திருமுகத்து செல்வ திருமாலால் – நாலாயி:503/6,7
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி – நாலாயி:589/3
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் – நாலாயி:644/3
தோடு உலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் – நாலாயி:659/1
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் – நாலாயி:661/2
மல் பொரு தோள் உடை வாசுதேவா வல்வினையேன் துயில் கொண்டவாறே – நாலாயி:703/1
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்தல் – நாலாயி:736/3
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே – நாலாயி:738/4
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் தான் புலம்பிய அ புலம்பல்-தன்னை – நாலாயி:740/2
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி – நாலாயி:745/1
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி – நாலாயி:750/2
ஆயன் ஆகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் – நாலாயி:792/1
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் – நாலாயி:806/2
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் – நாலாயி:813/3
கடி கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை நீர் – நாலாயி:843/2
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் – நாலாயி:926/3
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலை பயனே – நாலாயி:998/1
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை – நாலாயி:1047/2
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை – நாலாயி:1047/3
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று – நாலாயி:1058/3
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை – நாலாயி:1092/2
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1116/1
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த – நாலாயி:1164/1
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட – நாலாயி:1175/2
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு – நாலாயி:1180/2
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த – நாலாயி:1197/2
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து – நாலாயி:1212/3
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் – நாலாயி:1214/2
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் – நாலாயி:1226/1
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1232/1
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1243/1
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் – நாலாயி:1247/1
பொன் தொடி தோள் மட_மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி – நாலாயி:1279/1
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1282/2
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் – நாலாயி:1283/2
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை – நாலாயி:1290/2
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை – நாலாயி:1317/3
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் – நாலாயி:1351/2
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடம் தோள் மெல்லியற்கா – நாலாயி:1353/1
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவன் இடம் – நாலாயி:1354/2
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய – நாலாயி:1413/1,2
திண் திறல் தோள் கலியன் செம் சொலால் மொழிந்த மாலை – நாலாயி:1437/3
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து – நாலாயி:1471/1
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் – நாலாயி:1492/1
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி – நாலாயி:1501/1
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல் – நாலாயி:1512/2
வெள்கி ஓட விறல் வாணன் வியன் தோள் வனத்தை துணித்து உகந்தான் – நாலாயி:1513/2
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா – நாலாயி:1564/1
கல் நீர மால் வரை தோள் கலிகன்றி மங்கையர்_கோன் – நாலாயி:1567/2
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் அடியேனை – நாலாயி:1610/1
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கை குல வேந்தன் – நாலாயி:1617/2
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின் – நாலாயி:1626/2
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் – நாலாயி:1648/2
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர – நாலாயி:1668/3
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும் – நாலாயி:1671/3
வார் ஆளும் இளம் கொங்கை நெடும் பணை தோள் மட பாவை – நாலாயி:1676/1
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன் – நாலாயி:1698/2
பெரும் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை – நாலாயி:1699/2
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் – நாலாயி:1703/3
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1761/1
கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார் – நாலாயி:1787/3
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் – நாலாயி:1859/3
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/4
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி – நாலாயி:1887/1
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் – நாலாயி:1928/1
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை – நாலாயி:1931/3
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ – நாலாயி:1938/2
மல் ஆர் தோள் வடவேங்கடவனை வர – நாலாயி:1946/3
பெரும் தோள் நெடுமாலை பேர் பாடி ஆட – நாலாயி:1973/3
வற்பு உடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு – நாலாயி:2058/1
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் – நாலாயி:2064/2
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாள பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க – நாலாயி:2071/2
அடியும் படி கடப்ப தோள் திசை மேல் செல்ல – நாலாயி:2098/1
சூழ் அரவ பொங்கு அணையான் தோள் – நாலாயி:2143/4
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் – நாலாயி:2144/1
பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி – நாலாயி:2153/2
வரை குடை தோள் காம்பு ஆக ஆநிரை காத்து ஆயர் – நாலாயி:2164/1
நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண – நாலாயி:2223/1
துறந்தார் தொழுதார் அ தோள் – நாலாயி:2223/4
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் – நாலாயி:2224/1
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு – நாலாயி:2224/4
மணந்தாய் மலர்_மகள் தோள் மாலே மணந்தாய் போய் – நாலாயி:2229/2
நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று – நாலாயி:2242/1,2
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள்
முன் நின்று தான் இரப்பாள் மொய் மலராள் சொல் நின்ற – நாலாயி:2260/1,2
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த – நாலாயி:2260/3
மால்-பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – நாலாயி:2295/1
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான் – நாலாயி:2350/3
நின்று எதிராய நிரை மணி தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும் – நாலாயி:2361/1,2
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ – நாலாயி:2371/2,3
சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே – நாலாயி:2373/3
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில் – நாலாயி:2386/2
முடி தோள் ஆயிரம் தழைத்த – நாலாயி:2582/9
அறியும் தன்மையை முக்கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் – நாலாயி:2672/19,20
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி – நாலாயி:2672/25
ஏர் ஆர் தடம் தோள் இராவணனை ஈரைந்து – நாலாயி:2690/3
சோரா கிடந்தானை குங்கும தோள் கொட்டி – நாலாயி:2692/2
தார் ஆர் தடம் தோள் தளை காலன் பின் போனாள் – நாலாயி:2705/2
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின் – நாலாயி:2728/1
கல் நவில் தோள் காளையை கைப்பிடித்து மீண்டும் போய் – நாலாயி:2743/1
மன்னு மணி வரை தோள் மாயவன் பாவியேன் – நாலாயி:2748/2
என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரை தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய் – நாலாயி:2749/1,2
அன்ன அரும் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் – நாலாயி:2751/5
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும் – நாலாயி:2755/2
கல் நவில் தோள் காமன் கருப்பு சிலை வளைய – நாலாயி:2757/9
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன் மேல் – நாலாயி:2757/11
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை – நாலாயி:2765/2
கல் நவில் தோள் காளையை கண்டு ஆங்கு கைதொழுது – நாலாயி:2784/3
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணை கீழ் – நாலாயி:2821/3
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை – நாலாயி:2972/3
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோள் இணையானே – நாலாயி:2992/4
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் – நாலாயி:2993/1
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மை – நாலாயி:3043/3
காம்பு அணை தோள் பின்னைக்காய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும் – நாலாயி:3059/2
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை – நாலாயி:3060/1,2
தடம் பெரும் தோள் ஆர தழுவும் பார் என்னும் – நாலாயி:3094/3
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த – நாலாயி:3206/3
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று – நாலாயி:3215/3
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3292/2
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3295/2
அணி மான தட வரை தோள் அடல் ஆழி தட கையன் – நாலாயி:3309/2
பட நாகத்து_அணை கிடந்த பரு வரை தோள் பரம்புருடன் – நாலாயி:3310/3
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணை தோள் மட பின்னை – நாலாயி:3311/1
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரை கண் – நாலாயி:3346/3
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே – நாலாயி:3424/2
பெரும் தண் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள்
கரும் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே – நாலாயி:3458/3,4
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3491/2
மல் பொரு தோள் உடை மாய பிரானுக்கு – நாலாயி:3515/2
செந்தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே – நாலாயி:3558/2
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே – நாலாயி:3601/4
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே – நாலாயி:3633/3
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் – நாலாயி:3665/2
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே – நாலாயி:3666/4
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா – நாலாயி:3677/4
பூ கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழி கை என் அம்மான் – நாலாயி:3779/2
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே – நாலாயி:3789/4
தாது சேர் தோள் கண்ணனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3791/2
அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே – நாலாயி:3808/1,2
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே – நாலாயி:3844/4
சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த – நாலாயி:3853/1
அணி கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் – நாலாயி:3899/2
பைம் தொடி மடந்தையர்-தம் வேய் மரு தோள் இணையே – நாலாயி:3912/4
வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா – நாலாயி:3913/1
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன் – நாலாயி:3934/2

மேல்


தோள்கள் (8)

தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே – நாலாயி:33/4
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி – நாலாயி:2685/11
தோள்கள் தலை துணிசெய்தான் – நாலாயி:2960/2
துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடும்-கொல் என்று – நாலாயி:3301/2
வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல – நாலாயி:3485/2
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் – நாலாயி:3680/3
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த தேவபிராற்கு என் நிறைவினோடு – நாலாயி:3690/3
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட – நாலாயி:3919/2

மேல்


தோள்களும் (4)

கொம்மை முலையும் இடையும் கொழும் பணை தோள்களும் கண்டிட்டு – நாலாயி:301/3
மேலும் எழா மயிர் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா – நாலாயி:457/2
ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில் – நாலாயி:1262/2
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே – நாலாயி:3392/4

மேல்


தோள்களை (3)

வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள் – நாலாயி:821/3
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள் – நாலாயி:822/2
தோள்களை ஆர தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதீ – நாலாயி:3680/2

மேல்


தோளற்கு (1)

கற்பக கா அன நல் பல தோளற்கு
பொன் சுடர் குன்று அன்ன பூம் தண் முடியற்கு – நாலாயி:3511/1,2

மேல்


தோளன் (8)

செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் – நாலாயி:280/1
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் – நாலாயி:1016/2
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே – நாலாயி:1531/4
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் – நாலாயி:1653/2
பூ இயல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும் – நாலாயி:2994/3
கொண்டல்_வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் – நாலாயி:3748/3

மேல்


தோளன்-தன்னை (1)

வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை
புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை – நாலாயி:1836/1,2

மேல்


தோளனே (1)

சோதி சுடர் முடியாய் தாலேலோ சுந்தர தோளனே தாலேலோ – நாலாயி:49/4

மேல்


தோளா (4)

மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் – நாலாயி:732/2
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரை தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1044/2,3
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர் – நாலாயி:1500/2
தொல் நீர் கடல் கிடந்த தோளா மணி சுடரை – நாலாயி:2774/2

மேல்


தோளாத (1)

தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை – நாலாயி:2013/3

மேல்


தோளார் (1)

வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4

மேல்


தோளால் (3)

தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய் – நாலாயி:230/2
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1411/4
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் – நாலாயி:3931/3

மேல்


தோளாளா (1)

தோளாளா என்தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே – நாலாயி:1202/4

மேல்


தோளான் (3)

தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான் வார் புறவில் – நாலாயி:1509/2
கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார் – நாலாயி:1527/3
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு – நாலாயி:2168/3

மேல்


தோளி (10)

வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/2
வேய் போலும் எழில் தோளி தன்பொருட்டா விடையோன்-தன் வில்லை செற்றாய் – நாலாயி:733/2
பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1210/3
தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த – நாலாயி:1212/1
பாவியேன் பெற்றமையால் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1216/2
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே – நாலாயி:1609/1
காம்பு ஏய் மென் தோளி கடை வெண்ணெய் உண்டாயை – நாலாயி:2103/3
மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே – நாலாயி:2632/3
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை – நாலாயி:3216/1
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇ – நாலாயி:3246/1

மேல்


தோளிக்கா (1)

வாய் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து – நாலாயி:2414/3

மேல்


தோளிக்கு (1)

இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4

மேல்


தோளியே (1)

ஓதுமால் ஊழ்வினையேன் தடம் தோளியே – நாலாயி:3245/4

மேல்


தோளின் (1)

வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு – நாலாயி:831/3

மேல்


தோளினார் (2)

வேய் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு – நாலாயி:217/3
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல் – நாலாயி:3464/3

மேல்


தோளினால் (1)

தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால்
வானவர்_கோன் விட வந்த மழை தடுத்து – நாலாயி:216/2,3

மேல்


தோளினாள் (1)

வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ – நாலாயி:1143/3

மேல்


தோளினானை (1)

வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் – நாலாயி:2080/3

மேல்


தோளுடையான் (1)

சுந்தர தோளுடையான் சுழலையின்-நின்று உய்தும்-கொலோ – நாலாயி:587/4

மேல்


தோளும் (24)

மாய பொரு படை_வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி – நாலாயி:7/3
வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை – நாலாயி:339/1
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திருச்சக்கரம்-அதனால் – நாலாயி:461/3
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண் கை மார்வும் திண் தோளும்
தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த – நாலாயி:711/1,2
மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும்
தூய தாமரை கண்களும் துவர் இதழ் பவள வாயும் – நாலாயி:891/2,3
எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் – நாலாயி:1124/3
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை – நாலாயி:1275/1
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் – நாலாயி:1442/2
தோளும் தலையும் துணிவு எய்த சுடு வெம் சிலைவாய் சரம் துரந்தான் – நாலாயி:1508/2
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1759/4
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1762/2
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம் – நாலாயி:1859/1
மல்கிய தோளும் மான் உரி அதளும் உடையவர் தமக்கும் ஓர் பாகம் – நாலாயி:1935/1
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/3,4
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் – நாலாயி:2076/1
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3188/2
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே – நாலாயி:3386/4
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே – நாலாயி:3390/4
தாளும் தோளும் கைகளை ஆர தொழ காணேன் – நாலாயி:3695/3
படி சேர் மகர குழைகளும் பவள வாயும் நால் தோளும்
துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே – நாலாயி:3717/3,4
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி – நாலாயி:3777/2
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ – நாலாயி:3869/4
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ – நாலாயி:3871/4
தோளும் நான்கு உடை சுரி குழல் கமல கண் கனி வாய் – நாலாயி:3891/3

மேல்


தோளை (1)

ஒரு கையால் ஒருவன்-தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீள குறித்த சங்கம் – நாலாயி:256/2

மேல்


தோளொடு (3)

இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1760/4
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய – நாலாயி:1905/3

மேல்


தோளோடு (1)

குற்றம் அற்ற முலை-தன்னை குமரன் கோல பணை தோளோடு
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கி கட்டீரே – நாலாயி:633/3,4

மேல்


தோற்ற (4)

பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய் – நாலாயி:118/2
துனியை தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்ற தொல் நெறியை வையம் தொழப்படும் – நாலாயி:1575/2
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று இன்னம் – நாலாயி:2022/2
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று அஞ்சி – நாலாயி:2023/2

மேல்


தோற்றங்கள் (1)

தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் – நாலாயி:3538/3

மேல்


தோற்றத்தாய் (1)

நடலை பட முழங்கும் தோற்றத்தாய் நல் சங்கே – நாலாயி:568/4

மேல்


தோற்றத்து (2)

தொல் அமரர் கேள்வி துலங்கு ஒளி சேர் தோற்றத்து
நல் அமரர் கோமான் நகர் – நாலாயி:2184/3,4
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்தநம்பிக்கு என் – நாலாயி:3514/3

மேல்


தோற்றது (2)

வில் புருவ கொடி தோற்றது மெய்யே – நாலாயி:3511/4
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே – நாலாயி:3514/4

மேல்


தோற்றம் (4)

நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு – நாலாயி:1196/3
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய் – நாலாயி:3181/1
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர் – நாலாயி:3181/3
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் – நாலாயி:3694/2

மேல்


தோற்றமாய் (2)

தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் – நாலாயி:494/5
தலை கணம் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய்
நிலை கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும் – நாலாயி:767/1,2

மேல்


தோற்றமுமாய் (1)

சொல்லு வன் சொல் பொருள் தான் அவையாய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1128/1,2

மேல்


தோற்றமே (1)

சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே – நாலாயி:3180/4

மேல்


தோற்றமோடு (1)

பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதி-பால் – நாலாயி:830/3

மேல்


தோற்றாயே (1)

மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே – நாலாயி:3014/4

மேல்


தோற்றான் (1)

உடன் நின்று தோற்றான் ஒருங்கு – நாலாயி:2437/4

மேல்


தோற்றி (4)

செந்நாள் தோற்றி திரு மதுரையில் சிலை குனித்து ஐந்தலைய – நாலாயி:10/3
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும் – நாலாயி:2941/2
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும் – நாலாயி:2946/3
கமலத்து அயன் நம்பி தன்னை கண்_நுதலானொடும் தோற்றி
அமல தெய்வத்தொடு உலகம் ஆக்கி என் நெற்றி உளானே – நாலாயி:2995/3,4

மேல்


தோற்றிய (3)

ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சின் உளானே – நாலாயி:2991/4
உள்ளே தோற்றிய இறைவ என்று – நாலாயி:3029/2
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே – நாலாயி:3608/4

மேல்


தோற்றிருந்தேனே (1)

என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே – நாலாயி:1972/4

மேல்


தோற்றினாய் (1)

உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை – நாலாயி:427/2

மேல்


தோற்றும் (1)

தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ – நாலாயி:483/6

மேல்


தோற்றுவித்து (1)

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி – நாலாயி:1186/1,2

மேல்


தோற்றுவிப்பாய்-கொல் (2)

தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று இன்னம் – நாலாயி:2022/2
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று அஞ்சி – நாலாயி:2023/2

மேல்


தோற்றேன் (1)

கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த – நாலாயி:3587/2,3

மேல்


தோற்றோம் (1)

தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் – நாலாயி:3015/1

மேல்


தோன்ற (7)

அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:649/3
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி – நாலாயி:750/2
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை – நாலாயி:1146/1,2
உளைந்த அரியும் மானிடமும் உடனாய் தோன்ற ஒன்றுவித்து – நாலாயி:1721/1
ஒற்றை குழையும் நாஞ்சிலும் ஒரு-பால் தோன்ற தான் தோன்றி – நாலாயி:1725/1
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு – நாலாயி:2066/3
தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றி – நாலாயி:2099/2

மேல்


தோன்றல் (11)

துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஒன்று சொல்லிடே – நாலாயி:853/4
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூ_உலகோடு – நாலாயி:1530/3
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி – நாலாயி:1577/1
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெட தோன்றிய – நாலாயி:1645/2
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் – நாலாயி:1688/1
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே – நாலாயி:1863/3
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான் – நாலாயி:2252/3
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த – நாலாயி:2260/3
தானே தனி தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான் – நாலாயி:2608/1
தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே – நாலாயி:2608/2
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு – நாலாயி:2742/4

மேல்


தோன்றலும் (1)

துளக்கம்_இல் சிந்தைசெய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே – நாலாயி:2049/3

மேல்


தோன்றலை (2)

துப்பனை துரங்கம் பட சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர் – நாலாயி:1643/1
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெட தோன்றிய – நாலாயி:1645/2

மேல்


தோன்றாதால் (1)

அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
செம் சுடர் தாமரை கண் செல்வனும் வாரானால் – நாலாயி:3382/2,3

மேல்


தோன்றாது (2)

துன்னி மண்ணும் விண் நாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் – நாலாயி:1356/1
சூழ்ந்து அடியார் வேண்டின-கால் தோன்றாது விட்டாலும் – நாலாயி:2601/1

மேல்


தோன்றாய் (1)

வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடி கீழ் – நாலாயி:3721/1

மேல்


தோன்றாயே (2)

துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே – நாலாயி:3717/4
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே – நாலாயி:3720/4

மேல்


தோன்றானால் (1)

தூ பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீ பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ – நாலாயி:3380/3,4

மேல்


தோன்றி (23)

சொப்பட தோன்றி தொறுப்பாடியோம் வைத்த – நாலாயி:123/2
மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உரு ஆனான் – நாலாயி:400/3
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய் – நாலாயி:598/1
பாவியேன் தோன்றி பாம்பு_அணையார்க்கும் தம் பாம்பு போல் – நாலாயி:599/3
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய கொண்ட வீரன்-தன்னை – நாலாயி:741/2
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய் – நாலாயி:1042/1,2
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை – நாலாயி:1140/2
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர் – நாலாயி:1278/2
வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டி – நாலாயி:1623/1
தொழும் நீர் வடிவின் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி-பால் – நாலாயி:1722/1
வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால் – நாலாயி:1723/1
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி
வெய்ய சீற்ற கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்து – நாலாயி:1724/1,2
ஒற்றை குழையும் நாஞ்சிலும் ஒரு-பால் தோன்ற தான் தோன்றி
வெற்றி தொழிலார் வேல் வேந்தர் விண்-பால் செல்ல வெம் சமத்து – நாலாயி:1725/1,2
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன் – நாலாயி:1749/2
கும்பனோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மை கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1862/3,4
தந்தை தளை கழல தோன்றி போய் ஆய்ப்பாடி – நாலாயி:1993/1
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த – நாலாயி:2338/1,2
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – நாலாயி:2554/4
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து – நாலாயி:3225/2
நின்று தோன்றி கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே – நாலாயி:3387/4
இன் அமுது என தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த – நாலாயி:3568/1
தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியா தான் தோன்றி
முனி மா பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த – நாலாயி:3776/1,2
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றி கழிந்து ஒழிந்தார் – நாலாயி:3786/2

மேல்


தோன்றிப்பூ (2)

சீலை குதம்பை ஒரு காது ஒரு காது செம் நிற மேல் தோன்றிப்பூ
கோல பணை கச்சும் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலமும் – நாலாயி:244/1,2
வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை – நாலாயி:262/1

மேல்


தோன்றிய (13)

அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் – நாலாயி:28/3
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை – நாலாயி:85/1
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன_வண்ணன்-தன்னை – நாலாயி:96/1
கொத்து தலைவன் குடி கெட தோன்றிய
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் – நாலாயி:110/3,4
உய்ய இ ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே – நாலாயி:141/3
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் – நாலாயி:926/3
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெட தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை – நாலாயி:1645/2,3
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் – நாலாயி:1688/1
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அ பொழுதே – நாலாயி:2831/3
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி – நாலாயி:2891/2
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என் – நாலாயி:3096/3
இன்று இ ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய கருமாணிக்க சுடர் – நாலாயி:3471/3

மேல்


தோன்றியும் (1)

கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர் – நாலாயி:3479/2

மேல்


தோன்றிற்று (5)

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை – நாலாயி:384/1
மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை – நாலாயி:385/1
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா – நாலாயி:751/2
தாயவனாய் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே – நாலாயி:2538/4
வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – நாலாயி:2549/4

மேல்


தோன்றினன் (1)

தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி – நாலாயி:924/3

மேல்


தோன்றினார் (1)

சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே – நாலாயி:762/3,4

மேல்


தோன்றினாரே (1)

காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுளே தோன்றினாரே – நாலாயி:2043/4

மேல்


தோன்றினேனே (2)

ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:897/4
எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:899/4

மேல்


தோன்றினையே (1)

தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில் – நாலாயி:3129/2,3

மேல்


தோன்று (2)

தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம்_இல் விளக்கமாய் – நாலாயி:755/3
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை – நாலாயி:2580/2

மேல்


தோன்றுகின்ற (1)

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ – நாலாயி:762/2

மேல்


தோன்றும் (20)

செக்கரிடை நுனி கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல – நாலாயி:87/1
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன் – நாலாயி:462/3
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பி – நாலாயி:472/2
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை – நாலாயி:478/3
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண – நாலாயி:489/2
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையில் – நாலாயி:598/2
மேல் தோன்றும் ஆழியின் வெம் சுடர் போல சுடாது எம்மை – நாலாயி:598/3
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:625/4
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:886/4
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1138/4
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1143/4
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் – நாலாயி:2130/3
தொழில்கொண்டு தான் முழங்கி தோன்றும் எழில்கொண்ட – நாலாயி:2367/2
அமம் சூழ்ந்து அற விளங்கி தோன்றும் நமன் சூழ் – நாலாயி:2379/2
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே – நாலாயி:3388/4
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – நாலாயி:3627/3
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே – நாலாயி:3629/4
தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும் – நாலாயி:3718/1

மேல்


தோன்றுமால் (2)

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் – நாலாயி:1650/1
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும் – நாலாயி:2344/2

மேல்