மீ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 3
மீட்சி 1
மீட்டு 2
மீட்டும் 1
மீட்பான் 1
மீண்டது 1
மீண்டு 6
மீண்டும் 3
மீண்டே 3
மீதிட்டு 1
மீதிட 1
மீதியன் 1
மீதினில் 1
மீது 33
மீதுகொண்டு 1
மீதூர 1
மீதே 10
மீபால் 1
மீமிசை 4
மீமீது 1
மீள்கின்றது 1
மீள்வது 1
மீள்வர்கள் 2
மீள்வு 4
மீள 3
மீளா 2
மீளாது 1
மீளி 2
மீளும்-கொல் 1
மீன் 16
மீனமாய் 1
மீனமும் 1
மீனாய் 6
மீனும் 3
மீனை 3
மீனோடு 2

மீ (3)

மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய் – நாலாயி:752/3
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் – நாலாயி:1090/2
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் – நாலாயி:1525/1

மேல்


மீட்சி (1)

மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே – நாலாயி:3340/4

மேல்


மீட்டு (2)

செறி தவ சம்புகன்-தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த – நாலாயி:749/1
வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான் – நாலாயி:2355/3

மேல்


மீட்டும் (1)

மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடு விமலன் மலை – நாலாயி:357/2

மேல்


மீட்பான் (1)

உருப்பிணி நங்கை-தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடி சென்ற – நாலாயி:349/1

மேல்


மீண்டது (1)

புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே – நாலாயி:869/4

மேல்


மீண்டு (6)

எங்கும் போய் கரை காணாது எறி கடல்வாய் மீண்டு ஏயும் – நாலாயி:692/3
உலகு-தன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு-தன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால் – நாலாயி:763/1,2
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை – நாலாயி:2140/2
மிக கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிக கண்டேன் – நாலாயி:2262/2
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள் – நாலாயி:2559/2
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் – நாலாயி:2608/3

மேல்


மீண்டும் (3)

மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே – நாலாயி:1767/4
கல் நவில் தோள் காளையை கைப்பிடித்து மீண்டும் போய் – நாலாயி:2743/1
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி – நாலாயி:3624/3

மேல்


மீண்டே (3)

எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் – நாலாயி:101/2
மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவழி வார கண்டம் அடைப்ப கண் உறக்கம்-அது ஆவதன் முன்னம் – நாலாயி:375/1,2
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய் – நாலாயி:2574/1

மேல்


மீதிட்டு (1)

வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டு
பச்சை மேனி மிக பகைப்ப – நாலாயி:2578/8,9

மேல்


மீதிட (1)

மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட – நாலாயி:3022/3

மேல்


மீதியன் (1)

எண்ணின் மீதியன் எம் பெருமான் – நாலாயி:3020/2

மேல்


மீதினில் (1)

இரு சுடர் மீதினில் இயங்கா மு மதிள் – நாலாயி:2672/3

மேல்


மீது (33)

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே – நாலாயி:263/1
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ளகிலார்களே – நாலாயி:367/4
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப – நாலாயி:494/1
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய் – நாலாயி:598/1
குரக்கின படை கொடு குரை கடலின் மீது போய் – நாலாயி:783/1
கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன் – நாலாயி:800/1
ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீது போய் – நாலாயி:865/1
கொண்டல் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை – நாலாயி:885/2
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை – நாலாயி:1273/2
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால் – நாலாயி:1499/1
விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை – நாலாயி:1525/3
மீது ஓடி வாள் எயிறு மின் இலக முன் விலகும் உருவினாளை – நாலாயி:1580/1
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் – நாலாயி:1624/1
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன் – நாலாயி:1750/2
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளம் கொள் முந்நீர் – நாலாயி:1811/3
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம் மீது உயர்ந்து ஏறி வான் உயர் – நாலாயி:1842/3
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் – நாலாயி:1986/3
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது ஓடி நிமிர்ந்த காலம் – நாலாயி:2003/1
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீது ஓடி பெருகு காலம் – நாலாயி:2007/1
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை – நாலாயி:2056/2
குடங்கள் தலை மீது எடுத்து கொண்டு ஆடி அன்று அ – நாலாயி:2615/3
மீது இலகி தான் கிடக்கும் மீன் – நாலாயி:2645/4
தங்கா முயற்றியவாய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து – நாலாயி:2669/1
நோயும் பயலைமையும் மீது ஊர எம்மே போல் – நாலாயி:3009/3
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி – நாலாயி:3430/2
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ் – நாலாயி:3432/3
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் – நாலாயி:3543/1
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – நாலாயி:3543/2
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவியுள் – நாலாயி:3543/3
மீது ஆடி உரு காட்டாதே ஒளிப்பாயோ – நாலாயி:3543/4
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே – நாலாயி:3564/4
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே – நாலாயி:3714/4
அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும் – நாலாயி:3760/1

மேல்


மீதுகொண்டு (1)

மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4

மேல்


மீதூர (1)

வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே – நாலாயி:2035/4

மேல்


மீதே (10)

நக்க செம் துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக – நாலாயி:87/2
தன் ஏற்று மாற்றலர் தலைகள் மீதே தளர் நடை நடவானோ – நாலாயி:89/4
பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய – நாலாயி:93/1
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ – நாலாயி:94/4
பொன்னை கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போல் – நாலாயி:467/1
தட வரையின் மீதே சரற்கால சந்திரன் – நாலாயி:569/1
நாவலிட்டு உழிதர்கின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூ_உலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற – நாலாயி:872/2,3
இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:889/1,2
கண்டார் வணங்க களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய் – நாலாயி:1227/3
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே – நாலாயி:3542/4

மேல்


மீபால் (1)

தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால்
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/3,4

மேல்


மீமிசை (4)

வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1050/3,4
உந்தி மா மலர் மீமிசை படைத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1266/2
போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசை கஞ்சனை தகர்த்த – நாலாயி:3704/3
காய் சின பறவை ஊர்ந்து பொன் மலையின் மீமிசை கார் முகில் போல – நாலாயி:3797/1

மேல்


மீமீது (1)

வெற்றி கருள கொடியான்-தன் மீமீது ஆடா உலகத்து – நாலாயி:633/1

மேல்


மீள்கின்றது (1)

மீள்கின்றது இல்லை பிறவி துயர் கடிந்தோம் – நாலாயி:3926/2

மேல்


மீள்வது (1)

எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே – நாலாயி:3034/2

மேல்


மீள்வர்கள் (2)

மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3238/3
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3239/3

மேல்


மீள்வு (4)

தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே – நாலாயி:855/4
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே – நாலாயி:863/4
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3238/3
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3239/3

மேல்


மீள (3)

மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர – நாலாயி:65/2
ஒரு கையால் ஒருவன்-தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீள குறித்த சங்கம் – நாலாயி:256/2
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் – நாலாயி:313/3

மேல்


மீளா (2)

மீளா துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ – நாலாயி:691/3
மீளா அடிமைப்பணி செய்ய புகுந்தேன் – நாலாயி:3861/2

மேல்


மீளாது (1)

கீளா மருது இடை போய் கேழலாய் மீளாது
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு – நாலாயி:2335/2,3

மேல்


மீளி (2)

மீளி அம் புள்ளை கடாய் விறல் மாலியை கொன்று பின்னும் – நாலாயி:3623/3
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து – நாலாயி:3624/2

மேல்


மீளும்-கொல் (1)

நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய் – நாலாயி:2480/2

மேல்


மீன் (16)

அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே – நாலாயி:74/1
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என் – நாலாயி:690/1
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த – நாலாயி:1076/1
மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ – நாலாயி:1201/2
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே – நாலாயி:1360/3,4
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய – நாலாயி:1385/1
கொள்ளை கொழு மீன் உண் குருகு ஓடி பெடையோடும் – நாலாயி:1495/3
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை – நாலாயி:1627/1
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன் – நாலாயி:1750/2
பைம் கானம் ஈது எல்லாம் உனதே ஆக பழன மீன் கவர்ந்து உண்ண தருவன் தந்தால் – நாலாயி:2078/3
மீன் வீழ கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர் – நாலாயி:2121/3
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2163/3
மீது இலகி தான் கிடக்கும் மீன் – நாலாயி:2645/4
மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் – நாலாயி:2646/1
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர் பிணையல் ஏய்ந்த மழை கூந்தல் – நாலாயி:2713/2,3
மா ஆகி ஆமையாய் மீன் ஆகி மானிடம் ஆம் – நாலாயி:3092/3

மேல்


மீனமாய் (1)

தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் – நாலாயி:420/1

மேல்


மீனமும் (1)

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல்_வண்ணா உன் மேல் – நாலாயி:250/1

மேல்


மீனாய் (6)

மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே – நாலாயி:678/4
அ நீரை மீனாய் அமைத்த பெருமானை – நாலாயி:1519/2
நீர் மலிகின்றது ஓர் மீனாய் ஓர் ஆமையுமாய் – நாலாயி:1681/1
மீனாய் வந்து வியந்து உய்ய கொண்ட தண் தாமரை கண்ணன் – நாலாயி:1718/2
மீனாய் உயிர் அளிக்கும் வித்து – நாலாயி:2403/4
மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய் – நாலாயி:3350/3

மேல்


மீனும் (3)

அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார் – நாலாயி:786/1
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் – நாலாயி:1117/1
அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை – நாலாயி:1767/1

மேல்


மீனை (3)

மீனை தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து – நாலாயி:1490/3
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4
அன்னத்தை மீனை அரியை அரு மறையை – நாலாயி:2775/3

மேல்


மீனோடு (2)

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் – நாலாயி:1727/1
மீனோடு ஏனமும் – நாலாயி:2983/2

மேல்